Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

» வருங்கால மனைவிக்கு கற்பு தேவை இல்லை 63 சதவீத ஆண்கள் கருத்து !

Featured Replies

» வருங்கால மனைவிக்கு கற்பு தேவை இல்லை 63 சதவீத ஆண்கள் கருத்து !ஆங்கில தொலைக்காட்சி ஒன்று எடுத்த கருத்துக்கணிப்பில் வருங்கால மனைவிக்கு கற்பு தேவையில்லை என்று 63 சதவீத இளைஞர்கள் கூறியுள்ளனர் வருங்கால மனைவிக்கு கற்பு தேவையில்லை என்று 63 சதவீத இளைஞர்கள் கூறியுள்ளனர். வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு இந்தியாவில் “கற்பு” பிரதான ஒன்றாக கருதப்படுகிறது. ஆணுக்கோஇ பெண்ணுக்கோஇ கற்பு முக்கியமானது என்று வலியுறுத்தி வருகின்றனர்.

ஆனால் இப்போதெல்லாம் கற்பா? அப்படி என்றால் என்ன? என்று கேட்கும் அளவுக்கு நகரங்களில் நிலைமை மோசமாகி வருகிறது. இந்த நிலையில் கற்பு தொடர்பாக ஆங்கில சானல் ஒன்று இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களில் கருத்து கணிப்பு ஒன்று நடத்தி உள்ளது.

அதில் இளைஞர்களிடம் உங்கள் வருங்கால மனைவி கற்புடையவராக இருந்திருக்க வேண்டுமா? என்று கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்தவர்களில் 63 சதவீதம் பேர் வருங்கால மனைவி கற்போடு இருந்திருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை என்றனர். 37 சதவீதம் பேர் மட்டும் கற்புடைய பெண்ணே மனைவியாக வரவேண்டும் என்றனர்.

ஆணோஇ பெண்ணோ திருமணத்துக்கு முன்பே உறவு வைத்துக் கொள்வதில் தவறு இல்லை என்று 37 சதவீதம் பேர் கூறினார்கள்.

லக்னோவை சேர்ந்த நேகர்பர்த் (வயது 28) என்ற கம்ப்யூட்டர் என்ஜினீயர் கூறும் போது “ஒரு பெண்ணுக்கு நல்ல குணம் முக்கியமானது. ஆனால் நல்ல குணத்துக்கும் கற்புக்கும் சம்பந்தம் கிடையாது” நமக்கு யார் பொருத்தமானவள் என்று தான் பார்க்க வேண்டுமே தவிர அவள் கற்போடு இருக்கிறாளா? என்று பார்க்க வேண்டிய அவசியமில்லை என்றார்.

அங்கீதாசர்மா (24) என்ற இளம் பெண் கூறும் போதுஇ “திருமணம் செய்ய உள்ள மாப்பிள்ளையை அவர் கற்போடு இருக்கிறாரா? என்று சோதனை நடத்த முடியாது. எனது கற்பு பற்றி கேள்வி எழுப்புபவரை நான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன்” என்றார்.

லக்னோவை சேர்ந்த மகப்பேறு மருத்துவ நிபுணர் ரேணு மாக்கர் கூறும் போது “என்னிடம் பரிசோதனைக்கு வரும் திருமணமாகாத பெண்களில் 80 சதவீதம் பேர் ஏற்கனவே “செக்ஸ்” உறவு வைத்துள்ளனர்” என்றார்.

நன்றி உதயன்

................................................................................

......................................

நெடுக்ஸ் என்ன சொல்வாரோ தெரியாது

கு ச உங்கள் கருத்து முக்கியம்

  • Replies 161
  • Views 35.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

லக்னோவை சேர்ந்த மகப்பேறு மருத்துவ நிபுணர் ரேணு மாக்கர் கூறும் போது “என்னிடம் பரிசோதனைக்கு வரும் திருமணமாகாத பெண்களில் 80 சதவீதம் பேர் ஏற்கனவே “செக்ஸ்” உறவு வைத்துள்ளனர்” என்றார்

பதில் சொல்லிய ஆண்கள் புத்திசாலிகள்

கிடைக்காத ஒன்றை ஏன் கேட்டு... என்று நினைத்தார்களோ?

