Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காண்டம் பற்றிய உங்கள் கருத்து என்ன?

Featured Replies

காண்டம் பற்றிய உங்கள் கருத்து என்ன?

சில நண்பர்களுடன் உரையாடும்போது மிகவும் வியப்பாக விதந்துரைத்தார்கள். அப்படியே உண்மையென்றும் அடித்துச் சொன்னார்கள். முற்பிறப்பு முதல் கொண்டு தற்போதய வாழ்க்கை...எதிர்கால வாழ்க்கை என்பன பற்றி கூறுவது எல்லாம் அப்படியே நடந்ததாக பலர் கூறக் கேட்டுள்ளேன். சாத்திரம், சம்பிரதாயங்கள் எதையும் நம்பி என் வாழ்க்கையை நடத்தாத நான்..காண்டம் என்பதை மட்டும் நம்பலாமோ என்று தோன்றுகின்றது. அதைப்பற்றி பதிவுலக நண்பர்களாகிய உங்களிடமும் ஆராயலாம் என்று தோன்றியது.

உங்கள் கருத்துக்கள்....உங்கள் அனுபவங்கள்....ஆக்க பூர்வமான விவாதங்களையும் எதிர்பார்க்கின்றோம்;. பலருக்கும் இது பற்றிய தெளிவும் அறிவும் இந்த பகுதியூடாக கிடைக்கும் என்று நம்புகின்றேன்.

காண்டம் பற்றிய எனது கருத்து: நோகாமல் நல்லாய் காசு பண்ண இலகுவான ஓர் வழி :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

காண்டம் பற்றிய என் கருத்துகள்

1, பயமின்றி காண்டம் அணிந்து ஆண்கள் விலைமாதர்களுடன் போகலாம்

2. பெண்கள், பயமின்றி தம் கணவர் இல்லா நேரங்களில் இதனை அணிய சொல்லி, ஏனையவர்களை வரச்சொல்லலாம்

3. காண்டம் பற்றி திண்டு கொழுத்த கிறிஸ்தவ மிசனரிகள் என்னதான் சொன்னாலும், எய்ட்ஸ் இல் இருந்து 99.99% பாதுகாப்பளிக்கும்

4. Rain coat அணிந்து குளிக்க முடியாது என்று பழைய பல்லவி சொல்லாமல் பிள்ளை பேறை தவிர்க்க அணியலாம்

5. உங்கள் ஆண் பிள்ளைகளை கண்டிப்பாக பயன்படுத்த சொல்லக்கூடிய சாதனம் (படிக்கும் காலத்தில்)...உங்கள் பெண் பிள்ளைகளுக்கு இதன் அவசியத்தை அம்மாமார் மூலம் சொல்லுங்கள்

காண்டம் என்று இதைத்தானே கேட்டீர்கள்?

Edited by பிழம்பு

  • கருத்துக்கள உறவுகள்

பொய்,பிரட்டு, இவற்றின் பிறப்பிடம்.முழுமையாய் இயங்கும் மனிதனை கண்டதையும் சொல்லி கதி கலங்கவைக்கும் ஓர் கூடம் தான் இந்தக் காண்டம்.நோகாமல் நோட்டு நோட்டாய் நல்லாய் காசு பண்ண இலகுவான ஓர் வழி.......நம்மவர்கள் திருந்துவதற்கு இடமே இல்லை.விட்டால் நானும் காண்டம் சொல்லுவன் இல்லை....இல்லை வாசிப்பன்.இதை விட வேறு என்ன வேண்டும்......? :unsure::unsure:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காண்டம் பற்றிய உங்கள் கருத்து என்ன?

உண்மை,

மைபோட்டு பார்த்தல் இதிலும் உண்மை.

அனுபவப்பட்டவன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆம் உண்மைதான் காண்டம் அனைவரும் பாவிக்கவேண்டிய ஒன்று சுகாதாரமானது, எஜிட்சின் எதிரி, உங்கள் நண்பன். :lol:

காண்டம் பற்றிய என் கருத்துகள்

1, பயமின்றி காண்டம் அணிந்து ஆண்கள் விலைமாதர்களுடன் போகலாம்

2. பெண்கள், பயமின்றி தம் கணவர் இல்லா நேரங்களில் இதனை அணிய சொல்லி, ஏனையவர்களை வரச்சொல்லலாம்

3. காண்டம் பற்றி திண்டு கொழுத்த கிறிஸ்தவ மிசனரிகள் என்னதான் சொன்னாலும், எய்ட்ஸ் இல் இருந்து 99.99% பாதுகாப்பளிக்கும்

4. Rain coat அணிந்து குளிக்க முடியாது என்று பழைய பல்லவி சொல்லாமல் பிள்ளை பேறை தவிர்க்க அணியலாம்

5. உங்கள் ஆண் பிள்ளைகளை கண்டிப்பாக பயன்படுத்த சொல்லக்கூடிய சாதனம் (படிக்கும் காலத்தில்)...உங்கள் பெண் பிள்ளைகளுக்கு இதன் அவசியத்தை அம்மாமார் மூலம் சொல்லுங்கள்

காண்டம் என்று இதைத்தானே கேட்டீர்கள்?

