Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பா வா ம் ...பி ற பா க ர ன்

Featured Replies

அப்ப வசந்தி எண்ட மீன்குஞ்சு தூண்டில்லை மாட்டீட்டுது எண்டுறியள் சாத்திரி :) :) உங்களுக்கு ஒரு பச்சை இண்டைக்கு முடிஞ்சு போச்சுது :lol::lol: .

  • Replies 113
  • Views 17.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அடக்கடவுளே அந்த நேரம் ஊரிலயே சிறி அண்ணை நிண்டனிங்கள்...?அப்பிடியே எழுதி இருக்கிறியள்...எனக்கு எல்லாம் நினைவுக்குள் வந்து சுழழுது...உந்தக் கெலிக்கடிச்சது புக்காற அடிச்சது..இயக்கப்பனிஸ்மென்ற்..அப்பப்பா..உண்மையைச்சொல்லுங்கோ..ஊரிலேய நிண்டனியள்..உந்தக் கிணத்துக்க குப்பைபோட்ட கதை சாவகச்சேரியில அமோகமா நடந்தது ஆறுமாதமாய் வலிகாமச் சனம் இடம்பெயர்ந்து இருக்கேக்க..உதால சிலருக்கு இயக்கம் செருப்புத்தண்ணி அவிச்சுக்குடுத்த சம்பவமும் இடம்பெற்றது..சாவகச்சேரியில் றோட்டுப் பக்கம் நீட்டிக்கொண்டிருந்த முருக்கம் மரங்களின் தடிகள் எல்லாம் மொட்டையாக இருக்கும்..அனேகமான இடம்பெயர்ந்த மக்களுக்கு அந்த நேரம் உந்த முருங்குகளும் மரவள்ளியும்தான் கைகொடுத்தது..உந்த மண்மீட்பு நிதிக்கொடுப்பில் எங்கட வீடும் நகைகொடுத்திருந்தது..அம்மாவின் சங்கிலி..நானும் அம்மாவும்தான் முதலில் கூட்டத்திற்க்குப்போனோம்..அங்கு வைத்து நிதிகொடுக்கும்படி கூறப்பட்டது கொடுக்காவிட்டால் தண்டனை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.. பலர் சண்டைபுடிச்சுக்கொண்டிருந்தினம் தங்களிடம் இல்லை என்னத்தைப் பிடித்துதருவது என்று..ஆனால் அம்மா எதுவும் பேசாமல் வந்து விட்டா..அப்பொழுது நான் சிறுவன்..பின்னர் அம்மா சொல்லப்பட்ட தவணைக்குபோய் தன்ர சங்கிலியைக் கொடுத்து விட்டு வந்துவிட்டா..பின்னர் பலருக்கு அவர்கள் கொடுத்த பணத்திற்க்கு அல்லது நகைக்கு ஈடான தங்கப் புலிச்சின்னம் குலுக்கல் முறையில் வழங்கப்பட்டது..ஆனால் கடைசிவரை எங்களுக்கு விழவில்லை..அதற்கிடையில் பிரச்சனை தொடங்கிவிட்டது.அம்மா அதை திருப்பி பெறவேண்டும் என்ற எண்ணத்தில் கொடுக்கவில்லை..பின்னர் நாங்கள் வன்னிபோய் நான் சிறுவன் என்பதால் மீனாச்சியைபோலன்றி பிணைவைக்காமலே வவுனியா வந்து ஊருக்கு வந்துவிட்டோம்...பதிவு சூடு பிடிக்குது தொடருங்கள் சிறிஅண்ணை...

Edited by சுபேஸ்

இரண்டு,மூன்று இடங்களில் நீங்கள் சிறுவன் என யாருக்கு சொல்கிறீர்கள் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு,மூன்று இடங்களில் நீங்கள் சிறுவன் என யாருக்கு சொல்கிறீர்கள் :lol:

ஜயய்யோ! ரதி ஏன் இப்படி உங்களுக்கு சந்தேகம்கள் வருகுது :D...உங்களுக்குப் பதில் சொல்லியே நான் ரயேட்டாகப்போறன்...:D

சாத்ஸ் அண்ணை........ பழைய கதை நல்லாத்தான் போகுது! நல்லாத்தான் எழுதுறியள்!

என்னவோ ஏதோ........ பழைய ஞாபகங்களை நினைக்கும்போது, இப்ப இருக்குறதைவிட அது எவ்வளவோ மேல் என்று தோணுது!

