Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இங்கு வசித்த பின் அங்கு வசிப்பது கஸ்டமா!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் எனக்கு தெரிந்த அம்மா[சொல்லப் போனால் அம்மம்மா] அவருக்கு வயது 70 ற்கு மேலே இருக்கும்.லண்டனுக்கு வந்து 10,12 வருடத்திற்கு பின் தனது சொந்த ஊருக்கு போகப் போறேன் என அடம் பிடித்து வெளிக்கிட்டார்.இங்கு இருக்கும் பிள்ளைகளுக்கு அவர் போவது விருப்பமில்லை எனினும் அவர் ஆசைப் படுகிறார் என்பததால் அனுப்பி வைத்தார்கள்[அங்கும் அவருக்கு பிள்ளைகள் உண்டு.]போய் ஒரு மாதமும் இல்லை அந்த அம்மா தான் திரும்பி வரப் போகிறேன் என அடம் பிடித்து வந்து விட்டார்.ஏன் வந்தனீங்கள் அங்க இருக்காமல் என காரணம் கேட்டால் அங்கே ஓரே மழை பெய்கிறதாம்,நுளம்பு,இலையான் தொல்லையாம்,எல்லா இடத்தைப் பார்த்தாலும் அசிங்கமாய் இருக்குதாம்,சாப்பிட முடியவில்லையாம் என்டு பல காரணங்களை சொன்னார்.

இங்கு எனது முதலாவது கேள்வி என்ன என்டால் அங்கேயே பிறந்து வாழ்வின் பெரும்பகுதியை அங்கேயே கழித்த அம்மா 12 வருடங்கள் இங்கே இருந்த பின் அங்கே வசிக்க முடியாது என சொல்வது சரியா? அல்லது பிழையா?...இரண்டாவது கேள்வி இங்கு இருக்கும் எம்மில் எத்தனை பேர் ஈழம் கிடைத்தால் அங்கு வசிப்பதற்காக ஊருக்கு திரும்பி போவார்கள் [தயவு செய்து உண்மையை மட்டும் சொல்லவும்]

மேற்குலகில் நீண்டகாலம் வாழ்ந்தவர்களுக்கு சுத்தமில்லாத இடங்களில் போய் வாழ கஷ்டமாகத்தானிருக்கும். எங்களின் தேவைக்கேற்ப அடிப்படை வசதிகளுடன் நாம் வாழும் இடத்தை சுத்தமாக, சுகாதாரமாக வைததிருந்தால் அங்கு போய் வாழ்வதில் பிரச்சனையில்லை. அதிகமாக இந்த அம்மா தங்கிய வீட்டில் வசதிகள் குறைவாக, சுத்தமில்லாமல் இருந்திருக்கலாம். அந்த வீட்டாரிலும் பிழை கூறமுடியாது. அவர்களும் தங்கள் பொருளாதார வசதிக்கேற்பவே வீட்டை வைத்திருக்க முடியும். மற்றும்படி இந்த அம்மா கொஞ்சம் அவசரப்பட்டு திரும்பி விட்டார் என நினைக்கிறேன். பழைய நிலைக்கு திரும்ப சில காலம் எடுத்திருக்கும்.

இரண்டாவது கேள்விக்கு பதில், நிச்சயமாக அங்கு போய் வாழ முடிவுசெய்துள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைச் சொல்லப் போனால் ஊரில் கஸ்டப்பட்டு விட்டு (பொருளாதார ரீதியில்) இங்கு வந்துள்ளவர்களுக்கு மீண்டும் ஊருக்குப் போக விரும்பமில்லை.

இந்த மூதாட்டியின் பின்னணியை (சுகாதாரமின்மை) வைச்சுப் பார்க்கேக்க... அவாட நிலை இப்படியான ஒன்று என்றுதான் நினைக்கிறேன்.

இங்கு வயோதிபர்களுக்கு உழைக்காமலே காசு கொடுக்கினம். வேலை இல்லாதவர்களுக்கு காசு கொடுக்கினம். இருக்க வீடு கொடுக்கினம். பிள்ளைகள் பெற்றா காசு கொடுக்கினம். இப்படி இன்னோரென்ன வசதிகள் செய்து கொடுக்கினம்.

ஊரில அப்படியல்ல.

இதையெல்லாம் விட்டிட்டு நடுத்தர மற்றும் வறிய குடும்பங்களைச் சேர்ந்தோர் போக விரும்பமாட்டினம்.

ஆனால் ஊரில் ஓரளவு வசதியோட இருந்தவை.. மற்றும் வசதி படைத்தவர்கள்.. நிச்சயம் போவினம். ஏனெனில் அவர்களுக்கு இங்கை விட அங்கு தான் அதிகம் சுகாதாரமும்.. வசதியும் இருக்கு. அவரவர் எப்படி இருக்கினமோ அப்படித்தான் சுகாதாரம் இருக்கும். அதற்கு இடத்தை குறை சொல்லக் கூடாது. நாங்க சுற்றுச்சூழலை துப்பரவா வைச்சிருந்தா அது சுத்தமா இருக்கும்.

