Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

praba.jpg

வியட்னாமியப் போராட்டம் குறித்துப் பேசும் போது, கோச்சிமினை நிராகரித்துப் பேசமுடியாது. வியட்னாமியப் போராட்ட வரலாற்றையே அவரின் வரலாற்றிலிருந்து ஆரம்பிக்கலாம் என்றால் அது மிகையற்றது.

ஈழப் போராட்ட வரலாறு என்பது பிரபாகரனை நிராகரித்து எழுதப்பட முடியாது. முள்ளிவாய்க்காலில் புலிகளின் தலைமை அழித்துச் சிதைக்கப்படும் வரையான போராட்டப் பின்புலம் பிரபாகரன் என்ற தனிமனிதனினின் ஆளுமை, அதிகாரம், துரோகம், வீரம் என்ற அனைத்துக் கற்பிதங்களையும் சூழவே தனது ஒவ்வொரு அசைவையும் கொண்டிருந்தது.

தேசியத் தலைவர், சூரியத்தேவன், கடவுளின் மறு அவதாரம், போன்று நூற்றுக்கணக்கான அடை மொழிகளுக்குள் பிரபாகரனை முக்கியப்படுத்திய ஒரு பகுதி, அதிலும் பெரும்பான்மையான பகுதி, தூய தேசியவாதிகள் பிரபாகரன் மரணித்துப் போனதைக் கூட நம்ப மறுக்கிறார்கள்.

இதன் மறுபுறத்தில் இன்னொரு பகுதியினர், பிரபாகரன் ஒரு மன நோயாளி, கோரமான மிருகம், மன்ன்னிக்க முடியாத கொலையாளி என்ற தலையங்களில் அவரைச் சுற்றிய ஒரு விம்பத்தைக் கட்டமைக்கிறார்கள்.

இதில் இந்த இரண்டு பகுதியனருமே பிரபாகரன் ஆரம்பத்திலிருந்தே வரித்துக்கொண்ட அரசியல் குறித்தும் சமூகத்தின் மீதான அதன் ஆளுமை குறித்தும், ஏற்படுத்திய விளைவுகள் குறித்தும் பேச மறுக்கின்றனர்.

எழுபதுகளின் ஆரம்பங்களில் பிரபாகரன் என்ற தனிமனிதன் தமிழர்கள் மீதான இலங்கை அரசின் ஒடுக்கு முறைகளைச் சகித்துக் கொள்ள முடியாமல் அரச சார்பான தனி நபர்களைக் “களயெடுப்பதை”த் தனது விடுதலைக்கான வழியாக வரித்துக்கொள்கிறார்.

70 களிலிருந்து தேசிய அலை தமிழ்ப் பேசும் இலங்கையர்கள் மத்தியிலிருந்து எழுச்சி பெறுகிறது. இந்தத் தேசிய அலையானது ஒடுக்குமுறைக்கு எதிரான முற்போக்குப் பாத்திரத்தையும் கொண்டிருந்தது என்பதை யாரும் மறுக்க முடியாது. தொடரும் பெருந்தேசிய வாதம் இலங்கையின் பிரதான முரண்பாடாகத் தேசிய முரண்பாட்டை உருவாக்கின்றது.

தீர்மானகரமான முரண்பாடாக உருவாகும் தேசிய இன முரண்பாற்கான தீர்விலிருந்தே இலங்கை மக்களின் விடுதலை என்பது சாத்தியமானது என்ற நிலைக்கு இலங்கையின் புற நிலை யதார்த்தம் காணப்பட்டது.

தேசிய இன முரண்பாட்டைக் கையாள்வதற்கான நிகழ்ச்சி நிரல் ஒன்று இடதுசாரிகளிடம் காணப்பட்டாத நிலையில் பிரபாகரன் போன்ற தன்னிச்சையான போராளிகள் உருவாகின்றனர்.

சமூகத்தில் காணப்பட்ட அத்தனை பிற்போக்கு அம்சங்களையும் அதன் இருப்பிலிருந்தவாறே ஏற்றுக்கொண்டு அதனைப் பாதுகாப்பதற்கான இராணுவத்தைக் கட்டமைப்பதே பிரபாகரன் முன்வைத்த அரசியல்.

இது குறுந்தேசிய வாத அரசியல் என்று அதன் அடிப்படையான உள்ளர்த்தில் கூற முடியாவிட்டாலும் அதனைப் பிரதிநிதித்துவம் செய்கின்ற அரசியலாக மாற்றமடைகிறது.

பிரபாகரன் உருவாக்க எண்ணிய சமூகத்தின் அனைத்து விழுமியங்களையும் பாதுகாக்கும் இராணுவக் குழுவைக் கட்டமைக்கும் அரசியலுக்குப் பிரபாகரன் ஒரு போதும் துரோகம் செய்தவரல்ல. ஆனால் பிரபாகரனின் வரித்துக்கொண்ட அரசியலின் அடிப்படையே சமூகத்தின் கீழ் நிலையிலுள்ள மக்கள் பிரிவுகளுக்கு அதன் மேலணிகள் இழைத்த துரோகங்களிலிருந்தே கட்டமைக்கப்பட்டது.

துரோகிகளைக் களையெடுக்கும் பிரபாகரனின் வழி முறை சமூகத்தின் இருப்பைப் பாதுகாப்பதற்கான இராணுவ வழிமுறைக்கு எதிரானதாகக் கருதப்பட்ட அனைவரையும் அழிக்கும் அரசியல் செயற்பாடாக முன்னெடுக்கப்படுகிறது.

