Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் இணையம் மீள்பார்வை | நன்றிகளும் பாராட்டுக்களும் 2009/2010

Featured Replies

அனைவருக்கும் இனிய வணக்கங்கள்,

நீண்டகாலமாக யாழ் இணையம் பற்றிய ஓர் மீள்பார்வையை வழங்கவேண்டும் என்று நினைத்து இருந்தேன். கடந்தவருட இறுதியின்போது 2009 மீள்பார்வையை கொடுக்கலாம் என்று இருந்தேன், நேரம் கிடைக்கவில்லை. சுருக்கமாக சில விடயங்கள் பற்றி கூறுவதற்கு இன்று சமயம் வாய்த்துள்ளது.

ஆபத்துக்காலத்தில் அண்ணன் தம்பியை பற்றி நன்கு அறியலாம். கடந்தவருடம் நாங்கள் அனைவரும் தாயக நிலமை கண்டு பேரதிர்ச்சி அடைந்து நின்றபோது யார் யார் எம்முடன் அருகில் நின்றார்கள், யார் யார் சிலுப்பிவிட்டு சென்றார்கள் என்று நான் உங்களுக்கு நினைவுபடுத்தத் தேவையில்லை. இந்தவகையில் பலர் பயனுள்ள ஆக்கபூர்வமான முயற்சிகளுக்கு தோள் கொடுத்து இருந்தாலும் கீழ்வரும் உறவுகள் எனது நினைவில் கண்முன் வந்து நிற்கின்றார்கள். எனவே முதலில் இவர்களுக்கு நன்றிகளும், பாராட்டுக்களும்:

மக்கள் போராட்டம்: ஆர்.கே.ஆர், இணையவன், வலைஞன், மோகன், அகூதா, கந்தப்பு, வல்வைசகாறா, ஈழப்பிரியன், செந்தில்

அடுத்ததாக,

நாங்கள் அதிரிச்சி அலைகளால் தாக்குண்டு சோர்வடைந்து இருந்த இக்கட்டான காலங்களிலும், மற்றும் அண்மைக்காலத்திலும் தளராது நின்று யாழ் இணையத்தை பலர் சுறுசுறுப்பாக கொண்டு சென்று இருந்தாலும் கீழ்வரும் உறவுகளின் பங்களிப்பு அதிகளவாக எனது நினைவில் வருகின்றது:

பொதுக்களம்: நுணாவிலான், தமிழ்சிறீ, முனிவர்ஜீ, தமிழ்மாறன், ஜில், சுஜி, யாயினி, ரதி, சஜீவன், குமாரசாமி, நிலாமதி, கிருபன், சேகுவரா, ராசராசன், ராஜவன்னியன், ஈழமகள், சுகன், கிறுக்குபையன், பிரியந்தன், எரிமலை, குட்டி

இனி, யாழ் மூலம் செய்யப்பட்ட ஆக்கபூர்வமான இதர விடயங்கள் என்று பார்க்கும்போது தாயக மக்களுக்கு நீட்டப்பட்ட ஆதரவுக்கரம் பற்றி கூறலாம். இங்கு, கனேடிய உறவுகள் சார்பில் ஓர் விடயம் கூறவேண்டும்; சில விபரிக்கப்பட முடியாத சிக்கல்கள் காரணமாக இந்த விடயத்தில் எம்மால் ஐரோப்பிய உறவுகளுடன் கைகோர்த்து நிற்கமுடியவில்லை. இதற்காக எமது வருத்தத்தை தெரிவித்து கொள்கின்றோம். யாழை பயனுள்ள முறையில் பயன்படுத்தியமைக்காக பாராட்டுக்குரியவர்கள்:

உதவிக்கரம்: சாத்திரி, சாந்தி, டன்

கடந்தவருடம் யாழ் இணையத்தில் பலர் கவிதைகள் புனைந்தார்கள். ஏறக்குறைய சகலதுமே அவலங்கள் பற்றி பேசுகின்ற கவிதைகளாய் இருந்தன. ஏராளம் உறவுகள் கவிதைப்பூங்காட்டில் பங்குகொண்டு இருந்தாலும் கீழ்வரும் உறவுகளின் பங்களிப்பே எனக்கு அதிகளவாக தெரிகின்றது:

கவிதை: கவிஞர், இளங்கவி, வல்வைசகாறா, நிழலி

கதை கதையாம் பகுதியில் பல கதைகள் பதியப்பட்டன. கீழ்வரும் உறவுகள் வித்தியாசம் வித்தியாசமாக பல கதைகளை படைத்து இருந்தனர்.