இங்குள்ளதை விட ஊரில சுற்றுச் சூழலை சுத்தமாக வைச்சிருக்க செலவு குறைவு என்று நினைக்கிறேன்.

என்னைப் பொறுத்தவரை ஊர் நல்ல வசதி. இங்கு வைத்தியசாலைக்கு போய் காத்துக்கிடந்து தான் ஒரு மருத்துவம் பெற வேண்டும். ஊரில் அப்படியல்ல. நேர்சிங் கோம் போனால் உடனடியாக மருத்துவ சேவை.

ஊரில மிகவும் வசதியான வீடுகள். இங்கு ஒடுங்கிய படிகளோடு.. சிறிய சிறிய பெட்டி அறைகளோடு வீடுகள்.

ஊரில் பெரிய வசதியான பூந்தோட்டம். இங்கு ஒரு ஒழுங்கை கணக்கில பூந்தோட்டம்.

ஊரில் நிறைய சொந்தக்காரர்கள். (இப்போ இல்லை ஒரு 10 - 15 வருடங்களுக்கு முன்னர்.) இங்கு அயலில் உள்ளவர்கள் குட் மார்னிங் சொன்னாலும் முறாய்ச்சுப் பார்க்கிற பாகிஸ்தான் ஆக்கள்.

ஊரில போன் பண்ணிச் சொன்னா ஒரு அரை மணி நேரத்தில வீட்டுக்கு தேவையான பொருட்கள் வரும்.

இங்கு ஆன்லைனில் புக் பண்ணிட்டு காத்துக்கொண்டு இருக்க வேணும்.

ஊரில குளிர் பிரச்சனையே இல்ல. இங்க குளிருக்க விறைச்சு சாகனும்.

ஊரில நிறைய வளங்கள்.. பயன்பாடின்றி. இங்கோ வளப் பற்றாக்குறை. இட நெருக்கடி. வேலைக்கு இடத்துக்குப் போட்டி.

வேலை இடங்களில் பிற இன மேலாளர்களால் இரண்டாம் தரமாக பார்க்கப்படும் நிலை. சுயமாக சிந்தித்து நிம்மதியா வேலை செய்ய முடியாது.

வேலை இடங்களில் அதிக வேலைப் பளு. மன அழுத்தம். ஓய்வின்மை. நித்திரை இன்மை.

வேலை இடத்தில் சரியான மதிப்பின்மை. ஊரில தொழிலுக்கு ஏற்ப சமூகத்தில் ஒரு தனி மதிப்பு கொடுப்பினம். (இது நல்லதோ கெட்டதோ தெரியாது.. ஆனால் கொடுப்பினம்.)

இங்கு பெரும்பாலானோரின் வீடுகள் சொந்தமானவை அல்ல. வங்கிகள் தான் அவற்றின் சொந்தக்காரர்கள். பலர் மோர்கேஜ் செய்து வீடு வாங்கிட்டு சொந்தவீடு என்று சொல்லிக் கொண்டு திரிவினம். உண்மையில் மோர்கேஜ் அடைக்கப்படும் வரை வங்கிதான் அந்த வீடுகளுக்கு சொந்தக்காரன். இவை அல்ல. ஊரில் அப்படியல்ல. வீடுகள் மட்டுமன்றி பெருமளவு காணிகள்.. சொத்துக்கள் சொந்தமாக. வங்கிக் கடனின்றி.

இப்படியே அடுக்கிக் கொண்டு போகலாம்.

நிச்சயமாக ஊர் அரசியல் சூழல் மாறி.. நிரந்தர உரிமையோடு நாமே நம்மை ஆளும் நிலை வந்தால் எம்மை நாமே பாதுகாக்கும் பொறுப்பையும் கொண்டிருந்தால்.. அங்கு போய் நிறைய நிம்மதியோட இருக்கலாம்.

என்னைப் பொறுத்தவரை எனக்கு வெளிநாட்டை விட அங்கு தான் வாழ அதிக விருப்பம்.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஊருக்கு போகமுன்பே சில விடயங்களை அங்கு செய்வித்தேன்

காரணம் எனது மக்களுக்கு எனது தாய் மண் வெறுத்துவிடக்கூடாது என்பதற்காக....

இன்றும் என்று போவேன் என்ற நிலையிலேயே ஒவ்வொரு நாளும் கழிகிறது

அந்த மண் வாசனை

காற்று

தண்ணீர்

எம் தமிழ்

.....

....

....