99% ஆண்கள் கற்போடு இல்லை என்பது உண்மையான யதார்த்தம். [ ஆண்களின் கற்பு என்பது அவர்களின் எண்ணத்தில்தான் தங்கியுள்ளது ] தாங்களே இப்படி இருந்துகொண்டு தாம் மணமுடிக்கப்போகும் பெண்கள் மட்டும் கற்போடு இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது, எவ்வகையில் நியாயப்படும்????

கற்பு என்றால் என்ன? பித்தலாட்டம், பொய் மற்றும் என்றென்றும் பெண்களை மத ரீதியில், கலாச்சார ரீதியில் கட்டுப்படுத்தி வைக்க பயன்படும் கற்பனை வஸ்து

அது தானே........ :rolleyes:

மிச்ச ஒரு வீதமும் , ஒண்டுக்கு இருக்கவே ....... பயப்பிடுறவன்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

» வருங்கால மனைவிக்கு கற்பு தேவை இல்லை 63 சதவீத ஆண்கள் கருத்து !ஆங்கில தொலைக்காட்சி ஒன்று எடுத்த கருத்துக்கணிப்பில் வருங்கால மனைவிக்கு கற்பு தேவையில்லை என்று 63 சதவீத இளைஞர்கள் கூறியுள்ளனர் வருங்கால மனைவிக்கு கற்பு தேவையில்லை என்று 63 சதவீத இளைஞர்கள் கூறியுள்ளனர்.

தமிழ் தொலைக்காட்சியில் இப்படி ஒரு கருத்துக்கணிப்பு வைத்தால் எப்படி இருக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தொலைக்காட்சியில் இப்படி ஒரு கருத்துக்கணிப்பு வைத்தால் எப்படி இருக்கும்

சும்மா ...... லூசா ........ போகும்.

கற்பு நெறி என்பது உடல் சார்ந்த தன்மை அல்ல அது உள்ளம் சார்ந்த தன்மை ஆகும். குறிப்பாக கற்பு நெறி பற்றி பேசுகின்றபோது அது பெண்ணுக்கான பாலியல் ஒழுக்கமாக மட்டுமே நோக்கப்படுகின்றது. பெண்ணுக்கு மட்டுமின்றி ஆணுக்கும் இது பொருந்தும் என்பதை அநேகர் ஏற்றுக்கொள்ளுவதில்லை. கற்பு என்ற சொல் பெண்ணுக்காகவே உருவாக்கப்பட்டது என்பது அவர்கள் எண்ணம். காமுகன் ஒருவனால் வன்புணர்வு செய்யப்பட்ட பெண்னை கற்பிழந்தவள் எனக் கொள்வது படுபாதகம். காதலிக்கும் போது தங்கள் உண்மைத் தன்மையை காண்பிக்கப் போய் வஞ்சிக்கப்பட்ட பெண்களும் இந்;த வரையறைக்குள் அடக்கப்படக் கூடாது என்பது எனது கருத்து. பெண்ணுக்கு மட்டும் கற்பு தேவை என்கிற ஒருதலைக் கற்பு நெறி உள்ளவரை சமுதாய மாற்றம் ஏற்படப் போவதில்லை. ஆண்களின் ஒழுக்கப் பிறழ்வினால் ஏற்பட்ட வடுக்களை பெண்கள் மட்டுமே சுமப்பது நீதி ஆகாது. அதற்காக பெண்கள் எல்லோரும் பத்தினிகள் என்றும் சொல்லவும் கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்

கற்பு என்ற ஒன்று பெண்களுக்கு இல்லை என்று சொல்லும் நீங்கள்

பத்தினியும் இல்லை என்பதன்மூலம் எதைச்சொல்ல வருகின்றீர்கள்?

கற்பு

பத்தினி

விளக்கம் தரமுடியுமா?

என்னைப்பொறுத்தவரை

கற்பு

கடைப்பிடிக்கப்படவேண்டிய ஒன்று.

இல்லையென்றால்....

உலக சக்கரத்தில் [b]மனிதம் என்ற ஒன்றும்

சுகம் என்ற இதமும் இல்லாது போய்விடும்.

  • கருத்துக்கள உறவுகள்

கற்புள்ள ஆணை எப்படி கண்டுபிடிப்பது ?

