Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அதிகளவான பிரித்தானிய வாழ் இலங்கைத் தமிழர்கள் இலங்கைக்கு விஜயம் செய்கின்றனர்

Featured Replies

அதிகளவான பிரித்தானிய வாழ் இலங்கைத் தமிழர்கள் இலங்கைக்கு விஜயம் செய்கின்றனர்

06 June 10 01:25 am (BST)

அதிகவளான பிரித்தானிய வாழ் இலங்கைத் தமிழர்கள் இலங்கைக்கு விஜயம் செய்வதாக உயர்ஸ்தானிகராலய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூன்று தசாப்த கால யுத்தத்தின் பின்னர் பிரித்தானிய கடவுச் சீட்டுடைய இலங்கைத் தமிழர்கள் அதிகளவில் தற்போது இலங்கைக்கு விஜயம் செய்வதாக பிரித்தானியாவிற்கான இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகர் பீ.எம். அம்ஸா தெரிவித்துள்ளார்.

நாளந்தம் 30 வீசாக்கள் என்ற அடிப்படையில் இலங்கை தமிழர்களுக்கு வீசா வழங்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் தற்போது நிலவி வரும் அமைதியான சூழ்நிலையினால் சொத்துக்களை விற்பனை செய்த தமது மருத்துவரின் நண்பர் ஒருவர், இலங்கையிலேயே தங்கியிருக்கத் தீர்மானித்து விட்டதாக அம்சா தெரிவித்துள்ளார்.

அதிகளவான தமிழர்கள் இலங்கைக்கு விஜயம் செய்வதாகவும், தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரச்சாரங்கள் பொய்ப்பிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

http://www.globaltamilnews.net/tamil_news1.php?nid=25411&cat=1

  • கருத்துக்கள உறவுகள்

அதுவும் பாருங்கோ 2000 3000 பவுன்ஸ் கட்டி குடும்பம் குடும்பமா சிறீலங்கன் எயார் லைன்சில எல்லோ போகினம். இதுக்கும் உதில போற பல பேரும் உள்ள பொய்யெல்லாம் சொல்லி அசைலம் (அகதி அந்தஸ்து வாங்கின) அடிச்ச பேர்வழிகள். அசைலம் அடிச்சு அதன் பின் நிரந்தர வதிவிடம் பெற்று பிரித்தானிய கடவுச்சீட்டை பெற்றவர்கள் தான்.. உந்த சேட்டைகளில் அதிகம் ஈடுபடுகினம். இதனால உண்மையாகவே போரால் பாதிக்கப்பட்ட மக்கள் எனி பிரித்தானியாவில் அசைலம் அடிக்கிறது என்பது கடினமான காரியமாகலாம்.

இந்த தமிழ் நாய்களை என்னென்று சொல்லுறது.. திருந்தவே மாட்டுதுகள். உதுகளை எல்லாம் பிடிச்சு பாஸ்போட்டை பறிச்சுப் போட்டு ஒரேயடியா சிறீலங்காவிற்கு ஏத்தினால் பிரித்தானிய அரசு இவர்களுக்கு வழங்கும் அரச உதவித்தொகைகளில் பல மில்லியன்களை சேமிக்கலாம். வெள்ளையின மக்களின் வரிப்பணத்தில் இவர்கள் சொகுசாக வாழ்ந்து கொண்டு பொய் சொல்லி ஓடிவந்த நாட்டுக்கே திரும்பிப் போகினம் என்றால் அங்க போய் இருக்க வேண்டியதுதானே. விடுப்பு காட்டவா போகினம்..???! :o:mellow::)

  • தொடங்கியவர்

இந்த செய்தியே இலங்கை தூதரகத்தால் பிரித்தானிய அரசுக்கு சொல்லப்படும் செய்தி... ! இலங்கையில் தமிழர்களுக்கு ஒரு பிரச்சினையும் இல்லை... பாருங்கோ உங்கட நாட்டில் இருந்து எத்தினை பேர் போய் வருகினம் எண்டு...

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

இதை தடுக்கமுடியும்போல் தெரியவில்லை

ஆனால் நான் வேறு மாதிரி யோசித்தேன்

இவர்கள் போய் வந்து....

சிங்களம் என்றால் என்ன

அது இன்று என்ன செய்கிறது

செய்யும் சேய்யப்போகிறது என்பதை நேரடியாக பட்டு அறிவதோடு....