தான் சார்ந்த அமைப்புக்களின் போராளிகளை, இராணுவக் கட்டமைப்பிற்கு எதிரான உட்கட்சி ஜனநாயகத்தை விரும்பியவர்களை அழிக்கும் பிரபாகரனின் அரசியல் இந்திய மேலாதிக்க நலன்களுக்கும் ஏகாதிபத்திய நாடுகளின் நலன்களுக்கும் உகந்தாக அமைய அவர்களின் ஆதரவைப் பிரபாகாரன் சார்ந்த அரசியலைக் கொண்ட அமைப்புப் பெற்றுக்கொள்கிறது.

இந்திய வெளியுறவுத்துறை அதிகாரியான பாரத்குமார் இவ்வாறு சொல்கிறார்:

“நீண்ட காலத்திற்கு முன்பு நாங்கள் பிரபாகரனை உருவாக்கினோம். எங்குமில்லாதவாறான ஒருவரை நாம் தேடியெடுத்தோம். அவரிடம் நாங்கள் கவரும் விதத்தில் என்னத்தைக் கண்டெடுத்தோமென்றால், முற்றாகவே அரசியலற்ற பெருமளவிற்கு அரசியலில் அப்பாவித்தனமானவராக இருந்தார் என்பதையே. அவர் பல வழிகளில் பயந்த சுபாவமுள்ளவராக இருந்தார். அவர் ஆயுதங்கள் குறித்தும், படைப்பிரிவு குறித்தும் அதிக ஆர்வம் கொண்டவராகவும் இருந்தார். எங்களுடைய தேவைகளுக்கு மிகப் பொருத்தமானவராகவும் அவர் இருந்தார்.”

இந்திய நலன்களுக்கு அடிப்படையில் எதிரியாக அமைந்திராத பிரபாகரனின் அரசியல், அதாவது சமூகத்தின் பிற்போக்கான இருப்பைப் பாதுகாக்கின்ற அரசியல் இந்தியாவினால் வளர்க்கப்பட்டது. சமூகத்தின் பிற்போக்கான கூறுகளுக்கு எதிராக மக்களை அணிதிரட்டவும், வெற்றியை நோக்கிப் போராட்டத்தை வழி நடத்த முயன்ற அனைத்துப் பகுதிகளையும் அது அழிவிற்கு உட்படுத்தியது.

போட்டி இராணுவக் குழுக்களாக வளர்ச்சியடைய முற்பட்ட ஏனைய அமைப்புக்களை அழிப்பது என்ற போர்வைக்குள் கோரமான கொலைகளை நிகழ்த்தியது.

ஒரு ஏகபோக இராணுவ அரசிற்கு உரிய சிறைக் கூடங்கள், வதை முகாம்கள், கொலைப்படைகள் போன்ற அனைத்துக் கூறுகளையும் தன்னகத்தே கொண்டிருந்தது. உயிரோடு எரிக்கப்பட்ட போராளிகள், இருட்டு அறைகளில் இறந்து போனவர்கள் போன்ற ஆயிரம் துயரச் சம்பவங்களைக் கொண்டது இந்த புலிகளின் இராணுவம்.

தனது இராணுவ நலனுக்காக தமது சொந்த நிலங்களிலிருந்து முஸ்லீம்கள் விரட்டியடிக்கபட்டிருக்கிறார்கள். கிழக்கில் நூற்றுக்கணக்கில் முஸ்லீம்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். பல சிங்கள அப்பாவிகள் ஏன் கொல்லபடுகிறோம் என்று தெரியாமல் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

ஏனைய இயக்கங்களுக்கும் பிரபாகரன் வழிநடத்திய புலிகளின் அரசியல் திசை வழியில் பெரிதான முரண் ஏதும் இருந்ததில்லை. 83 இற்குப் பின்னான காலம் முழுவதும் அறியப்பட்ட எந்த தேசிய விடுதலை இயக்கங்களும் இதற்கு விதிவிலக்கல்ல என்பகு கோடிட்டுக் காட்டப்பட வேண்டியதொன்றாகும்.

எது எவ்வாறாயினும் ஏனைய இயக்கங்களின் உள்ளகக் கட்டமைப்பில் காணப்பட்ட குறித்தளவான ஜனநாயகக் கட்டமைப்பானது, குறித்தளவிலான முற்போக்கு சக்திகளையும் கொண்டிருந்தது. இந்திய அரச பின்புலத்தில் புலிகளால் இவர்கள் அழிக்கப்பட்ட வேளையில் இந்த முற்போக்கு அணியே அதிகமாக அழிந்து போனது.

புலிகள் தவிர்ந்த ஏனைய குழுக்கள் புலிகளால் அழிக்கப்பட்ட பின்னர், எஞ்சியிருந்த வெகுஜன அமைப்புக்கள், மக்கள் குழுக்கள் புலிகளின் அங்கங்களாக பலவந்தமாக இணைக்கப்பட்டன.

ஏனைய இயக்கங்களில் ஆதிக்கம் செலுத்திய பிற்போக்கு அணிகள் இலங்கை அல்லது இந்திய அரசுகளின் துணைப்படைகளாக மாற்றமடைந்தன. இப்போது தமிழ்ப் பேசும் மக்களின் தலைமை புலிகள் ஒருபுறத்திலும் மறு புறத்தில் அரச ஆதரவு புலி எதிர்ப்பாளர்கள் என்ற இரண்டு பிற்போக்கு அணிகள் வசமானது.

