Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்களத்தில் களேபரம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்களத்தில் களேபரம்

இந்தப்பகுதியில் வரும் கதாபாத்திரங்கள் எந்த ஒரு தனிநபரையும் குறிப்பிடுபவை அல்ல. சித்தரிக்கப்படும் சம்பவங்கள், பாத்திரங்கள் யாவும் கற்பனையே. :wub:

rman3142l.jpg

  • Replies 282
  • Views 32.6k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காட்சி 1:

மத்திய லண்டன் பகுதி. ஒரு காருக்கு மேல் பயணிக்கமுடியாத சாலை. தெருவின் மேலேயே கட்டிவிட்டார்களோ என்று சந்தேகப்படும் அளவுக்கு ஒரு கட்டடத் தொகுதி. அங்கே அந்தவீட்டின் வாசல் கதவு ஒன்றுக்கு இரண்டு பூட்டுக்களால் உட்புறமாகப் பூட்டப்பட்டிருக்கிறது.

உள்ளே யாரும் இருப்பதற்கான அடையாளம் எதுவும் இல்லை. ஆனால் ஒரே ஒரு சத்தம் மட்டும் கேட்டபடியே.. ஆம். கணினியின் விசைப்பலகை தட்டப்படுவதால் எழும் சகிக்கமுடியாத அந்த ஓசைதான் அது.

அதிகம் எழுதுவதாகத் தெரியவில்லை. பல பக்கங்களைத் திறப்பதும் இருவரிகள் எழுதுவதும் முகக்குறிகள் போடுவதுமாக கைகள் புகுந்து விளையாடுகின்றன.

இணையத்தளத்தில் உலாவியபடியே அப்படியே தன் வங்கிக் கணக்குகளையும் மேய்கின்றன சிவப்பேறிய அந்தக் கண்கள். நேற்றைய போதை இன்னும் தெளியவில்லை போல.

"அட நாய்ங்களா..! செய்யிற வேலைக்கு தரவேண்டிய கூலியை ஒழுங்காத் தரவேண்டியதுதானே..! கண்டபடி காசு அடிக்கிறமாதிரி செக் புத்தகமும் அடிச்சு விடுறான் போலை." வங்கிக்கணக்கில் பணம் விழாத ஆத்திரத்தில் வாய் முணுமுணுத்துக்கொண்டது.

கணினித்திரையின் மேல் வலப்புற மூலை சொன்னது... கொதிவதனம். :wub:

வேண்டாவெறுப்பாக கருத்துக்களத்தை ஒருமுறை புதுப்பித்துப் பார்த்தபோது உறுப்பினர் ஐயா உள்நுழைந்திருப்பதாக அறிந்து கொண்டார் திருவாளர் கொதிவதனம்.

"அடப்பாவி.. குடுக்குற காசுக்கு ஒரு மனுசன் எவ்வளவுதான் கூவுறது? இதுக்குள்ள இந்த ஐயாவின்ர தொல்லை வேறை..!" அலுத்துக்கொண்டார் கொதி.

(தொடரும்.) :o

  • கருத்துக்கள உறவுகள்

அடி சக்கை எண்டாராம் .....அம்மன் கோவில் புக்கை எண்டாராம் ......

  • கருத்துக்கள உறவுகள்

நானும் என்னமோ ஏதோ எண்டு ஓடிவந்து பார்த்தால் லண்டன் புராணம்...கடவுளே.... :wub::o

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்

காட்சி 1:

மத்திய லண்டன் பகுதி. ஒரு காருக்கு மேல் பயணிக்கமுடியாத சாலை. தெருவின் மேலேயே கட்டிவிட்டார்களோ என்று சந்தேகப்படும் அளவுக்கு ஒரு கட்டடத் தொகுதி. அங்கே அந்தவீட்டின் வாசல் கதவு ஒன்றுக்கு இரண்டு பூட்டுக்களால் உட்புறமாகப் பூட்டப்பட்டிருக்கிறது.

