Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்டமைப்பு எடுத்த முடிவு சரியானதா? இல்லையா?

கூட்டமைப்பு - சிங்கள பேச்சுவார்த்தையும் தாயக மக்கள் எதிர்காலமும் 34 members have voted

  1. 1. இந்த நிலையில் கூட்டமைப்பு எடுத்த முடிவு சரியானதா இல்லையா?

    • தாயக மக்களின் ஆணையையை அவர்கள் பிரதிநிகள் என்றவகையில் கூட்டமைப்பு அந்த முடிவை எடுத்தது
      14
    • பலமாக உள்ள சிங்களத்திற்கு நிபந்தனைகளை விதித்தமை அரசியல் சாணக்கியமாகாது
      1
    • தமிழக, புதுடெல்லி, மேற்குலக உறவுகளில் கொழும்பு பலவீனமாக உள்ள நிலைமையில் இது கூட்டமைப்பின் சரியான நகர்வு
      16
    • கூட்டமைப்பின் இந்த முடிவு சிங்களத்தின் இனவழிப்பு கொள்கையை மேலும் துரிதப்படுத்தும்
      1
    • எனது காரணம் இதில் இல்லை, முடிந்தால் அதை நான் கீழே பதிந்துவிடுகிறேன்
      2
  2. 2. எந்த சர்வதேச நாட்டுடன் கூட்டமைப்பு கூடுதலான உறவுகளை இன்று வளர்க்க வேண்டும்?

    • இந்தியா
      2
    • சீனா
      1
    • உருசியா
      1
    • அமெரிக்கா
      6
    • பிரித்தானியா
      2
    • வேறு
      0

Please sign in or register to vote in this poll.

Featured Replies

தமிழீழ மக்கள் அரசியலில் இன்று கூட்டமைப்பு ஒரு முக்கிய திருப்பு முனையில் நிற்கிறது.

சிறிலங்கா அரசாங்கத்துடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளில் காத்திரமான முன்னேற்றங்கள் எதுவும் ஏற்படாததைத் தொடர்ந்து கடும் அதிருப்தி கொண்ட நிலையில்,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல் தீர்வு தொடர்பில் மூன்று முக்கிய விவகாரங்கள் குறித்து இரு வாரங்களுக்குள் சிறிலங்கா அரசாங்கம் தமது நிலைப்பாட்டை எழுத்து மூலம் தெளிவுபடுத்த வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளது.

இக்குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சிறிலங்கா அரசாங்கம் எழுத்து மூலமான பதிலை வழங்காது விட்டால், பேச்சுவார்த்தைகளில் இருந்து விலக நேரிடும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எச்சரித்துள்ளது.

அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிபந்தனையை ஏற்றுக் கொள்ள சிறிலங்கா அரசாங்கம் மறுப்புத் தெரிவித்துள்ளது.

போரின் போது இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம் மற்றும் அம்மக்களுக்கான புனர்வாழ்வு நடவடிக்கைகள், உயர் பாதுகாப்பு வலயங்களை அகற்றுதல், வடக்குக் கிழக்கில் செயற்படும் ஆயுதக் குழுக்களிடம் இருந்து ஆயுதங்களை களைதல் மற்றும் அரசியல் கைதிகளின் பிரச்சினை ஆகியன குறித்து சிறிலஙகா அரசாங்கத்துடன் கடந்த ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்பட்ட பேச்சுவார்த்தைகளில் ஆராயப்பட்டு வந்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இவ்வறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஆனால், சிறிலங்கா அரசாங்கத்துடன் இதுவரை இடம்பெற்று வந்த பத்துச் சுற்றுப் பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னரும் இவ்விகாரங்கள் தொடர்பில் எவ்விதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த நிலையில் கூட்டமைப்பு எடுத்த முடிவு சரியானதா? இல்லையா?

