Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்களம் நேர்மையான பாதையை நோக்கி போய்க் கொண்டு இருக்கிறதா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழை நேசிப்பவர்களுக்கும்,வாசிப்பவர்களுக்கும்,பண்பாக எழுதும் கள உறுப்பினர்களுக்கும்,நிர்வாகிகளுக்கும்,மட்டுறுத்தினருக்கும் வணக்கம்...நான் யாழில் இணையும் போது யாழ்களம் நேர்மையாக,தாயகத்தை நேசிக்கும் மக்களுக்காக,நமது தாய் மொழியாம் தமிழ் மொழியில் கலந்து உரையாடி நன்கு விடயங்களை தெரிந்து கொள்வதற்காக நம்மவரினால் ஆரம்பிக்கப் பட்டது என்று நினைத்தேன்.

ஆனால் தற்போது யாழில் எழுதுபவர்கள் பலர் பல ஜடிக்கள் வைத்துள்ளனர்...தாங்களே கருத்துக்களை எழுதி விட்டு தாங்களே இன்னொரு பெயரில் வந்து பச்சையும் குத்தி உள்ளனர்[தங்களுக்கு தாங்களே பச்சை குத்தினால் தாங்கள் சிறந்த கருத்தாளர்கள் என மற்றவர்கள் நினைப்பார்கள் என அவர்களுடைய நினைப்பு]...ஒரு ஜடியில் வந்து ஏதாவது உறுப்பினர்களுடன் வாக்கு வாதப் பட்டால் அந்த உறுப்பினர்களை தனிப்பட தாக்குவதற்காகவே இன்னுமொரு ஜடியை தயாரித்து புதுப் பெயரில் வந்து அந்த உறுப்பினர்கள் மீது தனிப்பட்ட தாக்குதல்கள் நடத்துகிறார்கள்[இது நிர்வாகத்திற்கு தெரியும்]...ஒரு அப்பாவுக்கும்,அம்மாவிற்கு பிறந்து ஒழுங்காய் வளர்க்கப்பட்டு இருந்தால் சக உறுப்பினருக்கு எப்படி மரியாதை கொடுப்பது என தெரிந்திருக்கும்.கருத்துக்களத்தில் விவாதங்களை எதிர் கொள்ள முடியாத கோழைகள் தான் தங்கள் தோல்விகளை மறைக்க் இப்படி முட்டாள்தனமான தாக்குதல்களை செய்வார்கள்.புதுப் பெயரில் வந்து பதிந்த கருத்துகளே கொஞ்ச‌ம் அதில் வேறு அவர் சொல்கிறார் "பண்பா எழுதுபவர்களுக்கு பண்பா எழுதலாம், நக்கல் நளினம் உள்ளவைக்கு.., எதுக்கெடுத்தாலும் முட்டையில் மயிர் பிடுங்கிறவைக்கு" யாழ்கள உறுப்பினர்களே இதற்கு உங்கள் பதிலைக் கூறுங்கள் நான் எப்பவாவது பண்பற்ற முறையில் ,சக உறுப்பினர்களை தாக்கி எழுதி உள்ளேனா?...யாழ் களத்தில் கிட்ட தட்ட 500 பதிந்தவரோடு எத்தனை பதிவுகளில் நான் விவாதித்து உள்ளேன்?... இவர் "யானைக்கு ஒரு காலம் என்டால் எறும்புக்கு ஒரு காலம் " என்டு சொல்லி ஒரு தலைப்பை ஆரம்பித்து யாழ் கள சக உறவை தனிப்பட்ட ரீதியில் நக்கலடித்து எழுதி இருந்தார் அதை நகைச்சுவையாம் என்டு சொல்லி சிரிப்போம்,சிறப்போம் என்ட‌ பகுதியில் இணைத்திருந்தார்...அதை நான் வந்து தட்டிக் கேட்டவுடன்[அதை எடிட் பண்ணி விட்டார்] ஜயாவிற்கு மூக்குக்கு மேல் கோபம் பொத்திக் கொண்டு வருகுதோ!...அது அவருக்கு முட்டையில் மயிர் புடுங்கிற மாதிரி இருக்குது.

