Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நடிகர் விஜய் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தால் அவரது படங்களைப் புறக்கணிக்கும் போராட்டத்தில் இறங்குவோம்: தமிழ் படைப்பாளிகள் கழகம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நடிகர் விஜய் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தால் அவரது படங்களைப் புறக்கணிக்கும் போராட்டத்தில் இறங்குவோம்: தமிழ் படைப்பாளிகள் கழகம்

நடிகர் விஜய் காங்கிரசில் சேர முன்வந்தால் அதனைத் தமிழர்கள், குறிப்பாக புலம் பெயர்ந்த தமிழர்கள் வரவேற்க மாட்டார்கள் என்பதோடு அதனை முழுமூச்சாக எதிர்ப்பார்கள் என்பதை முன்கூட்டியே சொல்லி வைக்க விரும்புகிறோம். என கனடா, ரொறன்ரோவிலுள்ள தமிழ் படைப்பாளிகள் கழகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக கனடா தமிழ் படைப்பாளிகள் கழகம் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:-

தமிழ் நாட்டின் முன்னனி நடிகர் விஜய், விஜயகாந்த், சரத்குமார், கார்த்திக் பாணியில் அரசியல் கட்சி ஒன்றை தொடங்கப் போவதாக முன்னர் செய்திகள் வந்தன. இப்போது அவர் இந்திய காங்கிரஸ் கட்சியில் சேரப்போவதாக செய்திகள் வருகின்றன. காங்கிரஸ் கட்சியில் சேரும் பட்சத்தில் அவருக்கு மேலவை உறுப்பினர் பதவியும் வழங்கப்படும் எனத் தெரிகிறது.

அரசியலில் யாரும் பங்கு கொள்ளலாம். நடிகர்களும் குடிமக்கள் என்பதால் அவர்களுக்கும் அரசியலில் பங்கு கொள்ள முழு உரிமை உண்டு. அது மக்களாட்சி முறைமைக்கு மிகவும் நல்லது. ஆனால் நடிகர் விஜய் காங்கிரசில் சேர முன்வந்தால் – அப்படியொரு முடிவு எடுத்தால் - அதனைத் தமிழர்கள், குறிப்பாக புலம் பெயர்ந்த தமிழர்கள் வரவேற்க மாட்டார்கள் என்பதோடு அதனை முழு மூச்சாக எதிர்ப்பார்கள் என்பதை முன்கூட்டியே சொல்லி வைக்க விரும்புகிறோம்.

மத்தியில் பதவியில் இருக்கும் இந்திய காங்கிரஸ் – திமுக கட்சிகளது ஆட்சியின் போதுதான் தமிழீழத்தில் வரலாறு காண முடியாத இனப்படுகொலை அரங்கேறியது. இந்தியாதான் போர் ஆயுதங்கள், ராடர்கள், புலனாய்வு, உளவு, நிதி, பயிற்சி என்று எல்லாவற்றையும் இலங்கை அரசுக்கு கொடுத்து உதவியது. இதனை இந்தியா அவ்வப்போது மறுத்து வந்தாலும் அண்மையில் இந்திய பாதுகாப்பு துணை அமைச்சர் பல்லம் ராஜு சிறீலங்காவின் தற்காப்புக்கு உலங்குவானூர்திகள் உட்பட ஆயுதங்களை வழங்கியதாகக் கூறியுள்ளார். உலங்குவானூர்திகள் எப்படி தற்பாதுகாப்புக்குப் பயன்படுத்தலாம் என்பது எமக்கு விளங்கவில்லை.

சென்னை ஆவடியில் உள்ள கனரக வாகனங்கள் தொழிற்சாலையில் ஆகஸ்ட் 24, 2009 (திங்கட்கிழமை) “பீஷ்மா’ ரக டாங்கிகளை இராணுவத்திடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உரையாற்றும் போதே பல்லம் ராஜு இக் கருத்தினைத் தெரிவித்துள்ளார். இந்த ஆயுததளபாடங்களை இரு நாடுகளிடையே ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தங்கள் அடிப்படையில் தான் வழங்கினோம் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முன்னர் 2007 யூன் மாதத்தில் புதுடில்லியில் நடைபெற்ற முப்படைத் தளபதிகள் மாநாட்டில் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோனி இந்தியா புலிகளை அழிக்க சிங்கள – பவுத்த இனவெறி பிடித்த இலங்கை அரசு கேட்கும் அனைத்து விதமான உதவிகளையும் வழங்குவோம் எனப் பகிரங்கமாக அறிவித்திருந்தார். இந்திய பாதுகாப்பு அமைச்சர் இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாட்டை நியயப்படுத்துவதற்கு விடுதலைப் புலிகளின் விமானப் படை இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கிறதாகச் சொன்னார்.

