Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடலும் கடல்போல் மக்களும் அமைதிகாக்க மெழுகுவர்திகள் உருகுகின்றன....

Featured Replies

கடலும் கடல்போல் மக்களும் அமைதிகாக்க மெழுகுவர்திகள் உருகுகின்றன.

வீரத்தை குண்டுகள் துளைக்காது

வீரனை சரித்திரம் புதைக்காது

நாட்டை விரும்பிடும் நெஞ்சங்கள்

வாடகை மூச்சில் வாழாது

இறந்த உயிர்களோ கணக்கில்லை

இருமி சாவதில் சிறப்பில்லை

இன்னும் என்னடா விளையாட்டு

எதிரினர் மதிலில் கொடியேற்று

நிலத்தடியில் புதைந்திருக்கும்

பிணங்களுக்கும் மனம் துடிக்கும்

- கவிஞர் அறிவுமதி

261857_2224358894206_1404777150_32639228_553490_n.jpg

268863_2224359534222_1404777150_32639229_3682720_n.jpg

264996_2224360334242_1404777150_32639230_3966014_n.jpg

267857_2224360774253_1404777150_32639231_3604011_n.jpg

267545_2224361014259_1404777150_32639232_3935889_n.jpg

263098_2224361214264_1404777150_32639233_7352330_n.jpg

261974_2224357334167_1404777150_32639224_2975482_n.jpg

267988_2224357694176_1404777150_32639225_6626788_n.jpg

270904_2224358334192_1404777150_32639227_3722396_n.jpg

Edited by நெருப்பு நீலமேகம்

  • தொடங்கியவர்

268146_245526115462246_100000145796525_1128199_1116274_n.jpg

270396_245524842129040_100000145796525_1128148_2377751_n.jpg

Edited by நெருப்பு நீலமேகம்

  • தொடங்கியவர்
259930_245525745462283_100000145796525_1128180_3011349_n.jpg

Edited by நெருப்பு நீலமேகம்

  • தொடங்கியவர்
270563_214384831933718_100000866087131_539620_1982700_n.jpg
  • தொடங்கியவர்

270706_245522325462625_100000145796525_1128078_894946_n.jpg

269488_245522448795946_100000145796525_1128080_6464546_n.jpg

268828_245522618795929_100000145796525_1128082_5613240_n.jpg

264368_245522732129251_100000145796525_1128085_1516592_n.jpg

269433_245522868795904_100000145796525_1128089_7988735_n.jpg

265014_245522918795899_100000145796525_1128090_3112688_n.jpg

261908_245523035462554_100000145796525_1128092_2278807_n.jpg

263426_245523118795879_100000145796525_1128093_3660621_n.jpg

270094_245523272129197_100000145796525_1128098_4784264_n.jpg

  • தொடங்கியவர்

267921_245523975462460_100000145796525_1128116_7057483_n.jpg

263137_245524252129099_100000145796525_1128123_3364218_n.jpg

265110_245525828795608_100000145796525_1128184_2601422_n.jpg

267547_245526018795589_100000145796525_1128196_7008288_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி என் சொந்தங்களே. நாளை உதிக்கும் ஞாயிறு எமக்கானதாக இருக்குமென நம்பிக்கை பிறக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக உறவுகளுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்..!

மாண்ட வீரர் கனவு பலிக்கும்.. மகிழ்ச்சிக் கடலில் தமிழ்மண் குளிக்கும்..!

... நெஞ்சார்ந்த நன்றிகள் ...

  • கருத்துக்கள உறவுகள்

நம்பிக்கை பிறக்கிறது.நன்றி சொல்லி உங்களைப் பிரிக்க முடியாது.நாம் வெல்வோம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி தமிழ் உறவுகளே.

  • கருத்துக்கள உறவுகள்

மக்களின் உணர்ச்சிகளுக்கு எவரும் தடை போட முடியாது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு மட்டுமே.

