Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகாத்மா காந்தியும் ஒரு நித்தியானந்தா தான்.

Featured Replies

இங்கு விடயம் என்ன என்றால் அவரவர் நம்பிக்கையை சிதைப்பது, மற்றவனின் நம்பிக்கையை கேணைத்தனமாக்குவது பற்றியதொழிய ஒவ்வொருத்தர் பின்புலத்தை ஆராய்ஞ்சு காவல்துறை நற்சாட்சி பத்திரம் கொடுக்கிறது இல்லை. நித்தியானந்தா அவர்களும், மகாத்மா காந்தி அவர்களும் யார் யாருடன் சல்லாபம் செய்தார்கள் என்று ஆராய்வது அல்ல எனது பார்வை.

இவ்வளவு காலமும் நித்தியானந்தா அவர்களது பேச்சை கேட்டவர்கள், அவரை பின்பற்றியவர்கள் ஓர் லூசுக்கூட்டம் எனும் வகையில் நிறுவல் செய்வதற்கு ஊடகங்கள் முயன்று இருக்கின்றன. அதேசமயம் தங்கள் ஊடகங்களுக்கு: (உ+ம்: தொலைக்காட்சி) லட்சோப லட்சம் கோடானுகோடி மக்கள்கூட்டம் அடிமையாய் இருந்தால் அதுபற்றி அவர்களுக்கு கவலை இல்லை. தற்கால ஊடகங்களுக்கு உடனடியாக தேவை பணம், பிரபலம். இதற்காக அவர்கள் எவரையும் துகிலுரிவதற்கு தயாராக உள்ளார்கள். இதற்காக நாக்கை தொங்கப்போட்டுக்கொண்டு திரிகின்றார்கள்.

ஒருவன் ஒரு விசயத்தை கொள்கையை சொன்னால்... முதலில் அவன் அதைப்பின்பற்றுவது பின்பற்றாதுவிடுவது ஒருபுறம் காணப்பட, அதை நேர்த்தியாக தனது வாழ்வில் இறுதிவரை பின்பற்றி வெற்றிபெறுவது வெற்றிபெறாதுவிடுவது ஒருபுறம் காணப்பட.. குறிப்பிட்ட தனிமனிதனின் அந்தரங்க வாழ்வு ஊடகங்களினால் நிர்வாணப்படுத்தப்பட்டு அவனது கருத்துக்கள், சிந்தனைகளில் நம்பிக்கை வைத்தவர்கள் ஓர் லூசுக்கூட்டம் என்று நிறுவல் செய்யப்படும்போதுதான் பிரச்சனை வருகின்றது.

எமக்கு அடிப்படையில் விளங்கவேண்டிய விசயம் எல்லோரும் மனுசர்களே. காலம், சூழ்நிலை காரணமாக ஒருவன் பிரகாசிக்கிறான், மற்றவன் பிரகாசிக்கவில்லை. இங்கு கவனிக்கவேண்டும் பிரகாசம் செய்பவர்கள் எல்லாரும் பிரகாசம் செய்யாதவர்களை விட நல்லவர்கள், வல்லவர்கள் என்று கூறுவதற்கு இல்லை. ஒருவன் மனித சமூகத்தில் அறியப்படுகிறான், மற்றவன் அறியப்படாது போகின்றான்.

இன்னொரு விதத்தில் கூறுவதானால்.. நாம் அறிந்த கெளதம புத்தர், நாம் அறிந்த யேசு கிறீஸ்து ஒருவர்தான். ஆனால்… நாம் அறியாத எத்தனையோ ஞானிகள் உலகத்தில் வாழ்ந்து இருக்கக்கூடும். மனித சமூகத்தின் மத்தியில் அவர்களினால் பிரபலம் அடையாமல் போனதற்கு பல காரணங்கள் காணப்படலாம். மனித சமூகத்தினால் அறியப்படுவதை அவர்கள் விரும்பாதும் கூட விட்டிருக்கலாம்.

ஆனால், இங்கு கவலைக்குரிய விசயம் எமது மனிதமனம் எல்லோரும் ஆற்றல் உள்ளவர்கள், எல்லா மனிதரிலும் ஏதோ திறமை இருக்கின்றது என்பதை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றது. எப்பவும் நாம் அடுத்தவனைவிட சற்று உயர்வானவர்கள் என்று எண்ணிபார்க்கும்போதே எமது மனம் திருப்தி அடைகின்றது. இந்தவகையில்.. யதார்த்தத்தில் உள்ள சில மனிதர்கள் எமது மனங்களினால் அதிமனிதர்கள் ஆக்கப்படுகின்றார்கள்.

சிக்கல் எப்போது வருகின்றது..? அதிமனிதர்கள் என்று ஒன்று இல்லை. எல்லோரும் மனிதர்களே என்று அறியப்படும்போது அதாவது அதிமனிதன் ஒருவனும் எம்மைப்போன்ற மனிதனே என்று அறியப்படும்போது..! எனினும், அப்போதும் மனிதமனம் அதை ஏற்றுக்கொள்ள மறுக்கத்தான் செய்கின்றது.

தற்கால ஊடகங்கள் மக்களின் உளவியலை நன்கு அறிந்துவைத்து… தமது சல்லாபத்திற்காகவும், குறுகிய நோக்கங்களுக்காகவும் மனித மனங்களுக்கு அதிர்ச்சி கொடுக்கக்கூடிய வகையில் நிர்வாண ஆராய்ச்சிகள் செய்கின்றன. நித்தியானந்தா அவர்கள், மற்றும் மகாத்மா காந்தி பற்றிய சங்கதிகளை ஊடகங்களின் குறிப்பிட்ட இந்த நிர்வாண ஆராய்ச்சிகளின் பகுதிகளாகவே நான் பார்க்கின்றேன்.

அடுத்தவன் மனது நோகக்கூடாது.. அடுத்தவன் மனது அதிர்ச்சி அடையக்கூடாது, அவரவர் நம்பிக்கைகள் சிதைக்கப்படக்கூடாது என்பதில் யார் யார் – எந்த எந்த ஊடகங்கள் தற்காலத்தில் சிரத்தை எடுக்கின்றார்கள்? ஒருவருமே இல்லை – ஒன்றுமே இல்லை. எல்லாம் எடுத்தமா, தூக்கினமா, கவிழ்த்தமா என்று போய்க்கொண்டே உள்ளன…!

Edited by மச்சான்

  • Replies 71
  • Views 8.5k
  • Created
  • Last Reply

பனியா காந்தியின் துரோகத்தை மறக்கவும் மாட்டோம்! பார்ப்பன கோட்சேவின் கொலைவெறியை மன்னிக்கவும் மாட்டோம்

கோயில்களில், இந்து மதத்திற்குள் தங்களுக்கான ஆதிக்கத்திற்கு, லாபத்திற்கு ஆபத்து வருகிறது என்றால் பார்ப்பனர்கள் கொலைகூட செய்ய தயங்கமாட்டார்கள் என்பதைதான் காந்தி கொலை நிரூபித்திருக்கிறது.

தனக்கு இணையாக அல்லது தன்னை எதிர்த்து ஒரு பெரிய தலைவர் உருவாவதை காந்தி எப்போதும் விரும்பியதில்லை. அது கட்சிக்கு வெளியேயும் சரி, உள்ளேயும் சரி. பிரிட்டிஷ் அரசை எதிர்த்து போராடிய பகத்சிங் போன்ற புரட்சியாளர்களிடம் மட்டுமல்ல, ஹிட்லர் போன்ற பாசிஸ்டுகளின் உதவியை நாடிய சுபாஷ் சந்திரபோஸ் போன்றவர்களிடமும் கூட எதிராக அல்லது அலட்சிமாகத்தான் நடந்துகொண்டார் காந்தி. டாக்டர் அம்பேத்கருடனான அவரின் மோதல்களில், அவருடைய இந்து கண்ணோட்டம் மிக பெரிய அளவில் பங்காற்றினாலும், ‘தன்னை மீறி, தன்னை நேரடியாக எதிர்த்து ஒரு தலைவர் உருவாகக்கூடாது’ என்கிற காந்தியின் உளவியலும் சம பங்கில் வினையாற்றியிருக்கிறது.