கதை: சயந்தன், நிலாமதி, புத்தன்

பொழுதுபோக்கு பகுதியில் இங்கும், அங்குமாக பல உறவுகளின் பங்களிப்பு இருந்தது. ஏறக்குறைய அனைவரும் பொழுதுபோக்காகவே யாழ் இணையத்திற்கு வருகின்றனர் என்பது நிதர்சனமான உண்மை. இந்தவகையில், இளைப்பாறும் களத்துடன் யாழின் திண்ணைப்பகுதியையும் பொழுதுபோக்கு பகுதியினுள்ளேயே உள்ளடக்கவேண்டி இருக்கின்றது. கீழ்வரும் உறவுகள் பொழுதுபோக்கு பகுதியில் அதிகநேரம் செலவளித்து களிப்பூட்டினார்கள்.

பொழுதுபோக்கு: இசைக்கலைஞன், நிழலி

யாழ் இணையத்தில் காலத்திற்கு காலம் பலவிதமான திறனாய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. இவர்கள் உடனடியாக இப்போது நினைவில் வருகின்றார்கள்:

திறனாய்வு: நெடுக்காலபோவான், இன்னுமொருவன், பருத்தியன்

நீண்டகாலமாக சோர்ந்துபோயிருந்த அறிவியல் பகுதி அண்மைக்காலமாக புத்தெழுச்சி பெற்று இருக்கின்றது. தினமும் பலப்பல புதிய, சுவாரசியமான விடயங்கள் பதியப்படுகின்றன.

அறிவியல்: ஜெகுமார்

கணணி வளாகம் பகுதியில் பல உறவுகள் பங்களிப்பு செய்து இருந்தாலும் இவர்களின் பங்களிப்பு – இப்பகுதிக்காய் எடுத்த சிரத்தை அதிகம்.

கணணி வளாகம்: செம்மறி, இணையவன்

எத்தனையோ பல தூற்றுதல்கள், கிண்டல்கள் மத்தியிலும் மனம் கலங்காது மெய்யெனப்படுவது பகுதியில் தனது கருத்தை தெளிவாகவும், உறுதியாகவும் சொல்லுகின்ற ஒருவர் மட்டும் இருக்கின்றார்.

இறையியல்: ஆறுமுகநாவலர்

கடந்தவருடத்திலும், அண்மைக்காலத்திலும் பல முக்கிய தகவல்கள், செய்திகளை யாழிற்கு கொண்டுவருகின்ற பலரில் இவர்கள் முக்கியமானவர்கள்:

செய்தி வழங்கல்: ஜீவா, உமை, நொச்சி, தராக்கி, விமல், தமிழ்மகன், கறுப்பி

தனிப்பட்ட கொள்கைககள், சார்பு நிலைகளுக்கு அப்பால் யாழ் கருத்துக்களத்தின் பிரதான பகுதியாகிய ஊர்ப்புதினம் பகுதியில் கருத்தை பகிர்ந்த ஏராளம் உறவுகளில் இவர்களின் பங்களிப்பு அதிகளவு இருந்தது:

ஊர்ப்புதினம்: சூறாவளி, இறைவன் விசுகு, தயா, ரகுநாதன், மருதங்கேணி, சித்தன்

யாழ் இணையத்தில் மற்றவர்களை கருத்து எழுத தூண்டுகின்ற தூண்டுதல் இல்லாதுவிட்டால் பொதுவாக எவரும் கருத்தை உற்சாகமாக தொடர்ந்து கூறமாட்டார்கள். ஒன்றும் எழுதாமல் ஏனோ தானோ என்று இருந்துவிடுவார்கள். இந்த தூண்டுதலை வழங்குவதில், மற்றும் ஒற்றைப்போக்கில் செல்லாது எம்மத்தியில் பரந்த சிந்தனையை உருவாக்குவதில் மாற்றுக்கருத்து ஒன்றால் மட்டுமே முடியும்.