---------------------------------------------------------------

ஆகா ஆகா என்னே ஒரு அற்புதமான விளக்கம்.

பிழம்பு தப்பித் தவறி தீப்பிழம்பாகீராதேங்தோ தண்ணீர் ஊற்றி அணைச்சுப் போடுவோமல்ல....

காண்டம் பற்றிய என் கருத்துகள்

1, பயமின்றி காண்டம் அணிந்து ஆண்கள் விலைமாதர்களுடன் போகலாம்

2. பெண்கள், பயமின்றி தம் கணவர் இல்லா நேரங்களில் இதனை அணிய சொல்லி, ஏனையவர்களை வரச்சொல்லலாம்

3. காண்டம் பற்றி திண்டு கொழுத்த கிறிஸ்தவ மிசனரிகள் என்னதான் சொன்னாலும், எய்ட்ஸ் இல் இருந்து 99.99% பாதுகாப்பளிக்கும்

4. Rain coat அணிந்து குளிக்க முடியாது என்று பழைய பல்லவி சொல்லாமல் பிள்ளை பேறை தவிர்க்க அணியலாம்

5. உங்கள் ஆண் பிள்ளைகளை கண்டிப்பாக பயன்படுத்த சொல்லக்கூடிய சாதனம் (படிக்கும் காலத்தில்)...உங்கள் பெண் பிள்ளைகளுக்கு இதன் அவசியத்தை அம்மாமார் மூலம் சொல்லுங்கள்

காண்டம் என்று இதைத்தானே கேட்டீர்கள்?

:lol:அட உங்க அப்பா காலத்திலை இது இல்லாமல் போச்சா ?? அல்லது அவருக்கு இந்த விடயம் தெரியாமல் போச்சா ?? :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் றோட்டிலை நிக்கிற கண்ட , கிண்ட அரைகுறையளிட்டை காண்டம் வாசிச்சு ஏமாந்து போட்டு ..... குத்துது , குடையுது என்றால் என்ன செய்வது.

எனக்கு தெரிந்தவர் மூலம் நான் இந்தியாவில் உள்ள திருச்சியில் காண்டம் வாசிக்க சொல்லி , அவர் கேட்ட ஒரேயொரு அடையாளத்தை மட்டும் கொடுத்தேன்.

அதிலும் காண்டம் வாசிப்பவரிடம் , எனக்கு தெரிந்தவர் நேரடியாக செல்லவில்லை மூன்றாமவரே சென்றார்.

அதாவது ....... அந்த மூன்றாம் நபருக்கு என்னைப் பற்றிய ஒரு விபரமும் தெரியாது.

அதில் காண்டம் வாசிப்பவர் என்னைப்பற்றி இதுவரை நடந்தவை , நடந்து கொண்டிருப்பவை பற்றி எழுதியுள்ளதை பார்த்த போது நானே ஆச்சரியப் பட்டுப் போனேன்.

எல்லாவிடயங்களும் அச்செட்டாக ஒத்துப்போனது.

  • தொடங்கியவர்

தமிழ் சிறி - நீங்கள் சொல்வது உண்மையே....., இப்படியான விடயங்கள் தான் என்னை சிந்திக்க வைக்கின்றது...மனிதன் ஏற்கனவே புறோக்கிறாம் பண்ணப்பட்டு இந்த பூமிக்கு அனுப்பப்பட்ட பொம்மை என்று....காரணம் இப்படிப் பிறந்து...இப்படி வளர்ந்து....இப்படி முடிய வேண்டும்.....எப்போது...எப்படி முடிய வேண்டும் எல்லாம் எழுதப்பட்டது போலவே தெரிகின்றது.... (உதாரணத்திலற்கு ....காண்டம் என்பதை கொண்டம் என்ற விளக்கம் கொடுக்க வேண்டும் என்பதும் ஒரு சில பொம்மைகளின் புறோக்கிறாமில் எழுத்ப்பட்டுள்து போலும் - நகைச்சுவைக்காக மட்டும் - யாரையும் புண்படுத்தவல்ல)

காண்டம் - நாடியோதிடம் உண்மையில் எமது வாழ்க்கையை கூறுகின்றது எனின்.....

1)யாரால் எமது வாழ்க்கை எழுதப்பட்டுள்ளது....?

2)இதனை வாசிபவர்கள் எங்கிருந்து இதனை எடுக்கின்றார்கள்?

3)இது எவ்வாறு சாத்தியமாகின்றது?

4)எவ்வாறு எமது கைவிரல் ரேகையை மட்டும் வைத்து எங்களது வாழ்க்கை கோவை அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டு வாசிக்கப்படுகின்றது.?