-------

-------

"அடப்பாவி.. குடுக்குற காசுக்கு ஒரு மனுசன் எவ்வளவுதான் கூவுறது? இதுக்குள்ள இந்த ஐயாவின்ர தொல்லை வேறை..!" அலுத்துக்கொண்டார் கொதி.

(தொடரும்.) :(

கொதியின்ரை, வீடு உட்பக்கமாக இரண்டு பூட்டுக்களாலை பூட்டியிருக்கு எண்டதை எப்படி சரியாய் கண்டுபிடிச்சீங்கள், இசை. :wub:

நல்ல கதை தொடருங்கள். பாகம் 2 ஐ, இழுத்தடடிக்காமல்....... இன்றே வெளியிடுங்கள். :o

காட்சி 1:

...

கணினித்திரையின் மேல் வலப்புற மூலை சொன்னது... கொதிவதனம். :wub:

வேண்டாவெறுப்பாக கருத்துக்களத்தை ஒருமுறை புதுப்பித்துப் பார்த்தபோது உறுப்பினர் ஐயா உள்நுழைந்திருப்பதாக அறிந்து கொண்டார் திருவாளர் கொதிவதனம்.

"அடப்பாவி.. குடுக்குற காசுக்கு ஒரு மனுசன் எவ்வளவுதான் கூவுறது? இதுக்குள்ள இந்த ஐயாவின்ர தொல்லை வேறை..!" அலுத்துக்கொண்டார் கொதி.

(தொடரும்.) :D

'கொதிவதனம்' என்ன ஒரு அருமையான பெயர்... என்னால சிரிப்பை அடக்க முடியவில்லை... :o பெயர் தெரிவுக்கே ஒரு நூறு பச்சை புள்ளி குத்தி இருக்கவேணும், என்னால் ஒன்று மட்டும் தான் போடமுடிந்ததால் அதை போட்டுளேன். தொடருங்கள் இசைக்கலைஞ்சன். :(

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா இசைக்கலைஞன் லண்டன் வந்தாலும் வந்தார் என்னும் அதன் பரபரப்பு அடங்கவில்லை...போதுமடா சாமி :wub:

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பச்சை போடாவிட்டால் என்ன மனிதன் நான்?? :o கொதிவதனம், எப்படியப்பா இசை இப்படி சிந்திக்கிறீங்கள். :wub:

கருத்துக்களை கருத்துக்களால் வெல்ல வேண்டு என்பதில் அளவிலா நம்பிக்கை உள்ளவன்.இங்கு பலர் அவருக்கு பதில் எழுதுவதால் தான் அவர் மீண்டும் மீண்டும் கருது எழுதுகிறார் என்பதை என்னால் ஏற்கமுடியவில்லை.

அவருக்கான உத்தரவு அவரின் கருத்துக்களில் அதுவும் இரு வரியாயினும் தெரியும். மக்களை குழப்பும் கருத்துகள்.இது வரை அவரின் கருத்துக்கள் மட்டுக்களால் வெட்டப்படவில்லை எனில் எப்படி எழுதுகிறார் என்பது புரியும்.அவருக்கு பதில் எழுதியவர்களின் கருத்துக்கள் பல திருகி கொல்லப்பட்டுள்ளன. :(

களோபரம் என வர வேண்டும் என நினைக்கிறேன்.எனினும் பெரியோரின் முடிவே இறுதியானது.

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு கூட ஒருத்தரை கதாநாயகன் ஆக்கியிருப்பது.......

