Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தர்மத்தின் பெயரில்...

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

fuseli11-1024x816.jpg

அரைக்கிலோ அரிசியில் கூட அரசியலாம்

ஆணுறைகளின் விற்பனை அதிகரிப்பாம்

உலகமயமாக்கல் பிராந்திய நலன் என்று

புரியாத வார்த்தைகளாய் அடிபடுகின்றன‌

பனையால் விழுந்த ஓலைகளைச்

சப்பித்துப்பி விட்டுப் போகின்றன மாடுகள்

வேலியடைக்கவும் வேலி தாண்டவும் முடியாமல் பாவம் ஓலைகள்

இன்னும் எத்தனை மாடுகள் பசியாறப் போகிறதோ

காட்சிகள் முடியும்முன்னர் சாட்சிகள் கலைக்கப்படுகின்றன‌

நாளை கண்ணகி காவியமாம் காத்தவராயன் கோயிலில்

அண்ணனின் துவசம் முடிவதற்குள் அய்யனாருக்காய் அறுக்கப்படும் ஆடுகள்

அண்ணனும் ஆடுகளும் பலியெடுக்கப்படுகின்றன தர்மத்தின் பெயரில்

கூடின்றி வாழும் குருவிகளுக்கு கோபுரத்தின் உச்சியில் கூட‌

குந்தவிடாது ஆணி அடிக்கப் படுகிறது

சாவுக்கும் வாழ்வுக்குமிடையே குருவிகளின் பட்டினிப்போராட்டம்

எந்திரப்பறவைகளின் வருகையால் குடிசைக்கும் கோபுரத்துக்கும்

இடைவெளி கூடிக்கொண்டே போகிறது

தூங்கியிருந்த நாகங்கள் மீண்டும் இரைதேடுகின்றன‌

பல்லிச்சாதியை விழுங்குவதா ஓணான் சாதியை விழுங்குவதா

இல்லை தவளைச்சாதியை விழுங்குவதா என்று

நாகத்தில் ஏது நல்லது கெட்டது

நடுநிசியானதும் நாய்களின் ஊளை

நரமாமிச வாசம் நகரம் முழுவதும்

விடிந்ததும்...

மறுபடியும் புரியாத வார்த்தைகள்

நாகரீகம் கலாச்சாரம் என்று...

jeeva

07.10.10 08.38am

Edited by ஜீவா

அருமையான வரிகள் ...ஆணி அடித்தாற்போல் மனதில் பதிகிறது ஜீவா! <_<

நடுநிசியானதும் நாய்களின் ஊளை

நரமாமிச வாசம் நகரம் முழுவதும்

விடிந்ததும்...

மறுபடியும் புரியாத வார்த்தைகள்

நாகரீகம் கலாச்சாரம் என்று...

.....நிரந்தரமான நரகத்தில் நிம்மதியேது?

இப்பொழுது தேடுகின்றோம்... இனி எப்பொழுதும் தேடுவோம்..!

ஆனால்...............? :)

ஜீவாவின் கவிதை மொழி எனக்கு புதியது.... படிமங்களாலான கவிதைகளை மிக விரும்பும் எனக்கு, உருவகங்களால் உணர்வுகளை நிரப்புகின்றான்

இன்னும் எழுதுங்கள் ஜீவா....

  • கருத்துக்கள உறவுகள்

ஜீவா உங்களுடைய இக்கவிதை எனக்குள் எத்தனையோ விடயங்களை பறைசாற்றி நிற்கிறது. துவண்ட நிலையில் இருக்கும் ஓர் இனத்தின் பெண்ணினத்தின் ஒரு அங்கத்துவமாக இருந்து கொண்டு இக்கவிதையை..... இல்லை இந்த உணர்வை வாசிக்கும் போது இயல்பே ஒடுங்கிப்போகிறது. எவ்வளவோ எழுத நினைத்தும் இயலாத வலி கொல்கிறது. ஆயிரமாயிரம் கருக்களைச் சுமந்து கொண்டிருக்கும் கர்ப்பிணிப்பெண் பிரசவிப்பது எப்படி என்று அறியாது ரணமாவதுபோல் இருக்கிறது உணர்வு.

