Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொதுநலவாய போட்டிகள் - வெட்கித் தலைகுனியும் இந்தியா !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பொதுநலவாய போட்டிகள் - வெட்கித் தலைகுனியும் இந்தியா !

வருகிற மாதம் இந்தியத் தலைநகர் புது தில்லியில் நடைபெறவிருக்கும் பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டிகள் பற்றி அனைவரும் அறிந்திருப்பீர்கள். இப்போட்டிகள் அறிவிக்கப்பட்ட காலத்திலிருந்தே இதில் பங்குபற்றும் அனைத்து நாட்டு வீரர்களையும் தாம் தாக்கப்போவதாக பாகிஸ்த்தானை மைய்யமாகக் கொண்டியங்கும் தீவிரவாத அமைப்பொன்று எச்சரித்துவருகிறது. அந்த வகையில் இரு நாட்களுக்கு முன்னதாக தில்லியில் அரச வாகனம் ஒன்றின்மேல் தீவிரவாதிகள் துப்பாகித்தாக்குதல் ஒன்றையும் நடத்தியிருக்கிறார்கள். இது பல நாட்டு விளையாட்டு வீரர்களுக்கும் அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதோடு, தட்டெறிதலில் தங்கப் பதக்கம் வெல்லுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவுஸ்த்திரேலிய வீராங்கனை தான் இந்தப் போட்டிகளிலிருந்து வெளியேறுவதாக அறிவித்திருக்கிறார். தனது பதக்கத்தை விடவும் தனது பாதுகாப்பு முக்கியமெனவும், அது இந்தியாவில் கிடையவே கிடையாது எனவும் அவர் கூறியிருக்கிறார். இவரைப் போலவே இங்கிலாந்து ஓட்டப்பந்தய வீரர் ஒருவரும் தனது பிள்ளைகள், குடும்பம் போன்றவற்றின் எதிர்காலத்தை யோசித்து தானும் இப்போட்டிகளில் கலந்துகொள்வதில்லை என்று முடிவெடுத்திருக்கிறார்.இவர்களைத் தொடர்ந்து பல வீரர்களும் தமது முடிவுகளை இப்போட்டி சம்பந்தமாக எடுக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவுஸ்த்திரேலிய வீரரகளின் விசேட பயிற்சியாளர் தில்லி பாதுகாப்பு பற்றிக் கூறும் போது, "இதுவரை போட்டிகளில் வீரர்களின் திறமையே எமது குறிக்கோளாக இருந்து வந்தது, இப்போது முதல்முறையாக வீரர்களின் பாதுகாப்பு என்பது வீரர்களின் திறமையைக் காட்டிலும் முக்கியமாக மாறியிருக்கிறது, தில்லிப் பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி நாம் தீவிரமாக சிந்தித்து வருகிறோம்" என்று கூறுகிறார்.

இது இவ்விதமிருக்க கடந்த இருநாட்களாக தில்லியில் வெளிநாட்டு வீரர்கள் தங்குவதற்கென்று இந்திய அரசால் அவசர அவசரமாக கட்டி எழுப்பப்பட்ட தொடர்மாடிகள் பற்றிய சர்ச்சை கிளம்பியிருக்கிறது. சுமார் 10,000 ஏழைகள் வசித்து வந்த சேரிப்புர நகர் ஒன்றை ஆக்கிரமித்த தில்லி விளையாட்டு அமைப்பாளர்கள், அவ்விடத்தில் இந்த தொடர் மாடிக் குடியிருப்புக்களை அமைத்திருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. இந்த 10,000 ஏழைகளும் தற்போது நிர்க்கதியாக்கப்பட்டிருப்பதாக தில்லி மனிதநேய அமைப்புகள் குற்றம் சாட்டி வரும் அதே வேளை, இந்தக் குடியிருப்புக்களின் தரம் பற்றி வெளிநாட்டு விளையாட்டு அமைப்புக்கள் கடுமையான கண்டனம் தெரிவித்து வருகின்றன.இதுவரை நடைபெற்ற போட்டிகள் அனைத்திலும், தில்லி குடியிருப்புக்களே மிகவும் தரம் குறைந்தனவாகவும், மக்கள் குடியிருப்பதற்கு அருகதை அற்றவையாகவும் இருப்பதாக அவை குற்றம் சாட்டியுள்ளன. இன்னொரு விளையாட்டு அமைப்பு இன்னுமொரு படி மேலே போய், இக்கட்டிடத் தொகுதியை, "குப்பைகளின் மேடு" என்று வர்ணித்திருக்கிறது.