அல்லது ..... கற்புள்ள பெண்ணை எப்படி கண்டு பிடிப்பது ?

கற்பு என்ற ஒன்று பெண்களுக்கு இல்லை என்று சொல்லும் நீங்கள்

பத்தினியும் இல்லை என்பதன்மூலம் எதைச்சொல்ல வருகின்றீர்கள்?

கற்பு

பத்தினி

விளக்கம் தரமுடியுமா?

கற்பு என்ற ஒன்று பெண்களுக்கு இல்லை என்று நான் சொல்லவில்லை அந்தக் கற்பு பெண்களுக்கு மட்டும் இல்லை என்றே சொல்கிறேன். அது ஆண்களுக்கும் தேவை என்று சொல்கிறேன். அந்தக் கற்பு உடலளவில் இல்லை என்கிறேன்.

காதலிக்கும் போது தங்களே ஆடவனை மடக்கி படுக்கையறை சென்றுவிட்டு இன்னேருவனை ஏமாற்றி திருமணம் செய்பவள் பத்தினி அல்ல என்கிறேன். திருமணமான பின்பு கூட விருப்பத்துடன் இன்னொருவனுக்கு தன் மஞ்சத்தை விரிக்கிறவள் பத்தினி அல்ல என்கிறேன்.

உள்ளத்தால் கற்புடைய பெண்ணைப் பத்தினி என்று சொல்லுகிறேன்.

நன்றி வணக்கம்.

Edited by RasaRaasan

கற்பு இல்லாட்டியும் பரவாயில்லை ஆனால் கருக்கலைப்பு செய்யும் அளவுக்கு போகாமல் இருந்தால் சரி .

இதுதான் இன்றைய நிலை.

மேலைநாட்டுக்கு வந்தாப்பிறகு எல்லாம் பம்மாத்து எண்டு தான் தோன்றுது.

என்ர பிள்ளையும் உன்ரை பிள்ளையும் எங்கட பிள்ளையோட விளையாடுதுகள். இதுதான் வருங்காலம்

Edited by நேசன்

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் என்ன சொல்வாரோ தெரியாது

கு ச உங்கள் கருத்து முக்கியம்

முதலில் ஆண்கள் கற்போட இருந்தால் தானே அதை பெண்களிடம் எதிர்பார்க்க..! இதில் இருந்து தெரிவதென்ன.. 63% ஆண்கள் கற்போட இல்லை..! தன்னிடம் இல்லாததை எப்படி தன் துணையிடம் எதிர்பார்க்க முடியும். அவள் கேட்கமாட்டாள்.. எங்கே உன் கற்பு என்று.

பெண்கள் ஆண்களுக்கு அடங்கி வாய் பேசா மடந்தைகளாக இருந்தது அந்தக்காலம். இப்போ பெண்கள் பதில் கேள்வி கேட்பார்களே. அதற்கு பதில் சொல்ல முதலில் அந்த ஆணுக்கு ஒரு தகுதி வேணுமே..! அது இல்லாதவனுக்கு.. செக்கென்ன.. சிவலிங்கம் என்ன..! :lol::D

ஒழுக்கத்தோடு இருக்கிறவனுக்குத்தான் ஒழுக்கத்தின் தன்மை புரியும். அதுவே இல்லை என்பவனிற்கு..!

நான் கண்டிருக்கிறேன்.. யுனில படிக்கிற கிட்டத்தட்ட 80% ஆண்கள்.. ஏதாவது ஒரு பெண்ணோடு தொடர்பு வைச்சிருக்கிறார்கள். அவர்கள் யுனிய விட்டு வெளிய வந்து மாப்பிள்ளையாகிறப்போ எப்படி.. கற்பை எதிர்பார்க்கிறது..!

இக்கருத்துக்கணிப்பில் ஈடுபட்டவர்கள் பலர் கல்லூரிகளில்.. படிக்கும் போதே.. படிப்பை முடித்தார்களோ இல்லையோ மற்றதுகளை சரி வர முடித்தவர்கள் போல் தெரிகிறது..! அது தான் இன்றைய நிலை..! அதற்காக எல்லோரும் அப்படி என்றல்ல..!

