Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லண்டனில் மூக்குடைபட்ட ஆத்திரத்தில் வன்னி மக்களைப் பழிவாங்கிய கொலைகாரன் ராஜபக்ஷ

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

லண்டனில் மூக்குடைபட்ட ஆத்திரத்தில் வன்னி மக்களைப் பழிவாங்கிய கொலைகாரன் ராஜபக்ஷ

லண்டனில் அவமானப்பட்டு நாடு தப்பி வந்த கொலைகாரன் ராஜபக்ஷ, நேற்று வவுனியா அகதிமுகாமில் வசித்துவந்த கர்ப்பிணிகள் வயோதிபர் என 500 கொட்டும் மழையிலும் சுற்றிவளைத்து கிளிநொச்சி நகரில் பேரணி ஒன்றைக் கட்டாயமாக நடத்தியுள்ளான். "தமிழரை ராஜபக்ஷ மிகவும் நல்லாக நடத்துகிறார், புலம்பெயர் தமிழரால்த்தான் பிரச்சனை" என்று கோஷமெழுப்பும்படி மக்கள் வற்புறுத்தப்பட்டதோடு, மறுத்தவர்கள் மகிந்தவின் வேட்டை நாய்க்கூட்டத்தால் நையைப் புடைக்கப்பட்டனர்.

Rajapaksa vengeance orchestrates political shield of captive Tamils in Vanni

[TamilNet, Saturday, 04 December 2010, 11:45 GMT]

Sri Lanka’s president Mahinda Rajapaksa, crest fallen in London, tried to simulate support for him Saturday, by intimidating Eezham Tamils living in captive conditions under his military in Vanni. On Saturday early morning, amidst heavy rains, Sri Lanka army rounded up ‘re-settled’ Tamil civilians in Vanni, including pregnant mothers, elderly and children, and brought them to Ki’linochchi forcing them to shout in a ‘demonstration’ that Rajapaksa was doing good to them and it was wrong for the diaspora Tamils in London to reject him. About 500 civilians were caught in the military harassment and those who resisted were attacked by the military. Rajapaksa is determined in demonstrating that the genocidal conditions set by him is the reality to comprehend with as opposed to diaspora articulations and he is backed in it by the position taken by India, observers said.

The ‘phased dialogue’ principle accepted by the Indian Foreign Minister S. M. Krishna, allowing genocide and colonisation to match with no political solution in the near future, had set the platform for the bold demonstrations of Rajapaksa, Eezham Tamil political circles said.

An ideological onslaught was earlier set by a New Delhi academic, Romila Thaper, who was brought to Colombo a few months ago to tell that the diaspora don’t understand conditions at home.

Emboldened by the possibility of silencing the people, even silencing their temple bells, and demonstrating ‘partnerships’ in nullifying the national question, Rajapaksa took the risk of challenging the diaspora in London.

As it failed, the strategy now is to simulate a rift between Eezham Tamils at home and in the diaspora and show it as a case to argue why the Rajapaksa ‘experiment’ should not be disturbed. Vested interests and incapability of action in some world establishments have already found some secret sympathisers to Rajapaksa agenda, and they work towards simulating subordinate political voices at home among those who are in prisons and open prisons, informed political observers said.

On Saturday, the SLA brought around 500 civilians to Ki'linochchi Central Bus-stand and instructed them and paramilitary-operatives in civil to chant slogans supporting Rajapaksa. The ‘demonstration march’ started at 11:45 a.m. at Ki'linochchi bus-station went through A9 road and was ended at water-tank around 1:00 p.m. Those who participated complained that they were forced to stand at the bus station for several hours as the SLA was determined to stage the demonstration. There was no name tag of the organisers of the protest.

Meanwhile, a Rajapaksa media in Colombo reporting from London, discrediting the demonstration of Eezham Tamils in UK said on Friday: “Tamils have nothing worthwhile to do here. A lot of them work in shops, Mc Donalds, supermarkets and petrol stations. They have Tiger flags and T-shirts ever ready for this. This is also an outing for them. At beck and call they will be anywhere in thousands. That's the kind of training given to them by the Tiger leadership over the years”.

