Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எனக்கு பிடித்த எழுத்தாளார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் அனைவருக்கும் யாழில் எழுதும் அதிகமானோர் கதை,அரசியல்,ஆன்மிகப் புத்தகங்கள் வாசிப்பதில் ஈடுபாடு உடையவராக இருப்பீர்கள்...உங்களுக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர் யார்...எதனாலே உங்களுக்கு அந்த எழுத்தாளாரைப் பிடிக்கும்...அந்த எழுத்தாளர் எழுதிய எந்த நாவல் உங்களை அதிகம் கவர்ந்தது என எழுதுங்கள்...நான் அநேகமாக எல்லோருடைய நாவல்களையும் விரும்பி வாசிப்பேன்...நான் எங்கு சென்றாலும் என்னுடைய முதல் தெரிவு புத்தகம் வாங்குவதாகத் தான் இருக்கும்... நான் விரும்பும் நாவல்களில் நாவலோட்டம் விரைவாக செல்லக் கூடியதாக இருக்க வேண்டும்...வித்தியாசமாக கதைகளை அதாவது குடும்பக்கதை,க்ரைம்,சமூக,விஞ்ஞானம் எல்லாவற்றையும் எழுத தெரிந்தவர்கள் தான் எனது முதல் தேர்வு...அந்த வகையில் எனக்குப் பிடித்த முதலாவது எழுத்தாளார்;

எண்டமூரி விரேந்திரநாத் இவருடைய நாவல்கள் வித்தியாசமான கதை அமைப்பை கொண்டதாகக் காணப்படும்...ஒவ்வொரு கதையும் வித்தியாசமாகக் காணப்படும்...முந்தி நான் ஆக சின்ன வயதாய் இருக்கும் போது படித்த பாடசாலையில் இவரது நாவல்கள் தான் அதிகம் காணப்படும் ஆனால் பின்னர் இவரது நாவல்களை அதிகம் வாசிக்க முடியவில்லை...சமீபத்தில் வாசித்த நாவல்களில் மிகவும் பிடித்தது "பந்தம் பவித்திரம்" என்ட நாவல் யாராவது வாசித்து இருக்கிறீர்களா? இரு வேறுபட்ட மனநிலை கொண்ட பெண்களின் கதை தான் அது.. உங்களுக்கு இவருடைய நாவல்கள் பிடிக்குமா?

உங்களுக்கு பிடித்த எழுத்தாளாரையும் எதனாலே அந்த எழுத்தாளாரை பிடிக்கும் என்பதையும் எழுதுங்கள்...நானும் எனக்கு பிடித்த எழுத்தாளர்களைப் பற்றியும்,அவர்களது நாவல்கள் பற்றியும் தொடர்ந்து எழுதப் போகிறேன்.

  • Replies 152
  • Views 25.6k
  • Created
  • Last Reply

இவரின் கதைகள் படித்துள்ளேன்

எனக்கு பிடித்தவை துளசி தளம்,மீண்டும் துளசி,

வித்தியாசமான மனிதன் ,ராட்சசன்,புஷ்பான்சலி,

இவரி அக்கினி ஊஞ்சல் என்னும் நூல் மிக நல்ல கதை என்று நண்பர் ஒருவர் கூறினார் ஆனால் இன்னும் வாசிக்க கிடைக்க வில்லை,இவர் தெலுங்கு எழுத்தாளர் இவர் கதைகளின் தமிழ் மொழி பெயர்ப்பு கதைகள் விற்பனை ஆகிற அளவிற்கு தெலுங்கில் விற்பனை அளவு குறைவாக இருப்பதாக எங்கேயோ படித்தேன் .விண்வெளி பற்றி ஒரு கதை அதன் பெயர் மறந்து விட்டேன் அதும் மிக நல்ல கதை..இவரின் அனைத்து நூல்களையும் படித்து விடனும் என்று ஆசை,,,,பார்ப்பம்..

மற்ற தமிழ் எழுத்தாளர்களில் நான் படித்தவற்றில் வித்தியா சுப்பிரமணியம்,மணிமாலா,R .சுமதி, ஆகியோரின் கதைகள் பிடிக்கும் அனேகமாக இவர்கள் ஒரே பாணியிலான கதைகள் தான்..love .....பாமிலி......மிடில்கிளாஸ்,.

இந்திரா சௌந்தர்ராஜனின் கதைகள் விறு விறுப்பாக இருக்கும் மர்ம கதைகள் தான் இறுதியாய் இவரின் ஒரு கதை ஜென்ம ஜென்மமாய் ....என்ற ஒரு கதை..ஜூலை 1 ராணி முத்து வில் வந்திருந்தது

கடவுள் நம்பிக்கையே அற்ற ஒரு பணக்காரர் எதிர்பாராத வித மாய் ஒரு சாமியை சந்திக்கிறார்..சாமியோ அவரின் ஆயுள் இன்னும் 108 நாள்கள் தான் என்று கூறுகிறார்.....நீ நான் சொல்வதை நம்பாவிட்டாலும் நீ இங்கிருந்து திரும்பி செல்லும் போது 3 சம்பவங்கள் நடக்கும்..அவை நடந்தால் அவரின் ஆயுள் 108 நாள் தான் என்றும் கூறுகிறார்..

