Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியா என்னை மன்னித்துவிட்டது : டக்ளஸ் தேவானந்தா

Featured Replies

இந்தியா என்னை மன்னித்துவிட்டது : டக்ளஸ் தேவானந்தா

ராஜபக்சேவுடன் இந்தியா வந்திருக்கும் இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எந்த நேரத்திலும் கைதாகலாம் என்றத் தகவல் இன்று (10ந் தேதி) காலையில் பரவி, ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், டக்ளஸ் தேவானந்தா டெல்லியில் நிருபர்களிடம், இந்தியா-இலங்கை இடையே ஏற்பட்டுள்ள ஒப்பந்தப்படி எனக்கு ஏற்கனவே மன்னிப்பு கொடுக்கப்பட்டு விட்டது. எனவே எந்த வழக்குகளும் என்னைக் கட்டுப்படுத்தாது என்று கூறியுள்ளார்.

தமிழக மக்கள் உரிமைக்கழகச் செயலரும் வக்கீலுமான புகழேந்தி, இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீது ஏற்கனவே கொலை, கொள்ளை சம்பந்தமாக 3 வழக்குகள் உள்ளது.

எனவே, 8ந்தேதி, ராஜபக்சேவுடன் இந்தியாவுக்கு வந்திருக்கும் டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்ய வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி, சென்னை ஐகோர்ட்டில் மனு கொடுத்தார். இதனால், இன்று அவர் கைதாகலாம் என்று, காலையில் பரபரப்பாகப் பேசப்பட்டது.

இது குறித்து, டெல்லியில் டக்ளஸ் தேவானந்தா நிருபர்களுக்கு அளித்தப் பேட்டியில்-

''நான் இந்தியாவுக்கு தற்போது சட்ட விரோதமாக வரவில்லை. உரியச் சட்டப்படி வந்துள்ளேன். நான் இந்தியா வந்துச் செல்ல எந்தத் தடையையும் அரசு விதிக்கவில்லை. அந்தப் பட்டியலில் நான் இல்லை.

இந்தியா-இலங்கை இடையே ஏற்பட்டுள்ள ஒப்பந்தப்படி எல்லா அரசியல் தலைவர்களுக்கும் மன்னிப்பு வழங்கப்பட்டு உள்ளது. எனக்கும் ஏற்கனவே மன்னிப்பு கொடுக்கப்பட்டு விட்டது. எனவே, எந்த வழக்குகளும் என்னைக் கட்டுப்படுத்தாது'' என்று கூறினார்.

என்றாலும், நான் எந்த விசாரணையையும் சந்திக்கத் தயாராக இருக்கிறேன் என்றும் கூறினார்.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=33716

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை - இந்திய ஒப்பந்தம் இந்திய சிவில் சட்டங்களால் ஆளப்படும் ஒன்றல்ல. இந்திய மண்ணில் செய்த குற்றங்களுக்கு அதுவும் இந்தியாவில் இருந்து கொண்டு செய்த குற்றங்களுக்காக டக்கிளஸ் தேவானந்த என்ற இந்தக் கொலையாளி மன்னிக்கப்படவில்லை. ஈழத்தில் மேற்கொண்ட அரசியல் சார்ந்த ஆயுதப் போராட்டத்தின் போது இழைத்த அநீதிகளுக்கு அதுவும் 1987 வரை செய்த அநீதிகளுக்கு மட்டுமே மன்னிப்பு அளிக்கப்பட்டுள்ளது. டக்கிளஸ் தேவானந்தா செய்ததாகச் சொல்லப்படும் குற்றங்கள் இந்திய - இலங்கை ஒப்பந்ததின் போது வழங்கப்பட்ட ஈழத்திலான பொதுமன்னிப்புக்கு பிற்பாடானதும் கூட.

இந்திய சிவில் நிர்வாக எல்லைக்குள் செய்த குற்றவியல் ஒன்றுக்காக இந்தியாவோ இந்திய நீதிமன்றங்களோ பொதுமன்னிப்பு அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தக் கொலைகார பாதகனை தமிழகத்தில் தனது சொந்த நலனுக்காக கொலைகள் கொள்ளைகள் கடத்தல்களைச் செய்த இந்த பாதகனுக்கு எந்தத் தடையும் இல்லாமல் இந்தியா செல்ல முடிகிறது.. பார்வதி அம்மா என்ற எந்தக் குற்றமும் இழைக்காத பெண்மணிக்கு மட்டும் பயணத்தடை போட்டு வைச்சிருப்பதன் மர்மம்தான் என்னவோ..???!