  • கருத்துக்கள உறவுகள்

ஜீவா எப்படி இப்படி கவிதை எல்லாம் எழுதத் தொடங்கிட்டீங்கள்...நல்ல முன்னேற்றம்...பாராட்டுகள்...தொடர்ந்தும் இதிலும் சிறப்பாக எழுதுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி ஜீவா .கவிதை அருமை . நான் நினைத்தேன் குறும்புகார பையன் என்று உங்கள் சொந்தக் கவிதையாய் இருந்தால். இப்போது ஒருவகை முதிர்ச்சி ,அறிவு வளர்ச்சி தெரிகிறது

அரைக்கிலோ அரிசியில் கூட அரசியலாம்

ஆணுறைகளின் விற்பனை அதிகரிப்பாம்

உலகமயமாக்கல் பிராந்திய நலன் என்று

புரியாத வார்த்தைகளாய் அடிபடுகின்றன‌

பனையால் விழுந்த ஓலைகளைச்

சப்பித்துப்பி விட்டுப் போகின்றன மாடுகள்

வேலியடைக்கவும் வேலி தாண்டவும் முடியாமல் பாவம் ஓலைகள்

இன்னும் எத்தனை மாடுகள் பசியாறப் போகிறதோ

காட்சிகள் முடியும்முன்னர் சாட்சிகள் கலைக்கப்படுகின்றன‌

நாளை கண்ணகி காவியமாம் காத்தவராயன் கோயிலில்

அண்ணனின் துவசம் முடிவதற்குள் அய்யனாருக்காய் அறுக்கப்படும் ஆடுகள்

அண்ணனும் ஆடுகளும் பலியெடுக்கப்படுகின்றன தர்மத்தின் பெயரில்

கூடின்றி வாழும் குருவிகளுக்கு கோபுரத்தின் உச்சியில் கூட‌

குந்தவிடாது ஆணி அடிக்கப் படுகிறது

சாவுக்கும் வாழ்வுக்குமிடையே குருவிகளின் பட்டினிப்போராட்டம்

எந்திரப்பறவைகளின் வருகையால் குடிசைக்கும் கோபுரத்துக்கும்

இடைவெளி கூடிக்கொண்டே போகிறது

தூங்கியிருந்த நாகங்கள் மீண்டும் இரைதேடுகின்றன‌

பல்லிச்சாதியை விழுங்குவதா ஓணான் சாதியை விழுங்குவதா

இல்லை தவளைச்சாதியை விழுங்குவதா என்று

நாகத்தில் ஏது நல்லது கெட்டது

நடுநிசியானதும் நாய்களின் ஊளை

நரமாமிச வாசம் நகரம் முழுவதும்

விடிந்ததும்...

மறுபடியும் புரியாத வார்த்தைகள்

நாகரீகம் கலாச்சாரம் என்று...

jeeva

07.10.10 08.38am

அருமையான சொற் தெரிவுகளால் கவிதை முழுமை பெறுகிறது வாழ்த்துக்கள்! தொடருங்கள்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காலத்துக்கேற்றமாதிரி அருமையான கவிதையை வடித்த ஜீவாவிற்கு பாரட்டுக்கள்.

மிகச்சிறப்பாக உள்ளது. வாழ்த்துக்கள் ஜீவா.