இதற்கு பிறகு நடக்கும் சம்பவங்கள் தான் கதை....கொஞ்சம் நம்புவதற்கு கஷ்டமாக இருந்தாலும் நல்ல கதை... :lol:

Edited by வீணா

  • கருத்துக்கள உறவுகள்

அதிகம் வாசிப்பேன் என்று சொல்ல முடியாது.சுமாராக வாசிப்பேன்.யார் எழுதினார்கள் என்று கவனம் செலுத்துவது குறைவு.என்ன எழுதியிருக்கு என்றுதான் பார்ப்பேன்......

சின்ன வயசில் படங்களை(ஆபாசத்தை தூண்டும்)பார்த்து வாசித்து ஏமாற்றமடைந்தது உண்டு.

தேசத்தின் குரல் அன்டன் பாலசிங்கத்தின் விடுதலை என்ற புத்தகத்தை பல முறை திருப்பி திருப்பி வாசித்திருக்கிரேன்.,,,,,,அதன் பாதிப்பால் தான் இன்று யாழில் நான் சில கிறுக்கல் செய்கிறேன் .,,,,,,,,,,,,எல்லா புகழும் ....தேசத்தின் குரலுக்கே.....

  • கருத்துக்கள உறவுகள்

பூபாலசிங்கம் புத்தகசாலையில் காசு கொடுத்து புத்தகங்களை வாங்கிப் படித்தால் உங்களின் இரசனையும் மாறக்கூடும் :lol:

எனக்குப் பிடித்த எழுத்தாளர்களின் பட்டியலை படிக்கத் தொடங்கிய காலத்தில் இருந்து தருகின்றேன். காரணங்களை நீங்களே ஊகிக்கலாம்!

சாண்டில்யன்

நா. பார்த்தசாரதி

அகிலன்

பாலகுமாரன்

ஜெயகாந்தன்

சுந்தர ராமசாமி

ஜெயமோகன்

மேலும் பலரையும் பிடிக்கும்...

Edited by நிழலி
தவறு ஒன்றும் இல்லை கிருபன்; நீக்கப்பட்ட விடயத்தினை பற்றி எழுதியமையால் அந்தப் பகுதி மட்டும் மட

நல்லதொரு திரி ரதி...பாராட்டுகள்

தமிழில்: (இந்தியா)

1. சுந்தரம் ராமசாமி

2. ஜெயமோகன்

3. கி.ஜா.ரா

4. எஸ்: ராமகிருஷ்ணன்

5. ல.சா.ரா

6. சிறு வயதில்: சுஜாதா & பாலகுமாரன் (பாலகுமாரனின் மெர்க்குயூரிப் பூக்களை மறக்க முடியுமா என்ன?)

புலம் பெயர் இலக்கியம்

1. ஷோபா சக்தி (எனக்கு மிகப் பிடித்த எழுத்தாளர்)

2. வ.ஐ.ச. ஜெயபாலன்

வேற்று மொழிகள் (மொழிபெயர்ப்பு)

1. டால்ஸ்டோய் (ரஷ்ஷியா: அன்னகரீனினா, புத்துயிர்ப்பு..)

2. மக்ஸீம் கார்க்கி (ரஷ்ஷியா)

3. ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி (ரஷ்ஷியா)

4. தகழி சிவசங்கரப்பிள்ளை (மலையாளம்)

இவற்றை விட பல எழுத்தாளர்களின் விருது பெற்ற, நல்ல விமர்சனம் உள்ள புத்தகங்கள், நோபல் பரிசு பெற்ற நாவல்கள் என பல புத்தகங்கள்.....

Edited by நிழலி

  • கருத்துக்கள உறவுகள்

பிடித்த நாவல்கள்...தற்பொழுது நினைவில் நின்றவை

அறிந்த வயதில்

கல்கி - பொன்னியின் செல்வன், பார்த்திபன் கனவு

சாண்டிலயன் - யவன ராணி, கடல்புறா, கன்னிமாடம்

அகிலன் - பாவை விளக்கு

சுஜாதா - பல

அறியா பால்ய வயதில்

steelclaw.jpgMuthu.jpg

சிவகாசியில் பதிப்பித்து வெளிவந்த முத்து காமிக்ஸ் அப்போது புகழ்பெற்ற கதாபாத்திரங்களான இரும்புக்கை மாயாவி, லாரன்ஸ் & டேவிட், ஜானி நீரோ.

நடுநிசிக் கள்வன் - இரும்புக்கை மாயாவி

மஞ்சள் பூ மர்மம் - லாரன்ஸ் & டேவிட்

பெய்ரூட்டில் ஜானி - ஜானி நீரோ

தமிழாக்கம் செய்து வெளியிடப்பட்ட இப்புத்தகங்களின் படங்கள் மிக வசீகரமானவை..இன்றும் எம் கிராமத்து வீட்டின் பரண்மீது சில அரிய புத்தகங்களை பத்திரப்படுத்தியுள்ளேன். என்றாவது முதுமையில் இளமையின் நினைவுகளை சாய்வு நாற்காலியில் இருந்தவாறே அசை போட இவை உதவலாம்.

