Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ் களத்தில் களேபரம், பாகம் - 3

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

:wub::lol: :lol:

இசை பனங்காட்டு நரி இந்த சலசலப்புக்கெல்லாம் அஞ்சமாட்டார். :rolleyes::rolleyes:

  • Replies 225
  • Views 21.5k
  • Created
  • Last Reply

sadcat.jpg

கடி மன்னர்களே திரு.டன்குவாரைப்பாத்தா ரொம்பப்பாவமா இருக்குப்பா

  • கருத்துக்கள உறவுகள்

நெருப்பில் சிவக்கும் பொன்தான் நகையாகும்,

அடி வாங்கும் கல்தான் கருவறையில் சிலையாகும்!

புலி பதுங்குவது பாய்ச்சலுக்கு !

புரிந்து கொள்வீர் விரைவில்!

திவியார் திகைத்திட

நெடுக்கார் நடுங்கிட

தெலுன்கார் குலுங்கிட

வருவார் விரைவு"டன்"

தரிப்பார் குண்டு"டன்"

தீர்ப்பார் நும் க"டன்" :rolleyes::rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

சுத்தி சுத்தி பார்த்தேனே சுழண்டு சுழண்டு சுழண்டு பார்த்தேனே தாவித்தாவி பார்த்தேனே

இது தெரியாம நழுவிடுச்சே

படத்திலேயே இவ்வளவு அழகா இருக்கே….இது தெரியாம நழுவிடுச்சே

என்று மேசையில் அடித்துக்கொண்டார். மனம் நொந்து போனவர் அப்பொழுதுதான் திரும்பிப்பார்த்தார்

எல்லாவற்றையும் வாசித்தபடி ஆத்துக்காறி.

அடப்பாவி இவ்வளவு கவனமாக கண்ணும் கருத்துமாப்பார்த்தும் அல்வா குடுத்திட்டியே… என்றபடி பாய்ந்தார் இசைமீது…..

முடிவு சாக்குக்குள் அகப்பட்ட எலியானார்

எல்லாம் முடிந்து சங்கு அறுக்கப்பட்டு சாக்கால் வெளியில் ஒரு மூலையில் தூக்கி எறியப்பட்ட டங்குவுக்கு இது வழமையான சங்காபிசேகம்

:rolleyes::rolleyes::wub:

கற்பனை சூப்பர் விசுகு அண்ணா

வாத்தியார்

*********

  • கருத்துக்கள உறவுகள்

நெருப்பில் சிவக்கும் பொன்தான் நகையாகும்,

அடி வாங்கும் கல்தான் கருவறையில் சிலையாகும்!

புலி பதுங்குவது பாய்ச்சலுக்கு !

புரிந்து கொள்வீர் விரைவில்!

திவியார் திகைத்திட

நெடுக்கார் நடுங்கிட

தெலுன்கார் குலுங்கிட

வருவார் விரைவு"டன்"

தரிப்பார் குண்டு"டன்"

தீர்ப்பார் நும் க"டன்" :rolleyes::wub:

இதைத்தான் நானும் நினைகிறேன் சுவி அண்ணை

:rolleyes::lol:

வாத்தியார்

*********

  • கருத்துக்கள உறவுகள்

குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தார் டங்குவுக்கு 9 முடிச்சு போட்ட அந்த நடுத்தர வயது மாது.

என்னப்பா லண்டன்ல இருந்து வந்ததிலிருந்து இப்படி இரவும் பகலும் நடக்கின்றீர்

நேரமாற்றத்தால ஏதும் உமக்கு ஆயிடுத்தோ என்றார் டங்கு.

திரும்பி ஒரு வெட்டு வெட்டிவிட்டு

முடியல

இதுகளின்ர சேட்டைகளை சகிக்கவும்முடியல சமாளிக்கவும்முடியல அங்கால இங்கால தனிய விடவும்முடியல

என்று அழாத குறையாக சொன்னார்

அது சரியப்பா

பிள்ளைகள் என்றால் அப்படித்தானே இருக்கும்

நாமதான் சமாளித்து போகவேணும் என்று டங்கு முடிப்பதற்குள்

டங்குவின் கன்னத்தில் புலிநகம் விளையாடி முடிந்தது போலிருந்தது டங்குவுக்கு.

நான் என்ர பிள்ளையை ஒழுங்காகத்தான் வளர்க்கிறன்

உங்க அப்பா அம்மா தான் இப்படி வளர்த்து என்ர தலையில சுமத்திப்போட்டு

கனடாவுக்கு கலைத்துப்போட்டு அவ நிம்மதியாக இருக்கினம்

நான் இரவும்பகலும் நித்திரை கொள்ளாமல் இப்படி நிற்கிறன் என்று இடித்து முடித்தார் இசை கலைஞி

இது என்னடா போன இடததிலும்ஒன்றும் அம்பிடல

இங்க வந்தா இப்படிக்கிடக்கு என்று நினைத்தபடி யாழைத்திறந்தார் டங்கு...