ஒரு சிறு ஆதங்கம் ஜீவா. எங்கள் மக்களின் வாழ்வுகள் தடக்கி விழுந்தால் சோகம் எனச் சோகம் நிறைந்து கிடக்கின்றன. கடந்த மூன்று தசாப்தங்களாக நாங்கள் சோகங்களை மட்டுமே பேசினோம். இப்போது அடியிழந்து நிற்கின்றோம். எம்மக்களின் சோகங்கள் இப்போதும் நிறையக் கிடக்கின்றன. கவிதைகளிற்கான பேசு பொருட்களாக எம்மக்களின் சோகங்கள் இன்னமும் தாராளமாகக் கிடைக்கின்றன. ஆனால் துரதிஸ்ரவசமாக, நாங்கள் எங்கள் மக்களின் சோகங்கள் என்று குறிப்பிடுவது உண்மையில் ஒரு குறிப்பிட்ட விகிதமான எம்மக்களின் சோகங்கள் தான். அதாவது பொருளாதார மற்றும் கல்வி நிலைகள் சார்ந்தும் வேறும் பல காரணிகள் சார்;ந்தும் சில சமயங்களில் எம்மக்களால் எம்மக்கள் மீது திணிக்கப்படும் துன்பங்களையும் சேர்த்து "எங்கள் மக்களின் துன்பம்" என்பது ஒரு சிறுபான்மை விகிதமான எம்மவரின் துன்பமாகவே உருப்பெற்று வருகின்றது. இந்நிலையில், எனது பார்வையில், உடனடியாகத் தேவைப்படுவது, கிறியேற்றிவான தீர்வுகள். பங்களாதேசத்தில் மைக்றோ-லோன் ஒருவரால் சிந்திக்கப்பட்டது. எமக்கு இன்று தேவை தீர்வுகள். தீர்வுகள் பற்றி மட்டுமே இன்று நாங்கள் தேட வேண்டியவர்களாகவும் பேசவேண்டியவர்களாகவும் உள்ளோம். இதற்கு இன்னுமொரு காரணமும் உள்ளது, ஒப்பாரிகளைப் பார்த்ததும் "ஓமோம் உண்மை தான் உண்மை தான்" என்று சொல்லிப் பழகிய ஒரு மக்களாக நாம் பல தருணங்களில் இருந்து விடுகிறோம். இந்நிலையில் இன்னமும் சில துன்பங்களைக் கவிதைகள் பேசுகையில், பார்வையாளராக அனுதாபிகளாக நாம் இருந்து விடும் ஆபத்துக் காணப்படுகின்றது. இது கிட்டத்தட்ட ஹைவே--பிளைன்ட்னஸ் என்று சொல்லப்படும் நிலைமைய ஒத்தது--அதாவது புலத்தில் பெருந்தெருக்களில் வாகன நெரிசல் அற்ற நேரத்தில் குறூஸ் கொன்றோலில் பயணிக்கையில் சில தூரத்தின் பின் நாம் வாகனம் செலுத்திக் கொண்டிருக்கின்றோம் என்பதைக் கூட மறக்கும அளவிற்கு நிலைமை எமக்குப் பழகிப் போய்விடுகிறது. எமது மக்களின் துன்பங்களைப் பாடும் கவிகளும் இன்றைய நிலையில் இத்தகைய ஆபத்தைச் சந்திக்கின்றன. மக்கள் துன்பப் பாடல்களையே கடந்த மூன்று தசாப்தமாகக் கேட்டுப் பழகி ஒரு குறூஸ் கொன்றோல் மனநிலையில் உள்ளார்கள். இப்போ தேவைப்படுவது கிறியேற்றிவான தீர்வுகளின் முன் வைப்பு.

தீர்வு என்பதால் அரசியல் தீர்வை நான் குறிக்கவில்லை. அன்றாட வாழ்வு பற்றிய தீர்வுகள் யோசனைகள். நாங்கள் இப்பிரச்சினையை இனிமேலும் ஒரு அப்ஸ்ற்றாக்ற் நிலையில் அணுக முடியாது. அடிப்படைகளில் இருந்து தான் ஆரம்பிக்க முடியும்.

இந்த நீண்ட பீடிகை மூலம் நான் உங்களிடம் பதிந்து கொள்ளும் ஆதங்கம், தீர்வுகளைப் பற்றிப் பாடுங்கள் என்பதே. நீங்கள் இளமையும் அறிவும் தேடலும் மிக்கவராயும் அதேநேரம் சிந்தனைத் திறனும் எழுத்தாற்றலும் உள்ளவராய்த் தெரிகிறீர்கள். தீர்வுகளைப் பாடுங்கள். சோகங்கள் கொஞ்சக்காலம் பாடப்படாது கிடக்கட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஜீவா.. கவிதை நன்றாக உள்ளது..! வாழ்த்துக்கள்..! :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜீவாவின் கவிதை மொழி எனக்கு புதியது.... படிமங்களாலான கவிதைகளை மிக விரும்பும் எனக்கு, உருவகங்களால் உணர்வுகளை நிரப்புகின்றான்

இன்னும் எழுதுங்கள் ஜீவா....

நன்றி நிழலி அண்ணா. :)

ஜீவா உங்களுடைய இக்கவிதை எனக்குள் எத்தனையோ விடயங்களை பறைசாற்றி நிற்கிறது. துவண்ட நிலையில் இருக்கும் ஓர் இனத்தின் பெண்ணினத்தின் ஒரு அங்கத்துவமாக இருந்து கொண்டு இக்கவிதையை..... இல்லை இந்த உணர்வை வாசிக்கும் போது இயல்பே ஒடுங்கிப்போகிறது. எவ்வளவோ எழுத நினைத்தும் இயலாத வலி கொல்கிறது. ஆயிரமாயிரம் கருக்களைச் சுமந்து கொண்டிருக்கும் கர்ப்பிணிப்பெண் பிரசவிப்பது எப்படி என்று அறியாது ரணமாவதுபோல் இருக்கிறது உணர்வு.

