Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொம்பியூட்டர் படிக்க போன.......

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கொம்பியூட்டர் படிக்க போன விசுகு.......

அது 1995 இல்.

ஒரு விளம்பரம் பார்த்தன். தமிழில் கணணிப்படிப்பு, விளக்கங்கள், செய்கைகள்....... என்று.

அப்போ இரண்டு நேர வேலை. ஆனால்

தெரிந்து கொள்ளணும்.

இது ஒரு காலத்தில் உலகத்தையே ஆட்டிப்படைக்கப்போகிறது என்ற தூரநோக்கு வேறு.

1982இல் பம்பலப்பிட்டியில் கீபோட்டு பழகியாச்சு அதனால் சுலபம் என்று மனைவியிடம் தருணம்பார்த்து தலையணை மந்திரம் போட்டு வென்றாகிவிட்டது. (இது தான் எனக்கு மிகவும் சுலபமாக வேலையும் கை வந்த கலையும்.)

வகுப்பும் தொடங்கியாச்சு.

கொம்பியூட்டர் வாங்கினால்தான் நீங்கள் முன்னுக்கு வரலாம் இல்லையென்றால் இங்கு மட்டும் படித்து... கொஞ்சம் லேற்றாகும் என்று வாத்தி சொன்னதால் 15000 பிராங்குகளுக்கு Printer (Canon)இலிருந்து Scanner (AGFA) வரை வாங்கியாச்சு. எனக்கு என்ன செய்தாலும் என்ன வாங்கினாலும் திறமாக சில காலத்துக்கு பாவிக்கக்கூடியதாக இருக்கணும். (திருமணம் முடித்து 22 வருடம்என்றால் இலகுவாக புரிந்து கொள்வீர்கள்தானே.)

அப்ப வாங்கிய கொம்பியூட்டர் 500- MO Disque Dur அளவைக்கொண்டது Windows -95

பிள்ளைகளின் படத்தை போடுவது....

அதை மெருகேற்றுவது...

அதை திரையில் கொண்டுவருவது ....

அதை திரையில பறக்கவிடுவது என்று பல கேள்விகளால் வாத்தியே சலிச்சுப்போச்சு.

அப்போ DOS.... Bita....அது இது என்று கடினமாக உழைக்கவேண்டும்

உண்மையில் நான் கேட்கத்தொடங்கின பிறகுதான் வாத்தியே படிக்க ஆரம்பித்தது.

அப்படியே படம் பார்ப்பது

அதுக்கு கனநாளைக்கு பிறகுதான் தமிழ்பாட்டு இறக்கம் செய்யலாம்

அதுவும் இரவு செய்யவிட்டுவிட்டு படுத்தால் விடியவும் முடிந்திருக்காது

அல்லது 20 வீதம் 30 வீதத்துடன் நின்றிருக்கும்

இதனால் படுக்க இரவு 3 மணி 4 மணியும் ஆகும் அங்கால மனைவி புலம்புவது கேட்கும்

கடைசி வார்த்தை இதுகள் மனுசரே என்று.

அத்துடன் நிற்பாட்டிவிட்டு படுத்தால் இரவு கனவு முழுவதும் அதுதான்

ஏன் வேலை செய்யவில்லை….

எப்படி இதை கண்டுபிடிக்கலாம்…..

இது என்னோடு கூடப்பிறந்தது

கணக்கியல் படிக்கும்போது ஐந்தொகை இரு பக்கமும் சமனாகாது போய்விட்டால்.... இரவு கனவில் விடைவரும் எனக்கு.

உடன் எழுந்து செய்துவிட்டுத்தான் படுப்பேன். அதேபோல்தான் இதுவும்.

