Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இப்படியே மடியப் போகின்றோமா??

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பினத்தவர் போன்று அடையாளம் இழந்து, மொழியிழந்து, இனவுணர்வு இழந்து வெறும் தோலை மட்டுமே அடையாளமாகக் கொண்ட ஒரு இனமாக நாம் அழியப் போகின்றோமா? புலம்பெயர்ந்து ஒவ்வொரு நாட்டிலும் பிரிந்து வாழ்வது ஒரு வேதனையாக இருக்க, மறுபக்கம் எம் சமுதாயம் அடையாளங்கள் இழந்து வெறும் சடப்பொருளாக மாறிக் கொண்டிருக்கின்றது. எம் தலைமுறை கடந்து அடுத்த தலைமுறை எவ்வாறு வாழும் என்பதை நினைக்கவே அச்சமாக உள்ளது. முக்கியமாக இதைப் பற்றி விவாதிக்கவோ, சிந்திக்கவோ யாரும் தயாராக இல்லை போலத் தோன்றுகின்றது. அதை நினைத்தால் தலையிடி என்று கண்டு கொள்ளாமையால் வாழ்கின்றோம்.

சரி.. நாம் எம் தலைமுறைக்கு என்னத்தை விட்டுச் செல்லப் போகின்றோம். எனி தமிழீழத்தைச் சிங்கள ஆக்கிரமிப்பில் இருந்து மீட்க முடியுமா என்று தெரியவில்லை. பலரும் போய் வாழ்கின்ற எண்ணத்திலும் இல்லை.

இங்கிருந்து என்ன செய்யலாம்?

  • Replies 50
  • Views 3.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இங்கிருந்து ஒவ்வொருவராய் திருப்பியனுப்ப முற்படும் போது விழித்துக்கொள்வார்களா?

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் இங்கு பதியப் படும் கருத்துக்களை பார்க்கும் போது........

இப்படியான இனத்துக்காகவா இவ்வவளவு கஷ்டபட்டார்கள் என்னும் விரக்தியே மிஞ்சுகின்றது.

அங்கு தினமும் தமிழனின் பூர்வீகமண் பறி போகின்றது, தமிழன் பிச்சை எடுக்கின்றான் அதனை எப்படி தவிர்க்கலாம் என்பதை விட்டு... சுயமாக இயங்கும் நாடு கடந்த அரசுக்கும் களங்கம் ஏற்படுத்தும் நோக்குடன் அறிக்கைகள் விட்டுக் கொண்டிருப்பதை பார்க்க..... இந்த இனம் இப்படியே அழிந்து போகட்டும்.

உலகிலேயே ஒற்றுமை இல்லாத இனம் கேடு கெட்ட தமிழ் இனம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சில விடயங்கள் தவிர்க்க முடியாது. பலருக்கு மன அழுத்தம். எனக்கெல்லாம் கண்டதுக்கு எல்லாம் கோபம், எரிச்சல் வருகின்றது. இப்படி முன்பு நான் இருந்ததில்லை.

சிறிலங்கா அரசு ஏதாவது எமக்குத் துன்பம் செய்து விடும் என்ற அச்சத்தில் பலரையும் பலரும் சந்தேகிக்கின்றார்கள். எல்லாம் முடிந்து விட்டது. இருப்பவர்கள் நிம்மதியாக இருக்கட்டும் என்ற ஒரு பிரிவும், மறுபக்கம் அழிவுகள் எமக்குப் புதிதல்ல என்ற கோணத்தில் சிந்திக்கும் மற்ற பிரிவு இருப்பினும் அடிப்படையில் இருவரும் ஒரே கொள்கையில் உண்டானவர்களே!

அதனால் தான் கேட்கின்றேன். இப்படியே நாம் அழிந்து விடாமல் ஏதாவது செய்யணும். அதற்கு ஆக்கபூர்வமாக சிந்திக்க வேண்டும். நமக்குள் ஒரு மொசாட் போன்று ஒன்றையாவது உருவாக்க வேண்டும்.

அது அழிவு பற்றித் தான் இருக்க வேண்டுமென்றில்லை. ஒவ்வொரு தமிழனின் தரத்தையும் உயர்த்துவற்காகக் கூட இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கிருந்து என்ன செய்யலாம்?

இன்று வேலையில் எனது நண்பன் சொன்னார் இப்ப யாழ்ப்பாணதில ஒரு பிரச்சனையும் இல்லையாம் ,எல்லா சனமும் ஊருக்கு போயிட்டு வருயினமாம்,83 ஆம் ஆண்டுக்கு முதல் இருந்த மாதிரி இப்ப பஸ் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் போகுதாம்....... :o:unsure::(

இப்படியான் கருத்தையாவது நாங்கள் சொல்லாமல் மெளனம் காத்தாலே பெரிய உதவியாக இருக்கும்

கரிபியன், ரெயூனியன் மற்றும் மொறிசியஸ் தீவுகளில் தமிழர்களைப் பார்த்தபோது பெருமையாக இருந்தாலும் அவர்கள் இப்போது தமது அடையாளங்களை இழந்து கொண்டிருப்பது வருத்தமாக உள்ளது. இவர்களது உள்ளூர் மொழியான கிறெயோல் பல மொழிகளின் கலப்பாக இருந்தபோதிலும் தமிழ்ச் சொற்களின் கலப்பு சிறிதளவிலும் இல்லை. இங்குள்ள தமிழர்கள் தமது அடையாளங்களில் முதலில் இழந்தது தமிழ் மொழியைத்தான். இதற்கான காரணம் தமிமுக்கான அவசியமும் இந்தியாவுடனான மொழித் தொடர்பும் இல்லை என்பதால்.