நன்றி சஹாரா அக்கா,

உண்மையில் எனது கவிதையை நன்கு புரிந்து கருத்து எழுதியிருக்கிறீர்கள்.

நான் எழுதியது,நினைத்தது சரியாகப்போய்ச் சேர்ந்திருக்கிறது என்று எண்ணத்தோன்றுகிறது.

ஜீவா எப்படி இப்படி கவிதை எல்லாம் எழுதத் தொடங்கிட்டீங்கள்...நல்ல முன்னேற்றம்...பாராட்டுகள்...தொடர்ந்தும் இதிலும் சிறப்பாக எழுதுங்கள்

நன்றி ரதி அக்கா,

எழுதுவதற்கு எம்மிடம்(எம் மக்கள்,எம் சூழலில்) கருப்பொருளா இல்லை? அது பாட்டுக்கு வருது அக்கா.எனக்கு என்னமோ( இதிலும் சிறப்பாக எழுதுங்கள்)

உள்குத்து பலமா இருக்குது போல தோணுது. :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி ஜீவா .கவிதை அருமை . நான் நினைத்தேன் குறும்புகார பையன் என்று உங்கள் சொந்தக் கவிதையாய் இருந்தால். இப்போது ஒருவகை முதிர்ச்சி ,அறிவு வளர்ச்சி தெரிகிறது

நன்றி நிலாமதி அக்கா.

உண்மையாகவெ இது நான் எழுதியது தானக்கா.

ஆமா குறும்புகாரபையன் என்றா இல்லை காவாலி,பொம்பிளைபொறுக்கி அப்படி தோன்றிச்சுதா உண்மைய சொல்லுங்க நான் கோவிச்சுக்க மாட்டேன். ஏனென்றால் எல்லா அம்மா,அப்பாவும் இதை தானே நினைக்கிறாங்க. :)

அக்கா என்னை பொறுத்தவரைக்கும் அந்தந்த வயசிலை அதைஅதை அனுபவிச்சிடணும் 50வயதிலை வந்து சே..20வயசிலை காதலிச்சிருக்கலாமே 15வயசிலை கள்ளமாங்காய் பறிச்சு சாப்பிட்டிருக்கலாமே என்று போன பஸ்சுக்கு கைகாட்டுற வேலை எல்லாம் இருக்க கூடாது என்று நினைக்கிறேன் அக்கா. இன்னொருத்தருக்கு இடைஞ்சல் இல்லாமல் என் வரம்புக்கு உட்பட்டு அந்தந்த வயசிலை எல்லாமெ செய்ய தான் ஆசை அக்கா. இன்னொருத்தர் போட்ட பாதையிலை நடக்க இஸ்டம் இல்லை அக்கா. நெருப்பு சுடும் என்றாலும் கையை வச்சுபார்க்க சொல்லுது அக்கா மனசு. கையை வச்சு பார்க்காமல் சுடும் உணர்வை எப்படி அக்கா அனுபவிக்க முடியும்? அதைவிட 24வயசிலை போய் எப்படி அக்கா குறும்புசெய்யாமல் இருக்க முடியும்????? :D

(நிலாமதி அக்கா சும்மா பகிடிக்கு தான் சொன்னேன். உங்கள் மனசை காயப்படுத்தி இருந்தால் என்னை மன்னித்துக்கொள்ளுங்கள்.

அருமையான சொற் தெரிவுகளால் கவிதை முழுமை பெறுகிறது வாழ்த்துக்கள்! தொடருங்கள்...

நன்றி குட்டி அண்ணா. :)

காலத்துக்கேற்றமாதிரி அருமையான கவிதையை வடித்த ஜீவாவிற்கு பாரட்டுக்கள்.

நன்றி தாத்தா :)

மிகச்சிறப்பாக உள்ளது. வாழ்த்துக்கள் ஜீவா.