இவை எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற்போல், நேற்று இந்தப் போட்டி நடைபெறும் நகரில் அமைக்கப்பட்டு வந்த மேம்பாலம் நொருங்கி வீழ்ந்ததில் அதில் வேலை செய்த 27 பணியாட்கள் படுகாயமடைந்துள்ளனர். இந்தியக் கட்டிடத் தரன் பற்றி பரவலாக கேள்வி எழுப்பப்பட்டு வரும் இந்தவேளையில் இந்த மேம்பாலம் நொருங்கி வீழ்ந்தது மேலும் சர்ச்சைகளைக் கிளப்பியிருக்கிரது.

இந்த போட்டிகளின் அமைப்பாளர் இப்போட்டிகளில் கலந்துகொள்ளவிருக்கும் வீரர்களின் மலசல கூட காகித துடைப்பான்கள் ஒன்றிற்கு சுமார் 250 அமெரிக்க டாலர்களை கணக்குக் காட்டி செய்திருக்கும் மோசடி பற்றி இந்தியப் பத்திரிக்கைகளே எழுத ஆரம்பித்திருக்கின்றன.

ஆக மொத்தத்தில் தென்னசிய ஜாம்பவானாக, பெரிய பிராந்திய வல்லரசாக தன்னைக் காட்டத் துடிக்கும் இந்தியா என்கிற போலித்தேசிய வாத நாட்டின் கவுரவம் கப்பலேறிக்கொண்டிருக்கிறது !!!!!!

  • Replies 66
  • Views 5.6k
  • Created
  • Last Reply

கனடா இந்த போட்டிகளில் பங்குபற்ற சில "அடிப்படை" தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டுகோள் விடுத்துள்ளது.

http://www.thestar.com/sports/article/864163--canada-says-commonwealth-games-facilities-need-massive-fix

http://www.thestar.com/sports/article/864097--could-next-month-s-commonwealth-games-be-cancelled

அதேவேளை கனடாவின் முன்னணி நிறுவனமான "ரிம்(RIM)" மீது அதன் தருமாறு கோரிவருகின்றது. காரணம் "பாதுகாப்பு". ரிம்மின் ஸ்மார்ட் போன் மூலம் கதைக்கும் / அனுப்பும் இரகசியங்கள் பற்றிய "பாதுகாப்பு".

http://www.thestar.com/business/companies/rim/article/864219--india-targets-rim-s-corporate-email

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

ஒழுங்காக ஒரு போட்டியே நடாத்தத் தெரியவில்லை. ஆனால் பக்கத்து நாடுகளில் சென்று கள்ளவேலைகளைச் செய்யுது கிந்தியா.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த போட்டிகளின் அமைப்பாளர் இப்போட்டிகளில் கலந்துகொள்ளவிருக்கும் வீரர்களின் மலசல கூட காகித துடைப்பான்கள் ஒன்றிற்கு சுமார் 250 அமெரிக்க டாலர்களை கணக்குக் காட்டி செய்திருக்கும் மோசடி பற்றி இந்தியப் பத்திரிக்கைகளே எழுத ஆரம்பித்திருக்கின்றன.

கக்கூஸ் பேப்பர் 250 டொலரா......

