Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அங்கிள் கமரா இல்லைதானே

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஏன்டா உந்த படிகளிற்க்கு கீழ் நீங்கள் நின்று கதைக்கிறீயள்,எல்லோரும் வகுப்பு அறைக்குள் செல்லுங்கோ என ஆசிரியர் சொன்னவுடன் எல்லோரும் உள்ளே சென்றுவிட்டோம்.அந்த பாடசலை ஒரு கலவன்(ஆண் பெண் இரு பாலரும்)பாடசாலை.பிரித்தானிய காலத்தில் உருவாக்கபட்டது,அதன் பின்பு அமெரிக்கன் மிசனால் நடாத்தப்பட்டது.அது ஒரு இரு மாடிகள் கொண்ட கட்டிடம்.அதன் படிகளுக்கு கீழ் நின்று கதைப்பதுக்கு என்று ஒரு கூட்டம் அந்த பாடசாலையில் இருந்தது.10ஆம்,11 ஆம் 12 ஆம் வகுப்பை சேர்ந்த மாணவர்கள் அந்த படிகளுக்கு கீழ் நின்று கதைப்பதற்க்கு அடிபடுவதும் உண்டு.

ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அதிகமானோர் ஒன்று கூடுவோம். வகுப்பு பாடங்கள் தொடங்குவதற்க்கு 10 நிமிடத்திற்க்கு முதல் அந்த படிக்கட்டுக்கு கீழ் போய் நிற்போம்.வகுப்பறைக்கு கடைசியாக செல்வதும், வகுப்பறையைவிட்டு முதலில் வெளியில் ஒடி வந்து படிக்கட்டுகளுக்கு கீழ் ஒன்று கூடுபவர்களும் நாங்களாகத்தான் இருப்போம்.நாங்ககள் 11 ஆம் வகுப்பு மாணவர் குழுவை சேர்ந்தவர்கள்.நாங்கள் இப்படி படிகளுக்கு கீழ் ஒடி வந்து நிற்பதற்க்கு முக்கிய காரணம் பெண்கள் படிகளில் ஏறும் பொழுது அல்லது இறங்கும் பொழுது எதாவது தெரியும் என்று பார்ப்பதற்க்குதான்.இதனால்தான் அங்கு எல்லோரும் ஒடி வருகிரார்கள் என்பது அன்றுதான் ஆசிரியருக்கும் தெரியவந்தது.

சில பெண்களுக்கு பெடியன்கள் ஏன் கீழே வந்து நிற்கிறார்கள் என்று தெரிந்தமையால் படிகளில் ஏறும் பொழுது மிகவும் கவனமாக ஏறுவார்கள்.சில பெண்களுக்கு இது தெரியாது ஆனபடியால் அவசரப்பட்டு ஏறுவார்கள்.

அவர் சொன்னவுடன் எல்லோரும் உள்ளே சென்று விட்டோம்.பிறகு நாம் எமது திருவிளையாடலை தொடங்கிவிட்டோம்..

ஒருகுழுவினரை ஆசிரியருகு கட்டுப்படுத்த முடியாமல் போகவே இந்த விடயம் அதிபருக்கு சென்றது .அதிபர்மிகவும் கோபக்காரர்.ஒரு நாள் மறைந்துஇருந்து யார் படிக்குகீழ் வந்து நிற்கிறார்கள் என நோட்டம் விட்டார்.அதில் 6 பேர்வரை மாட்டுப்பட்டனர்.அந்த 6 பேரில் இரண்டு பேர் பாடங்களில் மிகவும் கெட்டிக்காரர்.மீண்டும் படிகளுக்கு கீழ் நீங்கள் கூட்டமாக நிற்பதை கண்டால் பாடசாலையை விட்டு விலத்தி விடுவேன் இதுதான் நான் உங்களை கடைசியாக இந்த இடத்தில் பார்ப்பதாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை செய்து விடுவித்துவிட்டார்.அந்த அதிபரால் பலர் பாடசாலையை விட வேண்டிய நிர்பந்தங்கள் ஏற்பட்டதுண்டு.ஆனால் அவர்கள் படிப்பில் அவ்வளவாக கெட்டித்தனம் இல்லை,ஆகவே சிறு பிழைகள் விட்டாலும் உடனே அதிபர் அந்தமாணவர்களை பாடசாலையை விட்டு இடைநிறுத்திவிடுவார்.இந்த ஆறுவரில் இருவர் பாடங்களில் சுழியன்கள் என்றபடியால் மற்றவர்களுக்கும் தப்பித்து கொண்டார்கள். கதைகள் ,கட்டுரைகள் எழுதுவது,நாடகம் நடிப்பது போன்ற கலைத்துறையிலும் அவர்கள் சிறந்து விளங்கினார்கள்.அதிபரிடம் இருந்து சலுகை கிடைக்க அதுவும் ஒரு காரணம்

அடுத்த இரு வாரங்கள் ஒருத்தரும் படிக்கட்டுக்கு கீழ் போய் ஒன்று கூடுவது இல்லை.3வது கிழமை சந்திரன் மட்டும் அந்த படிகட்டுக்கு கீழ் வருவான் வந்த வேகத்திலயே திரும்பி சென்றுவிடுவான். அவனை தொடர்ந்து சுதன்,ராஜ் இருவரும் வருவார்கள் அவர்களும் சந்திரனைப்போலவே வந்த வேகத்தில் திரும்பி போவார்கள்.ஆனால் இந்த மூவரும் ஒன்றாக் கூடுவதில்லை.

மச்சான் நான் இன்றைக்கு பார்த்தன் என சந்திரன் வந்து ஒரு பெண்னின் பெயரை சொல்லி கதை விடுவான் நாம் எல்ல்லொரும் அவனை சூழ்ந்து கொள்வோம் சில கற்பனகளை நிஜம் போல் சொல்லுவான் நாமும் ஆர்வத்துடன் கேட்போம் அதனால் அவன் தான் ஒரு கிரோ என்று எண்ணிக்கொள்வான்.