புலம்பெயர்ந்த இன்றைய சந்ததியினரில் பெரும்பாலானோர் தாய்நாட்டுடன் தொடர்புகளை வைத்திருப்பது ஆறுதலான விடயம். அடுத்தடுத்த சந்ததியினரையும் இத் தொடர்புகளைப் பேண வைப்பதுதான் கடினமானது. தமிழ்மொழியை இங்கு பிறக்கும் பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுப்பது ஒவ்வொரு பெற்றோரினதும் கடமையாகும். இப்போது நடத்தப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ்ப் பாடசாலைகளை எவ்வளவு காலத்திற்குக் கொண்டு செல்லலாம் என்பதும் கேள்விக்குறி.

அடுத்து, வேதனையான விடயம், பெரும்பாலான தமிழருக்கு தமது இனம் அழிவதை பற்றியோ தமிழரின் எதிர்காலத்தைப் பற்றியோ என்றுமே கவலைப் பட்டதில்லை. அவர்களது சிந்தனை யாவும் தமது பிள்ளைகளைப் பற்றியது மட்டுமே. எமது சமூகத்தில் உள்ள பிரிவினை வாத முறைகள் ஒழிக்கப்பட்டு பொருளாதாரத்தில் கணிசமான வளர்ச்சியை அடைந்தால் மட்டுமே எமது இனத்தைப் பாதுகாக்கக் கூடிய பாதையை நோக்கி நகர முடியும் என்பது எனது கருத்து.

இங்கு லண்டனில் ஆங்கிலப் பாடசாலைகளில் தமிழை கற்பிக்க தொடங்கியுள்ளார்கள் அதனால் மொழி அழிந்து போகும் என பயப்படத் தேவையில்லை...பிள்ளைகளுக்கு தமிழ் கதைக்க விருப்பம் இருந்தாலும் பெற்றோர் தான் சில நேரங்களில் விடுவதில்லை அவர்களும் தற்போது தமிழை கட்டாயம் பாடசாலையில் படிக்க வேண்டிய கட்டாயம் உள்ளதால் தற்போது தமிழ் ஆசிரியர்களை தேடி ஓடி திரிகிறார்கள் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அடக்கப்பட்ட மக்களின் போராட்டங்கள் தோற்றதாக வரலாறு இல்லை

அந்த மக்களுடன் சுமூகமான பேச்சுவார்த்தைகளையோ அல்லது அவர்களுக்கான தேவைகளையோ நிறைவேற்றாது தொடர்ந்து அடிமைப்படுத்து முனைந்த எந்த அடக்குமுறையாளர்களும் வென்றதில்லை

ஒரு இனம் அமுக்கப்படும்போது...

அது தோற்றுவிட்டதாகவும் அது தனது சுய கௌரவத்தை இழந்துவிட்டது போலும் வெளியில் தெரியலாம்

ஆனால் அது அடக்கப்பட்டு கொண்டிருக்கையில் அதன் தன் மானம் தூங்கிவிடாது

அதற்கான சந்தர்ப்பத்தை அது தேடியபடி இருக்கும்

அதற்கான கால நேரங்கள் அமையும்வரை தன்னை முடவனாக்கி காத்திருக்கும்

அந்த சந்தர்ப்பம் வரும்போது...

அது தன்னை விடுவிக்க தொடங்கும்

இதற்கான சமீபத்திய வரலாறு காஸ்மீர் போராட்டம்

அது அழிந்துவிட்டதாக எழுதாதவர் இல்லை

ஆனால் இன்று வீறுகொண்டெழுந்துள்ளது

தன்னை விடுவிக்கும்நிலைக்கு வந்துள்ளது

எனவே ராஜபக்ஸவுக்கு இது நல்லதொரு சந்தர்ப்பம்

அதை அவர் பயன்படுத்தாவிடில்...

அல்லது

தொடர்ந்து தமிழரை அடக்குவாராயின்...

அவரது காலத்தில் தமிழினம் அடிமைப்பட்டு கிடக்கலாம்

ஆனால் புலம்பெயர்பலத்துடன் சேர்த்து அது ஒரு நாள் மீண்டெழும்

அது வரை

தற்போது நாடு கடந்த அரசுக்கு தெரிவு செய்யப்பட்டவர்கள்

எம்மோடு நின்றவர்கள் எமக்காக பாடுபட்டவர்கள்

ஆனால் அவர்கள்மீது நாம்பலவாறு தூற்றிக்கொண்டிருக்கின்றோம்

அவர்களை நம்பி வாக்களித்தநாம்...

அவர்களுக்கு தொடர்ந்து இடைஞ்சல்களையே செய்தபடியுள்ளோம்

இது நல்லதல்ல...

அதற்கு மாறாக

அவர்களுக்கு என்ன தேவை

அவர்களது அடுத்த நடவடிக்கை என்ன

அவர்களது வேலைப்பளு என்ன

அவர்கள் எம்மிடமிருந்து என்ன எதிர்பார்க்கின்றார்கள்.....

போன்றவற்றை அறிந்து அவர்களுடன் தொடர்புகளைப்பேணி

அவற்றை செய்து கொடுத்தலே தற்போது நாம் செய்யவேண்டியவை.

இதையே நான் செய்கின்றேன்

அதனால்தான் நான் தெளிவாக உள்ளேன்

மற்றவர்களையும் அவர்களுடன் இணையுமாறு கேட்கின்றேன்நன்றி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரதி. அது இனவுணர்வோடு உணர்படுகின்ற விடயமா? அது சில தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக அன்றி மொழியை அறிய வேண்டும் என்ற ஆவலில் அல்ல. உண்மையில் மொழி என்பது ஒரு ஊடகம். அது பாவிக்கும்போது தான் அதன் தேவை வரும். தமிழ் தெரியும் என்பதற்காக வீட்டில் குழந்தைகளோடும், சமூகத்தோடும் பிறமொழியில் பேசிக் கொண்டிருந்தால் தமிழ் தேவையில்லாமல் போய் விடும். முற்காலத்தில் தமிழ் ஆர்வலர்கள் மதத்தை மொழியைக் காவிச் செல்லப் பயன்படுத்தினர். பிற்காலத்தில் எம் விடுதலைப் போராட்டம் உதவியது. இப்படியான உணர்வுகளால் தான் அது முடியும். ஆனால் இப்போது என்ன செய்வது??