அவருக்கு கிடைத்த வெற்றிதானே....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மேலான கருத்துக்களைப் பதிந்து உற்சாகம் ஊட்டிய அல்வாயன், யாயினி, தமிழ்சிறி, குட்டி, ரதி, நுணாவிலான், விசுகு அண்ணை ஆகியோருக்ல்கு நன்றி. :(

நுணா,

களேபரம் என்றுதான் இதுவரை அறிந்திருக்கிறேன். எதுக்கும் எங்கட யாழ் உறுப்பினர் புலவரைக் கேட்டுப் பார்ப்பம்..! :o

விசுகு அண்ணை,

இங்கு எல்லோரும் கதாநாயகர்கள்தான். மற்றும் இங்கே எழுதப்பட்டிருப்பவை யாவும் கற்பனைதானே..! என்ன பிரச்சினை..! :wub:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காட்சி 2:

லண்டனின் வடமேற்குக் குடியிருப்பு ஒன்றில் உறுப்பினர் ஐயாவின் வீடு. உறுப்பினர் கொதிவதனம் எழுதிக்கொண்டிருக்கிறார் என்று அறிந்தவுடன் ஐயாவின் கைகள் படபடக்கத் தொடங்கிவிட்டன. பதட்டத்தில் சகட்டுமேனிக்கு எழுத்தில் விளாசித்தள்ள ஆரம்பிக்கிறார் ஐயா. பழைய கோப்புகள் மளமளவெனத் திறக்கின்றன. அதில் ஏற்கனவே எழுதி சேமிக்கப்பட்ட வசனங்கள் எட்டிப்பார்க்கத் தொடங்குகின்றன.

"நக்கிறதெண்டு வெளிக்கிட்டாப்பிறகு செக்கென்ன சிவலிங்கமென்ன?"

"காட்டிக்குடுத்து பிழைப்பு நடத்தும் துரோகியே."

"நண்றி" :wub:

இதில் எதை வெட்டி ஒட்டுவது என்று தீவிரமாக யோசிக்க ஆரம்பிக்கிறார் உறுப்பினர் ஐயா.

காட்சி 3:

கொதியும் ஐயாவும் சதிராட ஜேர்மனியின் ஒரு குக்கிராமத்தில் இருந்து சத்தமில்லாமல் உள்நுழைகிறார் இன்னுமொருவர். கணினி முகப்பில் ஸ்ரேயாவும் தமன்னாவும் நர்த்தனம் ஆடிக்கொண்டிருந்தார்கள். கடைவாயில் வழிந்ததை அப்படியே துடைத்துவிட்டு சலிப்புடன் யாழை மூட்டுகிறார் தெலுங்குசிறி. :o

எடுத்தவுடனே ஊர்ப்புதினம் எங்கும் ஐயா, கொதிவதனம் எழுதிய கருத்துக்கள். "ஆரம்பிச்சிட்டாங்கய்யா.. இதுவே பிழைப்பாத்தான் அலையிறாங்களா..!" அலுத்துக்கொண்டார் தெலுங்கு.

பேசாப்பொருள், வண்ணத்திரை, சமூகச் சாளரம் பகுதிகளை நோட்டம் விட்டவருக்கு இறுதியில் சலிப்பே மிஞ்சியது. "ம்ஹூம்.. இண்டைக்கு ஒண்டும் தேறாது போலை".

தமிழநாடுரோக் தளத்துக்கு நடையைக் கட்டும் முன் கடைசியாக உலகநடப்பைப் பார்த்தவருக்கு ஆனந்த அதிர்ச்சி. "சுவாமி நித்தியானந்தாவின் லேட்டஸ்ட் சல்லாப வீடியோ" என்கிற தலைப்பில் உறுப்பினர் சிவப்பன் போட்டிருந்த திரியைப் பார்த்ததும் சிறியருக்கு போதை ஜிவ்வென்று தலைக்கேறியது. "ஆகா.. இண்டைக்கு விருந்துதான்..!" துள்ளலுடன் வீடியோவைக் கிளுக்கவும் சமையல்கட்டில் பாத்திரங்கள் உருளும் சத்தம் கேட்கவும் சரியாக இருந்தது.

"இஞ்சையப்பா.. மிளகாய்த்தூள் முடிஞ்சு போச்சு." சமையல்கட்டிலிருந்து மனைவியின் ஆதங்கம்.