:lol:

  • கருத்துக்கள உறவுகள்

நான் முன்னொரு காலத்தில் பள்ளியில் குறிப்பிட்ட காலம்.. வகுப்பு மாணவ முதல்வனாக இருந்த போது.. (பிறகு இதையும் புளுகு என்று சொல்லித் திரியாதேங்கோ.. இதெல்லாம் உண்மை பாருங்கோ..! எங்களை மட்டம் தட்டி எழுதினா நிழலி அண்ணன் அதுகளை விட்டு வைச்சு அழகு பார்ப்பார். அவருக்கு அப்படி ஒரு ரசனை..! :lol:)

ராணி முத்து.. ராணிக் கமிக்ஸ்... முத்தாரம்.. இப்படியான பலான கதையோட்டங்களும் கலந்து வரும் புத்தகங்களை நம்ம பசங்க பாடப் புத்தகத்துக்கு நடுவில் வைச்சு படிக்க பிடிச்சிருக்கிறன். பிடிச்சதுகளை வைச்சு ஆராய்ச்சி செய்ததில்.. சும்மா கதைவிடுறதுதான் ஆராய்ச்சி என்னு.. என்ன இருக்கென்று நான் வாசிச்சு பார்த்தது தான் ஆராய்ச்சி... பலான கதையோட்டங்கள் இருந்ததை உணர்ந்திருக்கிறேன்.

பின்னர் தமிழீழ விடுதலைப்புலிகள் ஒரு குறிப்பிட்ட காலத்தின் பின் அந்த புத்தகங்களுக்கு பள்ளிகளிலும் பொது நூல் நிலையங்களிலும் தடை விதித்து விட்டனர்.

அதில பல கதைகள்.. ராஜேஸ்குமார் என்பவரால் எழுதப்பட்டிருந்தன. முழுவதும் பலானமல்ல.. பாலன கதையோட்டங்களைச் செருகி இருந்தார்.

பொதுவாக இந்திய நாவல்கள்.. கதைப் புத்தகங்கள் வாசிப்பது இல்லை... எனக்கு அவற்றில் ஆண்களை ஏதோ பெண்களிற்கு பின்னால் அவர்களையே நினைத்துக் கொண்டே அலையும் கீழ்த்தரமான ஜென்மங்களாகக் காட்டும் வர்ணிக்கும் பாங்கு இருக்கும். அது பிடிப்பதில்லை. அது யதார்த்தத்தில் ஈழத்துக்கு ஒவ்வாததாக இருந்தது.. குறிப்பாக நாங்கள் பிறந்து வளர்ந்திருந்த.. போராட்ட காலத்தில்.

சிறிய வயதில்.. கோகுலம்.. அம்புலிமாமா.. சந்தமாமா.. ஞானபூமி.. கலைக்கதிர்.. ஈழத்து சிரித்திரன் போன்றவை விரும்பிப் படித்திருக்கிறேன்.

நான் விரும்பி விடாமல் படிப்பது விடுதலைப்புலிகள் ஏடு மட்டுமே.

அதில் புதுவை.. கப்டன் வானதி.. வியாசன்.. (லெப்டினன்?) இரும்பொறை.. மற்றும் இதர போராளிகளின் கள அனுபவங்கள் சுமந்த கதைகள்.. கவிதைகள்.. கட்டுரைகள்.. பிடிக்கும். வியாசனும் புதுவை என்றே நினைக்கிறேன்.

Edited by nedukkalapoovan

எண்டமூரி விரேந்திரநாத் இன் நாவல்களை வாசித்துள்ளேன்.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வயதிலும் ஒவ்வொரு ரசனை. எனக்கு

பால வயதில்: அம்புலிமாமா, கல்கி

முகிழாத வயதில் : ஜி நேசன் (மித்திரன் பத்திரிகை) செங்கை ஆழியான், நீல பத்மநாபன், ஜெயகாந்தன், சுஜாதா, சாண்டில்யன் , வைக்கம் பசீர் முகமது, மகாகவி

பருவ வயதில்: வைகறைகால மேகங்கள் (வைரமுத்து) , பாரதியார் கவிதைகள், நீலாவணன் கவிதைகள்.

திரைசித்திரா, பருவ காலம் என இலக்கிய செறிவுமிக்க நூல்கள்.

முகிழ்ந்த வயதில்: கண்ணதாசன் எழுத்துகள், பாலகுமாரன், கி. ஜா. ரா, ஆதிமூலம் கட்டுரைகள், பட்டினத்தார், சிவவாக்கிய சித்தர் பிடிக்கும்.

பின்பு:83 இன் பின் வந்த போராளிகளின் எழுத்து , ஜெயமோகன், சாரு நிவேதிதா, இரா முருகன், ஷோபா சக்தி, உமா வரதராஜன்(அரசனின் வருகை), நிறைய பிற மொழி எழுத்தாளர்கள்.

இதுதான் பிடிக்கும் என்றில்லை.தேடல்கள் தொடர்கின்றன. வாசிக்க விருப்பம்.

Edited by thappili

  • கருத்துக்கள உறவுகள்

பூபாலசிங்கம் புத்தகசாலையில் காசு கொடுத்து புத்தகங்களை வாங்கிப் படித்தால் உங்களின் இரசனையும் மாறக்கூடும் :lol:

எனக்குப் பிடித்த எழுத்தாளர்களின் பட்டியலை படிக்கத் தொடங்கிய காலத்தில் இருந்து தருகின்றேன். காரணங்களை நீங்களே ஊகிக்கலாம்!