More than 50,000 Eezham Tamils congregated in London on 27 November to pay homage to the heroes who laid down their lives to the liberation of Tamil Nation.

இப்படியான ஒரு பழிவாங்கல் எதிர்பார்த்தது தான் ஆனால் இவ்வளவு விரைவாக செய்வார்கள் என எதிர்பார்க்கவில்லை. இதன் மூலம் பிரித்தானிய மக்களின் நடவடிக்கைகள் எவ்வளவு தூரம் சிங்களத்தை உலுப்பியுள்ளது என தெரிகின்றது.

எமக்கு எமது மக்களை இந்த கொடுங்கோலர்களின் கைகளில் இருந்து விடுவிக்க வேண்டிய அவசியத்தை இந்த நிகழ்வு மீண்டும் சொல்லி நிற்கிறது.

சிங்களமும் அதன் தலைமையும் செய்யும் இந்த அடாவடித்தனங்களால் அது மேலும் மேலும் சர்வதேசத்தை அதற்கு எதிராக திருப்பும் என நம்புவோம். எம்மை ஒரு குடையின் கீழ் கொண்டு வரும் என நம்புவோம்.

  • கருத்துக்கள உறவுகள்

கோழைத் தனம்

  • கருத்துக்கள உறவுகள்

வன்னி மக்களை கேடயமாகப் பயன்படுத்துகிறார்கள் என்பது மற்றொருமுறை நிரூபணமாகியுள்ளது..! அபிவிருத்தி அபிவிருத்தி என்று கத்துவதும் சுத்தப் பம்மாத்து என்பது எல்லோருக்கும் விளங்கியிருக்கும் என நம்புவோம்..! :rolleyes:

இக்கால கட்டத்தில் இந்த பேரணியின் நம்பகத்தன்மையை உலகரியச்செய்யவைக்கவேண்டிய தார்மீக கடமை தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்

வன்னி மக்கள் மீதான பழிவாங்கல் வெளியே தெரிந்தாலும், மறைவில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் முன்னாள் போராளிகளின் மீதான பழிவாங்கல்கள் வெளியே தெரியவராது.

அதற்காகப் புலத்தில் அமைதியாக இருக்கவேண்டும் என்றில்லை.

Edited by கிருபன்

இக்கால கட்டத்தில் இந்த பேரணியின் நம்பகத்தன்மையை உலகரியச்செய்யவைக்கவேண்டிய தார்மீக கடமை தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு உண்டு.

உண்மை.

அவர்களின் எதிர்காலம் இதில் தங்கி உள்ளது. ஒரு பலமான சக்தியாக மாறலாம் இல்லை பெட்டிப்பாம்பாக இருக்கவேண்டியது தான்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பலமான சக்தியாக மாறலாம் இல்லை பெட்டிப்பாம்பாக இருக்கவேண்டியது தான்.

பெட்டிப்பாம்புதேன்!

  • கருத்துக்கள உறவுகள்

Meanwhile, a Rajapaksa media in Colombo reporting from London, discrediting the demonstration of Eezham Tamils in UK said on Friday: “Tamils have nothing worthwhile to do here. A lot of them work in shops, Mc Donalds, supermarkets and petrol stations. They have Tiger flags and T-shirts ever ready for this. This is also an outing for them. At beck and call they will be anywhere in thousands. That's the kind of training given to them by the Tiger leadership over the years”.

http://www.lankanewspapers.com/news/2010/8/59779_space.html

80bbbca828155feb0a6bc0638b996b10.jpg

மகிந்தவின் தலைமையில் நல்ல ஆட்சி நடக்குதாக்கும்.

MahindaToHitler.gif

http://www.lankanewspapers.com/news/2010/8/59779_space.html

80bbbca828155feb0a6bc0638b996b10.jpg

மகிந்தவின் தலைமையில் நல்ல ஆட்சி நடக்குதாக்கும்.

MahindaToHitler.gif

மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்தும், லண்டனில் ஜனாதிபதிக்கு ஏதிராக இடம்பெற்ற நிகழ்வுகளுக்கு கண்டனம் தெரிவித்தும் இன்று கிளிநொச்சியில் ஊர்வலமும் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று இராணுவத்தினரால் ஏற்பாடு செய்து நடாத்தப்பட்டது..