ஒரு சிறு ஆதங்கம் ஜீவா. எங்கள் மக்களின் வாழ்வுகள் தடக்கி விழுந்தால் சோகம் எனச் சோகம் நிறைந்து கிடக்கின்றன. கடந்த மூன்று தசாப்தங்களாக நாங்கள் சோகங்களை மட்டுமே பேசினோம். இப்போது அடியிழந்து நிற்கின்றோம். எம்மக்களின் சோகங்கள் இப்போதும் நிறையக் கிடக்கின்றன. கவிதைகளிற்கான பேசு பொருட்களாக எம்மக்களின் சோகங்கள் இன்னமும் தாராளமாகக் கிடைக்கின்றன. ஆனால் துரதிஸ்ரவசமாக, நாங்கள் எங்கள் மக்களின் சோகங்கள் என்று குறிப்பிடுவது உண்மையில் ஒரு குறிப்பிட்ட விகிதமான எம்மக்களின் சோகங்கள் தான். அதாவது பொருளாதார மற்றும் கல்வி நிலைகள் சார்ந்தும் வேறும் பல காரணிகள் சார்;ந்தும் சில சமயங்களில் எம்மக்களால் எம்மக்கள் மீது திணிக்கப்படும் துன்பங்களையும் சேர்த்து "எங்கள் மக்களின் துன்பம்" என்பது ஒரு சிறுபான்மை விகிதமான எம்மவரின் துன்பமாகவே உருப்பெற்று வருகின்றது. இந்நிலையில், எனது பார்வையில், உடனடியாகத் தேவைப்படுவது, கிறியேற்றிவான தீர்வுகள். பங்களாதேசத்தில் மைக்றோ-லோன் ஒருவரால் சிந்திக்கப்பட்டது. எமக்கு இன்று தேவை தீர்வுகள். தீர்வுகள் பற்றி மட்டுமே இன்று நாங்கள் தேட வேண்டியவர்களாகவும் பேசவேண்டியவர்களாகவும் உள்ளோம். இதற்கு இன்னுமொரு காரணமும் உள்ளது, ஒப்பாரிகளைப் பார்த்ததும் "ஓமோம் உண்மை தான் உண்மை தான்" என்று சொல்லிப் பழகிய ஒரு மக்களாக நாம் பல தருணங்களில் இருந்து விடுகிறோம். இந்நிலையில் இன்னமும் சில துன்பங்களைக் கவிதைகள் பேசுகையில், பார்வையாளராக அனுதாபிகளாக நாம் இருந்து விடும் ஆபத்துக் காணப்படுகின்றது. இது கிட்டத்தட்ட ஹைவே--பிளைன்ட்னஸ் என்று சொல்லப்படும் நிலைமைய ஒத்தது--அதாவது புலத்தில் பெருந்தெருக்களில் வாகன நெரிசல் அற்ற நேரத்தில் குறூஸ் கொன்றோலில் பயணிக்கையில் சில தூரத்தின் பின் நாம் வாகனம் செலுத்திக் கொண்டிருக்கின்றோம் என்பதைக் கூட மறக்கும அளவிற்கு நிலைமை எமக்குப் பழகிப் போய்விடுகிறது. எமது மக்களின் துன்பங்களைப் பாடும் கவிகளும் இன்றைய நிலையில் இத்தகைய ஆபத்தைச் சந்திக்கின்றன. மக்கள் துன்பப் பாடல்களையே கடந்த மூன்று தசாப்தமாகக் கேட்டுப் பழகி ஒரு குறூஸ் கொன்றோல் மனநிலையில் உள்ளார்கள். இப்போ தேவைப்படுவது கிறியேற்றிவான தீர்வுகளின் முன் வைப்பு.

தீர்வு என்பதால் அரசியல் தீர்வை நான் குறிக்கவில்லை. அன்றாட வாழ்வு பற்றிய தீர்வுகள் யோசனைகள். நாங்கள் இப்பிரச்சினையை இனிமேலும் ஒரு அப்ஸ்ற்றாக்ற் நிலையில் அணுக முடியாது. அடிப்படைகளில் இருந்து தான் ஆரம்பிக்க முடியும்.

இந்த நீண்ட பீடிகை மூலம் நான் உங்களிடம் பதிந்து கொள்ளும் ஆதங்கம், தீர்வுகளைப் பற்றிப் பாடுங்கள் என்பதே. நீங்கள் இளமையும் அறிவும் தேடலும் மிக்கவராயும் அதேநேரம் சிந்தனைத் திறனும் எழுத்தாற்றலும் உள்ளவராய்த் தெரிகிறீர்கள். தீர்வுகளைப் பாடுங்கள். சோகங்கள் கொஞ்சக்காலம் பாடப்படாது கிடக்கட்டும்.