இதை எதுக்காக எழுதுறீங்கள் என்பது...... எனக்கு தெரியாது. :rolleyes:

ஆனால், பழைய ஞாபகங்களை கண்முன் கொண்டு வந்தமைக்கு நன்றிகள் சாத்ஸ் அண்ணை! :)

Edited by கவிதை

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு,மூன்று இடங்களில் நீங்கள் சிறுவன் என யாருக்கு சொல்கிறீர்கள் :lol:

இன்னும் சின்னப்பையனெண்ட நினைப்போடை இருக்கிறன் தானெண்டதைத்தானே சுபேஸ் சொல்லவாறியள் ? :lol:

ஜயய்யோ! ரதி ஏன் இப்படி உங்களுக்கு சந்தேகம்கள் வருகுது :D...உங்களுக்குப் பதில் சொல்லியே நான் ரயேட்டாகப்போறன்... :D

உண்மையாவே உங்களுக்கு வயசு போட்டெண்டு ரதி நம்பப்போறா :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாத்ஸ் அண்ணை........ பழைய கதை நல்லாத்தான் போகுது! நல்லாத்தான் எழுதுறியள்!

என்னவோ ஏதோ........ பழைய ஞாபகங்களை நினைக்கும்போது, இப்ப இருக்குறதைவிட அது எவ்வளவோ மேல் என்று தோணுது!

இதை எதுக்காக எழுதுறீங்கள் என்பது...... எனக்கு தெரியாது. :rolleyes:

ஆனால், பழைய ஞாபகங்களை கண்முன் கொண்டு வந்தமைக்கு நன்றிகள் சாத்ஸ் அண்ணை! :)

கவிதை கதை என்றாலே ஒரேயொரு ஊரிலை ஒரேயொரு ராசா எண்டு எண்டு தானே தொடங்கும். :)

Edited by sathiri

நல்ல இன்றேஸ்டாக போகுது தொடருங்கோ.ஊரில இருக்காத படியால் உந்த அநுபவங்கள் ஒன்றுமில்லை.பெற்றோரின் அனுபங்களை நினைக்கத்தான் பாவமாக இருக்கு.

எனது மனைவியின் அண்ணன்,தம்பி இயக்கத்தில் இருந்தார்கள்,தாயார் எனது மனைவியுடன் அவர்களை தேடிக்கொண்டு இந்தியா போய்விட்டார்.அங்கு போய் கதையில் வரும் தாயார் போல் M.L.A HOSTEL இல் தவமிருக்க தொடங்கிவிட்டா,அலுப்பு தாங்காமல் பின்னர் அவர்களை தஞ்சாவூர் போய் சந்திக்க அனுமதித்தார்கள்.தாய் பிள்ளைகளை பார்க்க போய் அவர்களுக்கு என்ன சாப்பிடவேண்டும் எனக்கேட்க சிகரெட் பத்தவேனும் போலகிடக்கு என அவர்கள் சொல்ல தாயார் சிகரெட் வாங்கி கொடுத்து பத்துவதற்கு காவல் நின்றார்களாம்.இப்பவும் சொல்லி சிரிப்பார்கள்.

மனைவி சொன்னா தாங்கள் தஞ்சாவூருக்கு பஸ்சில் போகும் போது தனக்கு முன்சீட்டில் இருந்த தமிழ்நாட்டுப்பெடியன் சீற்றை பின்னால் சாய்த்து சாய்த்து அலுப்பு கொடுத்துவந்தானாம் தான் தங்களை கூட்டிக்கொண்டுபோன புளொட் பெடியனிடம் சொல்ல(பாலு மகேந்திராவின் மனைவியின் தம்பி இப்போ லண்டனில் உள்ளார்) ரீகுடிக்க பஸ் நிப்பாட்ட சீற்றின் முதுகுசாயும் இடத்தையே அப்படியே புடுங்கி எடுத்துவிட்டாராம்.

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணா எல்லாம் மனதில் திரும்ப ஓடுகின்றது,யாம்போத்தல், பஞ்சு விளக்கு, செட்டை பிஞ்ச தும்பி, காவேலை,....., ஒரு பச்சை ,

மகேஸ்வரன் மண்ணெண்ணை விற்று பெரியாளகி....மகேஸ்வலனை சந்திச்சு இருக்கிறன், எனக்கு தெரிச்ச ஒருவருடன்தான் (Ship Captain) கப்பல் வாங்கிவிட்டால் எப்படி லாபம் ஈட்டலாம் என்று அட்வைஸ் கேட்டவர், பிறகு கன கப்பல் வாங்கி ஆள் நல்லா உழைச்சவன் இந்த பிரச்சனையால், அவன் ஒரு...

