Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்கள அமைச்சரின் காலில் விழ மறுத்த தமிழ்ப் புதல்வன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

mullai290-150x150.jpg

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் அகில இலங்கையில் இரண்டாவது அதிகூடிய புள்ளிகளைப் (194) பெற்ற முல்லைத்தீவு, நெத்தலியாறு தமிழ் மகா வித்தியாலய மாணவன் பரமேஸ்வரன் சேதுராகவன், கல்வியமைச்சர் பந்துல குணவர்தனவின் காலில் விழுந்து வணங்குவதற்கு மறுப்பு தெரிவித்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.வட மாகாணத்தின் கல்வி நிலைகள் மற்றும் பாடசாலைகளின் ஆளுமை விருத்தி தொடர்பாக யாழ் நூலக கேட்போர் கூடத்தில் கல்வியமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் நடைபெற்ற மாநாட்டிலேயே இம்சம்பவம் இடம்பெற்றது.

இம்மாநாட்டில் வட மாகாணத்தில் புலமைப் பரிசில் பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற மாணவர்களான ப.சேதுராகவன், மநிதுர்ஷிகா ரமேஷ், சர்மிகா சர்வானந்தன் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.

இதன்போது ஏனைய மாணவிகள் இருவரும் அமைச்சரின் காலில் விழுந்து வணங்கிய போதிலும் சேதுராகவன் மாத்திரம் அமைச்சரின் காலில் விழ மறுப்பு தெரிவித்து அவ்விடத்திலிருந்து அகன்றான்.

அமைச்சரின் காலில் விழுந்து வணங்குமாறு மாணவனின் தந்தை, தாயார் வலியுறுத்தியபோதிலும் அம்மாணவன் பிடிவாதமாக நின்றுகொண்டிருந்தான். இதனால் அமைச்சர் சங்கடத்துக்கு உள்ளானபோதிலும் அவர், தொடர்ந்தும் இந்நிகழ்வில் பங்குபற்றினார்.

இது குறித்து அம்மாணவனிடம் செய்தியாளர்கள் கேட்டபோது நான் முல்லைத்தீவில் மிகவும் கஷ்ட சூழ்நிலையில் கல்வி கற்றேன். முகாம்களில் இருந்து படித்துள்ளேன். நான் எனது தந்தை தாயார் ஆசிரியரின் காலில் விழுவேனே தவிர ஏனையோரின் காலில் விழ மாட்டேன் என கூறினான்.

இவ்வைபவத்தில்அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாஇ வட மாகாண ஆளுநர். ஜி.ஏ.சந்திரசிறி, நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் மற்றும் யாழ் மாவட்ட பாடசாலைகளின் அதிபர்கள் கல்வித் திணைக்கள அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

http://www.tamilthai.com/?p=27003

  • கருத்துக்கள உறவுகள்

காலில் விழுகின்ற கலாச்சாரத்தை மறுத்த மாணவன் சேதுராகவனுக்குப் பாராட்டுக்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தன்மான தமிழன் மாணவன் பரமேஸ்வரன் சேதுராகவனுக்கு பாராட்டுக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

எதற்கெல்லாமோ தன்மானத்தைத் தாரை வார்க்கும் இனத்தில் பிறந்தும், மற்றவருக்காகத் தனது முடிவை மாற்றிக் கொள்ளாத சேதுராகவனிடம் எங்கள் தலைமைகள் பாடம் படிக்க வேண்டும்!

அமைச்சரின் காலில் விழுந்து வணங்குமாறு மாணவனின் தந்தை, தாயார் வலியுறுத்தியபோதிலும் அம்மாணவன் பிடிவாதமாக நின்றுகொண்டிருந்தான். இதனால் அமைச்சர் சங்கடத்துக்கு உள்ளானபோதிலும் அவர், தொடர்ந்தும் இந்நிகழ்வில் பங்குபற்றினார்.

