Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொஞ்சம்.. கொஞ்சமாக.. எப்படி கிட்ட வந்தார்கள்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சம்.. கொஞ்சமாக.. எப்படி கிட்ட வந்தார்கள்?

நெடியவன் விசாரணை: மர்மக் கதை போன்ற உளவுத்துறை பின்னணி!

வெளிநாடுகளில் விடுதலைப்புலிகள் அமைப்பின் தற்போதைய #1 தலைவராக ஊடகங்களில் வர்ணிக்கப்பட்டுவந்த நெடியவன், நோர்வேயில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார். நெடியவனின் இயற்பெயர் பேரின்பநாயகம் சிவபரன்.

நெடியவன் விசாரணை செய்யப்பட்டுள்ள விபரத்தை நோர்வேயின் தொலைக்காட்சி சேவையான TV-2 இன்று காலை உறுதிப்படுத்தியிருக்கின்றது. நோர்வேயில் வைத்து விசாரிக்கப்பட்டாலும், நெதர்லாந்து உளவுப் பிரிவினரின் வேண்டுகோளின் பேரிலேயே நெடியவன் விசாரிக்கப்பட்டுள்ளார். நோர்வே பொலீஸ் அதற்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளது.

விடுதலைப்புலிகள் அமைப்புக்கு மில்லியன் கணக்கிலான யூரோ பணப்பரிவர்த்தனை செய்யப்பட்டது தொடர்பாகவே இவர் விசாரிக்கப்பட்டதாகத் தெரியவருகின்றது. இந்தப் பண விவகாரம் தொடர்பாக சிலர் ஏற்கனவே நெதர்லாந்தில் கைது செய்யப்பட்டிருந்தனர். அதுபற்றிய முக்கிய வழக்கு ஒன்றும் நெதர்லாந்து நீதிமன்றத்தில் நடைபெறுகின்றது.

இந்த விவகாரம் முதலில் வெளியே தெரியவந்தது, கடந்த வருடம் (2010) ஏப்ரல் மாதத்தில்தான். அப்போதுதான் நெதர்லாந்தில் இதனுடன் தொடர்பான முதல் கைதுகள் இடம்பெற்றன. ஆனால் அதற்கு முன்னரே, பின்னணியில் பல காரியங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.

விறுவிறுப்பான மர்ம நாவல் போன்ற அந்த விபரங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்.

ஆரம்பத்தில் நெதர்லாந்து பொலீஸ்தான் இந்த விவகாரத்தைக் கையில் எடுத்திருந்தது.

நெதர்லாந்துப் பிரஜை ஒருவர், ரொத்தர்டாம் பொலீஸ் நிலையத்தில் ஒரு முறைப்பாடு செய்திருந்தார். குறிப்பிட்ட ஒரு நபர், தம்மை வற்புறுத்தி பண வசூல் செய்கின்றார் என்பதே அந்த முறைப்பாடு.

அடுத்த சில தினங்களில், இதேபோல வேறு சில முறைப்பாடுகளும் வெவ்வேறு பொலீஸ் நிலையங்களில் பதிவாகின. இந்தப் பதிவுகள் நெதர்லாந்தின் வெவ்வேறு நகரங்களிலும் பதிவாகியிருந்தன. இந்தப் பதிவுகள் நெதர்லாந்து பொலீஸ் இலாகாவுக்கு ‘தலைக்குள் மணியடிக்க’ வைத்தது!

இது ஒரு தனிப்பட்ட கொடுக்கல்-வாங்கல் அல்ல, ஒருவிதமான பணச் சேகரிப்பு என்பது அவர்களுக்குப் புரிந்தது. அவர்கள் தமக்குக் கிடைத்திருந்த சில ‘பணச் சேகரிப்பு’ தொடர்பான விபரங்களை ஆராய்ந்தபோது, சில வில்லங்கமான தகவல்கள் கிடைத்தன.

இவை சாதாரண பணப்பரிமாற்றங்கள் அல்ல என்பதற்கான அறிகுறிகளும் தென்பட்டன.

ஆனால், நெதர்லாந்து பொலீஸ் யாரையும் கைது செய்யவில்லை. வற்புறுத்தி பணம் சேகரிப்பதாகக் குற்றம் சாட்டப்பட்ட நபரை, சுதந்திரமாக வெளியே திரிய விட்டிருந்தது நெதர்லாந்து பொலீஸ். ஆனால் அவரது நடமாட்டங்கள் ரகசியமாகக் கண்காணிக்கப்பட்டன. இது மாதக்கணக்கில் நடந்தது.

இந்தக் கண்காணிப்பு ஒருபக்கமாக நடந்து கொண்டிருக்க, தமது விசாரணையை ரகசியமாக விஸ்தரித்தது நெதர்லாந்து பொலீஸ். அந்த விசாரணைகளில், பணச் சேகரிப்பு நடைபெறுவது உறுதியாகியது. இந்தப் பணம் போய்ச் சேர்ந்த இடம், நெதர்லாந்துக்கு வெளியே, விடுதலைப்புலிகள் அமைப்பின் அலுவலகம் ஒன்றுக்கு என்ற விபரமும் கிடைத்தது.