250 டொலருக்கு கக்கூஸ் பேப்பர் வாங்கினால்.... ஒரு ஊரே.... வடிவாய் துடைக்குமே...... smiley-toilet07.giftoilet13.giftoilet.gif

toilet-paper.jpgtoilet.gif

.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பி.பி.ஸி இதுபற்றிச் சொல்லியிருக்கும் செய்தியைப் பார்ப்பதற்கு

http://www.bbc.co.uk/news/world-south-asia-11386926

இந்திய பல் தேசிய கூட்டமைப்பிற்கு தங்கள் நாட்டில் நடைபெறும் முக்கியநிகழ்விற்கு ஒரு ஒழுங்கான பாலம் கட்டத் தெரியல்லை. இவர்கள் இலங்கையில் செய்யும் அபிவிருத்தி(?) வேலைகளை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்திரேலியா தனது வீரர்களை பங்குபெற்ற அனுமதிக்காது போலத் தெரிகிறது.

கேவலம் பாரத தேசம் உலகின் முன் வெட்கித் தலைகுனியும் நேரம் இது. நாம் இதை பெரும் கொண்டாட்டமாக கொண்டாட வேண்டும்.

மெலியாரை வலியார் தீண்டினால் வலியாரை தெய்வம் கேட்கும். மெலியாரான புலிகளை பல நாடுகளோடு சேர்ந்து அடித்த இந்த ஈனப்பிறவிகள்.. வெற்றி கொண்டாடின. இன்று வெட்கித் தலைகுனியும் அளவுக்கு மேற்குநாடுகள் இவர்களை ஒரு வாங்கு வாங்கிவிட்டன.

இந்த நாடு ஒரு சர்வதேச தரப் போட்டியைக் கூட நடத்த வக்கில்லாத நாடு. அண்டை நாடான சீனாவோ ஒலிம்பிக்கே நடத்தி முடித்துள்ள நாடு.

எதற்கும் சிறீலங்கா குப்பைகளைக் கூட்டி வைச்சு தெற்காசிய போட்டிகளை நடத்தி ஆளை ஆள் கட்டி அழுதுக்கோங்கடா. ஊழல் பிறவிகளா. :)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

பேப்பரில் போட்டுக் கிழிகிழியென்று கிழிக்கிறான்கள்.ஒரு கொமன்வெல்த் போட்டியையே ஒழுங்கா நடத்த தெரியவில்லை.உலக வல்லரசாம்.சீனாக்காரன் ஒலிம்பிக் போட்டி நடத்திக் காட்டினான் எண்டு தாங்களும் வெளிக்கிட்டுதுகள்.ஊழல் பெருச்சாளிகள்.பாட் டெமொக்கிரசி என்று எழுதுறாங்கள்.

AFP பிரெஞ்சுச் செய்தியில் இந்தியாவை மிகவும் அவமானப் படுத்தியுள்ளனர். கழிவறைகள் சுத்தமாக இல்லை என்பதற்கு விளக்கமளித்த ஏற்பாட்டாளர்கள், மேலத்தேய நாடுகளில் அவர்களது முறைப்படி இது அசுத்தமாக இருக்கலாம் ஆனால் எங்களது முறைப்படி இது சுத்தமானது என்பதுபோல் கூறி தங்களைத் தாங்களே கேவலப் படுத்தியுள்ளனர்.

ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட செலவீனத்தை விட தற்சமயம் 5 மடங்கு செலவு செய்து விட்டார்களாம். இது ஒரு பிச்சைக்காரர்கள் அதிகமாக வாழும் நாட்டிற்கு மிகவும் அதிகமாம்.

http://fr.sports.yahoo.com/21092010/1/21092010143416.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

AFP பிரெஞ்சுச் செய்தியில் இந்தியாவை மிகவும் அவமானப் படுத்தியுள்ளனர். கழிவறைகள் சுத்தமாக இல்லை என்பதற்கு விளக்கமளித்த ஏற்பாட்டாளர்கள், மேலத்தேய நாடுகளில் அவர்களது முறைப்படி இது அசுத்தமாக இருக்கலாம் ஆனால் எங்களது முறைப்படி இது சுத்தமானது என்பதுபோல் கூறி தங்களைத் தாங்களே கேவலப் படுத்தியுள்ளனர்.

ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட செலவீனத்தை விட தற்சமயம் 5 மடங்கு செலவு செய்து விட்டார்களாம். இது ஒரு பிச்சைக்காரர்கள் அதிகமாக வாழும் நாட்டிற்கு மிகவும் அதிகமாம்.

http://fr.sports.yahoo.com/21092010/1/21092010143416.html

அப்ப இந்தியா தன்னை பிச்சக்கார நாடு என்று ஒத்து கொண்டுட்டுதா :)^_^:)

  • கருத்துக்கள உறவுகள்

AFP பிரெஞ்சுச் செய்தியில் இந்தியாவை மிகவும் அவமானப் படுத்தியுள்ளனர். கழிவறைகள் சுத்தமாக இல்லை என்பதற்கு விளக்கமளித்த ஏற்பாட்டாளர்கள், மேலத்தேய நாடுகளில் அவர்களது முறைப்படி இது அசுத்தமாக இருக்கலாம் ஆனால் எங்களது முறைப்படி இது சுத்தமானது என்பதுபோல் கூறி தங்களைத் தாங்களே கேவலப் படுத்தியுள்ளனர்.

ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட செலவீனத்தை விட தற்சமயம் 5 மடங்கு செலவு செய்து விட்டார்களாம். இது ஒரு பிச்சைக்காரர்கள் அதிகமாக வாழும் நாட்டிற்கு மிகவும் அதிகமாம்.

http://fr.sports.yahoo.com/21092010/1/21092010143416.html

உந்த இலச்சனத்தில இலங்கையில் 50.000 வீடுகள் கட்டிக்கொடுக்க போகினம்.பிச்சைக்காறன் பிச்சை போடுறான் ^_^ நாங்கள் ஒழுங்காய் இருந்தால் இந்த நிலை வருமா. :)

50000 ஆயிரம் ஒடுகளை கொடுத்து போட்டு ,வீடு கட்டியாச்சு என்று சொல்லுவாங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் இலங்கையிலிருந்து வந்த......

இவற்றுடன் சம்பந்தப்பட்ட ஒருவரை சந்தித்தபோது...

அவர் சொன்னது,

இந்தியாவிலிருந்து வீட்டுக்கூரைக்கு போடும் தகரங்கள் வந்திருக்காம்

அவற்றை கையால் கிழித்துவிட முடியுமாம்

அவற்றைக்கூட கொண்டுவந்து கிளிநொச்சியில் அடுக்கிவிட்டு......

மீண்டும் லாறிகளில் ஏற்றி சிங்களப்பக்கம் கொண்டுபோய் கடைகளில் போட்டுவிக்கின்றார்களாம்

தகரத்தில் எழுதப்பட்டுள்ளதாம்,

இந்தியாவினால் இலங்கைத்தமிழருக்கு இலவசமாக கொடுக்கப்பட்டது என்று............

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
:) கான மயிலாட கண்டிருந்த வான்கோழி தானும் ஆட நினைத்ததாம் !!! அப்படித்தான் இருக்கிறது இந்த பரதேசித் தேசத்தின் நிலமை. எதுக்கெடுத்தாலும் சீனக்காரனோட போட்டி, ஆனால் அவன் அடிக்க வெளிக்கிடால் வாலை இறுக்கச் சுருட்டிக்கொண்டு ஓடி வந்திடுவினம். அருணாச்சலப் பிரதேசத்தில சீனக்காரன் தன்ர விருப்பத்துக்கு ஏற்றமாதிரி நிலங்களைப் பிடிச்சுக்கொண்டு வாரான், அண்மையில் கூட பெருமளவு நிலம் பறிபோயிருக்கு, வெறும் கண்டன் அறிக்கையோட இந்தியா சுருட்டிக்கொண்டு விட்டது. மூதேவிகள், எங்களோடதான் சண்டித்தனம் !!!!!
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
http://www.youtube.com/watch?v=U1W8vig14MM

Edited by Muhil

  • கருத்துக்கள உறவுகள்

.