5)முற்பிறப்பு....இப்பிறப்பு....இன

  • கருத்துக்கள உறவுகள்

Matrix படம் பார்த்து இருப்பீர்கள்.. அப்படித்தான் உலகம் இயந்திரங்களால் இயக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. காண்டம் வாசிப்போர் இந்த உலகத்தை இயக்கும் இயந்திரங்களின் முகவர்கள்.. :lol:

முள்ளிவாய்க்கால் இறுதி காலங்களில் கொல்லப்பட்ட 20,000 இல் இருந்து 30,000 வரைக்குமான மக்களின் மரணங்களும், அரை மணி நேரத்தில் சுனாமி அலைகளால் இழுத்துச் செல்லப்பட்ட 40,000 தமிழ் மக்களின் சாவுகளும் ஒரே மாதிரியாக program பண்ணப்பட்டவையா?

தலைவர், பொட்டு அம்மான் ஆகியோரின் அங்க அடையாளங்கள் பல பலருக்கும் தெரியும் என்பதால், ஒரு முறை அவர்கள் பற்றிய காண்டம் வாசித்து உண்மையில் என்ன நடந்தது என்று அறியமுடியுமா? ஆகக்குறைந்தது 'இருக்கின்றாரா இல்லையா" என்ற உலகளாவிய பிரச்சனைக்குத்தானும் தீர்வு காணமுடியுமா?

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

என் மாமா ஒருவர் ஏஜென்ஸி வைத்திருந்து ஊரில் இருப்பவர்களை எல்லாம் ஏமாற்றி நல்லா காசு சம்பாதித்து இருந்தார். வல்லவனுக்கு வல்லவன் உலகில் இருப்பது போன்று கள்வனுக்கு கள்வனும் உலகில் இருப்பான் போலும்..ஊரையே ஏமாற்றிய என் மாமாவிடமே ஒருவன் தகிடுத்தனம் செய்து ஏமாற்றி பெரும் பணத்துடன் கம்பி நீட்டிவிட்டான். மாமாவும் உழைக்காமல் சேர்த்த காசு போயிட்டே என கவலைப்பட்டு, இந்தியாவுக்கு போய் காண்டம் பார்த்தார்

காண்டம் வாசிப்பவர், அவரைப் பார்த்து "போன பிறப்பில் (?) கோயில் பிச்சைக்காரனாக இருந்திருக்கின்றாய் என்று சொல்லி ஊரில இரண்டு கோயில் கட்டிக் கொடுத்தால் பிரச்சனைகள் தீரும்" என்றிருக்கிறார்

இழந்த பணத்தை பெற்று மீண்டும் கோடிஸ்வரன் ஆக சந்தர்ப்பம் இருக்கா என பார்க்க போன என் மாமா, உள்ளதும் கோவில் கட்டிக் கொடுத்து போகப் போகுதே என அலறி அடித்துக் கொண்டு எஸ்கேப்

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

காண்டமும் சரி, நினைச்சதை சொல்வதாய் சொல்லும் சாத்திரிகளும் சரி (நம்மட சாத்திரி அல்ல), Mind Reading எனும் விடயத்தைத் தான் அதிகம் செய்கின்றனர். அகத்திய முனியின் சுவடி படிக்கின்றோம் என சொல்லிக்கொண்டு, அவர்கள் நாசூக்காக கேட்கும் கேள்விகளுக்கு நாம் சொல்லும் பதிலிலும், அதன் போது எம் மனதில் ஓடுவதையும் வைத்து தான் சராசரியாக சொல்வார்கள். இவற்றை நம்புகின்றவர்கள் அந்த சராசரியை முழுமையாக்க தாமே இன்னும் கொஞ்சம் போட்டுக் கொடுப்பர்...

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் எழுத்தின் வகையை நன்கு அறிந்தவர்கள், நிழலி சொல்வதைப் போல மைண்டை ரீட் பண்ணத் தெரிந்தவர்களும், பேச்சு வன்மை உள்ளவர்களும் காண்டம் வாசித்தலில் வெற்றி அடையலாம். காண்டம் வாசிக்கிறது என்பது தம்மிடம் வந்து பலன் கேட்க எத்தனிக்கும் நபரின் பலம், பலவீனம் என்ன என்பதை உரையாடிலூடாக கொக்கிபோட்டு இழுத்தபடியே ஊகிக்கும் விடயங்களை பலன் கேட்க வந்திருக்கும் நபரிடம் பிரமிக்க வைக்கும் வகையில் வெளிப்படுத்துவது. முதலில் பெயரை எழுத்துகளை அடையாளப்படுத்துவதன் மூலம் காண்டங் கேட்க சென்ற நபரின் நம்பிக்கையை காண்டம் வாசிக்கும் தன்னிடம் முழுமை கொள்ள வைப்பது.... இதில் காண்டம் கேட்கப் போன நபர் ஏற்கனவே மனஞ் சோர்ந்தவராகவும், தன்னம்பிக்கை குறைந்த பலவீனமானவராகவும் இருப்பதனாலே நம்பிக்கையூட்டும் வகையில் பேசும் நபரிடம் தனக்கும், தன்னைச் சுற்றிலுமான பிரச்சனைகளுக்கு தீர்வு தென்படாத என்று எதிர்பார்க்க ஆரம்பித்துவிடுவார் பிறகென்ன காண்டம் வாசிப்பவர் கில்லாடிதானே...