"திடீரெண்டு சங்கானை மெயின் வீதியிலையும் ஒரு கெலி அடிக்கத்தொங்கியது.மோகனிற்கு தனக்கு வெடி விழுந்தாலும் பரவாயில்லை மண்ணெண்ணை கானிலை விழக்கூடாதெண்ட பயம்.குறுக்கு பாதையாலை போகலாமெண்டு நவாலி றோட்டிலை மோட்டச்சைக்கிளை இறக்கினான்.

".

எங்கேயோ இடிக்குது. நான் சங்கானை சந்தையில் இருந்து சங்கரத்தையை இணைக்கும் பாதையில் அடிக்கடி போய்யிருக்கிறேன், அந்தப் பாதைக்கு வேறு பெயர், சங்கரத்தைக்கும் நவாலிக்கும் இடையில் இருக்கும் பாதை நவாலி றோட், நீங்க சொல்லவாற பாதை ஏது

  • கருத்துக்கள உறவுகள்

ம்...ம்......... பழைய நினைவுகளை மீட்டுவிட்டீர்கள் அண்ணை யாழ் இடப்பெயர்வில் நான் புதுக்குடியிருப்பில இருந்தது எனது பாடசாலையில் மக்கள் தங்க வைக்கப்பட்டிருந்தனர் நாங்கள் சில என்னுடன் படித்த போரளிகள் சகிதம் பல நிவாரணஉதவிகளை செய்திருந்தோம்... அத விட ஜாம்போத்தல் விளக்குகள் பலாயிரம் கதைகளை பேசும் வன்னி மண்!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அண்ணா எல்லாம் மனதில் திரும்ப ஓடுகின்றது,யாம்போத்தல், பஞ்சு விளக்கு, செட்டை பிஞ்ச தும்பி, காவேலை,....., ஒரு பச்சை ,

மகேஸ்வரன் மண்ணெண்ணை விற்று பெரியாளகி....மகேஸ்வலனை சந்திச்சு இருக்கிறன், எனக்கு தெரிச்ச ஒருவருடன்தான் (Ship Captain) கப்பல் வாங்கிவிட்டால் எப்படி லாபம் ஈட்டலாம் என்று அட்வைஸ் கேட்டவர், பிறகு கன கப்பல் வாங்கி ஆள் நல்லா உழைச்சவன் இந்த பிரச்சனையால், அவன் ஒரு...

"திடீரெண்டு சங்கானை மெயின் வீதியிலையும் ஒரு கெலி அடிக்கத்தொங்கியது.மோகனிற்கு தனக்கு வெடி விழுந்தாலும் பரவாயில்லை மண்ணெண்ணை கானிலை விழக்கூடாதெண்ட பயம்.குறுக்கு பாதையாலை போகலாமெண்டு நவாலி றோட்டிலை மோட்டச்சைக்கிளை இறக்கினான்.

".

எங்கேயோ இடிக்குது. நான் சங்கானை சந்தையில் இருந்து சங்கரத்தையை இணைக்கும் பாதையில் அடிக்கடி போய்யிருக்கிறேன், அந்தப் பாதைக்கு வேறு பெயர், சங்கரத்தைக்கும் நவாலிக்கும் இடையில் இருக்கும் பாதை நவாலி றோட், நீங்க சொல்லவாற பாதை ஏது

நான் சொல்லுறது மானிப்பாய் சங்கானை பிரதான வீதியில் மானிப்பாய் இறவிக்கை சந்தைக்கு பக்கத்தில் உள்ள சிறிய வீதியால் இறங்கினால் நவாலி வட்டுக்கோட்டை வீதியில் ஏறலாம். அந்த றோட்டு வட்டு சம்பந்தர் வித்தியாலத்துக்கு பக்கமாக போகுது. இடையிலை ஒரு றோட்டு பிரிஞ்சு சங்கானை சந்திக்கு போகுது. அந்த வெளியைதான் சங்கரத்தை என்று நான் நினைக்கிறன்..மட் பாண்டங்கள் செய்பவர்கள் அதிகமாக வாழும் பகுதி அது. கூகிழ் மைப்பில் பாத்தன் அந்த றோட்டே இல்லை.

கவிதை கதை என்றாலே ஒரேயொரு ஊரிலை ஒரேயொரு ராசா எண்டு எண்டு தானே தொடங்கும். :)

ஊரில வேற ராஜா இல்லையா.............?

நாட்டில போர் வந்தது....! ஊரில சண்டை நடக்குது....!

சண்டையில் குண்டு வெடிக்குது...! டொம்! டொம்!! டொம்!!! :(

சண்டையா எதுக்கு........???????