----------------------------

முன்னதாக டக்ளஸை கைது செய்ய வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக மக்கள் உரிமைக் கழக செயலாளரான வழக்கறிஞர் புகழேந்தி வழக்கு தொடர்ந்துள்ளார். அதில்,

இலங்கையில் பாரம்பரியம் மற்றும் சிறுதொழில் மந்திரியாக இருப்பவர் டக்ளஸ் தேவானந்தா. இவர் இ.பி.ஆர்.எல்.எப். இயக்கத்தில் இருந்தார். இவர் அலுவல்ரீதியாக இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன் இந்தியாவுக்கு இன்று வர இருக்கிறார்.

1986ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி சென்னையில் டக்ளஸ் தேவானந்தா தங்கி இருந்த போது, சூளைமேட்டில் திருநாவுக்கரசு என்பவரை சுட்டுக் கொன்றார். மேலும் 4 பேரை காயப்படுத்தினார். இந்த சம்பவத்தில் டக்ளஸ் கைது செய்யப்பட்டார். சில மாதங்கள் கழித்து ஜாமீனில் அவர் வெளியே வந்தார்.

வெளியே வந்த பிறகு, 1988ம் ஆண்டு நவம்பர் மாதம் 10 வயது சிறுவனை கடத்திச் சென்று, 7 லட்சம் கொடுத்தால் விடுவேன் என்று மிரட்டினார் என்று கீழ்ப்பாக்கம் போலீசில் டக்ளஸ் மீது புகார் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கிலும் அவர் கைது செய்யப்பட்டார்.

1989ம் ஆண்டு தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பிறகு அவர் இலங்கைக்கு தப்பி ஓடிவிட்டார்.

இலங்கையில் கைது செய்து, இந்தியாவுக்கு கொண்டு வரும் சந்தர்ப்பத்தில், இலங்கையோடு இந்தியா சில ஒப்பந்தங்களை ஏற்படுத்தியதால், டக்ளஸ் கைது நடவடிக்கையில் மேல்கொண்டு முயற்சிகள் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் டக்ளஸ் தேவானந்தா, இந்தியாவுக்கு வந்துள்ளார். அவரை கைது செய்ய மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

thatstamil.com

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள இனவெறி அரசுகளோடு ஒட்டியிருக்கும் வரை டக்ள்ஸ் என்பவரை இந்தியா கைது செய்யக்கூடாது என்பது எழுதப்படாத இலங்கை - இந்திய ஒப்பந்தம்.

வாத்தியார்

................

  • கருத்துக்கள உறவுகள்

டக்ளஸ் தேவானந்தா தேடப்படும் குற்றவாளி: சென்னை போலீஸ் கமிஷனர்

டக்ளஸ் தேவானந்தா தேடப்படும் குற்றவாளி என்று சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் கூறியுள்ளார்

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனிடம், டக்ளஸ் தேவானந்தா மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்று கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் அளித்த சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன், டக்ளஸ் தேவானந்தா தேடப்படும் குற்றவாளி. அவர் மீது மூன்று வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதுகுறித்து டெல்லி காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளோம். மேற்கொண்டு நடவடிக்கைகளை டெல்லி காவல்துறைதான் பார்க்க வேண்டும். டெல்லி காவல்துறையினர் கேட்டுக்கொண்டால், தமிழகத்தில் இருந்து சிறப்பு காவல்படையை அனுப்பி உதவி செய்யப்படும். ஆனால் டெல்லி காவல்துறையினர்தான் கைது நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றார்.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=33722

சிங்கள இனவெறி அரசுகளோடு ஒட்டியிருக்கும் வரை டக்ள்ஸ் என்பவரை இந்தியா கைது செய்யக்கூடாது என்பது எழுதப்படாத இலங்கை - இந்திய ஒப்பந்தம்.

வாத்தியார்

................

பசில் ராஜபக்சவை நீக்கிவிட்டு இவனை இழுத்துக் கொண்டு போய் சிங்கின் வாயில் திணித்து விட்டதும் மகிந்தவாக இருக்கலாம்.

நரி ஒன்று சிங்கத்திடம் இருந்து தப்பிய ஆட்டை மீண்டும் சிங்கத்திடம் மாட்டிவிட்டு தான் தப்பிய நீதிக்கதைதான் ஞாபகத்திற்கு வந்து போகுது.