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக, புதுடெல்லி, மேற்குலக உறவுகளில் கொழும்பு பலவீனமாக உள்ள நிலைமையில் இது கூட்டமைப்பின் சரியான நகர்வு

என்பதற்கு வாக்களித்துள்ளேன்

முதலாவது வாக்கு எனதுதான்

  • கருத்துக்கள உறவுகள்

இனியாவது ஒரு மனதோடும் ஒரு முடிவோடும் கூட்டமைப்பு இருக்க வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

தாயக மக்களின் ஆணையையை அவர்கள் பிரதிநிகள் என்றவகையில் கூட்டமைப்பு அந்த முடிவை எடுத்தது

தமிழக, புதுடெல்லி, மேற்குலக உறவுகளில் கொழும்பு பலவீனமாக உள்ள நிலைமையில் இது கூட்டமைப்பின் சரியான நகர்வு

சிங்களத்துடன் பேச்சுவார்த்தை என்பது, தமிழர்களுக்கு என்றுமே தீர்வைப் பெற்றுத்தரவில்லை என்பது கடந்த 50 ஆண்டுகாலத்தில் நடந்தவற்றைப் பார்த்தால் நன்கு புரியும். இனியும்...... அதை நம்பத் தயாரில்லை என்பதை கூட்டமைப்பு காலம் கடந்தாவது உணர்ந்தது நல்ல விடயம்.

எனது தெரிவு முதலாவதுக்கும், மூன்றாவதற்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனது தெரிவு முதலாவது.

  • கருத்துக்கள உறவுகள்

எனது தெரிவு1வதும்3வதும்

  • கருத்துக்கள உறவுகள்

தமது அடுத்த நகர்வு என்ன என்பதைப்பற்றிய போதிய தெளிவோ தீர்மானமோ இல்லாமல் இந்த நிபந்தனை கூட்டமைப்பினரால் விதிக்கப்பட்டிருக்கிறது. மக்களை ஒன்று திரட்டி ஒரு சாத்விகப் போராட்டத்தைத்தானும் முன்னெடுக்கமுடியாத கையாலாகாத நிலையில் அரசு நிபந்தனையை ஏற்காது மறுத்துவிட்டபின்னர் எமது இயலாமையை உலகத்திற்கு வெளிச்சம் போட்டுக்காட்டவே இந்த ராஜதந்திரமற்ற முடிவு கொண்டுபோய் விடப்போகிறது.

கரு,

50 ஆண்டு காலத்திற்கு முன்னர், காலி முகத்திடலில் ஆரம்பித்த சாத்வீகப் போராட்டம்,

திலீபன், அன்னை பூபதி போன்றவர்கள் உண்ணாவிரதம் இருந்து தமது உயிரையும் தியாகம் செய்து, சாத்வீகத்தை சிங்களத்துக்கும், அகில உலகத்துக்கும் காட்டி விட்டார்கள். இதற்கு மேல்... கூட்டமைப்பு என்ன சாத்வீகத்தை காட்ட வேண்டும் என்று... இன்னமும் சிங்களத்திடம் எதிர்பார்க்கிறீர்கள்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

எனது காரணம் இதில் இல்லை, முடிந்தால் அதை நான் கீழே பதிந்துவிடுகிறேன்

அரசு கூட்டணியினரை பேச்சுவார்த்தை மூலம் கூட்டணியினரை இழுத்தடித்து ஒன்றும் கொடுக்காமல் விடப்போகிறார்கள்.கூட்டணி காலக்கெடு விதிப்பது பலமான அரசை எப்படி அடிபணிய வைக்கும்?? ஆகவே காலக்கெடு மூலமும் எதுவும் தமிழ் மக்களுக்கு கிடைக்கப்போவதில்லை.

மொத்தத்தில் கூட்டமைப்பு பேச்சு வார்த்தையில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் எதுவும் தமிழ் மக்களுக்கு கிடைக்கப்போவதில்லை.ரில்வின் சில்வா சொல்வது போல் அரசும் கூட்டணியும் சேர்ந்து நாடகமாடுகிறார்கள் என்ற கூற்று சரியோ எனவும் எண்ண தோன்றுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

அரசு கூட்டணியினரை பேச்சுவார்த்தை மூலம் கூட்டணியினரை இழுத்தடித்து ஒன்றும் கொடுக்காமல் விடப்போகிறார்கள்.கூட்டணி காலக்கெடு விதிப்பது பலமான அரசை எப்படி அடிபணிய வைக்கும்?? ஆகவே காலக்கெடு மூலமும் எதுவும் தமிழ் மக்களுக்கு கிடைக்கப்போவதில்லை.