இந்த இரு அணிகளும் நிகழ்த்திய இராணுவத் தர்பாரில் அழிக்கப்பட்ட ஆயிரமாயிரம் தமிழ்ப் பேசும் மக்களில் பெரும்பாலானவர்கள் இலங்கை அரசின் பெருந்தேசிய அடக்குமுறையின் பாதிப்பிற்கு உள்ளானவர்களே.

தமிழ்ச் சமூகத்தின் இருப்பைப் பேணுவதற்கான இராணுவத்தைக் கட்டமைத்த பிரபாகரனின் அரசியல் மக்களின் அழிவோடு முள்ளிவாய்க்காலில் கரைந்துபோனது.

இதை விடுத்து பிரபாகரனினைக் கடவுளாக்குவதும், சூர்யத்தேவனாகப் புனைவுகளைக் கட்டமைப்பதும் அழிவுகளை அங்கீகரிப்பதாகும். தவிர, பிரபாகரனின் அரசியல் ஏற்படுத்திய அழிவுகளை விமர்சிப்பதை விடுத்து பிரபாகரனை வெறுமனே துரோகியாகவும் மன நோயாளியாகவும் சித்தரிப்பது சமூகப்பற்றற் செயற்பாடாகும். பழிக்குப் பழி என்ற, இரத்ததிற்கு இரத்தம் என்ற நிலப்பிரபுத்துவ குழு மனோபாவத்தின் வெளிப்பாடாகும்.

பிரபாகரன் முன்வைத்த அரசியலின் மிகப் பெரும் துரோகம் என்பது ஒரு நியாயமான போராட்டத்தை அழித்தததாகும். பிரபாகரன் தியாகியா துரோகியா என்ற தனி நபர் வாதங்களுக்கு அப்பால் அவரின் அரசியல் இழைத்த துரோகம் என்பது தமிழ்ப் பேசும் மக்களின் உரிமைக்கான போராட்டத்தைப் பலவருடங்கள் பிந்தள்ளியிருக்கிறது.

பிரபாகரன் என்ற தனிமனிதன் துரோகியா தியாகியா என்பதல்ல இன்றைய பிரதான கேள்வி. பிரபாகரனின் அரசியல் மக்களுக்கும் போராட்டத்திற்கும் இழைத்த துரோகம் பேசப்ப்பட வேண்டும். அதன் வெளிச்சத்திலிருந்தே புதிய போராட்டம் சரியான நெறியைக் கண்டறிய முடியும்.

பிரபாகரன் அரசியலின் மீள்கட்டமைப்பென்பது மறுபடி ஒரு முறை அரசியல் துரோகத்தை அரங்கேற்றுவதாகும்.

கூட்டம் கூட்டமாகத் தமிழ்ப் பேசும் மக்களை அழித்துப் போட்டுவிட்டு அவர்களின் அடையாளத்தைச் சிறுகச் சிறுக அழித்துக்கொண்டிருக்கும் கொடிய பேரினவாத இலங்கை அரச அதிகாரத்திற்கு எதிரான போராட்டத்தைத் புதிய வழிகளில் மக்கள் பற்றுள்ளவர்கள் திட்டமிடத் தவறும் துரோகம் நிகழுமானால் பிரபாகரனின் உயிர்ப்பு தவிர்க்க முடியாதாகிவிடும்.

http://inioru.com/?p=16187

  • Replies 55
  • Views 6.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிரபாகரன் போராட்டத்தை பின்ந்தள்ளி போட்டார் இனி இந்த ஒட்டுகுழுக்கள் வந்து முன் தள்ள போகினம் பாத்துக்கொண்டு இருங்கோ :huh: :huh: :o

சிங்களவன் தூக்கி எறியிற எழும்புத்துண்ட பொறுக்க முன்னுக்கு தள்ளி கொண்டு நிக்க போகுதுகள். :D:D:D

Edited by சித்தன்

பிரபாகரன் ஒரு இரவுக்குள் தன்னை நிலை நிருத்தியவர் கிடையாது கடுமையான பாதையை கடந்து வந்து கொள்கையில் தன்னை நிலை நிறுத்திய மனிதர்... மக்களின் நம்பிக்கையை வெல்வது ஒண்றும் சுலபமானது கிடையாது அந்த நம்பிக்கையை புலிகள் பெற்றார்கள் எண்றால் அதுக்கு தலைமை தாங்கிய பிரபாகரன் எனும் எங்களின் தலைவனின் கொள்கை பற்றும் உறுதியுமே காரணம்...

கடுமையான பாதையை கடக்க முடியாத பலர் விலகி கொண்டதும் , பிரபாகரனை சொறிவதை மட்டுமே கொள்கையாக கொண்டதையுமே நாங்கள் பாக்கின்றோம் தானே...

பிரபாகரன் எனும் பெரிய கோட்டுக்கு பக்கத்தில் தங்களை இன்னும் பெரிய கோடாக நிலை நிறுத்தி கொள்ள முயலாதவர்கள் பிரபாகரன் எனும் கோட்டின் மீது சேறு பூச முயல்வதே இந்தக்கட்டுரையின் சாரம்...

.