அப்போ விடியோ சிடியில் தான் ஒருசில பாடல்கள் வரும் இப்போ மாதிரி டிவிடி எல்லாம் கிடையாது

MP3 வும்கிடையாது. இங்கு MP3 வந்தது 2002 என்று நினைக்கின்றேன். நான் அப்போ கார் மாத்தினேன். அதற்கு MP3 முதன்முதலில் பூட்டியதாக ஞாபகம்

அதன் பின் சில MP3 பாட்டுக்களை மிகவும்கடினமாக உழைத்து தரையிறக்கம்செய்தேன்

இத்துடன் வீட்டுக்கு வரும் உறவுகள் எனது வேலைகளைப்பார்த்துவிட்டு பாராட்டியவர்கள்

மிகமிககுறைவு. இதை படித்து என்ன செய்யப்போறார். வேற வேலையில்லை என்று சொன்னவர்களே அதிகம்.

நான் இனி முடிவுரைக்கு வரவேணும். இதை இங்கு எழுதியமைக்கு இந்த முடிவுரைதான் பதில்கூறும்.

2003 இல் நான்படித்த இந்த படிப்பை மூலதனமாக கொண்டு சொந்தமாக ஒரு தொழில் தொடங்கினேன். 5 கொம்பியூட்டருடன் தான் இந்த தொழிலை ஆரம்பித்தேன். இன்று 35 கொம்பியூட்டருடன் எனது தொழில் வளர்ந்திருக்கிறது.

இதுவரை இங்கு வரும் எவரும் நான் அறிந்துள்ளவற்றை அறிந்திருக்கவில்லை. ஏதோ ஒரு வகையில் அவர்களுக்கு சொல்லிக்கொடுக்கக்கூடிய அளவுக்கு நான் அவர்களைவிட ஒரு படி மேலே வளர்ந்திருக்கின்றேன்.

எனது மகனை அவனது 3ஆவது வயதிலேயே கொம்பியூட்டரில் விளையாட விடுவேன். அதற்கும் எனது உறவுகள் ஏதாவது சொல்லிக்கொண்டே இருப்பார்கள். ஆனால் இன்று நான் 4அடி பாய்ந்தால் என் குட்டி 16 அல்ல 32 அடி பாயும். உறவுகள் அவன் கைவிரல் அசைவில் சொக்கிப்போய் நிற்கிறார்கள்.

இன்று எனது மனைவி எல்லோருக்கும் சொல்லும் வசனம்

அன்று அவர் படித்தது.

இன்று எமக்கு சோறு போடுது……

Edited by விசுகு

விசுகு அண்ணா... முயற்சி திருவினையாக்கும் என்பதற்கு நீங்கள் சிறந்த எடுத்துக்காட்டு. உங்கள் தொழிலில் மேலும் சிறந்து வளர வாழ்த்துக்கள்..!

விசுகு அண்ணா நம்மால் முடியாது எதுவுமே இல்லை என்பதுக்கு நீங்களே ஒரு எடுத்துக்காட்டு... முயற்சி பண்ணினால் எதையும் சாதிக்க முடியும் என்றதை அழகாகவே சொல்லி இருக்கிறிர்கள்... நன்றி உங்கள் அனுபவங்களை எங்களோட பகிர்ந்து கொண்டமைக்கு...உங்கள் தொழில் மேன்மேலும் வளர என் வாழ்த்துக்கள்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி ஈழமகள் மற்றும் சுஜி

இதை கதையாக நான் எழுதவில்லை

இதே தலைப்பில் ஒருவர் எழுதியிருந்தார்

அவருடன் தொடர்ந்து எழுதலாம் என்றுதான் எழுதினேன்

ஆனால் அது முன்பே இணைக்கப்பட்டது என்று மோகன் அண்ணா முற்றுப்புள்ளி போட்டிருந்தார்

அதனால்தான் இதை தனியே இணைத்தேன்

நேரமின்மையால் மெருகூட்ட முடியாது போய்விட்டது.

இங்குள்ள அனேகருக்கு என் நேரமின்மை தெரியும்

அதனால் போட்டுத்தள்ளமாட்டார்கள் என்ற துணிவில் அப்படியே விட்டுவிட்டேன்

Edited by விசுகு

35 கணினிகள் 100 ஆக பெருகட்டும்.