மொத்தத்தில் கூட்டமைப்பு பேச்சு வார்த்தையில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் எதுவும் தமிழ் மக்களுக்கு கிடைக்கப்போவதில்லை. ரில்வின் சில்வா சொல்வது போல் அரசும் கூட்டணியும் சேர்ந்து நாடகமாடுகிறார்கள் என்ற கூற்று சரியோ எனவும் எண்ண தோன்றுகிறது.

நுணாவிலான்,

கூட்டமைப்பினரை உத்தமர்கள் என்று நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்.

ஆனால், அவர்களின் இந்த அறிக்கையால்.... சர்வதேச கண்ணோட்டத்தில் எமது பிரச்சினையை, எளிதாக்க வழி கிடைக்கலாம்.

ஏனென்றால்.... கடந்த உள்ளூராட்சி தேர்தலில், தமிழ் மக்கள் கொடுத்த அதிகப் படியான அங்கீகாரம் உண்டு.

பக்கத்தில் உள்ள தமிழ்நாட்டின் முதலைமைச்சர் ஜெயலலிதாவே... எமக்காக உரத்துக் குரல் கொடுக்கும் போது....

தாங்கள், சும்மா.... இருந்தால் நன்றாக இருக்காது என்றும்... கூட்டமைப்பு அறிக்கை விட்டிருக்கலாம்.

மேர்வின் சிவ்வாவை தெரியும். அது யார் ரில்வின் சில்வா. அவர் என்ன சொன்னவர்?

ராஜபக்சே சகோதரர்களை அப்புறப்படுத்தினால் தமிழர்களுக்கு ஏதோவொரு அரசியல் தீர்வை அதுவும் இந்தியாவின் ஊடாகப் பெறலாம்.....

தமிழீழம் வேண்டுமாயின் இந்தியாவை ஈழ விடயத்தில் அப்புறப்படுத்த வேண்டும்......

அது பிஜேபி ஆட்சியானாலும் சரி காங்கிரசு ஆட்சியானாலும் சரி இந்தியா தலையிடும் வரை ஈழம் சாத்தியமற்றது........

இந்தியாவின் பங்களிப்புடன் தமிழீழம் மலர வேண்டுமானால் வைகோ அல்லது பழ நெடுமாறன் இந்தியாவின் பிரதம மந்திரியாக இருக்க வேண்டும்......

ம்ம்...... அத்தைக்கு, மீசை முளைச்ச கதை தான்.....

  • தொடங்கியவர்

மேர்வின் சிவ்வாவை தெரியும். அது யார் ரில்வின் சில்வா. அவர் என்ன சொன்னவர்?

பேச்சுவார்த்தை என்ற பெயரில் அரசாங்கமும், கூட்டமைப்பும் சேர்ந்து நாடகமாடுகின்றன! - டில்வின் சில்வா குற்றச்சாட்டு!!

இலங்கையின் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பில் அரசாங்கமும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் சேர்ந்து நாடகமாடுவதாக ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார். எனவே, தமிழ் மக்கள் சுயமாக போராடியே சுதந்திரத்தையும் அரசியல் உரிமைகளையும் வென்றெடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்குள் மீண்டும் தள்ளப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கான தீர்வாக அதிகாரப் பகிர்வை வழங்க இந்தியாவிற்கும் ஏனைய சர்வதேச நாடுகளுக்கும் அரசாங்கம் ஏற்கனவே உறுதிமொழி அளித்துவிட்டது. ஆனால் அதனை நிறைவேற்றாது முழு உலகத்தையும் அரசாங்கம் ஏமாற்றி வருகின்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து டில்வின் சில்வா மேலும் தெரிவித்துள்ளதாவது:

http://ponguthamil.com/news/contentnews.asp?sectionid=1&contentid={DC66611F-ADD3-44C6-846E-A07442E0B05A}

கூத்தமைப்பின் அண்மைய நடவடிக்கைகள் இலங்கை அரசினதும் இந்திய கொலைகார அரசினதும் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்பவே அமைந்து இருந்தது. இது சர்வதேசத்தின் மத்தியில் பலவீனப்பட்டுக் கொண்டு இருக்கும் இலங்கை அரசிற்கு சாதகமான ஒரு நிலையை ஏற்படுத்தி இருந்தது. இந்த கூத்தமைப்பு inru எடுத்த இந்த நடவடிக்கையின் பின் இந்திய நாசகார திட்டம் ஏதும் இல்லையெனில், இது அவர்கள் எடுத்த சுயாதீனமான தீர்மானம் இல்லையெனில் என் வாக்கு முதலாவதுக்கே.