விடுதலைப்புலிகள் அமைப்பு, ஐரோப்பிய ஒன்றியத்தினால் 2006ம் ஆண்டே பயங்கரவாத அமைப்பாக பட்டியலிடப்பட்டு, தடைசெய்யப்பட்டிருந்தது. நெதர்லாந்து, ஐரோப்பிய ஒன்றியத்தின் அங்கத்துவ நாடுகளில் ஒன்று. இதனால், இந்தப் பணப் பரிமாற்றங்கள், தடைசெய்யப்பட்ட அமைப்பு ஒன்றுக்கான ‘நிதி சேகரிப்பு’ என்ற வகைக்குள் வந்தது.

விஷயம் ‘பெரியது’ என்று தெரிய வந்ததும் நெதர்லாந்து பொலீஸ் இலாகா, இந்த விவகாரம் தமது சக்திக்கு அப்பாற்பட்டது என்பதை உணர்ந்து கொண்டது. அதையடுத்து தாம் சேகரித்த தகவல்கள் அனைத்தையும் நெதர்லாந்து உளவுப்பிரிவு ஒன்றிடம் ஒப்படைத்தது பொலீஸ் இலாகா.

மற்றைய நாடுகளைப் போலவே, நெதர்லாந்திலும் ஒன்றுக்கு மேற்பட்ட உளவுப்பிரிவுகள் உள்ளன. இவற்றில் நெதர்லாந்து தேசிய பாதுகாப்புக்குப் பொறுப்பான உளவுப் பிரிவின் கைகளிலேயே இந்த விபரங்கள் போய்ச் சேர்ந்தன. டச் மொழியில் Algemene Inlichtingen- en Veiligheidsdienst (AIVD) என்று அழைக்கப்படும் இந்த உளவுப்பிரிவின் தலைமையகம், Zoetermeer என்ற இடத்தில் உள்ளது.

AIVD, தமது பாணியில் மேலதிக விபரங்களைச் சேகரிக்கத் தொடங்கியது. நெதர்லாந்திலிருந்த சில தொலைபேசி இலக்கங்கள் அவர்களது கண்காணிப்புக்குள் வந்தன. அந்தத் தொலைபேசி இலக்கங்களுக்கு வந்த சில அழைப்புகள் அவர்களை ஆச்சரியப்பட வைத்தன.

சில வெளிநாடுகளில் இருந்து வந்த தொலைபேசி அழைப்புகளில், நெதர்லாந்தில் நடைபெறும் பணப் பரிமாற்றங்கள் பற்றி அவ்வளவாக பேசப்படவில்லை. ஆனால், அந்தந்த வெளிநாடுகளில் நடைபெற்ற பணப்பரிமாற்றங்கள் பற்றிய கணக்குகள், நெதர்லாந்து தொலைபேசி இலக்கத்துக்கு அறிவிக்கப்பட்டுக் கொண்டிருந்தன.

இது AIVDக்கு முதலில் ஆச்சரியத்தை ஏற்படுத்தினாலும், போகப்போக, வெளிநாட்டுப் பணச் சேகரிப்புக் கணக்குகளும் நெதர்லாந்திலுள்ள ஒரு நபருக்குத் தெரிவிக்கப்படுகின்றது என்று புரிந்து போனது. அந்த நபர் சர்வதேச அளவில் பணச்சேகரிப்புக் கணக்குகளைக் கையாளும் நபராக இருக்கலாம் எனவும் ஊகிக்கப்பட்டது.

இது நடைபெற்றுக்கொண்டு இருக்கையில், வெளிநாடுகளில் இருந்து பணம் பற்றிய கணக்குகள் மாத்திரமே நெதர்லாந்துக்குள் வருகின்றன, ஆனால், பணம் வருவதில்லை என்பது கவனிக்கப்பட்டது. மாறாக, நெதர்லாந்தில் சேகரிக்கப்பட்ட பணத்தில் ஒரு பகுதி, நெதர்லாந்துக்கு வெளியே செல்வது தெரியவந்தது.

இதிலிருந்து, பணம் கணக்குப் பார்க்கப்படும் இடம்தான் நெதர்லாந்து என்றும், பணம் போய்ச்சேரும் இடம் நெதர்லாந்துக்கு வெளியே இருக்கிறது என்றும் ஊகித்தது உளவுத்துறை. அதையடுத்து, சில வெளிநாட்டு உளவுத்துறைகளிடமிருந்தும் இந்தப் பணப்பரிமாற்றங்கள் பற்றிய தகவல்களைப் பெற்றுக்கொண்டது AIVD.

இந்த வகையில் AIVD தொடர்புகொண்ட வெளிநாட்டு உளவுத்துறைகளில் ஒன்று, ஜேர்மன் உளவுத்துறையான Bundesnachrichtendienst (BND)

அவர்களும் கிட்டத்தட்ட இதேபோன்ற பணப்பரிமாற்றங்கள் தொடர்பான தகவல் சேகரிப்பில் இருந்தது அப்போது தெரியவந்தது. நெதர்லாந்து உளவுத்துறையும், ஜேர்மன் உளவுத்துறையும் தத்தமது கையிலுள்ள தகவல்களைப் பரிமாற்றம் செய்துகொண்டனர்.