டங்கு லண்டர் வந்திருந்தார்

நான் அவரைச்சந்தித்தேன் என்று பரபரப்பு செய்தி போட்டிருந்தார் ரதிதேவி.

கள உறுப்பினர்கள் வேறு இந்த திரியையே பூகம்பப்படுத்தினர். கல்யாணம் முடித்து பிள்ளையும் பெற்றுவிட்டனர் அந்ததிரியில்.

அடடா

சுத்தி சுத்தி பார்த்தேனே சுழண்டு சுழண்டு சுழண்டு பார்த்தேனே தாவித்தாவி பார்த்தேனே

இது தெரியாம நழுவிடுச்சே

படத்திலேயே இவ்வளவு அழகா இருக்கே….இது தெரியாம நழுவிடுச்சே

என்று மேசையில் அடித்துக்கொண்டார். மனம் நொந்து போனவர் அப்பொழுதுதான் திரும்பிப்பார்த்தார்

எல்லாவற்றையும் வாசித்தபடி ஆத்துக்காறி.

அடப்பாவி இவ்வளவு கவனமாக கண்ணும் கருத்துமாப்பார்த்தும் அல்வா குடுத்திட்டியே… என்றபடி பாய்ந்தார் இசைமீது…..

முடிவு சாக்குக்குள் அகப்பட்ட எலியானார்

எல்லாம் முடிந்து சங்கு அறுக்கப்பட்டு சாக்கால் வெளியில் ஒரு மூலையில் தூக்கி எறியப்பட்ட டங்குவுக்கு இது வழமையான சங்காபிசேகம் என்பதால் அது வலிக்கவில்லை.

மாறாக செய்திருந்தாலும் மனதை ஆத்திக்கலாம். செய்யாத ஒரு லீலையை செய்ததாக நம்பவைத்த யாழ் இணையத்தை திட்ட முடிவெடுத்தார். எழுதத்தொடங்கினார்.

கண்டபடி எழுதியதால் எழுத எழுத காணாமல் போயிற்று. என்ன என்று முடிப்பதற்குள் விழலி தனிமடல்போட்டிருந்தார்.

குளவிதிகளை மீறி குளிக்கமுடியாது. தொடர்ந்தால் ……வெளியே தூக்கி எறியப்படுவீர்கள் என்று .

மட்டுனரும் முட்டுகிறார். எழுதிப்பிரயோசனமில்லை .

அணைப்பதுபோல் அடிக்கணும்

கொஞ்சுவது போல் கடிக்கணும்

தூற்றவேணும் ஆனால் எதிரி திருப்பி தாக்கக்கூடாது

மட்டுனரையும் போட்டுத்தாக்கணும் ஆனால் எழுத்து தாமரையில் தண்ணீர் போலல்லாது நிலைக்கணும்.

கலகலப்பா இருப்பது போல்……களேபரம் செய்யணும்

யோசித்தவருக்கு திண்ணை ஞாபகம் வந்தது.

திண்ணையில் கிளிஜோசியர் இருப்பார் ஐடியா கேட்கலாம் என்று திண்ணைக்கு வந்தார். கிளிஜோசியர் கோழிக்கறிக்கு செய்முறை தேடிக்கொண்ருந்தார். எத்தனை கோழிக்கு அல்வா கொடுத்திட்டம் இது தெரியாதா என செய்முறையை சொன்னவருக்கு கிளிஜோசியர் கொடுத்த ஐடியதாதான் உள்குத்து ……வெளிக்குத்து. ….

திறந்தார் கணணியை

வைத்தார் தலைப்பு

யாழ் களத்தில் களேபரம்

போட்டுத்தாக்கினார். ஏல்லோரும் சிரித்தபடியே வாங்கிக்கட்டினர்.

மட்டுனருக்கும் போட்டார் எழுத்து நிலைத்தது

ஐடியா கொடுத்த கிளிஜோசியருக்கும் போட்டார். உள் குத்தை அவரும் உணர்ந்தார்

எழுதித்தள்ளியதால் ஆத்துக்காறியை மறந்தது ஞாபகம் வந்தது. சத்தத்தையே காணோமே. கொலை வெறியுடன் லண்டனுக்கு ஏறிட்டுதோ என்று பயந்தவர். தொடர்ந்து தாக்குவதை நிறுத்தி …..

பாகம் ஒன்று என்று விசுரில் ….முடித்தார்.

அங்குதான் பிடித்தது சனி டங்குவுக்கு….

தாக்குதல் நிறுத்தப்படடதும்

தெலுங்கிலிருந்து சிறி தாக்குதலை ஆரம்பித்தார்……

அதைத் தொடர்ந்து இரதிதேவி குட்டி வயித்தாலபோவான் விசுகர் என களம் விரிவடைந்தது.