யாழ் களத்திற்கு என்று கருத்துக்கள விதிமுறைகள் இருக்குதாம் எனச் சொல்லி வலைஞன் எழுதியிருந்தார்...அதை யாழின் கீழ்ப் ப்குதியில் நிர்வாகம் இணைத்திருக்கிறது...அதை வாசித்தால் உங்களுக்கு தெரியும்.அதில் 6 விட‌யமாக சொல்லப்பட்டது என்ன என்டால் சக கருத்துகள உறுப்பினரை சீண்டும் வகையில் கருத்துக்கள் அமைதல் ஆகாது.7 வது விட‌யம் தனிப்பட்ட யாரையும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ தாக்கி கருத்து/விமர்சனம் வைக்கப்படல் ஆகாது...ஆனால் தற்போது நிர்வாகமோ,மட்டுறுத்தினரோ இந்த விட‌யத்தை கவனிப்பதே இல்லை இன்னும் சொல்லப் போனால் மட்டுறுத்தினர் சிலரும் இதற்கு ஆதர‌வாக இருக்கிறார்கள்...யாழ் நிர்வாகிகளுக்கோ,மட்டுறுத்தினர்களுக்கோ நேர‌ம் இல்லை நான் ஒத்துக் கொள்கிறேன் ஆனால் சில மட்டுறுத்தினர் அதை வாசித்து விட்டு தங்களுக்கு என்ன என்று விட்டு,விட்டு போகிறார்கள்.மட்டுறுத்தினர்களுக்கு வாசிக்க நேரம் இல்லை என்டால் நாங்கள் ரிப்போட் பண்ணலாம் ஆனால் அவர்கள் வாசித்து விட்டு தங்களுக்கு என்ன என்று போனால் மட்டுறுத்தினர் என்ற பகுதிக்கு இவர்கள் தகுதியானவர்கள் தானா?...மட்டுறுத்தினர் என்ட‌ பதவியில் இருப்பவர்கள் பொதுவாக,நியாயமாக செயற்பட‌ வேண்டும்.தங்களுக்கு தெரிந்தவர்,பழகினவருக்கு ஒரு நியாயம் மற்றவருக்கு என்னொரு நியாயமா?...கருத்துக்களை நீக்கும் போது என்ன கார‌ணத்திற்காக நீக்குகிறோம் என்ட‌ தலைப்பு ஒன்று இருக்குது ஆனால் தற்போது மட்டுறுத்தினர்கள் என்னத்திற்காக நீக்குகிறோம் என சொல்லாமலே நீக்குகிறார்கள் இது நியாயமா?...மட்டுறுத்தினர்களும்,உறுப்பினர்களும் கலந்து உரையாடுவதற்காக ஒரு திரி திறக்கப் பட‌ வேண்டும்...மட்டுறுத்தினர்கள் நடுநிலையாக செயற்பட‌ வேண்டும்.

ஒரு தனி மனித தாக்குதலாக அண்மையில் ஆர‌ம்பிக்கப்பட்டு மோகன் அண்ணாவினால் லொக் பண்ண‌ப்பட்ட பதிவை நீக்க வேண்டும் அத்தோடு அத் திரியை ஆர‌ம்பித்தவருக்கு தனி மனித தாக்குதலை நட‌த்தியதற்காக எச்சரிக்கை கொடுக்கப்பட‌ வேண்டும்...இனி மேல் பண்பற்ற முறையில் தனிப்பட்ட தாக்குதலை அவர் மட்டுமல்ல எவருமே செய்யக் கூடாது...இவை எல்லாம் என் அன்பான வேண்டுகோள் நிர்வாகம் இதை கணக்கில் எடுக்கும் என நினைக்கிறேன்...இது தொட‌ர்பாக நிர்வாகத்தினதும்,மட்டுறுத்தினர்களதும்,உறுப்பினர்களது பதில்களை எதிர் பார்க்கிறேன்.

"நாம் என்ன ஆயுதம் எடுக்க வேண்டும் என்பதை நம் எதிரியே தீர்மானிக்கிறான்"...இதற்கு என்ன அர்த்தம் என்பது நான் சொல்லாமலே உங்களுக்கு விளங்கும்...நன்றி...வணக்கம்

பி;கு மட்டுறுத்தினர்களோ,நிர்வாகிகளோ இந்த பதிவை நீக்க மாட்டார்கள் என்ட‌ நம்பிக்கை எனக்கு இருக்குது

  • Replies 157
  • Views 10.4k
  • Created
  • Last Reply

இது ஒரு கருத்துக்களம், இதில் கருத்துக்களை மட்டுமே வாசித்து பண்புடன் விவாதித்தால் பல பிரச்சனைகள் இருக்காது. அதைவிடுத்து யார் கருத்தை தெரிவித்தார் என கூடுதல் அக்கறை செலுத்தப்படும்பொழுது அந்த உறுப்பினர்களின் நேர்மையே இழக்கப்படுகின்றது. யாழ்களமும் தனது நன்மதிப்பை இழக்க நேரிடலாம்.

இதில் மட்டுறத்தினர்களை குறை சொல்லமுடியாது. கள உறுப்பினர்களே தத்தம் கருத்துக்களுக்கு பொறுப்பு எடுக்கவேண்டும்.

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

ரதி,

யாழின் கடந்த காலத்தில்... அவ்வப் போது தனிப்பட்ட தாக்குதல்களும் நடந்தே வந்துள்ளன. (அதற்காக நான் அதனை ஆதரித்தது இல்லை). யாழ் களத்தில் துணிச்சல் மிக்க பெண்களாக வல்வைசகாரா, சாந்தி,ரதி ஆகிய மூவரையும் தான் நினைக்கின்றேன். இப்போது வல்வை சகாரா கவிதைப் பகுதியிலும், திண்ணையிலும் தான்.... கூடிய பதிவுகளை இடுகின்றார். சாந்தி நேசக்கரத்திலும், கதை கதையாம் பகுதியிலும் அக்கறை செலுத்துவதால்.... மற்றைய பகுதிகளுக்கு அதிகம் வருவதில்லை. மிஞ்சி இருக்கும் நீங்கள் தான்.... அநேகமாக எல்லாப் பகுதிகளிலும் துணிந்து கருத்து எழுதுபவர். அதானால் உங்களை மற்றவர்கள் சீண்டிப் பார்க்கின்றார்களே... ஒழிய, தனிப்பட்ட தாக்குதலாக கருதமுடியவில்லை. காய்க்கிற மரத்துக்குக்தான் கல்லெறி விழும் என்பார்கள். உங்கள் துணிச்சலுக்கு இது எல்லாம் தூசி.ரேக் இற் ஈசி.smile.gif

