Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழ விடுதலைப்புலிகளிற்கொதிரான இறுதி யுத்தத்தில் கருணாவின் படைகள். காணொளி

Featured Replies

நாடு கடந்த்த அமைப்பில் அங்கம் வகிக்கத் தயாராக இருக்கும் ஒரு இசுலாமியச் சகோதரரைக் காட்டுங்கள். நாடு கடந்த அரசு புலத் தமிழர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அவை, அதில் எந்த இசுலாமியச் சகோதரர் ஆவது போட்டி இட்டாரா? தமீழீழம் என்னும் கோட்பாட்டின் அடிப்படையில் எந்த இசுலாமியராவது செயற்பட ஆயுத்தமாக இருக்கிறாரா? நாங்கள் இவ்வாறு பல யோசனைகளைச் சொல்லலாம் நடைமுறையில் எது சாத்தியம் என்பது செயற்பாட்டின் மூலம் தான் தெரிய வரும்,கூட்டமைப்பு யாழ்ப்பாணத்திற்க்கு ஒரு இசுலாமியரையும், அம்பாறையில் ஒரு சிங்களவரையும் நியமித்தது அவர்கள் என்ன செய்தார்கள்?

ஏன் தயாராக அவர்கள் இல்லை? இதற்கான விடைகளை நாம் தேடி சரிபண்ணியாகவேண்டும். ந க அரசிலும் சரி பெரும்பாலான அமைப்புகள் வானொலி தொலைக்காட்சிகளில் எல்லாம் ஒரு குறிப்பிட்ட பிரதேசவாதிகளே பெரும்பான்மையாக ஆதிக்கம் செலுத்துகின்றனர். இஸ்லாமியத் தமிழர் மட்டுமல்ல தமிழீழத்தின் ஏனைய பிரதேசவாசிகளே விலத்திச் செல்கின்றனர். எவ்வளவுதான் ஒரு மைப்பாடு குறித்தும் தேசியம் குறித்தும் அறிவுரீதியாக ஒற்றுமையாக பேசினாலும் பண்பாட்டுதளத்திலும் பழக்கவழக்கத்திலும் சாதராண வார்த்தைகளில் கூட ஆதிக்க மனப்பான்மை உயிர்ப்புடன் இருக்கின்றது. இவைகளில் அடிப்படைத்திருத்தம் இன்றி ஒற்றுமை என்பது சாத்தியம் இல்லை.

நாம் இன்று சிங்களவனால் அகதியானதுபோல் இஸ்லாமியர்களினது காயங்கள் என்னும் பசுமரத்து ஆணியாக இருக்கின்றது. இஸ்லாமியர்களால் தமிழர்களுக்கு ஏற்பட்ட காயங்களை மறுப்பதற்கு இல்லை

http://www.youtube.com/watch?v=v5tBr16964Y&feature=related

ஆனால் இவற்றைக் கடந்து ஐக்கயப்பாடு என்பது புதிய அணுகுமுறைகள் ஊடாகவே சாத்தியம். பழைய தளங்களில் நாம் தொடர்ந்து இயங்கினால் அதனால் எந்தப் பிரயோசனமும் இல்லை. புலத்தில் எத்தனையோ ஊர் ஒன்று கூடல்கள் ஊர் ஒன்றியங்கள் செயற்படுகின்றது அதேபோல் இரு தரப்புக்குமான இணக்கப்பாடு குறித்த ஒன்றகூடல்கள். பொதுநிகழ்வுகளில் உள்வாங்கவேண்டிய அவசியம். பழைய கசந்த வரலாறுகளை பூசிமொழுகி உறவை புதிப்பிக்காமல் வரலாற்றுத் தவறுகளை கதைத்து அதிலிருந்து திருத்தங்களை உளவியல்ரீதியாகவும் சமூக அளவிலும் முன்னெடுத்தல் அவசியமாகின்றது. இவ்ற்றை தனிப்பட்ட ரீதியில் சிலர் செய்துகொண்டுதான் இருக்கின்றனர் ஆனால் இதற்கும் குறுந்தேசியவாதிகளின் பண்பாடு பழக்கவழக்கத்தில் பாரிய எதிர்ப்பும் இருக்கின்றது.