இந்த மாதம் 3 ஆம் நாள் யாழ்ப்பாணத்தில் உள்ள பலாலி வான்படைத் தள ஓடுபாதையை விரிவாக்குவதற்கு இந்தியா மேலும் ஒரு கோடி 17 லட்சம் ரூபாவுக்கான காசோலையை இந்தியத் தூதுவர் அலோக் பிரசாத் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிடம் வழங்கியிருக்கிறார்.

இந்தியா – இலங்கை இருதரப்பு உறவுகளையும் ஆழப்படுத்துவதற்கும் உறுதிப்படுத்துவதற்குமான செயற்திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தத் திட்டத்துக்கு இந்தியா உதவி வழங்கியுள்ளதாக இந்திய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. எனவே தமிழின அழிப்புத்தான் இந்திய காங்கிரஸ் - திமுக கட்சிகளின் குறிக்கோள் என்பது தெட்டத் தெளிவாகியுள்ளது.

இந்தப் பின்னணியில் நடிகர் விஜய் தமிழினப் படுகொலைலை அரங்கேற்றிய சோனியா காந்தியோடும் ஈழத்தமிழர்களைப் பற்றி அவதூறாகப் பேசி வரும் இராகுல் காந்தியோடும் கைகோர்க்க எத்தனிப்பது அவர் தமிழீழத் தமிழர்களுக்குச் செய்யக் கூடிய அதிக பட்ச இரண்டகம் என நாம் கருதுகிறோம். அதனைப் புலம்பெயர் தமிழர்கள் வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள்.

எனவே நடிகர் விஜய் நடித்த அல்லது நடித்து வெளிவர இருக்கும் படங்களைப் புறக்கணிக்கும் போராட்டத்தில் உலகளாவிய அளவில் இறங்குவோம் என்பதை முன் கூட்டியே அவருக்கும் சம்பந்தப்பட் படத் தயாரிப்பாளர்களுக்கும் சொல்லி வைக்கிறோம்.

http://www.meenagam.org/?p=9067

இந்திய தமிழ் சினிமாவை இறக்குமதி செய்வது, வினியோகிப்பது என்பது இலங்கைத் தமிழர்களால் தான் அதிகளவில் செய்யப்பட்டுக் கொண்டு இருக்கின்றது. முதலில் இவர்களை இனங்கண்டு, பேச்சுவார்த்தை நடாத்தி விஜய் மட்டுமல்ல, இவரைப் போன்றவர்களினதும், கலாநிதி மாறன் போன்றவர்களினதும் படங்களை இறக்குமதி செய்வதை தடுக்க முடியாதா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதில் இப்படியும் ஒரு சதி உள்ளது.

தமிழ் மக்களை, தமிழர் ஆதரவு திரைப்படைத்துறையினர் இடம் இருந்து பிரிக்கவே இது நடக்கலாம்.

அண்மையில் ராஜபக்சவுக்கு ..............டி .......................ம் முஸ்லிம் அமைச்சர் ரஜனிக்கு எதிராக கருத்து கூறியதும் எல்லாம் தொடர்பு பட்ட நிகழ்ச்சியாக உள்ளது. இந்தியாவில் உள்ள தமிழருக்கு எதிரானவர்களை விட, எமக்கு அருகில் இருக்கும் சிங்கள ,காங்கிரசு விசுவாசிகளுக்கு மூளைச்(மூலச்) சலவை செய்தால் நல்லது.

பி. கு.

இடுப்பாட்டி விஜயிற்கு லண்டனில் போக்குவரத்து சேவை வழங்குபவர் வன்னி குடிமகனாம்.

எமது ஆதரவு சக்திகளை இழக்காமல் இவர்களை புறக்கணிக்க வேண்டும்.