சில வாதங்களில் கருத்துக்கள் எனது எழுத்துக்களை நோக்கி துரோகம் என்று வந்திருக்கின்றது முன்பொருமுறை எழுத்துக்களை வைத்து தாழ்ந்த ஜாதி என்ற பொருள்பட வந்திருக்கின்றது , சிங்களக் கூலி என்றும் ஆகக் கூடுதலாக போட்டுத் தள்ளுதல் என்ற தொனிப்படவும் வந்திருக்கின்றது. எந்த நிலையிலும் நான் எவரையும் வெறுப்பதும் இல்லை நேசிப்பதும் இல்லை. நான் கருத்துக்களுக்கும் சம்பவங்களுக்கும் பதில் கருத்து எழுத முற்படுகின்றேன் எழுதியவர்களையும் சம்மந்தப்பட்டவர்களையும் பற்றி சிந்திக்க விரும்புவதில்லை. கருத்துக்களத்தில் இணைந்திருக்க விருப்பம் தவிர கருத்து எழுதுபவர்களின் களத்தில் இல்லை. கருத்து எழுதுபவர்களின் மனம் நோகும் என்று எனது கருத்துக்களை முன்வைப்பதை தவிர்ப்பதில்லை. நண்பனும் இல்லை எதிரியும் இல்லை துரோகியும் இல்லை பிரதேசவாதியும் இல்லை என்னும் நிறைய இல்லை ஒன்றே ஒன்று மட்டுமே இருக்கின்றது.

  • தொடங்கியவர்

யாழ்களமும் தனது நன்மதிப்பை இழக்க நேரிடலாம்.

இதில் மட்டுறத்தினர்களை குறை சொல்லமுடியாது. கள உறுப்பினர்களே தத்தம் கருத்துக்களுக்கு பொறுப்பு எடுக்கவேண்டும்.

அகூதா நீங்கள் முதல் பந்தியில் எழுதியது மெத்தச் சரி ஆனால் இரண்டாவது பந்தியில் மட்டுறுத்தினரை குறை கூடாது என எதை வைத்து சொல்கிறீர்கள் எனத் தெரியவில்லை...நான் ஆதார‌த்தோடு சொல்கிறேன் ஒரு மட்டுறுத்தினர் யாழில் பக்க சார்பாக தான் நட‌ந்து கொள்கிறார் அதற்கு ஆதார‌ம் உண்டு. அவர் அந்த நகைச்சுவை என்று சொல்லப்பட்ட தலைப்பை போய் வாசித்திருக்கிறார் அத்தோடு நல்ல கற்பனை என எழுதியவரையும் பாராட்டி உள்ளார்... யாழில் ர‌தி என்கிற உறுப்பினரை இந்தப் பதிவு தனிப்பட‌ தாக்குகின்ற மாதிரி அவருக்கு தெரியவில்லையா?...அவரில் பிழை இல்லா விட்டால் அவர் தனது கருத்தினை இங்கு வந்து எழுதலாம்...நன்றி உங்கள் கருத்திற்கு

ரதி,

யாழின் கடந்த காலத்தில்... அவ்வப் போது தனிப்பட்ட தாக்குதல்களும் நடந்தே வந்துள்ளன. (அதற்காக நான் அதனை ஆதரித்தது இல்லை). யாழ் களத்தில் துணிச்சல் மிக்க பெண்களாக வல்வைசகாரா, சாந்தி,ரதி ஆகிய மூவரையும் தான் நினைக்கின்றேன். இப்போது வல்வை சகாரா கவிதைப் பகுதியிலும், திண்ணையிலும் தான்.... கூடிய பதிவுகளை இடுகின்றார். சாந்தி நேசக்கரத்திலும், கதை கதையாம் பகுதியிலும் அக்கறை செலுத்துவதால்.... மற்றைய பகுதிகளுக்கு அதிகம் வருவதில்லை. மிஞ்சி இருக்கும் நீங்கள் தான்.... அநேகமாக எல்லாப் பகுதிகளிலும் துணிந்து கருத்து எழுதுபவர். அதானால் உங்களை மற்றவர்கள் சீண்டிப் பார்க்கின்றார்களே... ஒழிய, தனிப்பட்ட தாக்குதலாக கருதமுடியவில்லை. காய்க்கிற மரத்துக்குக்தான் கல்லெறி விழும் என்பார்கள். உங்கள் துணிச்சலுக்கு இது எல்லாம் தூசி.ரேக் இற் ஈசி.smile.gif