  • Replies 134
  • Views 8.2k
  • Created
  • Last Reply

இலக்கு ஒன்றாக இருக்கலாம் ஆனால் அதை அடையும் வழி பற்றிய கருத்து முரண்பாடுகள் இருக்கும். இதனாலையே பல அமைப்புக்கள் தெளிவான வழி தெரியாத காலகட்டங்களில் உருவாகின்றன.எமது போராட்டத்திலும் இது நடந்தது.பல வழிகள், பல அமைப்புக்கள், பல தலைவர்கள், இவற்றில் இருந்தே தெளிவான ஒரு வழியும் தலமையும் உருவாகும்.அதுவரை எமக்குச் சரியென தெரியும் வழியில், அந்த வழிச் செல்லும் அமைப்புடன், அமைப்பாளர்களுடன் இணைந்து வழிச் செல்வதே முக்கியமானது. கடந்து வந்த பாதை பற்றிய அனுபவதினூடாக முன் செல்வதே இலக்கு நோக்கிய பயணமாக இருக்க முடியும்.அதனை விடுத்து இனிப் ப்யணிக்க முடியாது என்று தரித்து இருந்து பழம் கதை பேசிக்

இலக்கை அடைய பல தளங்களில் வேலை செய்ய வேண்டிய தேவையுண்டு. ஒரு இலக்கை நோக்கி பல முனைகளில் நகரும் பொழுது தங்களுக்குள் அடிபட்டுக் கொண்டதிற்கான காரணமென்ன?

சரி பழையதை விடுவோம். மகா மகா பேரழிவுக்குப் பின்னும் சுடச் சுட பகிரங்கமாக அறிக்கைப் போர். போராளிகளின் மறு வாழ்விலிருந்து மாவீரர் தினம் கொண்டாடுவது வரை அதுதானே தொடர்கிறது. சிங்களம் பல முனைகளில் பயணித்தாலும் தங்களுக்குள் முட்டுப்பட்டுக் கொண்டதில்லை.

பேச்சை நடைமுறைப் படுத்திய புலிகள் முன்னணிச் சக்தியாகினர்

முன்னணிச் சக்தியாகி முடிவு என்ன ஆயிற்று? முன்பிருந்ததை விட முரண்பாடுகள் உள்ளகமாக பெருகியும் அடிமை நிலை முன்னை விட அதிகப்படியாகவும் இருப்பதுதானே உண்மை.

இலக்கை நோக்கிய ஒரு பாதை இலக்கையே அழிக்க முனையக் கூடாது. அவ் அழிவுப்பாதை தொடர முடியாது. அழிவுக்கான தவறுகள் குறித்து கதைப்பது இலக்கு நோக்கிய செயற்பாட்டுக்கு விரோதமன்று.

// இவ்ற்றை தனிப்பட்ட ரீதியில் சிலர் செய்துகொண்டுதான் இருக்கின்றனர் ஆனால் இதற்கும் குறுந்தேசியவாதிகளின் பண்பாடு பழக்கவழக்கத்தில் பாரிய எதிர்ப்பும் இருக்கின்றது.

//

யார் இந்தக் குறுந்தேசிய வாதிகள்? அவர்களை இனம் காட்டுங்கள்? மீண்டும் மீண்டும் நீங்கள் பாவிக்கும் குறும் தேசியம் என்பதை எது என்று சொல்லுங்கள்? உங்கள் எதிர்வினைகள் நாடுகடந்த அரசைப் பற்றியது எனில், அவர்கள் குறுகிய ஒரு வட்டத்துக்குள் சுழன்று கொண்டிருந்தால் அவர்களாகவே அழிந்து விடுவார்கள். உங்களுகுச் சரியெனத் தெரியும் வழியில் அது சார்ந்து செயற்படும் நபர்களுடன் சேர்ந்து செயற்படுங்கள்.