சாண்டில்யன்

நா. பார்த்தசாரதி

அகிலன்

பாலகுமாரன்

ஜெயகாந்தன்

சுந்தர ராமசாமி

ஜெயமோகன்

மேலும் பலரையும் பிடிக்கும்...

தமிழனாக பிறந்து தொலைத்தேனே................... என்று இருந்த என்னை.

தமிழன் என்று பெருமைபட வைத்த எழுத்தாளன் சாண்டில்யன். முடிந்தளவு ஆதாரங்களுடன் எழுதிய புத்தகங்கள் என்னை சிறுவயதிலேயே பாதித்தது.

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி குறிப்பிட்டு யாருமே இல்லை.

வாசிக்க தொடங்குவேன். சுவாரசியமாய் இருந்தால் தொடர்வேன்.

மொழி பெயர்ப்பு கதை என்று சொல்லும் போது தப்பியவன் என்ற ஒரு கதை ஈராக் கில் பிரித்தானியாவின் சிறப்பு படையணியில் தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்டு தப்பி வந்த ஒருவரால் எழுதப்பட்டு போராளி ஒருவரால் மொழி பெயர்க்கபட்ட கதை

மற்றையது சிங்கத்தின் குகையில் என்ற கிட்லர் ரின் 600 பேர் கொண்ட சிறுவர் சிறப்பு படையணியின் கதை அதற்கு தலைமை தாங்கியவரினால் எழுதப்பட்டது ..இதும் போராளி ஒருவரினாலே மொழி பெயர்க்கபட்டது

இன்னொன்று கில்லரின் தளபதி ஆக இருந்த ஒருவரின் புத்தகம்

டிராகன் fire என்ற சீனா இந்திய இடையிலான யுத்தம் பற்றிய கதை bbc யின் பணியாற்றிய ஒருவரால் எழுதப்பட்ட புத்தகம்கள் இவற்றின் மொழி பெயர்ப்புகள் இப்போது கிடைக்குமா தெரியவில்லை..

வரலாற்று கதை என்று வரும் போது..சாண்டில்யன்..கல்கி பிடிக்கும்..மிகப்பிடித்தது யவன ராணி ,பொன்னியின் செல்வன் 3 ஆவது முறையாக கொஞ்சநாளைக்கு முன்னர் தான் on line ல வாசிச்சு முடிச்சன்.. அகிலனின் வேங்கையின் மைந்தன் கதை பிடிச்சிருந்தது..

இன்னொரு கதை மகுடநிலா எழுத்தாளர் பெயர் மறந்து விட்டன் ஆதித்த சோழன் வியஜாலய சோழன் கதை

:lol:

இந்த இணைப்பில் போனால் பொன்னியின் செல்வன் online ல வாசிக்கலாம் ஏனைய கல்கியின் புத்தகம்களும் இருக்கு..

http://www.tamilreader.org

அகிலனின் வேங்கையின் மைந்தன்

http://www.tamilvu.org/library/lA204/html/lA204cnt.htm

Edited by வீணா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கிருபன் ஊரில இருக்கும் போது நான் வாசிகசாலையில் தான் புத்தகங்களை எடுத்து வசிப்பதுண்டு...வசதியின்மை காரணமாக வாங்குவதில்லை ஆனால் இங்கு வந்த பின்பு பூபால சிங்கம் புத்தகசாலையில் தான் புத்தகங்கள் வாங்குவது...ஆனால் இங்கு அவர்களிடம் நான் சென்ற போது பாலக்குமாரனின் புத்தகம் தான் அதிகம் இருந்தது...என்னிடமும் ராஜேஸ்குமாரின்,பாலக்குமாரின் புத்தகமும் தான் அதிகமுள்ளது...இருவரின் புத்தகமும் சேர்த்து 150 புத்தகங்கள் என்னிடம் உள்ளது அதைத் தவிர சுஜாதா,ப.பிரபாகர்,இந்திரா சௌந்தரராஜன்,அனுராதா ரமணன்,சுபா மேலும் சில நூலார்களின் புத்தகங்ளும் உண்டு.

சாண்டிலியனின் புத்தகத்தை வாசித்ததுண்டு ஆனால் அவருடைய நாவல்கள் சில ஓவர் செக்ஸ் என முந்தி வீட்டில் வாசிக்க விடுவதில்லை... ஜெயகாந்தன்,நா. பார்த்தசாரதி,அகிலன் ஆகியோரின் ஒரு சில கதை வாசித்திருக்கேன்...சுந்தர ராமசாமி,ஜெயமோகன்,எஸ்: ராமகிருஷ்ணன் போன்றவர்களின் சிறுகதைகள் வாசித்திருக்கிறேன் ஆனால் நாவல் வாசித்ததில்லை அவர்களும் நூல்கள் எழுதி இருக்கிறார்களா? என்ன நூல்கள் என தயவு செய்து அறியத் தருவீர்களா?...பொன்னியின் செல்வன் என்னிட‌ம் பாகம் 1 இல் இருந்து 5 வரை உள்ளது...வேங்கை மைந்தன் சின்னனில் வாசித்து இருக்கிறேன் ஆனால் தற்போது மறந்து விட்டது இந்நூலை வேண்டி வைக்க வேண்டும் என்பது எனது ஆசை.