அலங்கோலமாகும் காமன்வெல்த் போட்டி-பளு தூக்கும் ஸ்டேடிய கூரை இடிந்தது

டெல்லி: நேற்று ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்திற்கு வெளியே நடை மேம்பாலம் இடிந்து விழுந்த நிலையில் இன்று

வெயிட்லிப்டிங் போட்டிகள் நடைபெறும் ஸ்டேடியத்தின் மேற் கூரையின் ஒரு பகுதி சரிந்து விழுந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த உள்ளரங்க ஸ்டேடியம், நேரு ஸ்டேடிய வளாகத்திலேயே உள்ளது. அதன் ஒரு பகுதி பெயர்ந்து இடிந்துள்ளதாம். சமீபத்தில்தான் இதை கட்டியிருந்தனர். இதனால் பரபரப்பு மேலும் அதிகரித்துள்ளது.

சேத விவரம் முழுமையாக தெரியவில்லை.

தற்ஸ் தமிழ்

fob_232618e.jpgcwg2_20100921.jpg

சீனாக்காரனின் சதியாய் இருக்குமோ.......

அப்பிடி இருந்தாலும் மூச்சு விடமாட்டாங்கள் :):)^_^

.

சினிமாவுக்கு செட் போடும் நினைப்பில் கட்டியிருப்பார்கள்.

நாட்டுமக்களை சினிமாமோகத்தில் மயக்கிவிட்டு சினிமா அரசியல் செய்யும் நாட்டில் இதெல்லாம் சர்வசாதாரணம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆஸ்திரேலியாவின் 'ஸ்டிங் ஆபரேஷன்'-ஜெயபால் ரெட்டி கடும் சாடல்

22-jaipal-reddy-200.jpg

டெல்லி: காமனவெல்த் போட்டி பாதுகாப்பு [^] தொடர்பாக ஆஸ்திரேலிய டிவி நடத்திய ஸ்டிங் ஆபரேஷனுக்கு மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் [^] ஜெயபால் ரெட்டியும், டெல்லி காவல்துறையும் கடும் கண்டனம் [^] தெரிவித்துள்ளனர்.

காமன்வெல்த் போட்டியின் தொடக்க விழா, நிறைவு விழா, முக்கியப் போட்டிகள் நடைபெறவுள்ள ஜவஹர்லால் நேருவுக்கு தங்களது நிருபர் ஒருவர் வெடிபொருள் அடங்கிய பையுடன் சென்றதாகவும், அவரை யாரும் தடுத்து நிறுத்தவில்லை. பையை சோதிக்கவில்லை. எனவே பாதுகாப்பு ஏற்பாடுகளில் பெரும் குளறுபடிகள் இருப்பதாக ஆஸ்திரேலியாவின் சேனல் 7 டிவி ஒரு செய்தியை ஒளிபரப்பியது.

இதற்கு ஜெயபால் ரெட்டி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது ஒரு மோசடியான செய்தி, அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், பாதுகாப்புப் படையினர் இல்லாத சமயமாக அந்தப் பகுதி வழியாக ஸ்டேடியத்திற்குள் நுழைந்துள்ளார் அந்த செய்தியாளர். இது விஷமத்தனமான செயலாகும். வேண்டும் என்றே அவப் பெயரை ஏற்படுத்துவதற்காக செய்துள்ளனர்.

பாதுகாப்புப் படையினர் இருந்து, அந்தப் பகுதி வழியாக வெடிபொருளுடன் சென்றிருந்தால், அதை பாதுகாப்பு குளறுபடி என்று கூறலாம். ஆனால்யாருமே இல்லாத இடத்தில் வெடிபொருளுடன் சென்று விட்டு பாதுகாப்பு குளறுபடி என்று சொல்வது கண்டனத்துக்குரியது.