Edited by நிழலி

சிங்களம் எதுவும் தராது .அது தமிழனாய் பிறந்த அனைவருக்கும் தெரியும்.

அதை உலகிற்கு எடுத்து சொல்லி உலகை எம்பக்கம் திருப்புவதில் தான் எமது தலைமைகளின் கெட்டித்தனம்.

அதற்கு இன்னமும் காலம் பிறக்கவில்லை.

ஒன்று விலை போபவர்களாக இருக்கின்றார்கள்.

இல்லை தலையாட்டிகளாக இருக்கின்றார்கள்.

அதுவும் இல்லையென்றால் ஒருத்தரையும் நம்பாதவர்களாக இருக்கின்றார்கள்.

எனது தெரிவும் 1வதும்3வதும்.

  • தொடங்கியவர்

கூத்தமைப்பின் அண்மைய நடவடிக்கைகள் இலங்கை அரசினதும் இந்திய கொலைகார அரசினதும் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்பவே அமைந்து இருந்தது. இது சர்வதேசத்தின் மத்தியில் பலவீனப்பட்டுக் கொண்டு இருக்கும் இலங்கை அரசிற்கு சாதகமான ஒரு நிலையை ஏற்படுத்தி இருந்தது. இந்த கூத்தமைப்பு inru எடுத்த இந்த நடவடிக்கையின் பின் இந்திய நாசகார திட்டம் ஏதும் இல்லையெனில், இது அவர்கள் எடுத்த சுயாதீனமான தீர்மானம் இல்லையெனில் என் வாக்கு முதலாவதுக்கே.

கொழும்பும் இந்தியாவுக்கு ஒரு முகமும் தேவையான பொழுது சீனவைக்காட்டி பூச்சாண்டியும் காட்டியே தனது அரசியலை முன்னெடுத்துவருகின்றது.

கூட்டமைப்பும் இவ்வாறான ஒரு அணுகுமுறையை எடுக்க கூடிய வசதி இப்போது உள்ளது.

முதல்முறையாக டெல்லியிலும் சில நெருக்கடிகள் : அது தமிழக அரசியல் மாற்றம்; சனல் நாலு தந்த விழிப்புணர்ச்சி; டெல்லியின் ஐ.நா. பாதுகாப்பு குழு ஆசை; மேலாக மக்கள் தந்த ஆணை என்பன அதன் அணுமுறையில் மாற்றம் தரக்கூடிய பலத்தை தந்துள்ளது. இவ்வளவுகாலமும் கொழும்பு செய்துவந்த அரசியலை கூட்டமைப்பும் செய்யக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளன.

இது இறுதியில் டெல்லியில் கொழும்பு மீதான ஒரு ஒட்டு மொத்த அரசியல் மாற்றத்தை கொண்டுவரலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

கரு,

50 ஆண்டு காலத்திற்கு முன்னர், காலி முகத்திடலில் ஆரம்பித்த சாத்வீகப் போராட்டம்,

திலீபன், அன்னை பூபதி போன்றவர்கள் உண்ணாவிரதம் இருந்து தமது உயிரையும் தியாகம் செய்து, சாத்வீகத்தை சிங்களத்துக்கும், அகில உலகத்துக்கும் காட்டி விட்டார்கள். இதற்கு மேல்... கூட்டமைப்பு என்ன சாத்வீகத்தை காட்ட வேண்டும் என்று... இன்னமும் சிங்களத்திடம் எதிர்பார்க்கிறீர்கள்.