உயர்தர பரீட்சையில் எங்களை விட சந்திரனுக்கு நல்ல சித்தி கிடைத்தது.பல்கலைகழகத்திற்கு செல்லும் வாய்ப்பு அவனுக்கு கிடைத்தது.பல்கலைகழகத்தில் தனக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாக எங்களுக்கு வந்து சொல்வான்.ஒரு தடவை பல்கலைகழகத்தில் பகிஸ்கரிப்பு நடந்த படியால் ஊரில் வந்து 3 மாதங்கள் வரை நின்றான்.அந்த காலகட்டத்தில் ஒரு பெண்னுடன் தகாத முறையில் உறவு கொள்ள முற்பட அவள் தனது இயக்க சிநேகிதியிடம் முறையிட்டாள்.இயக்கத்தினர் அவனை விசாரனக்கு என அழைத்து சென்றனர்.இதை அறிந்த பெற்றோர் செய்வது அறியாமல் தவிர்த்தனர்.இயக்க பெடியன்கள் என்னுடைய பிள்ளையை அடிப்பார்களோ,தட்டி கிட்டி போடுவாங்களோ என்ற பயத்துடன் தவித்தனர்.

எங்களுடன் படித்த ஒருவன் இயக்கத்தில் நல்ல பதவியில் இருப்பதை அறிந்த பெற்றோர்கள் உடனடியாக எனது வீட்டை வந்து நடந்த சம்பவம் பற்றியும் சந்திரனை உடனடியாக விடுவிக்க எதாவது உதவி செய்யும்படியும் கேட்டனர்.

எனது நன்பனின் உதவியால் சந்திரனை விடுதலை செய்யக்கூடியதாக இருந்தது.இருந்தாலும் அவனை இயக்கத்தினர் எச்சரிக்கை செய்துதான் விடுதலை செய்தனர்,இனிமேல் இப்படியான செட்டைகள் விட்டால் தன்டனை பாரதூரமாக இருக்குமென்ற தோனியில்சொல்லி அனுப்பிவைத்தார்கள்.

இரண்டு நாட்களின் பின்பு கொழும்பு செல்ல ஆயத்தமானான்.புகையிரத நிலையத்திற்க்கு நான் தான் அழைத்துச் சென்றேன்.மச்சான் உன்டை ஆட்களிட்ட சொல்லு, துவக்கை கையில வைச்சுக் கொண்டு என்னை வெருட்ட ஏலாது என்று,நீ இருந்து பார் நான் உவங்களை கிழி கிழி என்று கிழிக்கிறனோ இல்லையோ என்று.பெட்டகளுடன் சேட்டை விட்டால் உவையளுக்கு என்னவாம்.அது என்னுடைய சுதந்திரம்......என்னை போல எழுதத் தெரிந்த வாசிக்க தெரிந்த ஆட்கள் உவையளிட்ட மருந்துக்கும் கிடையாது.என வீராப்பு பேசிய படியே விடை பெற்றான்.

கொழும்பில் இருக்கும் பொழுதும் ,அதன்பிறகு புலம்பெயர்ந்த பின்பும் "சந்திரமுகி","சண்டியன்" என்ற புனை பெயர்களில் புலிகளுக்கு எதிராக பல கட்டுரைகளை வசைபாடியும்,திட்டியும் எழுதியிருந்தான்.ஆலையில்லா ஊரில் இழுப்பை பூ சக்கரை என்ற மாதிரி அவனது படைப்புக்களுக்கு ஒரு சிலரிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்தது.அவர்கள் இவனை இலக்கியவாதி என அழைக்க தொடங்க எனையோரும் அவனை இலக்கிவாதி என்றனர். இலக்கிய விழா,பட்டிமன்றம்,சிறுவர்களுக்கான கவிதை போட்டிகள், கட்டுரைபோட்டிகள் போன்றவற்றிக்கு பிரதமவிருந்தினராகவும் அழைத்தனர்.புலி எதிர்ப்பு எழுத்துதான் நவீன இலக்கியம் என்ற ஒரு எழுதாதசட்டம் தற்பொழுது தமிழிலக்கியவாதிகளிடையே காணப்படுவதால் இலங்கை ,இந்தியா போன்ற இடங்களிலும் அவன் பிரபலமடைந்தான்.

திங்கள்கிழமை வேலைக்கு செல்வதற்காக புகையிரத நிலையத்தில் நின்று கொண்டிருந்தேன்.வழமையாக என்னை கண்டால் "கலோ அங்கிள்"என ஒடி வந்து என்னுடன் கதைப்பாள் கீதா, ஆனால் அன்று அவள் என்னிடம் வரவில்லை,எனவே நான் அவளருகே கதைக்க சென்றேன்.கீதா 5ஆம் வகுப்பு படிக்கும் பொழுதே புலம்பெர்ந்தவள்,நல்லாய் தமிழ் கதைப்பா இப்பொழுது நல்ல இடத்தில் சட்ட ஆலோசகரா பணிபுரிகிறாள். மேற்கத்தைய பாணியில்தான் உடைகள் அணிவாள். நான் அவளுடன் கதைக்க தொடங்க அவள் என்னுடைய முகத்தை பார்த்து கதைப்பதைவிட என்னுடையை "பிறிவ் கேஸ்சை" மாறி மாறி பார்த்து கதைத்தாள்.புகையிரதம் வரவே இருவரும் ஏறிகொண்டோம்.எனது இருக்கைக்கு முன் ஒரு இடம் காலியாக இருந்தது.அதில் இருந்த கீதா அங்கிள் பீறிவ் கேஸ்க்குள் கமரா ஒன்றும் இல்லைத்தானே என சிரித்தபடி கேட்டாள்.நான் உடனே பீறீவ் கேஸை கீழே பார்த்தேன் ஒரு பக்கம் திறபட்டு இருந்தது ,உடனே எடுத்து பூட்டிவிட்டு ஏன் பிள்ளை அப்படி கேட்ட நீ என்று கொஞ்சம் ஆத்திரமாகவே கேட்டேன்.என்ன அங்கிள் நீங்கள் நேற்று நியுஸ் டி.வியில் பார்க்கவில்லையோ? பார்க்காவிடில் ......கொம் போய் பாருங்கோ எல்லாம் விளங்கும் என்றாள்.....