போட்டிக்கான அனைத்து 17 இடங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மிகச் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன். கோட்டை போல அனைத்து இடங்களும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன என்றார்.

டெல்லி காவல்துறையும் ஆஸ்திரேலிய டிவிக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து காவல்துறை செய்தித் தொடர்பாளர் ராஜன் பகத் கூறுகையில், இது போலியான ஸ்டிங் ஆபரேஷன். உள்நோக்கத்துடன் கூடியது. வேண்டும் என்றே அவப் பெயரை ஏற்படுத்தும் நோக்கில் செய்துள்ளனர்.

பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஓட்டை இருப்பது போல காட்டுவதற்காக இவ்வாறு செய்துள்ளனர்.

மேலும் சம்பந்தப்பட்ட செய்தியாளர் சென்ற பாதை, ஸ்டேடியத்திற்கு வெகு தொலைவில் உள்ளதாகும். மேலும் அந்த செய்தியாளர் போலீஸார் சோதனையிடும் பகுதிக்கு வரவே இல்லை. வந்திருந்தால் நிச்சயம் பிடிபட்டிருப்பார் என்றார்.-

http://thatstamil.oneindia.in/news/2010/09/22/commonwealth-games-jaipal-reddy-australia-sting.html

------------------------------------------------------------------------------------------------------------

s_grands-31%5B1%5D.gifs_grands-31%5B1%5D.gif

AFP பிரெஞ்சுச் செய்தியில் இந்தியாவை மிகவும் அவமானப் படுத்தியுள்ளனர். கழிவறைகள் சுத்தமாக இல்லை என்பதற்கு விளக்கமளித்த ஏற்பாட்டாளர்கள், மேலத்தேய நாடுகளில் அவர்களது முறைப்படி இது அசுத்தமாக இருக்கலாம் ஆனால் எங்களது முறைப்படி இது சுத்தமானது என்பதுபோல் கூறி தங்களைத் தாங்களே கேவலப் படுத்தியுள்ளனர்.

ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட செலவீனத்தை விட தற்சமயம் 5 மடங்கு செலவு செய்து விட்டார்களாம். இது ஒரு பிச்சைக்காரர்கள் அதிகமாக வாழும் நாட்டிற்கு மிகவும் அதிகமாம்.

http://fr.sports.yahoo.com/21092010/1/21092010143416.html

வீதிகளில் வெக்கமோ, சுகாதார கேடுகளையோ நினைக்காமல் மலசலம் கழிப்பவர்களுக்கு அவர்கள் கட்டிய கழிவறைகள் சுத்தமானதாகத் தானே தெரியும்... எதுக்கும் அங்கு போகும் விளையாடு வீரர்களுக்கு ஆளுக்கொரு காஸ் மாஸ்க் (சீனத் தயாரிப்பில்) இலவசமாகக் குடுக்க வேண்டும்

GasMasks.jpg

நாறப் பயலுகள்!!!

மூதேவிகள், எங்களோடதான் சண்டித்தனம் !!!!!

........................

வரும்.. வரும் சான்ஸ் ஒரு நாள்..

முதலில்.. இந்திய அடிவருடிகளான எமது ஈனப்பிறவிகளுக்கு ஒரு வழிசெய்யவேணும்...

அல்லது திரும்பவும் எமக்குத்தான் தர்ம அடி விழும்....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

:) போட்டிகள் நடைபெறவிருக்கும் பகுதிக்குள் பாரிய சூட்கேசுடன் ஒருவர் நுழைந்தது உண்மையே, நான் இங்கே தொலைக்காட்சியில் பார்த்தேன். வீதித்தடைகள் எல்லாம் போடப்பட்டு அதிகாரிகள் நின்றுகொண்டிருந்தார்கள்.அங்கே பாதுகாப்பு அதிகாரிகள் நிற்கவில்லை என்பது பச்சைப் பொய். சுமார் 5 அல்லது 6 இரும்புத்தொப்பி அணிந்த போலீசார் நின்றுகொண்டு அந்த மர்ம மனிதரை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்கள். அந்த மனிதரும் எந்தத் தடையுமின்றி அந்தப் பெட்டியுடன் உள்ளே செல்கிறார். அவரை மறிக்கவோ அல்லது கேள்வி கேட்கவோ யாரும் முயலவில்லை. அதன் பின்னர் அப்பெட்டியை வெடிக்க வைக்கப்படுவது காட்டப்படுகிறது. இன்று மாலை அந்த நிகழ்வை முழுமையாக சனல் 7 இல் ஒளிபரப்புகிறார்கள். முடிந்தவர்கள் பாருங்கள்.