உங்களுக்கு தெரிந்த சிறந்த எழுத்தாளர்களின் நூல்களைப் பகிர்ந்து கொண்டால் அது எம்மை போன்றவர்களுக்கு பிர‌யோச‌னமாய் இருக்கும்...நன்றி.

இன்னாரென்று இல்லாமல் குமுதம் ஆனந்தவிகடன் தான் எனது நினைவுக்கு எட்டிய முதல் வாசிப்புக்கள்.எனது பெற்றோர் இருவரும் வாசிப்பையே வாழ்க்கையாக கொண்டவர்கள் .இன்றும் அவர்களுக்கு குமுதம்,ஆனந்தவிகடன்,குங்குமம்,கல்கி வாரவாரம் வீட்டிற்கு வந்து ஒருவர் கொடுக்கின்றார்.வயது 85,80.சிறுவயதில் ஏனோ மற்றவர்கள் போல் வேதாளன் கதைகளை நான் பெரிதாகவிரும்பி வாசிக்கவில்லை.அண்ணர் வேதாளன் பைத்தியம்.எனக்கு சரித்திர கதைகளுமேனோபிடிப்பதில்லை.கல்கியும்,சாண்டில்யனும் ஓரிரு கதைகளுடன் சரி.பின்னர் கண்டத்தையும் படித்தால் பண்டிதனாகலாம் என்ற ரீதியில் ஒரே வாசிப்புத்தான்.ஜெயகாந்தன்,சுஜாதா,பாலகுமாரன்,புஸ்பா தங்கத்துரை(சிவப்பு விளக்கு கதைகள்,ஒரு ஊதாப்பு கண்சிமிட்டுகின்றது),அசோக மித்திரன்,வண்ணநிலவன் எனபட்டியல் மிக நீளம்.பின்னர் ஜெயமோகன்,இராம கிருஸ்ணன் என தொடர்கின்றது

டெல்கியின் தனிமை அமெரிக்கன்,ரஸ்யன் நூலங்களில் அங்கத்தவனாகி பல நல்ல ரஸ்ய மொழிபெயர்புகளையும் படிக்க வைத்தது.

எம்மவரில் பாலகுமார்(நிலக்கிளி)செங்கை ஆழியான்,உமா வரதராசன்,கருணாமூர்த்தி,சோபா சக்தியென இன்னமும் தொடர்கின்றது.

வாசித்ததில் பிடித்தது என்றால் "செம்மீன்".அழுது அழுது வாசித்த நாவலது.

எம்மவரில் கோவிந்தனின் "புதியதோர் உலகம்"புளொட்டின் உட்கொலைகள் பற்றியது.

எனது உடன் பிறப்புக்களூம் சில கதைகள்,கவிதைகள் எழுதியுள்ளார்கள் .மனைவியும் "தாயகம் "என்று முன்னர் வந்த ஒரு பத்திரிகையில் ஒரு கதை எழுதினா.

சில எழுத்தாளர்களை நேரில் சந்த்தித்தும் இருக்கின்றேன்.ஓவியர் மணியம் செல்வன் வீட்டிற்கு ஒரு கலண்டர் தொடர்பாக படம் வரைய போனேன்.கதைத்துக் கொண்டிருக்கும் போது நீங்கள் முன்பு வேறு பெயரில் தானே ஓவியம் வரைந்துவந்தீர்களென கேட்டேன்.அவருக்கு ஒரே அதிர்ச்சி.தமிழ் நாட்டில் இருப்பவர்கள் பலருக்கே இது தெரியாது உமக்கு எப்படி தெரியும் என்று திகைப்புடன் கேட்டார்.

ஏதோ கூட எழுதுகின்றேன் போலிருக்கு சந்தர்ப்பம் வரும்போது எழுத வேண்டும் போலும் உள்ளது.ந்டிகர் ராஜேஸ் வீட்டிற்கு போயிருக்கும் போது அவரது வீட்டு சோகேஸில் "வரலாற்று பொருள் முதல் வாதமும்,கொம்மினுஸ்ட் மனுபஸ்டோவும்" இருந்தது.இதெல்லாம் நீங்கள் வாசிப்பீர்களா என ஒரு கேள்வி கேட்டேன்.மனுசன் நீர் வாசித்தீரா எனக் கேட்டு ஒரு இரண்டுமணித்தியாலம் புத்தகங்கள் பற்றியும்,கொலிவூட் படங்கள் பற்றியும்,எமது போராட்டம் பற்றியும் கதைதோம்.அன்றுகாலை அவர் வீட்டில்தான் இட்டலியும் சாப்பிட்டேன்.அவர் வீட்டு சுவரில் ஸ்டீவ் மக்குயினின்படமும் அந்தோனி குயினின் படமுமுள்ளது

  • கருத்துக்கள உறவுகள்

சிறு வயதில் அம்புலிமாமாவோடு ஆரம்பித்த எனது வாசிப்பு பளக்கம் இப்போ வரை தொடர்கிறது..அந்தவரிசையில் இப்போ இணையம்,இணையமாக தேடி வாசிப்பேன்.எழுத்தாளர்களை வரிசைப் படுத்த ஏலாது காரணம்.....யாருடைய கதைகள் என் மனதுக்கு பிடிக்கிறதோ அவற்றை வாசிப்பேன்.

http://www.keetru.com

Edited by யாயினி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் முன்னொரு காலத்தில் பள்ளியில் குறிப்பிட்ட காலம்.. வகுப்பு மாணவ முதல்வனாக இருந்த போது.. (பிறகு இதையும் புளுகு என்று சொல்லித் திரியாதேங்கோ.. இதெல்லாம் உண்மை பாருங்கோ..! எங்களை மட்டம் தட்டி எழுதினா நிழலி அண்ணன் அதுகளை விட்டு வைச்சு அழகு பார்ப்பார். அவருக்கு அப்படி ஒரு ரசனை..! :))

பெண் என்றால் பேயும் இரங்கும், நிழலி என்ன பேயை விட கேவலமா?