வேலைத்தளம் சென்றவுடன் .கொம் அடிச்சேன் சகல விபரமும் வந்தது...இப்பொழுது வேலைக்கு செல்லும்பொழுது பீறீவ் கேஸ் கொண்டு செல்வதில்லை .....கை வீசம்மா கைவீசு ........... :D:)

  • கருத்துக்கள உறவுகள்

அங்கிள் கமரா இல்லைதானே

உங்கள் கதை அழகு.

இப்போ ஏன் கேட்கிறீங்கள். எம்மவர்கள் நாம் கதைப்பதை கெசட் பண்ணி போட்டுக்காட்கிறார்கள். புலனாய்வார்கள் என்ற நினைப்பில்.

  • கருத்துக்கள உறவுகள்

புத்தனை விட சுழியன் யாரும் உண்டோ :D:lol::D

  • கருத்துக்கள உறவுகள்

கதை நல்ல கதை..! :D அவுஸ்திரேலியா அங்கிளை ஒரு பிடி பிடிச்சிருக்கிறியளோ? :rolleyes:

இப்பிடித்தான் புலி எதிர்ப்பு இலக்கியவாதிகளின் யோக்கியதை இருக்கு..! :wub:

  • கருத்துக்கள உறவுகள்

Mika mika arumaiyaana aakkam ....thanks

உந்த கமரா பிரச்சனையால, ஆசை, ஆசையா வாங்கின உடுப்பெல்லாம் பெட்டியிற்கயெல்லோ தூங்குது. உடுப்புகளை எல்லாம் யோசித்து போடவேண்டி இருக்கு :wub:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தெரிந்த முகத்திற்கு பூசின சாயம்

எனக்கென்னவோ இந்த கதையில் கூடுலான அளவு காழ்புணர்வே தெரிகிறது.

நாங்கள் இப்படி படிகளுக்கு கீழ் ஒடி வந்து நிற்பதற்க்கு முக்கிய காரணம் பெண்கள் படிகளில் ஏறும் பொழுது அல்லது இறங்கும் பொழுது எதாவது தெரியும் என்று பார்ப்பதற்க்குதான். அவர் சொன்னவுடன் எல்லோரும் உள்ளே சென்று விட்டோம்.பிறகு நாம் எமது திருவிளையாடலை தொடங்கிவிட்டோம்..

.இந்த ஆறுவரில் இருவர் பாடங்களில் சுழியன்கள் என்றபடியால் மற்றவர்களுக்கும் தப்பித்து கொண்டார்கள். கதைகள் ,கட்டுரைகள் எழுதுவது,நாடகம் நடிப்பது போன்ற கலைத்துறையிலும் அவர்கள் சிறந்து விளங்கினார்கள்.அதிபரிடம் இருந்து சலுகை கிடைக்க அதுவும் ஒரு காரணம்

.3வது கிழமை சந்திரன் மட்டும் அந்த படிகட்டுக்கு கீழ் வருவான் வந்த வேகத்திலயே திரும்பி சென்றுவிடுவான். அவனை தொடர்ந்து சுதன்,ராஜ் இருவரும் வருவார்கள் அவர்களும் சந்திரனைப்போலவே வந்த வேகத்தில் திரும்பி போவார்கள்.

உயர்தர பரீட்சையில் எங்களை விட சந்திரனுக்கு நல்ல சித்தி கிடைத்தது.பல்கலைகழகத்திற்கு செல்லும் வாய்ப்பு அவனுக்கு கிடைத்தது.பல்கலைகழகத்தில் தனக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாக எங்களுக்கு வந்து சொல்வான்எங்களுடன் படித்த ஒருவன் இயக்கத்தில் நல்ல பதவியில் இருப்பதை அறிந்த பெற்றோர்கள் உடனடியாக எனது வீட்டை வந்து நடந்த சம்பவம் பற்றியும் சந்திரனை உடனடியாக விடுவிக்க எதாவது உதவி செய்யும்படியும் கேட்டனர்.

கொழும்பில் இருக்கும் பொழுதும் ,அதன்பிறகு புலம்பெயர்ந்த பின்பும் "சந்திரமுகி","சண்டியன்" என்ற புனை பெயர்களில் புலிகளுக்கு எதிராக பல கட்டுரைகளை வசைபாடியும்,திட்டியும் எழுதியிருந்தான்.ஆலையில்லா ஊரில் இழுப்பை பூ சக்கரை என்ற மாதிரி அவனது படைப்புக்களுக்கு ஒரு சிலரிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்தது.அவர்கள் இவனை இலக்கியவாதி என அழைக்க தொடங்க எனையோரும் அவனை இலக்கிவாதி என்றனர். இலக்கிய விழா,பட்டிமன்றம்,சிறுவர்களுக்கான கவிதை போட்டிகள், கட்டுரைபோட்டிகள் போன்றவற்றிக்கு பிரதமவிருந்தினராகவும் அழைத்தனர்.புலி எதிர்ப்பு எழுத்துதான் நவீன இலக்கியம் என்ற ஒரு எழுதாதசட்டம் தற்பொழுது தமிழிலக்கியவாதிகளிடையே காணப்படுவதால் இலங்கை ,இந்தியா போன்ற இடங்களிலும் அவன் பிரபலமடைந்தான்.