எதிலும் எங்கும் வராது

ஆனால் அதற்கு ஒன்றே ஒன்று தேவை

அது தேசப்பற்று

அங்கு வாழமுடியாது என்பவர்கள் வேறு ஒரு தேசத்தின்மீது பாசம் வைத்துவிட்டார்கள் என்றுதான் அர்த்தம்

ஆனால் அது நிச்சயமாக இவர்கள் சொல்லும் சுகாதாரம் மழை குளிர் கொசுவால் வந்ததாக இராது.

"வசதிகளுக்கு" அப்பால், "நிம்மதியையும்" "கௌரவத்தையும்" தரக்கூடியது தாயகமே.

இங்கே பலர் Nursing Homeஇல் தான் தமது இறுதி நாட்களை நிம்மதியின்றி கதைக்க உறவுகள் இன்றி கழிக்கின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் வேறை.. கனடாக்காரருக்கு லண்டனில போய் நிக்கிறதே கஷ்டமா இருக்கு..! :icon_idea: இதுக்குள்ளை லண்டன் பாட்டியை குற்றம்சொல்ல முடியுமா? :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

அவரவருக்கு பழகிய இடம் தான் சொர்க்கம்.

அதுவும் பத்து பன்னிரு வருடம் பழகிய பாட்டிக்கு...................

நீங்கள் வேறை.. கனடாக்காரருக்கு லண்டனில போய் நிக்கிறதே கஷ்டமா இருக்கு..! :icon_idea: இதுக்குள்ளை லண்டன் பாட்டியை குற்றம்சொல்ல முடியுமா? :icon_idea:

சரியா சொன்னீங்கள் :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்மையில் எனக்கு தெரிந்த அம்மா[சொல்லப் போனால் அம்மம்மா] அவருக்கு வயது 70 ற்கு மேலே இருக்கும்.லண்டனுக்கு வந்து 10,12 வருடத்திற்கு பின் தனது சொந்த ஊருக்கு போகப் போறேன் என அடம் பிடித்து வெளிக்கிட்டார்.இங்கு இருக்கும் பிள்ளைகளுக்கு அவர் போவது விருப்பமில்லை எனினும் அவர் ஆசைப் படுகிறார் என்பததால் அனுப்பி வைத்தார்கள்[அங்கும் அவருக்கு பிள்ளைகள் உண்டு.]போய் ஒரு மாதமும் இல்லை அந்த அம்மா தான் திரும்பி வரப் போகிறேன் என அடம் பிடித்து வந்து விட்டார்.ஏன் வந்தனீங்கள் அங்க இருக்காமல் என காரணம் கேட்டால் அங்கே ஓரே மழை பெய்கிறதாம்,நுளம்பு,இலையான் தொல்லையாம்,எல்லா இடத்தைப் பார்த்தாலும் அசிங்கமாய் இருக்குதாம்,சாப்பிட முடியவில்லையாம் என்டு பல காரணங்களை சொன்னார்.

இங்கு எனது முதலாவது கேள்வி என்ன என்டால் அங்கேயே பிறந்து வாழ்வின் பெரும்பகுதியை அங்கேயே கழித்த அம்மா 12 வருடங்கள் இங்கே இருந்த பின் அங்கே வசிக்க முடியாது என சொல்வது சரியா? அல்லது பிழையா?...இரண்டாவது கேள்வி இங்கு இருக்கும் எம்மில் எத்தனை பேர் ஈழம் கிடைத்தால் அங்கு வசிப்பதற்காக ஊருக்கு திரும்பி போவார்கள் [தயவு செய்து உண்மையை மட்டும் சொல்லவும்]

முடியுமானவரை என்ரை கடைசிக்காலத்தை...நான்பிறந்த மண்ணிலையே வாழநினைக்கிறன்.அதுவும் என்ரை அம்மாவை எரிச்ச எங்கடை ஊர்ச்சுடலையிலைதான் சாம்பலாக விரும்புறன்.இனி நாளைக்கு எங்கடை தலைவிதி எப்பிடிமாறுதோ ஆருக்குதெரியும்?இஞ்சை வந்து இப்பிடியான அல்லோகல வாழ்க்கை வாழுவமெண்டு முந்தி நினைச்சனாங்களே?அதுமாதிரித்தான் இதுவும்

ஊருக்கும், வெளிநாட்டிற்கும் நிறையவே வித்தியாசம் இருக்கு. அங்கே இலவசமாக கிடைப்பது இங்கே பணம் குடுத்தாலும் கிடைக்காது. (அயலவரின் அன்பு, அனுசரணை) இங்கே இலவசமாகக் கிடைப்பது அங்கே கிடையாது. நெடுக்ஸ் குறிப்பிட்ட இலவச பணம். அறுபது வயதிற்கு மேல் இங்கே பொதுவாக எல்லாமே இலவசமாக இருக்கும் நிலையில் (கண், பல்லு, மருத்துவ செலவுகள், மருந்துகள், பொது போக்குவரத்து கட்டணம் எல்லாமே இலவசம்) ஒன்று கிடைச்சால், இன்னொன்று கிடைப்பது கஷ்டம் தான்.