சண்டைதான் எதுக்கு நடந்திச்சு.........!!!! :rolleyes: :mellow:

ஐயோ வடை போச்சே.................!!!!!!!!!!! :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் சின்னப்பையனெண்ட நினைப்போடை இருக்கிறன் தானெண்டதைத்தானே சுபேஸ் சொல்லவாறியள் ? :lol:

உண்மையாவே உங்களுக்கு வயசு போட்டெண்டு ரதி நம்பப்போறா :lol:

உண்மையிலேயே நான் சின்னப்பொடியன் தான சாந்தி அக்கா....முப்பதை தாண்டாத வரை சின்னப்பொடியள் தான...?:D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அடக்கடவுளே அந்த நேரம் ஊரிலயே சிறி அண்ணை நிண்டனிங்கள்...?அப்பிடியே எழுதி இருக்கிறியள்...எனக்கு எல்லாம் நினைவுக்குள் வந்து சுழழுது...உந்தக் கெலிக்கடிச்சது புக்காற அடிச்சது..இயக்கப்பனிஸ்மென்ற்..அப்பப்பா..உண்மையைச்சொல்லுங்கோ..ஊரிலேய நிண்டனியள்..உந்தக் கிணத்துக்க குப்பைபோட்ட கதை சாவகச்சேரியில அமோகமா நடந்தது ஆறுமாதமாய் வலிகாமச் சனம் இடம்பெயர்ந்து இருக்கேக்க..உதால சிலருக்கு இயக்கம் செருப்புத்தண்ணி அவிச்சுக்குடுத்த சம்பவமும் இடம்பெற்றது..சாவகச்சேரியில் றோட்டுப் பக்கம் நீட்டிக்கொண்டிருந்த முருக்கம் மரங்களின் தடிகள் எல்லாம் மொட்டையாக இருக்கும்..அனேகமான இடம்பெயர்ந்த மக்களுக்கு அந்த நேரம் உந்த முருங்குகளும் மரவள்ளியும்தான் கைகொடுத்தது..உந்த மண்மீட்பு நிதிக்கொடுப்பில் எங்கட வீடும் நகைகொடுத்திருந்தது..அம்மாவின் சங்கிலி..நானும் அம்மாவும்தான் முதலில் கூட்டத்திற்க்குப்போனோம்..அங்கு வைத்து நிதிகொடுக்கும்படி கூறப்பட்டது கொடுக்காவிட்டால் தண்டனை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.. பலர் சண்டைபுடிச்சுக்கொண்டிருந்தினம் தங்களிடம் இல்லை என்னத்தைப் பிடித்துதருவது என்று..ஆனால் அம்மா எதுவும் பேசாமல் வந்து விட்டா..அப்பொழுது நான் சிறுவன்..பின்னர் அம்மா சொல்லப்பட்ட தவணைக்குபோய் தன்ர சங்கிலியைக் கொடுத்து விட்டு வந்துவிட்டா..பின்னர் பலருக்கு அவர்கள் கொடுத்த பணத்திற்க்கு அல்லது நகைக்கு ஈடான தங்கப் புலிச்சின்னம் குலுக்கல் முறையில் வழங்கப்பட்டது..ஆனால் கடைசிவரை எங்களுக்கு விழவில்லை..அதற்கிடையில் பிரச்சனை தொடங்கிவிட்டது.அம்மா அதை திருப்பி பெறவேண்டும் என்ற எண்ணத்தில் கொடுக்கவில்லை..பின்னர் நாங்கள் வன்னிபோய் நான் சிறுவன் என்பதால் மீனாச்சியைபோலன்றி பிணைவைக்காமலே வவுனியா வந்து ஊருக்கு வந்துவிட்டோம்...பதிவு சூடு பிடிக்குது தொடருங்கள் சிறிஅண்ணை...

சுபேஸ் இடம் பெயர்ந்ந பொழுதுமுதலில் வலிகாமத்திலை இடம்பெயர்தவையை தண்ணி அள்ளவிடாமல் கிணத்துக்குள்ளை மண்ணெண்ணை ஊத்திய சம்பவங்கள். பின்னர் வலிகாமம் சனங்களிற்கு தென்மராட்சியில் தங்கஇடங்கள் கொடுக்காதது மட்டுமில்லை கிணறுகளிலை தண்ணி அள்ள விடாமல் குப்பையை போடுவது பாம்பு. பூனைகளை அடித்து கிணற்றில் போடுவது என்று செய்த அனியாயங்கள் கொஞ்சமல்ல. இத்தனையும் தமிழர்தான் தமிழரிற்கு செய்தது.அதாலைதான் இயக்கம் பலருக்கு அடிபோட்டது. கிணறுகளிலை தண்ணி அள்ளவிடாமல் செய்தவைக்குத்தான் வாளித்தண்ணீருக்குள்ளை செருப்பை போட்டிட்டு அள்ளி குடிக்கவைச்சவை.அதே நேரம் இயக்கம் கொண்டுவந்த திட்டம் மண் மீட்பு நிதி 100 கோடி திட்டமும் தோல்வி. நிதி கொடுக்க சனம் முன்வரவில்லை. இவையெல்லாமும் யாழ்ப்பாணத்தை இயக்கம் கை விட்டதற்கும் ஒரு காரணம்.