இணையவன், கரிபியன் மற்றதும், கயனாவில் வாழ்கின்ற தமிழ் மக்கள் இந்தி மொழியையும் பேசுகின்றார்கள். அது போன்றே பிஜியில் வாழ்கின்றவர்களும் இந்தி பேசுகின்றார்கள். ஒரு மதத்துக்காக துறவறம் போகின்ற எம் சமூகத்தில், மொழிக்காக தியாகம் செய்ய ஆட்கள் இல்லாமலா போகும்? ஆனால் அதை ஒழுங்குபடுத்தி நிறுவனப்படுத்தினால் தான் அது சாத்தியமாகும்.

தென்னாபிரிக்காவில் வாழ்கின்ற தமிழ் மக்கள் கூட எமக்கு ஏற்பட்ட தொடர்புகள் சில முன்னேற்றங்களைத் தந்திருந்தன.

---------------

சமூகம் மீது மட்டும் குற்றம் சாட்டி பிரியோசமில்லை. ஏனென்றால் தமிழில் போதுமான நூல்களோ, ஆக்கங்களோ காணாது. பொழுது போகாவிட்டால் என் சரிதை என்று ஏதாவது எழுதுங்கள். விஞ்ஞானதம்தைப் பற்றி எழுதுங்கள். கற்பனைகள் கதைகள்.... எவ்வளவு தூரம் எழுதுகின்றீர்களோ மொழிக்கு அரணாக அவை இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

தூயவன் உங்கள் கவலை நியாயமானது.

1990 களில் எம்மவர்கள் பாஸ் எடுக்க புலிகளின் பாஸ் அலுவலகங்களில் குவிந்து கிடந்த போது நானும் சினந்திருக்கிறேன். சொந்த மண்ணில் ஒரு போராட்டம் நடக்குது இதுகள் எல்லாம் ஓட நிற்குதுகளே என்று. பொம்பர் வந்து குண்டு போடப் போட எம்மவர்கள் தென்பகுதி நோக்கி படையெடுத்துக் கொண்டே இருந்தனர். தினமும் மாலையில் நல்லூர் முத்திரச்சந்தி நிரம்பி வழியும்..!

அதை எல்லாம் கண்டுவிட்டு.. இந்த சமூகத்தை அந்தப் போராளிகளாளேயே கட்டுப்படுத்த முடியல்ல.. நாம என்ன செய்ய முடியும் என்ற முடிவுக்கு வந்தேன். அன்றிலிருந்து இந்த சமூகத்துக்கு அறிவுரை சொல்லவே கூடாது என்று முடிவெடுத்தேன்.

இப்ப கூட எனது ஆதங்கங்களை எழுத்தில் வெளியிடுகிறேனே தவிர இந்தச் சமூகம் அதை மதிக்கும் கவனிக்கும் என்று நான் கருதுவதில்லை. எதிர்பார்ப்பதும் இல்லை.

எங்கள் சமூகத்தை ஒரு விதமா கையாளனும்.

இளையவர்களைக் கையால.. சினிமா.. காதல்.. கல்வி இது மூன்றையும் உபயோகிக்க வேண்டும்.

மற்றவர்களைக் கையால.. சினிமா.. கோவில் ..தேவாலயம்.. பொருள் பண்டம் சொத்து சார்ந்து கையாளனும்.

இதைத் தவிர வேறு வகைகளில் எம்மவர்களை அணுக நினைத்தீர்கள்.. நிச்சயம் மன உளைச்சலே மிஞ்சும்..!

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

தூயவன் மொழியும் ஒரு கருவி தானே...மொழி மீது பற்று கொண்டவர்கள் தானே இனத்தின் மீதும் பற்றுக் கொள்வார்கள் என்பது என் கருத்து...அங்கிருந்து வந்த நாங்கள் திரும்பி அங்கே போய் இருக்கப் போறதுமில்லை...ஒரு சிலர் விதிவிலக்காய் இருக்கலாம்...கோயில்கள்,தமிழ் பாடசாலைகள் போன்றவற்றின் மூலம் எமது கலாச்சாரம்,பண்பாடு ஆகியவற்றை கொஞ்சமாவது அழியாமல் காப்பாற்றலாம் ஆனால் அது எங்களது கையில் தான் உள்ளது...கிழமையில் ஒரு நாளாவது கோயிலுக்கு பிள்ளைகளை கூட்டிக் கொண்டு போக வேண்டும்...எங்களது கலாச்சாரம்,பண்பாடு,மொழி ஆகியவற்றை நாங்கள் தான் சிறு வயதில் இருந்து அவர்களுக்குப் பழக்க வேண்டும்...நாங்கள் அதை கடைப் பிடித்தால் தான் அவர்களும் அதை கடைப் பிடிப்பார்கள்...ஜரோப்பாவில் லண்டன் தான் மோசம் எப்ப பார்த்தாலும் வீட்டிலோ,றோட்டிலோ ஆங்கிலம் தான் ஆனால் மற்றைய ஜரோப்பிய நாட்டுப் பிள்ளைகள் கொஞ்சம் பரவாயில்லை வீட்டிலாவது தமிழ் கதைக்கிறார்கள்...இங்கே பிள்ளைகளை கோயிலுக்கோ அல்லது ஏதாவது விழாவிற்கோ பெற்றோர் பெரும்பாலும் கூட்டி வருவதில்லை ஏன் எனக் கேட்டால் பிள்ளைகள் படிக்க வேண்டும் என்டோ,இல்லை அவர்களுக்கு இதில் எல்லாம் விருப்பம் இல்லை என்டு சொல்வார்கள்...மற்ற விடயங்களுக்கு பிள்ளைகளை கட்டுபடுத்தும் பெற்றோர் இந்த விடயத்தில் ஒன்டுமே சொல்வதில்லை என்பது தான் வேதனை...அவர்களை அவர்கள் பாட்டில் விட வேண்டும் இங்கே பிறந்த பிள்ளைகள் அப்படித் தான் இருப்பார்கள் என்பார்கள்...இணையவன் கடைசிப் பந்தியில் எழுதிய அனைத்தும் உண்மை.