நானும் போட்டு தாக்கலாம் என்று பார்த்தால் புலம்பெயர் உறவுகளது வாழ்க்கை முறை அங்கு வெளிநாட்டில் எப்படி உள்ளது என எனக்கு தெரியவில்லை... பேச்சு வழக்கும் பலது பிரியவில்லை...:lol: :lol: :lol::D

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்றிரவு கல்லூரிவிழா முடிந்ததும் சிங்கன் மனைவி பிள்ளைகளுடன் வீடு வந்து சேர்ந்தார்.வந்தவுடனேயே காலாற சோபாவில் அமர்ந்தவருக்கு மனைவி பார்த்த ஒருவித பார்வையால் பார்ட்டியில் சற்றுமுன்னர் அடித்த சிவாஸின் கிக்கும் ஒருநொடியில் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிட்டது?நெஞ்சு படபடக்க ஒருகணம் சிந்த்தித்த சிங்கனுக்கு.......அப்போதுதான் பார்ட்டியில் தான்விட்ட ஒருசில சிலுமிசங்கள் அலையலையாக ஞாபகத்துக்கு வந்தன.அதுவும் சிவப்புசாறி உடுத்தவருடன் பழைய நினைவுகளை மீட்டியதை நினைக்கும் போது அவருக்கே கொஞ்சம் ஓவராக தெரிந்தது.

பிறர் தன்னைப்பற்றி என்ன நினைப்பார்கள் என எள்ளளவும் கவலைப்படாத சிங்கன் தன் மனைவியின் அடுத்த அதிரடி நடவடிக்கைகளை நினைத்து ஒருகணம் ஆடிப்போய்விட்டார்.எனினும் ஒருவாறு தன்னை சுதாகரித்துக்கொண்டு மீண்டும் ஒரு பெக் சிவாஸ் உறிஞ்சி தென்பேற்றுவதற்க்காக காதலுக்கு மரியாதையில் வரும் ஒரு கள்ளுப்பாடலை மனதுக்குள் பாடியவாறு அடுக்களைப்பக்கம் சென்றவர் அதிர்ச்சியில் என்னசெய்வதென்று தெரியாமல் விறுவிறுவென்று பைப்தண்ணியை திறந்தார்.அப்போது பிள்ளைகளுக்கு பால் காய்ச்சிக்கொண்டிருந்த மனைவி அவரிடம் சட்டிபானையெல்லாம் காலைமையே கழுவிப்போட்டியள் இப்ப என்ன என்று ஒரு அதட்டலாக கேட்டவுடன் அதற்கு இல்லை நான் தண்ணிகுடிக்கவந்தனான் என ஒருமாதிரி மழுப்பிவிட்டு அந்த இடத்தை விட்டு மெல்ல நடந்தார் சிங்கன்.

மழுப்பியவர் மீண்டும் சோபாவில் அமர்ந்து கண்ணை மூடியவருக்கு மஞ்சள் சேலைஜிங்கிச்சா சிவப்புசேலைஜிங்கிச்சா பச்சைசேலைஜிங்கிச்சா என கல்லூரிவிழா ஞாபகம் வரவே ஒருவித மனக்குளிர்ச்சியுடன் கண்ணைத்திறந்து தொலைகாட்சியை நோக்கினார்.

அப்போது இளமை இதோ இதோ என்ற பாடல் அவருக்கு சாதகமாக ஒளிபரப்பாகியது.ஆனால் பாதகமாக அவர்மனைவி இடையே வந்து"ஓ இந்தப்பாட்டெல்லாம் இப்ப தேவைப்படுதோ" என்று கேட்டதற்கு அவரும் தாமதிக்காமல் ரிவியிலை போகுது நான் பாக்கிறன் இது ஒரு குற்றமே என அழாக்குறையாக கேட்டார்.

சரிசரி உடுப்பை மாத்திப்போட்டு போய்படுக்கலாம் என்று சொல்லிவிட்டு மனைவியும் அவ்விடத்தை விட்டு நகர்ந்தார்.

சபலப்புத்தி சிங்கனுக்கு ஒன்றுமேவிடிவில்லாத பிரமையில் சோபாவிட்டு விரக்தியுடன் எழும்பி சென்றார்.சித்துவிளையாட்டுக்களில்சித்தரான சிங்கன் இன்று எப்படியாவது மனைவியை கூல்பண்ணி ஒருவழிக்கு கொண்டுவரவேண்டு திடசங்கர்ப்பம் பூண்டார்.

உடனே மனைவியை கூப்பிட்டார்.பதிலில்லை.மீண்டுமொருமுறை கூப்பிட்டார் அதற்கும் பதிலில்லை.

எனவே தன் மரியாதையை தானே காப்பாற்றும் முகமாக தானே மனைவியை அறையறையாக தேடினார்.கடைசியாக படுக்கையறையை திறந்து பார்த்தபோது மனைவி புத்தகம் படித்துக்கொண்டிருந்தார்.இதுதான் நல்லதருணம் எண்ணிய சிங்கன் மனைவியை சமாதானப்படுத்த கையை பிடித்தார்.சிறிய உதறலுடன் சமாளித்தசிங்கன் காலைபிடித்தார்.