உதப்பற்றியெல்லாம் நிறையக்கதைகள் என்னிடமுள்ளன..எல்லாவற்றைப் பற்றியும் கதைகளாக எழுதவேண்டும் சிறி அண்ணை..கட்டாயமாக எழுதுவேன்...என் எழுத்துக்களை இன்னமும் மெருகேற்றிக் கொண்டு தொடருவேன்...நிறையக் கதைகளோட வருவன்..எனக்கு நேரப்பிரச்சினையாக இருக்கிறது...ஒரு கதையை யாழிழ ரைப் பண்ணிப்போட ஒரு நாளை முழுங்கிவிடும் சில நேரங்களில்.. உங்களைப் போல ஒரு மெடிக்கல் லீவடிச்சாத்தான் சரிபோல...

  • கருத்துக்கள உறவுகள்

நான் சொல்லுறது மானிப்பாய் சங்கானை பிரதான வீதியில் மானிப்பாய் இறவிக்கை சந்தைக்கு பக்கத்தில் உள்ள சிறிய வீதியால் இறங்கினால் நவாலி வட்டுக்கோட்டை வீதியில் ஏறலாம். அந்த றோட்டு வட்டு சம்பந்தர் வித்தியாலத்துக்கு பக்கமாக போகுது. இடையிலை ஒரு றோட்டு பிரிஞ்சு சங்கானை சந்திக்கு போகுது. அந்த வெளியைதான் சங்கரத்தை என்று நான் நினைக்கிறன்..மட் பாண்டங்கள் செய்பவர்கள் அதிகமாக வாழும் பகுதி அது. கூகிழ் மைப்பில் பாத்தன் அந்த றோட்டே இல்லை.

சாத்திரியண்ணா நன்றி, இப்ப இப்ப தெரியும் எந்த றோட் என்று, அப்படி என் A/L படித்த காலத்திற்கு போய் வந்தாச்சு, உடம்பில் கொஞ்ச நேரம் பழைய முறுக்கு வந்து போயிடிச்சு,

ஆவலா இருக்கு மிகுதி வாசிக்க கெரியா இணையுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

1995/1996 ஞாபகங்கள் அருமை சாத்திரி அண்ணா. எங்கட வீட்டிலையும் 12 பேர் இருந்த நாங்கள். நானும் அப்ப சின்னப் பெடியன், 9/10 வயசிருக்கும. (சபேஷிண்ட கணக்குப் படி இப்பவும் சின்னப் பெடியன் தான்). விடியக் காலமை நாலு மணிக்கு பேக்கரிக்கு போய் பாணுக்கு கியூவில நிக்கிறது, பிறகு ஜாம் போத்தல் விளக்கு. அதிலயும் பஞ்சு போட்டது, எண்ணெய் விட்டது, தண்ணி விட்டது, உப்புக் கல்லு போட்டது எண்டு ஊறுப்பட்ட வகை. பகல் பகலா பட்டம் ஏத்துறது, கடல் குளிப்பு எண்டு பொழுது போகும். சங்கக் கடையில கியூவில போய் நிண்டு பம்பலடிக்கிறது. அதுவும் யாழ்பாணத்தில இருந்து எங்கட வீட்ட வந்து நிண்ட பெடியன் சென்ஜோன்ஸ்ல தான் படிச்சவர். அக்கா சுண்டுக்குளி, இதால எங்கட வீடு எப்பவுமே அமர்க்களமாய் இருக்கும். சண்டை பற்றி எதுவுமே எங்களுக்கு தெரியவில்லை. எப்பவுமே மீண்டு வராத நாட்கள் :(

Edited by Thumpalayan

நன்றிகள் கோமகன் கதையின் தலைப்பும் பின்னர் தொடரும் சம்பவங்களும். பலரிற்கும் பல கேள்விகளையும் சில நேரம் சர்ச்சைகளையும் எழுப்பும் என்பது நிச்சயம். ஏனெனில் இக்கதையில் வரும் சம்பவங்கள் அனைத்துமே அனைவரும் சந்தித்த அனுபவித்தவைகள்தான். பல விடயங்களை பலரிற்கும் பகிரங்கமாக சொல்லமுடியாத அல்லது எழுத முடியாத விடயங்கள் பலதையும் இந்தத் தொடர் தொட்டுச்செல்லும். நன்றி

எதையாவது தொட்டு செல்லுங்க...