மற்றவர்களை நோக்கி நாங்கள் வேண்டுதல் செய்ய வேண்டிய அவசியம் இப்போது இல்லை.இப்போது எல்லா வழிகளும் எவருக்கும் திறந்தே களம் இருக்கிறது.

எனது சொந்தக் கருத்து புலம் பெயர் தேசத்தில் இருந்து எம்மால் செய்யக்கூடியது நாம் வாழும் மேற்குலகம் சார்ந்து, போர்க்குற்றம் சார்ந்து மேற்குலகம் செய்யும் துருவ அரசியலினூடாக சிறிலங்காவை சிக்க வைத்து அதனூடாக களத்தில் தமிழரின் இருப்பையும் அவர்கள் தமது சொந்தக் காலில் நிற்பதற்கான பலத்தை உருவாக்குதலும் மட்டுமே.

நீங்கள் சொல்லும் இசுலாமியச் சகோதரர்களினுடனான கூட்டமைவு பரந்து பட்ட அடையாளம் என்பன அல்லாம் களத்தில் தோன்றும் தமிழத் தேசிய அரசியற் சக்தியினூடாகவே சாத்தியம் ஆகும்.ஏனெனில் போராட்டம் என்பது அடக்குமுறையில் இருந்து பிறப்பது வெறும் கதைகளினூடாக அல்ல.புலத் தமிழர்கள் தமிழர் என்னும் காரணத்திற்காக எந்த அடக்குமுறையையும் எதிர் நோக்கவைல்லை.

முன்னணிச் சக்தியாகி முடிவு என்ன ஆயிற்று? முன்பிருந்ததை விட முரண்பாடுகள் உள்ளகமாக பெருகியும் அடிமை நிலை முன்னை விட அதிகப்படியாகவும் இருப்பதுதானே உண்மை.

இலக்கை நோக்கிய ஒரு பாதை இலக்கையே அழிக்க முனையக் கூடாது. அவ் அழிவுப்பாதை தொடர முடியாது. அழிவுக்கான தவறுகள் குறித்து கதைப்பது இலக்கு நோக்கிய செயற்பாட்டுக்கு விரோதமன்று.

எமது போராட்டம் வெற்றி அடைந்தது, ஏனேனில் சர்வதேச அங்கீகாரம் பெற்ற ஒரு தனிப் பிராந்தியம் தமிழர்களுக்காக இலங்கையில் மீண்டும் உருவாக்கப்பட்டது, இவை புலிகள் என்னும் ஒரு முன்னணிச் சக்தி உருவானதால் ஏற்பட்ட முன் நேற்றம் ஆனால் துரதிஸ்ட்டவசமாக அந்த வெற்றியே பல் வேறு சர்வதேச சக்திகளை உள் நுழைய விட்டது.எமது போராட்டம் தோற்றதற்கு இந்த வெளிச் சக்திகளே பிரதான காரணம் ஆகும்.ஆனால் அதனைச் சரி வர இனம் காணத் தலமை தவறியது உண்மை. எந்த அளவுக்கு, இந்த ஊடுருவல் இருந்தது என்பது மெல்ல மெல்லவே வெளிவரும்.

அழிவுக்கான தவறுகளைப் பேசுவது என்று சொல்லிக் கொண்டு போராடியதே தவறு, தமிழத் தேசிய விடுதலைப் போரே தேவையற்றது என்று பேசுவது இலக்கு நோக்கிய செயற்பாட்டிற்கு எவ்வகையில் பலம் சேர்க்கும்?

இனவிடுதலை நோக்கிய போராட்டம் தவறு என்று எங்கேயும் நான் சொன்னதில்லை. மேலும் நடந்த தவறுகளுக்கு போராடிய அமைப்புகள்(தனிப்பட்ட ஒரு அமைப்பு இல்லை) காரணம் என்ற வாதத்துக்கு எதிராக தவறுகளுக்கான காரணமும் தற்போதைய முனைப்புகளின் முரண்பாடுகளுக்கான காரணமும் எமது சமூகத் தளத்தில் இருக்கின்றது என்பதே எனது கருத்துக்களின் அடிப்படை. அதை புரிந்துகொள்பவர்கள் எனது கருத்து போராட்டத்துக்கு எதிரானது புலிகளுக்கு எதிரானது என்றால் அதற்கு நான் பொறுப்பாக முடியாது.