Edited by valvaizagara

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தக் காண்டத்தின் உண்மைத் தன்மையைப் பரிசோதிப்பதற்காய் நான் இரண்டு தடவைகள் என்னுடைய காண்டத்தை வாசித்தேன். முதல் முறை நான் முற்பிறப்பில் தமிழகத்தில் ஒரு டாக்டராய் வாழ்ந்ததாகவும் இன்னொரு பிறப்பில் நான் கேரளத்தில் விறகு வெட்டும் தொழில் செய்பவனாக வாழ்ந்ததாகவும் கூறப்பட்டது.

அதை விட முக்கியமான விடயம் இரண்டு பிறப்பிலும் நான் செய்த பாவங்களிற்குப் பரிகாரம் கூறப்பட்ட போது முதல்முறை ; இதை வாசித்துப் பலன் சொல்பவருக்கு 5500 ரூபா காணிக்கை செலுத்தும்படியும் இரண்டாம் முறை 7300 ரூபா பெறுமதியான ஆடைகளை வாசிப்பவருக்கு காணிக்கையாகச் செலுத்தும்படியும் சொல்லப்பட்டது.

மைண்ட் றீடிங் என்றொரு விடயம் இருப்பது பலருக்கும் தெரியும். அதில் காண்டம் வாசிப்பவர்கள் தேர்நதவர்கள் என்பதில் சந்தேகமில்லை. அதன் மூலம் பெயர் முதலிய விடயங்களைக் கூறுகிறார்கள். காண்டம் வாசிததவர்களிடம் ஒரு கேள்வி யாருக்காவது உங்கள் எதிர்காலம் குறித்த விடயங்கள் சரியாகச் சொல்லப்பட்டனவா? இருக்கவே இருக்காது. ஏனென்றால் மைண்ட் றீடிங் செய்பவர்களால் எதிர்காலத்தை உய்த்தறிய முடியாது.......

இது வெள்ளைக்கார சமாச்சாரம்.. அவஸ்திரேலியாவில் பல வருடங்களாக காணமல் போனவர்களை ( பொலிஸார் கைவிட ) psychics கொண்டு தகவல் அறியும் ஒரு program ஐ இங்குள்ள ஒரு TV channel ஒளிபரப்பியது. அதில் காணாமற்போன ஒரு இளம்பெண்ணின் இறுதி கணங்களை இரண்டு psychics, trace பண்ணுகின்றார்கள். இரண்டு பேருமே அந்தப் பெண்ணின் இறுதிக் கணங்களை ஒரேமாதிரியாக விபரிக்கின்றார்கள். அத்துடன் இரண்டு பேரும் அந்தப் பெண் கடைசியாக உயிருடன் இருந்த இடத்தைக் காட்டுகின்றர்கள் , அதுவும் ஒரே இடம் தான்.

இங்கு குறிப்பிடப் படவேண்டிய விஷயம் psychic ஒருவருக்கு மற்ற‌வரைத் தெரியாது. அத்தோடு அந்தப் பெண்னின் பெயரோ வேறு எந்த விடயமோ சொல்லாமல் ஒவ்வொரு psychic ஆக வேவ்வேறு நேரங்களில் அப்பெண்ணின் வீட்டருகே கொண்டு சென்று இவ்விடத்தில் ஒரு விபரீதம் நடந்துள்ளது இதைப் பற்றிச் சொல்லுங்கள் என்று கேட்பார்கள். அவர்கள் தங்களை வருத்திக் கொண்டு அப்பெண்ணின் பெயரை சொல்வதும் , வெவ்வேறு இடங்களுக்கு TV காரரை கூட்டிச் சென்று அந்தந்த இடங்களில் என்னெ நடந்தது என்று விபரிப்பதும் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

காண்டம்....காண்டம்...காண்டம் இதை விட்டால் பேசுவதற்கு வேறு தலைப்பு கிடைக்கவில்லைப்போலும்.யாழ்க

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் காண்டம் ஒரு .mind reading....தான் உங்களை கொண்டே தமது பேச்சு, அனுபவ திறமையினால் விபரங்களை அறிந்து விடுவார்கள். எதோ கஷ்டத்தில் தான் உதவிக்காக கேட்க வந்துள்ளீர்கள் என்று நன்றாகவே அவர்களுக்கு தெரியும் . உண்மையில் நீங்கள் செய்ய நினைப்பதை , அவர்கள் வாயால் வர வேண்டுமென்று, நீங்கள் நினைப்பதை அவர்கள் சொல்கிறார்கள். அதை நம்புபவர்களுக்கு அவர்கள் தெய்வம் போல .அருள் வாக்கு போல இருக்கும். .நம்புபவர்களுக்கு காண்டம் ஒரு நம்பிக்கை.

Edited by நிலாமதி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நானும் காண்டம் சொல்லக்கூடியவன். சொன்னது இன்றுவரை பிழைத்ததே இல்லை. இதனை இலவசமாகவே சொல்லுவேன்.