.வழமையாக என்னை கண்டால் "கலோ அங்கிள்"என ஒடி வந்து என்னுடன் கதைப்பாள் கீதா, ஆனால் அன்று அவள் என்னிடம் வரவில்லை,எனவே நான் அவளருகே கதைக்க சென்றேன்.கீதா 5ஆம் வகுப்பு படிக்கும் பொழுதே புலம்பெர்ந்தவள்,நல்லாய் தமிழ் கதைப்பா இப்பொழுது நல்ல இடத்தில் சட்ட ஆலோசகரா பணிபுரிகிறாள். மேற்கத்தைய பாணியில்தான் உடைகள் அணிவாள். நான் அவளுடன் கதைக்க தொடங்க அவள் என்னுடைய முகத்தை பார்த்து கதைப்பதைவிட என்னுடையை "பிறிவ் கேஸ்சை" மாறி மாறி பார்த்து கதைத்தாள்.புகையிரதம் வரவே இருவரும் ஏறிகொண்டோம்.எனது இருக்கைக்கு முன் ஒரு இடம் காலியாக இருந்தது.அதில் இருந்த கீதா அங்கிள் பீறிவ் கேஸ்க்குள் கமரா ஒன்றும் இல்லைத்தானே என சிரித்தபடி கேட்டாள்.நான் உடனே பீறீவ் கேஸை கீழே பார்த்தேன் ஒரு பக்கம் திறபட்டு இருந்தது ,உடனே எடுத்து பூட்டிவிட்டு ஏன் பிள்ளை அப்படி கேட்ட நீ என்று கொஞ்சம் ஆத்திரமாகவே கேட்டேன்.என்ன அங்கிள் நீங்கள் நேற்று நியுஸ் டி.வியில் பார்க்கவில்லையோ? பார்க்காவிடில் ......கொம் போய் பாருங்கோ எல்லாம் விளங்கும் என்றாள்.....

வேலைத்தளம் சென்றவுடன் .கொம் அடிச்சேன் சகல விபரமும் வந்தது...இப்பொழுது வேலைக்கு செல்லும்பொழுது பீறீவ் கேஸ் கொண்டு செல்வதில்லை .....கை வீசம்மா கைவீசு ........... :D:)

உங்களுக்கு சந்திரனை தெரிகிறது, சந்திரனின் இயல்புகள் சிறுவயதில் இருந்தே தெரிந்திருக்கிறது, அதில் நீங்கள் அடக்கம்...

ஏனோ எழுத வேண்டும் போல இருந்து

யாரோ ஒருவர் இணைந்த ரகுமான்- அப்துல் கமீத், பேட்டியில் ...பாலசுப்ரமணியம் ..ஓரிடத்தில் சொல்லுவர், ரகுமான் நல்ல நிலைக்கு போவர் என்று தனக்கு முன்னமே தெரியும், ஆனால் இந்தலவிர்கல்லவென, சொல்லிபோட்டு சொல்லுவார், இது ஒருவர் முன்னுக்கு வந்த பிறகு, அவர் அப்படி வருவார் என்று எனக்கு முன்னமே தெரியும் என்பது போல அல்ல என்றும்..தான் ரகுமான் சிறுவயதில், 15 - 18 அமைத்த இசை குழுவை பார்த்தாகவோ அல்லது போட்டி ஒன்றில் நடுவராக இருந்தாகவோ என.

இங்கே எனக்கு தோன்றுவது மாறி,

அவர் ஊரில் பலபேராலும் "காவலி" என குறிக்கப்பட்டவர், ஆனால் சந்தர்வசத்தால் அவரது திறமையால் பாடசாலையில் இருந்து விலத்த முடியாமல் இருந்திருக்கிறார், இன்னுமொரு சந்தர்பத்தில், உங்கள் இயக்க நண்பன் காப்பாற்றி இருக்கிறார்..இப்ப யாரும் இல்லை..துரதிச்வமாக, சட்ட நிறுவனத்தில் வேலை செய்யும்..உங்கள் மருமகள் ..தன்னை காப்பாற்றவே தனது சட்ட அறிவை பாவிப்பா போல இருக்குது. அப்படியான உங்கள் மருமளிடம் சொலுங்கோ, 5 வயதில வந்து மேற்கத்தைய பாணியில் உடுப்பு போட்ட காணாது, அதற்கேற்றமாதிரி வாழவும் தெரியவேண்டும் என்று..ஆரோ ஒருவன் பீறிவ் கேஸ்க்குள் கமரா வைத்திருந்தால் எல்லாரும் அதுக்க காமராதான் வைதிப்பினம் என்றோ, அல்லது அந்த மருமகள், அல்லது அவை மாதிரி ஆக்கள் ஓட -லொள் விடுரதுக்காண்டி..கை வீசம்மா உங்கட வயசுக்கு சரிவராது..என்கேயன் பிரசர் குளிசையை வைச்சுபோட்டு..ஆபீஸ்ல பிரசர் கூடி ஒருபக்தால இழுத்து கொண்டு 911 அடிக்க வேண்டி வரப்போகுது...

இப்படி எழுதிதான், நாங்கள் அந்த காலத்தில் ...கி. மு வாழ்ந்தனாங்கள் என்று கதை போசுவதே பலருக்கு பிழைப்பாய் இருக்குது

முடிவாக நல்ல எழுதுகிறீர்கள்...ஒரே வட்டத்தை குசிப்படுதுவரகாய்... எதோ .....மாடு மாதிரி ஒண்டையே சுத்துரீர்கள்...