இதையும் பார்த்திட்டு எதிரிகளுக்கு அடிவருடும் மாற்றுக் கருத்து மாயாவிகள்.. மாணிக்கங்கள்... பிணங்களை வைச்சு அரசியல் செய்யினம் விற்றுப் பிழைக்கினம் என்று கூவினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏதோ அவர்கள் பிணங்களையே காணாத அற்புத அரசியல் செய்த பேரறிஞர்கள் என்ற நினைப்பு.

இன்றைய பொழுதில் விழ்த்தப்பட்ட பிணங்களின் ஆன்ம இலட்சியத்தை ஒன்றுதிரட்டிய மக்களின் பலத்தால் அடைவது எப்படி என்று தான் சிந்திக்க வேண்டி உள்ளதே அன்றி எமக்கு தேவை மாற்றுக் கருத்துமல்ல.. மண்ணாங்கட்டியும் அல்ல.

உறவுகளுக்கு நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

வஞ்சகர்கள் சூழ்ச்சிகளால்,

வீழ்ந்து விட்ட எங்கள் இனம்,

அஞ்சாது மீண்டும் எழுந்து,

நெஞ்சு நிமிர்த்தி நிற்கின்றது!

குஞ்சு குருமான்கள் கூடக்

குந்தியிருப்பதைப் பார்க்கக்

கண்கள் பனிக்கின்றன!!!

நன்றிகள் தொப்புள் கோடி உறவுகளுக்கு!!!

3 மணி நேரமாக கடும் மழை பெய்தபோதும் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு தமது உணர்வுகளை வெளிப்படுத்தியதாக நேரில் சென்றவர்கள் கூறுகிறார்கள். நிகழ்ச்சி தொடங்குவதற்கு 1 மணி நேரம் முன்பாகத்தான் மழை ஓய்ந்ததாம்.

அனைவருக்கும் நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தில் செய்ய முடியாததை, தாய்த்தமிழகத்தில் செய்த உறவுகளை நினைக்க.... மனதில் ஒரு ஆறுதல்.

உலக சித்திரவதை தினத்தையொட்டி நேற்று சென்னை மெரீனா கடற்கரையில் பிரமாண்ட அஞ்சலி நிகழ்ச்சிக்கு தமிழ் ஆர்வலர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். ஈழப் போரில் உயிர் நீத்த லட்சக்கணக்கான அப்பாவித் தமிழர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்த வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந்த அழைப்பை ஏற்று பல ஆயிரக்கணக்கானோர் மெரீனாவில் திரண்டனர். கொட்டும் மழை, பலத்த காற்று ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் அத்தனை பேரும் அமைதியாக நின்று கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தியபடி அஞ்சலி செலுத்தியது உருக்கமாக இருந்தது.

யாரும் எதிர்பாராத அளவுக்கு மிகப் பெரிய அளவில் பல ஆயிரம் பேர் கூடியதால் கடற்கரையே, மனிதக் கடல் போல காணப்பட்டது.

தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன், நாம் தமிழர் தலைவர் சீமான், கவிஞர் தாமரை, பாமகவின் வேல்முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சிகளைச் சேர்ந்த தொண்டர்கள் பெரும் திரளாக பங்கேற்றனர்.

டாக்டர்கள், நர்சுகள், ஆசிரியர்கள், மாணவர்கள், ஐடி நிறுவனத்தினர், கல்வியாளர்கள், பத்திரிக்கையாளர்கள், எழுத்தாளர்கள் என பல தரப்பினரும் இதில் பங்கேற்றனர்.

அனைவரும் உணர்ச்சி பொங்கும் குரலில் தமிழ் இனப்படுகொலையை நிகழ்த்திய ராஜபக்சே கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்று முழங்கினர்.

சமீபத்தில்தான் பிறந்த தனது கைக்குழந்தையுடன் போராட்டத்தில் கலந்து கொண்டா பாலு என்பவர். அவர் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் கூறுகையில், ஆலந்தூரிலிருந்து எனது குடும்பத்துடன் இங்கு வந்துள்ளேன். இந்த ஒரு நாளை ஈழத் தமிழர்களுக்காக நாம் ஒதுக்காவிட்டால், நம்மால் நிம்மதியாக தூங்க முடியாது.