அந்த உதறலை சமாளிக்கமுடியாத சிங்கன் அடுத்த உதை விழுந்தால் புக்கைகட்ட புத்தூர்ச்சந்திக்கு போக வேண்டிவருமே என நினைத்து அடுத்தமுயற்சியை தவிர்த்துக்கொண்டு அறையை விட்டு வெளியேறினார். :lol:

ஒருவித சோகத்துடன் அடுக்களைப்பக்கம் வந்த சிங்கனுக்கு தன் மனைவியை எப்படியாவது சமாளித்து கூல் பண்ணவேண்டுமென திடசங்கர்ப்பம் பூண்டார்.சிவாஸும் நினைவுக்கு வர அதை ஒரு கிளாசில் ஊற்றி நாக்கை நனைத்தவாறு தனது மடிப்புகணணியை திறந்தார்.அங்கே மங்களகரமாக ஒளிர்ந்தது யாழ்களம்.பல பக்கங்களை அவசர அவசரமாக மேய்ந்தவருக்கு மனைவியின் முகமே பெரிய திரையாக தெரிந்தது.இருந்தாலும் யாழ்களத்தை மீண்டுமொருமுறை மேய ஆரம்பித்தார்.

அப்போது அவர் கண்ணில் பட்டது ஒரு சமையல் செய்முறை.அந்த சமையல் அதாவது அப்படியொரு முறையே இதுவரை உலகில் எந்தபாகத்திலும் இல்லாவிட்டாலும் அதனை சமைத்து தன்மனைவியிடம் பேரும்புகளும் வாங்க ஒரு தினாவெட்டு தைரியத்தை வரவழைத்துக்கொண்டார் சிங்கன்.அதுதான் கோழிச்சாம்பார்.அவசர அவசரமாக செய்முறையை பார்த்து வெட்டிக்கொத்தி கோழிச்சாம்பாரை செய்து நிறைவேற்றினார் சிங்கன் ஊதுவார்.கோழிச்சாம்பாரின் வித்தியாச நறுமணங்கள் தாங்காமல் விழித்தெழுந்த டங்குவாரின் மனைவி தன் அன்புக்கணவனின் தற்கொலை முயற்சியென ஓடோடி வந்தார்.வந்தவர்

என்னப்பா?

ஏனப்பா?

என்றவர்

சட்டியை பார்த்தார்

பின்னர் மடிப்பு கணணியை பார்த்தார். :lol:

இந்தயாழ்களம் இருக்கும் வரைக்கும் ஒருத்தரும் என்ரைமனிசனை அசைக்கேலாது என மனதுக்குள் நினைத்தவாறு படுக்கையறையை நோக்கி நடந்தார்.இருந்தும் சல்லாபபுத்தி இசைக்கலைஞன் ஏதோநினைப்பில் மனைவியின் கையை பிடிக்க அவரும் அங்கை ஒரு கவிதை எழுதிப்போட்டு வாருங்கோ என கையை செல்லமாக

தட்டிவிட்டு சென்றார். :lol:

கு.சா. அண்ண கலக்கிடியள் போங்கோ... ^_^:D:lol: :lol: plus_icon.jpg

நெடுக்ஸ், விசுகு அண்ண நீங்களும் தான்... plus_icon.jpgplus_icon.jpg:lol::D

Edited by குட்டி

  • கருத்துக்கள உறவுகள்

மறைந்திருந்த யாழ் கள சிங்கங்கள் எல்லாம் சிலிர்த்துக் கொண்டு புறப்படுகின்றன...........

....அடுத்தது யாரு............... :lol:

  • கருத்துக்கள உறவுகள்

குறளோனுக்கு இன்று காலம் சரியில்லை மடிகணனியில் படி ஏறினா பதினெட்டாம் படி ஐயப்பனின் அருள் கிடைப்பது கடினமாக இருந்தது. சே என்ன வாழ்க்கையிது? வயர்லெஸ் இன்ரநெற்றை பக்கத்துவீட்டுக்காரன் லொக் பண்ணிப்போட்டான் அதைப்போல நேற்று அலுவலகத்திலயும் வெளியுலகத் தொடர்புகளை மட்டுப்படுத்தியிருந்தார்கள் எவன் இந்தப் பாழாப் போன பரதேசி "எனக்கு எதிராக சதி செய்யிறது? யாழுக்குப் போய்ப் பார்க்காமல் மூளைக்குழப்பம் வருகுது என்று வாய் கொஞ்சம் சத்தமாககே பீத்தல் சீலை கிழிந்த பாணியில் புறுபுறுத்தது. விளங்கேல்லை "என்னப்பா சொல்றீங்க?" மெல்லிய தூக்கக் கலக்கத்துடன் மஞ்சக்கணனி கேள்வி கேட்க ஒண்டுமில்லை செல்லம் அது பல்லி சொல்லுது....." பல்லியோ?" பல்லில்லை பல்லில்லை என்று கொஞ்சம் பதட்டத்தோடு திண்ணைக் குறளோன் உளற சட்டென்று எழுந்து குறளோனை விசித்திரமாகப் பார்த்தார் திருமதி குறளோன்

ஏதோ சம்திங் ரோங் என்ற எண்ணத்தோடு குறளோனைப் பார்த்தபடியே திருமதி குறளோன் யோசித்துக் கொண்டிருந்தார். .