சுகன் மீண்டும் மீண்டும் பேசியதை திருப்பித் திருப்பிப்பேசுவதில் பயன் இல்லை.

இந்தக் கருத்தாடலை சில தொகுப்புக்களுடன் முடிக்கிறேன்.

1)தமிழத் தேசிய விடுதலைப் போரட்டம் தவறானது அல்ல.

2) தொடர்ந்தும் நாம் போராட வேண்டும்.

3) செயற்படுவதே போராடுவது என்பது.

4) சமூகத் தளத்தை மாற்றுவதும் போராட்ட முன்னணிச் சக்திகளின் கையிலையே இருக்கிறது.

5) போராட்ட முன்னணிச் சக்தியாகுவதற்கான களம் எல்லாருக்கும் திறந்து இருக்கிறது.

6)போராட்ட முன்னணிச் சக்தி என்பது புலத்தில் அல்ல களத்திலையே உருவாக முடியும்.

7) புலத்தில் இருந்து களச் சக்திகளுக்கு இப்படிப் போராடுங்கள் எனக் கட்டளை இட எம்மில் எவருக்குமே தார்மீக நியாயம் கிடையாது.

8) எம்மால் எதைச் செய்ய முடியுமோ அது பற்றி நாம் பேசுவதே நியாயமானதும் பிரியோசனமானதும் ஆகும்.

9) எம்மால் முடியாததை மற்றவன் செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பது அது பற்றிக் கதைப்பது எல்லாம் மிகவும் போலியான அரசியல்.

10) ஆகவே எனது தனிப்பட்ட கருத்து நாம் போர்க் குற்றம் சார்ந்து மேற்குலகின் தற்போதைய நலன் சார்ந்து அதற்கான வேலகளை புலத்தில் இருக்கும் மக்கள்,அமைப்புக்கள்,கட்சிகள் ,நீதி மன்றங்கள் என எல்லா இடமும் காவிச் செல்ல வேண்டும்.அவ்வாறு செய்யும் அமைக்குளை உருவாக்குதல் அல்லது அவ்வாறு செயற்படும் அமைப்புகளுடன் சேர்ந்து வேலை செய்ய வேண்டும்.

உரையாடலுக்கு நன்றி .

உங்கள் பெரும்பான்மையான கருத்துக்களுடன் உடன்பட்டு இத் திரியில் இருந்து வெளியேறுகின்றேன்

நன்றி.

அருமையான தொகுப்பு, அத்தனையும் செய்யப்படவேண்டிய / செய்யவேண்டிய வேலைகள். குறிப்பாக, "செயற்படுவதே போராடுவது என்பது", "எம்மால் முடியாததை மற்றவன் செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பது அது பற்றிக் கதைப்பது எல்லாம் மிகவும் போலியான அரசியல்".

நன்றி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கள் எழுத்துக்களுக்கு நன்றி நாரதர்.

ஒரு விடயத்தை கருத்துக்களால் வேறுபட்டாலும் தாயக மக்களின் மண்ணின் பற்றால் கௌரவமாக விவாதிக்கலாம் என்பதை இந்த திரி நிரூபித்துள்ளது. கருத்துரைத்த அனைத்து உறவுகளுக்கும் நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