பா வா ம் பி ற பா க ற ன்.....”

இந்த தலைப்பு மட்டும் வேணாம்!

சீரியஸா நீங்க எழுதினாலும் சரி...சிரிக்கவைக்க எழுதினாலும் சரி........

அவருக்குரிய கெளரவம்... எழுத்தில்கூட சிதையக்கூடாது எங்கிறது ..என்னோட ..தனிப்பட்ட கருத்து!

  • கருத்துக்கள உறவுகள்

Hmmm 1995 06 kaalam ippo ninaichalum pasumaiyaana ninaivukal.....antha Ida peyarvaiyum vaalkaila marakka mudiyaathu.....

"ஆண்டு 15.03.1995 இடம் யாழ்குடாநாடு ஆறுகால்மடம் கிராமம். காலை 8 மணி."

இந்த காலப்பகுதியில் கொமினிகேசன் இருந்ததா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

12.01.1997 ம் ஆண்டு பாரிஸ்

மோகன் கேஸ் எழுதிறவருக்கு முன்னாலை பயபக்தியாய் அமர்ந்திருந்தான்

ஒரு வெள்ளைப் பேப்பரையும் பேனையையும் எடுத்தவர்

தம்பி உம்மடை முழுப்போர் குடும்ப விபரத்தை சொல்லும் என்றபடி எழுதத் தொடங்கினார்.

என்ரை பேர் தம்பிப் பிள்ளை மோகன் குடும்பத்திலை நான் இரண்டாவது மூத்த அக்க ஒராள் கட்டிட்டா அவாக்கு இரண்டு பிள்ளையள். எனக்குப்பின்னாலை இரண்டு தங்கச்சியள்

அப்பா அம்மா??

ஜயா இல்லை மோசம்போட்டார் ஒரு தங்கச்சி இயக்கத்துக்கு போட்டாள் அம்மாவும் கடைசியும்தான் வன்னிக்கை இருக்கினம்.

கேஸ் எழுதிறவனின்ரை கண்ணிலை ஆயிரம் வாற் பிரகாசம் மின்னியது. பேப்பரில் எனது தந்தை இலங்கை இராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டார். என்று எழுதிஅதை சுத்தி பேனையாலை ஒரு வட்டம் போட்டார்.

அவர் என்ன எழுதுகிறார் என மெதுவாக எட்டிப்பார்த்த மேகன் எட உங்கடை ஜயாவும் ஆமி சுட்டு மோசம் போட்டாரே என்றான்

தம்பி நான் என்ரை கேஸ் எழுதேல்லை உமக்குத்தான் கேஸ் எழுதிறன் உம்மடை அப்பாவைத்தான் ஆமி சுட்டுகொண்டது.

ஜயோ அண்ணை என்ரை ஜயாவை ஆமி சுடேல்லை ஜயா ஒரே கசிப்படி அதோடை இடைக்கிடை அம்மாக்கும் அடி. ஒருநாள் நெஞ்சை பொத்திக்கொண்டு படுத்திருந்தார். பக்கத்திலை சங்கானை ஆஸ்பத்திரிக்கு நான் தான் கொண்டு போனனான். குளிசை தந்திச்சினம்அவை சொல்லிச்சினம் ஆளுக்கு கான்சர் போலை கிடக்கு அனேகமா ஈரல் பெரிஞ்சிருக்கவேணும் பெரியாஸ்பத்திரிக்கு கொண்டு போங்கோ எண்டிச்சினம். பெரியாஸ்பத்திரிக்கு கொண்டு போனம். கண்போம்.. ஆளுக்கு ஈரல் பொரிஞ்சுதான் போச்சுது கான்சர் உடைனை மகறகமவுக்கு கொண்டு போங்கோ எண்டாங்கள். மகறகம எங்கை கிடக்கெண்டு நாலு பேரிட்டை விசாரிச்சு இஞ்சை மாமாவுக்கும் போனடிச்சு காசு அனுப்பச்சொல்லிப்போட்டு காவலிருந்தம். மாவின்ரை காசு வாறத்துக்கு முதல் யாழ்ப்பாணத்துக்கு ஆமி வந்திட்டான்.நாங்களும் இடம் பெயர்ந்து வன்னிக்குள்ளை வந்திட்டம். மல்லாவிக்கை தான் முழுச்சனமும் அடைஞ்சுபோய் இருந்தனாங்கள். சாதரமணமாய் காயப்பட்டவைவைக்கே மருந்து வசதியள் இல்லாத நேரம். ஜயாக்கு கான்சர் மருந்துக்கு எங்கை போறது அவர் வன்னியிலையே செத்துப்போனார்.