இது குறித்து அம்மாணவனிடம் செய்தியாளர்கள் கேட்டபோது நான் முல்லைத்தீவில் மிகவும் கஷ்ட சூழ்நிலையில் கல்வி கற்றேன். முகாம்களில் இருந்து படித்துள்ளேன். நான் எனது தந்தை தாயார் ஆசிரியரின் காலில் விழுவேனே தவிர ஏனையோரின் காலில் விழ மாட்டேன் என கூறினான்.

அம்பதைஞ்சு , கிழ போல்டுகளே பகுத்தறிவில்லாம ..சிங்களவன் காலில விழுது, ஐந்தாமாண்டு சிறுவன்.. எப்படிடா ..இப்டியெல்லாம் ஜோசிப்பான்?

அதுவும் அவன் அம்மா , அப்பா, காலில விழ சொன்னப்புறமும்?

எங்கயோ இன்னமும், ஒரு மானமுள்ள சொந்தம் ........

பயமே இல்லாம வாழ அவனுக்கு புத்திமதி சொல்லி கொடுக்குது!

அவங்க யாரா இருந்தாலும் --> :) !!

  • கருத்துக்கள உறவுகள்

வன்னியில் இந்தநிலை எடுப்பதன் ஆபத்தை உணர்வதால் வாழ்த்த முடியாதுள்ளது.

உன் எதிர்காலம் சிறப்புறவும் விசமிகள் கண்படாமலும் இருக்க ஆண்டவனை வேண்டுகிறேன்

மனித உரிமையை காப்பாற்றிய மாணவன் இவன்.

மேற்கொண்டு இலங்கை வரலாற்றில் ஒருவரும், பெற்றோர் பாதங்களை தவிர, இன்னொருவர் பாதங்களை வணங்ககூடாது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
http://youtu.be/zYdrXmsn9T8

அம்மா நல்ல கோபத்தோடை போற, வீட்டில அடிதான்.

வாழ்த்துக்கள் மகனே, நாங்கள் ஆண்ட பரம்பரை என்றதை நிருபித்துவிட்டாய்.

  • கருத்துக்கள உறவுகள்

பின்னாலை இருந்து வாற லேடிதான் கால்ல விழச்சொல்லுறா போல இருக்கு..! :icon_mrgreen:

வயதில் சிறுவனாகினும் தன்மானத்தில் பெரியவனாகிய எம்மண்ணின் மகனுக்கு எனது வாழ்த்துக்கள்..!

  • கருத்துக்கள உறவுகள்

சேதுராகவனுக்குப் பாராட்டுக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

பரமேஸ்வரன் சேதுராகவனுக்கு பாராட்டுக்கள், மேலும் நன்றாக படித்து முன்னுக்கு வர வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

இவன் காலில விழ.. இவன் என்ன ஆசிரியனா.. மாமனா.. மச்சானா. பேடி.. அடுத்தவன் அண்டையன்.. கொடுத்த தைரியத்தையும் ஆயுதத்தையும் வைச்சு.. பஞ்சமா பாதகங்கள் செய்து.. ஆக்கிரமிப்புச் செய்து வந்து நிற்கிற எதிரி..!

சோதனையில் சாதனைக்கும்.. உண்மையான பகுத்தறிவுள்ள தமிழன் என்றதை நிரூபித்ததற்கும் பாராட்டுக்கள். வயசு போன நேரத்தில எல்லாத்தையும் அனுபவிச்சிட்டு.. பகுத்தறிவு பேசிப் காலம் கழிக்கிற தமிழர் உலகில.. 10 வயதான மாணவன்.. புரிந்திருக்கும்.. பகுத்தறிவு.. சுய அறிவுச் செயற்பாடு.. அவனின் திறமையை அப்படியே செப்பி வைக்கிறது.

அந்தப் பையனின் எதிர்காலம் பாதுகாப்பாவும்.. சிறப்பாகவும் அமைய உலகத் தமிழினம்.. அவனுக்கு என்றும் உறுதுணையாக இருக்க வேண்டும்.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாக்க வடிவாய்த்தான் கிடக்கு.....இனி பெடியனுக்கு பின்விளைவுகள் என்ன கோணத்திலை வருகுதோ ஆருக்குத்தெரியும்?