புலிகள் தவிர்ந்த ஏனைய குழுக்கள் புலிகளால் அழிக்கப்பட்ட பின்னர், எஞ்சியிருந்த வெகுஜன அமைப்புக்கள், மக்கள் குழுக்கள் புலிகளின் அங்கங்களாக பலவந்தமாக இணைக்கப்பட்டன.

ஏனைய இயக்கங்களில் ஆதிக்கம் செலுத்திய பிற்போக்கு அணிகள் இலங்கை அல்லது இந்திய அரசுகளின் துணைப்படைகளாக மாற்றமடைந்தன. இப்போது தமிழ்ப் பேசும் மக்களின் தலைமை புலிகள் ஒருபுறத்திலும் மறு புறத்தில் அரச ஆதரவு புலி எதிர்ப்பாளர்கள் என்ற இரண்டு பிற்போக்கு அணிகள் வசமானது.

http://inioru.com/?p=16187

புலிகள் எந்த வெகுசன அமைப்பையும் பலவந்தமாக தங்களுக்குள் இணைக்கவில்லை... ஆனால் அவைக்கு சமாந்தரமான கட்டுமானங்களையும் நிர்வாகங்களையும் கட்டி அமைத்துக்கொண்டனர்... பலவந்தமாக இணைக்க படும் எந்த அமைப்பாலும் எந்த பயனும் இல்லை என்பது புரியாதவரா எழுத்தாளர்...?

  • கருத்துக்கள உறவுகள்

நாலு கட்டுரைகள் அப்படியே நாசுக்காக தமிழ்தேசியம் வாழ்க..! தலைவர் பிரபாகரன் வாழ்க...! புலிகள் வாழ்க...! இந்தியா ஒழிக.. சிங்களம் ஒழிக என ... முழங்கிவிட்டு .....இவர்கள் மீது...நாம் நம்பிக்கை கொள்ளும் நேரத்தில் ...கேப்பில் ....அதாவது சைடுகேப்பில்.... ஆட்டோ ஓட்டுவார்களே.... அதைபோலத்தான்.... இந்த கோஸ்டிகள்.... அதாவது இறைவாழ்த்து போல... சுக்லாந்திரம் சசிவர்ணம் போல .... இந்த கோஸ்டிகள் ஆரம்பத்தில் தலைவர் வாழ்க..... என ஆரம்பித்து கடைசியில் தமது கொள்கையில் முடிப்பார்கள்... இது குறித்து ஈழத்தோழர்கள் கவனமாக இருக்கவேணும்... ஒப்பனிங்க் நல்லாதான் இருக்கும்... ஆனா... பினிசிங்க் சரியிருக்காது.... :huh:

கொய்யால... தலைவரை ... யார்... யார்... இழித்தும் பழித்தும் பேசுவதும் என்று ஒரு விவஸ்தை கிடையாது??? தலைவரை விமர்சிக்க தகுதியானவர்கள்... உண்மையான கோசிமின்.... போன்ற ஏனைய புரட்சியாளர்கள் மட்டுமே.. உண்மையில் தலைவரை பற்றி கட்டுரை எழுதும் எவனும் மரணத்தை நேருக்கு நேர் நின்று சந்திக்கும் அளவுக்கு துணிச்சல் இல்லை.... வேலை தெரியாத வேசி .... வேலை செய்ய இடம் பத்தலை..... என்றாளாம்..... அப்படிப்பட்ட அறிவு ஜீவிகள் ... காசு கொடுத்து விட்டு தமிழீழம் கேட்கும் கோஸ்டிகள்(ஏனெனில் புலிகள் உங்க அடியாட்கள் அல்லர்)... தங்கள் வீட்டில் பொழுது போகவில்லையெனில் ... இந்தமாதிரியான விசயங்களில் தலையிடுவதை விடுத்து.... சுவற்றில் ஏதாவது கிறுக்கி பழகவும்... (அல்லது) குஜாலான குத்து படம் பார்க்கவும்... இரவு என்சாய் பண்ணவும்..

6f7108ab7637e542e0ab99ac3616f99e%5B1%5D.gif

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

இந்திய வெளியுறவுத்துறை அதிகாரியான பாரத்குமார் இவ்வாறு சொல்கிறார்:

“நீண்ட காலத்திற்கு முன்பு நாங்கள் பிரபாகரனை உருவாக்கினோம். எங்குமில்லாதவாறான ஒருவரை நாம் தேடியெடுத்தோம். அவரிடம் நாங்கள் கவரும் விதத்தில் என்னத்தைக் கண்டெடுத்தோமென்றால், முற்றாகவே அரசியலற்ற பெருமளவிற்கு அரசியலில் அப்பாவித்தனமானவராக இருந்தார் என்பதையே. அவர் பல வழிகளில் பயந்த சுபாவமுள்ளவராக இருந்தார். அவர் ஆயுதங்கள் குறித்தும், படைப்பிரிவு குறித்தும் அதிக ஆர்வம் கொண்டவராகவும் இருந்தார். எங்களுடைய தேவைகளுக்கு மிகப் பொருத்தமானவராகவும் அவர் இருந்தார்.”