நன்றி இன்னுமொருவன் அண்ணா:

உண்மை தான் உங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன். புதிய பாதைக்கான அஸ்திவாரமாய் உங்கள் கருத்தை எடுக்கிறேன். :)

ஜீவா.. கவிதை நன்றாக உள்ளது..! வாழ்த்துக்கள்..! :D

நன்றி மாமோய். :D

மாப்பிளைனு சொல்லுவிங்கனு நெனைச்சேன் கவுத்திட்டிங்களே மாப்பு. :D

Edited by ஜீவா

இந்தப்பகுதி எனக்கு மிகவும் பிடித்துள்ளது மாப்பு:

கூடின்றி வாழும் குருவிகளுக்கு கோபுரத்தின் உச்சியில் கூட‌

குந்தவிடாது ஆணி அடிக்கப் படுகிறது

சாவுக்கும் வாழ்வுக்குமிடையே குருவிகளின் பட்டினிப்போராட்டம்

எந்திரப்பறவைகளின் வருகையால் குடிசைக்கும் கோபுரத்துக்கும்

இடைவெளி கூடிக்கொண்டே போகிறது

தூங்கியிருந்த நாகங்கள் மீண்டும் இரைதேடுகின்றன‌

பல்லிச்சாதியை விழுங்குவதா ஓணான் சாதியை விழுங்குவதா

இல்லை தவளைச்சாதியை விழுங்குவதா என்று

நாகத்தில் ஏது நல்லது கெட்டது

+++

உங்கள் கவிதைபற்றி ஓர் படைப்பிலக்கிய கோணத்தில் நான் கூறகூடிய ஓர் விமர்சனம் என்ன என்றால்... உங்கள் ஆளுமை கவிதையில் இன்னமும் வளர்வதற்கு எதிர்மறையான எண்ணங்களையே கவிதையின் அடிநாதமாக கொள்ளாதீர்கள்.

+++

ஓர் பிரச்சனையில் சம்மந்தப்பட்டுள்ள பலரும் - சகல தரப்பினரும் தாம் தர்மத்தின் அடிப்படையில் செல்வதாகவே கூறுகின்றார்கள். அப்படிப்பார்த்தால் உண்மையில் தற்போது அதர்மத்தின் அடிப்படையில் யார் இயங்குகின்றார்கள் என்பதே - தர்மம் என்பது யாது என்பதே முதலில் பெரியதொரு ஆய்வுக்குரிய விடயமாக உள்ளது.

Edited by கரும்பு

  • கருத்துக்கள உறவுகள்

--------

பனையால் விழுந்த ஓலைகளைச்

சப்பித்துப்பி விட்டுப் போகின்றன மாடுகள்

வேலியடைக்கவும் வேலி தாண்டவும் முடியாமல் பாவம் ஓலைகள்

இன்னும் எத்தனை மாடுகள் பசியாறப் போகிறதோ

காட்சிகள் முடியும்முன்னர் சாட்சிகள் கலைக்கப்படுகின்றன‌

நாளை கண்ணகி காவியமாம் காத்தவராயன் கோயிலில்

அண்ணனின் துவசம் முடிவதற்குள் அய்யனாருக்காய் அறுக்கப்படும் ஆடுகள்

அண்ணனும் ஆடுகளும் பலியெடுக்கப்படுகின்றன தர்மத்தின் பெயரில்

--------

நடுநிசியானதும் நாய்களின் ஊளை

நரமாமிச வாசம் நகரம் முழுவதும்

விடிந்ததும்...

மறுபடியும் புரியாத வார்த்தைகள்

நாகரீகம் கலாச்சாரம் என்று...

jeeva

07.10.10 08.38am

அருமையான கவிதை ஜீவா. முழுக்கவிதையும் பிடித்திருந்தாலும்..... மேலே உள்ள வரிகள் மனதை பாதித்தது.

உங்களிடமிருந்து இப்படி அழாகான கவிதையை எதிர் பார்க்க வில்லை. உங்களது திறமைக்குப் பாராட்டுக்கள். :D

  • கருத்துக்கள உறவுகள்

ஜீவா உங்களுடைய இக்கவிதை எனக்குள் எத்தனையோ விடயங்களை பறைசாற்றி நிற்கிறது.

மிகச்சிறப்பாக உள்ளது. வாழ்த்துக்கள் ஜீவா.

. நீங்கள் இளமையும் அறிவும் தேடலும் மிக்கவராயும் அதேநேரம் சிந்தனைத் திறனும் எழுத்தாற்றலும் உள்ளவராய்த் தெரிகிறீர்கள்.

இத்துறையில் உள்ள இருவர் தங்களை பாராட்டியுள்ளனர் ஜீவா

அதுவே தங்களுக்கான ஆசிர்வாதமாக பார்க்கின்றேன்

தொடருங்கள்எழுதுவதை...