:):D:):D:lol:

Edited by சித்தன்

  • கருத்துக்கள உறவுகள்

குறிப்பிட்டு இன்னார் என்றில்லை, அநேகமாய் பலரினதும் புத்தகங்கள் நூலகங்களிலும், மற்றும் கடைகளில் வாங்கியும் படிப்பதுண்டு. வெ. இறையன்புவின் புத்தகங்களும் இப்ப கொஞ்சம் பிடிக்கிறது! :)

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன் ஊரில இருக்கும் போது நான் வாசிகசாலையில் தான் புத்தகங்களை எடுத்து வசிப்பதுண்டு...வசதியின்மை காரணமாக வாங்குவதில்லை ஆனால் இங்கு வந்த பின்பு பூபால சிங்கம் புத்தகசாலையில் தான் புத்தகங்கள் வாங்குவது...ஆனால் இங்கு அவர்களிடம் நான் சென்ற போது பாலக்குமாரனின் புத்தகம் தான் அதிகம் இருந்தது...என்னிடமும் ராஜேஸ்குமாரின்,பாலக்குமாரின் புத்தகமும் தான் அதிகமுள்ளது...இருவரின் புத்தகமும் சேர்த்து 150 புத்தகங்கள் என்னிடம் உள்ளது அதைத் தவிர சுஜாதா,ப.பிரபாகர்,இந்திரா சௌந்தரராஜன்,அனுராதா ரமணன்,சுபா மேலும் சில நூலார்களின் புத்தகங்ளும் உண்டு.

சாண்டிலியனின் புத்தகத்தை வாசித்ததுண்டு ஆனால் அவருடைய நாவல்கள் சில ஓவர் செக்ஸ் என முந்தி வீட்டில் வாசிக்க விடுவதில்லை... ஜெயகாந்தன்,நா. பார்த்தசாரதி,அகிலன் ஆகியோரின் ஒரு சில கதை வாசித்திருக்கேன்...சுந்தர ராமசாமி,ஜெயமோகன்,எஸ்: ராமகிருஷ்ணன் போன்றவர்களின் சிறுகதைகள் வாசித்திருக்கிறேன் ஆனால் நாவல் வாசித்ததில்லை அவர்களும் நூல்கள் எழுதி இருக்கிறார்களா? என்ன நூல்கள் என தயவு செய்து அறியத் தருவீர்களா?...பொன்னியின் செல்வன் என்னிட‌ம் பாகம் 1 இல் இருந்து 5 வரை உள்ளது...வேங்கை மைந்தன் சின்னனில் வாசித்து இருக்கிறேன் ஆனால் தற்போது மறந்து விட்டது இந்நூலை வேண்டி வைக்க வேண்டும் என்பது எனது ஆசை.

உங்களுக்கு தெரிந்த சிறந்த எழுத்தாளர்களின் நூல்களைப் பகிர்ந்து கொண்டால் அது எம்மை போன்றவர்களுக்கு பிர‌யோச‌னமாய் இருக்கும்...நன்றி.

நானும் ஊரில் புத்தகங்களை வாங்கிப் படித்ததில்லை. வாங்கிய ஒரேயொரு புத்தகம் தெணியான் எழுதிய "பொற்சிறையில் வாடும் புனிதர்கள்". எனினும் பாடசாலை நூல் நிலையத்திலும், கிராமசபை, பட்டின சபை, மற்றும் ஊருக்கொன்றாக உள்ள வாசிகசாலைகளிலும் உள்ள புத்தகங்களையும் சஞ்சிகைகளையும் வாசிக்கச் சந்தர்ப்பம் கிடைத்தது.

சாண்டில்யனின் புத்தகங்களை எட்டாம் வகுப்பிற்குப் பின் படிப்பதை நிறுத்திவிட்டேன் :D

அவர் ஒரு முத்திரையின் பின்பக்கத்தில் எழுதவேண்டியதை ஒன்றிரண்டு பக்கங்களுக்கு நிறைய வர்ணனைகளுடன் நீட்டிமுழக்குவார்.

நா. பார்த்தசாரதியின் கதைகளில் எப்போதும் இலட்சிய மாந்தர்கள் இருப்பார்கள்.

இந்திரா பார்த்தசாரதி (போலந்தில் உள்ள வார்சாவில் இருந்திருக்கவேண்டும்) என்றவரையும் பிடிக்கும். அவருடைய "குருதிப்புனல்" (கமலின் படக்கதை அல்ல) நல்லதோர் நாவல். தமிழர் அவைக்காற்றுக் கழகம் (பாலேந்திரா) அடிக்கடி பேடையேற்றும் "மழை" நாடகமும் இவருடையதுதான்.