எல்லாம் கும்பல்ல கோவிந்தா தான். :D:lol:

இதிலும்.. இவர்கள் பேசாம.. கலியாணமே கட்டாமல்.. இருந்திடலாம். நினைச்ச நேரம் நினைச்சதோட விலை பேசி வாழ்ந்திடலாம்.. நாய் பூனை போல வாழ்ந்திட்டுப் போகட்டும். அதற்காக நாம் எமது ஒழுக்கத்தை தொலைக்க வேண்டிய அவசியமில்லை..!

என்னுடைய நிலைப்பாடு நான் ஒழுக்கமா இருக்கிறேனா என்பதுதான் என்னுடைய முதற் கேள்வி. அதன் பின் தான் மற்றவன் என்ன சொல்கிறான் என்று கேட்பேன். மற்றவன் சொல்வதை எல்லாம் வேதமாக எண்ண நான் ஒன்றும் சுய சிந்தனை அற்றவன் கிடையாது.. .! :D:D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

கற்பு என்ற ஒன்று பெண்களுக்கு இல்லை என்று நான் சொல்லவில்லை அந்தக் கற்பு பெண்களுக்கு மட்டும் இல்லை என்றே சொல்கிறேன். அது ஆண்களுக்கும் தேவை என்று சொல்கிறேன். அந்தக் கற்பு உடலளவில் இல்லை என்கிறேன்.

காதலிக்கும் போது தங்களே ஆடவனை மடக்கி படுக்கையறை சென்றுவிட்டு இன்னேருவனை ஏமாற்றி திருமணம் செய்பவள் பத்தினி அல்ல என்கிறேன். திருமணமான பின்பு கூட விருப்பத்துடன் இன்னொருவனுக்கு தன் மஞ்சத்தை விரிக்கிறவள் பத்தினி அல்ல என்கிறேன்.

உள்ளத்தால் கற்புடைய பெண்ணைப் பத்தினி என்று சொல்லுகிறேன்.

நன்றி வணக்கம்.

என்னைக் கேட்டால் கற்பு என்பது.. உடல் உளம் சார்ந்த ஒரு பாலியல் ஒழுக்கம் என்று சொல்வேன். அப்படி ஒன்றில்லை என்பது தவறானது. கற்பை பாதுகாக்க முடியாது என்பதும் தவறானது. பாதுகாக்க முடியும் என்பதை நான் அனுபவத்தால் கண்டிருக்கிறேன். எனக்கும் நண்பிகள் இருந்திருக்கிறார்கள். ஆனால் அவர்களோடு கை போட்டு.. கால் போட்டு பழகிறதெல்லாம் கிடையாது. உரசிக்கிட்டு திரியுறதிற்கு நான் ஒன்றும் விலங்கும் கிடையாது. எனக்கென்று மனதளவில் ஒரு விதிமுறை வகுத்திருக்கிறேன். அதைத் தாண்டாது என்னை நான் ஆளப்பழகிக் கொண்டிருப்பதால்.. கற்பைக் காப்பது என்பது அத்துணை கடினமாக எனக்கு இருக்கவில்லை..!

அதுமட்டுமன்றி.. இது பெண்கள் தொடர்பில் எனது தனி அனுபவத்தில்.. நான் அவர்களால் பெரிதாக பாதிக்க்படவில்லை. ஆனால் பாதிக்கப்பட்ட ஆண்களை கண்டிருக்கிறேன். உண்மையில்.. நல்லவர்களாக இருந்தும் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள். அதுதான் பெண்கள் மீது நான் வெறுப்புக் கொள்ள அதிக காரணம். அதிலும்.. பெண்களை ஏமாற்றி.. (இப்போ எல்லாம் பெண்களாகவே விரும்பிக் கெடுறாங்க.. அது வேற கதை..! ) இவ்வாறு கற்பென்றால் என்ன என்று கேட்டு தமது உணர்வுக்கு வடிகால்களாக பெண்களைப் பாவித்துவிட்டு தூக்கி எறிந்து வாழ்ந்த ஆண்கள் பெண்கள் மத்தியில் ஏற்படுத்திய ஆண்கள் பற்றிய தப்பபிப்பிராயமும் ஒரு காரணி..!