அப்போதுதான், முதன்முதலில் இந்த விவகாரத்துக்கு ஒரு முழு உருவம் கிடைக்கத் தொடங்கியது.

பணப்பரிமாற்றத்தின் ஜேர்மனித் தொடர்புகள் பற்றிய விபரங்கள் கிடைத்தன. நெதர்லாந்து உளவுத்துறை சம்மந்தப்பட்ட ஆட்களை வெளியே சுதந்திரமாக உலாவவிட்டு விபரங்களைச் சேகரித்ததுபோலச் செயற்படவில்லை ஜேர்மன் உளவுத்துறை.

அவர்கள் அதிரடி நடவடிக்கையில் இறங்கிவிட்டனர்.

கடந்த வருடம் மார்ச் மாத முதல் வாரத்தில், ஜேர்மன் உளவுப்பிரிவினர் ஜேர்மனியிலுள்ள மொத்தம் 8 இடங்களை ஒரேநேரத்தில் சுற்றி வளைத்தனர். இந்த 8 இடங்களில், தமிழர் தொடர்பு மையம் ஒன்றின் அலுவலகமும் அடக்கம்.

இந்தச் சுற்றிவளைப்பில் ஜேர்மன் பிரஜாவுரிமை பெற்றவர்கள் உட்பட, 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஜேர்மன் கைதுகளுடன், நெதர்லாந்தில் விஷயங்கள் கொஞ்சம் குழம்பிப் போயின. தங்களால் கண்காணிக்கப்பட்டுக் கொண்டிருந்த ஆட்கள் உடனடியாகவே வெளித் தொடர்புகள் அனைத்தையும் துண்டித்துக் கொண்டதை AIVD கவனித்தது. இனியும் இவர்களை வெளியே விட்டு வைத்திருப்பதால், மேலதிக தகவல்கள் கிடைக்கப் போவதில்லை என்பதும் புரிந்து போனது.

இதன் பின்னரே, AIVD தனது வேட்டையைத் தொடங்கியது.

ஏப்ரல் மாதம், நான்காவது வாரம். நெதர்லாந்து உளவுத்துறை ஒரே நேரத்தில் மொத்தம் 16 இடங்களைச் சுற்றிவளைத்தது. இதில் 7 பேர் கைதாகினர். கம்யூட்டர் ஹார்ட் டிஸ்க்கள், டி.வி.டிக்கள், போட்டோக்கள் உட்பட பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. ரொக்கப் பணமாக 40,000 யூரோக்களும் எடுக்கப்பட்டன.

கைது செய்யப்பட்டவர்களில், விடுதலைப்புலிகளின் வெளிநாட்டு பிரதான கணக்காளரும், நெதர்லாந்துத் தலைவரும் அடக்கம் என்று கூறப்பட்டது. தமிழர் புனர்வாழ்வுக் கழகம், தமிழ் இளையோர் அமைப்பு, தமிழ் மகளிர் அமைப்பு, தமிழ் கலை பண்பாட்டுக் கழகம் ஆகியவற்றின் நெதர்லாந்துத் தலைவர்களும் கைது செய்யப்பட்டதாக பி.பி.சி. செய்தி வெளியிட்டது.

இந்தக் கட்டத்தில், விவகாரம் நெதர்லாந்து நீதிமன்றத்துக்குச் சென்றது. தடைசெய்யப்பட்ட அமைப்புக்கு நிதி சேகரித்தல் தொடர்பான வழக்கு பதிவாகியது.

வழக்கு ஒருபுறத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்க, AIVD இந்த விவகாரத்தில் மேலதிக உளவுத் தகவல்களைச் சேகரித்துக் கொண்டிருந்தது. காரணம், இந்தப் பணப்பரிமாற்றங்கள், ஒரு சர்வதேச வலையமைப்பாகச் செயற்பட்ட தகவல்கள் அவர்களிடம் கிடைத்திருந்தன.

அதேநேரத்தில் ஜேர்மனியில் BND, தமது விசாரணை வட்டத்துக்குள் இருந்தவர்களை விசாரித்து, இந்த வலையமைப்பின் பரிமாணங்களைப் புரிந்துகொள்ள முயன்றுகொண்டிருந்தது..

அவர்களது விசாரணையில் வித்தியாசமான தகவல் ஒன்று கிடைத்தது. அது என்னவென்றால், ஜேர்மனியில் பணச் சேகரிப்புடன் தொடர்புடைய ஒருவர், யுத்தம் முடிவடைந்தபின் தம்வசமிருந்த பணத்துடன் ஜேர்மனியைவிட்டு வெளியேறிவிட்டார் என்பது.

அவருக்கு வலைவிரித்த ஜேர்மன் உளவுத்துறை, அவர் ஆபிரிக்காவில் மடகாஸ்கரில் தன்னிடமுள்ள பணத்துடன் செட்டிலாகிவிட்டதைத் தெரிந்து கொண்டது. BND கோரியதையடுத்து அந்த நபர் மடகாஸ்காரிலிருந்து நாடு கடத்தப்பட்டார்.