அதனால் இக்கரைக்கு அக்கறை பச்சையாகத் தான் தோன்றும்...

எனது பெற்றோர்கள் இங்கே வந்து தங்கி திரும்பி உள்ளார்கள். எத்தனையோ முறை கெஞ்சி, கண்டித்து கேட்ட போதும், ஒரு மாதத்திற்கு மேல் நின்றது இல்லை. 'எனது கடமை இன்னும் முடியவில்லை' என்று எனது தந்தையார் காரணம் கூறினார். தாயாரோ தனக்கு 'இந்த சுவாத்தியம் சரிபட்டு வராது' என்று மறுத்து விட்டார்.

ஊரில் இருக்கும் போது பெற்றோர், பேரன், பேத்தி, உறவினர்கள், நண்பர்கள் என்று போரின் மத்தியிலும் பிரிவு என்றால் என்னவென்று அறியாமல் வாழ்ந்து சந்தர்ப்ப சூழ்நிலையால், காலத்தின் கட்டாயத்தில் எல்லோரும் சிதறி வாழுகின்றோம். திரும்பிப் போனால் கூட 'வா' என்று சொல்வதற்கு பார்த்து, பாசத்தோடு வளர்த்த உறவுகள் இல்லை என்று தெரிந்தும், அவர்களின் ஞாபகத்தில் மீதி நாட்களை அங்கே வாழ மனம் தவிக்கிறது...

Edited by குட்டி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மைச் சொல்லப் போனால் ஊரில் கஸ்டப்பட்டு விட்டு (பொருளாதார ரீதியில்) இங்கு வந்துள்ளவர்களுக்கு மீண்டும் ஊருக்குப் போக விரும்பமில்லை.

நெடுக்குசாமி!

அவிச்ச ஒண்டையே திருப்பித்திருப்பி அவிச்சுக்கொண்டிருக்கிறியள்.

உள்ளதை சொல்லுங்கோ.....

ஊரிலையிருந்து அந்தக்காலம் தொடக்கம் இண்டுவரைக்கும் லண்டனுக்கு மேல்படிப்பு படிக்கப்போறன் எண்டு சொல்லிப்போட்டு... ( அதுவும் வீரகேசரி,தினகரனிலை பெரிசாய் படம்போட்டு "மேற்படிப்புக்காக லண்டன் செல்கிறார்") திரும்பி வந்தவங்கள் ஒருத்தனும் இல்லை.அதுவும் அரசாங்க செலவிலை வந்து படிச்சு பட்டமும் எடுத்துப்போட்டு லண்டனிலையே ஒட்டுப்பட்டுப்போனாங்கள்.மஹாபொல ஸ்கொலசிப் எண்டு எடுபட்டு லண்டனுக்கு வந்தவங்களும் எக்கச்சக்கம்.அதுவும் 60,70 ஆம் ஆண்டுகளிலை படிக்கவெண்டு லண்டனுக்கு வந்தவங்களை பற்றி சொல்லி வேலையில்லை.தாய் சொல்லிக்குடுத்த தமிழையும் ஆங்கிலத்திலை எழுதி வாசிக்கிற செம்மறியள்.சொந்த பிள்ளையளுக்கு தமிழ் சொல்லிக்குடுக்க வெக்கப்படுற ஜென்மங்கள்.பெரியதாய் சிறியதாய் பிள்ளைகளின்ரை பேர்கூட ஒழுங்காய்தெரியாத டாக்குத்தரும் எஞ்சினியரும்.சோத்தைக்கூட கையாலை சாப்பிட்டால் கேவலமாய் நினைக்கிற ஜாம்பவான்கள்.இவங்களாலை நாட்டுக்கு என்ன பிரயோசனம்?

ஆனால் இண்டைக்கு அகதியாய் வந்தவனும் அவன்ரை பிள்ளையளும்தான் எங்கடை நாட்டுபிரச்சனையளை உலகத்துக்கு சொல்லுக்கொண்டிருக்குதுகள்

ஒழுங்காய் தமிழ்கதைக்குதுகள் பொது இடங்களிலையும் தமிழ்கதைக்குதுகள் நல்ல தமிழ்கதைச்சுக்கொண்டு படிப்பிலையும் கெட்டிக்காரர் எண்ட பேர் எடுத்துக்கொண்டிருக்குதுகள்.சொந்த நாடு வேணுமெண்டு ஆசைப்படுதுகள்.சொந்தபாசை வேணுமெண்டு ஆசைப்படுதுகள்.இப்பிடி எவ்வளவோ சொல்லிக்கொண்டு போகலாம்.