பிரபாகரன் உருவாக்க எண்ணிய சமூகத்தின் அனைத்து விழுமியங்களையும் பாதுகாக்கும் இராணுவக் குழுவைக் கட்டமைக்கும் அரசியலுக்குப் பிரபாகரன் ஒரு போதும் துரோகம் செய்தவரல்ல. ஆனால் பிரபாகரனின் வரித்துக்கொண்ட அரசியலின் அடிப்படையே சமூகத்தின் கீழ் நிலையிலுள்ள மக்கள் பிரிவுகளுக்கு அதன் மேலணிகள் இழைத்த துரோகங்களிலிருந்தே கட்டமைக்கப்பட்டது.

பிரபாகரன் முன்வைத்த அரசியலின் மிகப் பெரும் துரோகம் என்பது ஒரு நியாயமான போராட்டத்தை அழித்தததாகும். பிரபாகரன் தியாகியா துரோகியா என்ற தனி நபர் வாதங்களுக்கு அப்பால் அவரின் அரசியல் இழைத்த துரோகம் என்பது தமிழ்ப் பேசும் மக்களின் உரிமைக்கான போராட்டத்தைப் பலவருடங்கள் பிந்தள்ளியிருக்கிறது.

இந்த இரு பந்திக் கருத்துக்களிலுமே நியாயமான போராட்டத்தின் அழிவுக்கான காரணங்கள் பிரபாகரனை கடந்து நிற்கின்றது. தமிழ்த்தேசியவாதம் என்பதே சமூகத்தின் கீழ் நிலையில் உள்ள மக்கள் பிரிவுகளுக்கு துரோகமிழைப்பதன் மறுபெயர். இவ்வாறான தமிழ்த்தேசியவாதத்துடன் சமூகத்தின் அனைத்துப்பிரிவுகளும் சிங்கள ஒடுக்குமுறையை மையமாகவைத்து புலிகளின் இராணுவத்துடன் இணைக்கப்படுகின்றது. பிரபாகரனின் நடவடிக்கைகள் இங்கே தனிமனித நடவடிக்கையும் இல்லை பிரபாகரனின் அரசியல் மக்களுக்கும் போராட்டத்திற்கும் துரோகமிளைக்கவும் இல்லை. மறாக அனைத்தும் இந்த சமூக இருப்பினதும் அதுசார்ந்து அசைவியக்கத்தினதும் பிரதிபலிப்பேயாகும். பிரபாகரனின் தோற்றம் சிங்கள அரச ஒடுக்குமுறையை மையமாகவைத்து நிகழ்கின்றது. சமூக விடுதலை இங்கே இரண்டாம்பட்சமாகின்றது. இனவிடுதலை சமூக விடுதலை என்ற இரண்டும் ஒன்றோடு ஒன்று முறண்பட்டு ஒன்றை ஒன்று விடுவிக்கமுடியாமல் இறுதியில் இரண்டும் விடுதலை அடையாமல் பின்தள்ளப்படுகின்றது. இந்தப் பின்னடைவை தூக்கி பிரபாகரன் தலையில் போடுவதை விட பயித்தியக்காரத்தனம் வேறெதுவும் இருக்கமுடியாது.

ஒருவரை ஒருவர் ஏற்க மறுக்கும் ஜனநாயக விரோதமே எமது தேசியவாதத்தின் அடிப்படை. இதை மையவாதம் என்றோ அல்லது சாதி மத வர்க்க பிரதேசவாத உச்சநிலை அடயாளப்போட்டிநிலை என்றோ பல்வேறு கூறுகளாக இனம்காணமுடியும். எனவே தேசியவாதத்தின் அடிப்படையை எதிர்ப்பதும் மாற்றம் செய்ய முனைவதும் நடக்கவேண்டியதற்குப்பதிலாக இந்த அடிப்படையுடன் ஏக மக்களும் புலிகள் என்ற பின்னணியில் இணையும்போது மையவாதம் தன்னை விடுவித்துக்கொள்கின்றது. வர்க்க அடிப்படையில் புதிய தேசியவாதிகளுக்கு (புலிகளுக்கு) வெளியில் இருந்து ஆதரவு என்ற நிலையை தோற்றுவிக்கின்றது. அதாவது வசதிவாய்புள்ளவர்கள் புலம்பெயர்ந்தோ அரச உத்தியோகங்கள் மற்றும் அரசை அண்டிப்பிழைத்தோ வாழ்வை போரில் இருந்து பாதுகாத்துக்கொண்டு பணத்தை கொடுத்து உதவுவது. வறிய மக்களைக் கொண்டு தமிழீழத்தைப் பெற்றுக்கொள்வது இதற்குக் கண்காணியாக புலிகள் தலமை இயல்பாக மாற்றப்படுகின்றது. ஒட்டுமொத்த மக்களுக்குமான உரிமையை பெற்ரெடுப்பதற்கு வறிய மக்கள் நிர்ப்பந்திக்கப்படுகின்றார்கள். இதே நிலையே உரிமைப்போர் குழுநிலைப் பயங்கரவாதம் என்னும் புறநிலையையும் தோற்றுவிக்கின்றது.