ஜேர்மன் பிரஜையான அவர் டியூசல்டோஃப் விமான நிலையத்தில் வந்திறங்கியபோது, அவரைக் கைது செய்து தமது கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக் கொண்டது BND.

நெதர்லாந்து உளவுத்துறையிடம் இந்த சர்வதேச வலையமைப்பு தொடர்பாக மேலதிக தகவல்கள் கிடைக்கத் தொடங்கின.

பிரிட்டன், சுவிஸ், கனடா, அமெரிக்கா, பிரான்ஸ், நோர்வே உட்பட சில நாடுகளில் இந்த வலையமைப்பில் இணைக்கப்பட்டிருந்த தகவல்கள் அவர்களிடம் இருந்தன. அந்த நாடுகளின் உளவுத் துறைகளின் ஒத்துழைப்பு கோரப்பட்டது. AIVDயின் அதிகாரிகள் இந்த நாடுகளுக்கு நேரடியாக அனுப்பி வைக்கப்பட்டனர்.

சேகரிக்கப்பட்ட பணத்துக்கு என்ன ஆயிற்று என்று விசாரித்தபோது, இவர்களால் விசாரிக்கப்பட்ட அனைவருமே ஒரே திசையை நோக்கித்தான் கையைக் காட்டியிருக்கிறார்கள். “All roads lead to Rome” என்று சொல்வதைப்போல, எல்லாத் தகவல்களும் நோர்வேயில் வசிக்கும் நெடியவன் என்ற நபரை நோக்கியே இருந்திருக்கின்றன.

அதையடுத்தே நெடியவனை விசாரிக்கும் முடிவு நெதர்லாந்தில் எடுக்கப்பட்டது. நோர்வேயின் உதவியும் கோரப்பட்டது. சட்டரீதியான இந்த விவகாரத்தில் நெதர்லாந்துக்கு உதவ, நோர்வேக்கு எந்தத் தயக்கமும் இருக்கவில்லை.

கடந்த புதன்கிழமை (மே 18ம் தேதி) உலகின் வெவ்வேறு நகரங்களிலும் முள்ளிவாய்க்காலில் யுத்தம் முடிவுக்கு வந்தது தொடர்பான நிகழ்வுகள் நடைபெற்றன. இவற்றில் பல நெடியவனின் தலைமையிலான குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டவை என்று கூறப்பட்டது.

இந்த நிகழ்வுகள் நடைபெற்ற அதே மே 18ம் தேதி, நெடியவன் ஒஸ்லோவில் விசாரணை செய்யப்பட்டுக் கொண்டிருந்தார்!

நெதர்லாந்திலிருந்து இந்த விசாரணைக்கென்று விசேடமாக ஒரு நீதிபதியும், ஆறு டிஃபென்ஸ் அட்டேர்னிகளும் நோர்வே சென்றிருந்தனர். நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவிலுள்ள மாவட்ட நீதிமன்றத்தில், மூடிய அறைக்குள் நெடியவன் மீதான விசாரணைகள் நடைபெற்றன. விசாரணைகள் வீடியோவில் படம்பிடிக்கப்பட்டன.

விசாரணையின்பின் என்ன நடக்கும்? தொடர்ந்து தடுத்து வைக்கப்படுவாரா? விசாரணையில் என்ன விபரங்கள் வெளிவரும்? வேறு யாராவது, வேறு நாடுகளில் வைத்து விசாரிக்கப்படுவார்களா?

இவைதான் இன்று மில்லியன் டொலர் கேள்விகள். சும்மா பேச்சுக்குச் சொல்லவில்லை; உண்மையிலேயே ‘மில்லியன் டொலர்’ கேள்விகள்தான். காரணம், இந்த வழக்கே பல மில்லியன் டொலர் பணத்தைப் பற்றியதுதானே!

-விறுவிறுப்பு.காம் இணையத்துக்காக, ரிஷி.

புலம்பெயர் தமிழர்களில் ஒரு பகுதியினர்தான் அன்றும் இன்றும் 'தமிழினம் அழிந்தாலும் பரவாயில்லை கடைசிப்புலியும்' அழிய வேண்டும் என 'சேவைகள்' செய்பவர்கள்.

தமது அநியாயங்களை நியாப்படுத்த தமிழர் தரப்பு விட்ட சில தவறுகளையும் சாதுரியமாக மேற்கோள் காட்டிவிடுவார்கள். அதற்குள் சிங்களம் செய்த கோடி பாதக செயல்களுக்குள் சாவகாசமாக குளிர் காய்ந்துவிடுவார்கள் இந்த அன்பர்கள்.

ஓஓஓஓ.... இப்போ, இந்த ரிஷி என்பவர் ... விறுவிறுப்பாக கேபியுடன் அல்லவா கூட்டுப் போட்டிருக்கிறார்!!!! ... இப்படி இனி கனக்க விடுவார் ... :lol:

நெடியவன் வீடு சுற்றிவளைக்கப்பட்டதா?

பொய் செய்தி பரப்பும் கொழும்பு ஊடகங்களும் ஒத்தூதும் புலம்பெயர் ஊடகங்களும்!