மாற்றுக்கருத்து: மதிவதனங், அர்ஜுன், நெல்லையன், பாண்ட்

+++

இவர்களுடன் தேசத்திற்கு தொழில்நுட்பம் பகுதியை எழுதுகின்ற ஈசனும் பாராட்டுக்குரியவர்.

இறுதியாக, யாழ் இணையத்தை பொறுப்பெடுத்து நல்ல நிலையில் கொண்டு செல்கின்ற இளைஞன் பாராட்டுக்குரியவர். இளைஞன் இன்னும் பல நல்ல மாற்றங்களை யாழ் வலைத்தளத்தில் ஏற்படுத்தவேண்டும். தற்காலிகமாக ஒதுங்கி இருந்தாலும் திரைமறைவில் பல்வேறு விடயங்களை செய்கின்ற மோகனும் நன்றிக்கும், பாராட்டுக்கும் உரியவர்.

+++

யாழ் இணையத்தின் எதிர்காலம் என்று பார்க்கும்போது மேலும் சில விடயங்கள் பற்றி பேசிக்கொள்ளலாம்.

குறிப்பாக, யாழ் இணையத்தை வர்த்தக மயப்படுத்தும் முயற்சி நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றது. உங்கள் உங்கள் நீங்கள் வாழும் நாடுகளில் இருக்கின்ற வியாபார நிறுவனங்களில் இருந்து யாழ் வலைத்தளத்திற்காக விளம்பரம் எடுத்து தந்தால் மிகவும் உதவியாக இருக்கும்: info@yarl.com

யாழ் முகப்பின் வடிவமைப்பு அண்மையில் மாற்றப்பட்டு முன்பைவிட பொலிவுடன் காணப்படுகின்றது. முகப்பில் கொடுக்கப்படவேண்டிய தொடுப்புக்கள் பற்றி உதாரணமாக சிறுவர் பக்கம், சமூக பாலம் இவற்றில் பயனுள்ள இணைப்புக்கள் தொடுக்கப்படுவதற்கு நீங்களும் உதவலாம். இவ்வாறே ஏதாவது தவறவிடப்பட்ட முக்கிய வலைத்தளங்கள் முகப்பில் இருந்தால் இவைபற்றியும் அறியக்கொடுக்கலாம்: info@yarl.com

இவைதவிர, யாழில் மரண அறிவித்தல்கள், பிறந்தநாள் வாழ்த்துகள் போன்றவையும் பிரசுரம் செய்யப்பட இருக்கின்றது. இவ்வாறான தகவல்களை நீங்கள் யாழ் மூலம் பகிர்ந்து கொள்ள விரும்பினாலும் தொடர்பு கொள்ளுங்கள்: info@yarl.com

நாங்கள் எம்மிடையே பல்வேறு விடயங்களில் கருத்தியல் ரீதியாக முரண்பாடுகளை கொண்டு இருந்தாலும், பொதுவான விடயங்களில் எல்லோரும் கைகோர்த்து நிற்க முயற்சிக்க முடியும். இதை ஆங்கிலத்தில் WIN WIN SITUATION என்று கூறுவார்கள். யாழ் வலைத்தளத்திலும் இவ்வாறு பொதுவான விடயங்களில் அனைவரும் ஒன்றுசேர்ந்து பயனுள்ள பல ஆக்கபூர்வமான விடயங்களை செய்வதற்கு, சாதிப்பதற்கு ஒன்றாக இணையவேண்டும் என்பதே எனது அவா.

+++

யாழ் வலைத்தளம் பற்றிய எனது தனிப்பட்ட பயன்பாடு எனப்பார்த்தால் அண்மைக்காலத்தில் எனது கருத்தியல் போக்கில் பல மாற்றங்களை அவதானித்து இருப்பீர்கள்.

என்னைப்பொறுத்தவரை யாழ் வலைத்தளத்தை நான் Seriousஆக Challengeஆக எடுக்கின்றேன். நான் இருக்கும் இடத்தை முன்னேற்ற வேண்டும், முன்னேற்ற விரும்புகின்றேன். எமது தரத்தை உயர்த்துவதன் மூலம் மற்றவர்களுக்கும் நாங்கள் உதவ முடியும்.