தமிழ்சிறி இவர்களுக்கு பயந்து நான் யாழை விட்டுப் போக மாட்டேன் ஆனால் இப்படியே விட்டால் இவர்களுக்கு தாங்கள் செய்வது சரி என்னும் எண்ணம் வந்து விடும் அதனால் தான் இப்படி ஒரு பதிவை எழுதினேன்...நன்றி :)

சில வாதங்களில் கருத்துக்கள் எனது எழுத்துக்களை நோக்கி துரோகம் என்று வந்திருக்கின்றது முன்பொருமுறை எழுத்துக்களை வைத்து தாழ்ந்த ஜாதி என்ற பொருள்பட வந்திருக்கின்றது , சிங்களக் கூலி என்றும் ஆகக் கூடுதலாக போட்டுத் தள்ளுதல் என்ற தொனிப்படவும் வந்திருக்கின்றது. எந்த நிலையிலும் நான் எவரையும் வெறுப்பதும் இல்லை நேசிப்பதும் இல்லை. நான் கருத்துக்களுக்கும் சம்பவங்களுக்கும் பதில் கருத்து எழுத முற்படுகின்றேன் எழுதியவர்களையும் சம்மந்தப்பட்டவர்களையும் பற்றி சிந்திக்க விரும்புவதில்லை. கருத்துக்களத்தில் இணைந்திருக்க விருப்பம் தவிர கருத்து எழுதுபவர்களின் களத்தில் இல்லை. கருத்து எழுதுபவர்களின் மனம் நோகும் என்று எனது கருத்துக்களை முன்வைப்பதை தவிர்ப்பதில்லை. நண்பனும் இல்லை எதிரியும் இல்லை துரோகியும் இல்லை பிரதேசவாதியும் இல்லை என்னும் நிறைய இல்லை ஒன்றே ஒன்று மட்டுமே இருக்கின்றது.

சுகன் உங்கள் கருத்தை முழு மனதாக ஒத்துக் கொள்கிறேன் ஒரு விடயத்தை தவிர நான் யாழை என் குடும்பம் போல் நேசிக்கிறேன். நானும் எனக்கு எது நியாயம் எனப்படுதோ அதை எழுதுகிறேன்...அது பல பேருக்கு பிடிப்பதில்லை....ஆனாலும் நான் எனக்கு எது நியாயம் எனப்படுகிறதோ அதைத் தொட‌ர்ந்து எழுதுவேன்...நன்றி

Edited by ரதி

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் இடைக்கிடை நடக்கும் வழமையான விளையாட்டு!

பல அவதாரங்களில் இருப்பதும் (புதிய உறுப்பினர்கள் சேர்ந்து யாழுக்கு செழுமையூட்டுகின்றார்கள் என்று பார்த்தால், பழைய கள்ளு புதிய மொந்தை என்ற கதை போல இருக்கின்றது சிலரின் நடவடிக்கைகள்), கருத்துக்களை வாசிக்கமாலேயே கருத்துக்களை இட்டவரை வைத்தே பதில் கருத்துக்களை ஊகத்தின் அடிப்படையில் வைப்பதும், ஆரோக்கியமான விவாதங்களில் ஈடுபாடு காட்டாமல் அரட்டைகளில் ஈடுபடுவதும் மோகன் அண்ணாவுக்கு வெறுப்பை ஏற்படுத்தி யாழை நிரந்தரமாகப் பூட்ட வழிசமைக்கும்!

  • கருத்துக்கள உறவுகள்

ரதி இதுக்கு போயி இவ்வளவு ரென்சனாகிக்கொண்டு. யாழ்களம் தொடங்கிய காலத்திலிருந்தே இந்தப் பிரச்சனையும் இருக்கு உங்களிற்கு பிடிக்காத அல்லது தனிமனித தாக்குதல்களை நிருவாகாத்திற்கு தெரியப்படுத்த புது வழிமுறைகளை செய்திருக்கிறார்கள்.றிப்போட்டை அமத்தி ஒரு பெட்டிசனை போட்டிட்டு அடுத்த வேலையை பாக்கிறதுதான் சிறந்தவழி.நிருவாகம் இப்பிடித்தான் செய்யவேணும் மட்டிறுத்தினர் ஓடியந்து பதில் தரவேண்டும் எண்டு கட்டளையள் போட்டால் அவை பேசாமல் யாழை பூட்டிட்டு போறது நல்லது எண்டுதான் நினைப்பினம்.

யாழ்ப்பாணத்தில் முடியாமல்போனாலும், அட்லீஸ்ட் யாள்களத்திலாவது ஒருவருக்கொருவர் முரண்பட்டு எதிரும்புதிருமாய் போகாதீர்கள்!

ரதி.. இதனை நேரடியாகவே மோகனுக்கு நீங்க அனுப்பி இருக்கலாம்!

அண்ட் மோகன்&மட்டுறுத்தினர்கள் , அப்பப்போ , தேவயற்ற கருத்துக்களை & தலைப்புக்குகளை தூக்கிவிட்டு , உறுப்பினருக்கு அறிய கொடுத்திருக்கலாம்!

இது பதிவிடும்களம், கிட்டத்தட்ட வாய்ச்சண்டைபோலவே உறுப்பினர்களுக்கிடையிலான பதிவுகள், இடம்பெறும் வாய்ப்புக்க்கள் அதிகம்!