தூயவன் உங்கள் கவலை நியாயமானது.

1990 களில் எம்மவர்கள் பாஸ் எடுக்க புலிகளின் பாஸ் அலுவலகங்களில் குவிந்து கிடந்த போது நானும் சினந்திருக்கிறேன். சொந்த மண்ணில் ஒரு போராட்டம் நடக்குது இதுகள் எல்லாம் ஓட நிற்குதுகளே என்று. பொம்பர் வந்து குண்டு போடப் போட எம்மவர்கள் தென்பகுதி நோக்கி படையெடுத்துக் கொண்டே இருந்தனர். தினமும் மாலையில் நல்லூர் முத்திரச்சந்தி நிரம்பி வழியும்..!

அதை எல்லாம் கண்டுவிட்டு.. இந்த சமூகத்தை அந்தப் போராளிகளாளேயே கட்டுப்படுத்த முடியல்ல.. நாம என்ன செய்ய முடியும் என்ற முடிவுக்கு வந்தேன். அன்றிலிருந்து இந்த சமூகத்துக்கு அறிவுரை சொல்லவே கூடாது என்று முடிவெடுத்தேன்.

இப்ப கூட எனது ஆதங்கங்களை எழுத்தில் வெளியிடுகிறேனே தவிர இந்தச் சமூகம் அதை மதிக்கும் கவனிக்கும் என்று நான் கருதுவதில்லை. எதிர்பார்ப்பதும் இல்லை.

எங்கள் சமூகத்தை ஒரு விதமா கையாளனும்.

இளையவர்களைக் கையால.. சினிமா.. காதல்.. கல்வி இது மூன்றையும் உபயோகிக்க வேண்டும்.

மற்றவர்களைக் கையால.. சினிமா.. கோவில் ..தேவாலயம்.. பொருள் பண்டம் சொத்து சார்ந்து கையாளனும்.

இதைத் தவிர வேறு வகைகளில் எம்மவர்களை அணுக நினைத்தீர்கள்.. நிச்சயம் மன உளைச்சலே மிஞ்சும்..!

தம்பி கடைசியில் நீங்களும் இங்கே தானே நிற்கிறீர்கள் :lol:

83 கலவரத்திற்காக லண்டனில் நடந்த மாபெரும் ஊர்வலத்தில் போய்க் கொண்டிருக்கும் போது ஒரு இளைஞர் வந்து நோட்டீஸ் ஒன்றுதந்தார்.நாலாவது உலகத்திற்கு வேலை செய்வதாகவும் உலக பாட்டாளி மக்களின் விடுதலையே எமக்கும்விடுதலையை கொண்டுவரும் என்றார்.எனக்கு தலை கால் ஒன்றும் புரியவில்லை.ரொட்கியிசம் என்று ஒன்றை கேள்விப்பட்டதுடன் சரி.அவருக்கு நான் சொன்னேன் நான் அந்த அளவிற்கு ஆசை படவில்லை.எனது நாடு உலகத்தில் ஒரு சின்னபுள்ளி அதில் தமிழன் சிறுபானமை அவன் தனது உரிமைக்காக போராடுகின்றான்.அதை நாங்கள் இலகுவாக எடுத்துவிடுவோம் .அதைவிட்டு உலக விடுதலை கிடைக்க மட்டும் எங்கட பிரச்சனையை இழுபடவிருப்பமில்லை என்றேன்.

84 ட்யூப்பில் போய்க் கொண்டிருக்கின்றேன்.எனது பக்பாக்கில் எப்போது ஏதாவது ஒரு நோட்டீஸ் இருக்கும்.யாரும் தமிழரை கண்டால் வெட்கப்படாமல் எடுத்து நீட்டுவேன். ஒரு முறை டொலிஸ்கில் ஸ்டேசனில் ஒருவரைபார்த்து யூ ஆர் fரொம் சிறிலங்கா எனக் கேட்க அவரும் யேஸ் என நான் நோட்டீஸை எடுத்து நீட்ட அவன் என்னை திட்டிவிட்டான்.நீங்கள் ஒரு காலமும் தனிநாடு காணமாட்டீர்களென்றான்.நான் சொன்னேன் எண்ணி வையும் 5 வருடங்களுக்குள் தமிழீழம் தமிழன் எடுத்தே தீருவானென்று

இன்று அவங்களெல்லாம் சொன்னதுதான் சரிபோல் கிடக்கு.

இன்றும் நாம் பிழையான பாதையில் தான் நகருகின்றோம்.சேர வேண்டிய முற்போக்கு சக்திகள் ஒன்றுசேரவில்லை.தமிழ்நாடு மாதிரி தலைவன் சொல்லுக்கு தலையாட்டிகொண்டு செம்மறிகள் மாதிரி அலைகின்றோம். சொந்த சுய புத்தியில்லாத இனம் தமிழினம்.

  • கருத்துக்கள உறவுகள்

சொந்த சுய புத்தியில்லாத இனம் தமிழினம்

சொந்தப்புத்தியில் பெரும்பாலோர் சுயநலவாதிகள்.

-------------------------------------------------------

ஒவ்வொருவரும் எம் இனத்துக்கு தன்னாலானதை செய்தால் எமது தனித்துவத்தை இலகுவில் இழக்க மாட்டோம்.

Edited by nunavilan

வணக்கம்.