எமது பிரதேசங்களில் கஸ்டப்படும் மக்களுக்கு இவர்கள் வீசும் காசில் கொஞ்சமாவது சிதறாதா....

  • கருத்துக்கள உறவுகள்

சுற்றுலா என்ற நோக்கில் புலம்பெயர் ஈழத்தமிழர் இலங்கைக்குச் செல்வது மிகவும் கவலைக்குரிய விடயம்.

சிங்கள இனவெறியர்களின் செயல்களை நியாயப்படுத்தும் செயல்.

ஈழத்தமிழரின் விடுதலைப் போரை இன்னும் பின்னோக்கித் தள்ளும் நிலமையை ஏற்படுத்தும்.

வாத்தியார்

...............

  • கருத்துக்கள உறவுகள்

அதுவும் பாருங்கோ 2000 3000 பவுன்ஸ் கட்டி குடும்பம் குடும்பமா சிறீலங்கன் எயார் லைன்சில எல்லோ போகினம். இதுக்கும் உதில போற பல பேரும் உள்ள பொய்யெல்லாம் சொல்லி அசைலம் (அகதி அந்தஸ்து வாங்கின) அடிச்ச பேர்வழிகள். அசைலம் அடிச்சு அதன் பின் நிரந்தர வதிவிடம் பெற்று பிரித்தானிய கடவுச்சீட்டை பெற்றவர்கள் தான்.. உந்த சேட்டைகளில் அதிகம் ஈடுபடுகினம். இதனால உண்மையாகவே போரால் பாதிக்கப்பட்ட மக்கள் எனி பிரித்தானியாவில் அசைலம் அடிக்கிறது என்பது கடினமான காரியமாகலாம்.

இந்த தமிழ் நாய்களை என்னென்று சொல்லுறது.. திருந்தவே மாட்டுதுகள். உதுகளை எல்லாம் பிடிச்சு பாஸ்போட்டை பறிச்சுப் போட்டு ஒரேயடியா சிறீலங்காவிற்கு ஏத்தினால் பிரித்தானிய அரசு இவர்களுக்கு வழங்கும் அரச உதவித்தொகைகளில் பல மில்லியன்களை சேமிக்கலாம். வெள்ளையின மக்களின் வரிப்பணத்தில் இவர்கள் சொகுசாக வாழ்ந்து கொண்டு பொய் சொல்லி ஓடிவந்த நாட்டுக்கே திரும்பிப் போகினம் என்றால் அங்க போய் இருக்க வேண்டியதுதானே. விடுப்பு காட்டவா போகினம்..???! :):mellow::)

போனவர்கள் திரும்பி வரும்போது மறக்காமல் குடிவரவுத்துறை அதிகாரிகள் ஒரு கேள்வி கேட்பார்கள். இலங்கைக்குப் போனீர்களே ஏதாவது பிரச்சினை இருந்ததா என்று. நம்மட ஆட்களும் சீ.. அந்த மாதிரி இருந்தது. ஒரு பிரச்சினையும் இல்லை என்பினம். அதை அப்பிடியே கோப்பில் ஏற்றிவிடுவார்கள்.

அடுத்து வரப்போகிற அகதிக் கோரிக்கைகளுக்கு நீதிபதி முன்னால் இந்தத் தரவுகள் முன்வைக்கப்படும். அதாவது இத்தனை வீதமான ஆட்கள் இலங்கையில் பிரச்சினை என்று சொல்லிவிட்டு பிறகு போய்வருகிறார்கள் என. உண்மையிலேயே பாதிக்கப்பட்டு அகதித் தஞ்சம் கோரப்போகிறவைக்கும் பிரச்சினை..

நான் மேலே சொன்னது ஏற்கனவே கனடாவில் நடந்துகொண்டுள்ளது. சமாதானகாலத்தில் இலங்கைக்கு விஜயம் செய்த அகதிகளால் ஏற்பட்ட நிலை.

எங்களுக்கு உள்ள கெட்ட குணம், எங்களுக்கு மட்டும் எல்லாம் நடந்தால் சரி. அடுத்தவனைப்பற்றிக் கவலையில்லை. :o

வெள்ளையின மக்களின் வரிப்பணத்தில் இவர்கள் சொகுசாக வாழ்ந்து கொண்டு பொய் சொல்லி ஓடிவந்த நாட்டுக்கே திரும்பிப் போகினம் என்றால் அங்க போய் இருக்க வேண்டியதுதானே. விடுப்பு காட்டவா போகினம்..???!