இங்கே நிரூபிக்கப்பட்டது பாதுகாப்பு ஏற்பாடுகளில் உள்ள குளறுபடிகள்தான். இந்தக் கட்டிடத் தொகுதிக்குள் எவரும் எதையும் கொண்டு செல்ல முடியும். பாக்கிஸ்த்தான் காரனோ அல்லது சீனனோ ஒரு சிறிய அணுக்குண்டை ஒரு பெட்டிக்குள் வைத்து உள்ளே கொண்டு சென்றாலும் இந்தப் பேமாணிகள் வேடிக்கைதான் பார்த்துக்கொண்டிருக்கப்போகிறார்கள். தங்களது பொய்ப் பித்தலாட்டங்கள் வெளிச்சமாவது கண்டு மிரண்டு போயிருக்கும் இந்தியப் பரதேசிகள் சனல் 7 ஐ கண்டிக்கிறார்களாம். முடிந்தால் பிழையை திருத்தப் பாருங்கள். முடியாவிட்டால் பொத்திக்கொண்டு வேலையைப் பாருங்கள். கெட்ட கேட்டுக்க வீர வசனம் வேற பேசிக்கொண்டு !!!!

  • கருத்துக்கள உறவுகள்

:) கான மயிலாட கண்டிருந்த வான்கோழி தானும் ஆட நினைத்ததாம் !!! அப்படித்தான் இருக்கிறது இந்த பரதேசித் தேசத்தின் நிலமை. எதுக்கெடுத்தாலும் சீனக்காரனோட போட்டி, ஆனால் அவன் அடிக்க வெளிக்கிடால் வாலை இறுக்கச் சுருட்டிக்கொண்டு ஓடி வந்திடுவினம். அருணாச்சலப் பிரதேசத்தில சீனக்காரன் தன்ர விருப்பத்துக்கு ஏற்றமாதிரி நிலங்களைப் பிடிச்சுக்கொண்டு வாரான், அண்மையில் கூட பெருமளவு நிலம் பறிபோயிருக்கு, வெறும் கண்டன் அறிக்கையோட இந்தியா சுருட்டிக்கொண்டு விட்டது. மூதேவிகள், எங்களோடதான் சண்டித்தனம் !!!!!

அது கூட பரவாயில்லை ஏதோ இயலாமை என்று கொள்ளலாம்.

சகிக்க முடியாதது சென்னை குப்பம் ஒன்றில் நடந்த கூட்டம் ஒன்றிற்கு வந்த மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் தான் சீனாவை எச்சரிப்பதாக குப்பத்தில் வைத்து கூறியது.

சீனாவை எச்சரிப்தென்றால் டெல்லியில் இருந்து சொல்லலாமே???

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

:) முதலில் அரச வாகனம்மீது துப்பாகித்தாக்குதல், பின்னர் கட்டிடங்கள் கக்கூசுகளை விடக் கேவலம் என்கிற உண்மை வெளிப்பாடு, மூன்றாவதாக விலையாட்டுத் திடலுக்க்ள் கட்டப்பட்ட மேம்பாலம் இடிந்து விழுகிறது, தற்போது பழு தூக்கும் போட்டி நடைபெறவிருந் கட்டிடத்தின் கூரை நொருங்கி விழுந்து கட்டிடத்திற்கும் சேதம். அதை விடக் கேவலம், இந்தப் "பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்ட" பகுதிக்குள் ஒருவர் பாரிய சூட்கேசுடன் எந்தத் தடங்கலுமின்றி உள்ளேசென்று தான் கொன்டுவந்தது வெடிகுண்டு என்று நிரூபித்தது.