நிலமையின் விபரீதத்தை உணராத குறளோன் வாய்

"அடி அஞ்சகமே எனை கொஞ்சிட வா" என்று முணு முணுக்க கைகள் மடி கணனியை இறுக அணைத்தன.

"யாழே யாழே ஆளை மயக்கிறாய்

காலை எழுந்ததும் கண்களைக் கவ்வுறாய்

மாலை என்னடி

சாலை என்னடி

சந்தன முல்லையே...

உன் நரம்புகள் தொட்டு நான் மீட்டிடுவேன்

வரம்புகள் உடைத்து வான் எங்கும் பறப்போம் வா..வா..வா.."

குறளோனின் பாட்டு இசையமைப்பதற்கு இளையராஜாவைத் தேடிக் கொண்டிருந்தது.

சந்தேகமே இல்லை இப்படி ஒரு சக்களத்தி எந்தப் பெண்ணுக்கும் இருக்காது இவi இவளை என்ன செய்கிறன் பார் என்று வரிந்து கட்டிக் கொண்டு எழுந்த திருமதி குறளோனுக்கு திடீரென்று ஒரு யோசனை உதித்தது. இவரை கொஞ்சம் விட்டுப்பிடிச்சுப் பாப்பம் ஆளை மயக்கிற அலங்காரி ஆரென்று பார்க்க வேணும் என்று மனதிற்குள் கருதியவாறு கனவில் பாட்டுப்பாடிக் கொண்டு மடிக்கணனியை அணைத்துப் படுத்திருந்த குறளோனுக்கு அருகில் படுத்துக் கொண்டார் சிறிகு நேரத்தில் மண்டையைப் பிய்த்துக் கொண்டு எழுந்து உட்கார்ந்தார். குறளோன் மும்முரமாக குறட்டை விட்டு அறையில் உள்ள பொருட்களையெல்லாம் அதிர்வுக்கு உள்ளாக்கிக் கொண்டிருந்தார் இனியும் இந்தச் சோதனையைப் பொறுக்க முடியாது என்று எழுந்து சமையலறைக்குச் சென்று கொஞ்சம் கறியுப்பை எடுத்து வந்து கறளோனின் வாயில் கொட்டிவிட்டு நிம்மதியாக திரும்பிப் படுத்துக் கொண்டர். இனி மிகுதி அனுபவத்தை குறளோன் வந்து சொல்லி முடிப்பாராக. :lol: :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

குறளோனுக்கு இன்று காலம் சரியில்லை மடிகணனியில் படி ஏறினா பதினெட்டாம் படி ஐயப்பனின் அருள் கிடைப்பது கடினமாக இருந்தது. சே என்ன வாழ்க்கையிது? வயர்லெஸ் இன்ரநெற்றை பக்கத்துவீட்டுக்காரன் லொக் பண்ணிப்போட்டான் அதைப்போல நேற்று அலுவலகத்திலயும் வெளியுலகத் தொடர்புகளை மட்டுப்படுத்தியிருந்தார்கள் எவன் இந்தப் பாழாப் போன பரதேசி "எனக்கு எதிராக சதி செய்யிறது? யாழுக்குப் போய்ப் பார்க்காமல் மூளைக்குழப்பம் வருகுது என்று வாய் கொஞ்சம் சத்தமாககே பீத்தல் சீலை கிழிந்த பாணியில் புறுபுறுத்தது. விளங்கேல்லை "என்னப்பா சொல்றீங்க?" மெல்லிய தூக்கக் கலக்கத்துடன் மஞ்சக்கணனி கேள்வி கேட்க ஒண்டுமில்லை செல்லம் அது பல்லி சொல்லுது....." பல்லியோ?" பல்லில்லை பல்லில்லை என்று கொஞ்சம் பதட்டத்தோடு திண்ணைக் குறளோன் உளற சட்டென்று எழுந்து குறளோனை விசித்திரமாகப் பார்த்தார் திருமதி குறளோன்

ஏதோ சம்திங் ரோங் என்ற எண்ணத்தோடு குறளோனைப் பார்த்தபடியே திருமதி குறளோன் யோசித்துக் கொண்டிருந்தார். .

நிலமையின் விபரீதத்தை உணராத குறளோன் வாய்

"அடி அஞ்சகமே எனை கொஞ்சிட வா" என்று முணு முணுக்க கைகள் மடி கணனியை இறுக அணைத்தன.