வேண்டுமென்றால் சோதித்துப் பாருங்கள்.

நானும் காண்டம் சொல்லக்கூடியவன். சொன்னது இன்றுவரை பிழைத்ததே இல்லை. இதனை இலவசமாகவே சொல்லுவேன்.

வேண்டுமென்றால் சோதித்துப் பாருங்கள்.

வடிவேல் கேட்கும் "தட்டானுக்கு சட்டைப் போட்டால் குட்டைப்பையன் கட்டையால் அடிப்பான் அது என்ன" என்று காண்டம் பார்த்தாலாவது சொல்ல முடியுமா?

  • கருத்துக்கள உறவுகள்

காண்டம் என்றதும் எதோ அமெரிக்கா ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா, ஆசியாவைப் பற்றி வினாடி வினா போல் ஆராய்கிறார்கள் என்று நினைத்தால் ஒன்று 'ஏ' சமாச்சாரம் மற்றது 'ஏ' மாற்றும் சமாச்சாரம்! ஒரே சொல்லில் வினோதமான பிணைப்பு..ஆனால் இரண்டிலும் நம்பிக்கையோ, அனுபவமோ இல்லை! தேவையற்றது என்பதே கருத்து.

Edited by ராஜவன்னியன்

  • கருத்துக்கள உறவுகள்

காண்டம் பவிப்பவர்கள், மழைக்கோட் அணிந்துகொண்டு குளிப்பவர்கட்குச் சமம்

  • கருத்துக்கள உறவுகள்

nadi.jpgdsc00422.jpg

இறந்த காலம், நிகழ்காலம்,வருங்காலம் ஆகியவற்றைக் கண்டறியும் ஆற்றல் படைத்த நிபுணர்கள் இருந்தனர். அவர்களைத் "திரிகால ஞானிகள்" என்று அழைப்பர்.

இவர்களில் பலர் முனிவர்களாகவும்,¡¢ஷிகளாகவும்

, சிலர் சித்தர்களாகவும் விளங்கினர். அவர்களுக்கு "ஞானதிருஷ்டி எனப்படும் விசேடப் பார்வை இருந்தது. அதை வைத்து அவர்கள் எக்காலத்திலும் நடக்கும் நிகழ்வுகளைக் கண்டறிந்தார்கள். ஜோதிட விதிகளையும் யாத்து, நிகழ்வுகளுடன் ஏற்ற முறையில் தொடர்பு படுத்தி அவற்றை நெறிப்படுத்தித் தொகுத்து எழுதிவைத்துச ்சென்றனர்.

அத்தகையதோர் சாஸ்திரம் தமிழ்நாட்டில் உண்டு.

அதன் பெயர் "நாடி சாஸ்திரம்"

அதை "ஏடு பார்த்தல்" என்றும் அழைப்பர்.

ஏனெனில் அந்த நூல்கள் பாடல்களின் வடிவில் பனை ஓலையால் ஆன ஏட்டுச ்சுவடிகளில ்எழுதப்பட்டிருக்கின்றன.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ¡¢ஷிகளும் சித்தர்களும் எதிர்காலத்தில் வாழப்போகும் குறிப்பிட்ட மனிதர்களைப் பற்றியும் அவர்களின் ஜாதக அமைப்புகளைப் பற்றியும் வாழ்க்கை நிகழ்ச்சிகளைப் பற்றியும் அந்த ஏடுகளில் எழுதி வைத்திருக்கின்றனர்.

குறிப்பிட்ட மனிதனின் பெயர், ஊர்,பெற்றோர், உருவ அமைப்பு, முதற்கொண்டு அந்த ஏடுகளில் காணப்படும்.

தமிழ்நாட்டில் வழங்கும் நாடிகளில் "காகபுசுண்டர் நாடி", கெளசிக நாடி, "சப்தரிஷி நாடி", அகத்தியர் நாடி,போன்றவை முக்கியமானவை.

"கேரள மணி கண்ட ஜோதிடம்" என்ற நூலுமுண்டு.வடமொழியிலே "பிருகுஸம்ஹிதை" என்ற நூலே பிரபலமாக உள்ளது.

நாடி சாஸ்திர நூல்களுக்கெல்லாம் முதல்வராக பிருகு முனிவரையே சிலர் சொல்லுவார்கள்.

தமிழகத்தில் சில இடங்களில் இன்றும்ஆயிரக்கணக்கில் நாடி ஜோதிட ஏடுகள் சிதறிக் கிடக்கின்றன. அவற்றில் பல அழிந்துவிட்டன. மேலும் பல மறைந்து போயின. தற்சயம் மிகவும் பிரபலமானவை சென்னையில் உள்ள காகபுசுண்டர் நாடியும் வைத்தீஸ்வ்ரன்கோயில், திருவானைக்கா ஆகிய இடங்களில் உள்ள கெளசிக நாடியும்தான்.வைத்தீஸ்வரன் கோயிலில் அகத்தியர் நாடியும் இருக்கிறது.