நீண்டகாலமாகவே யாழ் வலைத்தளத்தில் இருந்து ஒதுங்கிவிடுவதிலேயே குறியாக நின்றேன். மோகன் தற்காலிகமாக ஒதுங்கியபோது நானும் ஒதுங்கப்பார்த்தேன். ஆனால் முடியவில்லை. யாழிற்கு வந்து பல கலைஞர்களுடன் தொடர்பு ஏற்பட்டு விட்டதால் அவர்களுக்கு உதவி செய்வதற்காக யாழில் தொடர்ந்து நிற்கவேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. ஓடமுடியவில்லை.

பல உறவுகள் முகத்திற்கு முகம் எனக்கு நேரடியாக அறிமுகமாகி விட்டார்கள். எனவே, தொடர்ந்து முகமூடியுடன் இருப்பது பயனும் அற்றது, அர்த்தமும் அற்றது. நாங்கள் ஏதாவது திருட்டுத்தனம், குற்றம் செய்தால்தான் மற்றவர்களுக்கு முகத்தை காட்டுவதற்கு அஞ்சவேண்டும். விரைவில்.. காலப்போக்கில் நேரடியாக முகத்தை காட்டி காணொளிகள் மூகமாகவும் யாழ் வலைத்தளத்தில் பலவித படைப்புக்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ள காலம் கனியும் என்று நினைக்கின்றேன்.

+++

மேலே குறிப்பிட்ட சில உறவுகளின் பெயர்களை மட்டுமே நினைவுகூர்ந்து பாராட்டியதாக குறைவிளங்க வேண்டாம். இது எனது பார்வை, ரசனை, சுவை மட்டுமே. அத்துடன் பலரது பெயர்கள் நினைவில் உடனடியாக வராது போயிருக்கலாம். மன்னித்துகொள்ளவும்.

யாழ் வலைத்தளத்தில் ஆக்கங்கள் படைப்பவர்கள், கருத்துக்கள் பகிர்பவர்கள் இவர்கள் மட்டுமல்லாது யாழ் வாசகர்களும் மிகவும் முக்கியமானவர்கள். வாசகர்கள் இல்லாதுவிட்டால் ஒருவரும் ஆக்கங்கள் படைப்பதற்கும் முன்வரமாட்டார்கள், கருத்துக்களை பகிரவும் முன்வரமாட்டார்கள். தாம் படைப்பதை, எழுதுவதை, சொல்வதை மற்றவர்கள் பார்ப்பார்கள், வாசிப்பார்கள், கேட்பார்கள் என்கின்ற தூண்டுதலே பலரை படைப்பாளிகளாகவும், கருத்தாளர்களாகவும் தொடர்ந்து தக்கவைத்து இருக்கின்றது. இந்தவகையில் யாழ் வாசகர்கள் எமது நன்றிக்குரியவர்கள்!

யாழ் வலைத்தளத்திற்கு என முகநூலில் இரசிகர் பக்கம் இருக்கின்றது. யாழ் முகப்பில் இந்த இரசிகர் பக்கத்திற்குரிய தொடுப்பு விளம்பரம் இருக்கின்றது. யாழ் இரசிகர் பக்கத்தில் நீங்களும் இணைந்து உங்கள் ஏனைய நண்பர்கள், உறவினர்களுக்கும் இதை அறியப்படுத்துங்கள்!

நன்றி! வணக்கம்! மீண்டும் சந்திப்போம்!

Edited by கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம்...எல்லாப் பகுதியையும் சேர்த்து எழுதி இருக்கிறீர்கள் மிகவும் நன்றாக இருக்கிறது உங்களின் யாழ் களம் மீதான மீள்பார்வை நன்றி.தொடருங்கள் மச்சான். :wub:

மச்சான், உங்களின் யாழ் மீள்பார்வையை ஒரு வார்தையில் சொல்வதானால்: அருமை....!

எல்லா விடயங்களையும் உள்ளடக்கி கலக்கிட்டீங்க. நன்றி உங்கள் நேரத்திற்கும் ஆர்வத்திற்கும். தொடரட்டும் உங்கள் பணி.