'நோர்வேயில் விடுதலைப் புலிகளின் புதிய தலைவராக செயற்பட்டு வந்த நெடியவன் கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடைசட்டத்தின் கீழ் ஒஸ்லோ நீதிமன்றில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவரின் வீடு ஹொலன்ட் நாட்டுப் பொலிசாரால் சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் மேற்கொள்ளப்பட்டதாகவும்' கொழும்பு ஊடகங்கள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பான செய்தியை வெளியிட்டுள்ளன.

புலம்பெயர் தமிழ் ஊடகங்கள் பல இச்செய்தி தொடர்பாக எவ்வித விசாரிப்புகளையும் மேற்கொள்ளாது கொழும்பு ஊடகங்கள் வெளியிட்ட அதே பொய் செய்தியை வரிக்குவரி வெளியிட்டு பரபரப்பைக் கிளப்பியுள்ளன.

இது தொடர்பாக நாம் மேற்கொண்ட விசாரணைகளின்படி, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஹொலன்ட் நாட்டில் கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்க பணியாளர்கள் இருவர் கொடுத்த தகவல்களின் அடிப்படையில் பணச் சேகரிப்பு தொடர்பாக, நீதிமன்ற விசாரணையை மேற்கொள்ளும் நோக்குடன் ஹொலன்ட் நாட்டைச் சேர்ந்த நீதிபதி ஒருவருடன் ஐந்து அரச தரப்பு வழக்கறிஞர்களும் நோர்வேக்கு வருதை தந்து, நோர்வே பொலிசாரின் உதவியுடன் நெடியவனிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

நோர்வேயின் தலைநகரான ஒஸ்லோவிற்கு 600 கிலோ மீற்றர் தொலைவிலுள்ள மேற்குப்பகுதி மாநிலத்தில் வசித்துவரும் நெடியவன் மீதான இவ் விசாரணைகள் ஒஸ்லோவிலுள்ள நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்றுள்ளன. இவ்விசாரணைக்கென விடுதலைப் புலிகள் இயக்க அனைத்துலக செயலகத்தின் உதவிப் பொறுப்பாளராக பொறுப்பு வகித்த நெடியவனைக் கைது செய்வதற்கான ஆணை எதனையும் நோர்வே பொலிசார் விடுக்கவில்லை.

ஹொலன்ட் நாட்டு பணியாளர்கள் கொடுத்த தகவல்கள் தொடர்பாக சட்டரீதியான விசாரணைகளை மேற்கொள்ளும் நோக்குடனேயே ஹொலன்ட் நாட்டு நீதிபதி அரச தரப்பு வழக்கறிஞர்கள் துணையுடன் இவ்விசாரணைகளை மேற்கொள்ள நோர்வே வந்திருந்தார். நெடியவனை விசாரணைக்கு வரும்படி அழைப்பு அனுப்பப்பட்டு நீதிமன்ற நடைமுறைப்படி இவ்விசாரணைகள் இடம்பெற்றுள்ளன. ஐரோப்பிய நாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்பு காரணமாக நோர்வே பொலிசாரும் இவ் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கினர்.

இது இவ்வாறிருக்க, நெடியவனின் வீடு ஹொலன்ட் நாட்டு பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டதுடன் சுற்றிவளைப்பு தேடுதல் நடத்தப்பட்டதாக கொழும்பு ஊடகங்களும் புலம்பெயர் ஊடகங்களும் பரபரப்பு செய்திகளை வெளியிட்டுள்ளன. ஒரு நாட்டின் பொலிசார் இன்னொரு நாட்டில் நுழைந்து சுற்றிவளைக்க முடியாதென்ற அடிப்படைப் புரிதலின்றி, சிறிலங்கா பொலிசார் யாழ்ப்பாணத்திலோ அன்றி கொழும்பிலோ சுற்றுவளைத்து தேடுதல் மேற்கொள்ளும் பாணியில் இச்செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

புலம்பெயர் ஊடகங்கள், ஐரோப்பிய நாடுகளில் நடக்கும் இதுபோன்ற செய்திகளின் உண்மைத் தன்மையைக்கூட சரியாக விசாரித்து செய்திகளை வெளியிடாது வெறும் பரபரப்புக்காக கொழும்புச் செய்திகளை வெளியிடுவது மிகவும் கவலைக்குரியது.

http://ponguthamil.com/news/contentnews.asp?sectionid=1&contentid={311D7904-ECB7-4482-9CF5-A41AD2BF8098}

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

இனப்படுகொலை நாட்களின் உந்துசக்தியை சிதைக்க திசைதிருப்பும் ஒரு பிரச்சாரமாக இருக்குமோ? :rolleyes:

இச்செய்தி உண்மையாகவே இருந்தாலும் கொஞ்சம் கொஞ்சமாக எப்படி கிட்ட வந்திருப்பார்கள்? confused0006.gif

காட்டிக்குடுக்க நம்மாட்களே இருக்கிறச்சே இதெல்லாம் சாதாரணம்ணா..! :rolleyes:

யாழில் மட்டுவாக இணைந்த பின் அதி உச்ச பட்ச வெறுப்புடன் மட்டுறுத்தும் திரிகள் என்றால், அது ரிஷியின் குப்பையை கொட்டும் திரிகள் தான்.