இப்போது சிறிது "Theory" (Want to skip?)

பழந்தமிழ் நூல்களில் "கணக்கதிகாரம்"என்றொரு நூலுண்டு. அதில் பல கணித விதிகளும், சித்தாந்தங்களும் பாடல்கள் உருவில் விளங்கும்.

ஒரு பலாப்பழத்தில் எத்தனை சுளைகள்இருக்கின்றன என்பதனை அதன் காம்பைச் சுற்றியுள்ள முட்களின் எண்ணிக்கையை வைத்துக் கணக்கிட்டு அறிந்துகொள்ளும ்முறையை ஒரு பாடல் கூறுகிறது:

"பலவின் சுளையறிய வேண்டுதிரேல் ஆங்கு

சிறுமுள்ளுக் காம்பருகு எண்ணி - வருவதை

ஆறிற் பெருக்கியே, ஐந்தினுக்கு ஈந்திடவே

வேறெண்ண வேண்டாஞ் சுளை".

('மோனை முட்டுகிறதே, எதுகை எகிறுகிறதே, தளை தட்டுகிறதே?' என்றெல்லாம் என்னைக் கேட்காதீர்கள். சத்தியமாக நான் எழுதவில்லை).

பலாப்பழத்தின காம்பைச் சுற்றிலுமுள்ள முட்களை எண்ணி, அவ்வெண்ணிக்கையை ஆறால் பெருக்கி வரும் தொகையை ஐந்தால் வகுத்தால் வருவதுதான் அப்பழத்தினுள் இருக்கும் சுளையின் எண்ணிக்கை.

இப்போது ஒரு சந்தேகம்.

சுளையின் எண்ணிக்கையை வைத்து முட்கள ்தோன்றினவா?

அல்லது முட்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப சுளைகள் எற்பட்டனவா?

விண்ணில் உள்ள கோள்களின் நிலைகளுக்கு ஏற்ப உலகில் நிகழ்வுகள் நடை பெறுகின்றனவா? அல்லது அந்த நிகழ்வுகளுக்கு ஏற்ப கோள்கள் அந்தந்த நிலைகளில ்இயங்குகின்றனவா?

காரணத்தின் விளைவாகக் கா¡¢யமா?அல்லது காரியத்துக்கேற்ற காரணங்கள் அதற்கு முன்னதாகவே தோற்றுவிக்கப் பட்டுவிட்டனவா?

மகாபாரதத்தில் துரியோதனன் இடதுதொடையில் அடி பட்டு இறந்ததற்கு நிறைய காரணங்கள் உண்டு. கதையின் போக்கில் அந்தக் காரணங்கள் ஒவ்வொன்றாகத் தோன்றி ஒன்றுடன் ஒன்று தொடர்புகொண்டு, இணைந்து, கதையின் முடிவில் பீமனுடைய கதாயுதம் துரியோதனின் தொடையைப் பிளப்பதில் முடிகிறது.

துரியோதனன் இடது தொடையில் அடி பட்டு இறப்பது என்பதைக் காரியமாகக் கொண்டோமானால், பாஞ்சாலியின் சபதம், பீமனின் சூளுரை, முனிவர்களின்சாபம், தாய் காந்தாரி கொடுக்க முயன்ற பாதுகாப்பு முயற்சியின் தோல்வி போன்ற காரணங்கள் ஆங்காங்கு தோற்றுவிக்கப்பட்டு விடுகின்றன.அவை ஒன்றுடன் ஒன்று சூட்சுமமான முறையில் தொடர்பு கொள்கின்றன.

நிகழ்ச்சிகளீன் போக்கைத் தன் வசமாக்கிக் கொள்கின்றன.சா¢யான தருணத்தில் அவை இணைந்து அவற்றின் ஆற்றலை வெளிப்படுத்திக் காரியத்தைத் தோற்றுவிக்கின்றன.

மகாபாரதக்கதையில் துரியோதனின்இறப்பு இன்றியமையாதது; கட்டாயம் நிகழவேண்டியது; தவிர்க்க முடியாதது; வேறு வழியில்லை.

"அவனுடைய இறப்பு எனப்படும் 'கட்டாயம்', நிச்சயமாக நிகழவேண்டி, காரணங்கள் தோன்றின", என்று வைத்துக் கொண்டோமானால், காரியத்தின் கருப்பொருள் முன்னதாகவும், காரணங்கள் பின்னதாகவும் உருவாவதைக் காணலாம்.

கொடியசைந்தும் காற்று வந்ததா?

காற்று வந்ததும் கொடியசைந்ததா?

ஆயிரத்தைந்நூற்று ஆண்டுகளுக்கு முன்னர் சீனாவின் சுவாங் சூ நகரில் ZEN பெளத்தமதப்பேரவை ஒன்று நடந்தது. தலைமை குருக்கள் மஹா பரிநிர்வாண சூத்திரத்தை விளக்கிக்கொண்டிருந்தார். அவ்வமயம் அங்கு தொங்கிக் கொண்டிருந்த கொடியன்று அசைந்தது.