அவர் என்ன நினைக்குறாரோ, அதைத்தான் மற்றவர்கள் செய்யவேண்டும். அல்லது தன்விருப்பத்திற்கு மாறாக எதுவும் நடக்கக்கூடாது என்கிற சத்தியாகிரக சர்வாதிகாரியாகத்தான் காந்தி இந்திய அரசியலை நடத்தியிருக்கிறார். 1946 ல் இருந்து அவரின் செல்வாக்கு காங்கிரசுக்குள்ளேயே சரிய ஆரம்பித்தது. அவர் கட்சியில் இருந்த நேரு, பட்டேல் போன்றவர்களே அவர் பேச்சை உதாசீனப்படுத்தினார்கள். அவர் விருப்பத்திற்கு மாறாகவே அவரின் அரசியல் அவரை சுற்றி, சுற்றி சுழன்றது. தன் செல்வாக்கை நிலைநாட்டுவதற்காக பல்வேறு கோமாளித்தனங்களை செய்தார் காந்தி.

பாகிஸ்தான் பிரிவினையின்போது அதை எதிர்த்தார். ஆனால் அவர் விருப்பத்திற்கு மாறாக நடந்தது. பிறகு பிரிந்த பாகிஸ்தானுக்கு 50 கோடி ரூபாய் தரவேண்டும் என்று வலியுறுத்தினார். அதை நிராகரித்தார் வல்லபாய் பட்டேல். இந்து-முஸ்லீம் கலவரம் கட்டுக்கடங்காமல் போனது. காந்தியை எதிர்த்த காங்கிரஸ் தலைமை பாகிஸ்தானுக்கு எதிராக இருக்கிறது என்பதாலயே அவர் பாகிஸ்தானுக்கு ஆதரவான நிலைபாடு எடுத்தார். அதன் மூலமாக நேரு, வல்லபாய் படேல் போன்றவர்களுக்கு நெருக்கடியை கொடுத்தார்.

இஸ்லாமியர்களை விரோதிகளாக சித்தரித்த பார்ப்பனிய இந்து பயங்கரவாதிகளை எதிர்த்து செயல்படுவதல்ல காந்தியின் நோக்கம். அவரின் தன் முனைப்பு அரசியலின் விளைவாக அவரை அறியாமல் முளைத்த முற்போக்கு கிளை அது. பார்ப்பனிய பயங்கரவாதிகளை எதிர்கொள்வதற்கு சரியான செயல் திட்டம் இல்லாமல், இந்துக் கோயில்களில் இஸ்லாமிய பாங்கு ஒலிப்பது போன்ற கோமாளித்தனங்களை செய்தார். அதில் அவர் நோக்கம் இந்துமதத்தை அவமானப்படுத்தவேண்டும் என்பதல்ல. இந்துமதத்தை அவமானப்படுத்தும், பலவீனப்படுத்தும் எந்தக் காரியத்தையும் மனம் அறிந்து செய்ததில்லை காந்தி.

‘தாழ்த்தப்பட்ட மக்கள் இந்துக்கள் அல்ல’ என்று டாக்டர் அம்பேத்கர் ஆதாரத்துடன் நிரூபித்தபோது, ‘ஹரிஜன்’ என்ற பச்சையான இந்து பெயர் வைத்து தாழ்த்தப்பட்ட மக்கள்தான் உண்மையான இந்துக்கள் என்று இந்தியா முழுக்க உள்ள தாழ்த்தப்பட்ட மக்களை குறிக்கிற ஒற்றைச் சொல்லாகவே ‘ஹரிஜன்’ இந்துச் சொல்லை அவர்கள் மீது திணித்து, மீண்டும் இந்துமதத்திற்குள் அடைத்தார். இந்தியா முழுக்க உள்ள தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ‘ஹரிஜன்’ என்ற சொல் செல்வாக்கு செலுத்திய அளவிற்கு வேறு எந்த சொல்லும் செலுத்தவில்லை. ஜாதி இந்துக்களும் அந்தச் சொல்லையே தாழ்த்தப்பட்ட மக்களை குறிப்பதற்கு பயன்படுத்தினர். பயன்படுத்துகின்றனர்.

தாழ்த்தப்பட்ட மக்களின் மதமாற்றத்தை தடுக்க பெரும் முயற்சி எடுத்த இந்து பார்ப்பன மற்றும் ஆரியசமாஜ்களால் செய்யமுடியாததை காந்தி என்கிற தனிமனிதர் செய்தார்.

“காந்தியிசம் என்பது இந்துயிசத்திற்கும் இந்துயிசத்தின் வறட்டு சூத்திரங்களுக்கும் ஒரு தத்துவ முறையிலான நியாயப்படுத்துதலே” என்பார் அண்ணல் அம்பேத்கர்.

அந்தக் காந்திதான் இந்துக் கோயில்களில் இஸ்லாமிய பாங்கு ஒலிக்கச் செய்தார். அந்தக் காந்தியைத் தான் இந்து பார்ப்பன பயங்கரவாதிகள் கொன்றனர்.

உண்மையில், இந்துக்கோயிலில் இஸ்லாமிய பாங்கு ஒலிப்பது இஸ்லாத்தை அவமானப்படுத்துகிற செயல். பாங்கு ஒலிப்பது என்பதே தொழுகைக்கு அழைப்பதுதான். இந்துக்கோயிலினுள் பாங்கு ஒலித்தால் முஸ்லிம்களை அங்குவந்து தொழுகை நடத்த அழைப்பது போன்றதுதான்.

‘உருவவழிபாடு, இறைவனுக்கு இணைவைப்பது இஸ்லாத்திற்கு எதிரானது’ என்பது முஸ்லிம்களின் நம்பிக்கை. காந்தியின் இந்துக்கோயில் பாங்கு ஒலி, இஸ்லாத்திற்கு எதிரானதுதான். உண்மையில் தங்கள் மதநம்பிக்கைக்கு எதிரானது என்று முஸ்லீம்கள் தான் காந்திமீது வீரோதம் கொண்டிருக்கவேண்டும்.

இஸ்லாத்தை அவமானப்படுத்துவது காந்தியின் நோக்கம் அல்ல. பிரச்சினையை தீர்ப்பதற்கும், ‘இஸ்லாமியர்கள் இந்தியர்கள் தான்’ என்று காந்தி நிறுவுகிறார் என்று காந்தியை இஸ்லாமியர்கள் நம்பினார்கள். சாதாரண இந்து நம்பிக்கை கொண்ட மக்களும் காந்தியின் செயல் நம் மதத்திற்கு எதிரானது அல்ல என்று புரிந்துகொண்டார்கள். இந்து பார்ப்பன அறிவாளிகள் தான் இதை எதிராக நினைத்தார்கள். மதப் புனிதம் கெட்டுப்போய்விடுகிறது என்று பொய்சொன்னார்கள்.

உண்மையில் காந்தியின் கொலை இந்து மதப்புனிதத்திற்காக அல்ல. இந்துக்கோயில்களில் பார்ப்பனிய மேன்மையை காலப்போக்கில் காலி செய்துவிடும் என்பதால்தான். இயல்பாகவே பார்ப்பனர்களைத் தவிர மற்ற இந்துக்கள் இஸ்லாமிய வழிபாட்டுத்தலங்களான மசூதி, தர்கா போன்ற இடங்களில் அங்கு இருக்கும் இஸ்லாமிய மதப்பெரியவரிடம் மந்திரித்து தாயத்து கட்டிக்கொள்வது போன்ற நடவடிக்கைகளை ஒரு இந்து சாமியாரிடம் காட்டும் பக்தியோடும், நம்பிக்கையோடுமே நடந்து கொள்வார்கள்.

இதுபோன்ற மனநிலை கொண்ட ‘இந்து’ மக்களிடம், காந்தியின் ‘இந்துக்கோயில் பாங்கு ஒலி’ நடவடிக்கை பார்ப்பனிய மேன்மையை தகர்ப்பதாக தீவிர இந்து பார்ப்பனர்கள் உணர்ந்ததாலேதான், காந்தி கொலையை அவர்களின் பிரதிநிதியாக இருந்து கோட்சே செய்தான்.