அங்க போய் இருப்பினமா.... :lol::mellow:

இப்ப அடங்கிருக்கிற அமைதியில் படம் காட்ட போயிருக்கினம்... :o

இங்க சம்பாதிக்கும்... அகதிபணத்தில்..... அங்க மட்டும்தான் படம் விடுப்பு காட்டலாம் வேறநாடுகளுக்குப் போக எமது பொருளாதாரபிரச்சனை :)

இதனால் உண்மையான எமதுபிரச்சனையை வேறுவிதமாக நம்மில்சிலரும் நமக்கு அடைக்கலம் தந்த நாடுகளும் இன்று உள்ள பொருளாதார வீழ்சியையும் எமக்கு பாதகமாக பாவிக்கலாம் :wub: உண்மையான யதார்தம் தெரிந்தும்.... இதை நாம் யாவரும் அறியவேண்டும் ஈழதமிழன் பிரச்சனை இருக்கும் வரை.... :)

யாழ்ப்பாணத்தில் முக்கிய கல்வி நிறுவனம் ஒன்றில் கற்பிக்கும் நான் ஒரு முன்னாள் போராளி. இன்றைக்கு இராணுவத்தால் அடைத்து வைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டவர்கள் நிலைமை குறித்து எழுத வேண்டும் , உங்களுக்கும் தெரிய வேண்டும் என்பதற்காக எழுதுகிறேன்.

எனது பெயரோ இல்லை ஈமெயில் முகவரியோ தேட முனையும் யாவருக்கும் ஒரு செய்தி, நீங்கள் என் கணணி முகவரி பற்றி தேட முயற்சித்து நேரத்தை வீணடிக்க வேண்டாம் , ஏன் என்றால் இது வெளிநாட்டில் இருக்கும் எனது நண்பர் குலாம் ஊடாக அனுப்புகிறேன்.

அண்மையில் விடுவிக்கப்பட்ட விடுதலை புலிகளின் காவல் துறை பெண் உறுப்பினர் யாழ்ப்பாணத்தில் ஒரு இராணுவ நிலையத்திற்கு கையொப்பமிட உத்தரவிடப்பட்ட பல பெண்களில் ஒருவர். இவரை முகாமில் வைத்து சில்மிஷம் செய்ய முற்படும் பல இராணுவ வீரர்கள் தொல்லை தாங்க முடியாமல் தற்கொலை வரை சென்று விட்டார் . இவரை பார்க்க அடிகடி வீட்டுக்கு வரும் சிங்கள இராணுவ புலனாய்வாளர் இவரை ஒரு இராணுவ சிப்பாயின் கள்ள காதலியாக இருக்கும்படி கேட்டு வருகிறார் . அந்த சிப்பாய்க்கு வேறு திருமணம் ஆனா ஒருவர் , ஆனாலும் தனக்கு ஒரு தமிழ் பெண் வேண்டும் என்றும் தேடி வருகிறார். இப்படி பல சோக கதைகள் இன்று யாழ்ப்பாணத்தில் அரங்கேறுகின்றன.

இன்றைக்கு செல்லிட தொலைபேசி மலிவாகி போனதாலும் , வெளிநாட்டில் ஆட்கள் இருக்கும் குடும்பங்கள் மிக சொகுசான வழிகயை அனுபவிப்பதாலும் பல விதமான வாழ்கை முறைகள் தடங்க பட்டு உள்ளன . படையினர் இளம் பெண்களின் தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளவதும் , காம தேவைக்காக தேடி அலைந்த சிப்பாய்கள் யாரையாவது காப்பாற்ற துடிப்பதும் தமிழ் பெண்களை யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியேற்ற வேண்டிய நிலைமைக்கு எங்களை தள்ளி விட்டது .

இப்படி பெண்களை தேடி அல்லைந்த படையினர் இன்றும் எங்கள் மக்களை பெருமளவில் வேட்டை ஆடாமல் இருப்தற்ற்கு பெரும் காரணம் வெளிநாட்டு தமிழரின் குரல். நேற்றும் ஒரு கடையில் தேநீர் குடிக்க வந்த சிங்கள போலீஸ் ஒருவர் "நாங்கள் சின்ன புழை வுட்டா நீங்க பெரிசாக்கி கத்துறது அனால் புலி வுட்டா சதம் போடுறது இல்லை !" என்று உரக்க கூறிய பொது எனக்குள் ஒன்று தோன்றியது . புலிகள் வேறு வரும் இல்லைட , நாங்கள் தான் . நானும் ஒரு முன்னால் போராளி தான் . என்றைக்கு உன்னோட கூத்தடிக்கிற ஈ பி டி பி உம oru பாராட்ட குழுதான் , கருணாவும் உன்கள் போட திரிஞ்சவந்தான் . இதெல்லாம் புரியாமல் எங்கட சனம் வெளிநாட்டில போராடுரத கண்டு வெருண்டு பொய் நிட்கிரான்கள் !