இதில் நான் என்னை நல்லவன்.. கற்புள்ளவன் என்று சொல்வதற்காக எழுதவில்லை. என்னை ஒரு மாதிரிக்கு உபயோகித்திருக்கிறேன். மற்றவர்களைப் பற்றி சரிவர அறியாமல்.. அப்படி எழுத என்னால் முடியாது என்பதால்..! :lol::D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப ....... முந்தி ....... புராணாக் கதையைள்ளை ........

முதலிரவிலை ...... படுக்கப்போகேக்கை ..... கட்டில்லை .......

வெள்ளைத்துணி ஏன் விரிக்க வேணும் ? :D:lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

சகோதரிகளுக்காக 40 வயது வவரைக்கும் கலியானம் இல்லாமல் உளைக்கும் ஆண்களும் சீதனக்கொடுமையால் முதிர் கன்னிகளாக இருக்கும் பெண்களும் கடைசி வரைக்கும் கற்ப்பை பாதுகாத்துப்போட்டு மண்டையை போடுவது சரியா :lol:

அப்ப ....... முந்தி ....... புராணாக் கதையைள்ளை ........

முதலிரவிலை ...... படுக்கப்போகேக்கை ..... கட்டில்லை .......

வெள்ளைத்துணி ஏன் விரிக்க வேணும் ? :D:lol::D

அது இருட்டுக்குள்ள அடையாளம் கண்டு பிடிக்க :D

  • கருத்துக்கள உறவுகள்

» வருங்கால மனைவிக்கு கற்பு தேவை இல்லை 63 சதவீத ஆண்கள் கருத்து !ஆங்கில தொலைக்காட்சி ஒன்று எடுத்த கருத்துக்கணிப்பில் வருங்கால மனைவிக்கு கற்பு தேவையில்லை என்று 63 சதவீத இளைஞர்கள் கூறியுள்ளனர் வருங்கால மனைவிக்கு கற்பு தேவையில்லை என்று 63 சதவீத இளைஞர்கள் கூறியுள்ளனர். வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு இந்தியாவில் “கற்பு” பிரதான ஒன்றாக கருதப்படுகிறது. ஆணுக்கோஇ பெண்ணுக்கோஇ கற்பு முக்கியமானது என்று வலியுறுத்தி வருகின்றனர்.

ஆனால் இப்போதெல்லாம் கற்பா? அப்படி என்றால் என்ன? என்று கேட்கும் அளவுக்கு நகரங்களில் நிலைமை மோசமாகி வருகிறது. இந்த நிலையில் கற்பு தொடர்பாக ஆங்கில சானல் ஒன்று இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களில் கருத்து கணிப்பு ஒன்று நடத்தி உள்ளது.

அதில் இளைஞர்களிடம் உங்கள் வருங்கால மனைவி கற்புடையவராக இருந்திருக்க வேண்டுமா? என்று கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்தவர்களில் 63 சதவீதம் பேர் வருங்கால மனைவி கற்போடு இருந்திருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை என்றனர். 37 சதவீதம் பேர் மட்டும் கற்புடைய பெண்ணே மனைவியாக வரவேண்டும் என்றனர்.

ஆணோஇ பெண்ணோ திருமணத்துக்கு முன்பே உறவு வைத்துக் கொள்வதில் தவறு இல்லை என்று 37 சதவீதம் பேர் கூறினார்கள்.

லக்னோவை சேர்ந்த நேகர்பர்த் (வயது 28) என்ற கம்ப்யூட்டர் என்ஜினீயர் கூறும் போது “ஒரு பெண்ணுக்கு நல்ல குணம் முக்கியமானது. ஆனால் நல்ல குணத்துக்கும் கற்புக்கும் சம்பந்தம் கிடையாது” நமக்கு யார் பொருத்தமானவள் என்று தான் பார்க்க வேண்டுமே தவிர அவள் கற்போடு இருக்கிறாளா? என்று பார்க்க வேண்டிய அவசியமில்லை என்றார்.

அங்கீதாசர்மா (24) என்ற இளம் பெண் கூறும் போதுஇ “திருமணம் செய்ய உள்ள மாப்பிள்ளையை அவர் கற்போடு இருக்கிறாரா? என்று சோதனை நடத்த முடியாது. எனது கற்பு பற்றி கேள்வி எழுப்புபவரை நான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன்” என்றார்.

