"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 128
[This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.]
பகுதி: 128 / பின் இணைப்பு - "இலங்கையின் நாளாகமங்கள் மற்றும் தமிழ் காவியங்களான சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை"
கண்ணகி (இலங்கையில் பத்தினி தேவி என அழைக்கப்படுகிறார்) நீதித்துறையின் ஒரு முக்கிய பாகமாகவும் அன்று இலங்கையில் விளங்கினார். ஒரு பழி சுமத்தப்பட்ட நபர் (defendant) நீதிமன்றத்தில் ‘ஹல்லம்பா’ [Hallamba] எனப்படும் ஒரு விசேடமான சத்தியப் பொருள் மீது சத்தியம் செய்ய வேண்டியது அவசியமாக இருந்தது. அங்கே அந்த சத்தியத்தில், அவர்கள் உண்மை மட்டுமே பேசுவதாக தெரிவிக்க வேண்டும். இந்த ஹல்லம்பா மீது சத்தியம் செய்யும் பழக்கம் சிங்கள கிராமப்புற மக்களால் மிகவும் பயமுறுத்தும் ஒரு சத்தியமாகக் கருதப்பட்டது. தவறாக சத்தியம் செய்தால் தெய்வீக தண்டனை ஏற்படும் என அவர்கள் நம்பினர். இங்கே ஹல்லம்பா [Hallamba] என்பது பத்தினித் தேவியின் (கண்ணகி) புனிதமாகக் கருதப்படும் ஒரு பொருள் அல்லது அவள் அணிந்திருந்த, உடல் அணிகலன்களில் ஒன்றான அவளின் காற்சலங்கை [anklet] ஆகும். இது வழிபாடுகளிலும், சத்தியச் சடங்குகளிலும் பயன்படுத்தப்பட்டது. இதன்மீது தவறாக சத்தியம் செய்வது பத்தினி தேவியின் கோபத்தை ஏற்படுத்தும் என்று மக்கள் நம்பினார்கள்.
மேலதிக விவரங்களுக்கு 'Sketches of Ceylon History by P. Arunachalam, 1906, AES Reprint 2004 ' என்ற நூலின், பக்கம் 21 முதல் 22 பார்க்கவும். மேலும் 'Sketches of Ceylon History by P. Arunachalam, 1906, AES Reprint 2004 ' இன் பக்கம் 22 இலிருந்து ஒரு சிறிய மேற்கோள் கிழே தரப்பட்டுள்ளது:
"கஜபாகு இந்தியாவிலிருந்து பத்தினி தேவியின் பொற்சிலம்பு கொண்டு வந்தார். அதன் நகல்களே இப்போது பத்தினி வழிபாட்டின் பிரதான சின்னங்களாக பயன்படுகின்றன. நீதிமன்றங்களில் சத்தியம் செய்யும்போது இந்த ஹல்லம்பா அல்லது காற்சலங்கை மீது சத்தியம் செய்யப்படுவது அவ்வப்போது காணப்படுகிறது. இந்த சத்தியத்தை விட சிங்கள கிராமவாசிகள் அதிகமாக பயப்படுவது வேறு ஒன்றும் இல்லை." என்கிறது.
சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்கு விழா எடுத்தபோது இலங்கை மன்னன் கஜபாகுவும் அங்கிருந்ததாக சிலப்பதிகாரம் பாடுகிறது. மணிமேகலை காவியமும் அதை உறுதி செய்கிறது. ஆனால் செங்குட்டுவனின் காலகட்டத்தை மதிப்பிட உதவிய இலங்கையின் தீபவம்சம் (கிபி 4ம் நூற்றாண்டு) மற்றும் மகாவம்சம் (கிபி 5ம் நூற்றாண்டு) இரண்டிலும் கஜபாகு மன்னன் தென்னிந்தியா போனது பற்றி எந்தக் குறிப்பும் இல்லையே ஏன்? அது தான் எனக்குப் புரியவில்லை?
ஸ்ரீ விஜய ராஜசிங்கன் [Madurai Nayakkar king in Kandy, Sri Vijaya Rajasimha] 1739 தொடக்கம் 1747 ஆம் ஆண்டுவரை இலங்கையின் கண்டி அரசை ஆண்ட மன்னனாவான். தென்னிந்திய மதுரை நாயக்கர் மரபில் பிறந்த இவனே கண்டி நாயக்கர் மரபை உருவாக்கியவன் ஆவான்.
இவன் இலங்கையில் 1700களில், கிட்டத்தட்ட அழிந்துபோன பௌத்தத்தை மீட்டெடுக்க விரும்பினான். மேலும் இலங்கையில் பதினேழாம் பதினெட்டாம் நூற்றாண்டில் கூட எங்கும் தகுதியான துறவிகள் இல்லாததால், புதிய துறவிகளை உத்தியோகமாக அமர்த்தி சமயப்பணியில் ஈடுபடவைக்க, அவர்களுக்கு புத்த குரு பதவியளிப்பு செய்ய, சியாமில் (Siam / தாய்லாந்து) இருந்து துறவிகளை அழைத்து வர டச்சுக்காரர்களுடன் ஏற்பாடு செய்தார். எனவே இதற்காக, பல முறை, தூதர் குழுக்கள் அனுப்பப்பட்டது, அதில் கடைசியாக 1745-ஆம் ஆண்டு அனுப்பப்பட்டது ஆகும்.