நன்றி நல்ல தலைப்பைத்தொடங்கியிருக்கிறீர்கள் முடிந்தவரை ஆக்கபுர்வமாக விவாதிப்போம் நாம் எல்லோரும் தமிழர்களே எம்மினத்தை நாமே இழிவுபடுத்த வேண்டாம். சிங்களஅரக்கர்களின் சித்திரவதைக்கூடங்களில் சிக்கியிருக்கும் தமிழீழ உறவுகளும் ஈழமண்ணும் புலம்பெயர் உறவுகளால் நிச்சயம் விடிவுகிடைக்கும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறார்கள். அவர்களுக்கு நாம் என்னசெய்யபோகிறோம்? இங்கே எழுதுவதில் யாருக்கும் துரோகிப்பட்டம் கொடுக்காதீர்கள் தவறுகள் இருந்தால் சுட்டிக்காட்டுவோம் முடிந்தவரை திருத்த முயற்சிசெய்வோம் தமிழனாக இருக்கும் வரை நிச்சயம் அவர்களும் திருந்தி சேர்ந்து வருவார்கள் இல்லையெனில் அவர்கள் மனிதஇனமல்ல என்று விட்டு விடுவோம்.

சுவாசிப்பததல்ல வாழ்க்கை நேசிப்பதுதான் வாழ்க்கை. முயற்சிசெய்வோம் முடிந்தவரை இவ்வளவு அழிவுகளுக்கும் முகம்கொடுத்து அடக்குமுறைக்குள்ளும் தமிழனாய் நல்ல மனிதனாய் வாழ வேறுயாரால் முடியும்? நம்மினத்தால் மட்டுமே இதுவேசாதனைதான். தவறுசெய்யாமல் வாழ நாம்கடவுளல்ல தவறுகளை சுட்டிக்காட்டுவோம் திருந்திக்கொள்வோம்.

இது எனது கருத்து உங்கள் மனங்களைப் புண்படுத்தியிருந்தால் மன்னித்துக்கொள்ளுங்கள். தவறுகளிருப்பின் சுட்டிக்காட்டுங்கள் நிச்சயம் திருத்திக்கொள்வேன் நானும் மனிதனே!

தொடருவோம்....

நன்றி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

83 கலவரத்திற்காக லண்டனில் நடந்த மாபெரும் ஊர்வலத்தில் போய்க் கொண்டிருக்கும் போது ஒரு இளைஞர் வந்து நோட்டீஸ் ஒன்றுதந்தார்.நாலாவது உலகத்திற்கு வேலை செய்வதாகவும் உலக பாட்டாளி மக்களின் விடுதலையே எமக்கும்விடுதலையை கொண்டுவரும் என்றார்.எனக்கு தலை கால் ஒன்றும் புரியவில்லை.ரொட்கியிசம் என்று ஒன்றை கேள்விப்பட்டதுடன் சரி.அவருக்கு நான் சொன்னேன் நான் அந்த அளவிற்கு ஆசை படவில்லை.எனது நாடு உலகத்தில் ஒரு சின்னபுள்ளி அதில் தமிழன் சிறுபானமை அவன் தனது உரிமைக்காக போராடுகின்றான்.அதை நாங்கள் இலகுவாக எடுத்துவிடுவோம் .அதைவிட்டு உலக விடுதலை கிடைக்க மட்டும் எங்கட பிரச்சனையை இழுபடவிருப்பமில்லை என்றேன்.

84 ட்யூப்பில் போய்க் கொண்டிருக்கின்றேன்.எனது பக்பாக்கில் எப்போது ஏதாவது ஒரு நோட்டீஸ் இருக்கும்.யாரும் தமிழரை கண்டால் வெட்கப்படாமல் எடுத்து நீட்டுவேன். ஒரு முறை டொலிஸ்கில் ஸ்டேசனில் ஒருவரைபார்த்து யூ ஆர் fரொம் சிறிலங்கா எனக் கேட்க அவரும் யேஸ் என நான் நோட்டீஸை எடுத்து நீட்ட அவன் என்னை திட்டிவிட்டான்.நீங்கள் ஒரு காலமும் தனிநாடு காணமாட்டீர்களென்றான்.நான் சொன்னேன் எண்ணி வையும் 5 வருடங்களுக்குள் தமிழீழம் தமிழன் எடுத்தே தீருவானென்று

இன்று அவங்களெல்லாம் சொன்னதுதான் சரிபோல் கிடக்கு.

இன்றும் நாம் பிழையான பாதையில் தான் நகருகின்றோம்.சேர வேண்டிய முற்போக்கு சக்திகள் ஒன்றுசேரவில்லை.தமிழ்நாடு மாதிரி தலைவன் சொல்லுக்கு தலையாட்டிகொண்டு செம்மறிகள் மாதிரி அலைகின்றோம். சொந்த சுய புத்தியில்லாத இனம் தமிழினம்.

மன்னிக்க வேண்டும். இத்தலைப்பில் உங்களிடம் நான் ஒன்றுமே கேட்கவில்லையே! சுயமாகப் புத்தி உள்ளனீர் என்றால் ஏதாவது புடுங்கித் தொலைக்க வேண்டியது தானே. ஏன் இங்கே வந்து எரிச்சல் ஊட்டிக் கொண்டிருக்கின்றீர்?? தயவு செய்து சுய விளம்பிகள், தம்பட்டமடிப்போர் இத் தலைப்பில் எழுதுவதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்.

எனது மம்மி, தாடி எனக்கு தங்கடை சமயங்கள், சம்பிரதாயங்கள், சாதிக்கட்டமைப்புக்கள், பிரதேசவாதங்கள், குலங்கள், கோத்திரங்கள்.. இவைகளின் அடிப்படையில் வாழக்கற்றுத் தருவீனம். பிறகு மம்மி, தாடியின் ஆலோசனைப்படி நான் ஒருத்தரை கலியாணம் கட்டுவன். அந்த ஒருத்தருக்கும் மம்மி, தாடி இருப்பீனம். அவையளும் அவருக்கு தங்கடை சமயங்கள், சம்பிரதாயங்கள், சாதிக்கட்டமைப்புக்கள், பிரதேசவாதங்கள், குலங்கள், கோத்திரங்கள்... இவைகளின் அடிப்படையில் வாழக்கற்றுக் கொடுத்து இருப்பீனம்.