அய்யா பெரியோரே , அக்கமரே , தம்பி மாரே கோசம் குரல் கொண்டுங்கோ. யாழ்ப்பாணத்தில் நீங்க வந்து காண்பது எல்லாம் போலி நாடகம். உனில் ஒரு வேதனையை புரி வேண்டும் என்றால் உங்கள் மகளை எங்கள் மண்ணில் வளர்த்து பாருங்கள் புரியும் . இதை உண்மை பெயர்களோடு ஆதார பூர்வமாக எழுத ஒருநாள் வரும். இன்றைக்கு எனது நண்பன் ஊடாக இதை அனுப்புகிறேன்.ஒருநாள் வரும் நானும், உங்களை போல மைந்தனாக சுதந்திர கற்றை அனுபவிக்க .

வெளிநாட்டு உறவுகளே கொஞ்சம் இதை வெளி உலகுக்கு கொண்டு வாருங்கள் இல்லயேல் இன்னும் பத்து வருங்களில் எங்கள் ஊர் ஒரு காம களியாட்ட ஊராக மாற்றப்படும் என்பதில் ஐயமில்லை ! நீங்கள் தான் இன்று எங்கள் காவலரண் , உங்கள் குரல் தான் எங்கள் பெண்களின் கற்புக்கு கவசம் !

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கையில் பிரச்சனை என்று வெளிநாடு வந்தவங்கள் .இப்போது இலங்கைக்கு திரும்புகின்றார்கள் என்றால் பிரச்சனை முடிந்தது என்று தானே அர்த்தம். தமிழன் நினைப்பது மற்றவர்கள் எல்லாம் கேணைப்பயல்கள் என்று தங்களைத்தாங்கள் முட்டாள்கள் ஆக்கும் தமிழினம். எத்தனை தமிழன் இலங்கைபோகின்றான் என்ற கணக்கே ஒவ்வொரு விமானநிலையத்திலும் இருக்கு. ஏன் கனடாவிலிருந்தும் ஊர்த்திருவிழாக்குப் போறாங்களாம். அவசியமானவிடயம் தானே. இவர்களுக்காக ஏன் தமிழீழம் கேட்டுப்பேராடினார்களோ தெரியல்ல. நினைக்க நினைகக் நெஞ்சம் கனக்குது. இவங்களெல்லாம் ஊர்த்திருவிழாவிற்கு போகவில்லை. அங்கே உள்ளவங்களுக்கு தங்கடை கிறடிட் காட் மட்டையிலே 'ஷோ" காட்டப்போறாங்கள். பிறகு இங்கு வந்து பாங்றப்சிதான். திருந்துமா எங்கள் தமிழினம். சர்வதேசத்திடம் உதவி பெறவேண்டுமென்றால் இப்படியான செயல்களை மட்டுப்படுத்தி உறுதிப்படுத்தக்கூடிய கணக்குகளை எமக்குச்சார்பாகத்திருப்பவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கும் எனது நண்பர்கள் சிலர் அண்மையில் யாழ்ப்பாணம் போய் வந்திருந்தனர். ஒருவர் தனிப்பட்ட காரணங்களுக்காகவும், இன்னொருவர் சகோதரனின் திருமணத்துக்காகவும் தாங்கள் மட்டும் தனியாக போய் வந்திருந்தனர்.

போய்வந்தபின்னர் அவர்களுடன் உரையாடும் சந்தர்ப்பங்கள் கிடைத்திருந்தன. அதில் ஒருவர் தன்னுடன் ஒளிப்பட மற்றும் வீடியோக் கமராக்களையும் கொண்டு சென்றிருந்தார். அதில் ஏ - 9 பாதை நெடுகிலுமாகக் கிடந்த அவலங்களைப் படமாக்கியிருந்தார். அதுமட்டுமல்லாமல் யாழ்ப்பாணத்தில் தமிழர் படும் இன்னல்கலையும் மிகவும் கவலையோடு பகிர்ந்து கொண்டார். அவர் போன்றவர்களின் யாழ்ப் பயணம் என்பது எமக்கு அங்கு நடக்கும் அவலங்களை கொண்டுவரும் ஒரு நடவடிக்கையாகத்தான் நான் பார்க்கிறேன்.அவர் கொன்டுவந்த ஒளிப்படங்களின் தொகுப்பு என்னிடமிருக்கிறது. முடியுமான பொழுது அதைத் தரவேற்றலாம் என்றிருக்கிறேன்.