என்னிடமும் நூறு/இருநூறு தமிழ்ப் புத்தகங்கள் உள்ளன, எனினும் நீங்கள் குறிப்பிட்டவர்களினது புத்தகங்கள் அவற்றில் அடங்கவில்லை!!

சுந்தரசாமியின் (http://sundararamaswamy.com/) நாவல்கள் மூன்றும் என்னிடம் உள்ளன:

ஒரு புளியமரத்தின் கதை

ஜே.ஜே. சில குறிப்புக்கள்

குழந்தைகள், பெண்கள், ஆண்கள்

ஜெயமோகனின் நாவல்களின் பட்டியலை இங்கு காணலாம்.

http://www.jeyamohan.in/?page_id=359

ஏழாம் உலகம், கொற்றவை இன்னமும் கையில் கிடைக்கவில்லை. மற்றவை உள்ளன.

நல்ல தமிழ் நாவல்களின் பட்டியல்:

http://www.jeyamohan.in/?p=84

எங்களுக்கு ஆங்கிலம் படிப்பித்த ஆசிரியர் ஒரு கதை சொன்னார். ஒருவர் தனது நண்பனின் வீட்டுக்குச் சென்றபோது, அந்த நண்பர் பெருமையாக தனது படிப்பறையைக் (study room) காட்டினாராம். அங்கு பல அரிய புத்தகங்கள் புத்தக அலுமாரிகள் முழுவதும் இருந்தனவாம். இவர் கன காலம் தேடித்திரிந்த புத்தகம் ஒன்றைக் கண்ணுற்றதும் அதை இரவல் தருமாறு கேட்டபோது, அந்த நண்பர் "இந்தப் புத்த்கங்கள் எல்லாம் மற்றவர்களிடம் இரவல் வாங்கியே சேகரித்தது" என்றாராம். அத்துடன் தான் மற்றவர்களுக்கு இரவல் கொடுப்பதில்லை என்றும் சொன்னாராம். :)

பி.கு. நான் இரவல் வாங்கிப் புத்தகங்களைச் சேகரிக்கவில்லை. :)

  • கருத்துக்கள உறவுகள்

அம்புலிமாமா, குமுதம் விகடன் அளவில்தான் என்ர வாசிப்பு இருந்தது. :D அதன்பின்பு கதைகள் படிக்குமளவுக்கு என்னுள்ளில் புரட்சியை ஏற்படுத்திய எழுத்தாளர்கள் இருவர்..! :)

1) தமிழ்வாணன்

2) சரோஜாதேவி

:):D:lol:

இதில் குறிப்பிடுவது நடிகையை மட்டுமென்றே கொள்ளவேண்டும். இல்லையா டங்கு? :)

  • கருத்துக்கள உறவுகள்

இன்னாரென்று இல்லாமல் குமுதம் ஆனந்தவிகடன் தான் எனது நினைவுக்கு எட்டிய முதல் வாசிப்புக்கள்.எனது பெற்றோர் இருவரும் வாசிப்பையே வாழ்க்கையாக கொண்டவர்கள் .இன்றும் அவர்களுக்கு குமுதம்,ஆனந்தவிகடன்,குங்குமம்,கல்கி வாரவாரம் வீட்டிற்கு வந்து ஒருவர் கொடுக்கின்றார்.வயது 85,80.சிறுவயதில் ஏனோ மற்றவர்கள் போல் வேதாளன் கதைகளை நான் பெரிதாகவிரும்பி வாசிக்கவில்லை.அண்ணர் வேதாளன் பைத்தியம்.எனக்கு சரித்திர கதைகளுமேனோபிடிப்பதில்லை.கல்கியும்,சாண்டில்யனும் ஓரிரு கதைகளுடன் சரி.பின்னர் கண்டத்தையும் படித்தால் பண்டிதனாகலாம் என்ற ரீதியில் ஒரே வாசிப்புத்தான்.ஜெயகாந்தன்,சுஜாதா,பாலகுமாரன்,புஸ்பா தங்கத்துரை(சிவப்பு விளக்கு கதைகள்,ஒரு ஊதாப்பு கண்சிமிட்டுகின்றது),அசோக மித்திரன்,வண்ணநிலவன் எனபட்டியல் மிக நீளம்.பின்னர் ஜெயமோகன்,இராம கிருஸ்ணன் என தொடர்கின்றது

டெல்கியின் தனிமை அமெரிக்கன்,ரஸ்யன் நூலங்களில் அங்கத்தவனாகி பல நல்ல ரஸ்ய மொழிபெயர்புகளையும் படிக்க வைத்தது.

எம்மவரில் பாலகுமார்(நிலக்கிளி)செங்கை ஆழியான்,உமா வரதராசன்,கருணாமூர்த்தி,சோபா சக்தியென இன்னமும் தொடர்கின்றது.

வாசித்ததில் பிடித்தது என்றால் "செம்மீன்".அழுது அழுது வாசித்த நாவலது.

எம்மவரில் கோவிந்தனின் "புதியதோர் உலகம்"புளொட்டின் உட்கொலைகள் பற்றியது.

எனது உடன் பிறப்புக்களூம் சில கதைகள்,கவிதைகள் எழுதியுள்ளார்கள் .மனைவியும் "தாயகம் "என்று முன்னர் வந்த ஒரு பத்திரிகையில் ஒரு கதை எழுதினா.