“இந்து மதத்தை அழிக்க முயலும் சக்தியை ஒழித்துவிட்டேன் என்ற மன நிறைவு எனக்கு ஏற்பட்டுள்ளது. இந்தச் செயல் முற்றிலும் இந்து தர்மத்தையும், பகவத் கீதையையும் அடிப்படையாகக் கொண்டதுதான்.” என்று காந்தியை கொன்ற கோட்சே கோர்ட்டில் சொன்னான். இதுதான் இந்து பார்ப்பன மனது.

டாக்டர் அம்பேத்கர் சொல்வார்:

“ஒவ்வொரு பிராமணனும் அவன் வைதிகனாக இருந்தாலும், அவன் புரோகிதனாக இருந்தாலும் அல்லது கிரகஸ்தனாக இருந்தாலும் படித்த அறிவாளியாக இருந்தாலும் அல்லது படிக்காதவனாக இருந்தாலும் பிராமண ஆதிக்கத்தை நிலைநாட்டுவதில் அளவற்ற ஆர்வமும் அக்கறையும் கொண்டவனாக இருக்கிறான்.”

டாக்டர் அம்பேத்கர் சொன்னது எவ்வளவு சரி. காந்தி கொலையை பார்ப்பன கும்பல்தான் செய்தது என்று வரலாற்று சம்பவத்தை நாம் சொன்னால், உடனே நம்மீது பாய்ந்து புடுங்குகிற பார்ப்பனர்கள், காந்தி கொலையை, கோட்சேவை கண்டிப்பத்தில்லை. மாறாக நம்மைதான் கடும் வெறுப்புக் கொண்டு புடுங்குகிறார்கள். விட்டால் கோட்சேவை போல் கொலைகாரனாகவும் மாறுவார்கள்போல.

‘இந்து மதம் புனிதமானது. எந்த மாற்றமும் அதில் செய்யமுடியாதது. மசூதியில் பகவத்கீதையை பாடினால் சும்மா இருப்பாங்களா? காந்தியால் இந்துமதப் புனிதம் கெட்டுபோனது. அதனால்தான் கோட்சே கொன்றார்’ என்று வாதிடுகிறார்கள் பார்ப்பன அறிவாளிகள். அப்படியா? இந்து மதம் புனிதமானதா? எந்த மாற்றத்திற்கும் உள்ளாகாததா?

இந்தவாதம் பச்சை பொய் என்கிறார் டாக்டர் அம்பேத்கர்:

“பிராமணர்கள் ஒரு கருத்தைப் பரப்பி வந்திருக்கிறார்கள். இந்து மதம் சனாதனமானது, அதாவது மாற்றம் இல்லாதது என்பதே அந்தக் கருத்து. பல அய்ரோப்பிய அறிஞர்களும் இந்தக் கருத்தை வலுப்படுத்தும் வகையில் இந்து நாகரிகம் மாற்றத்துக்கு உள்ளாகாமல் ஒரே நிலையில் உள்ளது என்று கூறியிருக்கிறார்கள்.

இந்தக் கருத்து உண்மைக்குப் புறம்பானது என்பதையும், இந்து சமூகம் காலத்துக்குக் காலம் மாறி வந்துள்ளது மட்டுமின்றி, பல சமயங்களில் இந்த மாற்றம் அடிப்படைக் கூறுகளையே மாற்றுவதாக இருந்தது” என்கிறார்.

புத்தரின் எழுச்சியால் தோல்வியுற்ற பார்ப்பனர்கள், தங்களின் வேதக் கடவுள்களை கும்பிடுவதை கைவிட்டார்கள். புத்தரின் இயக்கத்தால் வேதக் கடவுள்களுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு அற்று போனதே அதற்கு காரணம். அதனால்தான் தங்களால் உயர்வாக பேசப்பட்ட கடவுள்களை குறித்தே மிக கேவலமான கதைகளை அவர்களே பரப்பினார்கள். ‘பிரம்மா தன் மகளுடன் உறவு கொண்டார்’ என்றும் ‘இந்திரன் பெண் பித்தன். பிறர் மனைவியை அதுவும் மரியாதைக்குரிய ரிஷி பத்தினிகளோடு கள்ளஉறவு வைத்திருந்தான்’ என்றும் எழுதி தங்களின் கடவுளை கைவிடுதற்கான காரணத்தை உண்டாக்கினார்கள் என்ற உண்மையை டாக்டர் அம்பேத்கர் அம்பலப்படுத்தினார்.

“எங்கே இந்திரன், எங்கே வருணன், எங்கே பிரம்மா, எங்கே மித்ரன், வேதங்களில் கூறப்படும் இந்தக் கடவுளர்கள் எல்லோரும் எங்கே என்று அவர்களை (பிராமணர்களை) ஒருவர் கேட்கலாம். அவர்களெல்லாம் மறைந்து போனார்கள். அது ஏன்? இந்திரனையும் வருணைனையும் பிரம்மாவையும் வழிபடுவது லாபம் தருவதாக இல்லாமல் போனதே இதற்குக் காரணம். பிராமணர்கள் வேதக் கடவுளர்களைக் கைவிட்டது மட்டுமின்றி, சில இடங்களில் முஸ்லீம் பீர்களை வணங்குவோராகக் கூட மாறியிருக்கிறார்கள்.

இது தொடர்பாக, மிக வெட்ட வெளிச்சமாகத் தெரிகின்ற ஒரு உதாரணத்தை குறிப்பிடலாம்.

பம்பாய்க்கு அருகே கல்யாண் என்ற இடத்தில் ஒரு குன்றின் உச்சியில் பாவா மலங்க்ஷா என்ற பீரின் பிரபலமான தர்கா உள்ளது. அது மிகவும் புகழ்பெற்ற தர்கா. அங்கே ஆண்டு தோறும் உர்ஸ விழா நடப்பதும், அப்போது காணிக்கைகள் செலுத்தப்படுவதும் வழக்கம். அந்த தர்காவில் புரோகிதராக இருப்பவர் ஒரு பிராமணர்.

அவர் முஸ்லீம் உடை அணிந்து, தர்காவுக்கு அருகே அமர்ந்து கொண்டு, அங்கே செலுத்தப்படும் காணிக்கைகளைப் பெற்றுக் கொள்கிறார். இதை அவர் பணத்துக்காகச் செய்கிறார். மதமோ, மதம் இல்லையோ, பிராமணருக்கு வேண்டியது தட்சணைதான். உண்மையில் பிராமணர்கள் மதத்தை ஒரு வியாபாரப் பொருளாக்கி விட்டார்கள்.”

இந்து மதத்திற்கு புனிதம் என்று ஒன்று கிடையாது. அவர்கள் எல்லாவற்றையும் மாற்றி இருக்கிறார்கள். மாறாது என்கிற வார்த்தையை தவிர மற்றவை மாறிப்போகும் என்கிற மார்க்கிய விஞ்ஞானத்திற்கு பொருத்தமாக ஏகப்பட்ட மாற்றங்களை இந்து மதம் செய்திருக்கிறது என்று டாக்டர் அம்பேத்கர் அம்பலப்படுத்தியிருக்கிறார்.

ஆக, இந்து மத புனிதத்திற்காக அல்ல காந்தி கொலை. பார்ப்பன மேலாதிக்கத்தை பாதுக்காப்பதற்கே.

காந்தியின் துரோகம் தெரியவேண்டும் என்றால், அம்பேத்கர், பகத்சிங் கண்களால் பார்க்க வேண்டும்.

பார்ப்பன பயங்கரவாதம் புரியவேணடு்ம் என்றால், காந்தியின் கொலையின் ஊடாக பார்க்க வேண்டும்.

காந்தியின் துரோகத்தை மறக்கவும் மாட்டோம்.

காந்தியை கொலைசெய்த பார்ப்பன பயங்கரவாதத்தை மன்னிக்கவும் மாட்டோம்.