"யாழே யாழே ஆளை மயக்கிறாய்

காலை எழுந்ததும் கண்களைக் கவ்வுறாய்

மாலை என்னடி

சாலை என்னடி

சந்தன முல்லையே...

உன் நரம்புகள் தொட்டு நான் மீட்டிடுவேன்

வரம்புகள் உடைத்து வான் எங்கும் பறப்போம் வா..வா..வா.."

குறளோனின் பாட்டு இசையமைப்பதற்கு இளையராஜாவைத் தேடிக் கொண்டிருந்தது.

சந்தேகமே இல்லை இப்படி ஒரு சக்களத்தி எந்தப் பெண்ணுக்கும் இருக்காது இவi இவளை என்ன செய்கிறன் பார் என்று வரிந்து கட்டிக் கொண்டு எழுந்த திருமதி குறளோனுக்கு திடீரென்று ஒரு யோசனை உதித்தது. இவரை கொஞ்சம் விட்டுப்பிடிச்சுப் பாப்பம் ஆளை மயக்கிற அலங்காரி ஆரென்று பார்க்க வேணும் என்று மனதிற்குள் கருதியவாறு கனவில் பாட்டுப்பாடிக் கொண்டு மடிக்கணனியை அணைத்துப் படுத்திருந்த குறளோனுக்கு அருகில் படுத்துக் கொண்டார் சிறிகு நேரத்தில் மண்டையைப் பிய்த்துக் கொண்டு எழுந்து உட்கார்ந்தார். குறளோன் மும்முரமாக குறட்டை விட்டு அறையில் உள்ள பொருட்களையெல்லாம் அதிர்வுக்கு உள்ளாக்கிக் கொண்டிருந்தார் இனியும் இந்தச் சோதனையைப் பொறுக்க முடியாது என்று எழுந்து சமையலறைக்குச் சென்று கொஞ்சம் கறியுப்பை எடுத்து வந்து கறளோனின் வாயில் கொட்டிவிட்டு நிம்மதியாக திரும்பிப் படுத்துக் கொண்டர். இனி மிகுதி அனுபவத்தை குறளோன் வந்து சொல்லி முடிப்பாராக. :lol: :lol: :lol:

கனவிலுமா... முடியல்ல...! :D^_^

இசை,

போற போக்கப்பார்க்க ஆறுமுகம் நாவல் பழமும் இங்க வந்து வெண்பா நடையில் தனது தாக்குதலை தொடர்வார் போல கிடக்கு. எதுக்கும் ரெண்டு டபுள் சிவாஸ் அடிச்சிட்டு தெம்பா இருங்க.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:lol::D:D

.

விசை இவ்வளவும் வாங்கிக்கட்டினது காணாது என்று,

5.gif

ப்ரியாவை சொந்தமாக்கச் சொல்லி, கோவாவிடமும் வாங்கிக் கட்ட‌ வைக்க‌...... அட்வைஸ் பண்ணும் நண்பர்கள்.129fs3867689.gif

:D:lol:

.

ஒரு மனுசனை எத்தனை தரம் தாம்பா போட்டு தாக்குவீங்க?????

ஏதோ கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டுடோம்னு இப்புடியா????? :lol:

என்ன தான் இருந்தாலும் நான் டங்குவுக்கு தான் ஆதரவு.. ஏன்னா

அஞ்சு வயசுல அஞ்சலை அஞ்சலை என்று ஒரு பொண்ணை பார்த்தேன்னு சொன்னனே அது டங்கு வோட பொண்ணு தானே ^_^:lol: :

என்ன தான் இருந்தாலும் என் மாமனாச்சே :D

  • கருத்துக்கள உறவுகள்

அருமையாக எழுதியிருக்கிறீர்கள் விசுகு அண்ணா,குமாரசாமி அண்ணா,மற்று ம் சகாரா அக்கா ஆனால் என்ன கவலை என்டால் முதல் எழுதிய இரண்டு அண்ணாமாரும் டங்குவை மட்டும் நக்கலடிக்காமல் என்னையும் சேர்த்து நக்கலடித்தது தான்...நான் சகாரா அக்காவும்,நிழலியும் கட்டாயம் வந்து எழுத வேண்டும் என எதிர் பார்த்திருந்தேன் அதே மாதிரி அக்கா எழுதி விட்டார்...நிழலியும் வ்ந்து எழுதினால் தான் என்ட மனம் ஆறும் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இசை,

போற போக்கப்பார்க்க ஆறுமுகம் நாவல் பழமும் இங்க வந்து வெண்பா நடையில் தனது தாக்குதலை தொடர்வார் போல கிடக்கு. எதுக்கும் ரெண்டு டபுள் சிவாஸ் அடிச்சிட்டு தெம்பா இருங்க.