வாய்ச்சண்டைகள் ஒருபோதுமே ஒருவனை கெட்டவனெ(ளெ)ன்றோ அல்லது நல்லவனெ(ளெ)ன்றோ, ஒருபோதும் தீர்மானித்துவிடாது எங்கிறது நம்ம தனிப்பட்ட கருத்து!!

மற்றும்படி,

ஒரே நபர் இருபெயரில் வந்து பதிவிடுவது, அவருக்கு அவரே பச்சை குத்துவதுபோன்ற ரதியின் கருத்துக்கள் முற்றிலும் நியாயமானவையே!

ரதியக்கா , உங்களுக்கு எந்தவிதத்திலும் ஆலோசனை சொல்ல எனக்குத் தகுதியில்லை. கிருபனுடைய கருத்தே எனது கருத்தாகும். கருத்தாடல்களை ஆரோக்கியமாக்குவது நாங்கள்தான் . நன்றி ..

  • கருத்துக்கள உறவுகள்

சிலர் தாங்களும் குழம்பி மற்றவர்களையும் குழப்புவதுபோல் உள்ளது !

குழம்பின குட்டையில்தான் நல்ல மீன் கிடைக்கும். :icon_mrgreen:

http://youtu.be/6JRjHh91Gx4

Edited by தமிழ் அரசு

கருத்தாளர்களே கடமை உணர்ந்து நடக்க வேண்டும். நிர்வாகம் எல்லோரையும் கட்டுப்படுத்திக் கொண்டிருக்க முடியாது. சிலர் தனி நபர் தாக்குதல்களால் களத்துக்கு வருவதில்லை என நினைக்கிறேன் முக்கியமாகப் பெண்கள். அவர்கள் ஒருசில பகுதிகளில் மாத்திரமே கருத்திடுகிறார்கள்.

பல நல்ல கருத்தாளர்கள் இங்கு தலை காட்டுவதேயில்லை.

யாராவது தனிமனிதத் தாக்குதல் நடாத்தினால் அவரின் பாணியிலே, அவருக்கு விளங்கக் கூடியதாக கருத்திட வேண்டும்.

நாகரீகம் என்றால் நாகரீகம். அனாகரீகமேன்றால் அநாகரீகம்.

பி.கு.

விழும் பச்சைகளை வைத்துக் கொண்டு கச்சை கூட கட்ட முடியாது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாஸ்திரி அண்ணா,அறிவிலி நான் முதலில் மோகன் அண்ணாவுக்கு ரிப்போட் பண்ணத் தான் இருந்தனான் ஆனால் ஒரு மட்டுறுத்தினர் வந்து அத் திரியில் கருத்து எழுதும் போது நீக்க வேண்டியதை நீக்கிப் போட்டு தன் கருத்தை எழுதுவார் என்டே நினைத்தேன்.ஆனால் அவர் மட்டுறுத்த வேண்டிய கருத்தை நீக்காமல் தன் கருத்தை எழுதி விட்டு போயிட்டார்.அவருக்கு தெரியாதா எதை நீக்க வேண்டும்,நீக்க கூடாது என அப்படி தெரியா விட்டால் பிறகு எதற்கு இந்த பதவியில் இருக்க வேண்டும்?... அதனால் தான் இனி மேல் ஒருத்தரும் தனி மனித தாக்குதலில் ஈடுபடக் கூடாது என்பதற்காக இத் திரியை ஆரம்பித்தேன்...கிருபன்,சாஸ்திரி அண்ணா,அறிவிலி,கோமகன் உங்கள் கருத்துக்களுக்கு நன்றி

சிலர் தாங்களும் குழம்பி மற்றவர்களையும் குழப்புவதுபோல் உள்ளது !

குழம்பின குட்டையில்தான் நல்ல மீன் கிடைக்கும். :icon_mrgreen:

http://youtu.be/6JRjHh91Gx4

தமிழரசு நீங்கள் சொல்ல வந்ததை தெளிவாக சொல்லலாம் அதற்கு எவ்வித தடையுமில்லை...இங்கே யார் குளம்பின குட்டையில் மீன் பிடிக்கிறார்கள் என சொல்லுங்கள்?...உங்களை எந்த விதத்திலோ நான் எழுதிய இந்தப் பதிவு பாதித்திருக்குது...அவர்கள் நான் செய்யும் பிழைகளை சுட்டிக் காட்டி எழுதுகிறார்களே என்ட‌ ஆதங்கத்தில் உங்கள் பதிவு உள்ளது...நன்றி

கருத்தாளர்களே கடமை உணர்ந்து நடக்க வேண்டும். நிர்வாகம் எல்லோரையும் கட்டுப்படுத்திக் கொண்டிருக்க முடியாது. சிலர் தனி நபர் தாக்குதல்களால் களத்துக்கு வருவதில்லை என நினைக்கிறேன் முக்கியமாகப் பெண்கள். அவர்கள் ஒருசில பகுதிகளில் மாத்திரமே கருத்திடுகிறார்கள்.

பல நல்ல கருத்தாளர்கள் இங்கு தலை காட்டுவதேயில்லை.