வாய்ப்புக்கு நன்றி. வணக்கம்.

23-1-2010 அன்று சென்னை செனாய்நகரில் ‘காந்தி படுகொலை நினைவுநாளும், பெரியார் திராவிடர் கழகத் தோழர் வேலுவை சேத்துப்பட்டு போலிசார் பொய் வழக்குப்போட்டு துன்புறுத்தியதை கண்டித்தும்’ பெரியார் திராவிடர் கழகம் சார்பில் நடந்த தெருமுனை கூட்டத்தில் நான் பேசியதின் தொகுப்பு.

மேடையில் பேசியசெய்திகளோடு, புதிய செய்திகளையும் சேர்த்து வெளி்யிட்டு இருக்கிறேன்.

http://mathimaran.wordpress.com/2010/02/08/artical-278/

காந்தியின் உறவுக்காறப் பெண்களுடனான சல்லாபம்.

காகத்துக்கு கனவிலும் ஏதோ கிண்டும் எண்ணமாம் :unsure::unsure:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இங்கு விடயம் என்ன என்றால் அவரவர் நம்பிக்கையை சிதைப்பது, மற்றவனின் நம்பிக்கையை கேணைத்தனமாக்குவது பற்றியதொழிய ஒவ்வொருத்தர் பின்புலத்தை ஆராய்ஞ்சு காவல்துறை நற்சாட்சி பத்திரம் கொடுக்கிறது இல்லை. நித்தியானந்தா அவர்களும், மகாத்மா காந்தி அவர்களும் யார் யாருடன் சல்லாபம் செய்தார்கள் என்று ஆராய்வது அல்ல எனது பார்வை.

அடுத்தவன் மனது நோகக்கூடாது.. அடுத்தவன் மனது அதிர்ச்சி அடையக்கூடாது, அவரவர் நம்பிக்கைகள் சிதைக்கப்படக்கூடாது என்பதில் யார் யார் – எந்த எந்த ஊடகங்கள் தற்காலத்தில் சிரத்தை எடுக்கின்றார்கள்? ஒருவருமே இல்லை – ஒன்றுமே இல்லை. எல்லாம் எடுத்தமா, தூக்கினமா, கவிழ்த்தமா என்று போய்க்கொண்டே உள்ளன…!

ஆண்டாண்டு காலமாக உண்மைகள் மறைக்கப்பட்டு ஒருவர் மகாத்மாவாக இனங்காட்டப்படுதலை நிராகரிக்கும் வகையில் ஆதாரங்கள் கிடைக்கும் போது அதனையும் மறைத்து வைத்து அவரை மகாத்மாவாகவே போலியாக சித்தரிப்பதுதான் மற்றவர்களுக்கு மகிழ்ச்சி என்று வாழ்வது சிறப்பா.. உண்மைகளை உணர வைத்து உண்மையான அவரின் மக்கள் பணிக்கு மட்டும் மக்களை மதிப்பளிக்கக் கோருவது நன்றா.

போலிகளை காட்டியபடியால் தான் உண்மைகள் மறைக்கப்பட்ட படியால் தான் இன்று மகாத்மா கேள்விக்குறியாகி நிற்கிறார்..! உண்மைகளை ஏற்றுக் கொண்டு அதன்படி பயணித்திருந்தால் ஏனிந்த திண்டாட்டம்...! ஊடகங்கள் போலிகளை இனங்காட்டவும் தயங்கா.. உண்மைகளை சொல்லவும் தயங்கா..! அதற்காக ஊடகங்கள் தவறாக நடப்பதில்லை என்று அர்த்தமில்லை. ஆனால் ஒருவர் தவறாக மக்கள் முன் இனங்காட்டப்பட்டு மகாத்மா ஆக்கப்படுவது நியாயமில்லை. அதுமட்டுமன்றி அவரை தொடர்ந்து மற்றவர்கள் மனம் நோகிறார்கள் என்பதற்காக மகாத்மா வாகவும் அங்கீகரித்து நிற்க முடியாது.

நெற்றிக்கண்ணை திறப்பினும் குற்றம் குற்றமே.. என்பதும் அதே சமூகம் தான் என்பதையும் புரிந்து கொள்ளுங்கள். சமானியனுக்கு ஒரு சட்டம் மகாத்மாவிற்கு இன்னொரு சட்டமா..???! :):D

Edited by nedukkalapoovan

இரண்டாம் உலக யுத்தத்தின் பின் பிரித்தானியர் மிகவும் நலிவடைந்திருந்தார்கள். அதனால்தான் அவர்களின் கட்டுப்பாட்டிற்குள் இருந்த நாடுகளிற்கு (இலங்கை உட்பட) சுதந்திரம் கொடுத்தார்கள். காந்தியின் போராட்டத்திற்கு பயந்தது அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

.

இரண்டாம் உலக யுத்தத்தின் பின் பிரித்தானியர் மிகவும் நலிவடைந்திருந்தார்கள். அதனால்தான் அவர்களின் கட்டுப்பாட்டிற்குள் இருந்த நாடுகளிற்கு (இலங்கை உட்பட) சுதந்திரம் கொடுத்தார்கள். காந்தியின் போராட்டத்திற்கு பயந்தது அல்ல.

அப்ப.... உப்புச் சத்தியாக்கிரகம் இருந்ததாலை சுதந்திரம் கிடைக்கவில்லையா?

.

.

அப்ப.... உப்புச் சத்தியாக்கிரகம் இருந்ததாலை சுதந்திரம் கிடைக்கவில்லையா?

.

உப்பு சத்தியாகிரகம் நடந்த தென்னகங்களிலை காந்திக்கு பின்னாலை போனவர்களை விட நேதாயின் படையில் இணைந்தவர்கள் அதிகம்...

.

அப்ப.... உப்புச் சத்தியாக்கிரகம் இருந்ததாலை சுதந்திரம் கிடைக்கவில்லையா?

.

உப்பு சத்தியாகிரகம், மப்பு சத்தியாகிரகம் என்பதெல்லாம் சும்மா காகம் இருக்க பணம் பழம் விழுந்த கதை.

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டாம் உலக யுத்தத்தின் பின் பிரித்தானியர் மிகவும் நலிவடைந்திருந்தார்கள். அதனால்தான் அவர்களின் கட்டுப்பாட்டிற்குள் இருந்த நாடுகளிற்கு (இலங்கை உட்பட) சுதந்திரம் கொடுத்தார்கள். காந்தியின் போராட்டத்திற்கு பயந்தது அல்ல.

இதுதான் உண்மை. சமீபத்தில் இரண்டாம் உலகப்போர் பற்றிய ஒரு விவரணம் நேசநாட்டுப் படைகள் எந்த அளவுக்கு அழிவுகளைச் சந்தித்தன என்பதையும், அந்த நாடுகள் எந்த அளவுக்குப் போரினால் வலுவிழந்து போயிருந்தன என்பதையும் விபரித்தது.

இப்படியான ஒரு நிலையில், இந்தியா பாகிஸ்தான், இலங்கை போன்ற நாடுகளைக் கட்டி மேய்க்க முடியாமல்தான் இங்கிலாந்து வெளியேறியது. அவ்வாறு வெளியேறியமைக்கு விடுதலை எனப் பெயரிட்டு அதற்கு காந்தியை முழுமுதல் காரணமாக முன்னிறுத்தி ஒரு தேசியம் வளர்த்து எடுக்கப்பட்டது. :)

காந்தி அவர்கள் இதே அகிம்சை முறையை தென்னாபிரிக்காவில் கையாண்டபோது அவர் வேறு விதமாகக் கையாளப்பட்டார். :D தென்னாபிரிக்காவில் வேகாதது இந்தியாவில் வேகியது என்பது நம்பும்படி இல்லை. :huh:

நெடுக்கு, இந்தவிசயத்தில் எனது பார்வைக்கோணம் வேறு. தவிர, உங்கள் பார்வையின்படி மகாத்மா காந்தி மகாத்மா என்று கூறுவதற்கு அருகதை அற்றவர் என்கின்ற கருத்துடன் உடன்படுகின்றேன் என்றும் இல்லை.