படைப்பாளிகள்(?) கழகம் வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டவைகள் அனைத்தும் உண்மைகள்! ... இந்தியா எமது போராட்டத்தை தமது பிராந்திய வல்லாதிக்க நலனுக்கு பாவித்தது .... அதற்கு நாம் பலி போனது ... மீள எத்தனித்தது .... விலக முற்பட்டது .... தேடி வந்து அழிக்க முற்பட்டது .... அதற்கு பழி தீர்த்தது ... பழிக்குப்பழியாக இன்று சத்தமில்லாது எமது போராட்டத்துக்கே முற்றுப்புள்ளி இந்தியா வைத்து விட்டது!!!

..... இது வல்லாதிக்க அரசியல்! இந்தியா மட்டிமல்ல ... உலக வல்லாதிக்கங்கள் அனைத்தினதும் விளையாட்டு!!! .... என்ன, நாம் பலியாகி விட்டோம்!!

ஆனால் ....... உலக வரைபடத்தை பாருங்கள் ...... பின் ஆசியாவை பாருங்கள் .... பின் தென் கிழக்கு ஆசியாவை .... இந்திய உலகண்டத்தை ... இலங்கையை ... தமிழர் வாழும் பூமியை ......... பார்த்தால் நன்கு புரியும்!!

........ இந்தியா இல்லாமல் ..... எமக்கு வாழ்வு இல்லை!!!!! ........ விரும்புகிறோமோ, இல்லையோ இதுதான் யதார்த்தம்!!!!

இவைகள் ஒருபுறம் ....

விஜயின் காங்கரஸ் கட்சியின் இணைவுக்கான உங்களின்/எங்களின் எதிர்ப்புக்கள்!! .... கோமாளித்தனமாக தெரியவில்லை???? ..... நாங்கள் ஏதோ அவர்களின் படங்களை பார்க்கிறோம் என்பதற்காக, 10 கோடி தமிழ் மக்கள் இருக்கும் தேசத்தில் பிறந்த எவரும் எம்மைக் கேட்டுத்தான் மூத்திரம், கக்கா இருக்க வேண்டும் என்றும் அறிக்கை விடுவீர்கள் போலிருக்கிறது. ..... என்ன, வாழ்நாள் முழுவதிலும் எதிரிகளை கூட்டிக் கொண்டே செல்லப் போகிறீர்களா???? ... எம்மத்தியில் கதைத்தவன், சரி/பிழை சொன்னவன் என்று எல்லோரையும் துரோகிகள் ஆக்கினோம். இன்று மேலே ஒருபடி மேலே போய் இந்திய தமிழகத்திலும் கை வைத்து விட்டோம்.

இன்று தமிழகத்தில் ஈழத்தமிழர்களின் போராட்டத்து ஆதரவாக இருந்தவர்களுக்கு நடப்பவைகளை நீங்கள் அறியவில்லையா???? பாரதிராஜா இன்று மவுனமாக்கப்பட்டிருக்கிறார், திருமாமளவன் அடங்கி ஒடுங்கி விட்டார், சுபவீரபாண்டியன் மூச்சே விடுவதில்லை. மேலும் இயக்குனர் சீமான் கொலை செய்யப்படப் போவதாக செய்தி??? ... இப்படியெல்லாம் நடக்க ... எமக்கா விஜய் உண்ணாவிரதமும் இருந்தவர். சுனாமி அழிவின் போது பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கு சந்தடியில்லாது பண உதவி செய்தவர். ... மேலாக திருமணம் முடித்தது ஓர் ஈழத்துப்பெண்ணை!!! .... நிலைமையை புரிந்து கொள்ளுங்கள்!! ...

மேலும் உங்கள் மிரட்டல் அறிக்கைகள், எம்மை ஏமாற்றி, எமது நிலைமைகளை தமிழக மக்களுக்கு தெரிய விடாது மறைத்தும், பொய் சொல்லியும், எமது அழிவிற்கே காரணகர்த்தாவாகி விட்ட கலைஞர் மு.கருணாநிதியின் குடும்ப சொத்தான கலைஞர் தொலைக்காட்சி, சன் தொலைக்காட்சிகளை புறக்கணிக்க உங்களால் முடியவில்லை. ஏன்???????? ....... இங்குள்ள சர்வதேச பிரிவின் கீழ் இயங்கும் ஐ.பி.சி ஒலிபரப்புக்கூட்டுத்தாபனமே, கலைஞர் தொலைக்காட்சியை வளர்ப்பதில் முன்னனி வகுத்தது. அதனை யாரும் மறுக்க முடியுமா????