தம்பி ஆயிரம் பேருக்கு மேலை கேஸ் எழுதி விசா எடுத்துக்குடுத்திருக்கிறன்.நீர் சொல்லுறமாதிரி நான் கேஸ் எழுதினால் நீர் கெலிங்பாற பிற்றக்கொட்டுவாதான்.உமக்கு விசா வேணுமெண்டால் நீர் விபரங்களை மட்டும் சொல்லும் நான் எழுதித்தாற கேசை அனுப்பும்.இல்லாட்டி நடையை கட்டும் எனக்கு அடுத்த கேஸ் பின்னாலை நிக்கிறார்.

இல்லையண்ணை மன்னிச்சுக்கொள்ளுங்கோ நீங்களே விரும்பினமாதிரி எழுதுங்கோ.

சரி தம்பி உடம்பிலை ஏதும் காயங்கள் கிடக்கோ

கொஞ்சம் யோசித்தவன் ம் ..ஓமண்ணை ஒருக்கா என்ரை 90 யின்ரை சைலெஞ்சர் பட்டு வலக்கால்லை எரிஞ்சகாயமெண்டு இப்வும் பெரிசாய் இருக்கு பிறகு கடைசியாய் கிளாலியை கடக்கேக்கை ஆமி அடிச்ச செல் ஒண்டு நான் சரியாய் விழுந்து படுக்கிறதுக்கிடேலை கிட்ட வந்து விழுந்து வெடிச்சதிலை எனக்கு பின்பக்கத்திலை செல் பீஸ் பட்ட காயம் ஒண்டும் இருக்கு

உமக்கு ஒவ்றாவிலையே காட்தான் அரக்காது. ஆனால் நான் சொல்லுற புறுவ்கள் எல்லாம் உடைனை எடுக்கவேணும். நான் எழுதித் தாறதுகளை உடைனை எடுக்கிற வேலையை பாரும்.என்றபடி ஒரு துண்டில் மரணஅத்தாட்சிப்பத்திரம். காயம் பட்டதற்கான வைத்தியரின் அத்தாட்சி பத்திரங்கள்.கிராம சேவையாளரின் உறுதிக்கடிதம் என்று எழுதி நீட்டியவர். இதுகளை கெதியாய் எடும். அதோடை உம்மடை அப்பா செத்தது சூட்டுக்காயத்தாலையெண்டும் உமக்கு வலக்காலிலை எரிகுண்டு பட்டதெண்டும் பின்னாலை செல்பட்டதெண்டும் விபரமாய் டொக்ரர் சேட்டிபிக்கற்றுகளும்.எழுதியெடும்

அண்ணை இதெல்லாம் ஊரிலையிருந்தே எடுக்கவேணும்...இழுத்தான்

தம்பி விபரமில்லாத ஆளாய் இருக்கிறீர். உதிலை லாசப்பல் பக்கம் போனாலே ஆரையும் பிடிச்சு லைசன்சிலை இருந்து பிறப்பத்தாட்சி பத்திரம் மரண அத்தாட்சி பத்திரம் ஊர் விதானை மாரின்ரை கடிதம் எல்லாம் எடுக்கலாம். ஆனாலும் பிரெஞ்சுக்காரன் கெட்டிக்காரன் கனக்க கள்ளமெண்டு பிடிச்சிருக்கிறான். அதாலை கண்டவையிட்டையும் போய் வாங்காமல் நான் ஒரு நம்பர் தாறன் அவருக்கு போனடியும் எல்லாம் செய்து தருவர். ஒறிச்சினல்மாதிரியே இருக்கும் என்றபடி ஒரு விசிட்டிங் காட்டை நீட்டினார்.

மோகன் பவ்வியமாக எழுந்து கையில் என்பலப்பில் இருந்த ஒருதொகையை கொடுத்து அண்ணை இந்தாங்கோ அட்வான்ஸ் மிச்சம் கேஸ் எடுக்கேக்கை தாறதெண்டு மாமா சொன்னவர்.

ம்...நான் கடன் வியாபாரம் செய்யிறேல்லை தம்பி கட்டாயம் கேஸ் எடுக்க வரேக்குள்ளை மிச்சத்தை கொண்டுவரவேணும் அப்பதான் கேஸ் தருவன். வாறகிழைமை வாரும். எதுக்கும் வரமுதல் ஒரு போனடிச்சு முடிஞ்சிட்டுதோ எண்டு கேட்டிட்டுவாரும் நான் சொன்ன புறுவுகள் மறக்கவேண்டாம்.