சிறி

நான் 'சாத்வீகப் போராட்டத்தைத்தானும்....' என்றே எழுதியிருக்கிறேன். முடிந்த முடிவாக அதனையே வலியுறுத்த வில்லை. அது சரி... நம்மிடம் வேறு என்ன தற்போதைக்குச் செய்யக் கூடியது இருக்கிறது என நினைக்கிறீர்கள். காந்தி ஜீ போன்ற உலகம் அங்கீகரிக்கும் தலைமைகளின் ஒத்துழையாமைக் கோட்பாட்டையே இன்றுவரை நாம் சரிவரப் புரிந்துகொண்டு முன்னெடுத்துச் செல்லவில்லை. அப்படிப் புரிந்துகொண்டாலும் மக்களை ஒன்று திரட்டிப் போராடக்கூடிய சக்தி எம்மிடமில்லை. முப்பது வருடங்களாகப் பழக்கப்பட்டுப் போய்விட்ட தீவிர போர்முனைப்பிலிருந்து சற்று வெளியேறி மக்களின் ஒருமித்த அதிருப்தியைக்காட்டுவதற்கு தேர்தல்களைத் தவிர வேறு எதுவுமில்லை. இந்த நிலையில் இத்தகைய திடீர் தீர்மானங்களைச் செய்துகொண்டு அடுத்து என்ன செய்யப் போகிறோமென்று தெரியாமல் விழிபிதுங்குவதுதான் மிச்சமாகப் போகின்றது என்பதைத்தான் குறிப்பிட்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்

முதல்முறையாக டெல்லியிலும் சில நெருக்கடிகள் : அது தமிழக அரசியல் மாற்றம்; சனல் நாலு தந்த விழிப்புணர்ச்சி; டெல்லியின் ஐ.நா. பாதுகாப்பு குழு ஆசை; மேலாக மக்கள் தந்த ஆணை என்பன அதன் அணுமுறையில் மாற்றம் தரக்கூடிய பலத்தை தந்துள்ளது. இவ்வளவுகாலமும் கொழும்பு செய்துவந்த அரசியலை கூட்டமைப்பும் செய்யக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளன.

இவை தான் இப்போ தமிழ் மக்களுக்கு இருக்கும் துரும்புகள். இவற்றை கூட்டணி சரியாக பயன்படுத்தினால் கடைசி ஒரு நியாயமாவது கிடைக்கும்.இதற்கு கூட்டணிக்குள் இளம் தலைமை வரவேண்டும்.சம்பந்தரும் மாவையும் இளையவருக்கு தமது தலைமையை கொடுக்க முன்வரவேண்டும்.

ஸ்ரீ மாவோவுக்கு பிறகு கொழும்பின் உறவு டெல்கியியுடன் எப்போதாவது நல்லதாயிருந்ததா என்பது ஒரு கேள்வி. இந்திரா காந்திக்கு பிறகு இந்தியா இலங்கையின் காலில் விழுத்தபட்டுவிட்டது. இந்திரா காந்தியை இலங்கையில் ஒருவர் அடித்திருந்தால் இன்று நமது சரித்திரம் வித்தியாசமானதாக இருந்திருக்கும். பத்திரிகைகள் எல்லாம் நிருபமாவின் பிரியாவிடை என்று வர்ணித்த ஒரு பேச்சுவார்த்தை கூட்டத்தில், கோத்தாவுடன் பேச்சுவாத்தை எப்படி போனது என்று ஒரு பத்திரிகை அண்மையில் விவரித்திருந்தது. அந்த மலையாள நாய்கள் தமக்கு நடக்கும் எல்லா இழிவையும் மூடிமறைத்து விட்டு சோனியாவுக்கு சேவகம் செய்து வந்திருக்கிறார்கள். டெல்கியின் மிகப்பெரிய எழுப்பம் சோனியாவின் சுகவீனம். சோனியாவும் தமது கடைசி மளையாள "றம்ப்" துருப்பாக அந்தோனியை ராகுலுடன் கட்டியிருக்கிறார். அது தோற்றால் இந்தியா மீட்கப்படலாம். அப்போ இலங்கை இந்திய உறவால் நமக்கு நன்மைகள் கிடைக்கலாம். ஆனால் கூட்டமைப்பின் முடிவு சோனியாவின் சுகவீனத்திற்கு முதல் எடுபட்டது. எனவே முதலாவது மூன்றவதை விட நல்ல பதில்.