எங்களுக்குள் உள்ள அழுக்குகளை முதலில் அகற்றுவோம்!! பட்டவைகள் போதும் ... அழிந்து விட்டோம் ..... மிஞ்சி இருப்பவர்களையாவது யாராவது கால்களில் வீழ்ந்து கெஞ்சியவாது வாழ் வைப்போம்!!!

நெல்லையண்ணை உதை நான் எல்லாம் முன்னம் சொல்ல போய் தமிழ் தியாகிகளிட்டை வசை வாங்கின அனுபவம் இன்னும் மறக்க இல்லை...

எங்கட சனம் ஆத்திரத்தை மூத்திரம் போல அடக்க ஏலாமல் படுக்கிற பாயிலேயே அடிப்பினம், கடைசியா நாறிக்கிடப்பினம்... என்ன ஏது எண்டு தீர மட்டும் விசாரிக்க மாட்டினம்... கீழை இருக்கிற செய்திய ஒருக்கா படியுங்கோ....

தொடர் தோல்வி-வேட்டைக்காரனை ஓட வைக்க விஜய் 'பாலிடிக்ஸ்'?

நடிகர் விஜய்யின் படு வேக அரசியல் பிரவேசம் பலருக்கும் வியப்பை அளித்துள்ளது. இந்த அரசியலுக்குப் பின் வேறு அரசியல் இருக்கிறதா என்ற கேள்வியும் கோலிவுட்டில் எழுந்துள்ளது.

சமீபகாலமாக விஜய் நடித்து வெளியான 3 படங்களும் அடுத்தடுத்து தோல்வியைத் தழுவின. போக்கிரி படத்திற்குப் பின்னர் நடித்த அழகிய தமிழ் மகன், குருவி, வில்லு ஆகியவை மெகா தோல்விப் படங்கள்.

இத்தனைக்கு பெருமளவில் எதிர்பார்க்கப்பட்ட படங்கள் இவை. அதிலும் குருவியை விஜய் நிறையவே எதிர்பார்த்திருந்தார். இப்படி அடுத்தடுத்து தோல்விப் படங்களாக அமைந்ததால் அப்செட் ஆகியுள்ள விஜய் தற்போது நடித்து வரும் வேட்டைக்காரன் படத்தைத்தான் பெரிதும் எதிர்பார்க்கிறார்.

இந்தப் படம் பெரும் பொருட்செலவில் உருவாகிறது. ஏவி.எம்.பாலசுப்ரமணியம் தயாரிக்கிறார். அனுஷ்கா விஜய்யுடன் முதல்முறையாக ஜோடி சேர்ந்துள்ளார்.

இந்தப் படத்தை மெகா ஹிட் படமாக்கியே தீர வேண்டிய கட்டாயம் விஜய்க்கு. இதற்காக அவரும் மெனக்கெட்டு உழைத்து வருகிறார்.

வேட்டைக்காரன் தீபாவளிக்கு திரைக்கு வரவுள்ளது. இந் நிலையில் படத்தை வெற்றிப் படமாக்கத்தான் விஜய் இப்படி அரசியல், கட்சி என இறங்கியுள்ளதாக ஒரு பேச்சு எழுந்துள்ளது.

அரசியல் பரபரப்பை ஏற்படுத்தினால் படத்துக்கு வலு சேர்க்கும் என்ற சில நடிகர் களின் பழைய யுக்தியை விஜய்யும் கையில் எடுத்திருப்பதாக கோலிவுட்டில் பேசுகின்றனர்.