"ஆகா.. ரஞ்சித தரிசனம் இப்போதைக்கு இல்லைப் போலக் கிடக்கே..!" என்று மனம் நொந்தவராக தனது முதல்கட்ட சமாளிப்பை ஆரம்பித்தார்.

"இங்கபாரும். மிளகாய்த்தூள் போடாமல் வெள்ளைக்கறியா இண்டைக்கு வையும். காணும். தூள் கனக்க உடம்புக்குக் கூடாதெண்டு சிட்டுக்குருவிகள் புளொக்கில் போட்டிருக்கினம்."

"தூள் இல்லாமலுக்கோ? என்னால ஏலாது. உந்த யாழில எப்பப் பார்த்தாலும் நடக்கிறனியள்தானே.. அப்பிடியே ஒரு எட்டு உந்தப் பக்கத்துக் கடைக்குப் போட்டுவாங்கோவன்.."

"ஸ்ஸ்ஸப்பா.. மனிசனின்ர ஆத்திர அவசரம் எங்க விளங்கப் போகுது.." ரஞ்சித தியானத்துடன் சறத்திலிருந்து களுசானுக்கு மாறினார் தெலுங்குசிறி.

(தொடரும்.) :(

Edited by இசைக்கலைஞன்

ஆகா...ஆகா....அருமை அருமை...சும்மா பிச்சு உதறுறீங்கள் அண்ணா. தொடரட்டும் உங்கள் பணி..... :wub:

  • கருத்துக்கள உறவுகள்

இசைக்கலைஞன்

ரூம் போட்டுத்தான் எழுதிறீங்களோ.அப்பா சிரிப்புத் தாங்க முடியவில்லை.

வாத்தியார்

..............

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா ஆகா இசை கலைஞன் ....மேலும் மேலும் தொடர்க............( இவருக்குள் இத்தனை திறமைகளா? )..

குறிப்பு :......களேபரம் தான் சரிங்க.............( என் புத்திக்கு எட்டிய வரை) ....

  • கருத்துக்கள உறவுகள்

நான் அறிந்தவரையில் களேபரம் என்று எழுதுவதே சரி.என்னையும் பெரிய ஆளாக்கிப் போட்டீர்கள்.தொடர்ந்து எழுதுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இசை அண்ணாவுக்கு பெரிய பிரித்தானியாவுக்கு போய்ட்டு வந்ததில் இருந்து ஒரே ஒவ்வாமை போலும்..ஒரே அந்த நாட்டுக்காரரின் பேச்சாய் தான் இருக்கார்.ம்ம்ம்..யாரு அண்ணாவை மாற்றினார்கள்? :wub: எதுக்கும் இந்தாங்கோ ஒரு இலவச ஆம்புலன்ஸ் வண்டி...ஒவ்வாமை கூடிவிட்டால் ஏறி ஓடுங்கோ கொஸ்பிரலுக்கு.emoticon-object-004.gif :o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்களைப் பகிர்ந்துகொண்ட ஈழமகள், வாத்தியார், சஜீவன், நிலாமதி அக்கா, மற்றும் புலவருக்கு நன்றிகள்..! :o

யாயினி,

ஒவ்வாமை நோய் லண்டனில இருக்கேக்குள்ளதான். இப்ப போய்ட்டுது..! :wub:

இசை மிகச் சிறப்பாக எழுதக் கூடியவர், ஆனால் அப்படி எழுதுவதை தவிர்ப்பவர் (இவரை மாதிரித் தான் தமிழ் சிறி யும்)....இந்தக் தொடரில் தன் திறமையை வெளிக்காட்டுகின்றார். ஏன் எம் ஆட்கள் (ஈழத் தமிழர்கள்) தம் திறமையை சாமிக்கு நேர்த்தி வைத்த மாதிரி இலேசில் வெளியிட மாட்டார்கள் என்ற கேள்விக்கு என்னால் என்றுமே பதில் அறிய முடிவதில்ல

தொடர்ந்து எழுதுங்கள் இசை

Edited by நிழலி

இசை லண்டனுக்கு வந்தது தெரியாமல் போச்சு. தெரிஞ்சு இருந்தால் ஒரு போத்தல் உடைச்சு இருக்கலாம்... குடிக்க இல்லை ஏத்தி கொல்ல..