ஆனால் படிக்கவெண்டு சொல்லி லண்டனுக்கு வந்துட்டு சொந்த நாட்டையே மறந்த......அகதியாய் வந்த உறவுகளையே பாக்க வெட்கப்பட்ட படிச்சபன்னாடைகள் உள்ளநாடு லண்டன் இது எனது சொந்த அனுபவம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் அங்கே போய் இருந்து அங்கே சாகத் தான் விருப்பம்.தப்பித் தவறி இங்கே செத்தால் அங்கே கொண்டு போய் செத்த வீடு செய்ய வேண்டும் என்பது என் ஆசை.

நீங்கள் வேறை.. கனடாக்காரருக்கு லண்டனில போய் நிக்கிறதே கஷ்டமா இருக்கு..! :icon_idea: இதுக்குள்ளை லண்டன் பாட்டியை குற்றம்சொல்ல முடியுமா? :icon_idea:

அதென்டால் சரி தான் ஆனால் அவுஸ்ரேலியாகாரர் தங்கட இடம் தான் இன்னும் வசதியாய் இருக்கும் என்பார்கள் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

முடியுமானவரை என்ரை கடைசிக்காலத்தை...நான்பிறந்த மண்ணிலையே வாழநினைக்கிறன்.அதுவும் என்ரை அம்மாவை எரிச்ச எங்கடை ஊர்ச்சுடலையிலைதான் சாம்பலாக விரும்புறன்.இனி நாளைக்கு எங்கடை தலைவிதி எப்பிடிமாறுதோ ஆருக்குதெரியும்?இஞ்சை வந்து இப்பிடியான அல்லோகல வாழ்க்கை வாழுவமெண்டு முந்தி நினைச்சனாங்களே?அதுமாதிரித்தான் இதுவும்

கு.சா எனக்கும் இதுதான் எண்ணம்! இப்ப எனது தாயார் என்னுடனேதான் இருக்கின்றார். நிறைய ஞாபகங்கள் எல்லாம் போயிட்டுது. சிலநேரங்களில் என்னையே அடையாளம் காண்பது கஷ்டம், ஆனால் எனது மகனை நான் என்று நினைத்துக் கதைப்பா. எல்லாம் அந் நாளைய ஞாபகங்கள்தான் . எனக்கும் எங்கட கோம்பையன் மணல் சுடலைதான் விருப்பம். அங்குதான் முன்பு எனது தந்தையார் நினைவாக ஒரு தென்னைமரம் இருக்கு. நானும் அங்கிருக்கும் போது சுடலைக்குப் போகும் சமயங்களில் அத தென்னையின் அடியில் சிறிது நேரம் சாய்ந்திருப்பது வழக்கம். அடுத்து யாது நடக்கும் யாரறிவார்! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

பாட்டிக்கு சொந்த மண்ணில் சாக விருப்பமில்லை போலும்.......... :rolleyes: ..

  • கருத்துக்கள உறவுகள்

அதென்டால் சரி தான் ஆனால் அவுஸ்ரேலியாகாரர் தங்கட இடம் தான் இன்னும் வசதியாய் இருக்கும் என்பார்கள் :rolleyes:

சரியாச் சொன்னியள் அக்கா. கனடா சரியான குளிர், இலண்டன் சரியான நெருக்கம், வேலை எடுப்பது கஷ்டம்,உயர் வாழ்கைச் செலவு. அவுஸ் தான் திறமான இடம் பாருங்கோ. சனமும் பிழையில்ல, பொருளாதார ரீதியிலையும் ஐரோப்பவ விட நல்ல நிலையில்லா இருக்கிறம்.

எனக்கு எங்கு வசிப்பதும் ஒன்றுதான். நான் இங்கு வந்த பின்பு 15 வருடங்களுக்குப் பின்னர் வன்னியில் வசித்துவிட்டு வந்தேன். அந்த வாழ்க்கை எனக்குக் கடினமாகவோ விருப்பமின்மையாகவோ இருக்கவில்லை. எனக்கிருக்கிற ஒருயொரு பிரச்சனை இரு சாராரினதும் மனநிலை ஒத்துப் போகாததுதான். அதைத் தவிர வேறெந்தப் பிரச்சனையும் இல்லை. தமிழீழம் என்ற ஒன்று அமைந்தால்தான் நான் அங்கு சென்று வசிப்பேன். அப்படியில்லையாயின் அங்கு திரும்பச் செல்லும் எண்ணம் இல்லை.