(இது எனது தனிப்பட்ட கருத்து; யாழின் கருத்தல்ல)

Edited by நிழலி

  • கருத்துக்கள உறவுகள்

இதைப்பற்றி இப்போதைக்கு பேசுவது என்னைப்பொறுத்தவரையில் தேவையில்லாததொன்று

யாழில் மட்டுவாக இணைந்த பின் அதி உச்ச பட்ச வெறுப்புடன் மட்டுறுத்தும் திரிகள் என்றால், அது ரிஷியின் குப்பையை கொட்டும் திரிகள் தான்.

(இது எனது தனிப்பட்ட கருத்து; யாழின் கருத்தல்ல)

தமிழ்வின் போன்ற இணையத் தளச் செய்திகளிற்கு இருக்கும் தடையைப் போல

வன்னியிலை கிபிரை இறக்கிய வித்துவானின் பரபரப்பிற்கும் தடை போடலாமே???

இப்படியான விடயங்களை பேசக்கூடாது இல்லை தடை செய்தல் வேண்டும் என்பதை விட,

அப்படியான விடயங்களை எமது பக்க உண்மைகளை / நியாயங்களை எழுதக்கூடிய / விவாதிக்ககூடிய ஆற்றல்களை வெளிப்படுத்துவதும் / வளர்ப்பதுவுமே உணமையான பயனை தரும்.

  • கருத்துக்கள உறவுகள்

ரிஜியின் கட்டுரைகளை யாழில் இணைப்பதைத் தடை செய்ய இயலாதா நிழலி..

Edited by தூயவன்

ஓஓஓஓ.... இப்போ, இந்த ரிஷி என்பவர் ... விறுவிறுப்பாக கேபியுடன் அல்லவா கூட்டுப் போட்டிருக்கிறார்!!!! ... இப்படி இனி கனக்க விடுவார் ... :lol:

விறு விறுப்பு, பரபரப்பு...இந்த பேர்களைப்பார்த்தாலே ஒரு மார்க்கமாகத்தான் இருக்கு... இவர்களை நேரில் சந்தித்து மாலை போட விருப்பம்

இதைப் பற்றி தனிப்பட்ட தகவல்கள் கொஞ்சம் தெரியும் ஆனால் இவைகளை பேசுவதால் என்னத்தை காணப்போகிறோம்?

சில நேரம் நிர்மலன் போன்றோருக்கு மன ஆறுதல் கிடைக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு உன்னத இயக்கத்துகாக பாடுபட்ட ஒருவர்,

அது கே.பி, அல்லது நெடியவனாக இருந்தாலும். அந்நியரால் கைது செய்யப்படுவது கவலைக்குரிய விடயம்.

ஒரு உன்னத இயக்கத்துகாக பாடுபட்ட ஒருவர்,

அது கே.பி, அல்லது நெடியவனாக இருந்தாலும். அந்நியரால் கைது செய்யப்படுவது கவலைக்குரிய விடயம்.

இதுதான் எனது கருத்தும்.

ரிஜியின் கட்டுரைகளை யாழில் இணைப்பதைத் தடை செய்ய இயலாதா நிழலி..

பரபரப்பு விறுவிறுப்பு கட்டுரைகளை வாசித்து முழுமையாக நம்புவதற்கு எம் மத்தியில் ஒரு கூட்டமே உள்ளது.

இவ்வாறான கட்டுரைகளுக்கு எதிர்க் கருத்துக்களை முன்வைப்பதன் மூலம் ரிஷி போன்ற கட்டுரை வியாபாரிகளை அம்பலப் படுத்த கருத்துக்களத்தைப் பயன்படுத்தலாம் என்பது எனது அபிப்பிராயம்.

  • கருத்துக்கள உறவுகள்

எழுதியிருக்கும் விதமே விடுதலை வியாபாரியை அடையாளப்படுத்தவில்லையா?

சிரிபிசியில் வானமே எல்லையில் நன்றாகக் கதை சொல்லும் பாணியைக் கற்றவர் கால ஓட்டத்தில் பரபரப்பாக மாறி இப்போது விறுவிறுப்பாக ஓடுகிறார் போல் இருக்கிறது.

எழுதுகோலைக் கொண்டு விடுதலை வியாபாரி ஆவது எப்படி என்று எழுதினால் எங்களுக்கும் உபயோகமாக இருக்கும்

தமிழ்வின் போன்ற இணையத் தளச் செய்திகளிற்கு இருக்கும் தடையைப் போல

வன்னியிலை கிபிரை இறக்கிய வித்துவானின் பரபரப்பிற்கும் தடை போடலாமே???

பரபரப்பை உதாரணம் காட்டியே எத்தனை கதைவிட்டார்கள்.நட்டுவக்காலி தாக்குதல் தான் அதிஉச்சம்.