யாராவது தனிமனிதத் தாக்குதல் நடாத்தினால் அவரின் பாணியிலே, அவருக்கு விளங்கக் கூடியதாக கருத்திட வேண்டும்.

நாகரீகம் என்றால் நாகரீகம். அனாகரீகமேன்றால் அநாகரீகம்.

பி.கு.

விழும் பச்சைகளை வைத்துக் கொண்டு கச்சை கூட கட்ட முடியாது.

நன்றி தப்பிலி இனி மேல் யாராவது தனி மனித தாக்குதல் நடத்தினால் அவர்களுக்கு எதிராக தனி மனித தாக்குதலை நானும் நடத்துவேன்

  • கருத்துக்கள உறவுகள்

தயவு செய்து எதிர் வரும் காலத்திலயாவது தனிமனித தாக்குதல்களை நிறுத்திக் கொள்ளுங்கள்..யாழ் மேலும் வழ மோடு வளர வேண்டும் என்றால் அது ஒவ்வொரு யாழ் கழ உறுப்பினர்களிலும் கையிலும் தான் இருக்கிறது..முக்கியமாக இப்படி தேவை அற்ற விடையங்களை பெரிதாக தூக்கி அதை ஒரு சிறந்த கருத்தாடல் என நினைத்து தாங்களும் குளம்பி மற்றவர்களையும் குளப்பாதீர்கள்..யாழில் ஏற்படக் கூடிய ஒவ்வொரு மாற்றத்திலும் இப்படியானவர்களின் எழுத்துக்கள் மற்றும் அசமந்தப் போக்கும் ஒரு காரணம்....பக்கம்,பக்கமாக எழுதினால் போதாது அது எந்த வகையில் மக்களுக்கு பயன் அளிக்கிறது என்பதை யோசிக்க வேண்டும்.நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

அதை நான் வந்து தட்டிக் கேட்டவுடன்[அதை எடிட் பண்ணி விட்டார்]

களவிதிகளில் ஒன்று எழுதிய கருத்தை அழிக்கக்கூடாது என்பது.(எழுத்து பிழைகளை திருத்துவதை நான் குறிப்பிடவில்லை) அதனை மட்டுறுத்தினர் கவனிக்காதது கவலையளிக்கிறது.

ஒரு மட்டுறுத்தினர் யாழில் பக்க சார்பாக தான் நட‌ந்து கொள்கிறார் அதற்கு ஆதார‌ம் உண்டு. அவர் அந்த நகைச்சுவை என்று சொல்லப்பட்ட தலைப்பை போய் வாசித்திருக்கிறார் அத்தோடு நல்ல கற்பனை என எழுதியவரையும் பாராட்டி உள்ளார்... யாழில் ர‌தி என்கிற உறுப்பினரை இந்தப் பதிவு தனிப்பட‌ தாக்குகின்ற மாதிரி அவருக்கு தெரியவில்லையா?...அவரில் பிழை இல்லா விட்டால் அவர் தனது கருத்தினை இங்கு வந்து எழுதலாம்...நன்றி உங்கள் கருத்திற்கு

இணையவன் அண்ணாவையோ சொல்லுகிறீர்கள் ரதி.... :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம்ம்.. என்ன சுத்தி வளைச்சு பேசிக்கொண்டு. நேரடியாகவே விடயத்துக்கு வருவம் .

ரதி அக்கா என்ன கேட்கிறா ..

இணையவன் என்கிற மட்டறுத்தினர் ஒரு தனிமனித தாக்குதல் என்று தெரிந்து கொண்டும் நல்ல நகைச்சுவை என்று கருத்து எழுதிட்டு போயிருக்கிறார். அம்புட்டு தானே ..

ஒன்றில் அவர் பிழை விட்டு இருக்கலாம் (பிழைவிடுறது மனுஷ இயல்பு தானே ) :icon_idea:

அல்லது பக்கசார்பாக நடந்திருக்கலாம் (மனுஷன் என்றால் தெரிந்தவர்களுக்கு பல்லை இளிப்பது வழமை தானே ) :icon_idea:

அல்லது அவரே ஒரு மனித தாக்குதலை நடத்தி இருக்கலாம் (எங்கட எதிரிக்கு இழப்பு என்றால் எங்களுக்கு சந்தோசம் தானே ) :icon_idea:

அல்லது அவர் தெரியாமலே பண்ணியிருக்கலாம். (எல்லாம் தெரிஞ்சு கொண்டா செய்யிறனாங்கள்) :icon_idea:

சரி இதுக்கு என்ன தீர்வு ..

ஒன்றில் ஏன் கருத்தையும் தூக்கி என்னை தடை செய்யலாம் (அது இயலாமையின் வெளிப்பாடு)

அல்லது அந்த மட்டுறுத்தினருக்கு வேறு நகைசுவைகளையும் வாசித்து கருத்து எழுதிய பின் நேரம் இருக்கும் என்றால் ரதி அக்காவுடன் இந்த திரியில் அவரது செய்கைக்காக வாதிடலாம். (இது ஒரு ஆக்கபூர்வமான கருத்துக்களம்).