இந்த தூதர் குழு சியாமில் இருக்கும்போது, ஸ்ரீ விஜய ராஜசிங்கம் இறந்துவிட்டார். அவரது இடத்தில் கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கம் என்ற மன்னர் வந்தார். இதனால், சியாம் மன்னன், புதிய மன்னரிடமிருந்து உறுதிப்படுத்தல் வேண்டுமென்று கேட்டார். இதனால் சில தாமதம் ஏற்பட்டது. சியாம் பிக்குகள் இறுதியாக 1753-இல் இலங்கைக்கு வந்தனர். அவர்கள் கண்டியில் மல்வத்த மற்றும் அச்கிரிய [Malwatta and Asgiriya chapters] என்னும் இரண்டு பிக்கு சங்கங்களை உருவாக்கினர்.
மேலும் இவர்கள் சியாமிலிருந்து வந்ததால், இவை சியாம் நிக்காயங்கள் [Siam Nikayas] என அழைக்கப்படுகின்றன. அந்த நேரத்தில், எசல [சிங்களத்திலே ஆடி மாதம் எசல எனப்படும்] பெரகரா விழாவில் [The Kandy Esala Perahera procession] பத்தினி அம்மன் முதன்மையாக வணங்கப்பட்டு வந்தார். ஆனால் சியாமிலிருந்து வந்த பிக்குகள் இதை ஏற்கவில்லை. அவர்கள் மன்னரிடம், “தலதா (Dalada / Sacred Tooth Relic) விழாவின் முன்னிலையாக இருக்க வேண்டும்” எனக் கூறினர்.
அதன் பிறகு, அதாவது சுமார் இருநூற்று எழுபது ஆண்டுகளுக்கு முன்புதான், பெரகரா விழாவில் பல் நினைவுச்சின்னம் முக்கியத்துவம் பெற்றது. கஜபாகுவின் காலத்திலோ அல்லது அவரது ஆட்சிக்குப் பிறகு சிறிது காலத்திலோ இலங்கையில், பத்தினி வழிபாட்டுடன் நெருக்கமாக தொடர்புடைய, ஒரு கெலியா, தோடன் கெலியா, பொல் கெலியா மற்றும் மல் கெலியா [An Keliya, Dodan Keliya, Pol Keliya and Mal Keliya] என, நான்கு மத விளையாட்டுகள் தோன்றின. இங்கு ஒரு-கெலியா என்பது "கொம்பு - இழுக்கும் விளையாட்டு; "தோடன் - கெலியா என்பது "தோடம்பழம் / ஆரஞ்சு. (அடிக்கும்) விளையாட்டு;" பொல் - கெலியா என்பது "தேங்காய் (உடைத்தல்) விளையாட்டு;" மற்றும் மல் - கெலியா என்பது "பூ விளையாட்டு ஆகும். இது விடயமாக, ''Ancient Ceylon by Henry Parker / This book had been first published in 1909 and was republished by the Asian Educational Service in 1981", என்ற நூலின் 631 ஆம் பக்கத்தைப் பார்க்கவும்.
Part: 128 / APPENDIX – "The Chronicles of Ceylon and the Tamil Epics Silappathikaram and Mannimeghalai"
Goddess Pattini became a part of the judicial system in Lanka, defendants had to take oath on Hallamba to profess that they tell only the truth. No oath is more dreaded by the Sinhalese peasants than that on the Hallamba. The Sinhalese followed the tradition of the festival started by the king Kajavahu in honour of Pattini, Kannaki, until 1775 A. D. See the pages 21 to 22 of the Reference 'Sketches of Ceylon History by P. Arunachalam, 1906, AES Reprint 2004' for detail. A small quote from the page 22 of the Reference 'Sketches of Ceylon History by P. Arunachalam, 1906, AES Reprint 2004' is: ‘Gaja Bahu brought from India the golden halamba or anklet of the goddess, copies of which are the symbols of her worship, and oaths are not infrequently taken on them in courts of justice. No oath is more dreaded by the Sinhalese peasant’.
The Madurai Nayakkar king in Kandy, Sri Vijaya Rajasimha, wanted to revive the almost extinct Buddhism in Lanka, and made arrangement with the Dutch to bring monks from Siam (Thailand) to perform the ordination on novice monks as there were no qualified monks to perform the ordination anywhere in Lanka. There were many missions sent Siam, and the last one was in the year 1745 A. D. While the mission was in Siam, the king Sri Vijaya Rajasimha died, and a new King Kirty Sri Rajasimha succeeded to the throne. The king of Siam required re-affirmation from the new king. There was delay, and the monks were sent from Siam in 1753. The monks came and established the Malwatta and Ascriya chapters in Kandy. These monks came from Siam, and that is why these two chapters are known as Siam Nikkayas. Till that time the prominent position was accorded to the Goddess Pattini in the Perahera procession. The intolerant monks who came from Siam objected to the king that the Dalada shall be in the forefront of the festival.
The tooth relic became prominent in the Perahera festival thereafter, only about two hundred and seventy years ago. There are four religious games, all intimately connected with the worship of Pattini, established in Lanka by the time of Gajabahu or shortly after his rule, called An Keliya, Dodan Keliya, Pol Keliya and Mal Keliya. See page 631 of Reference 'Ancient Ceylon by Henry Parker / This book had been first published in 1909 and was republished by the Asian Educational Service in 1981. Thereafter the AES had done 3 reprints, the last being 1999.'
நன்றி
Thanks
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
[Kandiah Thillaivinayagalingam,
Athiady, Jaffna]
பகுதி / Part: 129 தொடரும் / Will follow
துளி/DROP: 2084 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 128
https://www.facebook.com/groups/978753388866632/posts/34221694934145716/?
By
kandiah Thillaivinayagalingam ·
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.