எத்தனை அவர்களுடன் இருந்தவர்கள் இப்போ அரசுடன்? இப்பவும் கருத்துமட்டும் எழுதும் எங்களை துரோகிகள் என்றுகொண்டு/

  • கருத்துக்கள உறவுகள்

பரபரப்பு விறுவிறுப்புகொழும்புக்குப் போனவுடன் ரொம்பத்தான் சுறுசுறுப்பாக இயங்குவதாக தமிழனம் புறுபுறுக்கிறது.எல்லாமே பணத்துக்குத் (எலும்புத் துண்டுக்கு)தாண்டா!!!!!!!

  • கருத்துக்கள உறவுகள்

நெடியவன் கைதுசெய்யப்பட்டதாகப் புரளி: விசாரணை நடைபெற்றதாகத் தகவல் .

.நோர்வேயில் வசித்துவரும் நெடியவன் கைதுசெய்யப்பட்டதாகவும், அவர் தடுப்புக்கவலில் உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. அவர் கைதுசெய்யப்படவில்லை என்றும், விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார் நம்பகரமான தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளது. நோர்வே நாட்டில், சிறுவர் பயிலும் பள்ளியில் வேலைசெய்துவரும் நெடியவனை புலிகளின் வெளிநாட்டுப் பிரிவின் தலைவர் என்றும், அவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் புதிய தலைவர் என்றும் மிகைப்படுத்தப்பட்ட செய்திகள்

கடந்தகாலங்களில் திட்டமிடப்பட்டு t;வெளியிடப்பட்டு வந்தது. அவரைக் கைதுசெய்யவேண்டும் என்றும், இலங்கைக்கு நாடு கடத்தவேண்டும் என இலங்கை அரசு கோரிவந்தது யாவரும் அறிந்ததே.

இந் நிலையில் ஹொலன் அரசாங்கம் நோர்வே நாட்டில் நெடியவனுக்கு எதிராக ஒரு வழக்கை strong>நடத்திவருகிறது. அந் நாட்டு நீதிமன்றம் கேட்டுகொண்டதற்கு அமைவாக, ஹொலன் நாட்டுப் பொலிசார், நெடியவன் வீட்டிற்குச் சென்று அவரை விசாரித்துள்ளனர். வாக்கு மூலம் பெறுவதற்காக அவர் ஓசிலோ நகருக்கு கொண்டுசெல்லப்பட்டு, பின்னர் உடனடியாக வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளார் என அதிர்வு இணையம் அறிகிறது. இதனிடையே பயங்கரவாத தடைசட்டத்தின் கீழ் அவர் கைதாகியுள்ளதாக சில பொறுப்பற்ற ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளது.

வெளிநாடுகளில் செயல்படும் தமிழ் உணர்வாளர்களையும், விடுதலைப் புலிகளின் உறுப்பினர் மற்றும் ஆதரவாளர்களை இலங்கை அரசு தற்போது குறிவைத்து அவர்களை கைதுசெய்யும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இதன் ஒரு கட்டமாகவே, இந் நகர்வு ஹொலன் நாட்டினூடாக ஆரம்பமாகியுள்ளது. புலிகளுக்கு பணம் சேர்த்தார் என பிரித்தானியாவில், சாந்தன் என்பவர் கைதாகி பின்னர் அவர் குற்றங்களை நிரூபிக்கமுடியாத பிரித்தானிய அரசு அவரைப் பின்னர் விடுதலை செய்தது. அதுபோல யார் வேண்டுமானாலும் வழக்குத் தொடரலாம் , ஆனால் அவை தகுந்த ஆதாரங்களோடு நிரூபிக்கப்படவேண்டும். நெடியவன் நோர்வேயில் கைது, என்பது போன்ற தகவல்களைப் பிரசுரித்து, செயல்பாட்டாளர்களையும், புலிகள் ஆதரவாளர்களையும் முடக்க இலங்கை அரசு போடும் நாடகமே இவையாகும்.

இதற்கு முகம்கொடுக்கவும், புலிகள் இயக்கத்தை மேலும் பலப்படுத்தவும் புலம்பெயர் மக்கள் எப்போதுமே தயாராகவே உள்ளனர். தேசிய கொடியை தாங்கிய வண்ணம் பல்லாயிரக்கணக்கான மக்கள் மே 18 அணிவகுத்ததை உலகம் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறது. விடுதலைப் புலிகள் இலங்கையில் பின்னடைவைச் சந்தித்திருக்கலாம், ஆனால் புலம் பெயர் மக்கள் தமக்கு என்ன பிடிக்கும், தமது தலைவர் யார் என்பதனை தெள்ளத்தெளிவாக எடுத்துக்காட்டியுள்ளனர் என்பதனையும் நாம் மறந்துவிடக்கூடாது.

நிலவரம்

  • கருத்துக்கள உறவுகள்

:( நெடியவன் யார் ?

இனத்தின் உரிமைக்காகக்ப் போராடிய ஒரு இயக்கத்துக்காக தனது வாழ்நாளைச் செலவழித்தவர். அவரால் அனுப்பப்பட்ட பணம் மக்களால் இயக்கத்துக்காகக் கொடுக்கப்பட்டது. அவரின் சொந்தத் தேவைக்காக பணம் பாவிக்கப்பட்டதாக இதுவரை எந்தக் குற்றச் சாட்டுமில்லை. அவர் செய்த ஒரே தவறு எமக்கிடையே ஒற்றுமையையை ஏற்படுத்தத் தவறியதுதான்.