நன்றி

ஈழமகள்

  • கருத்துக்கள உறவுகள்

காலத்துக்கு காலம் யாழ் களத்தை மீளாய்வு செய்து வரும் மச்சானுக்கு , என் பாராட்டுக்கள். குறை நிறை சுட்டிக்காட்டும் மச்சான்..கலைஞன் .யாழ் களத்தை சிறப்பாக் இயங்க முன்னின்று உழைக்கும் நண்பர்களில் ஒருவர் என்றால் மிகை ஆகாது .மிக்க நன்றி............தொடருங்கள் உங்கள் பணியை.....

  • கருத்துக்கள உறவுகள்

மச்சான் நீங்கள், யாழ் களத்துக்கு வருபவர் ஒவ்வொருவரையும் வலு அவதானமாக பார்த்து கருத்து எழுதியதை பார்த்தால் ...... ஆச்சரியமாயிருக்கு. :wub:

எனது பச்சை புள்ளியை அங்கை போட்டுவிட்டன்...

  • கருத்துக்கள உறவுகள்

தரமான மதிப்பீடு மச்சான்.உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனது பச்சை புள்ளியை அங்கை போட்டுவிட்டன்...

எனக்கு எரிச்சல்புத்தி இரத்தத்திலேயே இருக்கிறதாலை

கடைசிவந்தாலும் பச்சைப்புள்ளி போடமாட்டன் :rolleyes:

  • தொடங்கியவர்

மிக்க நன்றிகள் யாயினி, ஈழமகள், நிலாமதி அக்கா, தமிழ்சிறீ, தயா, நுணாவிலான், குமாரசாமி அண்ணா.

  • கருத்துக்கள உறவுகள்

அடடா என்ன கவனிப்பு.நன்றி. :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தரமான மதிப்பீடு கலைஞன் .

எனது பச்சை புள்ளியை அங்கை போட்டுவிட்டன்...

உங்கள் பணி தொடர நன்றிகளும், பாராட்டுக்களும் மச்சான். :rolleyes:

மிக்க நன்றிகள் சஜீவன், ஜீவா.

எனக்கு எரிச்சல்புத்தி இரத்தத்திலேயே இருக்கிறதாலை

கடைசிவந்தாலும் பச்சைப்புள்ளி போடமாட்டன் :rolleyes:

நான் மிகவும் கண்ணியமானவன்... நீங்கள் சொன்னமாதிரி எல்லாம் வெளிப்படையாக சொல்லி ஒத்துக்கொள்ள மாட்டன்... :unsure::D :D

  • கருத்துக்கள உறவுகள்

கதை கதையாம் பகுதியில் பல கதைகள் பதியப்பட்டன. கீழ்வரும் உறவுகள் வித்தியாசம் வித்தியாசமாக பல கதைகளை படைத்து இருந்தனர்.

கதை: சயந்தன், நிலாமதி

கலைஞன் யாழின் மீள்பார்வை நன்றாகவுள்ளது பாராட்டுக்கள்....

ஜயோ ...புத்தனை காணவில்லையே..புத்தனும் இக்கட்டான வேலையில் யாழுக்கு வந்து கதை எழுதினமல்ல.... :rolleyes:

கலைஞன் நீங்கள் களத்தை கவனிச்சு எழுதின மீள்பார்வை நன்று.

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் மச்சி... மீள்பார்வை ரொம்ப அருமை... எல்லாத்தையும் வடிவா ஞாவகம் .வைச்சு இருக்கிறிங்கள் . :unsure::rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

மீள்பார்வைக்கு நன்றிகள்..

ஆபத்துக்காலத்தில் அண்ணன் தம்பியை பற்றி நன்கு அறியலாம். கடந்தவருடம் நாங்கள் அனைவரும் தாயக நிலமை கண்டு பேரதிர்ச்சி அடைந்து நின்றபோது யார் யார் எம்முடன் அருகில் நின்றார்கள், யார் யார் சிலுப்பிவிட்டு சென்றார்கள் என்று நான் உங்களுக்கு நினைவுபடுத்தத் தேவையில்லை

நாங்களும் சிலுப்பிவிட்டு போனோமில்ல. கலைஞன் மச்சிதான் எல்லாருக்கும் தூதுவிட்டு வரச்சொன்னமாதிரி இருந்தது. இன்னமும் சிலர் வராதது ஒரு குறைதான்!