சுதனும் ராஜும் எங்கே..மாவீர், போராளி, துரோகி, ஒட்டுக்குழு , குடியானவன் இலங்கையில், புலம் பெயர் கல்விமான், அகதி தமிழன் ?????

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கதை அழகு.

இப்போ ஏன் கேட்கிறீங்கள். எம்மவர்கள் நாம் கதைப்பதை கெசட் பண்ணி போட்டுக்காட்கிறார்கள். புலனாய்வார்கள் என்ற நினைப்பில்.

நன்றிகள் கறுப்பி.....என்னத்தை புலனாய்வு செய்து என்னதை கிழிக்கப்போயினம் :D:D

புத்தனை விட சுழியன் யாரும் உண்டோ :D:lol::D

ஒறிஜினல் புத்தனைப் போல ஒரு சுழியன் உண்டோ?

கதை நல்ல கதை..! :D அவுஸ்திரேலியா அங்கிளை ஒரு பிடி பிடிச்சிருக்கிறியளோ? :rolleyes:

இப்பிடித்தான் புலி எதிர்ப்பு இலக்கியவாதிகளின் யோக்கியதை இருக்கு..! :wub:

அவருடன் இன்னும் 3 பேரையும் சேர்த்து ஒரு கற்பனை

Mika mika arumaiyaana aakkam ....thanks

நன்றிகள்,ஊரவன் ...நீங்களும் நல்ல ஆக்கங்கள் எழுத வாழ்த்துக்கள்

உந்த கமரா பிரச்சனையால, ஆசை, ஆசையா வாங்கின உடுப்பெல்லாம் பெட்டியிற்கயெல்லோ தூங்குது. உடுப்புகளை எல்லாம் யோசித்து போடவேண்டி இருக்கு :wub:

நன்றிகள் யாழ்கவி..உடுப்புக்களை போடமுதல் கணவனிடம் கேட்டுப்பாருங்கள் போடலாமா என்று ..பாம்பின்கால் பாம்பு அறியும்....ஆண்களைப்பற்றிம் சொன்னேன் :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தெரிந்த முகத்திற்கு பூசின சாயம்

எனக்கென்னவோ இந்த கதையில் கூடுலான அளவு காழ்புணர்வே தெரிகிறது.

உங்களுக்கு சந்திரனை தெரிகிறது, சந்திரனின் இயல்புகள் சிறுவயதில் இருந்தே தெரிந்திருக்கிறது, அதில் நீங்கள் அடக்கம்...

ஏனோ எழுத வேண்டும் போல இருந்து

யாரோ ஒருவர் இணைந்த ரகுமான்- அப்துல் கமீத், பேட்டியில் ...பாலசுப்ரமணியம் ..ஓரிடத்தில் சொல்லுவர், ரகுமான் நல்ல நிலைக்கு போவர் என்று தனக்கு முன்னமே தெரியும், ஆனால் இந்தலவிர்கல்லவென, சொல்லிபோட்டு சொல்லுவார், இது ஒருவர் முன்னுக்கு வந்த பிறகு, அவர் அப்படி வருவார் என்று எனக்கு முன்னமே தெரியும் என்பது போல அல்ல என்றும்..தான் ரகுமான் சிறுவயதில், 15 - 18 அமைத்த இசை குழுவை பார்த்தாகவோ அல்லது போட்டி ஒன்றில் நடுவராக இருந்தாகவோ என.

இங்கே எனக்கு தோன்றுவது மாறி,

அவர் ஊரில் பலபேராலும் "காவலி" என குறிக்கப்பட்டவர், ஆனால் சந்தர்வசத்தால் அவரது திறமையால் பாடசாலையில் இருந்து விலத்த முடியாமல் இருந்திருக்கிறார், இன்னுமொரு சந்தர்பத்தில், உங்கள் இயக்க நண்பன் காப்பாற்றி இருக்கிறார்..இப்ப யாரும் இல்லை..துரதிச்வமாக, சட்ட நிறுவனத்தில் வேலை செய்யும்..உங்கள் மருமகள் ..தன்னை காப்பாற்றவே தனது சட்ட அறிவை பாவிப்பா போல இருக்குது. அப்படியான உங்கள் மருமளிடம் சொலுங்கோ, 5 வயதில வந்து மேற்கத்தைய பாணியில் உடுப்பு போட்ட காணாது, அதற்கேற்றமாதிரி வாழவும் தெரியவேண்டும் என்று..ஆரோ ஒருவன் பீறிவ் கேஸ்க்குள் கமரா வைத்திருந்தால் எல்லாரும் அதுக்க காமராதான் வைதிப்பினம் என்றோ, அல்லது அந்த மருமகள், அல்லது அவை மாதிரி ஆக்கள் ஓட -லொள் விடுரதுக்காண்டி..கை வீசம்மா உங்கட வயசுக்கு சரிவராது..என்கேயன் பிரசர் குளிசையை வைச்சுபோட்டு..ஆபீஸ்ல பிரசர் கூடி ஒருபக்தால இழுத்து கொண்டு 911 அடிக்க வேண்டி வரப்போகுது...

இப்படி எழுதிதான், நாங்கள் அந்த காலத்தில் ...கி. மு வாழ்ந்தனாங்கள் என்று கதை போசுவதே பலருக்கு பிழைப்பாய் இருக்குது

முடிவாக நல்ல எழுதுகிறீர்கள்...ஒரே வட்டத்தை குசிப்படுதுவரகாய்... எதோ .....மாடு மாதிரி ஒண்டையே சுத்துரீர்கள்...

சுதனும் ராஜும் எங்கே..மாவீர், போராளி, துரோகி, ஒட்டுக்குழு , குடியானவன் இலங்கையில், புலம் பெயர் கல்விமான், அகதி தமிழன் ?????