கிளிநொச்சி நகர வர்த்தக சங்கம் முச்சக்கரவண்டிச் சங்கம் மற்றும் மக்கள் அமைப்புகள் இணைந்து ஏற்பாடுசெய்த இவ் ஊர்வலமும் கண்டன ஆர்ப்பாட்டமும் கிளிநொச்சி டிப்போ சந்தியிலிருந்து ஆரம்பித்து காக்கா கடை சந்தி வரை இடம்பெற்றதாக சிங்கள ஊடககங்கள் அலறி அடித்துக்கொண்டு ஊதுகின்றன.

இந்த ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்வதற்காகப் பொதுமக்கள் தந்திரமான முறையில் கொட்டும் மழைக்கு மத்தியில் ஏற்பாட்டாளர்களினால் ஏமாற்றி அழைத்துசெல்லப்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏட்டிக்குப் போட்டியான இந்த ஆர்ப்பாட்டங்கள் அரச ஆதரவு சக்திகளினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இராணுவத்தினர் வீ்டுவீடாகச் சென்று கிளிநொச்சி மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படவுள்ளதாகக் கூறி அவர்களை அழைத்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தமிழோசையிடம் தெரிவிதுள்ளார்.

தாம் வற்புறுத்தியே பேரணிகளுக்கு கூட்டிச்செல்லப்பட்டதாக மக்கள் முறைப்பாடு செய்துள்ளனர்

மக்கள் பேரூந்துகளில் ஏற்றிச்செல்லப்பட்டு ஊர்வலத்தில் ஈடுபடுத்தப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.

அவசர அவசரமான இந்த ஏற்பாடுகள் மஹிந்தவிற்கு ஐக்கிய இராட்சியத்தில் தமிழர்கள் முறையாக அடி கொடுத்துள்ளனர் என்பதன் வெளிப்பாடே

http://img203.imageshack.us/img203/9168/kili.jpg

...

... கிளிநொச்சியிலுள்ள மக்கள் ... கொட்டும் மழையிலும் ... மகிந்தவிற்கு, புலம்பெயர் லண்டன் தமிழர்களால் இழைக்கப்பட்ட கொடூரத்தை பார்க்க முடியாமல் ... கொதித்தெழுந்து .. தமிழில் அல்ல அதுவும் ஆங்கிலத்தில் பாதாதைகளை எழுதுத் தாங்கி ... ஊர்வலம்/எதிர்ப்பை காட்டினார்கள்?????????..... :rolleyes:

... வன்னியில் அன்றாடம் சாப்பாட்டுக்கே அவதி, வாழ்க்கையை கொண்டிழுக்க முடிகாத நிலை என இங்கு யாழில் சாந்தி/சாத்திரியும், கேபிக்களும் தொடர்ந்து அழுகிறார்கள் ... சிங்களமோ, அங்குள்ள மக்கள், உலக செய்திகளை கேட்டு, அதுவும் மகிந்தவீற்கு ஏற்பட்ட அவமானத்தை கண்டு ... கொத்தளித்திருக்கிறார்கள் என்கிறது??? ... எது உண்மை???????????? :D

வன்னி மக்கள் மீதான பழிவாங்கல் வெளியே தெரிந்தாலும், மறைவில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் முன்னாள் போராளிகளின் மீதான பழிவாங்கல்கள் வெளியே தெரியவராது.

அதற்காகப் புலத்தில் அமைதியாக இருக்கவேண்டும் என்றில்லை.