  • தொடங்கியவர்

மிக்க நன்றிகள் புத்தன், இளைஞன், கிறுக்குபையன், கிருபன்

+++

புத்தன் மன்னித்துகொள்ளவும். இப்ப இணைச்சு இருக்கிறன்.

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞன் கூர்மையாக ஆராய்ந்து கவனித்து எழுதியுள்ளிர்கள் பாராட்டுகள்.

  • கருத்துக்கள உறவுகள்

மிக்க நன்றிகள் புத்தன், இளைஞன், கிறுக்குபையன், கிருபன்

+++

புத்தன் மன்னித்துகொள்ளவும். இப்ப இணைச்சு இருக்கிறன்.

இணைத்தமைக்கு மிக்க நன்றிகள் ,கலைஞன்.....என்ன பெரிய வார்த்தை எல்லாம் பாவித்துள்ளீர்கள்...சும்மா ஒரு தமாசுக்கு கேட்டேன்.

மற்ற அவதாரத்திற்கு பாராட்டியபடியால் இந்த அவதாரத்தை மறந்து விட்டீர்கள் என்று நினத்தேன்.

விஷ்ணு,புத்தர்,ராமர், நேற்று வந்த சாய்பாபா எல்லா அவதாரத்தையும் நாங்கள் தூக்கி பிடிக்கிறம்தானே... :lol::lol::lol::lol::):lol:

  • கருத்துக்கள உறவுகள்

மச்சான் கலைஞன் இல்லாமல் நாங்கள் எல்லாம் இல்லை. எல்லாரும் ஒருத்தருக்கு ஒருத்தர் ஆறுதலா ஆதரவா இருந்தம். இருப்பம். அப்பதான் யாழை மட்டுமல்ல தமிழர்களையும் இயக்க முடியும்.

நல்லதொரு மீட்டல். :)

நல்ல மீட்டல் மச்சான். கவிதை பிரிவிலும் சிறுகதை பிரிவிலும் 'பொயட்'டினையும் சேர்க்க முடியும் என எண்ணுகின்றேன். அவரின் படைப்புகள் மிகச் சிலவாயினும் அவை காத்திரமானவை... அத்துடன் உங்கள் பெயரையும் பல இடங்களில் இணைக்க முடியும்...ஏன் இணைக்கவில்லை?

Edited by நிழலி
எழுத்துப் பிழை

  • தொடங்கியவர்

மிக்க நன்றிகள் ரதி, நெடுக்காலபோவான், நிழலி

+++

புத்தன் நீங்கள் உதுக்கை ஏற்கனவே வேற அவதாரங்களிலையும் இருக்கிறீங்களோ? சரி பரவாயில்லை. :)

நன்றி நிழலி, கவிஞர் பெயரை இணைச்சு இருக்கிறன். எனது பெயரை உதுக்கை போட்டு என்ன செய்கிறது. மற்றவர்களை appreciateசெய்யவேண்டிய நேரத்தில என்னையே நான் appreciateபண்ணிக்கொள்கிறது கூடாதபழக்கம்.

Edited by கலைஞன்

உங்களின் யாழ் களம் மீதான மீள்பார்வை நன்று மச்சான்.தொடருங்கள் மச்சான். ஆனால் நிழலி அண்ணா சொன்னதுபோல் உங்கள் பெயரும் போட்டு இருக்கலாம் பல இடங்களில்....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிக்க நன்றிகள் ரதி, நெடுக்காலபோவான், நிழலி

+++

புத்தன் நீங்கள் உதுக்கை ஏற்கனவே வேற அவதாரங்களிலையும் இருக்கிறீங்களோ? சரி பரவாயில்லை. :)

நன்றி நிழலி, கவிஞர் பெயரை இணைச்சு இருக்கிறன். எனது பெயரை உதுக்கை போட்டு என்ன செய்கிறது. மற்றவர்களை appreciateசெய்யவேண்டிய நேரத்தில என்னையே நான் appreciateபண்ணிக்கொள்கிறது கூடாதபழக்கம்.

ச் சா என்னதொரு தன்னடக்கமான பொடியன்.

வரப்போறவள் குடுத்துவச்சவள்..... அந்தசீமாட்டி எங்கைதான் இருக்கிறளோ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.