பொறுங்கோ.. எல்லாரையும் கொஞ்சம் உள்ளே வர விடுவம்..! :lol:

வணக்கம் வல்வை அக்கா..!! :lol: :lol:

பொறுங்கோ.. எல்லாரையும் கொஞ்சம் உள்ளே வர விடுவம்..! :lol:

வணக்கம் வல்வை அக்கா..!! :lol: :lol:

எங்கே இசை .க காணவில்லை என்று பார்த்தன் வந்திட்டார்...... :D^_^

  • கருத்துக்கள உறவுகள்

பொறுங்கோ.. எல்லாரையும் கொஞ்சம் உள்ளே வர விடுவம்..! :lol:

http://www.youtube.com/watch?v=eEAr3nyrXXg

:lol: :lol: :D^_^

  • கருத்துக்கள உறவுகள்

மொத்தமாக ஊரே சேர்ந்து போட்டுத் தாக்கியிருக்குது. :lol::lol:

அதுக்கு மேலை வடிவேலு வேறை.... :lol:

வாத்தியார்

**********

  • கருத்துக்கள உறவுகள்

எங்கே இசை .க காணவில்லை என்று பார்த்தன் வந்திட்டார்...... :lol::lol:

அண்ணனை... நல்லா உசுப்ப்பேத்தி விடுங்க..! :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

டங்கு பொதுவாழ்க்கைக்கு வந்தால் இது எல்லாம் சகஜம்.மனதை தளல விடமால் அடுத்த பாகத்தை விரைவில் தொடங்கவும். :lol:

இசை அண்ணன இந்த வடி(வே)வி(லி)ல பாங்கனுன்னு ஆசைப்பட்டிட்டீங்க. அண்ணன் விதியை யாரால மாத்திக்க முடியும்..! :lol::D

http://www.youtube.com/watch?v=pLBidYWO89U

:lol:^_^

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களே பரம் .......

.அதிகமாய் எல்லோரும் கிறுக்கி விடார்கள் இந்தக் கத்துக்குட்டி சந்திரமதியும், ஒரு சின்ன கிறுக்கல். கிறுக்க முயல்கிறேன். திருவாளர் விசை ....அந்த வார இறுதியில் நண்பன் ராகவன் அழைத்ததன் B.BQ பார்டிக்கு .....குடும்ப சகிதமாய் சென்று இருந்தனர். திருமதி விசை ..எல்லோருடனம் பேசிகொண்டிருந்தார். நம்ம குட்டி அஞ்சலை ...மூணு வயசு ..ராகவனின் ஒருவயது தம்பியுடன் விளையாட்டு . தூக்கு வதும் கட்டிப் பிடிபதும்..இதை திரு விசை கண்டு விடார். திருமதி விசையை திரும்ப் பார்த்து கண்ணை காட்டினார். அவர் வெட்கத்தில் சிவந்தார்.........வீடுக்கு வந்து எனக்கும் ஒரு தம்பி பாபாவேண்டுமேன்று கேட்க போகிறாளே என்று கற்பனையில் மிதந்தார்.........எல்லாம் சுபமே முடிந்து வீடு திரும்ப ஆயத்தமாகும்போது நம் குட்டி அஞ்சலை தூங்கி விடார். இருவரும் காரில் வீடு திரும்பி .திருவிசை குழந்தையுடன் மாடி ஏறினார். திருமதி விசை ...கிச்சனில் குழந்தைக்கு பால் சூடாக்கி கொண்டு ..மேலே வந்தார். எல்லோரு களைத்து விட்டனர் . உறக்கத்தில் நம் விசைக்கலைஞ்சனுக்கு கனவு ...மகளுக்கும் ஏற்கனவே மூன்று வயதாகிறது .இன்னொரு வாரிசு உருவாகினால் நன்றாயிருக்கும் என்று கதையாய் தொடங்கினார். இவளோடையே மாரடிக்கிறன் ...இன்னொன்றா .. என்று திருமதி விசை திரும்பி படுத்தார். கனவோடு திரு விசை சங்கமித்தார். ஒரு நாள் மாலை வேலை முடிந்து களைத்து .வீடு வாசல் படியேறினார் .... திருமதி ..விசை ..வாயிலில் பால் பாயசமமுடன். ஏனப்பா இன்று லேட்?....... ..ஒரு ப்ரொஜெட் முடிக்கிறதுக்குள் இன்னொரையும் மேனேஜர் ....தொடங்கி அது முடிக்கிறதுக்குள் பட்ட் பாடு ......ஸ் சப்பா ......

என்ன கையில்..ஒரு நாளும் இல்லாமல்.?...அது வந்து ..பாயாசம். என்ன இனிப்பான் செய்தியோ...ம்ம்.................என்னப்பா நான் கேட்கிறான்....".அது " பத்து நாள் தள்ளி போய்விட்டது ...என்றார் திருமதி .....ஐயோ என் செல்லம் என்று சந்தோஷத்தில் கட்டி யனைக்க் முயன்றார். ........ணங் ....என்று சத்தம் ..என்னப்பா குழந்தையின் பால் போத்தலை தட்டி விழுத்தியாச்சா ...............அட சீ .......இது கனவா.................

கவலை வேண்டாம் நல்ல சேதி சீக்கிரம் வரும். ஹா ..............ஹா...................