அதைக் கண்ட புத்த பிக்குகளுக்கு மேற்கூறிய சந்தேகம் வந்தது. அதன் தொடர்பாக வாக்குவாதமும், அதன் விளைவாகப் பொரியதொரு ஆர்ப்பாட்டமும் நிகழ்ந்தன.

இந்தப் பிரபஞ்சத்தில் ஓர் ஒழுங்குமுறையும ்நியதியும், கட்டுக்கோப்பும் விளங்குகின்றன. இதையே "Cosmic Order" என்று கூறுவார்கள்.இதில் விளங்கும் அனைத்துப் பொருள்களும் அனைத்து நிகழ்ச்சிகளும் ஒரு நியதிக்குட்பட்டு ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டவையாக விளங்குகின்றன.

இந்த நியதி கெட்டால்தான் "மகாப்பிரளயம்" எனப்படும் "Chaos" ஏற்படும்.

இந்த மாதிரி நிர்ணயிக்கப்பட்ட, நிச்சயமான நியதிகள் இருப்பதால்தான் "Goddoes not play

dice with the Universe", என்று Einstein கூறினார்.

காலதத்துவத்தின் அமைப்பே விசித்திரமானது.இதன் ரகசியங்கள் பலவற்றை நம்முடைய பழைய சாஸ்திரங்களில் நிறையவே காண முடிகிறது. மேல் நாட்டறிஞர்கள் இதைப் பற்றி ஆழமாக ஆராய்ந்து வருகிறார்கள்.ஆனால் அவர்களில் மிகச்சிலருக்கே நம் சாஸ்திரங்களில்காணப்படும் நுட்பங்களில் சில தொரிந்திருக்கின்றன.

இம்மாதிரி ஆய்வில் இந்தியர்கள் ஈடுபட்டால்தான் பெரும்பலன் ஏற்படும். அதிலும் யாராவது தற்காலச்சித்தர் அல்லது ரிஷி இதில் ஈடு பட்டார்களானால் மிகவும் மேன்மையாக இருக்கும்.

இதையெல்லாம் ஏன் வெட்டித்தனமாகச் செய்து கொண்டிருக்கவேண்டும் என்ற எண்ணமே நம்மவர்களிடம் மேலோங்கி நிற்கிறது.ஆகையால்தன் ஆய்வு செய்பவர்களும் குறைவு; ஆதரவும் குறைவு.

ஆகவேதான் வசதியான சூழ்நிலைகளில்இருக்கும் போலிகள் அருமையாக சரடு விட முடிகிறது.

கடாரத் தமிழ்ப் பேரறிஞர்

டாக்டர் எஸ்.ஜெயபாரதி

  • தொடங்கியவர்

காண்டம் பற்றி எதிரும் புதிருமாக விவாதித்தாலும் நாம் இன்னமும் ஒரு தெளிவான முடிவிற்கு வந்ததாக தெரியவில்லை. (கொண்டம் பற்றிய தெளிவான முடிவிற்கு தான் வந்தது போல் தெரிகின்றது) . இருந்தாலும் ஆரோக்கியமான விவாதம் குழப்பத்தை உண்டு பண்ணுவதை விட மாறாக தெளிவு பிறக்க உதவுகின்றது. அந்தவகையில் கருத்துக்களை தெரிவித்துவரும் பதிவுலக நண்பர்கள் அனைவரிற்கும் நன்றிகள். தமிழ் சிறி உஙகளது இணைப்பிற்கு நன்றிகள்.

காண்டம் பற்றி இணைத்தளத்தில் தேடியபோது கிடைத்வற்றில் சில இணைப்புகள்.....