எனக்குள்ள ஒரே ஆசை, இவையெல்லாம் போட்டி தொடங்கியபின்னர் நடைபெற்றீருக்க வேன்டுமென்பதே. இந்த பரதேசித் தேசத்தின் அழுங்கு முகத்தை இன்னும் வெளிச்சம் போட்டுக் காடியிருக்கலாம்.

ஆனால், அது நடந்தாலும் ஆச்சரியப்படுதற்கில்லை, இன்னும் எங்கேயெல்லாம் ஓட்டைகள் இருக்கின்றனவோ, யாரறிவார்??

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
:) தங்களால் எச்சரிக்கை மட்டுமே விடமுடியும், வேறு எதுவும் செய்ய முடியாது என்பது சிதம்பரத்துக்கு மட்டுமல்ல, நாராயணன், மேனன், சோனியா என்ற எல்லா பரதேசிகளுக்கும் தெரியும். இவர்களால் எச்சரிக்கை மட்டுமே செய்ய முடியுமென்பது சீனாவுக்கும் தெரியும். அதனால்த்தான் இவர்களின் எச்சரிக்கை, பொச்சரிக்கை எல்லாவற்ரையும் அவன் கணக்கிலெடுக்காது தனது காரியத்தில் கண்ணாக இருக்கிறான். அதுதான் எங்கெல்லாம் இந்தியப் பன்னாடைகளுக்கு ஆப்பு வைக்க முடியுமோ அங்கெல்லாம் தவறாது வைத்துக்கொண்டு வருகிறான்.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

:) புரட்சி,

நீங்கள் இணைத்த செய்தியை நீங்கள் நம்புகிறீர்களா?? ஏன் கேட்கிறேன் என்றால், பாதுகாப்புப் படையின இல்லாத பகுதியினூடாக அந்தப் பத்திரிக்கையாளர் உள்நுழைந்தாராம், பாதுகாப்புப் படையினர் உள்ள பகுதியூடாக அவர் வந்திருந்தால் அவரை நிச்சயம் பிடித்திருப்போம், அப்பகுதியை கோட்டை போலப் பாதுகாத்து வருகிறோம் என்று ரெட்டிகாரு கூறுகிறார். இவரது அறிக்கையிலேயே எவ்வளவு பெரிய ஓட்டை இருக்கிறது??

முதலாவதாக, பத்துக்காபு பலப்படுத்தப்பட்ட "கோட்டைக்குள்" படையினர் உள்ள பகுதி, படையினர் இல்லாத பகுதி என்று இருக்கிறதா?? இவர்கள் முன்புறத்தால் யாரும் வருவான் என்று பார்த்திருக்க பின்புறத்தால் யாரும் வந்து இவர்களுக்கு ஆப்பு வைத்தால் என்ன செய்யப் போகிறார்கள்??

ரெண்டாவது பத்திரிக்கையாளர் போன பகுதியில் பாதுகாப்புப் படையினர் யாருமே நிற்கவில்லை என்பது, முழுப்பொய், அவர்கள் இவரை வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்றார்கள் என்பதுதான் உண்மை.

இதேபோலத்தான் பின்புறத்திலுள்ள எங்களின் போராட்டத்தை அழித்து, எங்களின் தாயகக் கனவை அறுத்தெறிந்தீர்கள், ஆனால் உங்கள் கோட்டைக்குள் முன்புறத்தால் சீனக்காரன் உள்நுழைந்து விட்டான், அவனை தடுக்க வக்கில்லை, முடிந்தால் இந்தப்பக்கமாக வந்து பார், பிடித்துக் காட்டுகிறோம் என்கிற வாய்ச் சவடால் மட்டும் நிறையவே இருக்கிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.