கருத்து பகிர்ந்தமைக்கு நன்றிகள்.

எரிமலை,நீங்கள் எனக்கு காழ்புணர்வு என்று நினைத்தால் நான் ஒன்றும் செய்ய முடியாது.

சந்திரன் என்னுடன் படிக்கவுமில்லை அவரை நான் புலிகளிடமிருந்து காப்பாற்றவும் இல்லை.

எனது வாழ்க்கையில் நடந்த மற்றும் கேட்டு அறிந்த சம்பவங்களை தொகுத்து கற்பனையாக கிறுக்கியுள்ளேன்.

நான் ஒரு எழுத்தாளன் அல்ல ....அதை எனது கிறுக்களில் இருந்தே நீங்கள் அறிதிருப்பீர்கள்....எழுத்துப்பிழைகள்,இலக்கனப்பிழைகள்,ஏன் ஒரு கதைக்குறிய எந்த கட்டுமானமும் இருக்காது......அதுதான் நான் எதாவது எழுதினால் கிறுக்கல் என்று பதிவிடுகிறனான்.

எண்ணங்களையும், சில நிஜங்களையும் தொகுத்து பதிவிட எல்லோருக்கும் உரிமையுண்டு....

நான் கிறுக்குவதால் ஒரு சிலர் குசி படுகிறார்கள் என்றால் அவர்களுகாக தொடர்ந்து நான் கிறுக்கி புகழ் அடைவதில் என்ன தப்பு.....மனித அபிலாசைகளிள் இதுவும் ஒன்று....

மற்றது...எனக்கு மருமகளும் இல்லை,அவள் 5வயதில் புலத்திற்க்கு வந்தவள் என்று குறிப்பிடவில்லை கதையில் 5 ஆம் வகுப்பில் புலம் பெயர்ந்தவள் என்றுதான் குறிப்பிட்டுள்ளேன்..

சுதனும் , ராஜுவும் யாருக்கு தெரியும் எங்கே என்று.....கதையில் வரும் கதாபாத்திரத்திரங்கள் ஓவ்வோருவருடைய முடிவுகளையும் சொல்ல வேண்டுமோ? எனக்கு அந்த விதி கூட தெரியவில்லை பாருங்கோ எரிமலை......

மற்றது எரிமலை எனக்கு பிறீவ் கேஸ் கொண்டு போரவேலை இல்லை.....

என்ன செய்ய புலி எதிர்ப்பாள்ர்களும் ஒன்றையே சுத்துவார்கள் ,ஆதரவாளர்களும் அதையே செய்கிறார்கள்

மீண்டும் நன்றிகள் தொடரட்டும் உங்கள் கருத்துக்கள்

...

  • கருத்துக்கள உறவுகள்

கதை பரவாயில்லை! ஏதாவது ஒரு சமூகம் சார்ந்த பிரச்சனையை உங்கள் கதைகளில் குறிப்பிடுகிறீர்கள்! :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் பதில் சொல்லிய விதம் அல்லது சொன்ன கருத்து பண்பாக/ ஏற்றுகொள்ளத்தக்க வகையில் உள்ளது. நன்றி :)

ஒன்றைதவிர "என்ன செய்ய புலி எதிர்ப்பாள்ர்களும் ஒன்றையே சுத்துவார்கள் ,ஆதரவாளர்களும் அதையே செய்கிறார்கள்" இது கடினம் என்றாலும், நீங்கள் எழுதின நீண்ட பதிலில் இருந்து..ஒருகாலத்தில் நீங்கள் விளங்குவீர்கள் என்று நம்புகிறேன் ..எங்கே அந்த நரை/ நிழல் பகுதி உள்ளது என்று. இதில் என்னை பற்றி எழுத தேவையில்லை- ஆனாலும், கிரிக்கெட் சப்போர்ட் விசயத்திலும் இப்படித்தான் இருந்திருக்கிறேன்..இலங்கைக்கு . எதிர், ஆனால் ஜெயசூரியாவின் ரசிகன்..ஏனெனில் பலகாலம் அவரை "கிரிகட் கனவான்கள்" ஏற்றுகொள்ளவில்லை. எனது நண்பன் ஒருவன் தீவிர புலி விசுவாசி , அவன் கூட இலங்கைக்கு சப்போர்ட்.. சொல்லுவான்.."இவங்கள் யாரடா.. நம்மளை மாதிரி அடிமட்டத்தில் இருந்து வந்தவங்கள் என்று". அந்த காலத்தில் 1996 வேர்ல்ட் கப் நடக்கும் போது சொல்லுவார்கள் .. கலுவிதறன வின் அப்பா இரத்மலானையில் ??"குடிச்சு போட்டு" புலம்பிக்கொண்டு திரிவார் என்று...ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு மென்மையான/ கடினமான பக்கம்....அதில் உள்ள ஒன்றோ அல்லது சிலதை வைத்துவிட்டு அவர் இன்னார் என்று சொல்லுவது கடினம்..

சரி கதைக்கு வருவம்..

நீங்களே சொல்லியிருந்தீர்கள் அறிந்த கேட்ட சபவங்களுடன் சேர்ந்த கற்பனை கதை என்று..நான் பார்த்தது அதில் சொல்லவந்த ?உண்மை பகுதிகளை...