அல்லது அந்த மட்டுறுத்தினர் தனக்கு உள்ள அதிகாரத்தை பாவிச்சு ரதி அக்காவை தடை செய்யலாம் (இது சிங்களவன் செய்கிறது ) :icon_idea:

கருத்தாளர்களே உங்களுக்கும் வேறு ஏதும் தெரிவு இருந்தால் சொல்லுங்கப்பா எனக்கு கை வலிக்குது :lol: :lol: :lol::icon_idea:

Edited by முதல்வன்

களவிதிகளில் ஒன்று எழுதிய கருத்தை அழிக்கக்கூடாது என்பது.(எழுத்து பிழைகளை திருத்துவதை நான் குறிப்பிடவில்லை) அதனை மட்டுறுத்தினர் கவனிக்காதது கவலையளிக்கிறது.

நானும் கவனித்தேன் உடையார் அவர்கள்மேல் பிழை இல்லையென்றால் எழுதியதை அழித்தது ஏன்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தயவு செய்து எதிர் வரும் காலத்திலயாவது தனிமனித தாக்குதல்களை நிறுத்திக் கொள்ளுங்கள்..யாழ் மேலும் வழ மோடு வளர வேண்டும் என்றால் அது ஒவ்வொரு யாழ் கழ உறுப்பினர்களிலும் கையிலும் தான் இருக்கிறது..முக்கியமாக இப்படி தேவை அற்ற விடையங்களை பெரிதாக தூக்கி அதை ஒரு சிறந்த கருத்தாடல் என நினைத்து தாங்களும் குளம்பி மற்றவர்களையும் குளப்பாதீர்கள்..யாழில் ஏற்படக் கூடிய ஒவ்வொரு மாற்றத்திலும் இப்படியானவர்களின் எழுத்துக்கள் மற்றும் அசமந்தப் போக்கும் ஒரு காரணம்....பக்கம்,பக்கமாக எழுதினால் போதாது அது எந்த வகையில் மக்களுக்கு பயன் அளிக்கிறது என்பதை யோசிக்க வேண்டும்.நன்றி.

யாயினி எதை வைத்து இதை தேவையற்ற விவாதம் என கொஞ்சம் விளங்கப்படுத்துவீங்களா?...முதலில் ஒரு பதிவை நன்கு வாசித்து விட்டு கருத்தை பதிவிடுங்கள்...உங்கள் மேல் தனி மனித தாக்குதல் யாராவது செய்தால் நீங்கள் யாழை விட்டு கருத்து எழுதாமல் ஓடி விடுவீர்கள் ஆனால் நான் அப்படி இல்லை அந்த தனி மனித தாக்குதலை நிறுத்த வேண்டுமாயின் இப்படியான பதிவுகளை யாழில் போட்டு இனி மேல் தனி மனித தாக்குதல் நடக்காமல் செய்வேன்...உங்களுக்கு என்ன நடந்தது என்பதே தெரியாது ஆகையால் இது சின்ன விடயமாக இருக்குது...அது என்ன எழுதி இருக்கிறீர்கள் யாழில் ஏற்படக் கூடிய ஒவ்வொரு மாற்றத்திலும் இப்படியானவர்களின் எழுத்துக்கள் மற்றும் அசமந்தப் போக்கும் ஒரு காரணம் என எந்த வகையில் எனது கருத்துக்கள் யாழில் ஏற்படும் அசமந்த போக்குக்கு காரணம் என சொல்லுவீங்களா?...ஒரு வரியில் எழுதியினாலும் மூளையை யோசித்து எழுதுங்கள் இல்லா விட்டால் எழுத வேண்டாம்...நன்றி...வணக்கம்

இணையவன் அண்ணாவையோ சொல்லுகிறீர்கள் ரதி.... :rolleyes:

ஆம் இணையவன் தான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம்ம்.. என்ன சுத்தி வளைச்சு பேசிக்கொண்டு. நேரடியாகவே விடயத்துக்கு வருவம் .

ரதி அக்கா என்ன கேட்கிறா ..

இணையவன் என்கிற மட்டறுத்தினர் ஒரு தனிமனித தாக்குதல் என்று தெரிந்து கொண்டும் நல்ல நகைச்சுவை என்று கருத்து எழுதிட்டு போயிருக்கிறார். அம்புட்டு தானே ..

ஒன்றில் அவர் பிழை விட்டு இருக்கலாம் (பிழைவிடுறது மனுஷ இயல்பு தானே ) :icon_idea:

அல்லது பக்கசார்பாக நடந்திருக்கலாம் (மனுஷன் என்றால் தெரிந்தவர்களுக்கு பல்லை இளிப்பது வழமை தானே ) :icon_idea:

அல்லது அவரே ஒரு மனித தாக்குதலை நடத்தி இருக்கலாம் (எங்கட எதிரிக்கு இழப்பு என்றால் எங்களுக்கு சந்தோசம் தானே ) :icon_idea:

அல்லது அவர் தெரியாமலே பண்ணியிருக்கலாம். (எல்லாம் தெரிஞ்சு கொண்டா செய்யிறனாங்கள்) :icon_idea:

சரி இதுக்கு என்ன தீர்வு ..