மற்றும்படி நீங்கள் பலரும் கூறியவாறு, "காசிருக்கிறது, இந்த டிசெம்பெர் கொலிடேசுக்கு எங்க போவம்....ஊருக்குப்போய் ஒரு விசிட் அடிப்பம்" என்று நினைப்பவர்களும் இங்கிருக்கிறார்கள். அவர்கள் ஒருநாளும் உணரப்போவதுமில்லை, எங்களாலும் அவர்களை உணரவைக்க முடியாது, உடனேயே, "புலிக்கதை" கதைக்கத் தொடங்கிவிடுவார்கள்.இந்தப் பிரச்சனைக்காகவே நான் பலருடனும் இதுபற்றி விவாதிப்பதைத் தவிர்த்து விடுகிறேன்.

கிளிநொச்சி, பரந்தன், ஆனையிறவு, நாவற்குழி என்று எம் மண் பட்டிருக்கும் அவலத்தை எனது நண்பரின் கமரா படம் பிடித்திருக்கிறது, முடிந்தால் தரவேற்றம் செய்கிறேன்..

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் பிரச்சனை என்று வெளிநாடு வந்தவங்கள் .இப்போது இலங்கைக்கு திரும்புகின்றார்கள் என்றால் பிரச்சனை முடிந்தது என்று தானே அர்த்தம்.

இன்னமும் முடிந்து விடவில்லையா? முடிந்தது மாதிரித்தானே நாட்டில் நிலமை உள்ளது. சென்று பார்த்தால் புரியும். இல்லையா?

சொல்லி மாளாது யூலை லீவு பெரும் கஸ்டம். சிறீலங்கனில ரிக்கட் இல்லையாம்.

கடத்திறவையும் கப்பம் கேட்கிறவையும் நல்ல வசதி.

தெற்கு இலண்டன் பகுதியில இலவசமா வாற காலை கதிர் பத்திரிகை இலங்கை வங்கியில காச வையுங்கோ இலண்டன் கிளை இலகுவானது எண்டெல்லாம் விளம்பரம் போடுகினம். பெரிய விளம் பரம்.

அந்த காசே கானும் பத்திரிகை நடாத்த.

அப்ப சிங்களவன் ஒத்தாசையோட தான் தமிழ்தேசியம் , தமிழர் போராட்டம் என்றெல்லாம் எழுதிகினம்.

என்னவோ உனக்கும் பேப்பே உன் அப்பனுக்கும் பேப்பே மாதிரிதான் எனக்கு படுது

போறவைக்கு ஒரு கரச்சலும் குடுக்காம உள்ள விட்டிட்டு பின்னாலபோய்

அப்பல் நடக்குதாம் போறவை யோசிச்சு போங்கோ

இல்லாட்டி டக்கு மாமாவ பிடிச்சுக்கொண்டு போங்கோ

அவுருக்கும் எப்போ பெரிசா செல்வாக்கு இல்லையாம்

  • கருத்துக்கள உறவுகள்

விமான நிலையத்தில் போய் இறங்கியவுடனே அவர்களின் முழு விலாசம் கேட்கப்படுகிறதாம். <_<

சொல்லி மாளாது யூலை லீவு பெரும் கஸ்டம். சிறீலங்கனில ரிக்கட் இல்லையாம்.

கடத்திறவையும் கப்பம் கேட்கிறவையும் நல்ல வசதி.

தெற்கு இலண்டன் பகுதியில இலவசமா வாற காலை கதிர் பத்திரிகை இலங்கை வங்கியில காச வையுங்கோ இலண்டன் கிளை இலகுவானது எண்டெல்லாம் விளம்பரம் போடுகினம். பெரிய விளம் பரம்.

அந்த காசே கானும் பத்திரிகை நடாத்த.

அப்ப சிங்களவன் ஒத்தாசையோட தான் தமிழ்தேசியம் , தமிழர் போராட்டம் என்றெல்லாம் எழுதிகினம்.