அஸ்ரப் வரிசையில் டக்கிளஸ்.. கருணாக்களுக்கு முடிவு எழுதப்படும் போது மாற்று ஒட்டுக் குழுக்களுக்கு ஒண்டுக்கு போகும்.. அப்போது தெரியும் சிங்களத்தோடு ஒட்டி உறவாடியதன் பாதகம். அதுவரை அனுபவிக்கட்டும்.. அனுபவிக்க வேண்டிய அனைத்தையும். :):D

Edited by nedukkalapoovan

அய்யா மாட்டிகிட்டது போல தெரியுதே. இன்னிக்கு எங்க ஊரு பத்திரிகை ( ஆங்கிலம் / ஹிந்தி ) எல்லாத்திலையும் முதல் பக்கத்தில இந்த சேதி வந்து இருக்குதே

மருத்துவத்துக்காக வந்த பார்வதி அம்மாவை நாட்டுக்குள் விட மாட்டார்கள் ஆனால் இந்தியாவினால் தேடப்படும் குற்றவாளிக்கு ராஜ மரியாதை. இதுதான் கிந்திய ஜனநாயகம்.

மருத்துவத்துக்காக வந்த பார்வதி அம்மாவை நாட்டுக்குள் விட மாட்டார்கள் ஆனால் இந்தியாவினால் தேடப்படும் குற்றவாளிக்கு ராஜ மரியாதை. இதுதான் கிந்திய ஜனநாயகம்.

ஆஹா ஆரம்பிச்சிடாங்கய்யா

ஆஹா ஆரம்பிச்சிடாங்கய்யா

இதைத்தானே உங்களால் கூறமுடியும் ஏன் எதற்கு என்று காந்தீயநாட்டிடம் கேள்வி கேட்கவா முடியும்?

இந்தியா-இலங்கை இடையே ஏற்பட்டுள்ள ஒப்பந்தப்படி எல்லா அரசியல் தலைவர்களுக்கும் மன்னிப்பு வழங்கப்பட்டு உள்ளது.

குத்தியாரே! இந்திய/இலங்கை ஒப்பந்தம் வந்தது 1987ல்! மன்னிப்பும் வழங்கியது 1987ல்!!! ... ஆனால் உங்கள் ஆக் ஷனுகள் ....

1986ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி சென்னையில் டக்ளஸ் தேவானந்தா தங்கி இருந்த போது, சூளைமேட்டில் திருநாவுக்கரசு என்பவரை சுட்டுக் கொன்றார். மேலும் 4 பேரை காயப்படுத்தினார். இந்த சம்பவத்தில் டக்ளஸ் கைது செய்யப்பட்டார். சில மாதங்கள் கழித்து ஜாமீனில் அவர் வெளியே வந்தார்.

வெளியே வந்த பிறகு, 1988ம் ஆண்டு நவம்பர் மாதம் 10 வயது சிறுவனை கடத்திச் சென்று, 7 லட்சம் கொடுத்தால் விடுவேன் என்று மிரட்டினார் என்று கீழ்ப்பாக்கம் போலீசில் டக்ளஸ் மீது புகார் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கிலும் அவர் கைது செய்யப்பட்டார்.

1989ம் ஆண்டு தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பிறகு அவர் இலங்கைக்கு தப்பி ஓடிவிட்டார்.

... கூட்டிக் கழித்துப் பார்க்க பிழைக்குதே? :D

... இப்போதெல்லாம் என்னத்துக்கும் ... நாய்க்கு எங்கு அடி விழுந்தாலும் ஏதோ ஒரு காலைத்தான் தூக்குமாம் ... அப்படி நாமும் பழகி விட்டோம்! :)

2008

Douglas,mahinda,Manmohan.jpg

EPDP = RAW

Edited by Panangkai

  • கருத்துக்கள உறவுகள்

இவர் தான் நீங்கள் தேடும் குற்றவாளி என்று மகிந்த கூறியும் மன்மோகன் புன்னகைக்கின்றாரே!

வாத்தியார்

................

நாங்களும் மாலை கொடியோடு எங்கள் மன்னன் சபை ஏறுவான் என்று இருந்தோம்? :):D

... "சூழமேட்டு கொலைப்புகழ்" குத்தி போடுகிற ப்போடலுகளைப் பாருங்கள்!!!

... இச்செய்திகளையும் கொண்டு வருவது இந்திய ஊடகங்களே! ....

குற்றவாளிக்கு ரத்தினக் கம்பளமா?

http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=India&artid=254835&SectionID=130&MainSectionID=130&SEO=&Title=

  • கருத்துக்கள உறவுகள்

எத்தனை நாளைக்கு எண்டு தான் பார்ப்போம் :)

வாத்தியார்

.............