முயற்சிக்கு வாழ்த்துகள் விசுகு!

  • கருத்துக்கள உறவுகள்

.

விசுகு, நீங்கள் தூர நோக்குடன் கொம்யூட்டர் படிக்க தொடங்கி அதனையே..... உங்கள் தொழிலாக கொண்டு இருப்பது மகிழ்ச்சி.

.

  • கருத்துக்கள உறவுகள்

கடின் உழைப்பு உங்களுக்கு வாழ ஒரு வழி காட்டுவதையிட்டு மகிழ்ச்சி......

மேலும் வளர வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

மென்மேலும் வளர வாழ்த்துக்கள் விச்சு. நான் கணனி படிக்கப்போய், தலையில் இருந்த முடியும், கண்ணில் குழியும் விழுந்ததுதான் மிச்சம். :(:(:D

வாழ்த்துகள், பாராட்டுக்கள் விசுகு அண்ணை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆசான்

தமிழ்சிறி

நிலாமதியக்கா

மச்சான்

மற்றும் ராஐவன்னியன்...

தங்களது வாழ்த்துக்களுக்கு நன்றிகள்

இந்த இடத்தில் இடித்து இடித்த தள்ளியும் ....

நிலத்தின் கீழ் உடைத்தும் பெருப்பித்தாயிற்று. இனி இங்கு இடமில்லை.

அடுத்தபடி..... வேறு இடத்தில் வேறு தொழில் விரைவில் ...

ஆனால் இன்னுமொன்றையும் இங்கு குறிப்பிடவேண்டும்

சின்னனிலிருந்து என்னிடம் ஒரு பழக்கமுண்டு. பார்த்து பார்த்துத்தான் காலை வைப்பேன். அத்திவாரம் இறுக்கமாக இருக்கவேண்டும் என்பதும் முக்கியம். அதைவிட இருப்பது போதும் என்ற மனம். அத்துடன் 100 வந்தால் 10ஆவது பகிர்ந்தளிக்கவேண்டும் என்ற குணம். இதை தாங்கள் என்ன மாதிரி புரிந்து கொள்வீர்களோ தெரியாது. நான் இங்கு எழுதுவதற்கு காரணம் பணம் என்னிடம் தங்காது என்று சொல்லத்தான். எனக்கு பின்னர் தொழில் தொடங்கியவர்கள் 5 6 தொழில் என்று தொடங்கி நன்றாகவும் இருக்கிறார்கள். உள்ளதையும் இழந்திருக்கின்றார்கள். ஆனால் நான் இதற்குள் இருந்த இடத்தைத்தான் முடிந்த அளவு பாவித்துள்ளேன்

நிச்சயமாக அடுத்தபடி உறவுகளுடன் சேர்ந்து பெரிதாக இருக்கும்

அது என்னுடைய இன்னொரு கனவை நிறைவு செய்யும்.

Edited by விசுகு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்த்துக்கள் விசுகு உங்களிற்கு

தொடரட்டும் உங்கள் முயற்சி :)

  • கருத்துக்கள உறவுகள்

உங்களைப் போன்று தூரநோக்குடன் தான் நானும் 97 இல் படித்தேன். ஒரு மாதம் தான் படித்தேன். எல்லாம் டோஸ் அது இது என்று கடைசியில நானாக முயற்ச்சி பண்ணியும் சின்னப் பொடியளோட சேர்ந்தும் கற்றுக் கொண்டதுதான் அதிகம். உங்கள் மகன் போலவே எனது பிள்ளைகளும் கணணியை பிரிச்சு மேயுறாங்கள்.நான் அன்று நினைத்தது எங்களுக்கு ஒன்றும் தெரியாது என்ற எங்கள் பிள்ளைகள் நினைக்கக் கூடாது.அவையளப் பேய்க்காட்ட ஏலாது என்ற நினைப்பு வரவேண்டும்.

உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள்.மென் மேலும் வெற்றிபெற வாழ்த்துக்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாசா ...

புலவர்..

தங்களது கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள்

இங்கு புலவர் குறிப்பிட்ட கருத்துப்பற்றி நான் கொஞ்சம் எழுதவேண்டும்

நான் இங்கு எனது உறவுகளுக்கு அடிக்கடி சொல்வது இது.

கணணி வாங்கித்தரும்படியும் அதை செயற்படத்தித்தரும்படியும் எனது உறவுகள் கேட்கும்போது நான் கூறுவது

தாங்கள் முதலில் கொஞ்சமாவது தெரிந்து கொள்ளுங்கள்

பெற்றோருக்கும் சில விடயங்கள் தெரியும் என்பது மக்களுக்கு தெரிந்திருக்கவேண்டும்

இல்லையென்றால் மிகவும் ஆபத்தான சிக்கலான பிரச்சினைகளை நீங்கள் சந்திக்கவேண்டிவரும்

நான் வெளியிலிருந்து வந்தால் மக்களுக்கு தெரியும்

அப்பா எங்கெல்லாம் நாம் போயிருக்கின்றோம் என்பதை பார்த்துவிடுவார் என்று.

அதைவிட முக்கியமானது இது இதுக்குள் போகக்கூடாது

எவற்றை பார்க்கக்கூடாது

காட்டால்(Visa Card) பணம் செலுத்தும் எந்தவித கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் சொந்த முகவரிகளை அறிவித்தலை தவிர்த்தல்...

போன்றவற்றை சொல்வதற்கும் எமக்கு குறிப்பிட்ட கணணி அறிவு வேண்டும்.

Edited by விசுகு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்றாவது ஒருநாள் கற்றவை பின்பொரு காலத்தில் கட்டாயம் பலனைத் தரும்..உங்கள் முயற்சி, பின்னர் வெற்றிநடை போட்டது எல்லாவற்றிற்கும் வாழ்த்துக்கள். உங்களைப் பார்த்து ஒரு முன்னுதாரணமாக திகழவேண்டும்..கதையை கதையாக குறிப்பிட்ட விதமும் நன்று. மேலும் மேலும் நீங்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விசுகு உங்கள் தொழில் மேன்மேலும் வளர என் வாழ்த்துக்கள்..

  • கருத்துக்கள உறவுகள்

படித்து அதே துறையில் சொந்த தொழில் செய்வது போல் நிம்மதி இருக்கவே முடியாது. கணிணி துறையில் தான் நான் படித்து அதே துறையில் தான் வேலை செய்கிறேன். சிலவேளை ஏன் தான் இத்துறையில் படித்து வேறொருவருக்கு வேலை செய்கிறேன் என மனம் வெறுத்ததுண்டு. விசுகு, உங்கள் முயற்சி பாராட்டப்படவேண்டியது. மேலும் வளர வாழ்த்துக்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாரதிப்பிரியன்

jhansirany

நுணாவிலான்

நன்றிகள் தங்களது கருத்துக்கும் ஊக்குவிப்புக்கும்..

பாரதிப்பிரியா எழுதியதுபோல் எந்த படிப்பும் எந்த மொழி அறிவும் வீண்போகாது

அதேபோல் நுணாவிலான் சொல்வதுபோல் இன்னொருத்தருக்கு எமது உழைப்பு போவதும் கவலைதான்.

நான் இன்னொன்றையும் எழுதினால் சிலவேளை அது இன்னொரு உதாரணமாகலாம்.

நானும் 6 மாதம்வரைதான் கணணி பற்றி ஒருவரிடம் படித்தேன்

அதன்பின் எனது சொந்த முயற்சிதான்.