இன்று புலிகளின் முடிவுக்குப் பின்னரான வெளியில் இருந்து நடக்கும் தேசிய முன்னெடுப்பானதும் இதே பாணியிலான திருத்தம் பெறாத முன்னெடுப்பே. நிர்பந்திக்கப்பட்ட வறிய மக்களுக்கும் தேசிய முன்னெடுப்பாளர்களுக்குமிடையில் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது. அதைப்பற்றிய அக்கறை கவலை எதுவும் கிடையாது. பேரினவாதிகளின் நட்புடனேயே மக்களை நெருங்கமுடியும் என்ற உண்மை தெரிந்தபோதும் பேரினவாதிகளுடன் நட்பை ஏற்படுத்தாது இருப்பதே தேசியவாதமாக சித்தரிக்கப்படுகின்றது. மறுபுறத்தே பொருளாதாரத்தில் மேம்பட்டவர்கள் தேசியவாதத்திற்கு அப்பால் பொருளாதார ரீதியில் தாயகத்தில் உள்ள தமது உறவுகளுக்கு பொருளுதவி வளங்கி புதிய வர்க்க நிலையை தோற்றுவிக்கின்றார்கள். வெளிப்படையான போலித்தனமான இந்த செயல்கள் நிரந்தரமாக மக்களுக்கும் தேசியவாதிகளுக்குமிடையிலான உறவை துண்டிக்கவல்லது.

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய வெளியுறவுத்துறை அதிகாரியான சூரத்குமார் 2050 ல் இப்படி சொல்கிறார்....

எம்முடைய ராஜதந்திர சித்து விளையாட்டுகளுக்கு ஏற்ப எம்மால் வழிநடத்தபட்ட நான்காம் ஈழப்போர் முடிந்ததும்... பலபேர் வீட்டில் எழவு விழுந்து முடிந்ததும்.... ஏற்கெனவே சிங்களவர்கள்கலால் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழகளில் உணர்வுகள் குறித்தும் ஆலோசனை நடைபெற்றது .. அவர்களின் உறுதியை குலைக்க கருங்காலிகள் கருணா போன்ற எண்ணமோட்டமுடியவர்களை ஒருவரை தேர்ந்தெடுத்து... எமது ஆரிய பங்காளிகளுக்கு உதவவும்.. தமிழர்களுக்கு நிரந்தரமாக கருமாதி நடத்தவும் உறுதி செய்தோம்... அவ்வாறே ஒருவரை தேர்வு செய்தோம்...

அவரிடம் நாங்கள் கவரும் விதத்தில் என்னத்தைக் கண்டெடுத்தோமென்றால், முற்றாகவே போராட்டம் என்றால் காத தூரம் ஓடும் அளவுக்கு... அவர் அப்பாவித்தனமானவராக இருந்தார் என்பதையே. அவர் பல வழிகளில் பயந்த சுபாவமுள்ளவராக இருந்தார். அவர் இணையதளங்கள் குறித்தும்,இணையதள் எழுத்து வடிவில்... சூராதி சூராக....புலம் பெயர்ந்துவாழும் தமிழர்களை சிதைப்பதை குறித்தும் எங்கள் கட்டளைக்கு ஏற்ப அதிக ஆர்வம் கொண்டவராகவும் இருந்தார். எங்களுடைய தேவைகளுக்கு மிகப் பொருத்தமானவராகவும் அவர் இருந்தார்.”

எங்களுடைய தேவைகளுக்கு மிகப் பொருத்தமானவராகவும் அவர் இருந்தார்

bebes-13%5B1%5D.gif

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களுடைய சாதிப்பிரிவுகள் குறித்து பேசும் பெருமக்கள் மற்ற இனத்தவர் எல்லாம் அப்படியேதான் உள்ளார்களா?? அவர்களுக்குள் சாதி பிரிவினை இல்லையா?? மதம் என்றாலும் பெந்தகோஸ்து முதல் ஆர்.சி கிறிஸ்டியன் வரை இல்லையா? முஸ்லீமுகள் சாய்பு முதல் காதர் வரை இல்லையா? எப்படி ஒன்றுபடுகிறார்கள்?? அவர்களால் மட்டும் எப்படி சுதந்திரம் அடைய முடிந்தது??? விரிவான விளக்கம் தேவை...

Unknown-8.gif

டிஸ்கி : நான் சாதிமுறைக்கு ஆதரவாளன் கிடையாது... :huh:

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

இந்திய வெளியுறவுத்துறை அதிகாரியான பாரத்குமார் இவ்வாறு சொல்கிறார்:

“போட்டி இராணுவக் குழுக்களாக வளர்ச்சியடைய முற்பட்ட ஏனைய அமைப்புக்களை அழிப்பது என்ற போர்வைக்குள் கோரமான கொலைகளை நிகழ்த்தியது.

புலிகள் தவிர்ந்த ஏனைய குழுக்கள் புலிகளால் அழிக்கப்பட்ட பின்னர், எஞ்சியிருந்த வெகுஜன அமைப்புக்கள், மக்கள் குழுக்கள் புலிகளின் அங்கங்களாக பலவந்தமாக இணைக்கப்பட்டன."

புலிகள் தம்மை வலிந்து எதிர்த்த, தமது இருப்பை வலிந்து குழப்ப முயன்ற குழுக்கள் மீது மட்டுமே, பல எச்சரிக்கைகளின் பின்னரே, நடவடிக்கை எடுத்தனர் என்பதை மறைப்பது ஏனோ?

கட்டுரையில் கற்பனை செய்யப்பட்டு திணிக்கப்பட ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் ஏராளமாக உண்டு.

இந்திய பயங்கரவாதிகளின் புகழ் பாடுவதாக மட்டுமே கட்டுரை அமைந்துள்ளது.

தயவு செய்து இப்படியான கட்டுரைகளை இங்கு இணைக்காதீர்கள். கெட்ட வார்த்தைகள் தான் வருகிறது எழுதிய பரதேசியினை திட்டுவதற்கு.