தமிழ் இனத்திற்காக நாம் ஒன்று கூடுவோம். நமது ஆதரவுகளை வலுவாக திரட்டுவோம். ராஜபக்சேவை விரட்டியடிப்போம், தண்டனை வாங்கித் தருவோம். நிச்சயம் தமிழ் ஈழம் மலரும் என்றார்.

மேலும் அவர் கூறுகையில், தமிழ் மொழியால் நாம் இன்று ஒன்று கூடியுள்ளோம். ஆனால் நான் பிறவியால் ஒரு மலையாளி. ஆனால் எனது பெற்றோர்கள் 70 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு குடியேறியவர்கள். எனக்கு தமிழ்தான் தெரியும். தமிழ்தான் புரியும். தமிழ் மட்டுமே எனக்கு மொழி. அந்த மொழி உணர்வால்தான் இங்கு நான் கூடியுள்ளேன் என்று பாலு கூறியபோது பெரும் ஆச்சரியமே ஏற்படடது.

பெங்களூரிலிருந்து அருள் என்ற ஐடி நிறுவனத்தில் பணியாற்றும் சாப்ட்வேர் என்ஜீனியர் ஒருவர் வந்திருந்தார். அவர் கூறுகையில், இன்று பெங்களூரிலிருந்து மட்டும் 600 சாப்ட்வேர் என்ஜீனியர்கள் இங்கு திரண்டுள்ளோம். ஈழத் தமிழர் பிரச்சினை குறித்து ஐடி நிறுவனத்தில் பணியாற்றும் தமிழர்கள் அத்தனை பேரும் நன்கு அறிந்துள்ளனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தனியாக பஸ் பிடித்து வந்துள்ளோம் என்றார்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அத்தனை பேரும் மறக்காமல் சொன்னது தமிழ் ஈழம் மலரும், ஈழத் தமிழர்களின் கண்ணீர் துடைக்கப்படும், ராட்சசன் ராஜபக்சே தண்டிக்கப்படுவார் என்பதுதான்.

மிகுந்த உணர்ச்சிகரமாக நடந்த இந்த நிகழ்ச்சி சென்னைக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழக வரலாற்றிலும் மறக்க முடியாத ஒரு நிகழ்ச்சியாக அமைந்தது என்பதில் மாற்றமில்லை

thanz thats tamil.com

  • கருத்துக்கள உறவுகள்

அழுது அழுது களைத்த இனம் மீண்டும் ஒருதடவை அழுதோம்,இது உங்கள் எழுச்சி கண்ட நெகிழ்ச்சியால் வந்த அழுகை உறவுகளே...எனதருமை உறவுகளே கடவுழும் கைவிட்ட ஈழக்குழந்தைகளும் மக்களும் அநாதைகள் இல்லை என்று மெரீனாவின் கரைகளில் நின்று உரக்கக்கூவி காய்ந்து போய்க்கிடந்த எங்கள் நிலங்களை உங்கள் கண்ணீரால் ஈரமாக்கிவிட்டிருக்கீறீர்கள்...இனி எங்கள் நாட்களைப் பிடித்திருந்த இருள்ப்பறவை விலகி விடிவெள்ளி தெரியக்கூடும்....எங்கள் வானில் சூரியன் உதிக்கக்கூடும்...இடிந்து போன கல்லறைகளின் ஓரங்களில் சில காந்தாள் மலர்கள் மலரக்கூடும்....இனி எங்கள் குழந்தைகளின் ஆன்மாக்கள் அமைதியடையக்கூடும்...

Edited by ந.சுபேஸ்

பலத்த இடர்கள் மத்தியிலும் தொடரும் தமிழக மக்களின் எழுச்சிக்கு கோடி நன்றிகள்!!

மத்திய அரசு, மாநில முதல்வருடன் இணைந்து தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து நடக்கும் காலம் விரைவில் வரும் என்பதை இந்த நிகழ்வு மீண்டும் உணர்த்தி நிற்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

சாந்தோம் பஸ்டாப்பு வரை கிரவுடு இருந்தது.. பரவாயில்லை.. ஒரளவுக்கு உணர்வு இருக்கு.. :)

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் தமிழக உறவுகளே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.