அரசியல் என்பது பெரும் கடல். எனவே நிதானமாக, யோசித்து அடியெடுத்து வைப்பேன் என்று ஓரிரு நாட்களுக்கு முன்புதான் விஜய் கூறியிருந்தார். இந்த நிலையில் படு வேகமாக அவரது அரசியல் பிரவேசம் குறித்த செய்திகள் வெளியாவதை வேட்டைக்காரனுடன் முடிச்சு போடுகிறார்கள்.

http://thatstamil.oneindia.in/movies/heroe...den-plunge.html

விஜய் இன்னும் தன் வாயால் அறிவிக்கவில்லை. அதுக்கிடையில் தடியை தூக்கி கொண்டு வெளிக்கிட்டியள்.

அதற்கு முதல் எட்டப்பன் கருநாநிதியின் கலைஞர் தொலக்காட்சியில் போட்டி போட்டு கொண்டு விளம்பரம் கொடுக்கும் புலம் பெயர் நாடுகளில் வாழும் ஈழத்தமிழர் வியாபார நிறுவனங்கள் தங்களது விளம்பரங்களை நிறுத்த முன்வரவேண்டும்.

முதல் அதை செய்ய வேண்டும். ஜங்கரன் வேறு......... கருநாநிதி தொலைக்காட்சி வேறு..

விளம்பரங்கள் அனல் பறக்க போகிறது.

தீபம் , ஜி.ரி.வி போன்றவற்றுக்கு ஆதரவு கொடுக்க முன்வரவேண்டும்.

விளம்பர உதவிக்காக ஜி.ரி.வி கஸ்டப்படுகிறார்கள்.

கொலஞர் ரி.வி காசின் மேல் படுத்திருந்து ரிவி நடாத்துகிறார்கள்.

சிலர் சொல்லலாம் எல்லா ரிவிக்கும் விளம்பரம் போகுது என்று.

இல்லை கலைஞர் ரி.வி யில் வரும் அநேக விளம்பரங்கள் மற்றைய ரிவிக்களில் வருவதில்லை.

ஒட்டு மொத்த நிறுவனங்களும் சேர்ந்து இதை செய்ய வேண்டும்.

இதை செய்வதால் ஒரு போது வியாபாரம் லாபம் பாதிக்காது.

நிச்சயமாக எதோ ஒரு தொலைக்காட்சி தமிழர் வீடுகளில் வலம் வருகிறது...

சிந்திப்போம்

Edited by நேசன்

அவர் சேராட்டிலும் நாமா புறக்கணிக்கத்தான் வேணும். அப்படி போட்டு கடிக்கிறாரு....!

  • கருத்துக்கள உறவுகள்

அவர் சேராட்டிலும் நாமா புறக்கணிக்கத்தான் வேணும். அப்படி போட்டு கடிக்கிறாரு....!

:lol:

  • கருத்துக்கள உறவுகள்

எதிரிகளை உருவாக்காதீர்கள்...

  • கருத்துக்கள உறவுகள்

படைப்பாளிகள்(?) கழகம் வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டவைகள் அனைத்தும் உண்மைகள்! ... இந்தியா எமது போராட்டத்தை தமது பிராந்திய வல்லாதிக்க நலனுக்கு பாவித்தது .... அதற்கு நாம் பலி போனது ... மீள எத்தனித்தது .... விலக முற்பட்டது .... தேடி வந்து அழிக்க முற்பட்டது .... அதற்கு பழி தீர்த்தது ... பழிக்குப்பழியாக இன்று சத்தமில்லாது எமது போராட்டத்துக்கே முற்றுப்புள்ளி இந்தியா வைத்து விட்டது!!!

..... இது வல்லாதிக்க அரசியல்! இந்தியா மட்டிமல்ல ... உலக வல்லாதிக்கங்கள் அனைத்தினதும் விளையாட்டு!!! .... என்ன, நாம் பலியாகி விட்டோம்!!

ஆனால் ....... உலக வரைபடத்தை பாருங்கள் ...... பின் ஆசியாவை பாருங்கள் .... பின் தென் கிழக்கு ஆசியாவை .... இந்திய உலகண்டத்தை ... இலங்கையை ... தமிழர் வாழும் பூமியை ......... பார்த்தால் நன்கு புரியும்!!

........ இந்தியா இல்லாமல் ..... எமக்கு வாழ்வு இல்லை!!!!! ........ விரும்புகிறோமோ, இல்லையோ இதுதான் யதார்த்தம்!!!!

இவைகள் ஒருபுறம் ....