எமது தலைவனை விமர்சிப்பதற்கு கடவுளுக்கும் அருகதையில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

தயவு செய்து இப்படியான கட்டுரைகளை இங்கு இணைக்காதீர்கள். கெட்ட வார்த்தைகள் தான் வருகிறது எழுதிய பரதேசியினை திட்டுவதற்கு.

எமது தலைவனை விமர்சிப்பதற்கு கடவுளுக்கும் அருகதையில்லை.

செந்தமிழன் இவ்வளவை பொறுத்துவிட்டீர்கள்.......... இதையும் பொறுத்தருளுங்கள்!

விட்டபிழைகளை திருத்தி கொண்டு புல்லுபுடுங்க போகிறார்களாம் இந்த புண்ணியவான்கள்.

புல்லு காலுக்குள் இருந்த காலத்திலேய மேவிநடந்த கூட்டம்..........

இனி இவாகள் பிழைகளை கண்டுபிடித்து அதை திருத்தி தம்மை தேசத்திற்காக அற்பணித்து ஒரு போராட்டம் செய்து தமிழன் அதிலே விடிவு காணபோகிறானாம்?

ஏதோ தமிழை எழுத தெரிந்துகொண்டார்கள். அனுபவிக்கதான் வேண்டும்!

  • கருத்துக்கள உறவுகள்

நெற்பயிரை அண்டி வளரும் புல்லுருவிகளை மக்கள் இனங்கண்டு களையாதிருந்தால், களைகள் பெருகி முடிவில் மிஞ்சுவது பயிரெது? களையெது?? என்ற குழப்பமே.

களைகளின் களிகாலத்தினால் தமிழர்களுக்கு இப்பொழுது கலியுகம்...நடத்துங்கோ.

.

Edited by ராஜவன்னியன்

  • கருத்துக்கள உறவுகள்
:huh: இந்தக்கட்டுரை - குப்பை !!!!!!!

... முன்பு ... "இராஜ கோபுரம் எங்கள் ****", "******, அவன் முருகனுக்கே நிகரானவன்" ... என்று விட, பறவாயில்லை கொஞ்சம் லிபரலான பொலிஸி இருக்கும் என நாம் யோசிக்க, உண்மையில் அதல்ல வெறிபிடித்த அடிப்படைவாத மதமேறிய "அல்லாகு(*****னை விழித்து) அக்பர்" எனும் இணையான கோசம்தான் எழுந்திருக்கிறது என்ன இருந்திருக்கிறது!. .

இத்தனை அழிவுகளுக்கு பின்னமும் அப்படியே அச்சடித்த மதவாதத்துக்கு ஒத்த சிந்தனைகள்! :huh:

அண்மையில் நடந்த ஒரு நிகழ்வில் ... முன்னால் புலிப்போராளி ஒருவரை கண்டு, கதைத்தேன். பலவற்றை கதைத்துக் கொண்டு போய் விட்டு சொன்னார் .... " ... ஏதோ புலி அழிந்தது நல்லதுக்கு என்று நினைப்போம்! இல்லை இது வெண்டிருந்தால் உலகில் இல்லாத ஒரு சர்வாதிகார ஆட்சிதான் வந்திருக்கும் ..." .... இது உண்மை போல் தெரிகிறது! :huh:

... எங்கே உங்கள் வாணவேடிக்கைகளை எனக்கெதிராக வீசுங்கள் ... தமிழ்த்தேசியத்தின் விசிலடித்தானுகளே!! :o

தமிழர்களுக்கு ஆதரவாக நீங்கள் எண்றும் உளமார வேலை செய்தவர் இல்லை எண்டது மட்டும் புரிகிறது... ! ஆக்க பூர்வமாக உங்களிடம் இருந்து எதுவும் எப்போதும் வரப்போவதும் இல்லை...

சூரியனை பாத்து குரைக்கும் நாய்க்கு எப்போதும் தெரிவது இல்லை.. அது யாராவது போடும் எலும்புக்கு வாலை ஆட்டும் நாய் தான் எண்டு... :D

Edited by தயா

தலைவர் பிரபாகரனை இந்தியர்கள் 15 வயசிலேயே தத்தெடுத்து விட்டார்களோ! எங்களை முட்டாள்களாக்க தங்களை அடிக்கடி முட்டாள் என்று கூறுகின்றார்கள் இந்தியர்கள்

இந்திய அரச பின்புலத்தில் புலிகளால் இவர்கள் அழிக்கப்பட்ட வேளையில் இந்த முற்போக்கு அணியே அதிகமாக அழிந்து போனது
.

அந்த முற்போக்கு சக்தி எல்லாம் அழியவில்லை......அவையள் அழியாத படியால்தான் இப்ப புலத்தில இருந்து இப்படி முற்போக்கு கத்தரிக்காயை

பொழுது போக எழுதக்கூடியதாக இருக்குது........ :huh::huh::o

Edited by Jil

சூரியனை பாத்து குரைக்கும் நாய்க்கு எப்போதும் தெரிவது இல்லை..