இந்த பின்புலம் ஆராய்தல், நற்சாட்சி பத்திரம் கொடுத்தல், நிர்வாண ஆராய்ச்சி பற்றி ஏற்கனவே கூறிவிட்டேன். அதற்கு நீங்கள் முதலில் உங்களை சுயபரிசோதனை செய்துகொள்ளுங்கள். இதற்கு நீங்கள் தயாராக இருக்கிறீங்களா? இல்லையே. சுயபரிசோதனை செய்து உண்மைகளை ஏற்றுக் கொண்டு அதன்படி பயணித்திருந்தால் ஏனிந்த திண்டாட்டம்...?. இது நம்மவர்க்கும் நிச்சயமாக மிகநன்கு பொருந்தும். ஊடகங்கள் ஊடக தர்மத்துடன் செயற்படுகின்றன என்பது தற்கால ஊடகங்களிற்கு நிச்சயம் பொருந்தாது. தற்கால ஊடகங்களில் ஊடகவிபச்சாரம் மாத்திரமே அதிகளவில் கோலோச்சுகின்றது.

மருதங்கேணி, உங்கள் கீழுள்ள கருத்துக்களில் உள்ள பலவிசயங்களுடன் எனக்கும் உடன்பாடே. சமயம் வாய்க்கும்போது இதுபற்றி விரிவாக எனது கருத்தை கூறுகின்றேன்.

ஜேசு ஒரு போராளி..........

அன்பால் எதையும் சாதிக்கலாம் வன்முறை மென்மேலும் வன்முறையையே கட்டவிழ்த்துவிடும் என்று முழுமையாக நம்பியவர். ஆக வன்முறைகளிடம் தன்னை முழுமையாக அர்பணித்தார். எனது மரணமும் எனது கொள்கைக்கு சாட்டசியாகட்டும் என்று எண்ணினார் அதற்காவே சித்திரவதைகளின் உச்சத்திற்கும் பணிவோடு தனது உடலை கொடுத்தார்.... சிலுவையை சுமந்தார். மற்றையபடி அவருடைய தனிபட்ட வாழ்கை பற்றியவையில் எவ்வளவு உண்மைகள் இருக்கினற்து என்பது சந்தேகமானதே. சுமார் 2000 வருடங்களுக்கு முன்பு நடந்தைவைகளை எவ்வளவு துல்லியமாக மாசுபடாமல் அடுத்தடுத்த சந்ததிகளிடம் ஒப்படைக்கலாம் என்பது கேள்விகுறியானது.

தவிர ஜேசு கடவுளின் தூதுவரா என்றால்? அவரை தூதுவராக அனுப்புவதற்கு முதலில் ஒரு கடவுள் இருந்தாக வேண்டும். கடவுளே மனிதனை படைத்தான் என்றார்கள். குரங்கில் இருந்து மனிதன் வந்தான் என்பது நிருபணமாக நிருபிக்கபட்டாலும் அதை கடவுளின் பீதியால் ஏற்றுகொள்ள மறுக்கின்றார்கள். ஒரு வேளை கடவுள் ஒரு உயிரினத்தை படைத்தார் பின்பு அந்த உயிரினத்தில் இருந்து எல்லாம் விருட்சமடையட்டும் என்று எண்ணினார் என்ற கருத்தோடாவது கடவுளைபற்றி ஆய்வு செய்யவதற்கு என்றாலும் முயற்சி செய்யலாம்.

ஆனால் சைவசமயம் கல்லாய்.... மண்ணாய்.... பேயாய்... மரங்களாய்..... கனங்களாய்..... மனிதனாய். என்று சொன்னாலும் தங்களில் ஒரு குறிப்பிட்ட பகுதியினரை கடவுள் உயர்ஜாதியாக படைத்தாராம் பின்பு இவர்களுக்கு அடிமைகளாகவும் கீழ்ஜாதிகரராகவும் சிலரைபடைத்தாராம் என்கின்றார்கள்.

நான் இன்னமும் விடை தேடிகொண்டிருக்கும் கேள்வி.... " எல்லாவற்றையும் கடவுள் படைக்கு முன்பு.... கடவுள் எவ்வாறு தோன்றினார்?" ஆக கடவுள் தோன்றுவதற்கு ஒரு உயிர்ப்பி இருந்திருக்கிறது என்று ஏற்றுகொள்ளும் பலரால் ஆதேபோல் இன்னமும் ஒன்று தோன்றுவதற்கான சாத்தியத்தை ஏற்றுகொள்ள முடியவில்லை.

ஆக பனை மரம் இல்லாத இடங்களில் தென்னை மட்டுமே உள்ளது உலகில் என்கிறார்கள். தென்னையில்லாத இடங்களில் பனைமட்டமே உள்ளமு என்கிறார்கள். இரண்டும் உள்ள இடத்திற்கு வாருங்கள் என்றால்....??? வரவும்மாட்டார்கள்.

ஆக ஜேசு கடவுளாகவும் புனிதராகவும் மனிதனால்தான் தோற்றுவிக்கபட்டார் என்பதே எனது நிலைபாடு. ஆனால் ஜேசு ஒரு போராளி என்பதில் எனக்கு அவரிடம் மிகுந்த அன்பும் பணிவும் எப்போதும் உண்டு. ஜேசுவை வணங்குவதில் எனக்கு சம்மதமே ஆனால் அவர் கடவுள் என்பதில் எனக்கு சந்தேகம்தான்.

Edited by மச்சான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு, இந்தவிசயத்தில் எனது பார்வைக்கோணம் வேறு. தவிர, உங்கள் பார்வையின்படி மகாத்மா காந்தி மகாத்மா என்று கூறுவதற்கு அருகதை அற்றவர் என்கின்ற கருத்துடன் உடன்படுகின்றேன் என்றும் இல்லை.

இந்த பின்புலம் ஆராய்தல், நற்சாட்சி பத்திரம் கொடுத்தல், நிர்வாண ஆராய்ச்சி பற்றி ஏற்கனவே கூறிவிட்டேன். அதற்கு நீங்கள் முதலில் உங்களை சுயபரிசோதனை செய்துகொள்ளுங்கள். இதற்கு நீங்கள் தயாராக இருக்கிறீங்களா? இல்லையே. சுயபரிசோதனை செய்து உண்மைகளை ஏற்றுக் கொண்டு அதன்படி பயணித்திருந்தால் ஏனிந்த திண்டாட்டம்...?. இது நம்மவர்க்கும் நிச்சயமாக மிகநன்கு பொருந்தும். ஊடகங்கள் ஊடக தர்மத்துடன் செயற்படுகின்றன என்பது தற்கால ஊடகங்களிற்கு நிச்சயம் பொருந்தாது. தற்கால ஊடகங்களில் ஊடகவிபச்சாரம் மாத்திரமே அதிகளவில் கோலோச்சுகின்றது.

நான் எனது கருத்தை சொல்லப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் முன்வைக்கிறேன். காந்தியை மகாத்மா என்று ஏற்கும் நிலையில் நானில்லை. நீங்கள் அப்படியான நிலையில் இல்லாது இருக்கலாம். அது உங்களோடு அமைந்த விளங்களோடு பொருந்தியது. அதில் நான் செல்வாக்குச் செய்ய முடியாது. ஆனால் எனது நிலைப்பாட்டிற்கான காரணங்களை என்னால் முன்வைக்க முடிவது போல் உங்களால் உங்கள் நிலைப்பாடு குறித்து மாற்றுக் கேள்விகளுக்கு அப்பால் காரணங்களை முன் வைக்க முடிந்தால் அதையும் வரவேற்பேன்.