ஒரு நாட்டில் செட்டிலாகும் எண்ணம் அறவே இல்லை. பல நாடுகளுக்கும் சென்று வாழவேண்டுமென்பது என்னுடைய நீண்டநாள் ஆசை. அதில் அவுஸ்ரேலியாதான் முதலாவது இடத்தில் உள்ளது. :rolleyes::):D

முதலில் அந்த அம்மாவை இங்கு கூப்பிட்டது தவறு. அடுத்தது நாட்டுக்கு போய் வாழ்வார்களென்று நினைப்பது முட்டாள்தனம்.ஈழம் கிடைத்தால்கூட ஒருவீதம் போகுமோ என்பது கேள்விக்குரியது.அதிலும் இங்கு பிறந்தவர்கள் எந்தக்காலத்திலும் திரும்பி போகமாட்டார்கள்.இதுதான் உண்மை.மற்றதெல்லாம் சுத்தமான பொய்.,

  • கருத்துக்கள உறவுகள்

அதென்டால் சரி தான் ஆனால் அவுஸ்ரேலியாகாரர் தங்கட இடம் தான் இன்னும் வசதியாய் இருக்கும் என்பார்கள் :lol:

குளிர் கொஞ்சம் குறைவு எண்டதால வசதி எண்டு நினைக்கினம்..! :rolleyes: ஆனால் அவுஸ்திரேலியாவில கொஞ்சம் இனத்துவேசம் இருக்குதானே..! அதுக்கு குளிர் பரவாயில்லை..! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்குசாமி!

அவிச்ச ஒண்டையே திருப்பித்திருப்பி அவிச்சுக்கொண்டிருக்கிறியள்.

உள்ளதை சொல்லுங்கோ.....

ஊரிலையிருந்து அந்தக்காலம் தொடக்கம் இண்டுவரைக்கும் லண்டனுக்கு மேல்படிப்பு படிக்கப்போறன் எண்டு சொல்லிப்போட்டு... ( அதுவும் வீரகேசரி,தினகரனிலை பெரிசாய் படம்போட்டு "மேற்படிப்புக்காக லண்டன் செல்கிறார்") திரும்பி வந்தவங்கள் ஒருத்தனும் இல்லை.அதுவும் அரசாங்க செலவிலை வந்து படிச்சு பட்டமும் எடுத்துப்போட்டு லண்டனிலையே ஒட்டுப்பட்டுப்போனாங்கள்.மஹாபொல ஸ்கொலசிப் எண்டு எடுபட்டு லண்டனுக்கு வந்தவங்களும் எக்கச்சக்கம்.அதுவும் 60,70 ஆம் ஆண்டுகளிலை படிக்கவெண்டு லண்டனுக்கு வந்தவங்களை பற்றி சொல்லி வேலையில்லை.தாய் சொல்லிக்குடுத்த தமிழையும் ஆங்கிலத்திலை எழுதி வாசிக்கிற செம்மறியள்.சொந்த பிள்ளையளுக்கு தமிழ் சொல்லிக்குடுக்க வெக்கப்படுற ஜென்மங்கள்.பெரியதாய் சிறியதாய் பிள்ளைகளின்ரை பேர்கூட ஒழுங்காய்தெரியாத டாக்குத்தரும் எஞ்சினியரும்.சோத்தைக்கூட கையாலை சாப்பிட்டால் கேவலமாய் நினைக்கிற ஜாம்பவான்கள்.இவங்களாலை நாட்டுக்கு என்ன பிரயோசனம்?

ஆனால் இண்டைக்கு அகதியாய் வந்தவனும் அவன்ரை பிள்ளையளும்தான் எங்கடை நாட்டுபிரச்சனையளை உலகத்துக்கு சொல்லுக்கொண்டிருக்குதுகள்

ஒழுங்காய் தமிழ்கதைக்குதுகள் பொது இடங்களிலையும் தமிழ்கதைக்குதுகள் நல்ல தமிழ்கதைச்சுக்கொண்டு படிப்பிலையும் கெட்டிக்காரர் எண்ட பேர் எடுத்துக்கொண்டிருக்குதுகள்.சொந்த நாடு வேணுமெண்டு ஆசைப்படுதுகள்.சொந்தபாசை வேணுமெண்டு ஆசைப்படுதுகள்.இப்பிடி எவ்வளவோ சொல்லிக்கொண்டு போகலாம்.

ஆனால் படிக்கவெண்டு சொல்லி லண்டனுக்கு வந்துட்டு சொந்த நாட்டையே மறந்த......அகதியாய் வந்த உறவுகளையே பாக்க வெட்கப்பட்ட படிச்சபன்னாடைகள் உள்ளநாடு லண்டன் இது எனது சொந்த அனுபவம்

நீங்கள் சொல்லுறாப் போல ஆக்கள் இருக்கினம் இல்லை என்றில்லை. ஆனால் அதேவேளை ஆரம்ப காலத்தில் இயக்கத்தை வெளியில் இருந்து வளர்த்தெடுத்தவர்களும் படித்தவர்கள் தான். அந்தப் பக்கத்தையும் நீங்கள் புரட்டிப் பார்க்க வேணும். அதுமட்டுமன்றி எமக்கு வன்முறைவாதிகள்.. கறுப்பர்களுக்கு அடுத்தபடியான குழப்படிகள் என்ற பெயரையும் பெற்றுத் தந்தது.. அகதியாக வந்தவர்கள் தான். நல்ல பெயரை விட கெட்ட பெயர் தான் அதிகம் இவர்களால்.. அந்த நியாயத்தையும் நாங்கள் ஏற்றுக் கொண்டு.. எம்மை மறுசீரமைத்து ஒழுங்கான வழியில் வாழனும். சும்மா வெட்டி பந்தாவை எமக்குள் பேசி பிரயோசனம் இல்ல.