சில எழுத்தாளர்களை நேரில் சந்த்தித்தும் இருக்கின்றேன்.ஓவியர் மணியம் செல்வன் வீட்டிற்கு ஒரு கலண்டர் தொடர்பாக படம் வரைய போனேன்.கதைத்துக் கொண்டிருக்கும் போது நீங்கள் முன்பு வேறு பெயரில் தானே ஓவியம் வரைந்துவந்தீர்களென கேட்டேன்.அவருக்கு ஒரே அதிர்ச்சி.தமிழ் நாட்டில் இருப்பவர்கள் பலருக்கே இது தெரியாது உமக்கு எப்படி தெரியும் என்று திகைப்புடன் கேட்டார்.

ஏதோ கூட எழுதுகின்றேன் போலிருக்கு சந்தர்ப்பம் வரும்போது எழுத வேண்டும் போலும் உள்ளது.ந்டிகர் ராஜேஸ் வீட்டிற்கு போயிருக்கும் போது அவரது வீட்டு சோகேஸில் "வரலாற்று பொருள் முதல் வாதமும்,கொம்மினுஸ்ட் மனுபஸ்டோவும்" இருந்தது.இதெல்லாம் நீங்கள் வாசிப்பீர்களா என ஒரு கேள்வி கேட்டேன்.மனுசன் நீர் வாசித்தீரா எனக் கேட்டு ஒரு இரண்டுமணித்தியாலம் புத்தகங்கள் பற்றியும்,கொலிவூட் படங்கள் பற்றியும்,எமது போராட்டம் பற்றியும் கதைதோம்.அன்றுகாலை அவர் வீட்டில்தான் இட்டலியும் சாப்பிட்டேன்.அவர் வீட்டு சுவரில் ஸ்டீவ் மக்குயினின்படமும் அந்தோனி குயினின் படமுமுள்ளது

வன்னிக்கு போய்வந்தவர்களை சந்திச்ச அனுபவமே தாங்க முடியவில்லை.............

இதில புத்தகங்கள் எழுதின சிலரையும் சந்திச்சிருக்காராம்.

பேசாம யாழுக்கு வாறத கொஞ்சநாளைக்கு நிற்பாட்டுவது உத்தமம் போல் உள்ளது!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கிருபன் இணைப்பிற்கு நன்றி...சுந்தரசாமியின் இணைப்பு வேலை செய்யவில்லை...நான் ஒன்றும் புத்தகங்களை திருடி சேர்க்கவில்லை :) கஸ்டப்பட்டு உழைத்த காசில வேண்டினது....சின்ன வயதில் இருந்து எனக்கு விறுவிறுப்பான கதைகளை அதுவும் கிரைம் கதைகள் வாசிப்பதில் தான் விருப்பம்...பொழுது போகா விட்டால்,மனதிற்கு ஏதாவது கஸ்டம் என்டால் இப்படியான கதைகளை வாசித்தால் மனதிற்கு இதமாக இருக்கும்... ஆனால் எல்லாருடைய கதைகளையும் வாசிப்பேன் ரமணிச் சந்திரனை தவிர அவருடைய வாசகிகள் தயவு செய்து என்னை மன்னிக்கவும்...அவருடைய கதைகள் பெண்களை கனவுலகத்தில் தான் வைத்திருக்க உதவும் என்பது என் கருத்து இதில் மற்றவர்களுக்கு மறுப்பு கருத்து இருக்கலாம்...ஒவ்வொருவருக்கும் ரசனை வேறுபடும் தானே...சில வேளை ஒரு வயதிற்குப் பிறகு ரசனை மாறுமோ தெரியாது.

நான் இத் திரியை ஆர‌ம்பித்த த‌ன் நோக்கம் எல்லா வகை எழுத்தாளர்களையும் எல்லோரும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத் தான்.

  • கருத்துக்கள உறவுகள்

இதில் குறிப்பிடுவது நடிகையை மட்டுமென்றே கொள்ளவேண்டும். இல்லையா டங்கு? :D

:):D:)

  • கருத்துக்கள உறவுகள்

நான் இத் திரியை ஆர‌ம்பித்த த‌ன் நோக்கம் எல்லா வகை எழுத்தாளர்களையும் எல்லோரும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத் தான்.

இங்கே சென்று பாருங்க அம்மணி.

http://www.chennailibrary.com/

எல்லா வகையான புத்தகங்கள், மற்றும் பல எழுத்தாளர்கள் எழுதிய புத்தகங்கள் நிறைந்து கிடைக்கிறது.

தேவையான சிலவற்றை அச்சடித்தும் புத்தகமாய் வைத்திருக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன் இணைப்பிற்கு நன்றி...சுந்தரசாமியின் இணைப்பு வேலை செய்யவில்லை...நான் ஒன்றும் புத்தகங்களை திருடி சேர்க்கவில்லை :D கஸ்டப்பட்டு உழைத்த காசில வேண்டினது....

சரியான இணைப்பு: http://sundararamaswamy.com/

கஸ்டப்பட்டு உழைத்த காசுக்கு சுடிதாரும் சாறியும், தங்க நகையும் வாங்காமல் விட்ட "ரதி" நீங்களாகத்தான் இருக்கும் :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.