Edited by Nellaiyan

  • கருத்துக்கள உறவுகள்

... வன்னியில் அன்றாடம் சாப்பாட்டுக்கே அவதி, வாழ்க்கையை கொண்டிழுக்க முடிகாத நிலை என இங்கு யாழில் சாந்தி/சாத்திரியும், கேபிக்களும் தொடர்ந்து அழுகிறார்கள் ... சிங்களமோ, அங்குள்ள மக்கள், உலக செய்திகளை கேட்டு, அதுவும் மகிந்தவீற்கு ஏற்பட்ட அவமானத்தை கண்டு ... கொத்தளித்திருக்கிறார்கள் என்கிறது??? ... எது உண்மை???????????? :rolleyes:

இலங்கைத் தீவில் மகிந்த அரசை எதிர்க்கும் சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் எல்லோரும் திறந்த வெளிச் சிறையில் வசிக்கின்றார்கள் என்பதுதான் உண்மை. வன்னியில் இருப்பவர்களை கொத்தடிமையாகத்தான் இலங்கை அரசு பாவிக்க முனைகின்றது என்பதும் உண்மை. அத்தோடு தாயகத்தில் தமிழர்களை சுதந்திரமாக வாழ எதுவும் செய்யமுடியாத கையாலாகாத நிலையில்தான் புலம்பெயர் தமிழரும் உள்ளனர் என்பதும் உண்மை.

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான நிகழ்வுகளை எதிரிகளுக்கு ஏற்ப நடத்துவதில் தமிழ் கூலிக்குழுக்கள் நன்கு பயிற்றப்பட்டவை.

1987 இல் இந்திய ஆக்கிரமிப்பு இராணுவம் இந்தக் கலாசாரத்தை வளர்த்தெடுத்தது.

அடையாள அட்டையை பறித்து வைத்துக் கொண்டு.. பள்ளிமாணவர்களை மறித்து வைத்துக் கொண்டு கூட்டம் ஊர்வலம் நடத்திய வரதராஜப் பெருமாள் கொழும்பில் வீடு கொடுத்து வாழ வைக்கப்பட்டுள்ளார்.

இந்திய சன நாய் அகம் இப்படிப்பட்ட ஒன்றுதான். அதனை சிங்களத்துக்கும் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள்.

1995 சூரியக் கதிர் வெற்றியோடு சந்திரிக்கா அம்மையாரும் யாழ்ப்பாணத்தில் இப்படி ஒன்றை நடத்தி தனது இராணுவ நடவடிக்கைக்கு தமிழ் மக்கள் ஆதரவு என்று காட்டினார். அவருக்கு உடனடிருந்து வக்காளத்து வாங்கினார்கள் சிறீதரன் தலைமையிலான யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கான மனித உரிமைகள் அமைப்பு என்ற ஒரு போலி மனித உரிமை அக்கறை காட்டும் அமைப்பினர்.

அதன் பின்னர் செம்மணி படுகொலை அரங்கேறிய போது.. எவரும் மனித உரிமைகள் பற்றி பேசியதே கிடையாது. அது மண்ணோடு மண்ணாகிப் போய்விட்டது.

அதன் பின்னர் ராஜபக்ச பூநகரியை பிடித்த போது யாழ்ப்பாணத்தில் டக்கிளஸ் தேவானந்தா இராணுவத்தை வரவேற்று பேரணி நடத்தினார். இதன் மூலம் தமிழ் மக்களின் படுகொலைகளுக்கு தமிழ் மக்களே அங்கீகாரம் அளிப்பதாக காட்டி.. அந்தப் பிண அரசியல்வாதிகள் பிழைப்பை ஓட்டினர்.

இப்போ மீண்டும்.. வன்னியில் இது. இவை பழக்கப்பட்டுப் போன அரசியல் நாடகங்கள். வன்னி மக்களை நோக்கி ஆபத்து விரிகிறது என்பதை மட்டும் இது காட்டுகிறது.

அந்த வகையில் புலம்பெயர் மக்களின் நடவடிக்கைகள் இன்னும் இன்னும் காத்திரமாகவும் சிங்களத்தை சர்வதேசத்தின் முன் தனிமைப்படுத்தி அதன் இராணுவத்தை தமிழ் மண்ணில் இருந்து விரட்டவும் செய்ய வேண்டும். அப்போதுதான் தமிழ் மக்களின் பாதுகாப்பை எங்கும் உறுதி செய்து கொள்ள முடியும்.