எனக்கு தெரியும் அவ உங்கடை மருமகள் இல்லை என்று..எனக்கு உங்களின் வயதை தீர்மானிகிறது கடினமானதாக இருந்தது..உங்களினது அல்லது அந்த காமராகாரனின் வயது ..இயக்கரார் வெருட்டினது அதிலும் பெண் சிநேகிதி இயக்கத்தில் இருந்த காலம் என்றால்..87 க்கும் ?90 இடைபட்டது..எனக்கு ஞாபகம் இல்லை எப்ப போலிஸ் வந்தது என்று...சரி 89 எண்டு எடுத்தாலும்...அப்ப அவருக்கு வயது 20 - 21 அப்ப இப்ப ..90 இல் 20 என்றால் 2010 -----40 வயது..40 - 45 வயது ஆக்களை இங்கே படிச்சாக்கள் பேர் சொல்லுவினம் அல்லது அண்ணேய் எண்டுவினம் ..நான் பழகுகிற ஆக்கள்...வந்த புதில் உந்த ரேஞ்சில் இருக்குற ஒராளுக்கு அங்கிள் போட வெளிகிட்டு பொண்சாதி மூஞ்சியை தூக்கி வைச்சுக்கொண்டு இருந்தவா?

எனக்கு தெரிய கொஞ்சம் பாத்திர தெரிவு பொருத்தம் இல்லை போல இருந்து...மற்றும் படிக்கு...உங்கட சந்தோசத்தை கெடுக்க வரவில்லை ..அவவை தமிழ்கடையில் சாமான் அடுகுகிற பெண் என்றால் கூட பொருந்தியிருக்கும் என்பேன்...இல்லாட்டி நான் சந்திக்கிற பெண்கள் வேறமாதிரியோ தெரியவில்லை..ஒருநாள் கடை ஒண்டில வேலைக்கு சேர்ந்து ( ஒரு கிழமைதான் வேலை செய்தனான்) 2 ம் நாள் ஒரு கேர்ள் வந்தா..நான் ரூம் இல் இருக்கும் போது..அப்படி இப்படி பார்த்து போட்டு..உடுப்பை மத்தினா..நான் ஒரு சிங்கமாய் அவவுக்கு தெரியவில்லை போல :( அப்படியான ஆக்களுக்கு மத்தியில்..சொல்லத்தெரியவில்லை ...

மற்றது..இங்கேயும் இப்படி ஒன்று நடந்திருக்கு, கனடாவில..அவரின் விபரங்களை கேட்டிருக்கிறேன்...அது வந்தா பிறகு, ஒரு கதையை வரையுன்கோவன்...மறுபடியும் சந்திப்போம்...:)

ஒரு சமூகத்தில் இயல்பாக உள்ள பிறழ்வுகளை வேறுபட்ட அளவுகள் கொண்டு பார்ப்பது சரியல்ல என்பது எனது கருத்து. இங்கே கூட கனடாவில், அவர் தமிழர் என்பதர்ற்காய் எல்லா தமிழ் டாக்டர்ஸ் அப்படி என்று கனேடியன் பெரும்பான்மை லேபல் பண்ணினால் எப்படியோ, அப்படித்தான், அந்த தமிழரை நாங்கள் புலி விசுவாசி அல்லது எதிர் என்று சொல்லுவது ஆகும். ஏனெனில் இந்த மாதிரியான சமூக ஒதுக்கங்கள் எந்தளவு தூரம் பலன் தரும் என்று எனக்கு தெரியாது...ஏனெனில் இந்த லேபெளிங் முடில்லாதாது..இப்ப இந்த தமிழரை மார்க்கம் பகுதியை செயன்தவர் என்றால்..பிறகு மார்கத்தில் உள்ளவர்கள் வருவார்கள்...இவை யாழ்ப்பாணத்து ஆக்கள் என்று ...பிறகு யாழ்பாணத்து ஆக்கள் வருவினம்..இவர் இந்த பள்ளிகூடத்தை சேர்ந்தவர் என்று..பிறகு அந்த பள்ளிக்கூடத்தை சேர்ந்தவை வருவினம் ...............................

  • கருத்துக்கள உறவுகள்

புத்தன் அருமையாக இருக்கிறது. உங்கள் படைப்புகள் அலட்டலாக இல்லாமல் அளவாக நச்சென்று இருக்கிறது. ஏற்கனவே பல சம்பவங்களைக் கதைவடிவத்தில் எழுதியவர். இலாவகமான ஓட்டம் படித்துவிட்டு பதிவிடாமல் போக மனம்வரவில்லை. வாழ்த்துக்கள்.

பொதுவாக சின்ன வயதில் பாடசாலை காலத்தில் இப்படி குழப்படிகள் செய்பவர்கள் வளர்ந்தவுடன் அதற்கு முற்றிலும் வேறு விதமாக நல்ல விதத்தில் இருப்பார்கள். ஆனால் அமசடக்காக ஸ்கூல் நாள்களில் இருந்து, நல்ல பெயர் வாங்கினவர்கள் அநேகம் பேர் பிறகு பெரிய எம்டன் வேலைகள் செய்வார்கள்... :)

  • கருத்துக்கள உறவுகள்

கிராமத்து வழக்கில் சம்பவத்தை கதையாகக் காட்டியிருகிரீர்கள்

முயற்சிக்கு பாராட்டுக்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கதை பரவாயில்லை! ஏதாவது ஒரு சமூகம் சார்ந்த பிரச்சனையை உங்கள் கதைகளில் குறிப்பிடுகிறீர்கள்! :)

நன்றிகள் சுவி...சும்மா அப்படி இப்படி எடுத்து விடுகிறது... :D

புத்தன் அருமையாக இருக்கிறது. உங்கள் படைப்புகள் அலட்டலாக இல்லாமல் அளவாக நச்சென்று இருக்கிறது. ஏற்கனவே பல சம்பவங்களைக் கதைவடிவத்தில் எழுதியவர். இலாவகமான ஓட்டம் படித்துவிட்டு பதிவிடாமல் போக மனம்வரவில்லை. வாழ்த்துக்கள்.