பிறகு, எங்களுக்கு ஒன்று அல்லது பல பிள்ளைகள் பிறக்கும். நான் என்ரை பிள்ளைக்கு என்ர சமயம், என்ர சம்பிரதாயம், எங்கட சாதிக்கட்டமைப்பு, பிரதேசவாதம், குலம், கோத்திரம்.. இவைகள்தான் திறமானது, உசத்தியானது என்று சொல்லி மூளைச்சலவை செய்து வளர்ப்பன். பிள்ளைகளை ஊருக்கு கூட்டிக்கொண்டு போய் மேலதிக மூளைச்சலவை செய்வன். பிறகு கொஞ்சக்காலத்தால எனக்கு நடந்தமாதிரி பிள்ளைகளுக்கும் கலியாணம் நடக்கும்.

நான் சொல்லிக்கொடுத்த மாதிரியே கிளிப் பிள்ளையாட்டம் என்ர பிள்ளைகளும் வாழ்க்கையை தொடர்வீனம்...

உதுகளை விட.. கேடுகெட்ட எங்கடை அடையாளங்கள் இல்லாமல் மடிந்து போவது நல்ல விசயம்.

வாழ்க்கையில நேரில கண்ட அனுபவங்களை வைத்துத்தான் எங்கள் சமுதாயத்தை நாங்கள் எடைபோட்டுக்கொள்ள முடியும். தமிழர் பனியாரம் என்று சும்மா போலியாக புளுகித்தள்ளி பிரயோசனம் இல்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழை ஒழுங்காக சொல்லி கொடுத்து உங்கள் பிள்ளைகளை வளருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி கடைசியில் நீங்களும் இங்கே தானே நிற்கிறீர்கள் :D

ஆனால் நான் தேசத்தை விட்டு முழுமையாக ஓடிவரல்லக்கா. அதுமட்டுமன்றி என்னாலான பணியை தேசத்துக்கு செய்திருக்கிறேன்.. இன்னும் செய்வேன். என் மன திருப்தி ஏற்படும் அளவிற்கு. அதை எல்லாம் இங்கு சொல்ல வேண்டிய அவசியமில்லை. அதை தேசத்துக்கான சேவையாகவே வைத்திருக்கவே விரும்புகிறேன். :lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழ் இனத்தின் தனித் தன்மை கட்டிக் காக்கப்பட வேண்டுமாயின் நம் இனத்திற்கென்று ஒரு நாடு வேண்டும்.

அந்த ஈழம் நாளை கிடைக்கலாம் இல்லை இன்னும் நூறு வருடங்களின் பின்னரும் கிடைக்கலாம். ஆனால் நாம் அதுவரை நம் போராட்டத்தைத் தொடர வேண்டும்.

போராட்டத்தினூடாக நம் இளையோரை ஈழ வழிப் படுத்த வேண்டும். அதற்கு நமக்குள் ஒற்றுமை வேண்டும்.

புலம்பெயர் தமிழர்களின் சக்தி நாம் நினைப்பதை விட அளப்பரியது.

அதைச் சிதைக்க முயல்பவன் எந்தக் கொம்பனாக இருந்தாலும் முறியடிக்கப்பட வேண்டும்.

தாயகத்தில் மக்களை ஒன்றிணைக்கும் அதே வேளையில் புலத்திலும் ஒருவர் மீது ஒருவர் வசை பாடாமல் நம் இலக்கு நோக்கி நகர வேண்டும்.

தாயகத்தில் ஏற்படும் மக்கள் விழிப்புணர்ச்சியுடன் கூடிய ஜன நாயக முறையிலான எழுச்சிப் போராட்டங்களுக்குப் புலத்திலிருந்து நாம் புத்துணர்வு கொடுக்க வேண்டும்.

களத்திலும் புலத்திலும் அரசியற் தலைமைகள் ஒன்று சேர்ந்து ஒரே நேரத்தில் அரசியற்போராட்டங்களை நடத்த வேண்டும்.

இத்தனைக்கும் அர்ப்பணிப்புடன் தன்னை முழுமையாக போராட்டத்தில் இணத்துக் கொள்ளும் ஒரு தலைமை வேண்டும். அந்தத் தலைமையை நாம் தான் இனம் காண வேண்டும்.

இல்லையேல் ஒரு நாள் நம் இனம் ஈழத் தமிழினம் உலகில் இருக்குமா என்பது சந்தேகமே..

இந்தத் திரியை ஆரம்பித்த தூயவனிற்கு எனது நன்றிகள்.

வாத்தியார்

**********

Edited by வாத்தியார்

யாழ்ப்பாணத்திலும், கொழும்பிலும் படம் காட்டித்திரிந்த மிகவும் வசதியான ஓர் குடும்பம். யாழ்ப்பாணத்தில் பிரபல ஒரு கோயிலின் தேர்த்திருவிழா உபயகாரரும் இவர்களே.

புளுகிப், புளுகி தமது மகளை அமெரிக்காவுக்கு உயர்கல்விக்கு அனுப்பி வைத்தார்கள். அது போன இடத்தில் அங்கு பங்களாதேஷ் முஸ்லீம் ஒருவரை திருமணம் செய்து பிள்ளையும் உள்ளது.

மகள் பங்களாதேஷ் முஸ்லீம் ஒருவரை திருமணம் செய்ததும் இப்போது ரியூனை மாற்றிவிட்டார்கள், அடக்கி வாசிக்கின்றார்கள். அவர்கள் எடியுகேட்டட் டீசன்ட் பீப்பிளாம். சந்தர்ப்பத்துக்கு ஏற்றமாதிரி தங்கள் statusஐ modifyபண்ணி இருக்கின்றார்கள்.