லக்னோவை சேர்ந்த மகப்பேறு மருத்துவ நிபுணர் ரேணு மாக்கர் கூறும் போது “என்னிடம் பரிசோதனைக்கு வரும் திருமணமாகாத பெண்களில் 80 சதவீதம் பேர் ஏற்கனவே “செக்ஸ்” உறவு வைத்துள்ளனர்” என்றார்.

நன்றி உதயன்

................................................................................

......................................

நெடுக்ஸ் என்ன சொல்வாரோ தெரியாது

கு ச உங்கள் கருத்து முக்கியம்

இங்கு ஆரம்பிக்கப்பட்ட திரி கற்பு என்று எதை வரையறுக்கிறது?

ஒரு பெண்ணின் கன்னித்தன்மையை மட்டுமே கணக்கெடுப்பதாக கற்பு நெறி வரையறுக்கப்பட்டுவிட்டதா?

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு ஆண் பாலியல் வல்லுறவு கொள்ளும் குற்றவியலை நீக்கி விடயத்தை ஆராய்ந்தால் ஒரு ஆண் எப்படி தனது கற்பை இழந்திருக்க முடியும். ஒரு பதிவிரதை, ஒரு பத்தினி, ஒரு கன்னி அல்லது ஒரு விலைமாது இவர்களில் எவராவது ஒருவரின் ஒத்துழைப்பும் உதவியும் இல்லாமல்.

  • கருத்துக்கள உறவுகள்

ஔவையார் கற்பு பற்றிச் சொல்லும் விளக்கம் என்ன தெரியுமா?''

``கற்பெனப்படுதல் சொல் திறம்பாமை''. அதாவது சொன்ன சொல்லைக் காப்பாற்றுதல், கொடுத்த வாக்கை நிறைவேற்றுதல், பேச்சு மாறாமல் நாணயம் காத்தல், இதைத் தான் கற்பு என்கிறார் ஔவையார். இப்படி சொல் திறம்பாமல் இருப்பவனே கற்புள்ள ஆண்.

அது ``வர சண்டே சினிமாவுக்குப் போகலாம்'' என்று சொன்ன சொல்லாக இருக்கலாம் அல்லது ``என் தங்கை கல்யாணத்துக்கு அப்புறம் கண்டிப்பாக உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்'' என்று கொடுத்த வாக்காக இருக்கலாம். அல்லது, ``உன்னை கண் கலங்காம காப்பாற்றுவேன்'' என்று கொடுத்த உறுதிமொழியாக இருக்கலாம். எதுவாக இருந்தாலும், அவன் சொன்ன வார்த்தையைக் காப்பாற்றி, தன் சொல்படி நடப்பவன்தான் கற்புள்ள ஆண். :D

யாழ் உதயன் திரும்பவும் பழைய ஸ்டைடில எழுதத்துவங்கி இருக்கிது போல. புலி துலைஞ்ச கையோட இப்பவே கிளுகிளுப்பாய் எழுதத்துவங்கீயிட்டிது உதயன்.

இதை வாசிக்கிற கலியாணம் கட்டின ஆக்கள் துணிவு இருந்தால் இதை உங்கடை மனைவியிட்ட சொல்லிப்பாருங்கோ. நான் உன்னை கலியாணம் கட்டமுன்னுக்கு உன்னட்ட கற்பை எதிர்பார்க்க இல்லை எண்டு. நல்லதொரு பதிலை.. பெரும்பாலும்.. முதுகு முறியுறமாதிரி ஒரு பதிலை நீங்கள் வாங்கக்கூடும்.

வேளா வேளைக்கு படுத்து எழும்புறத்துக்கு ஒரு அழகுப்பிண்டம் வேணும் எண்டு ஆண்கள் சொல்லுறீனம் எண்டும் சொல்லுவாங்கையா.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பொம்புளையள் பாவப்பட்ட சீவனுவனுகளப்பா!

எதுக்கெடுத்தாலும் அவளைவையின்ரை சீலைத்தலைப்பை புடிச்சு ஆராய்ச்சி செய்யாட்டில் எங்கடையளுக்கு பத்தியப்படாது.

மனிசன் விடிய வெள்ளன எழும்பி அம்மாதாயே எண்டு லச்சுமி தொடக்கம் அம்மன் , காளி வரைக்கும் உள்ள பொம்புளைச்சாமியளை விழுந்து கும்பிட்டுட்டு .......