நான் என்னை சுயபரிசோதனை செய்து கொள்வதால் இந்தச் சமூகத்திற்கு என்ன பயன் கிடைத்துவிடும். நான் காந்தியைப் போல.. மகாத்மா என்று குறியிடப்பட்டவனோ அல்லது எனது வழிகாட்டலின் கீழ் ஒரு தேசியத்தை வளர்த்து வைத்திருப்பவனோ அல்ல. அப்படி இருந்தும் சுயபரிசோதனை என்று வந்தால் காந்தியை விட பல மடங்கு தனிமனித ஒழுக்கத்தை காந்தியை விட 2/3 மடங்கு வயது குறைந்த நான் நிரூபிக்கலாம். ஆனால் அதன் மூலம் இந்தச் சமூகம் எனக்கு அளிக்க இருக்கும் எதனையும் நான் ஏற்கப் போவதில்லை. ஏனெனில்.. இந்தச் சமூகத்தை முதலில் சீர்திருத்த வேண்டும். அதற்கு காந்தி போன்ற போலி மகாத்மாக்களும் தடையாகவே இருக்கின்றனர். :)

Edited by nedukkalapoovan

மகாத்மாவை கேலி செய்தது மிகவும் வருத்தத்திற்குரியது . நான் என்னைத்தானே வருந்திக்கொள்கிறேன். ஏனெனில் இங்கு நான் சொல்ல வந்த சில கருத்துகளை வேறொருவர் சொல்லிவிட்டார். மேலும் இது எனக்கு தேவையில்லாத செய்தியாக படுகிறது.

போங்கய்யா போயி வேலைய பாருங்க

  • கருத்துக்கள உறவுகள்

என்னைப் பொறுத்த மட்டில் காந்தி நான்கு சுவருக்குள் என்ன செய்தார் என்பதை விட வெளியே மக்களுக்காக என்ன செய்தார் என்பதைக் கருத்தில் கொள்வதே மேல்.

அவருக்கு அளிக்கப்பட்ட மகாத்மா என்ற பட்டம் அவருடைய விடுதலைப் போராட்டத்தை முன் நிறுத்தியே அளிக்கப்பட்டுள்ளது.

காந்தியினுடைய அகிம்சைப் போராட்டம் மட்டும் தான் இந்தியாவிற்குச் சுதந்திரம் கிடைத்ததற்கான காரணம் என்று நான் வாதாட விரும்பவில்லை.

ஆனாலும் ஒரு தனி மனிதனாக கோடிக்கணக்கான மக்களைத் தன் பின்னால் அணிவகுக்கச் செய்து வெள்ளையரை நாட்டை விட்டு வெளியேற்றுவதற்கு அவர் செய்த போராட்டங்கள் வரலாற்றில் இடம்பெற்று விட்டது.

அவருடைய மேல் நாட்டு ஆடைப் புறக்கணிப்புப் போராட்டங்கள் வெள்ளையரைத் திகைக்க வைத்த போராட்டம்.

சுதந்திரம் கிடைத்த பின்னர் கூட ஜின்னாவின் கோரிக்கைக்கு மதிப்பளித்து முஸ்லீம்களுக்கு நாட்டைக் கொடுத்துச் சுதந்திரப் போராட்டத்தின் வரவிலக்கணத்தையே மாற்றியவர்.

காந்தியின் அகிம்சையை முன் நிறுத்தி அதன் முகமூடிக்குள் ஒளிந்திருக்கும் தற்கால இந்தியாவின் செய்ற்பாடுகள் கண்டிக்கப்பட வேண்டியவை.

தனது சுயசரிதையில் தான் விட்ட பிழைகளை ஒளிக்காமல் வெளியுலகிற்கு அறியத்தந்த போதே அவர் உண்மையான பூரணமான மனிதனாகத் தன்னை உணர்ந்திருக்கின்றார்.

"மகாத்மா" என்ற கௌரவம் இதுவரை வேறு யாருக்கும் இவ்வுலகில் அளிக்கப்படவில்லை என்பதே காந்தியின் தேசத் தொண்டுக்கு அவருக்குக் கிடைத்த கௌரவம்.

வாத்தியார்

................

Edited by vathiyar

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தனது சுயசரிதையில் தான் விட்ட பிழைகளை ஒளிக்காமல் வெளியுலகிற்கு அறியத்தந்த போதே அவர் உண்மையான பூரணமான மனிதனாகத் தன்னை உணர்ந்திருக்கின்றார்.

வாத்தியார்

................

காந்தி ஒளிக்காமல் சொன்னாரா அல்லது மற்றவர்களுக்கு தெரிய வந்ததை மட்டும் சொல்லி தப்பித்துக் கொண்டாரா என்ற கேள்வியும் இருக்கிறது. இந்தக் கட்டுரையே அதனடிப்படையில் தான் எழுகிறது. தனி மனித ஒழுக்கத்தோடு இல்லாத ஒருவர் மகாத்மாவாக முடியாது.

காந்தியை விட பல பேர் தனிமனித ஒழுக்கத்தோடு நாட்டின் விடுதலைக்காகவும் போராடி உள்ளனர். அவர்கள் தான் இவரை விட மகாத்மா என்ற நிலைக்குரியவர்கள்..!

எமக்குள்ளேயே திலீபன் அண்ணா போன்றவர்கள்.. செய்த தியாகங்கள் மிக உன்னதமானவை. அவர்களிற்கு எவரும் மகாத்மா என்ற அந்தஸ்தை அளிக்க முடியாமல் போனது ஏன். ஆட்டுக்குடல் பொடி.. உண்ணா விரதம் இருந்து செத்துட்டான் என்ற பழிப்புக்களை இந்திய தேசம் தந்த போது.. நீங்கள் வலியை உணர்ந்திருக்கிறீர்களா..???!

இன்றும் கூட திலீபனை இந்தியா அகிம்சையின் வடிவமாக ஏற்றுக்கொள்ளவில்லை..! ஏன் அவருக்கு மகாத்மாவாக முடியாது..???! அவருக்கு காந்தியை விட அதற்கு அதிக தகமை உண்டு. :):D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

தனது சுயசரிதையில் தான் விட்ட பிழைகளை ஒளிக்காமல் வெளியுலகிற்கு அறியத்தந்த போதே அவர் உண்மையான பூரணமான மனிதனாகத் தன்னை உணர்ந்திருக்கின்றார்.

"மகாத்மா" என்ற கௌரவம் இதுவரை வேறு யாருக்கும் இவ்வுலகில் அளிக்கப்படவில்லை என்பதே காந்தியின் தேசத் தொண்டுக்கு அவருக்குக் கிடைத்த கௌரவம்.

வாத்தியார்

................

ஆமென்

  • கருத்துக்கள உறவுகள்

மகாத்மாவை கேலி செய்தது மிகவும் வருத்தத்திற்குரியது . நான் என்னைத்தானே வருந்திக்கொள்கிறேன்.

வேறு ஒருவரை தங்கள் தலைவர் என்று எழுதியதாக ஞாபகம்

அவர் இங்கு மாசுபடுத்தப்பட்டுள்ளார். தங்களின் கண்ணில் அது படவே இல்லை.

அதாவது தங்கள் இருப்பிடம் இடம் கொடுக்கவில்லை

இங்கு எழுதும் பலரின் கருத்துகள் விரக்தியின் பிரதிபலிப்புகளே.சும்மா ஒரு கதைக்கு இவர்களை ஒப்பிட்டு எழுதலாமே ஒழிய இவர்களுக்குள் இருக்கும் இடைவெளி மலைக்கும் மடுவிற்குமிடையிலானது.

உண்மையெதுவாயினும் ஒரு மண்டேலா,ஒபாமா போன்றவர்களின் முன் மாதிரியான காந்தியை எமது போராட்டதில் எவருடனுமே ஒப்பிடமுடியாது.எம்மவர்களுக்கென பல தனித்துவ தன்மைகள் உண்டு அது வேறுவிடயம்.

எங்களுடன் கிரிக்கெட் விளயாடும் ஒரு நண்பனை நாங்கள் நீ தண்டூல்கரை விட நல்லா பட்டிங் செய்கின்றாய் என்போம்.அது சும்மா ஒரு கதைக்கு சொல்வது அப்படித்தான் இதுவும்.

காந்தியைப் பற்றி பல வேறுபட்ட விமர்சனங்கள் இருந்தாலும் அவற்றையெல்லாம் தாண்டி அவர் மகாத்மா ஆகிவிட்டார்.இனி அதை எவராலும் ஒன்றும் செய்ய முடியாது.