விஜயின் காங்கரஸ் கட்சியின் இணைவுக்கான உங்களின்/எங்களின் எதிர்ப்புக்கள்!! .... கோமாளித்தனமாக தெரியவில்லை???? ..... நாங்கள் ஏதோ அவர்களின் படங்களை பார்க்கிறோம் என்பதற்காக, 10 கோடி தமிழ் மக்கள் இருக்கும் தேசத்தில் பிறந்த எவரும் எம்மைக் கேட்டுத்தான் மூத்திரம், கக்கா இருக்க வேண்டும் என்றும் அறிக்கை விடுவீர்கள் போலிருக்கிறது. ..... என்ன, வாழ்நாள் முழுவதிலும் எதிரிகளை கூட்டிக் கொண்டே செல்லப் போகிறீர்களா???? ... எம்மத்தியில் கதைத்தவன், சரி/பிழை சொன்னவன் என்று எல்லோரையும் துரோகிகள் ஆக்கினோம். இன்று மேலே ஒருபடி மேலே போய் இந்திய தமிழகத்திலும் கை வைத்து விட்டோம்.

இன்று தமிழகத்தில் ஈழத்தமிழர்களின் போராட்டத்து ஆதரவாக இருந்தவர்களுக்கு நடப்பவைகளை நீங்கள் அறியவில்லையா???? பாரதிராஜா இன்று மவுனமாக்கப்பட்டிருக்கிறார், திருமாமளவன் அடங்கி ஒடுங்கி விட்டார், சுபவீரபாண்டியன் மூச்சே விடுவதில்லை. மேலும் இயக்குனர் சீமான் கொலை செய்யப்படப் போவதாக செய்தி??? ... இப்படியெல்லாம் நடக்க ... எமக்கா விஜய் உண்ணாவிரதமும் இருந்தவர். சுனாமி அழிவின் போது பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கு சந்தடியில்லாது பண உதவி செய்தவர். ... மேலாக திருமணம் முடித்தது ஓர் ஈழத்துப்பெண்ணை!!! .... நிலைமையை புரிந்து கொள்ளுங்கள்!! ...

மேலும் உங்கள் மிரட்டல் அறிக்கைகள், எம்மை ஏமாற்றி, எமது நிலைமைகளை தமிழக மக்களுக்கு தெரிய விடாது மறைத்தும், பொய் சொல்லியும், எமது அழிவிற்கே காரணகர்த்தாவாகி விட்ட கலைஞர் மு.கருணாநிதியின் குடும்ப சொத்தான கலைஞர் தொலைக்காட்சி, சன் தொலைக்காட்சிகளை புறக்கணிக்க உங்களால் முடியவில்லை. ஏன்???????? ....... இங்குள்ள சர்வதேச பிரிவின் கீழ் இயங்கும் ஐ.பி.சி ஒலிபரப்புக்கூட்டுத்தாபனமே, கலைஞர் தொலைக்காட்சியை வளர்ப்பதில் முன்னனி வகுத்தது. அதனை யாரும் மறுக்க முடியுமா????

எங்களுக்குள் உள்ள அழுக்குகளை முதலில் அகற்றுவோம்!! பட்டவைகள் போதும் ... அழிந்து விட்டோம் ..... மிஞ்சி இருப்பவர்களையாவது யாராவது கால்களில் வீழ்ந்து கெஞ்சியவாது வாழ் வைப்போம்!!!

என்ன இப்ப வேறொரு புதுக்கதை சொல்றீங்கள்...............?

புலிகள் விட்ட பெருத்த தவறுகளால்தான் நாம் அழிந்துபோனோம் என்று நீங்கள் அடித்து அடித்து சொல்லி நாங்களும் அதை பூரணமாக நம்பி கொண்டிருக்கும் வேளையில். இப்போது புதிதாக வல்லாதிக்கம் பிராந்திய அரசியல் என்று புதுசா கிண்டுறீங்கள்?

ஒரு நிலையில் நிற்பதென்றால்..............? பொய்களையும் விசர் சித்தாத்தங்களையும் சோடித்து நெடும்காலம் நிற்க முடியாது என்பதை நாம் இப்போதுதான் முதல் தடவையாக காணவில்லை.

ஒரு வேளை நீங்கள் கண்டிருப்பின் புரிக!