அங்காலை அடுப்படிக்கை போய் மனுசிக்காறி அவிச்ச புட்டுக்கு கறி சரியில்லை எண்டுபோட்டு அவளைப்போட்டு மொங்கு மொங்கு எண்டு மொங்குறதும் மனுசன்காரன் தான்.

என்ன ஒண்டு பெண்புத்தி பின்புத்தி எண்டதை அப்பப்ப சனம் நிரூபிக்குது? இருத்தாலும் பாவப்பட்ட பிறப்புகள்?(உவளவைக்கு பாவம் பாக்கப்போய் பாவியாய் போன என்ரை கதை வேறை) :mellow:

அதுசரி கற்பு எண்டால் என்னப்பா?

அது பொண்டுகளின்ரை வாழ்க்கையிலை எப்ப தொடங்கி எப்ப முடியுது?

இல்லாட்டி பொட்டையளாய் பிறந்ததே பாவமாப்பா?

கற்பு எனக்கெண்டால் என்ன சொல்லுறதெண்டு தெரியேல்லை?இருந்தாலும்.....

பசிக்கேக்கை சாப்பிடாமல் பிறகு எப்ப சாப்பிடுறது?

அதுக்காக கண்ட களிசறையளை சாப்பிடாமல் ஒழுங்கான சமையல்காரனை வீட்டிலை வைச்சு சாப்பிட்டால் பக்கவிளைவுகள் ஒண்டும் வராது எண்டு நினக்கிறன்.

உந்த கோதாரி விழுந்த பிரச்சனையளுக்காகத்தான் (கற்பூரம்) எங்கடை பழசுகள் 12,13 வயதிலையே சாந்திமுகுர்த்தத்தை அனுபவிச்சினமோ என்னமோ? :unsure:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கற்பு என்றால் என்ன? பித்தலாட்டம், பொய் மற்றும் என்றென்றும் பெண்களை மத ரீதியில், கலாச்சார ரீதியில் கட்டுப்படுத்தி வைக்க பயன்படும் கற்பனை வஸ்து

"ஒருவனுக்கு ஒருத்தி" என்பதைப்பற்றி என்ன நினக்கின்றீர்கள்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கற்பு என்ற ஒன்று பெண்களுக்கு இல்லை என்று சொல்லும் நீங்கள்

பத்தினியும் இல்லை என்பதன்மூலம் எதைச்சொல்ல வருகின்றீர்கள்?

கற்பு

பத்தினி

விளக்கம் தரமுடியுமா?

என்னைப்பொறுத்தவரை

கற்பு

கடைப்பிடிக்கப்படவேண்டிய ஒன்று.

இல்லையென்றால்....

உலக சக்கரத்தில் [b]மனிதம் என்ற ஒன்றும்

சுகம் என்ற இதமும் இல்லாது போய்விடும்.

உங்களின் இதமான சுகத்திற்கு அவளை கற்புற்கரசியாக எதிர்பார்க்கும் நீங்கள்????????????

அவளின் இதமான சுகத்திற்கு நீங்கள் அல்லது உங்களால் ஈடுகொடுக்க முடியாவிட்டால்?

  • கருத்துக்கள உறவுகள்

உங்களின் இதமான சுகத்திற்கு அவளை கற்புற்கரசியாக எதிர்பார்க்கும் நீங்கள்????????????

அவளின் இதமான சுகத்திற்கு நீங்கள் அல்லது உங்களால் ஈடுகொடுக்க முடியாவிட்டால்?

இதைக் கேக்க தான் சும்மா இருந்த கு சா வை தூண்டில் போட்டு இழுக்கிற மாதிரி இழுத்தவை போல :mellow:

  • கருத்துக்கள உறவுகள்

உங்களின் இதமான சுகத்திற்கு அவளை கற்புற்கரசியாக எதிர்பார்க்கும் நீங்கள்????????????

அவளின் இதமான சுகத்திற்கு நீங்கள் அல்லது உங்களால் ஈடுகொடுக்க முடியாவிட்டால்?

கு.மா அண்ணை சொன்ன மாதிரி பண்ணிகில் பண்ணி பாருமன். :mellow::unsure:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.