வாழுற இடத்தில் மற்றைய இனங்களோடு எந்தளவுக்கு ஒன்றி வாழுறீங்க என்று பார்த்தா படிச்சவை தான் அதிகம் மற்ற இனங்களோடு கலந்து வாழுகின்றனர். அகதியாக வந்தோர் குறிச்சி குறிச்சியாக மற்றவர்களை விரட்டி அடித்து வாழுகின்றனர். இதனால் வெறுப்பை சம்பாதித்ததுதான் அதிகம்.

நீங்கள் நாங்கள் வாழுற இடங்கள் இன்னொரு இனத்தின் இடம். அவர்கள் உயிர் கொடுத்து பாதுகாத்து உழைத்து உயர்வித்த இடங்கள். இங்கு வந்து நாங்க நடப்புக் காட்டுவது எங்களை நாங்களே ஏமாற்றிறது போன்றது.

மொழியை கலையை கலாசாரத்தை வளர்க்கலாம். அதை யாரும் தடுக்கவில்லை. ஆனால் எம்மை நாமே காட்டிக் கொடுக்கக் கூடாது.

உதாரணத்துக்கு உண்மையா எனக்கு நடந்ததை சொல்லுறன்.. நான் வந்த புதிதில் வங்கிக் கணக்கு திறக்க.. இங்கிலாந்தின் தலைநகரில் ஏறாக இறங்காத வங்கிகள் இல்லை. அவர்கள் சிறீலங்கன் கடவுச்சீட்டை பார்த்ததுமே ஒரு வகையாகத்தான் அணுகினார்கள். ஆனால் தலைநகரை விட்டு வந்த அலுவலைப் பார்க்க தூர இடம் போன போது அங்கு 3-4 வங்கிகளில் ஒரே நாளில் கணக்குத் திறந்து தந்தார்கள்.

இந்த நிலையை யார் ஏற்படுத்தியது..????!

ஆக.. இரு தரப்பும் தவறு செய்துகிட்டுத்தான் இருக்குது. தவறுகளை எல்லாரும் திருத்தினா ஒட்டுமொத்த இனத்திற்கும் நல்லது. :rolleyes::lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ரதி அவர்களே, நீங்கள் இப்படியான தலைப்புகளை இங்குவந்து சேர்ப்பதற்கு தனியா பயிற்சி எடுத்து அதைவிட றூம்போட்டு யோசிப்பீர்களா ஏனெண்டா அந்தக்காலத்து எம்ஜிஆர் படங்களைப்போல் பதில் கருத்துக்கள் இரண்டு மூன்று பக்கங்களையும் தாண்டுது. இப்படி அனைவரையும் கவருவதுபோல் இருத்தல் வேண்டுமாகவிருந்தால் அதற்காக தனியான மற்றும் ஸரோங்கான அடித்தளத்தையே யாழில போட்டு வைத்திருக்கவேண்டும். இப்பதான்தெரியுது கடந்தகாலங்களில ஒரு புலம்பல் இடுகை தங்களால் பதியப்பட்டதை, ஆனால் சும்மா சொல்லக்கூடாது அது நல்லாத்தான் வேலைசெய்யுது. அதை விடுங்கோ,

இப்பவிசயத்துக்கு வருவம். மனிதனது வாழ்நாளில் அதிமுக்கியமானதும் பயம் நிறைந்ததுமான ஒர காலகட்டம் வயோதிபம் மட்டுமே காரணம் அம்மனிதன் கடந்தகாலத்தில் தன்னைச்சுற்றி நடந்த சம்பவங்களின் அவதானிப்பினால் தனக்கும் அப்படி எதுவும் நடந்திடக்கூடாது என்பதில் முனைப்பாக இருப்பார்கள். ஆவ்வயோதிகத்தாய் கறிப்பிட்டுச்சொல்லும்படியான சில காலங்களை வசதியான வெளிநாட்டில் போக்காட்டிப்போட்டா. ஆக்காலங்களில் பலவிடையங்களை அவர் தனக்குத் தெரியாமலேயே தன்னடன் இணைத்துவிட்டா. குறிப்பாக சுத்தம்பண்ணுதல், பொருட்களை தட்டுப்பாடின்றிப் பெற்றுக்கொள்ளுதல், சிரமமில்லாத போக்கவரத்து, தரமான உணவு, தன்னைச்சுற்றிப் பாதுகாப்பு, மருத்துவம கூப்பிட்குரலுக்கு கொஞகமேனும் உறவுகள் அவர்களும் நல்ல பொருளாதாரச் சூழலில். ஆப்போபிடுங்குப்பாடு எதுவும் இல்லை.