வாழ்க வளமுடன்

இந்த அண்ணனின் ஆசிர்வாதம் என்றும் உண்டு தங்களுக்கு.......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தப்பகுதி எனக்கு மிகவும் பிடித்துள்ளது மாப்பு:

கூடின்றி வாழும் குருவிகளுக்கு கோபுரத்தின் உச்சியில் கூட‌

குந்தவிடாது ஆணி அடிக்கப் படுகிறது

சாவுக்கும் வாழ்வுக்குமிடையே குருவிகளின் பட்டினிப்போராட்டம்

எந்திரப்பறவைகளின் வருகையால் குடிசைக்கும் கோபுரத்துக்கும்

இடைவெளி கூடிக்கொண்டே போகிறது

தூங்கியிருந்த நாகங்கள் மீண்டும் இரைதேடுகின்றன‌

பல்லிச்சாதியை விழுங்குவதா ஓணான் சாதியை விழுங்குவதா

இல்லை தவளைச்சாதியை விழுங்குவதா என்று

நாகத்தில் ஏது நல்லது கெட்டது

+++

உங்கள் கவிதைபற்றி ஓர் படைப்பிலக்கிய கோணத்தில் நான் கூறகூடிய ஓர் விமர்சனம் என்ன என்றால்... உங்கள் ஆளுமை கவிதையில் இன்னமும் வளர்வதற்கு எதிர்மறையான எண்ணங்களையே கவிதையின் அடிநாதமாக கொள்ளாதீர்கள்.

+++

ஓர் பிரச்சனையில் சம்மந்தப்பட்டுள்ள பலரும் - சகல தரப்பினரும் தாம் தர்மத்தின் அடிப்படையில் செல்வதாகவே கூறுகின்றார்கள். அப்படிப்பார்த்தால் உண்மையில் தற்போது அதர்மத்தின் அடிப்படையில் யார் இயங்குகின்றார்கள் என்பதே - தர்மம் என்பது யாது என்பதே முதலில் பெரியதொரு ஆய்வுக்குரிய விடயமாக உள்ளது.

நன்றி கரும்பு அண்ணா ஒரு படைப்புக்கு நல்லா இருக்கிறது என்பதையும் தாண்டி அதிலுள்ள குறைபாடுகளைச் சுட்டிக்காட்டும் போது தான் மேலும் தரமான படைப்புக்களை எழுத ஆவலைத்தூண்டும் அந்த வகையில் உங்களது விமர்சனத்தை ஒரு காத்திரமானதாகவே எடுக்கிறேன்.

அடுத்து

தர்மத்தின் பெயரில் என்பது ஒரு தன்னிலை மயக்கத்தை தருகிறது என்பது உண்மை தான் ஆனால் நான் உண்மையில் தர்மத்தின் பெயரில் என்பதற்கு பதிலாக தேசியத்தின் பெயரால் என்று தான் எழுத இருந்தான் ஆனால் அரசியல் பேசி குத்துப்படுவதை தவிர்ப்பதற்காகவே தர்மத்தின் பெயரில் என எழுதவேண்டி நேர்ந்தது.

அடுத்து

நான் எடுத்துக்கொண்ட கருப்பொருள் தனிய சோகங்களையோ,எதிர்மறையான எண்ணக்கருக்களையோ மட்டுமல்ல போராட்ட காலத்தின் பிற்பகுதியில் ஏற்பட்டுக்கொண்டிருக்கும் பெண்களுக்கெதிரான வன்முறைகள்,சமூக ஏற்றத்தாழ்வு,சாதியத்தின் உண்மை நிலைகளைக் கொண்டுவரவே முயற்சித்துள்ளேன் ஆனால் உங்களதும்,இன்னுமொருவன் அண்ணாவினதும் கருத்தை வைத்துப் பார்க்கும் போது நான் சொல்ல வந்த விடயம் சரியாகப்போய்ச்சேரவில்லை என்பதை உணர்கிறேன். அது என் எழுத்துக்களில் உள்ள குறைபாடுகள் தான் என்பதையும் ஏற்றுக்கொள்கிறேன்.

நான் ஊருக்கு போன் எடுக்கும் போது அப்பவை ஊர் எப்படி இருக்கு என்று கேட்டால் சொல்லுவார் அது என்னமோ இருந்தது போலத்தான் இருக்கு ஆனால் பழையபடி நிறைய சண்டியர்மார் முளைச்சிட்டினம் என்றேல்லாம் சொல்லுவார் அதனைத்தான் நான் தூங்கியிருந்த நாகங்கள் மீண்டும் இரை தேடுகின்றன என்று குறிப்பிட்டேன்.