http://nirmukta.com/2008/10/30/the-exact-s...-nadi-jothidam/

http://www.naadiastrologer.com/kaandams.html

http://naadi-jothidam.blogspot.com/2005/12...di-josiyam.html

http://www.nadi-astrology.org/

http://www.naadiastrology.in/home.htm

Edited by Nalim

நானும் 1995 ம் ஆண்டில் காண்டம் வாசித்தேன். அதில் சொல்லப்பட்டவை எனக்கே வியப்பை தருகின்றது. நான் எனது நண்பரிடம் கொடுத்து விட்டது எனது கைவிரல் அடையாளம் தான். காண்டம் வாசிப்பவரோ என் பெயர், என் பெற்றோர் சகோதரர்கள் பெயர் என அப்படியே கூறியது கண்டு நான் மிரண்டு போனேன். ஏனெனில் நடந்தவற்றை அப்படியே சொல்லி இனி அதன் பின் நடக்கவிருப்பவைகளையும் அதில் சொல்லப்படிருந்தது. நானும் பொறுமையாய் அப்படியே பதின்நான்கு வருடங்கள் பொறுத்திருந்தேன். அதில் சொல்லப்பட்டவை 90 வீதம் அப்படியே நடந்தது. இதில் குறிப்பிட்டு இங்கு சொல்லகூடியது ஒன்றைமட்டும் சொல்கிறேன். 1995 இல் எனக்கு கணனி என்றால் என்ன என்றே தெரியாது. நான் அதை தொட்டு கூட பார்த்திருக்கவில்லை சூரியகதிர் நடவடிக்கையில் அடிபட்டு தப்பி கொழும்பு வந்த காலம் அது அப்போ வாசிக்கபட்ட எனது காண்டத்தில் நான் ஒரு சிறந்த கணனி வல்லுனராக இருபேன் என்று கூறப்பட்டிருந்தது. நான் அப்போது வாய்விட்டு சிரித்தேன். நான் அதனை நம்பவில்லை. ஏன் எனில் நான் அந்த நேரத்தில் க.பொ.த சாதாரணதரத்தில் கணிதபாடத்தில் சித்தியடையவில்லை. நான் எப்படி பெரிய படிப்புகள் எல்லாம் படிப்பது என்று என் மனதுக்குளேயே சிரித்துகொண்டேன். காலங்கள் விரைவாக ஓடியது ஆனால் இன்று அதில் சொல்லப்பட்டவாறு தகவல் தொழிநுட்பதுறையில் ஒரு மூலையில் நானும் நாள்தோறும் குப்பை கொட்டுகின்றேன். என்ன செய்வது நம்பித்தான் ஆகவேண்டும். அடுத்தது என் வாழ்க்கை சம்பந்தபட்டது அதில் சொல்லப்பட்டவாறே அப்படியே ஒன்று கூட பிழைக்காமல் அப்படியே நடந்தது தான் எனக்கு இன்றும் ஆச்ச்சரியத்தை தருகின்றது.

கை பெருவிரல் அடையாளத்தை எடுத்து உங்களிடத்தில்

எதுவித கேள்வியும் கேட்காமல் உங்கள் பலனை சொன்னால்

அது சரியாக இருக்குமிடத்தில் காண்டம் உண்மை

எனது நண்பர் ஒருவர் இந்தியாவில் பார்த்துவிட்டுவந்து

காண்டத்தில் சொன்னபடியே நடந்ததாக சொன்னார்

ஆனால் சில ஏமாற்றுபேர்வழிகளும் இருக்கிறார்கள்

அவர்களிடம் ஏமாந்துவிடாதீர்கள்

நான் ஏமாந்த கதை

எனது மைத்துனர் காண்டம் வாசிப்பவர் ஒருவர் கனடா

வந்திருக்கிறாராம் வா போய் பாத்திற்று வருவம் என்று

கூப்பிட்டார்

எனது நண்பர் இந்தியாவில் பார்த்துவிட்டு

வந்து காண்டம் உண்மை அதில் சொன்னபடியெல்லாம்

நடக்கிறது என்று சொன்னது ஞாபகத்துக்கு வரவே

நானும் மைத்துனருடன் காண்டம் வாசிப்பவரை சந்திக்கச்சென்றேன்

காண்டம் வாசிப்பவர் எனது பெருவரல் அடையாளத்தையும்

பிறந்த திகதி விபரங்களையும் எடுத்துக் கொண்டு

உங்களுக்குரிய ஏடு இருந்தால் தேடி ஏடுத்துவிட்டு

அழைக்கின்றேன் அதன்பிறகு வாருங்கள் என்றார்

இரண்டு நாள் கழித்து அழைப்பு வந்தது

ஆவலாகச் சென்றேன்

காண்டம் வாசிப்பவர் சொன்னார்

உங்களுக்குரிய ஏட்டுக்கட்டு இருக்கிறது

ஒரு கட்டில் 46 பேருக்கு பொருந்தும் ஏடு இருக்கின்றது

உங்களுடைய ஏடு எது என்பதை கண்டுபிடிக்கசில கேள்விகள்

கேட்பேன் ஆம் இல்லை சரி என்று சொன்னால் போதும் என்றார்

கேட்டார் சொன்னேன்

உஙகள் தந்தையின் பெயர் க வில் தொடங்குகிறது

இல்லை

ச வரிசையில் வருகிறது

இல்லை

வ வரிசையில் வருகிறது

ஆம் (கவனிக்கவும்)

இதேபோல் என் பெயரையும் எனது தாயாரின் பெயருக்கும் நடந்தது

நீங்கள் வீட்டில் மூத்த பிள்ளை

இல்லை

கடைசிப்பிள்ளை

ஆம் (கவனிக்கவும்)

உங்களுக்கு உங்களுடன் சேர்த்து 5 உடன் பிறப்புகள்

இல்லை

(தொடர்ந்து இதே கேள்விகளை கேட்கவில்லை வேறு வேறு கேள்விகளுக்கிடையில்தான் கேட்கப்பட்டது)

நான்கு

இல்லை

மூன்று

சரி(கவனிக்கவும்)

இதேபோன்று தனக்குத் தேவையான தரவுகளையெல்லாம் எங்களிடமிருந்தே எடுத்து

எங்களுக்குச் சொல்வதுதான் ஏமாற்றுப் பேர்வழிகளின் காண்டம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.