அதைத்தான் நானும் ஜோசிக்கின்றேன். பெற்றோரைத்தவிர மூன்றாம் சக்தி ஒன்று தான் இப்படி செய்விக்கும் என்று மொக்கு சிங்களம் ஜோசிக்கும். அப்பா அம்மா ஆகியோர் கவனமாக இருக்க வேண்டும்.

ஆகா என்ன கண்கொள்ளாக்காட்ச்சி....! வாழ்த்துக்கள் சிறுவன் பரமேஸ்வரன் சேதுராகவனுக்கு. எந்தவித இடையூறும் இல்லாமல் இன்னும் வாழ்வில் பல சாதனைகள் படைக்க இறைவனை வேண்டுகின்றோம்.

கற்பித்த ஆசிரியர் மற்றும் உறவினர் அயலவர்கள் நண்பர்களை அச்சுறுத்துவதற்கும் கண்காணிக்க படவுமே

இது வாய்ப்பாக அமையும். எமது தமிழ் ஊடகம்கள் இதற்க்கு கொடுக்கும் buld up பார்க்க எனக்கே பயமாக இருக்கு

ஒரு ஊடகம் சொல்கிறது முல்லைத்தீவில் குட்டி பிரபகரனாம்

இன்னொன்று சொல்கின்றது மறு பிறப்பு என்பது இது தானோ?தமிழினத்துக்கு இவன் தான் தலை வணங்கா தலைவன்

இவ்வாறான செய்திகளுக்கு face book இல் அதிக like உம் விழுந்திருக்கின்றன

புலம்பெயர் தமிழ் சமூகத்தில் உள்ள எந்த பின் விளைவுகள் பற்றியும் கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளாத விசைப் பலகை வீரர் குழுவை சேர்ந்தவர்கள் தான் இவர்கள். அந்த சிறு பையனின் எதிர்காலம் பற்றி எந்த வித அக்கறையும் இன்றி, அவனது பாதுகாப்பு பற்றிய எந்த வித கரிசனையும் அற்று வெற்று முழக்கமிடுகின்றனர். இந்தச் சிறுவன் அப்பா அம்மா வின் கால்களில் அன்றி வேறு யாரினது கால்களிலும் விழமாட்டேன் என்றுதான் கூறியிருக்கின்றார். சிங்கள அமைச்சரின் மட்டுமன்றி வேறு எந்த தமிழரின் காலில் கூட இவர் மறுத்து இருக்கலாம்..

சிறிலங்கா பொருட்களைக் கூட புறக்கணிக்க விரும்பாத, சன் ரீவி, கலைஞர் ரீவி ஆகிய ஈழத் தமிழர் விரோத தொலைக்காட்சிகளைக் கூட புறக்கணிக்காத, லீவுக்கு இலங்கைக்கு சுற்றுலா சென்று ஆமிக்காரனுக்கு 'மாத்தையா' போடும் எம்மில் (பு.பெ.த. க்களில்) உள்ள கொழுப்பெடுத்த பிரிவினரின் மனச்சாட்சி இல்லாத உசுப்பேத்தல்கள் தான் இவை. இதே சிறுவன் உயிர் இப்படியான உசுப்பேத்தல்களால் ஆபத்துக்குள்ளானாலும் ஒரு வீர வணக்கத்துடன் தன்னை சுருட்டிக் கொள்ளும் பிரிவினர் இவர்கள்

  • கருத்துக்கள உறவுகள்

பொதுவாக புதிய தலைமுறைகளைச் சேர்ந்த ஈழத்தமிழ் பிள்ளைகள் எவரின் காலிலும் விழுவதில்லை. சிங்களப் பிள்ளைகள் அப்படி அல்ல. அவர்கள் தொப்படீர் என்று காலில் விழுவார்கள்.