அவர்கள் குடும்ப பின்னணியையும், தற்போது அவர்களது பிள்ளைகள் வாழும் நிலமையையும் ஒப்பிட்டு பார்க்க சிரிப்பு வருகின்றது. ஒருவிதத்தில் இப்படி இரண்டும்கெட்டான் நிலையில் இவர்களது எதிர்கால சந்ததிகள் மடிந்து செல்வது வரவேற்கத்தக்க விசயமே.

இல்லையேல் ஒரு நாள் நம் இனம் ஈழத் தமிழினம் உலகில் இருக்குமா என்பது சந்தேகமே..

வாத்தியார் உணர்ச்சிவசப்பட்டு கனக்க ஒன்றும் ஜோசிக்காதிங்கோ. நாங்கள் ஐ.நாவில இருக்கிற எல்லா நாடுகளுக்கும் பரந்துபோய் வாழ்ந்து அங்கை அங்கை உள்ள நாட்டுக்காரங்களோட சகவாசம் வச்சு குட்டிகள் போட்டு ஆலமரமாய் விழுதுபோட்டு.. பச்சையாய், சிகப்பாய், மஞ்சளாய், நீலமாய் அழகிய நெடிய நீண்ட வானவில்லாக தென்துருவத்தில் இருந்து வடதுருவம் வரைக்கும்... மடகாஸ்கரில் இருந்து அலாஸ்கா வரைக்கும் வியாபிப்போம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சோழர்கள் தோற்றுப் போய், தங்களுடைய காலம் வரும் வரை பொறுமையாகத் தங்கள் பலத்தினை தலைமுறை தலைமுறையாக 100 ஆண்டுகள் வரை பேணி வந்ததாகவும், அதன் பின்னர் சந்தர்ப்பம் கிடைத்தபோது வெடித்த பலமே இராஜஇராஜ சோழனாக மாறியது என்று எங்கோ படித்த ஞாபகம். வரலாறு என்பது மாறத் தான் போகின்றது. மகிந்த குடும்பம் எத்தனை காலத்திற்கு இப்பதவியில் இருக்கப் போகின்றது... ஆனால் தமிழன் தமிழனாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இருக்கல்லவா?

வாத்தியார்,

இன்றைய சூழ்நிலையில் ஈழத்தமிழன் என்ற வகையில் தான் சிந்திக்க வேண்டும் என்றில்லை. தமிழகத்தமிழன் முதற்கொண்டு பணரீதியாக எல்லோரும் வளர வேண்டும். பணம் தான் எம் வளர்ச்சி.

இன்றைக்கு வெளிநாடுகளில் பொருளாராதரீதியாகச் சீனர்கள் 3ம் நிலைச் சந்தையைக் கைப்பற்றிய நிலை போலத் தமிழ்மக்களும் சந்தைகளைப் பிடிக்க நாங்கள் துணை புரிய வேண்டும்.

இதற்கு ஒன்றுபட்ட சக்தி அவசியம்.

போராட்ட சூழ்நிலை என்பது எனி வரும் காலங்களில் எம் பொருளாதர நிலையை வைத்துத் தான் அமைய வேண்டும். 100 வருடங்களுக்கு முன்பு கனடாவில் சீனர்கள் குடியேற மிகப்பெரும் பணத்தைச் செலுத்த வேண்டி இருந்தது. அவர்களின் வருகை விரும்பப்படவில்லை. ஆனால் இன்றைய பொருளாதரா நிலையில் ஐந்தி ஒரு பங்குக்கு மேலதிகமான நிலையில் சீனர்களின் பங்களிப்பு இருக்கின்றது. அவர்களைக் கனடா அரசும் வாய் முழுதும் பல் தெரிய வரவேற்கின்றது. இன்றைக்கு நம்மபர்கள் கப்பல் வருகின்றபோது ஏன் வெறுக்கின்றார்கள் என்றால், எம்மிடம் பெரிய பொருளாதர வலையமைப்பு இல்லை. பெரிய சந்தையுமில்லை.

பொருனாதாரமில்லத எம்மை எவருமே மதிக்கமாட்டார்கள்.

1வது தமிழருக்குள் முதலில் வரவணிகர் சங்கம் தேவை. சங்கத்தின் செயற்பாட்டின் ஊடாக எம் வளர்ச்சி பற்றியும், ஒற்றுமையாகவும் சிந்திப்பது பற்றி யோசிக்க வேண்டும். உடனே ஏதாவது நடந்த சம்பவம் என்று புறணிக் கதையை யாராவது தூக்கிக் கொண்டு வராதீர்கள்.

இத் தலைப்பை நிறுத்தி விட்டு, புறணிக் கதை கதைப்பதை நிறுத்துவது எப்படி என்று விவாதிக்கலாம் போல இருக்கின்றது.

கறுப்பினத்தவர் போன்று அடையாளம் இழந்து, மொழியிழந்து, இனவுணர்வு இழந்து வெறும் தோலை மட்டுமே அடையாளமாகக் கொண்ட ஒரு இனமாக நாம் அழியப் போகின்றோமா? புலம்பெயர்ந்து ஒவ்வொரு நாட்டிலும் பிரிந்து வாழ்வது ஒரு வேதனையாக இருக்க, மறுபக்கம் எம் சமுதாயம் அடையாளங்கள் இழந்து வெறும் சடப்பொருளாக மாறிக் கொண்டிருக்கின்றது. எம் தலைமுறை கடந்து அடுத்த தலைமுறை எவ்வாறு வாழும் என்பதை நினைக்கவே அச்சமாக உள்ளது. முக்கியமாக இதைப் பற்றி விவாதிக்கவோ, சிந்திக்கவோ யாரும் தயாராக இல்லை போலத் தோன்றுகின்றது. அதை நினைத்தால் தலையிடி என்று கண்டு கொள்ளாமையால் வாழ்கின்றோம்.

சரி.. நாம் எம் தலைமுறைக்கு என்னத்தை விட்டுச் செல்லப் போகின்றோம். எனி தமிழீழத்தைச் சிங்கள ஆக்கிரமிப்பில் இருந்து மீட்க முடியுமா என்று தெரியவில்லை. பலரும் போய் வாழ்கின்ற எண்ணத்திலும் இல்லை.