எதிரிகளை உருவாக்காதீர்கள்...

உண்மைதான்.

அதற்காக எமது எதிரிகளை அடையாளம் காணாது குப்பறபடுக்கவும் முடியாது அல்லவா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் நாட்டு அன்பர் ஒருவரிடம் கதைத்த பொழுது, இவற்றை பற்றி இலங்கை தமிழர்கள் கவலைப்படதேவையில்லை என்றார்.

ஏனென்றால் அவற்றையெல்லாம் மு கறுணா நிதி பார்த்துக்கொள்வாராம்.

அரசியல் எதிரிகளை நசுக்குவதில் அவருக்கு நிகர் அவர்தானாம்.

ஆகவே நாங்கள் கத்தி எமது நண்பர்கள் சிலரையும் எதிரிகளாக உருவாக்காமல்...................

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எதிரிகளை உருவாக்காதீர்கள்...

:icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

எதிரிகளை உருவாக்காதீர்கள்...

உண்மை. உருவாகிறார்கள். :icon_mrgreen:

எதிரிகளை உருவாக்காதீர்கள்...

யாழ் களமும் இதில் அடக்கம். டூ லேட்தான். காலம் கடந்து உணர்ந்ததற்கு நன்றி.

எதிரியை ( காங்கிரஸ் ) முட்டி மோதுவதைக் காட்டிலும் கூடச் சேர்ந்து மாற்றுவதும் ஒரு தந்திரம்.

விஜய் அதைச் செய்வாரா ?

காங்கிரஸ் கட்சியை மாற்றுவதா? நடக்கின்ற காரியத்தை பேசுங்கள்

இந்தியா தமிழர்களின் எதிரி. இந்தியத் தேசியம் தமிழர்களுக்கு எதிரானது. இந்தியத் தேசியம் காங்கிரஸ் கட்சியின் ஊடாக எமது போராட்டத்தை அழித்தது: பல்லாயிரம் மக்களை கொன்றது. எங்கள் தலைவனைக் கொன்றது.

இந்திய தேசியவாதத்தின் பெரும் ஆயுதமான காங்கிரஸ் கட்சியை தமிழ்நாட்டில் வளர்ப்பதற்கு ஒரு கருவியாக விஜய் பயன்பட்டால், விஜயும் தமிழர்களின் எதிரி.

நாம் யாரும் எதிரிகளை உருவாக்குவது இல்லை. அவர்களாகவே எதிரிகளாக ஆகின்றார்கள்.

விஜய்க்கு காங்கிரஸில் சேர உரிமை உண்டு. அவரின் படங்களைப் பார்க்காமல் விடுவதற்கு எமக்கு உரிமை உண்டு.

இந்த உண்மை தெரிந்தும் இந்தியாதான் எல்லாம், அவர்களே எம் ரட்சர்கள் எனும் சிலர் பினாத்தி திரிவது அவர்களின் பிழைப்புவாதம் சபேசன். அவர்களுக்கு தேவை தலைவர் இந்தியா பற்றி தவறாக எண்ணி விட்டார் அதனால் தான் நாம் தோற்றுவிட்டோம் என பரப்பி திரிவதே.

இந்தியா என்பதும் இந்திய தேசியம் என்பதும் அட்டூழியங்களினதும் அடக்குமுறைகளினதும் அடையாளச் சின்னம். இந்தியா எக்காலத்திலும் தேசிய இனங்களின் விடுதலையை விரும்பியதும் இல்லை ஆதரித்ததும் இல்லை. தன் நாட்டில் அடக்குமுறையை ஆயுதமாக கொண்டு சிறுபான்மையின தேசிய இனங்களை அடக்கி ஆளும் ஒரு அதிகார வர்க்கமும, அரசும் இன்னொரு நாட்டின் தேசிய இனத்தின் விடுதலையை, நல்வாழ்வை விரும்பும் என உளறுவது அவர்களின் அறியாமை அல்ல....பிழைப்புவாதம்