மற்றும்படி எல்லாமே யதார்த்தத்தை சொல்ல முயன்றேன். ஆனால் அது உண்மையில் வாசகனிடம் சரியாகப்போய்ச்சேரவில்லை என்பதையும் உணர்கிறேன். நன்றி கரும்பு அண்ணா. :)

அருமையான கவிதை ஜீவா. முழுக்கவிதையும் பிடித்திருந்தாலும்..... மேலே உள்ள வரிகள் மனதை பாதித்தது.

உங்களிடமிருந்து இப்படி அழாகான கவிதையை எதிர் பார்க்க வில்லை. உங்களது திறமைக்குப் பாராட்டுக்கள். :)

நன்றி தமிழ்சிறி அண்ணா, :)

ஏதோ சும்மா கிறுக்கிப் பார்த்தேன் சிறி அண்ணா அவ்வளவு தான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இத்துறையில் உள்ள இருவர் தங்களை பாராட்டியுள்ளனர் ஜீவா

அதுவே தங்களுக்கான ஆசிர்வாதமாக பார்க்கின்றேன்

தொடருங்கள்எழுதுவதை...

வாழ்க வளமுடன்

இந்த அண்ணனின் ஆசிர்வாதம் என்றும் உண்டு தங்களுக்கு.......

ரொம்ப நன்றி விசுகுஅண்ணா. :)

உண்மையாக ரொம்ப சந்தோசமாக இருக்கிறது உங்கள் எல்லோரதும் பாராட்டுக்கள் இரண்டு கவிதை எழுதின போது இவர்களின் கருத்துக்களை பார்க்கும் போது அடுத்தது இன்னும் நல்ல்லாக எழுதவேண்டும் என்ற அவாவும்,சிறு பயமும் வருகிறது ஒவ்வொருவரின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்ய கூடியவகையில் எழுத வேண்டுமே என்று.

விசுகு அண்ணா முகம் தெரியாவிடினும் யார் என்றே தெரியாமல் நீங்கள் என்மேல் வைத்திருக்கும் அன்புக்கும் ஆசீர்வாதத்துக்கும் என்ன செய்ய போகிறேனோ தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கவிதைகள் தோழர் ஜீவா ... இந்த பெயரை கேட்டால் எனக்கு "தோழர் ஜீவா போக்குவரத்து கழகம்" தான் தமிழர் நாட்டில் நினைவுக்குவருது :)

image-upload-4-705183.jpg

:) :)

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்

ஜீவாவினுள் இருக்கும் இன்னொரு ஜீவாவின் உள்ளக் குமுறல்கள் கவிதையாக வெளி வந்திருக்கின்றது.

இரண்டு கவிதைகளிலேயும் ஈழத்தமிழனின் இன்றைய நிலையை வெளிக்கொண்டு வந்திருக்கின்றீர்கள்.

பாராட்டுக்கள்

வாத்தியார்

**********

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் ஜீவா.இன்னுமொருவனின் கருத்தையும் கவனத்தில் எடுங்கள் :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல கவிதைகள் தோழர் ஜீவா ... இந்த பெயரை கேட்டால் எனக்கு "தோழர் ஜீவா போக்குவரத்து கழகம்" தான் தமிழர் நாட்டில் நினைவுக்குவருது :lol:

image-upload-4-705183.jpg

:D :D

நன்றி தோழர். :)

எப்படியோ தமிழ்நாட்டுக்கு வாறதெண்டு தலை எழுத்து போல வந்தால் இருவரும் சேர்ந்து இப்படி ஒருவிடயம் பண்ணுவோமா? :wub:

ஜீவாவினுள் இருக்கும் இன்னொரு ஜீவாவின் உள்ளக் குமுறல்கள் கவிதையாக வெளி வந்திருக்கின்றது.

இரண்டு கவிதைகளிலேயும் ஈழத்தமிழனின் இன்றைய நிலையை வெளிக்கொண்டு வந்திருக்கின்றீர்கள்.

பாராட்டுக்கள்

வாத்தியார்

**********

நன்றி வாத்தியார் சேர். :D

வாழ்த்துக்கள் ஜீவா.இன்னுமொருவனின் கருத்தையும் கவனத்தில் எடுங்கள் :)

நன்றி சஜீவன் அண்ணா. நிச்சயமாக கவனத்தில் கொள்கிறேன். :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.