இங்கிருந்து என்ன செய்யலாம்?

எமது அடயாளங்கள் என்று இருப்பது மொழியும் எமது இருப்பிடமுமமே. இருப்பிடத்தை பிரிந்த பின்னர் மொழி மட்டுமே எஞ்சியிருப்பது. அதை தக்கவைப்பது அவசியம். ஏனைய அடயாளங்கள் எல்லாம் கலப்படமும் எங்களுடையதா என்ற சந்தேகத்துக்குரியதுமாக இருக்கின்றது. எமக்கான உணவுமுறை பழக்கவழக்கம் கலை இன்ன பிற அடயாளங்கள் முதலில் வரையறுக்கப்படவேண்டும். மொழியை தவிர்ந்த ஏனைய அடயாளங்களாக அனேகமாக இருப்பது இந்திய இறக்குமதிகளே. இப்ப சீரியல் பார்த்துப் பார்த்து ஏகப்பட்ட அடயாளங்கள் வந்து சேர்கின்றது.

உதுகளை விட.. கேடுகெட்ட எங்கடை அடையாளங்கள் இல்லாமல் மடிந்து போவது நல்ல விசயம்.

கரும்பின் இந்தக் கருத்து உண்மையே. இனத்தை சிதைத்து சின்னபின்னமாக்கும் எதிர்மறையான அடயாளங்கள் தொலைக்கப்படவேண்டும். இனமாக இணைக்கும் அடையாளங்கள் ஒருங்கிணைக்கப்படவேண்டும்.

மொழியை அடுத்த தலமுறைக்கு கடத்துதலும் எமது பூர்விக இடத்தில் ஒவ்வொருவருக்கும் ஒரு பரப்பு காணி எண்டாலும் இருப்பது அவசியம். எவ்வளவு தரம் எமது தாயகத்துக்கு சென்று வர முடியுமோ அவ்வளவு தூரம் சென்றுவரவேண்டும்.

புதிய புதிய நிகழ்வுகள் விழாக்களை நடாத்தி அடுத்த தலைமுறையை ஒன்றுகூட வைக்க வேண்டும். ஈழத்தவர் என்ற அடயாளத்தின் கீழ் எமது அடுத்த தலைமுறை உறவுகளை பலப்படுத்த பல்வேறு விதமான ஒன்றுகூடல்களை நடாத்தவேண்டும். இவற்றை கவனமாக செய்தல் அவசியமானது சதி மத ரீதியாக இவற்றின் பின்னணி இருப்பதும் மேட்டுக்குடித்தனமாக இருப்பதும் அடுத்த தலைமுறை இணைவதற்குப் பதிலாக பிரிவினையை வளமைபோல் வளர்த்துக்கொள்ளும். புதிய நிகழ்வுகளே ஒழுங்கமைக்கப்படவேண்டும். இப்போது நடக்கும் ஒவ்வொரு சிறு நிகழ்வு சடங்கிலும் அடயாளம் தேடும் போட்டியே நடக்கின்றது. அடுத்த தலைமுறைக்கும் இது பழக்கப்படுகின்றது. இவை களையப்படவேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அடையாளங்கள் கலப்படமா இல்லையா என்ற தெரியா. ஆனால் அதை உரிமை கோரிக் கொள்ளலாம். சீக்கியர்களின் கலாச்சாரம், உடை முஸ்லீம்களின் பாணியில் இருந்தாலும் அதை அவர்கள் தங்களின் தனித்துவமாகவே காட்டிக் கொண்டிருக்கின்றார்கள்.

கனடா நாளை கனடாத் தமிழர் நாளாகத் தெரிவு செய்தால் நல்லது போலத் தோன்றுகின்றது. கனடா அரசைக் கௌரவிப்பது போலவும் இருக்கும். ஒரு விடுமுறை நாளை பயன்படுத்தியது போலவும் இருக்கும். தை மாதத்தைத் தெரிவு செய்வது சரியாகப் படவில்லை. சென்ற வருடம் ஒரு மூடிய அறையினுள் வைத்து 100 பேரோடு முடிந்ததோடு சரி.

வல்மோர் முருகனுக்கு ரொரன்ரோவில் இருந்தும் போகின்றார்கள் என்றால் கோவிலின் அளவில் தங்கியிருக்கவில்லை. பிரபல்யத்திலும் விளம்பரத்திலும் தான் தங்கியுள்ளது. தமிழர் நாள் என்பதை ஒரு ஊர்வலமாகவும் கலை நிகழ்வாகவும் மாற்றும்போது அது தொடர்ந்து வர ஏதுவாகும்.

கறுப்பர்களின் களியாட்டத்திற்குக் கிடைத்த பிரபல்யத்தை இதற்கும் ஏற்படுத்த முடியும்.

வெறும் லொஜிக் கதைச்சு பயன் இல்லை. வாழ்வியல் உதாரணங்கள் இல்லாமல் கற்பனையில் கோட்டை கட்டி ஒன்றும் செய்ய முடியாது. நாளைக்கு வணிகர் சங்கம் தொடங்குவீங்கள். அங்கும் அடிப்படையில் தலைவராக, செயலாளராக பொறுப்புக்களில் எந்த ஊர்க்காரன், சாதிக்காரன், சமயத்தவன் உள்ளார்கள் என்பதில் சிக்கல் வரும். மொழி தவிர.. எங்களை தனித்துவமாக அடையாளப்படுத்தக்கூடிய இதரவிசயங்களை பட்டியல் இடுங்கள் பார்க்கலாம். ஆயிரம் பேர் சந்தியில் கூடி நின்று எதிர்காலத்தில் என்ன செய்யலாம் என்று ஆராய்வதைவிட எங்கள் எங்கள் வீடுகளுக்குள் தற்போது என்ன நடைபெற்றுக்கொண்டு உள்ளது என்று சிந்தித்து பார்ப்பது நல்லது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.