Edited by நிழலி

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சபேசன், நிழலி

உங்கள் கருத்துக்களை முழுமையாக நானும் ஏற்றுக்கொள்கிறேன். எதிரிகளை நாம் uruvaakkavillai, அவர்கள் எங்களை எதிரிகளாக்கி விடுகிறார்கள். அது எப்படியென்றால், எமது எதிரியான இந்திய அடக்குமுறை காங்கிரஸ் கட்சியுடன் கை குலுக்குவதன் மூலம். தமிழர்களுக்காக ஒருநாள் உண்ணாவிரதமிருந்த ஒருவர் மூன்றே மாதங்களில் எம்மை அழித்து, 30 வருடகால எமது இலட்சியத்தின் அடையாளத்தை நயவஞ்சகத்தால் அழித்துப்போட்ட ஒரு எதிரியுடன் கூட்டுச் சேர்வதென்பதை எப்படி வர்ணிப்பது. இது சிலருக்குத் தப்பாகத் தெரியவில்லை ஆனால், இதை விமர்சிக்கும்போது மட்டும்தான் "எதிரிகள் உருவாவது" தெரிகிறது. இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் "எதிரிகளை உருவாக்கவேண்டாம்" என்று சொல்லிக்கொண்டு அப்பாவிகளாக அடிமைப்படப் போகிறோம். எதிரிகளை அடையாளம் காண்பது வேறு அவர்களை உருவாக்குவது வேறு. வித்தியாசத்தைப் புரிந்து கொள்ளுங்கள்.

Edited by ragunathan

  • கருத்துக்கள உறவுகள்

வன்னிப் படுகொலைகளை வேணுமென்றே மறைத்து ஓளிபரப்புச் செய்த சன் தொலைக்காட்சியைக்கு எவ்வளவு காசு கொடுத்தும் ஆதரவு கொடுக்கிறீர்கள். ஆனால் வன்னி அவலத்தை ஒளிபரப்புச் செய்த GTVயை இலவசமாக வேணுமாம்.

இப்படிப்பட்டவர்களை நம்பி விஜயின் படத்தை புறக்கணிக்கச் சொன்னால் நாங்கள் தான் ஏமாளியாகி விடுவோம்.

அந்த நடிகன் கங்கிரசில் சேர்ந்தா என்ன பி ஜே பி யில் சேர்ந்தா நமக்கென்ன? விஜய் காங்கிரசில் சேர்வது ஒரு பெரிய விசயமில்லை ஆனால் அதை கேட்டு எம்மவர்கள் தாம் தோம் என்று குதியன் குத்துவது தான் கேவலமான விசயம். நாம் ஏன் அவரை ஒரு பெரியாளாக அண்ணாந்து பார்த்துக்கொண்டு இருக்கவேண்டும்? விசய் படமில்லமல் இருக்கேலாது. சன் ரிவி சீரியல் இல்லாம இருக்கேலாது. நாங்கள் எப்பவும் அவங்கள்ள தொங்கி கொண்டிருக்கிறம். அங்க உள்ளவன் முதல்ல இந்தியன் பிறகே தமிழன். அந்த தமிழனும் அறுபத்தெட்டு சாதியாக மதமாக கட்சியாக பிளந்து போய் உள்ளான். இது எங்கட சனத்துக்கு எப்பவும் புரியப்போவதில்லை. இந்து மத உறவில் இருந்து சினிமா சீரியல் அரசியல் எல்லாத்திலேயும் இந்தியத்துக்குள்ள நாங்கள் செருகுப்பட்டுள்ளோம். அதிலிருந்து எம்மால பிரிந்து வெளியேறி தனித்து இருக்கேலாது. நாம் இலங்கையில் வாழ்ந்தாலும் இந்திய அதிகார வர்க்கத்தின் அடிமைகள் என்பதே யதார்த்தம். இந்திய அதிகாரவர்க்கச் சகதிக்குள் இருந்து எம்மால் எக்காலத்திலும் மீள முடியாது. அது அனைத்திலும் கலந்துள்ளது. பொல்லுக்கொடுத்து அடிவங்குதல் என்பது எமது இனத்தின் தலையெழுத்து. எனவே விஜய் படங்களை அல்லது வேறு எதையேனும் புறக்கணித்தல் என்பது நடைமுறைக்கு சாத்தியமற்ற விடயம். இவ்வாறான திரிகளை மூடுவது சிறந்தது. இப்படி புலம்புவது உண்மையில் எங்களை நாங்களே கோமாளிகள் என்பதுக்கு ஒப்பானது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.