சிங்கள இராணுவம் விரட்டப்படும் போது ஒட்டுக்குழுக்களும் வால்பிடிகளும் கூட ஓடுவார்கள். அவற்றோடு இந்த மாய விளையாட்டுக்களும் போலி சன நாய் அக நாடகங்களும் கலைந்து போகும். இதுதான் கடந்த கால வரலாறும் ஆகும்.

எனவே இதை இட்டு உண்மைகளை உலகுக்கு இனங்காட்டிக் கொண்டு.. நாம் எமது செயற்பாடுகளை துரிதப்படுத்த வேண்டும் என்பதையே எதிரி எமக்கு சொல்லிக் கொண்டிருக்கிறான்.

Edited by nedukkalapoovan

மீன்பிடி வலைகள் தருவதாகக் கூறி ஏமாற்றி அழைத்துச் செல்லப்பட்டவர்களை வைத்து பிரித்தானியாவுக்கு எதிராக முல்லைத்தீவில் ஆர்ப்பாட்டம். கொடும்பாவிகளும் எரிப்பு ‐கிளிநொச்சியிலும் படையினரால் கூட்டி அழைத்துச் செல்லப்பட்டவர்களின் மூலம் ஆர்ப்பட்டம்‐ GTN செய்தியாளர்கள் ‐ படங்கள் இணைப்பு

04 December 10 10:45 am (BST)

.

மீன்பிடி வலைகள் தருவதாகக் கூறி ஏமாற்றி இராணுவத்தினரால் பேரூந்துகளில் அழைத்துச் செல்லப்பட்ட கரையோரக் கிராமங்களைச் சேர்ந்த மக்களைப் பயன்படுத்தி பிரித்தானியாவுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் ஒன்று முல்லைத்தீவில் இன்று நடத்தப்பட்டுள்ளதாக ஜிரீஎன் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவுக்கு எதிரான சுலோகங்கள், வாசகங்கள் அடங்கிய அட்டைகளைத் தாங்கிய வண்ணம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்புமாறு சிவிலுடையில் நின்றவர்களினால் அச்சுறுத்தப்பட்டு இந்த ஆர்ப்பாட்ட நாடகம் நடத்தப்பட்டுள்ளது.

சுமார் 700 பேர் வரையில் இதில் இருந்ததாக மதிப்பிடப்படுகின்ற இந்த ஆர்ப்பாட்டம் வீடியோ எடுக்கப்பட்டு புகைப்படங்களும் எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு தொடர்பான செய்திகளைத் திரட்டுவதற்காகக் கொழும்பில் இருந்து அரச தரப்பு செய்தியாளர்கள் விசேடமாக அங்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர் என ஜிரீஎன் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இன்று காலை கிராமங்களுக்குச் சென்ற இராணுவத்தினர் மீனவர்களுக்கு மீன்பிடி வலைகள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கான மீனவர் சங்கத்தில் 150 ரூபா பணம் செலுத்தி அங்கத்தவர்களாக வேண்டும் என தெரிவித்து மீனவர்களிடம் தலா 150 ரூபா பணம் வசூல் செய்யப்பட்டதன் பின்னர் பேரூந்துகளில் ஏற்றி அவர்கள் முல்லைத்தீவு நகரத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்கள்.

அங்கு சென்றதன் பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுமாறு அங்கு ஏற்கனவே ஒழுங்கு செய்திருந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்த சில ஊர் முக்கியஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.

யுத்தம் முடிவடைந்து தமிழ் மக்களும் ஜனாதிபதியும் சமாதானமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்கின்ற இந்த நேரத்தில் ஜனாதிபதியின் பிரித்தானிய விஜயத்தின் நோக்கத்தை நிறைவேறச் செய்யாமல் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களின் செயற்பாடுகளைக் கண்டிப்பதாகவும், இத்தகைய செயலுக்கு அனுமதியளித்த பிரித்தானிய அரசாங்கத்தைக் கண்டிப்பதாகவும் அந்தப் பெரியவர்கள் உரையாற்றியுள்ளார்கள்.