கடைசியா என்னையுமா...?

தமிழாக்களின் கடி தாங்க முடியலப்பா..

யாருக்காவது மலையாளியா மாற என்ன புறசீஜர் எண்டு தெரியுமோ... அது வேறை யாருக்கும் இல்லை எனக்குதான்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இசை சூப்பர்....தெலுங்கருக்காகவே நித்யானந்தா சலபானந்தாவையெல்லாம் தேடி தேடி...googleல் இப்போ எத தட்டினாலும் நித்யானந்தாவே வருகுதுன்னா பார்த்துக்கோங்களேன்.

ஊர்ப்புதினத்தில் எழுதினா வெட்டி தள்ளுறாங்கன்னு ஏதோ நித்யானந்தான்னு காலத்தை ஓட்டினா இப்டி கலாய்க்கிறீங்களே music artist!

"நக்கிறதெண்டு வெளிக்கிட்டாப்பிறகு செக்கென்ன சிவலிங்கமென்ன?" நச்...

"எடுத்தவுடனே ஊர்ப்புதினம் எங்கும் ஐயா, கொதிவதனம் எழுதிய கருத்துக்கள். "ஆரம்பிச்சிட்டாங்கய்யா.. இதுவே பிழைப்பாத்தான் அலையிறாங்களா..!" அலுத்துக்கொண்டார் தெலுங்கு. நிசமாவே இதுதான் நடக்குது........ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு உங்க எழுத்து.....

வாழ்த்துக்கள்....தொடருங்கள்....

Action failed: You have reached your quota of positive votes for the day

அவ்வ்வ்... சிறப்பாக இருக்கிறது இசைகலைஞ்சன் தொடருங்கள்... :wub:

அண்ணா நீங்களா ..?? நல்லாக எழுதிறீங்கள் ..இன்னும் நிறைய தொடரவேண்டும் அண்ணா..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இசை மிகச் சிறப்பாக எழுதக் கூடியவர், ஆனால் அப்படி எழுதுவதை தவிர்ப்பவர் (இவரை மாதிரித் தான் தமிழ் சிறி யும்)....இந்தக் தொடரில் தன் திறமையை வெளிக்காட்டுகின்றார். ஏன் எம் ஆட்கள் (ஈழத் தமிழர்கள்) தம் திறமையை சாமிக்கு நேர்த்தி வைத்த மாதிரி இலேசில் வெளியிட மாட்டார்கள் என்ற கேள்விக்கு என்னால் என்றுமே பதில் அறிய முடிவதில்ல

தொடர்ந்து எழுதுங்கள் இசை

கருத்துக்கு நன்றிகள் நிழலி. எழுதக்கூடாது என்றெல்லாம் இல்லை. நல்ல மனநிலை வந்தால் எதையாவது எழுதவேண்டியதுதான். :( மற்றது வீட்டில கணினியும் கிடைக்க வேணுமே..! :o:D

இசை லண்டனுக்கு வந்தது தெரியாமல் போச்சு. தெரிஞ்சு இருந்தால் ஒரு போத்தல் உடைச்சு இருக்கலாம்... குடிக்க இல்லை ஏத்தி கொல்ல..

தயா.. உது தெரிஞ்சுதானே ரகசியமா வந்து ரகசியமா போய்ட்டன்..! :wub:

மேலும் கருத்துக்களைத்தந்த கறுப்பன், குட்டி, அ.செ. எல்லோருக்கும் நன்றி..! :D

Edited by இசைக்கலைஞன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காட்சி 4:

"கட.. கட.. கட.. கட.. கட.. கட.. கட.." இடைவிடாது கேட்டுக்கொண்டே இருந்தது விசைப்பலகை ஒலி. அந்த அதிவேக தட்டச்சுக்குச் சொந்தக்காரர் உறுப்பினர் வயித்தாலபோவான். :wub: விசைப்பலகைக்கு அருகில் ஓணானின் கிட்னி, தவளையின் லிவர் என்று வித்தியாசமான பொருட்கள் அறிவுத்தடாகத்துக்குள் குதிப்பதற்குத் தயாராக இருந்தன.