நாய் சூரியனை பார்த்து ஒரு போதும் குரைப்பதில்லை ... சந்திரனை பார்த்து தான் ஊழையிடும்! :huh::huh::o

சந்திரனை பாத்து ஊழை இடுகிறது நாய் இல்லை நரி... அது கூட பொருத்தம் தான்... :D

அது யாராவது போடும் எலும்புக்கு வாலை ஆட்டும் நாய் தான் எண்டு... :huh:

... இன்னும் ஓரிரு நாட்களில் கொழும்பு போகிறேன், சிறிலங்கா தூதரகம் இலவச ரிக்கட் தந்ததன் பலனாக!! ... ஓரிரு கிழமை யாழுக்கு ஓய்வு கொடுத்து ... இன்று சிங்கள்/இந்திய எலும்புத்துண்டுகளை நக்கிகிறேன், நீங்கள் புதிய தேசியத்தலைவர் நெடியவனைடம் கேட்டு மலேசியா/சிங்கப்பூர் போக ஒரு ரிக்கட் வாங்கி தருவீர்களாயின் மீண்டும் உங்களது எலும்புகளை ...!

... மே18இற்கு ஓரிரு நாட்களுக்கு முன்னுக்கு(மே16) என்னிடம் கவுரி என்பவரின் தலைமைடில் வந்த காஸ்ரோக்கள் £1000ஐ வாங்கினார்கள் இன்றுவரை ரசீதெதுவும் தரவில்லை!!!!! அதற்கு மூன்று நாலு மாதங்களுக்கு முன்னுக்கும் இதேபோல் ஆயிரத்தை கொடுத்தேன் ... குறைந்தது வருடத்துக்கு ஆயிரத்துக்கு மேல்!!! என்ன நடந்ததென்று தெரியவில்லை ... அங்கும் சில வருடங்களாக எப்பணமும் போகவில்லையாம்! இதனை நான் என்னிடம் பணமில்லாத போதும் என் தந்தையாரிடம் வாங்கியே கொடுத்தேன், அதுவும் எனது கிரடிட் காட்டில் £10,000தரச்சொல்லி நின்றார்கள்!! ... என்னை விடுங்கல், இங்கு எத்தனை பேர் £25000, £50000 கொடுத்துப் போட்டு இன்று நடுத்தெருவில் ..... இன்று வாங்கியவர்கள் கடை முதலாளிகளாம்!!! ... வாங்கியதை திரும்ப வாங்கித்தந்தாலாவது ... என் போன்றவர்கள் வேறிடங்களில் எலும்பை தேடித்திரியாமல் ... சொந்த எலும்பை சூப்பலாம்!!!!

see u soon!! :huh:

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கவலை நியாயமானதுதான்..! ஆனால் என்ன.. நீங்கள் ஆத்தில போட்டதை குளத்தில தேடுறீங்கள்..! யாரிட்ட குடுத்தீங்களோ அவையளிட்ட தானே கேட்க வேணும்..? சில தனிநபர்களின் செயற்பாட்டுக்கு அந்த நேரத்தில் அழிந்துகொண்டிருந்த ஒரு அமைப்பு எப்படிப் பொறுப்பாகும்? :huh:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சந்திரனை பாத்து ஊழை இடுகிறது நாய் இல்லை நரி... அது கூட பொருத்தம் தான்... :huh:

தயா அண்ணா

மிருகங்களோடை மிருக பாசையிலை தான் பேசணும் போல இருக்கு. :huh:

  • கருத்துக்கள உறவுகள்

நானும் ஆட்கள் பலர் சொல்லியும், புத்தகங்கள் வாயிலாகவும், நேரடியாகவும் ஈழதமிழருக்காக பாடுபட்ட தலைவர்களை பார்த்துள்ளேன்.செல்வநாயகத்தை தவிர அனைவரும் நானறிந்த வரை சுயநலவாதிகள். யாரும் தமது மக்களுக்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்து மக்களோடு போராடி மக்களுக்காக இறக்கவில்லை.இந்த சுயநலகூட்டத்தில் இப்படியானவர்கள் பிறக்கவே கூடாது.

இப்படியான கட்டுரை யாராவது எழுதுவார்கள் என எதிர்பார்த்தது தான்.ஆனால் இவ்வளவு விரைவாக எழுதுவார்கள் என எதிர்பார்க்கவில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கவலை நியாயமானதுதான்..! ஆனால் என்ன.. நீங்கள் ஆத்தில போட்டதை குளத்தில தேடுறீங்கள்..! யாரிட்ட குடுத்தீங்களோ அவையளிட்ட தானே கேட்க வேணும்..? சில தனிநபர்களின் செயற்பாட்டுக்கு அந்த நேரத்தில் அழிந்துகொண்டிருந்த ஒரு அமைப்பு எப்படிப் பொறுப்பாகும்? :huh:

ஒரு நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரமுள்ள தலைமை அதிகாரி நிர்வாகச் சீர்கேடுகளை இல்லாமல் பார்க்கவேண்டும். சீர்கேடுகள் இருந்தால் அவற்றிற்குப் பொறுப்பானவர்களை நீக்கவேண்டும். பிழைகளை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இல்லாதவர்கள்தான் தனிநபர்களின் செயற்பாடுகள் என்று தட்டிக் கழித்துவிட்டு தமது பதவியைத் தக்கவைத்துக்கொள்வார்கள்.

எமது போராட்டத்தினை தலைமையேற்று நடாத்த புலத்தில் பதுங்கி இருப்பவர்களால்தான் முடியும் என்று நம்புவர்களுக்கு ஒன்றும் சொல்லமுடியாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.