நன்றிகள் வல்வை சகாரா....படித்து கருத்து சொன்னமைக்கு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பொதுவாக சின்ன வயதில் பாடசாலை காலத்தில் இப்படி குழப்படிகள் செய்பவர்கள் வளர்ந்தவுடன் அதற்கு முற்றிலும் வேறு விதமாக நல்ல விதத்தில் இருப்பார்கள். ஆனால் அமசடக்காக ஸ்கூல் நாள்களில் இருந்து, நல்ல பெயர் வாங்கினவர்கள் அநேகம் பேர் பிறகு பெரிய எம்டன் வேலைகள் செய்வார்கள்... :)

நன்றிகள் நிழலி ,ஒம் நீங்கள் சொன்ன மாதிரியான ஆட்களும் இருக்கினம்,நான் சொன்ன மாதிரியான ஆட்களும் இருக்கினம்......நான் கவனித்ததில் காதலிச்சு கலியாணம் பண்ணினவர்கள் பிறகும் வேறு பெண்களை சைட் அடித்துகொண்டிருப்பார்கள் , விவாகரத்து செய்து வேறு பெண்ணை திருமணமும் செய்திருக்கிறார்கள்.... :D

கிராமத்து வழக்கில் சம்பவத்தை கதையாகக் காட்டியிருகிரீர்கள்

முயற்சிக்கு பாராட்டுக்கள்.

நன்றிகள் நிலாமதி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஏனெனில் இந்த லேபெளிங் முடில்லாதாது..இப்ப இந்த தமிழரை மார்க்கம் பகுதியை செயன்தவர் என்றால்..பிறகு மார்கத்தில் உள்ளவர்கள் வருவார்கள்...இவை யாழ்ப்பாணத்து ஆக்கள் என்று ...பிறகு யாழ்பாணத்து ஆக்கள் வருவினம்..இவர் இந்த பள்ளிகூடத்தை சேர்ந்தவர் என்று..பிறகு அந்த பள்ளிக்கூடத்தை சேர்ந்தவை வருவினம் ...............................

மீண்டும் நன்றிகள் ..நிச்சயமாக இந்த லெபிளிங் முடிவில்லாதது தான்,புலி எதிர்ப்பாளர்கள் அநேகர் புலிகளால் பாதிக்க பட்டவர்கள்தான் .புலியை பழிவாங்குவதாக எண்ணிக்கொண்டு ஒரு இனத்தை அழிக்க முற்படுவது என்பது ஏற்று கொள்ள முடியாதுதானே.

அடுத்த கிறுக்களுக்கு லேபிளிங் என தலையங்கம் போடலாம் என நினைக்கிறேன்.... :D:D

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி புத்தன் தங்களது நேரத்திற்கும் கதைக்கும்.

எம்முள் உள்ள சில உறுத்துதல்களே இது போன்ற கதைகளுக்கு உந்து சக்திகள். இதிலும் அதுவே தங்களை எழுதத்தூண்டியதாக உணர்கின்றேன். தொடரட்டும் தங்கள் எழுத்து (கிறுக்கல்).

  • 3 months later...
  • கருத்துக்கள உறவுகள்

சிட்னியில் நடந்த சம்பவத்தை வைத்து அழகாக படைத்திருக்கிறீர்கள் புத்தன்.

சிலதுகளுக்கு வயது போனாலும் , பதின்ம வயசுக் குருகுறுப்புப் போகுதில்லை.

,புலி எதிர்ப்பாளர்கள் அநேகர் புலிகளால் பாதிக்க பட்டவர்கள்தான் .புலியை பழிவாங்குவதாக எண்ணிக்கொண்டு ஒரு இனத்தை அழிக்க முற்படுவது என்பது ஏற்று கொள்ள முடியாதுதானே.

உண்மை புத்தன் இதை எத்தனைபேர் உணர்கிறார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

புத்தன், இந்த அங்கிள் இன்னும் உள்ளே தானே இருக்கின்றார்?

சென்ட்ரல் ஸ்டேஷன் பக்கம், கொஞ்சம் நம்ம வயசான பெண்களைக் கூட்டிக் கொண்டு போக வேண்டிய வேலை ஒன்று இருக்கு!

அது தான் கேட்டனான்!!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிட்னியில் நடந்த சம்பவத்தை வைத்து அழகாக படைத்திருக்கிறீர்கள் புத்தன்.

நன்றிகள் அப்பு, அதுசரி நீங்கள் ஏன் உப்படி கீழ குந்தி கொண்டிருக்கிறீயள்?ஏதாவது தெரியு........ :D:D

சிலதுகளுக்கு வயது போனாலும் , பதின்ம வயசுக் குருகுறுப்புப் போகுதில்லை.

நன்றிகள் ,யாருடைய வயசைப்பற்றி சொல்லுறீயள்,கதாநாயகனின் வயசோ ,அல்லது கிறுக்கினவரின் வயசைப்பற்றியோ?[

உண்மை புத்தன் இதை எத்தனைபேர் உணர்கிறார்கள்

நன்றிகள் காரணிகள்

புத்தன், இந்த அங்கிள் இன்னும் உள்ளே தானே இருக்கின்றார்?

சென்ட்ரல் ஸ்டேஷன் பக்கம், கொஞ்சம் நம்ம வயசான பெண்களைக் கூட்டிக் கொண்டு போக வேண்டிய வேலை ஒன்று இருக்கு!

அது தான் கேட்டனான்!!!

அங்கிள் வெளியில்தான் இருக்கிறார் ,ஆனால் அவர் கமராவை கையில் எடுத்தால் பொலிஸ் திரும்பி உள்ளவைச்சுப்போடும்....ஆகவே அவர் இப்ப கமராப்பக்கம் பார்ப்பதில்லையாம்... சொந்த கண்ணால் மட்டும் ரசிக்கிறராம்.....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.