பகிர்வதனூடு, எழுதுவதனூடு, சொல்வதனூடு என்று தொடர்ச்சியாக ஊடுகட்டி அடித்துக்கொண்டே வந்தவர் ஏதோ ஞாபகம் வந்தவராக யாழிலிருந்து தாவி சிட்டுக்குருவிகள் தளத்துக்குப் போனார். மனைவி முந்தநாள் வைத்த காரமான வெந்தயக் குழம்பில் வாய் அவிந்துபோன கடுப்பில் எழுதிய "மிளகாய்த்தூளின் ஆபத்து" கட்டுரை அவரது இணையப்பக்கத்தில் முன்னுக்கு நின்றது.

இந்த மிளகாய்த்தூள் திரியை வைத்துக்கொண்டு ஜேர்மனியில் ஒருவர் படாத பாடு பட்டுக்கொண்டிருப்பதை அறியாதவராக திரிக்கு வந்திருந்த கருத்துக்களை மட்டுறுத்தத் தொடங்கியவரை மனைவியின் அழைப்பு கலவரப்படுத்தியது.

தலைதெறிக்க அறைப்பக்கமாக ஓடினார்.

"ஐசே" evilgrin0040.gif

"என்னம்மா?" ashamed0001.gif

"ம்ம்ம்.. காலங்கார்த்தாலயே உதில குந்தியாச்சா?" "கோப்பி எங்கை?" evilgrin0039.gif

"ஓ.. நீங்கள் முழிச்சிட்டீங்களே.. இருங்கோ.. கோப்பி வந்துகொண்டே இருக்கு..!" ashamed0006.gif பவ்யமாக குனிந்த முதுகு நிமிராமலேயே அறையை விட்டு வெளியே வந்தவர் சத்தம் வராத முறையில் மீண்டும் கணினிக்குமுன் வந்து குந்தினார். scared0001.gif

நேராக யாழுக்குள் மீண்டும் நுழைந்தவர் கண்ணில் சமூகச்சாளரம் பகுதியில் "ஆண்கள் எல்லோரும் பெண்களின் அடிமைகள்" என்கிற தலைப்பில் உறுப்பினர் ரதிதேவி :o எழுதிய திரி தென்பட்டது. ரத்த அழுத்தம் தலைக்கேறியவராக விரல்களை விசைப்பலகையில் நர்த்தனம் ஆடவிட்டார்.

"ஆண்கள் என்றுமே பெண்களுக்கு அடிமையாக இருந்ததில்லை. அப்படி இருப்பவர்கள் ஆண்களே இல்லை. இப்படி எழுதுவதனூடு பெண்களின் வசைமழைக்கு ஆளாகப்போவது எனக்குத் தெரியும். ஆனால் அதற்கெல்லாம் பயப்படுபவன் நானல்ல. பெண்வாசனையே இல்லாமல் பிரம்மச்சாரியாக வாழ்ந்து காட்டுவேன்." சிரிப்பு முகக்குறியுடன் கருத்தைப் பதிந்து முடிக்கவும் மனைவியின் அதட்டல் வரவும் சரியாக இருந்தது.

"கோப்பி என்னாச்சு? ஒருமுறை சொன்னால் விளங்காதோ?" evilgrin0010.gif

கணினிமுன் ஆளைக்காணவில்லை. மனைவியின்முன் கோப்பியுடன் நின்றுகொண்டிருந்தார் உறுப்பினர் வயித்தாலபோவான். :D

(தொடரும்.) :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.