எங்களுடைய பட்டமளிப்பு விழா கொழும்பில் நடக்கும் போது.. பட்டம் எடுத்த சிங்களவர்கள் எல்லாமே தொப்படீர் தொப்படீர் என்று விழுந்து கொண்டு இருந்தார்கள். நான் மட்டுமே அந்த நேரத்தில் தமிழன். எனக்கு காலில் விழுவது பழக்கமல்ல. பிடிப்பதும் இல்லை. அந்த கையில் எனக்குப் பிடித்திருந்த பேராசியர்களுக்கு மட்டும் கைலாகு கொடுத்தேன். சிங்களவர்கள் எல்லாம் ஒரு வகையாப் பார்த்தார்கள். ஆனால் நான் அதைப்பற்றி அன்று அலட்டிக் கொள்ளக் கூடவே இல்லை..!

பொதுவாக அந்நியர்களின் காலில் விழச் சொன்னால்.. நாங்கள் (குறிப்பாக வடக்கு கிழக்கைச் சேர்ந்த தமிழ் மாணவர்கள்) அதை எப்பவுமே செய்யமாட்டோம். அந்த அடியொற்றி இந்தச் சிறுவனும் வந்திருக்கலாம். ஆனால் அவனின் அந்தப் பகுத்தறிவுத் தன்மைக்கும்.. சரியான சூழலில்.. சுய அறிவின் பால் அவன் எடுத்துக் கொண்ட முடிவுக்கும் பாராட்டலாம். :)

Edited by nedukkalapoovan

கற்பித்த ஆசிரியர் மற்றும் உறவினர் அயலவர்கள் நண்பர்களை அச்சுறுத்துவதற்கும் கண்காணிக்க படவுமே

இது வாய்ப்பாக அமையும். எமது தமிழ் ஊடகம்கள் இதற்க்கு கொடுக்கும் buld up பார்க்க எனக்கே பயமாக இருக்கு

ஒரு ஊடகம் சொல்கிறது முல்லைத்தீவில் குட்டி பிரபகரனாம்

இன்னொன்று சொல்கின்றது மறு பிறப்பு என்பது இது தானோ?தமிழினத்துக்கு இவன் தான் தலை வணங்கா தலைவன்

இவ்வாறான செய்திகளுக்கு face book இல் அதிக like உம் விழுந்திருக்கின்றன

- இந்த ஊடகங்கள், ஊடகங்கள் அல்ல. அநேகமானவை தாயாக மூலச்செய்திகளை கொஞ்சம் மாற்றி ஒட்டுபவை.

- முகநூலில் 'விரும்புகிறேன்' எனச்சொல்லுவதற்கு பலவேறு காரணங்கள் உண்டு. அநேகமானவை அந்த மாணவனின் பகுத்தறிவை பாராட்டுவதற்காக அமைந்திருக்கலாம்.

- மொத்தத்தில் take it easy :D

சிங்கள அமைச்சரின் காலில் விழ மறுத்த உமக்கு நாம் தலை வணங்குகிறோம் அய்யா.

முக்கியமாக கவனிக்க வேண்டியது , சிறுவன் கை கூட கொடுக்க மறுத்துள்ளான், சிங்களவன் மேல் இருக்கும் வெறுப்பே அது , ஆனால் உலகம் சொல்லுது சிங்களவனுடன் சேர்ந்து வாழலாம் என்று

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முக்கியமாக கவனிக்க வேண்டியது , சிறுவன் கை கூட கொடுக்க மறுத்துள்ளான், சிங்களவன் மேல் இருக்கும் வெறுப்பே அது , ஆனால் உலகம் சொல்லுது சிங்களவனுடன் சேர்ந்து வாழலாம் என்று

உலகம் சொல்லட்டும் வாழப்போகிறது நாங்கள் நாம்தான் முடிவெடுக்கவேண்டும்

நிழலியின் கருத்துடன் தான் இதில்.எனக்கு உடன்பாடு.

மற்றவனை உசுப்பேத்தி பலிகொடுத்து அரசியல் ஆதாயம் தேட நினைக்கும் கேடுகெட்ட இனம்.

நிழலியின் கருத்துடன் தான் இதில்.எனக்கு உடன்பாடு.

மற்றவனை உசுப்பேத்தி பலிகொடுத்து அரசியல் ஆதாயம் தேட நினைக்கும் கேடுகெட்ட இனம்.

குடிகாரன் பேச்சு விடிஞ்சாலே போச்சு..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.