இதையே புலத்தில் கோயில் குளம் இருக்கு ஆனால் நினைச்சவுடன் போகமுடியாது. வைத்தியம் மிகவும் சிரமம,; சமையல் சாப்பாடு அது மிகவும் மோசம் காரணம் இப்ப அங்கையும் கடைச்சாப்படுதான் கன வீட்டில வவுனியா எண்டால் சொல்லத்தேவையில்லை. ஆவவைவைத்துப்பராமரிக்க ஆக்கள் இல்லை. இங்கையெண்டால் அரசாங்கம் பராமரிப்பாளருக்க கொஞசம் காசு கொடுக்கும் அதுக்காகவேனும் அவவைக் கவனித்துகவேணும் எண்ட நினைப்பு யாருக்காவது இருக்கும்.

இக்காரணத்தாலேயே இங்கவாழ்ந்த வயோதிபர்கள் விரும்பியோ விரும்பாமலேயோ இவ்வாழ்கையை சிக்கெனப்பிடித்துள்ளார்கள். இன்னமொருவிடையம் வசதியிருந்தால் ஒருக்கா ஊருக்குப் போயிட்டு வாங்கோ. அப்போ விடையத்தை ஓரளவு தெளிவாய்ப் புரிஞசுகொள்வீர்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எழுநாயிறு அவர்களே நீங்கள் என்ன சொல்ல வாறீங்கள் எனக்கு விளங்கவில்லை?...நான் எழுதும் பதிவுகளுக்கு எல்லாம் அனுதாபத்தால் தங்கள் கருத்துக்களை பதிகிறார்கள் என சொல்கிறீர்களா? :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை நான் அப்படிக் கூறவில்லை. தயவுசெய்து தப்பாக விளங்கிக்கொள்ளவேண்டாம். இதுபற்றி மேலதிகமாக என்னிடமிருந்து விளக்கம் எதையும் எதிர்பார்க்கவேண்டாம். தேடல் அதன்மூலம் புரிந்துகொள்ள முயற்சிக்கவும். ஒரு நாணயத்துக்கு இரண்டுபக்கங்கள் இருப்பதுபோல்; என்னிடமுள்ள நாணயத்திற்கு பல நூறு பக்கங்கள் உள்ளன. அதுபோல் நான் எழுதிய கருத்துக்கும் அனேக விளக்கங்கள் இருக்கலாம். ஒண்டுபண்ணுங்கோ "என்னகொடுமை சரவணன்" எண்டுட்டு தலையில அடித்துப்போட்டு காசிக்குப்போனால் எதையாவது விட்டுத்தொலைக்கவேண்டுமெனச் சொல்வார்கள், அதுபோல் என்ரை கதையை விட்டுத்தள்ளுங்கோ. தவறாக எதையாவது தட்டச்சுச் (?) செய்திட்டனெண்டு தாங்கள் நினைத்தால் மன்னிக்கவும். இப்ப நீங்கள்..... 1...2...3... என்ன கொடுமையெடா.... சர.......... சொல்லுறது எனக்குப் புரிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு வசித்த பின் அங்கு வசிப்பது கஸ்டமா!

இங்கு வசித்தபின் அங்கு வசிப்பதும் கஸ்டம் .

அங்கு வசித்தபின் இங்கு வசிப்பதும் கஸ்டம்.

  • கருத்துக்கள உறவுகள்

குளிர் கொஞ்சம் குறைவு எண்டதால வசதி எண்டு நினைக்கினம்..! :( ஆனால் அவுஸ்திரேலியாவில கொஞ்சம் இனத்துவேசம் இருக்குதானே..! அதுக்கு குளிர் பரவாயில்லை..! :(

நீங்கள் சொல்லுற அளவுக்கு நான் இங்கு இனத்துவேசத்தைப் பார்க்கவில்லை டங்ஸ் அண்ணா :( . நான் வேலை செய்யும் அலுவலகத்தில் கூட நான் மட்டும் தான் கருப்பு. மற்ற அனைவரும் வெள்ளை, ஆனாலும் எந்த சந்தர்ப்பத்திலும் அவர்கள் தங்களுக்கு சரி சமமாகவே என்னை நடத்தியிருக்கிறார்கள் :) . சில இடங்களில் துவேசம் இருக்கலாம், இல்லை எண்டு சொல்லவில்லை அதுக்கு காரணம் அந்த ஆக்கள் தான் :) . குறிப்பா மெல்பேர்னில கன இந்தியர்கள்/பஞ்சாபிகள் அடிவாங்க காரணம் அவர்களின் நடவடிக்கைகள் தான். அத்துடன் இங்கிருக்கும் இந்தியர்களில் பலர் அவுஸ் வெள்ளையலை மதிப்பதில்லை. :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.