விடைபெற்றான் மோகன் அடுத்தாவாரம் தயாரிக்கப்பட்ட ஆவணங்களுடன் கேசை எடுப்பதற்காக மிகுதி பணத்துடன் போயிருந்தான் ஆவணங்களை சரிபார்த்தவர். தமிழில் எழுதிய வாக்குமூலம் ஒன்றினையும் அதன் பிரெஞ்சு மொழிபெயர்ப்பையும்கொடுத்து. தம்பி தமிழிலை உள்ளதை வடிவாய் மனப்பாடம் பண்ணி வையும் ஒவ்றா காரன் குறுக்கு கேள்வியள் கேட்பான் டக்கு டக்கெண்டு பதில் சொல்லவேணும். முக்கியமாய். திகதி மாதங்கள் கவனம்.எல்லாத்தையும் ஒரு போட்டோகொப்பி எடுத்துப்போட்டு ஒவ்றாவுக்கு அனுப்பும்.

மோகன் விடைபெற்றான் போகிற வழியிலேயே இரயிலில் பலதடைவை படித்துப்பார்த்தவன் ""சங்கானை ஞானவைரவரே எனக்கு காட் கிடைக்க வேணும் நல்லதொரு வேலை கிடைக்கவேணும். கல்வீடு கட்டவேணும்.உனக்கு வடைமாலையோடை பொங்கல்"".என்று நேத்திக்கடன் வைச்சபடி கேசை அனுப்பிவிட்டிருந்தான்.விசா பதில் வரும்வரை லாசப்பல் தமிழ்க்கடை ஒன்றில் சாமான் அடுக்கும் கள்ளவேலையும் ஒன்று கிடைத்திருந்தது. ஞான வைரவரிற்கு வடைமாலை விருப்பம் இருந்ததோ இல்லாட்டி கேசை படிச்ச ஒவ்றா காரனிற்கு பரிதாபம் ஏற்பட்டதோ தெரியாது மோகனை கூப்பிட்டு கனக்க கேள்வி ஒண்டும் கேக்கேல்லை அகதி அந்தத்து ஏற்கப்பட்டுள்ளது என்று கடிதம் வந்திருந்தது. வைரவரே நானும் உன்னை ஏதோ சிம்பிளா நினைச்சன் நீ பேய்காய்தான் உனக்கு வடைமாலை என்று மனதில் நினைத்தபடி வேலை ஒன்று தேடத்தொடங்கியிருந்தான்.

பி.கு..ஓவ்றா.[o f p r a....Office français de protection des réfugiés et apatrides. ] அகதிகளிற்கான புகலிடக் போரிக்கைகளை பரிசீலிக்கும் அமைப்பு

Edited by sathiri

  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் தலைப்புடன் தொடர்கதை எழுத யாரால் மனம் வரும்.

இதனை ஒரு, சிங்களவன் செய்வானா?

கன்னடன் செய்வானா?

மலையாளத்தான்... செய்வானா?

இல்லை...

ஈனத் தமிழனால்... மட்டுமே... முடியும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தொடக்கமே அசத்தலாக இருக்கிறது.

நன்றிகள் கந்தப்பு . நான் முன்னர் உங்களிடம் கதைத்திருந்ததைப்போல டொச்சன் பற்றிய விபரங்கள் முழுவதுமாக சேர்த்துவிட்டேன். டொச்சன் பற்றிய வரலாறு விரைவில் எதிர்பாருங்கள். முதல் புலனாய்வு பயிற்சி பாசறை டொச்சன் பாசறை :icon_idea:

Edited by sathiri

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Hmmm 1995 06 kaalam ippo ninaichalum pasumaiyaana ninaivukal.....antha Ida peyarvaiyum vaalkaila marakka mudiyaathu.....

சுண்டல் இன்னுமா வீடு மாறி முடியேல்லை.???? :(

  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் தலைப்புடன் தொடர்கதை எழுத யாரால் மனம் வரும்.

இதனை ஒரு, சிங்களவன் செய்வானா?

கன்னடன் செய்வானா?

மலையாளத்தான்... செய்வானா?

இல்லை...

ஈனத் தமிழனால்... மட்டுமே... முடியும்.

முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்கும் ஈனத்தமிழர்கள்தான் காரணம். ஈனத்தமிழர்களை நம்பிய பிரபாகரன் உண்மையிலேயே பாவம்தான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.