அதேநேரம் எனக்கு படிப்பித்த எனது ஆசிரியர் என்னைப்போல் இதே தொழிலை சொந்தமாக ஆரம்பித்து நட்டமடைந்து

இன்று என்னிடம் வேலை செய்கின்றார்.

இது இன்னொரு பக்கம்.

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

கொம்பியூட்டர் படிக்க போன விசுகு.......

அது 1995 இல்.

ஒரு விளம்பரம் பார்த்தன். தமிழில் கணணிப்படிப்பு, விளக்கங்கள், செய்கைகள்....... என்று.

அப்போ இரண்டு நேர வேலை. ஆனால்

தெரிந்து கொள்ளணும்.

இது ஒரு காலத்தில் உலகத்தையே ஆட்டிப்படைக்கப்போகிறது என்ற தூரநோக்கு வேறு.

1982இல் பம்பலப்பிட்டியில் கீபோட்டு பழகியாச்சு அதனால் சுலபம் என்று மனைவியிடம் தருணம்பார்த்து தலையணை மந்திரம் போட்டு வென்றாகிவிட்டது. (இது தான் எனக்கு மிகவும் சுலபமாக வேலையும் கை வந்த கலையும்.)

வகுப்பும் தொடங்கியாச்சு.

கொம்பியூட்டர் வாங்கினால்தான் நீங்கள் முன்னுக்கு வரலாம் இல்லையென்றால் இங்கு மட்டும் படித்து... கொஞ்சம் லேற்றாகும் என்று வாத்தி சொன்னதால் 15000 பிராங்குகளுக்கு Printer (Canon)இலிருந்து Scanner (AGFA) வரை வாங்கியாச்சு. எனக்கு என்ன செய்தாலும் என்ன வாங்கினாலும் திறமாக சில காலத்துக்கு பாவிக்கக்கூடியதாக இருக்கணும். அப்ப வாங்கிய கொம்பியூட்டர் 500- MO Disque Dur அளவைக்கொண்டது Windows -95

பிள்ளைகளின் படத்தை போடுவது....

அதை மெருகேற்றுவது...

அதை திரையில் கொண்டுவருவது ....

அதை திரையில பறக்கவிடுவது என்று பல கேள்விகளால் வாத்தியே சலிச்சுப்போச்சு.

அப்போ DOS.... Bita....அது இது என்று கடினமாக உழைக்கவேண்டும்

உண்மையில் நான் கேட்கத்தொடங்கின பிறகுதான் வாத்தியே படிக்க ஆரம்பித்தது.

-------

-------

அதேநேரம் எனக்கு படிப்பித்த எனது ஆசிரியர் என்னைப்போல் இதே தொழிலை சொந்தமாக ஆரம்பித்து நட்டமடைந்து

இன்று என்னிடம் வேலை செய்கின்றார்.

இது இன்னொரு பக்கம்.

விசுகு உங்களுக்கு படிப்பித்த ஆசிரியர், தனது மணித்தியால சம்பளத்தை கருத்தில் எடுத்து தனது வேலையை ஏனோ... தானோ.... என்று செய்து கொண்டிருக்க, நீங்கள் உங்கள் குறிக்கோளில் கண்ணும் கருத்துமாக முழு ஈடுபாட்டுடன் இருந்தமை தான் உங்களுக்கு வெற்றியை ஈட்டித்தந்தது. ஒரு வேலையில் இறங்கப் படாது..... இறங்கினால் வெற்றிக்கனியை எட்டக்கூடியதாக இருக்க வேண்டும், சில வியாபாரங்கள் ஆரம்ப ஒரு வருடத்தில் நட்டம் கொடுக்கலாம்..... அதையும் தாங்கும் சக்தி வேண்டும், விளம்பர யுக்தி , வாடிக்கையாளரை கவரும் கனிவு, எல்லாம் தனிப்பட்டட வியாபாரத்தில் முக்கியமாக நீங்கள் கவனத்தில் எடுத்த படியால் தான் இன்று , நீங்கள் வெற்றிப் படிகளில் நிற்கின்றீர்கள்.