என்னவோ உனக்கும் பேப்பே உன் அப்பனுக்கும் பேப்பே மாதிரிதான் எனக்கு படுது

..... நாங்கள் புலத்தில் வளர்த்து விட்ட ததேயிற்கு இது ஒரு உதாரணம்! ... இதற்கு முன்னரும் காஸ்ரோக்களால் நடாத்தப்பட்ட "ஐங்கரன் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனமும்(ஐ.பி.சி)" உதே கதிதான். ... பாய்ந்து பாய்ந்து கலைஞர் தொல்லைக்காட்சிக்கு அட்வேட்டாம் ... கேட்டால் அவர்கள் மாதா மாத ஐயாயிரம் தருகிறார்கள் என்றார்கள். ..... விலை போகாத பொருளை ... யுத்த நிறுத்த காலத்தில் .... கூறு போட்டு விற்று விட்டார்கள். ஏதாவது மீதி உள்ளதா?????????

  • கருத்துக்கள உறவுகள்

விமான நிலையத்தில் போய் இறங்கியவுடனே அவர்களின் முழு விலாசம் கேட்கப்படுகிறதாம். <_<

வேறு நாட்டுப் பிரஜைகள் என்றால் எடுப்பதற்கு விலாசம் கொடுக்கத்தான் வேண்டும். அது ஹொட்டேல் விலாசமாக இருக்கலாம் அல்லது தனியார் விலாசமாக இருக்கலாம் (இங்கிலாந்திலும் வேறு நாட்டுப் பிரஜைகள் விலாசம் கொடுக்காமல் உள்ளே வரமுடியாது). கட்டுநாயாக்காவில் தமிழருக்கு மட்டும் என்று தனியான விசாரணை எதுவும் இல்லை. சொல்லப்போனால் ஒரு கேள்விகூடக் கேட்பதில்லை!

சொல்லப்போனால் ஒரு கேள்விகூடக் கேட்பதில்லை!

போறவைக்கு ஒரு கரச்சலும் குடுக்காம உள்ள விட்டிட்டு பின்னாலபோய்

அப்பல் நடக்குதாம்

  • கருத்துக்கள உறவுகள்

வேறு நாட்டுப் பிரஜைகள் என்றால் எடுப்பதற்கு விலாசம் கொடுக்கத்தான் வேண்டும். அது ஹொட்டேல் விலாசமாக இருக்கலாம் அல்லது தனியார் விலாசமாக இருக்கலாம் (இங்கிலாந்திலும் வேறு நாட்டுப் பிரஜைகள் விலாசம் கொடுக்காமல் உள்ளே வரமுடியாது). கட்டுநாயாக்காவில் தமிழருக்கு மட்டும் என்று தனியான விசாரணை எதுவும் இல்லை. சொல்லப்போனால் ஒரு கேள்விகூடக் கேட்பதில்லை!

இலங்கை கடவுச் சீட்டு வைத்திருந்த ஒருவரைத் தான் இலங்கை விமான நிலையத்தில் வைத்து எங்கே போகிறாய்...முழு விலாசத்தையையும் தரச் சொல்லி கேட்டார்களாம் ஆனால் அவர் முழு விலாசத்தை கொடுக்காமல் நகரத்தை மட்டும் சொன்னாராம்...நான் நினைக்கிறேன் தனியப் போகிறவர்கள் அல்லது ஏமாந்தவர்க பார்த்துக் கேட்கிறார்களோ தெரியாது.

கடந்த வருடம் இங்கே பாராளமன்றத்தின் முன்பாக நடைபெற்ற போராட்டங்களில் ஒரு நேரம் கூட தலை காட்டாத சில குடும்பங்கள் கோடை விடுமுறைக்கு செல்கிறார்கள், அதை விட அவர்களில் உறவினர்கள் மற்றைய ஐரோப்பிய நாடுகளிலிருந்து அதே நேரம் அங்கே செல்கிறார்கள் பூப் புனித நீராட்டு விழா வைப்பதற்கு போகிறார்களாம். ட்ரான்சிட் விமானம் என்றால் அலுப்பாம் அதனால் நேரா நேரத்துக்கு போய், நேரத்துக்கு திரும்ப வேணுமாம்... சனம்!!!!!!!!! :unsure:

விமான நிலையத்தில் போய் இறங்கியவுடனே அவர்களின் முழு விலாசம் கேட்கப்படுகிறதாம். :unsure:

Embarkation கார்ட்டில இங்க உள்ள முகவரி, அங்க போகும் முகவரி கேட்டுத் தானே இருப்பார்கள்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.