ஆர்ப்பாட்டம் கண்டனம், என்பன முடிவடைந்த பின்னர் கொடும்பாவிகளும் எரிக்கப்பட்டுள்ளன. இதன் பின்னர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பலருக்கு ஒரு கிலோ அரிசியும் 250 கிராம் செத்தல் மிளகாயும் வழங்கப்பட்டு வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்கள் என ஜிரீஎன் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இதேபோன்ற ஆர்ப்பாட்டம் கிளிநொச்சியிலும் ஒட்டுசுட்டான் ஆகிய இடங்களிலும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

கிளிநொச்சியிலும் வீடுவீடாக சென்று ரவுணுகடகு வரும்படி படையினர் பணிப்பு:‐

இன்று காலையிலேயே கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகளுக்கும் சென்ற படையினர் வீடுகளில் இருக்கும் அனைவரும் ரவுணுக்கு வரவேண்டும் எனக் கட்டளை பிறப்பித்துச் சென்றுள்ளனர் என ஜீரீஎன் செய்தியாளர் தெரிவிக்கிறார். இதனை அடுத்து படையினரின் உத்தரவுகுப் பயந்த மக்கள் தமது அன்றாட வேலைகளைக் கிடப்பில் போட்டுவிட்டு ரவுணுக்கு போயுள்ளனர்.

சிறிது நேரத்தில் அங்கு சென்ற இராணுவ டறக் வண்டிகள் சுலோக அட்டைகள் பதாகைகள் என்பவற்றை இறக்கி மக்களின் கைகளில் திணித்து பிரித்தானியாவுக்கும் புலம்பெயர் தமிழர்களுக்கும் எதிராக ஆர்ப்பட்டம் செய்யும்படி பணித்துள்ளனர். இந்த ஆர்ப்பட்டத்தின் முன்னணியில் படையினரின் புலனாய்வுப் பிரிவினர் நின்றதனை எமது குளோபல் தமிழ்ச் செய்தியாளரின் புகைப்படக்ருவி எடுக்கத் தவறவில்லை.

வெள்ள நிவாரணம் தருவதாகத் தெரிவித்து ஏமாற்றி அழைத்துச் செல்லப்பட்டவர்களை வைத்து கிளிநொச்சியில் கண்டனப் பேரணி. ஆர்ப்பாட்டம்

தொடர்ச்சியாகத் தற்போது பெய்து வருகின்ற மழையினால் கிளிநொச்சி பிரதேச கிராமப்பகுதிகளில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வெள்ள நிவாரணம் வழங்கப்போவதாகக் கூறி இராணுவத்தினரால் ஏமாற்றி அழைத்துச் செல்லப்பட்டவர்களைக் கொண்டு கிளிநொச்சியில் பிரித்தானியாவுக்கு எதிராக இன்று ஆர்ப்பாட்டப் பேரணி நடத்தப்பட்டுள்ளது.

கிராமங்களுக்குச் சென்ற இராணுவத்தினர் முக்கிய இராணுவ அதிகாரி, வெள்ள நிவாரணம் தரப்போவதாகத் தெரிவித்து ஆட்களைத் திரட்டியுள்ளனர். சில இடங்களில் கிராமசேவையாளர்களின் ஊடாக இவ்வாறு ஆட்கள் திரட்டப்பட்டுள்ளனர். கிராமங்கள்தோறும் திரண்ட மக்களிடம் உடனடியாக வந்து பதியாதவர்களுக்கு வெள்ள நிவாரணம் கிடைக்காமல் போகும் என்ற எச்சரிக்கையோடு, அவர்களது அடையாள அட்டை மற்றும் மீள்குடியேற்ற அட்டை என்பவற்றின் இலக்கங்களைப் பதிவு செய்து கொண்டு அவர்களை பேரூநதுகளில் இராணுவத்தினர் ஏற்றிச் சென்றுள்ளனர்.