... குத்தியின் கதையை விடுத்து ... இங்கும் ஒருவர், அங்கு நிமலராஜனை சுட்டுக்கொண்டு விட்டு வந்து அசைலம் அடித்திருக்கிறார்! அவரை எந்த சட்டத்தின் முன் நாம் நிறுத்தினோம் ... இதுவரை???? :)

nfq9.jpg

http://www.yarl.com/forum3/index.php?showtopic=14946

http://www.yarl.com/forum3/index.php?showtopic=29815

Edited by Nellaiyan

நான் அறிந்தவரையில் டக்கிளசின் கைது உறுதிதானாம்,ஈபிடிபியை ஓரம் கட்டிவிட்டு மகிந்தவின் மகனுடன் சிங்களத்தில் படித்த நண்பனுமாகிய தமிழே தெரியாத தமிழரை(அண்மைய தேர்தலில் மகிந்தவுக்கு ஆதரவாக போட்டியிட்டு தோற்றவர்) நியமிக்க திட்டமாம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் அறிந்தவரையில் டக்கிளசின் கைது உறுதிதானாம்,ஈபிடிபியை ஓரம் கட்டிவிட்டு மகிந்தவின் மகனுடன் சிங்களத்தில் படித்த நண்பனுமாகிய தமிழே தெரியாத தமிழரை(அண்மைய தேர்தலில் மகிந்தவுக்கு ஆதரவாக போட்டியிட்டு தோற்றவர்) நியமிக்க திட்டமாம்

எங்கை வைச்சு ஆளை மடக்குற பிளானாம்?

  • கருத்துக்கள உறவுகள்

ஆஹா ஆரம்பிச்சிடாங்கய்யா

அவர் உண்மையை தானே சொல்லுரார்..

அது உங்களுக்கு தெரியாதா.. உங்களை நினைக்க சிரிப்பு வருது பைய்த்தியம் ஹிஹிஹி :D:)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

2008

Douglas,mahinda,Manmohan.jpg

EPDP = RAW

இலங்கை இந்திய அரசியல்வாதிகளுக்கு பயங்கரவாதிகளுடன் கைகுலுக்குவதில் அலாதிப்பிரியமாக்கும். :)

Edited by குமாரசாமி

எங்கை வைச்சு ஆளை மடக்குற பிளானாம்?

டெல்லிபொலிஸின் பதிலுக்காக காத்திருப்பதாக தமிழ் நாட்டு டி ஐ ஜி கூறியதாக யாழ் களத்திலே தகவலே இருக்கிறது

  • கருத்துக்கள உறவுகள்

டக்ளஸ் தேவானந்தா தேடப்படும் குற்றவாளி: சென்னை போலீஸ் கமிஷனர்

அவரை தேடிபிடிப்பது என்பது இனி முடியாது அவர் ஒடி ஒளிந்துவிட்டார்...........

போடா பேமாளி

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய அரசினால் விடுதலைப்புலிகளை பலவீனப்படுத்தும் நோக்கில் உதிரிகளாகத்திரிந்த தேச விரோதிகளை ஒருங்கிணைத்து இ பி டி பி என்னும் ஒரு அமைப்பை உருவாக்கிய ரோ அதற்கு தலைவராக தேவானந்தாவை நியமித்து இலங்கை இராஜ மரியாதையுடன் அழைத்து வந்து உலவவிட்டது,

இந்திய இராணுவம் வெளியேறும் தறுவாயில் இது நிகழ்ந்தது அதற்கு முன் 3 ஸ்டார் எனும் அமைப்பை தேசவிரோதிகளை கொண்டு அமைத்திருந்தது.

டக்ளஸை இந்தியா உள்ளே போடப்போவதாக கனவு காண்பது அசட்டுத்தனம்.

அவையள் அடிக்கிறமாதிரி அடிப்பினம் இவையள் அழுகிறமாதிரி அழுவினம்.

அதை எல்லாம் நம்பிறது தமிழனின் தலைவிதி.

ஏற்கனவே புலிகளாலேயே இந்தியா தமிழரோடு பிரச்சனைப்படுவதாகவும் இல்லாவிட்டால் ஏதோ வெட்டி முறிச்சிப்போடுவினம் எண்டு கதை விட்டினம் இப்ப என்ன நடக்குது

காசுக்காக எதையும் விற்கும் வடக்கத்தியானை நம்பும் போக்கை முதலில் கைவிட வேண்டும் இதற்கு நானும் விதிவிலக்கல்ல

இருப்பாய் தமிழா நெருப்பாய்!

Edited by vasee

  • கருத்துக்கள உறவுகள்

:) இதியாவும், சிங்களமும் விரும்புவதையே செய்துவரும் ஒரு கைக்கூலியை கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன?? தமிழ்நாட்டுக்காரனுக்கு ஆத்திரமிருந்தாலும், அங்கு தில்லியில் எந்த மயிரும் புடுங்கேலாது.

அவனை உள்ளுக்க போடுறதை விட மண்டையில் போட முடியுமா எண்டு பார்க்க வேணும்.......நிழலி, எங்கே இருக்கிறீர்கள், கொண்டுவாங்கள் அந்தக் கத்திரிக்கோளை....

இவர் இப்படியே காலத்தைக் கழித்துவிடுவார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.