Edited by நிலாமதி

தொங்குவார் கனடாவுக்கு வந்த புதிதில் வேலை இல்லாமல் அலைந்த அந்த வேளை. :lol:

எங்கு தேடியும் ம்ம்ம் ..ஒரு வேலையும் கிடைத்தபாடில்லை

கண்ணில் பட்டது அந்த விளம்பரம்.

அண்மையில் இறந்த மனுச குரங்கிற்கு பதிலாக ஒரு மனுச குரங்கு தேவை. :D

டொராண்டோ சர்கஸ் கம்பனியின் ஒரு பக்க விளம்பரம்.

திட்டம் போட்டார் தொங்குவார்.

அண்ணே.. நான் வேணும் என்றால் வேலை கிடைக்கும் மட்டும் குரங்காக நடிக்கட்டுமா சர்கஸ் முதலாளியிடம் கெஞ்சினார் தொங்குவார். :lol:

அரியண்டம் தாங்க முடியாமல் தலை ஆட்டினார் அந்த முதலாளி.

பிறகு என்ன தலைகால் தெரியாமல் துள்ளி திரிந்தார் தொங்குவார் இப்போ ஜிம்மியாக. :D:lol:

காலையில் டிப்டொபாக வெளிகிட்டு வந்து எட்டுமணிக்கெல்லாம் வேஷம் போட்டால் இரவு எழு மணியாகும் கழட்டுவதுக்கு. ஒரு 30 டாலருக்காக அப்பப்பா என்ன கஷ்டம் என்ன கஷ்டம் அலுத்துக்கொண்டது ஜிம்மி இல்லை இல்லை டங்கு.

கூட்டுக்குள்ளயே அடைஞ்சு கிடந்து அலுத்து போன ஜிம்மி. முதலாளியிடம் போய் நான் தான் உண்மையான குரங்கு இல்லையே அப்புறம் ஏன் அடைச்சு வைப்பான் என்னை திறந்து விடுங்கள் நான் சாகசம் காட்டுறன் என்று வெளுத்து கட்டினார் தொங்குவார்.

முதலாளியும் திறந்து விட்டார். வாங்கின முப்பது டொலருக்கு சும்மா இல்லை மரம் மரமாக தாவி திரிந்தார் தொங்குவார்.

இப்படி தாவும் போது ஒரு நாள்.

தவறுதலாக விழுந்தார் சிங்கத்தின் கூட்டுக்குள்ளே.

சிங்கம் தொங்குவாரை பார்த்து சிலிர்த்தது.

ஜிம்மிக்குள் இருந்த தொங்குவாருக்கு உடம்பெல்லாம் நடுங்கியது.

ஐயோ ..எண்ட வல்லிபுரத்தானே .. பருத்தித்துறையில் இருந்து கனடாவுக்கு வந்து கடைசியா இந்த சிங்கத்தாலே சாக வேண்டி இருக்கே என்று கத்தி புலம்பினார்.

சிங்கம் எழும்பி கிட்ட வந்தது. :lol:

சிங்கத்தை பார்த்துக்கும்பிட்டார் தொங்குவார். :lol:

கிட்ட வந்த சிங்கம்..தம்பி பயபிடாதே நான் வியாபாரிமூலை தான். நானும் உன்னை மாதிரி தான் போன மாசம் செத்து போன சிங்கதுக்காக வேஷம் போட்டு இருக்கிறேன் என்று தடவி கொடுத்தது.

அப்போதான் போன உயிர் திரும்பி வந்தது ஜிம்மிக்கு.

அன்று முதல் ஜிம்மியும் அந்த சிங்கமும் நண்பர்கள்.சீ சீ ஜிம்மி இல்லை தொங்குவாரும் சிங்கமும் நண்பர்கள் :lol:

எனவே பிள்ளைகளே நீங்களும் தொங்குவாரை போல நல்ல நண்பனை தேடவேண்டும்...

சத்தியமாக இது யாவும் கற்பனை அல்ல...

நன்றி

முக நூல்

தொங்குவார்( விசைக்கலைஞன் )

( தொடரும்) :lol:

அப்பாடா இப்பதான் நிம்மதியா கிடக்கு :lol:

Edited by சுஜி

  • கருத்துக்கள உறவுகள்
:lol: :lol: :lol:

சுஜி ஒரு சந்தேகம்... அந்த வியாபாரிமூலை சிங்கம் நீங்களா??? :lol: :lol: :lol:

சுஜி ஒரு சந்தேகம்... அந்த வியாபாரிமூலை சிங்கம் நீங்களா??? :lol: :lol: :lol:

இல்லை குட்டி. அந்த வியாபாரிமூலை சிங்கம் தான் திருமதி.தொங்குவார். அண்டைக்கு பயப்பட்ட தொங்குவாருக்கு இன்று மட்டும் அந்த பயம் போகவில்லை. இது கூட புரியலையா குட்டி. :lol: :lol: :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.