.

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு படிப்பித்த ஆசிரியர், தனது மணித்தியால சம்பளத்தை கருத்தில் எடுத்து தனது வேலையை ஏனோ... தானோ.... என்று செய்து கொண்டிருக்க, நீங்கள் உங்கள் குறிக்கோளில் கண்ணும் கருத்துமாக முழு ஈடுபாட்டுடன் இருந்தமை தான் உங்களுக்கு வெற்றியை ஈட்டித்தந்தது.சில வியாபாரங்கள் ஆரம்ப ஒரு வருடத்தில் நட்டம் கொடுக்கலாம்..... அதையும் தாங்கும் சக்தி வேண்டும்[/quote]

உண்மைதான் சிறி

தாங்கள் எழுதிய பின்னர்தான் இப்படித்தான் உண்மையில் நடந்தது என்பதை நான் உணர்ந்தேன்

தொழில் தொடங்கும்போதே குறைந்தது 1 வருடமாவது வேறு வகையில் எனது குடும்பத்துக்கான செலவுக்கான பணம் வரும் வகையில் வேறு ஒரு ஏற்பாடு செய்திருந்தேன்.

நன்றி தங்கள் ஆக்கபூர்வமான யோசனைகளுக்கும் தங்களது நேரத்திற்கும்..

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையிலேயே நீங்கள் கிரேட் அண்ணா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உண்மையிலேயே நீங்கள் கிரேட் அண்ணா

நன்றி உறவே

தங்களது பெயரை எப்படி எழுதுவதென்று தெரியவில்லை

தமிழுக்கு மாத்தலாமே

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

அதே போல எப்போதும் நட்டத்தினை தாங்கும் அளவிற்கு ஒரு மினிமம் தொகையை பேக்கப்பாக மெயின்டன் பண்ணுங்கள் தோழர் விசுகு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அதே போல எப்போதும் நட்டத்தினை தாங்கும் அளவிற்கு ஒரு மினிமம் தொகையை பேக்கப்பாக மெயின்டன் பண்ணுங்கள் தோழர் விசுகு

நன்றி தங்கள் கருத்துக்கும் ஆலோசனைக்கும்...

எனது சகோதர சகோதரர்கள் எனக்கு ஏதும் காசுப்பிரச்சினை என்று கேள்விப்பட்டால் சொல்வார்கள்

அவன் சேமிக்காமல் இருக்கமாட்டான்

சிறு வயதிலிருந்தே அவனிடமுள்ள பழக்கமிது....

விசு அண்ணா! வாழ்த்துக்கள்.

உங்கள் கொம்புட்டர் வாத்தியிடமிருந்து நீங்கள் ஒன்றுமே கற்கவில்லையா? உங்களது இன்றைய நிலைக்கு உங்கள் கொம்புட்டர் வாத்தியின் பங்களிப்பு 0 என கொள்ளலாமா?

(ஊரில் நண்பர்கள் சிலர் இன்றைய வாதியார்மாரின் பங்களிப்பு பற்றி காரசாரமாக விவாதித்து வருகிறோம். உங்கள் பதில் உதவியாக இருக்கும்.)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அப்படி முழுவதுமாக ஒதுக்கிவிடமுடியாது

அடிப்படையை அவரிடமிருந்து கற்றுக்கொண்டேன்

அதனால் அது பற்றிய பயம் அகன்று ஓரளவு தெளிவும் கிடைத்தது.

அதேநேரம் நேரத்தை கூடுதலாக ஒதுக்கி எனக்கு தேவையானவற்றை அவரிடம் கேட்டு தெரிந்து கொண்டேன்

அவரே சொல்லுவார் தன்னிடம் படித்து இந்தளவுக்கு வந்ததற்கு எனது விடாமுயற்சியே காரணம் என்று.

Edited by விசுகு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.