அவர் கைதில் நாம் சந்தோசப்படுகிறோமென்றால், அது எமதினத்திற்கு நாமே செய்யும் துரோகம்.

குழு ரீதியில் அவர் செயற்பட்ட விதம் எனக்குச் சரியாகத் தெரியவில்லை, அதேவேளை தனிப்பட்ட ரீதியில் அவர் செய்ததில் எனக்குத் தவறு இருப்பதாகத் தெரியவில்லை.

நெடியவன் - இன்னொரு போராளியின் கைது என்று கவலைப்படத்தான் வைக்கிறது !

ரிஷியை பிழை சொல்ல வேண்டாம். ரிசி ஒரு வியாபாரி. இந்த சாக்கடைகளின் செய்திகளுக்கு இவ்வளவு விளம்பரம் தேவையா? வியாபாரிகள் எந்தச் சூழ்நிலையையும் மூலதனமாக்கக் கூடியவர்கள்.

முன்பு சிறிலங்காவில் 'மித்திரன்' என்னும் ஊடகம் தலைப்புச் செய்திகளுக்காகவே மிகப் பிரபலம். விற்பனையும் அதிகம். உதாரணமாக

'ஹெமமாளினியிற்கு பூனாவில் சத்திர சிகிச்சை' (பூனா என்பது இந்திதிய நகர் ஒன்றின் பெயர்).

இதைபோலவே மே 2009 மட்டும் புலம்பெயர்ந்த ஆய்வாளர்கள் என்ற பெயரில் இராணுவ, அரசியல் ஆய்வுக் கட்டுரை (கற்பனையில்) எழுதி காசு பார்த்தார்கள். யாழில் இதனை சுட்டிக்காட்டியவர்களுக்கு (முக்கியமாக குறுக்காலபோவான்) துரோகிப் பட்டம்தான் கிடைத்தது.

இந்தச் சாக்கடைகளின் செய்திகளால் கவரப்படுமளவு புலம்பெயர்ந்த தமிழன் பலகீனமானவா?

  • கருத்துக்கள உறவுகள்

நிர்மலன்,தலைப்பை "கொஞ்சம் கொஞ்சமாக எப்படி வந்தது" என்று தலைப்பை போட்டிருக்க வேண்டும். :lol::lol::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பரபரப்பு விறுவிறுப்பு கட்டுரைகளை வாசித்து முழுமையாக நம்புவதற்கு எம் மத்தியில் ஒரு கூட்டமே உள்ளது.

இவ்வாறான கட்டுரைகளுக்கு எதிர்க் கருத்துக்களை முன்வைப்பதன் மூலம் ரிஷி போன்ற கட்டுரை வியாபாரிகளை அம்பலப் படுத்த கருத்துக்களத்தைப் பயன்படுத்தலாம் என்பது எனது அபிப்பிராயம்.

என்னுடைய கருத்தும் இதேதான். நான் இந்தப் பத்திரிக்கையை தூக்கி என்றிந்தது, பரபரப்பு புலிகளைத் தூக்கிப் பிடித்து எழுதிய காலத்திலேயேதான். காரணம்: நாம் ஒரு பொருளை வாங்கும் போது அந்தப் பொருளின் விற்பனையாளன் மானம் கெட்டதனமாய் பணப்பசி பிடித்த ஒருவனாய் இருந்தால் அந்த விற்பனைப் பொருளுக்கு மதிப்பு இருக்குமா? அப்படியேயே இவர் கட்டுரைகளில் இருக்கும் அளவுக்கதிகமான பூராயத்தனங்களால் வெறுப்படைந்தே தூக்கி எறிந்தேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பதிவிடும் போது பதிவரின் சுயமரியாதை 'காயப்பட்டிக் கொண்டிருக்கின்றது' என்ற நிலை இருக்கும் போது, அந்த வகைக்குரிய பதிவை எவரும் தொடர விரும்பமாட்டார்கள். கருத்தாளன் மீதான மதிப்பு குப்புறக் கிடந்தாலும் தன் கருத்து கொடி கட்டிப் பறக்க வேண்டும் என்று சாதாரணன் எவனும் விரும்பமாட்டான். ஆனால் எனக்கு நிர்மலனின் பதிவுகள் அப்படிக் கொடிகட்டிப் பறக்கவே ஆசைப்படுபவை போல் தெரிகின்றது.

களத்தின் கத்தரிப்பு பிரிவு எம்மில் எல்லாம் ஒரு சிறிய அளவில் தான் கைவைக்கின்றது. ஆனால் நிர்மலனின் பதிவுகளை ஒரு சிறிய அளவுதான் மிச்சம் வைக்கின்றது. இருந்தும் நிர்மலனின் பொறுமை கடல் போல் இருந்து பணிசெய்வதுதான் எமக்கு மிகப் பெரிய ஆச்சரியமாய் இருக்கின்றது!

Edited by தேவன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.