ஒன்றில் ஏன் கருத்தையும் தூக்கி என்னை தடை செய்யலாம் (அது இயலாமையின் வெளிப்பாடு)

அல்லது அந்த மட்டுறுத்தினருக்கு வேறு நகைசுவைகளையும் வாசித்து கருத்து எழுதிய பின் நேரம் இருக்கும் என்றால் ரதி அக்காவுடன் இந்த திரியில் அவரது செய்கைக்காக வாதிடலாம். (இது ஒரு ஆக்கபூர்வமான கருத்துக்களம்).

அல்லது அந்த மட்டுறுத்தினர் தனக்கு உள்ள அதிகாரத்தை பாவிச்சு ரதி அக்காவை தடை செய்யலாம் (இது சிங்களவன் செய்கிறது ) :icon_idea:

கருத்தாளர்களே உங்களுக்கும் வேறு ஏதும் தெரிவு இருந்தால் சொல்லுங்கப்பா எனக்கு கை வலிக்குது :lol: :lol: :lol::icon_idea:

இணையவன் அப்படி எல்லாம் புத்தி கெட்டு என்னை தடை செய்ய மாட்டார் அவர் நிட்சயமாய் இப் பதிவில் வந்து எழுதுவார் என்டு எனக்கு நம்பிக்கை இருக்கு

  • கருத்துக்கள உறவுகள்

Asku busku ippidi Donna inaiyavan vanthu eluthuvara? Lolz rathi Akka ungala vaichu oral joke panna athai perumaiyah eduthukanum naan endhal appidi thaan edupan at least we r making some one to laugh

களவிதிகள் என்று இருப்பது அதனை நாம் பின்பற்றவே! பலர் அதனைக் கடைப்பிடித்தாலும், ஒரு சிலர் களவிதிமுறைகளை மீறுவதற்காக யாழ்களம் நேர்மையாகப் போகவில்லை என்று எடுத்துக் கொள்ள முடியாது.

கருத்து எழுதுபவர்கள், எந்த விதத்திலையும் சக கருத்தாளரை தனிப்பட்ட முறையிலோ, அவரது வாழ்க்கை முறையையோ விமர்சிப்பது வரவேற்கத்தக்க ஒரு செயல் இல்லை.

ஆத்திரத்தில் கருத்துக்களை முன்வைப்பவர்கள் தயவு செய்து தாங்கள் எழுதும் கருத்தை மீளப் படித்துப் பார்த்து விட்டு பதிவது பல பிரச்சனைகளைக் குறைக்கும். மோகன் அண்ணாவுக்கும் வீண் தலையிடி குறையும்.

ஒரு சிலர் தான் விதிகளை அடிக்கடி மீறுபவர்கள் என்று பார்த்தால் அதில் இன்னும் சிலர் தாங்களும் அப்படிப் பட்டவர்கள் தான் என்று எடுக்கும் முயற்சியைப் பார்க்கும் போது கவலையளிக்கிறது

முகங்கள் தெரியாமல் இருந்தும் யாழ்களம் ஒரு குடும்பம் என்கிறோம், இங்கிருந்து ஒருவரை ஒருவர் தனிப்பட்ட ரீதியில் தாக்கி மனம் நோகப் பண்ணி என்னத்தை சாதிக்கப் போகிறோம் என்று எனக்குத் தெரியவில்லை. யாழ்களத்தை மூடாது பார்த்துக் கொள்ளவது எம் ஒவ்வொருவரிலும் தங்கி உள்ளது!!

Edited by குட்டி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தங்கச்சி களம் எண்டால் பலதும்பத்தும் இருக்கத்தான் செய்யும்.இருந்தாலும் ஒண்டு சொல்லுறன்.....சொல்லால் அடித்தவனை சொல்லால் திருப்பியடி...உலகமே உன்னை போற்றி புகழும். :wub:

  • கருத்துக்கள உறவுகள்

என்னை பொறுத்த வரையில் யாழ் நிவாகம் (நடாத்துனர்கள்) ஒரு ஊடகம் எவ்வளவு நியாயமான முறையில் அனைத்து உறுப்பினர்களுடனும் நடக்க முடியுமோ அப்படி நடத்துகின்றது இதை விட பெரிதாக ஏதாவது செய்ய முடியும் என நான் நினைக்கவில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உது எல்லாம் சும்மா மனபிராந்தி....................எவனை பாத்தாலும் நம்மை நக்கல் பண்ணூறமாதிரியே இருக்கும்............

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்னை பொறுத்த வரையில் யாழ் நிவாகம் (நடாத்துனர்கள்) ஒரு ஊடகம் எவ்வளவு நியாயமான முறையில் அனைத்து உறுப்பினர்களுடனும் நடக்க முடியுமோ அப்படி நடத்துகின்றது இதை விட பெரிதாக ஏதாவது செய்ய முடியும் என நான் நினைக்கவில்லை.

நிர்வாகம் நியாயமாய் தான் நடக்கிறது...நீங்கள் வந்து 2,3 ஜடியில் எழுதும் போது பார்த்துக் கொண்டு பேசாமல் தானே இருக்கிறது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.