இவ்வாறு கொண்டு செல்லப்பட்டவர்கள் கிளிநொச்சி டிப்போ சந்தியில் இருந்து உடைந்த தண்ணீர் தாங்கி வரையிலும் நடைபெற்ற ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்து கொள்ளச் செய்யப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி டிப்போ சந்தியில் ஏற்கனவே வந்து நின்றிருந்த சிவிலுடையில் இருந்தவர்களினால் கிராம மக்களுக்கு சிங்கக் கொடிகளும், சுலோக அட்டைகள், பதாதைகள் என்பன வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஆர்ப்பாட்டப் பேரணி முடிவடைந்ததும், அழைத்து வரப்பட்ட கிராமவாசிகளுக்கு ஆளுக்கொரு சோற்றுப் பார்சல் வழங்கப்பட்டு, அவர்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்கள்.

கீழ்த்தரமான முறையில் தாங்கள் ஏமாற்றப்பட்டதை அவமானப்படுத்தப்பட்டதைப் பொறுக்க முடியாமல் பொருமிய வண்ணமே மக்கள் தமது வீடுகளுக்குத் திரும்பியிருக்கின்றார்கள்.

http://www.globaltamilnews.net/tamil_news1.php?nid=33254&cat=1

கட்டாயப்படுத்துவதை காட்டி GTN வெளியிட்ட சிலபடங்கள்...

uk8.jpg

UK4.jpg

UK1.jpg

Edited by தயா

ஒருவர் ஏற்கெனவே ஆதவன் என்ற பெயரோடு பேசியுள்ளார்.

நாங்கள் இறந்த மாவீரர்களுக்காக போராடுவது எமது கடமையும் உரிமையும் கூட ....

வன்னி மக்கள் பயம் காரணமாக எமக்கு எதிராக குரல் கொடுப்பது அவர்களின் உரிமையும் கடமையும் கூட... :rolleyes::D

இறந்துபோன இந்தியப் பயங்கரவாதி ராஜீவ் காந்திக்காவும் பல்வேறு வேடத்தில் ஒப்பாரி வைக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

கிந்தியா சீனா இந்த இரண்டு நாடுகளை சீ சீ இந்த கூட்டமைப்புகளை தவிர வேறு எங்கும் ராட்சச பக்சே தலை வைக்க கூடாது அதை ஈழ தோழர்கள் செய்யமுடியும் .. அந்தா டெல்லியில் பல தமிழர்கள் இருந்தாலும் சீலா தீட்திச்சு ஆப்படிக்கிறார் போல...... போக தமிழ்நாட்டிலும் எவனும் நுழையகூடாது.. எனக்கு தெரிந்தால் எங்க ஊருக்குள் இந்த மாதிரி கைத்தடிகள் வருவதாக இருந்தால் .. கட்டாயம் ஆப்படிக்கபடும்.. அதே இங்குள்ளது போல பஸ் மீது கல்லெறிதல் மற்றும் பாட்டில் குண்டு என பல டெக்னிக்குகளை ஈழ தோழர்கள் அங்குள்ள நாடுகளில் இவனை போன்றவர்களை வரவழைத்தால் செய்யவேணும் .. வெறுமனே கத்தி கூச்சல் போட்டு கொண்டிருந்தால் வேலைக்கு ஆகாது... போலிசு கூட்டி போய் முட்டிக்கு முட்டி லாடம் கட்டத்தான் செய்வான்...அதலெல்லாம் பார்த்தால் வேலைக்காக்குமா? ரைட்டு.. :D

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

.. அதே இங்குள்ளது போல பஸ் மீது கல்லெறிதல் மற்றும் பாட்டில் குண்டு என பல டெக்னிக்குகளை ஈழ தோழர்கள் அங்குள்ள நாடுகளில் இவனை போன்றவர்களை வரவழைத்தால் செய்யவேணும் .. வெறுமனே கத்தி கூச்சல் போட்டு கொண்டிருந்தால் வேலைக்கு ஆகாது... போலிசு கூட்டி போய் முட்டிக்கு முட்டி லாடம் கட்டத்தான் செய்வான்...அதலெல்லாம் பார்த்தால் வேலைக்காக்குமா? ரைட்டு.. :icon_idea:

இது அறிவுரை மாதிரி தெரியவில்லை இது புலத்து தமிழனுக்கு புலத்தில ஆப்பு அடிக்கிறமாதிரி எல்லோ தெரியுது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.