நான் கூட வாசித்திருக்கின்றேன் "எளிமையாக வாழ்வதற்காக பல லட்சங்களை செலவளித்தவர் காந்தி என்று".ஆட்டுப் பால் தான் காந்தி அருந்துவார் என்பதற்காக போகுமிடமெல்லாம் ஆடுகளையும் கொண்டு செல்வர்களாம்.

  • கருத்துக்கள உறவுகள்

மகாத்மா காந்தியும் ஒரு சாதாரண மனிதன்தானே

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மகாத்மா காந்தியும் ஒரு சாதாரண மனிதன்தானே

அதுதான் சாதாரணமானவருக்கு ஏன் மகாத்மா என்ற அடைமொழி..!!! :)

  • கருத்துக்கள உறவுகள்

எனக்குத் தெரிந்த ஒரு வயதான(85)இன்னும் என் ஊரில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்.

பிறந்ததிலிருந்து புலால் உண்பதில்லை.

மது அருந்துவதில்லை.

திருமணம் முடிக்கவில்லை.

எந்த நேரமும் திருவாசகம் படித்துக் கொண்டிருப்பார்.

தனது உணவைத் தானே சமைத்துச் சாப்பிடுவார்.

எந்தவித கெட்ட பழக்கமும்......

ஆனால்

உறவினர் வீட்டில் கூட நீர் அருந்தமாட்டார்

யாரும் அவர் வீட்டிற்குள் குளிக்காமல் செல்ல முடியாது.

கடையில் வாங்கிய பொருட்களைக் கூட வாசலில் வைத்து நீர் தெளித்துத் தான் உள்ளே கொண்டு செல்வார்.

படிக்காதவர்களை தன்னுடன் கிட்டவும் அணுக விடமாட்டார்

அக்கப் பக்கம் என்ன நடந்தாலும் இவருக்கு ஒன்றும் கேட்காது

இப்படிப் பல பல குணதிசயங்கள்.

மனித ஒழுக்கங்கள.

உதாரண புருசர்.

இவ்வளவு இருந்தும் நாட்டுக்கோ மக்களுக்கோ ஒன்றுமே செய்யவில்லை.

இவரை எப்படி அழைக்கலாம்

வாத்தியார்

...............

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இப்படிப் பல பல குணதிசயங்கள்.

மனித ஒழுக்கங்கள.

உதாரண புருசர்.

இவ்வளவு இருந்தும் நாட்டுக்கோ மக்களுக்கோ ஒன்றுமே செய்யவில்லை.

இவரை எப்படி அழைக்கலாம்

வாத்தியார்

...............

நல்ல மனிதர் என்று அழைக்கலாம். ஆனால் காந்தி நிச்சயமாக மகாத்மா என்றழைக்க தகுதியுடையவர் அல்ல..! :)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா......

நாளைக்கு வாறன் :):D:huh:

வாத்தியார்

................

  • கருத்துக்கள உறவுகள்

எனக்குத் தெரிந்த ஒரு வயதான(85)இன்னும் என் ஊரில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்.

பிறந்ததிலிருந்து புலால் உண்பதில்லை.

மது அருந்துவதில்லை.

திருமணம் முடிக்கவில்லை.

எந்த நேரமும் திருவாசகம் படித்துக் கொண்டிருப்பார்.

தனது உணவைத் தானே சமைத்துச் சாப்பிடுவார்.

எந்தவித கெட்ட பழக்கமும்......

ஆனால்

உறவினர் வீட்டில் கூட நீர் அருந்தமாட்டார்

யாரும் அவர் வீட்டிற்குள் குளிக்காமல் செல்ல முடியாது.

கடையில் வாங்கிய பொருட்களைக் கூட வாசலில் வைத்து நீர் தெளித்துத் தான் உள்ளே கொண்டு செல்வார்.

படிக்காதவர்களை தன்னுடன் கிட்டவும் அணுக விடமாட்டார்

அக்கப் பக்கம் என்ன நடந்தாலும் இவருக்கு ஒன்றும் கேட்காது

இப்படிப் பல பல குணதிசயங்கள்.

மனித ஒழுக்கங்கள.

உதாரண புருசர்.

இவ்வளவு இருந்தும் நாட்டுக்கோ மக்களுக்கோ ஒன்றுமே செய்யவில்லை.

இவரை எப்படி அழைக்கலாம்

வாத்தியார்

...............

அவருக்கு பெற்றோர் இட்ட பெயரை கொண்டே அவரை அழைக்கலாம்....

நீங்களே நம்பமாட்டீர்கள்........... ஆனால் அது ஒரு மனநோய்.

வெளிநாடுகளில் பலருக்கு அது உண்டு. நல்ல கைக்காலாஜிஸ்ட்டுகளிடம் சென்றால் மாறுவதற்கு இடமுண்டு.

பிரபல்யமான பலருக்கே இந்த நோய் உண்டு. இதுவும் ஒருவித வ்போபியா வகை மனநோய்தான்.

காகத்துக்கு கனவிலும் ஏதோ கிண்டும் எண்ணமாம் :):D

ஆறு அறிவு இல்லாத காகமே கனவிலலேதான் அதை கிண்டுது.

ஆறறிவு உள்ள (மனிதவடிவில் உள்ளவர்களுக்கு ஆறுஅறிவு என்று சொல்லுறாங்கோ) நீங்கள் சிங்களவனிடம் அதைதானே காலம் காலமாக கிண்டுறீங்கள்...........

அதுதான் புரியமாட்டேங்குது,

  • கருத்துக்கள உறவுகள்

என்னைப் பொறுத்த மட்டில் காந்தி நான்கு சுவருக்குள் என்ன செய்தார் என்பதை விட வெளியே மக்களுக்காக என்ன செய்தார் என்பதைக் கருத்தில் கொள்வதே மேல்.

அவருக்கு அளிக்கப்பட்ட மகாத்மா என்ற பட்டம் அவருடைய விடுதலைப் போராட்டத்தை முன் நிறுத்தியே அளிக்கப்பட்டுள்ளது.

காந்தியினுடைய அகிம்சைப் போராட்டம் மட்டும் தான் இந்தியாவிற்குச் சுதந்திரம் கிடைத்ததற்கான காரணம் என்று நான் வாதாட விரும்பவில்லை.

ஆனாலும் ஒரு தனி மனிதனாக கோடிக்கணக்கான மக்களைத் தன் பின்னால் அணிவகுக்கச் செய்து வெள்ளையரை நாட்டை விட்டு வெளியேற்றுவதற்கு அவர் செய்த போராட்டங்கள் வரலாற்றில் இடம்பெற்று விட்டது.

அவருடைய மேல் நாட்டு ஆடைப் புறக்கணிப்புப் போராட்டங்கள் வெள்ளையரைத் திகைக்க வைத்த போராட்டம்.

சுதந்திரம் கிடைத்த பின்னர் கூட ஜின்னாவின் கோரிக்கைக்கு மதிப்பளித்து முஸ்லீம்களுக்கு நாட்டைக் கொடுத்துச் சுதந்திரப் போராட்டத்தின் வரவிலக்கணத்தையே மாற்றியவர்.

காந்தியின் அகிம்சையை முன் நிறுத்தி அதன் முகமூடிக்குள் ஒளிந்திருக்கும் தற்கால இந்தியாவின் செய்ற்பாடுகள் கண்டிக்கப்பட வேண்டியவை.

தனது சுயசரிதையில் தான் விட்ட பிழைகளை ஒளிக்காமல் வெளியுலகிற்கு அறியத்தந்த போதே அவர் உண்மையான பூரணமான மனிதனாகத் தன்னை உணர்ந்திருக்கின்றார்.

"மகாத்மா" என்ற கௌரவம் இதுவரை வேறு யாருக்கும் இவ்வுலகில் அளிக்கப்படவில்லை என்பதே காந்தியின் தேசத் தொண்டுக்கு அவருக்குக் கிடைத்த கௌரவம்.

வாத்தியார்

................

நீங்கள் சொல்வது நாகரீகமானதுதான். ஆனால் நியாயமானதா என்பதே கேள்விக்கு உரியது.