டொனமூர் காலத்திலிருந்து எமக்கு எதிராயே எல்லம் நடந்திருக்கு. ஆனால்

1. ஒபாமாவின் வருகை.

2. ஐ.நா அறிக்கை.

3கருநாநிதியின் தோல்வி

4.Channel-4 ஆவணம்.

5.ராசபக்சாவின் யாழ்ப்பாண வருகையும் தேர்தல் தோல்வியும்.

6.சோனியாவின் சுகவீனம்.

விதியாசமான நிகழ்வுகள்.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக, புதுடெல்லி, மேற்குலக உறவுகளில் கொழும்பு பலவீனமாக உள்ள நிலைமையில் இது கூட்டமைப்பின் சரியான நகர்வு

என்பதற்கு வாக்களித்துள்ளேன்

  • கருத்துக்கள உறவுகள்

நான் மூன்றாவதுக்கு வாக்களித்துள்ளேன்.

தமிழக, புதுடெல்லி, மேற்குலக உறவுகளில் கொழும்பு பலவீனமாக உள்ள நிலைமையில் இது கூட்டமைப்பின் சரியான நகர்வு எதிரியின் பலவீனத்தை எம் பலமாக்குவது தான் எமது பலம் அந்த வகையில் கூட்டணி எடுத்த இந்த முடிவை மேலுல்ல கருத்துக்குள் போட்டுபார்க்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களை வெற்றிகொண்ட மமதையில் இருக்கும் சிங்கலங்கா அரசு தமிழர்களுக்கு ஒன்றையும் தராது என்று கூட்டமைப்புக்குத் தெரிந்தும், இந்தியாவின் வற்புறுத்தலால் 13வது திருத்தச் சட்டமூலத்திற்கு சற்று மேலாக எதையாவது பேசி/பேசாமல் மகிந்தவிடம் இருந்து வாங்கலாம் என்று எண்ணிப் பேச்சுவார்த்தைக்குப் போயிருப்பார்கள். அதனால்தான் புலம்பெயர் மக்கள் முன்னெடுக்கும் போர்க்குற்றம் என்ற ஆயுதத்தில் இருந்து வெளிப்படையாகக் கூட விலத்தி நின்றார்கள். எனினும் உள்ளூராட்சித் தேர்தலில் மக்கள் கூட்டணிக்குப் போட்ட வாக்குகள், மகிந்தவின் அடக்குமுறை அரசியலையும், டக்ளஸின் அடிபணிவு அரசியலையும் விரும்பவில்லை என்பதைக் கோடிட்டுக் காட்டியது கூட்டமைப்பை இக்கட்டில் மாட்டியுள்ளது.

மக்கள் தங்கள் தார்மீக உரிமைகளைப் பெற்றுக்கொள்ளவே காலம் காலமாக தமிழ்த் தலைமைகளை நம்பி வந்தார்கள்/வருகின்றார்கள். ஆனாலும் தமிழர்களின் தலைமைகளாக இருக்க நினைப்போர் மக்களின் இந்த விருப்புக்களை சரியான வழியில் அடைய முயற்சிப்பதை விட்டுவிட்டு பிறசக்திகளினால் வழிநடாத்தப்பட்டு தோல்வியைத் தழுவுகின்றனர். எனவே தற்போதுள்ள நிலையில் கூட்டமைப்பு ஒரு தெளிவான திட்டத்தின் அடிப்படையில் நீண்டகாலத் தீர்வு ஒன்றுக்கு முனையாவிட்டால், அது தமிழர்களின் தலைமையாக நீண்டகாலம் நீடிக்கமுடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் அக்காவை(ஜெ) பார்த்து நல்ல சொக்காவை போடுவதற்கு தயாராக வேண்டும்..

டிஸ்கி:

890671754.jpg

சொக்காவோ.... பொன்னாடையோ... நல்ல கிளிபச்ச கலர்ல வாங்கிட்டு போகவும்...

இங்க அங்க இருந்து வாழ்த்துகிறோம் வணங்குகிறோம் என இணையத்தில எல்லாம் அறிக்கை விட்டுகொண்டு இருந்தால் சரிப்பட்டு வராது... ^_^ ^_^

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.