நாலுசுவர்களுக்குள் காந்தியை தேடுவது என்பது ஒருவிதத்தில் அனாகரீகமானது. ஆனால் வெளியுலகில் இருந்த பிரகாசத்தை பயன்படுத்தி நாலுசுவர்களுக்குள் காந்தி கசமுசா செய்திருந்தால் அது ஏதொ ஒருவிதமாக நாலுசுவர்களையும் தாண்டிய விடயமாகவே இருக்கின்றது. தண்டனைக்கு உரியவராக இருந்திருந்தும் தனது பதவியையும் பிரபல்லயத்தையும் வைத்து தண்டனையை விலைபேசியிருந்தால்? அது பொதுசட்டத்துடன் தொடர்புடையது.

இந்தியாவில் மக்கள் கூட்டம் என்பது வெறும் மந்தை கூட்டமாகவே இப்போதும் இருக்கின்றது. அப்போது எப்படியிருந்திருக்கும் என்பதை சொல்லி தெரியதேவையில்லை. இன்றைய நிலையிலேயே எங்கேயோ கிடந்த இத்தாலிகாரி தனதுபெயருக்கு முன்னால் காந்தியை செருகி இத்தனை கொள்ளைகளை கண்முன்னாலேயே செய்கிறாள். அவளுடைய கணவன் செய்த கொள்ளைகள் நீதிமன்றில் தீராத வழக்காக இப்போதும் இருக்கின்றது. இந்த நிலையிலும் அந்த இத்தாலிகார கொள்ளைகாரியை கும்பிடுவதற்கு ஒரு கூட்டம் அங்கே இருக்கின்றது.

எமது கலாச்சாரமும் அதற்கு ஒப்பானதே கேள்விகள் ஏதும் கேளாமல் வயதுக்கு மூத்த அனைவரையும் கும்பிடுவது என்பதே. கண்ட கண்ட சாமியெல்லாம் கோவிலுக்குள் புகுந்துகொள்வதற்கு கேள்விகள் இல்லாது இருந்தமையே காரணம். ஒரு மதத்திற்கு எத்தனை கடவுள் என்பது அந்த மதத்தைசார்ந்த எமக்கே தெரியாது. அது யாருக்கும் தெரியாதது.

வேறுவேறான இருவிடயங்களினுடாக காந்தியின் விடயத்திற்கு வருவோமாக இருந்தால்............

காந்தி மகத்மாவா? மகத்மாவாக ஆக்கபட்டாரா?

என்ற கேள்விகளில் ஆக்கபட்டார் என்பதே உண்மையானது. எந்த தொடர்பும் இல்லாத இந்திரா(காந்தி) வின் பெயருடன் காந்தியின் பெயர் ஒட்ட வேண்டிய அவசியம் என்ன? காந்திக்கும் இந்திராவிற்கும் என்ன தொடர்பு?

நேதாஜின் இராணுவம் பெரும் புரட்சி போர் ஒன்றை தக்க தருணம் பாhத்து இந்தியாவில் செய்யவிருந்த விடயம் பிரிட்டிஸ்காரருக்கு தெரியவந்திருந்தது. கிட்லர் இங்கிலாந்தை நோக்கி போர்தொடங்கும் தருணம் தக்க தருணமாக நேதாஜினால் கருதபடடிருந்தது. பின்பு நடந்த எதிபாராத விடயங்கள் குறிப்பாக கிட்லர் ராசியாவுடன் தொடுத்தபோர் என்பது உலகத்தில் இருந்த எல்லோரையும் தடுமாறவைத்தது. அப்போதைய நிலமையில் தந்திரோபயமாக கருதபட்டே பெருமளவில் இருந்த தனது படைகளை இந்தியாவிற்கு சுதந்திரத்தை கொடுத்துவிட்டு இங்கிலாந்திற்கு அழைத்து சென்றது பிரிட்டிஸ். இது எல்லோருக்கும் தெரிந்த உண்மை.

அதற்காக காந்தி போராடினார் என்பது பொய்யாகிவிடுமா?

அவருடைய போராட்டம் உண்மையானதுதான்.............. ஆனால் அவரிலும் இருந்து மிகுந்த அர்ப்பணிப்புடன் போராடிய நேதாஜி உட்பட பலரது போராட்டங்கள் திட்மிட்டு மறைக்கபட்டதன் நோக்கம் என்ன? நேதாஜி இற்ந்தார் என்ற குறிப்பிட்ட விமானவிபத்தில் அவர் இறக்கவில்லை என்பது அவருடன் கூடிசென்றவாரலேயே பின்பு ஒத்துகொள்ளபட்டாலும். நேதாஜியை அழைத்து சென்ற ரஸ்ஜாவிடம் நெருங்கிய உறவை வைத்திருந்தும் இந்தியா எதுவும் கேளாதிருப்பது எதற்காக? ஜப்பானில் இருந்து ரஸ்யபடைகளிடம் நேதாஜி சென்றார் என்பது ஆதாரங்களுடன் இருக்கின்றது. இருந்தும் இதுபற்றி அலட்ட அப்பொதிருந்த இந்திய அரசியல்வாதிகள் மறுத்துவிட்டார்டகள் ஏன்?

அப்போதிருந்த அரசியல்வாதிகளும் காந்திபோல் ஜில்மா செய்ததனால் முன்னுக்கு வந்தவர்கள். காந்திக்கு பூவும்பொட்டும் வைத்து காந்தியே மிகபெருத்த மகான் என்ற மாயை தோற்றுவித்து.... அவரோடு கூடிநின்று எடுத்த புகைபடங்களை காட்டி மீதி திரைகதைகளை அவர்களே எழுதி காட்டபட்ட படங்களில்ததான் காந்தி மகாத்மா.

இந்திரா(காந்தி) போல் பொறுக்கிதனமாக பிரதமர் ஆனவர்கள் இந்திய வரலாறில் இதுவரையில்லை. எமது நாட்டிலேயே இந்திரா காந்திக்கு சிலைவைத்தோமே............. இந்திரா காந்தி இறந்தபோது தோரணம் வீதிகளில் கட்டியதில் நானும் ஒருவன். அப்படி ஒரு மாயையை எமக்கு ஏற்படுத்தி அதனோடு எமது வாழ்வை தள்ளினார்கள். பின்பு அறிவுசார் இடங்களை சேர கூடிய வசதி வரும்போது இந்திரா காந்தியை தேடி போனால் அங்கே வெறும் பித்தலாட்டகார ஒரு பொறுக்கிதான் இருக்கிறாள்.

இனி சோனியா(காந்தி) தமிழுக்காக போராடினாள் என்று கருணாநிதி தனது தமிழ்மாநாட்டில் பேசினால் அதற்கு கைதட்ட ஒரு கூட்டம் இருக்கிறது.

அந்த கூட்டத்தின் எண்ணிக்கை கூடுதலாக இருப்பின். தமிழ்வளர்த்தவர்களில் சோனியாவும் ஒருவர் என்பது பின்னாளில் பாட புத்தகங்களிலேயே வரும். காரணம் பல நல்ல பெயர்களை திடடமிட்டு மறைக்க வேண்டிய தேவை இந்த கள்ளர் கூட்டத்திற்கு எப்போதும் உண்டு.

தற்போது ஈராக்கில் குண்டுபோட்டு எண்ணை வளத்தை கைபற்றிய அமெரிக்காவிற்கும். கிட்லருக்கும் என்ன வித்தியாசம்?

ஆனால் அமெரிக்காவில் கிட்டலர் மிகவும் கொடியவன் குறைந்தபட்சம் 90வீத அமெரிக்கர்கள் அப்படிதான் சொல்கின்றார்கள்.

சில விடயங்களை விவாதிக்காமல் விடுவதே சிறந்தது.

இந்திரா காந்திக்கும் மகாத்மா காந்திக்கும் ஒரு தொடர்பும் இல்லை.இந்திரா காந்தியின் கணவரின் பெயர் பெரோஸ் காந்தி.பிழை பிடிப்பதற்கும் ஒரு அளவு வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.