நாரதர், சுகன்,கிருபன்,நெடுக்காலபோவான், அகூதா.. இன்னும் கருத்தாடிய உறவுகளுக்கும் முதலில் கருத்தாடியவர்களுக்கு தலைவணங்குகிறேன். இந்தத்திரியிலிருந்து தெரிகிறது தெளிவு என்பது எப்படியிருக்கவேண்டும் . வாதாடல் என்பதன் நியாயத்தன்மைகள் எத்தகைய தெளிவுடன் சுட்டிக்காட்டப்படவேண்டும் என்பதை இங்கு உணர்த்தியிருக்கிறார்கள் கருத்தாளர்கள் கருத்து மட்டுமே ஒவ்வொருவருக்கும் வித்தியாசமாக இருக்கிறதே தவிர விடுதலை என்பதில் எல்லோரும் ஒரே நேர்கோட்டில் வந்துள்ளார்கள். இதை விட்டுவிட்டு ஒழுங்காக வாதாடமுடியாமல் புலி இகழ்ச்சியும் அதனைப்போல புலி ஆதரவாளர்களாக காட்டிக்கொள்பவர்கள் மற்றைய இயக்கங்களைக் கொச்சைப்படுத்துவதும் இவ்வளவு நாளும் இந்த யாழ்க்கருத்துக்களத்தில் ஆளையாள் இகழ்வதிலேயே காலம் ஓடியிருக்கிறது. இந்தக்கருத்துக்களத்தில் இந்தத் திரியை வாசித்த கருத்தாளர்கள் இந்தக் கருத்தாளர்களின் நேர்மையை இனிவரும் காலங்களில் கடைப்பிடிப்பார்கள் என்று நம்புவோம்.

  • கருத்துக்கள உறவுகள்

2006 ல் இருந்து இன்று வரை வாசித்த திரிகளில் மிக உபயோகமான கருத்துக்களும்,நாகரீகமான கருத்தாடலும் கொண்டது இத்திரி என்றால் மிகையாகாது.எழுதிய உறவுகளுக்கு நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

சுகன் மீண்டும் மீண்டும் பேசியதை திருப்பித் திருப்பிப்பேசுவதில் பயன் இல்லை.

இந்தக் கருத்தாடலை சில தொகுப்புக்களுடன் முடிக்கிறேன்.

1)தமிழத் தேசிய விடுதலைப் போரட்டம் தவறானது அல்ல.

2) தொடர்ந்தும் நாம் போராட வேண்டும்.

3) செயற்படுவதே போராடுவது என்பது.

4) சமூகத் தளத்தை மாற்றுவதும் போராட்ட முன்னணிச் சக்திகளின் கையிலையே இருக்கிறது.

5) போராட்ட முன்னணிச் சக்தியாகுவதற்கான களம் எல்லாருக்கும் திறந்து இருக்கிறது.

6)போராட்ட முன்னணிச் சக்தி என்பது புலத்தில் அல்ல களத்திலையே உருவாக முடியும்.

7) புலத்தில் இருந்து களச் சக்திகளுக்கு இப்படிப் போராடுங்கள் எனக் கட்டளை இட எம்மில் எவருக்குமே தார்மீக நியாயம் கிடையாது.

8) எம்மால் எதைச் செய்ய முடியுமோ அது பற்றி நாம் பேசுவதே நியாயமானதும் பிரியோசனமானதும் ஆகும்.

9) எம்மால் முடியாததை மற்றவன் செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பது அது பற்றிக் கதைப்பது எல்லாம் மிகவும் போலியான அரசியல்.

10) ஆகவே எனது தனிப்பட்ட கருத்து நாம் போர்க் குற்றம் சார்ந்து மேற்குலகின் தற்போதைய நலன் சார்ந்து அதற்கான வேலகளை புலத்தில் இருக்கும் மக்கள்,அமைப்புக்கள்,கட்சிகள் ,நீதி மன்றங்கள் என எல்லா இடமும் காவிச் செல்ல வேண்டும்.அவ்வாறு செய்யும் அமைக்குளை உருவாக்குதல் அல்லது அவ்வாறு செயற்படும் அமைப்புகளுடன் சேர்ந்து வேலை செய்ய வேண்டும்.

உரையாடலுக்கு நன்றி .

நன்றி நாரதர் நல்லதொரு தொகுப்பிற்கு, எம்மால் இயன்றதை மக்களின் விடுதலைக்காக செய்து கொண்டிருப்போம்

எம்மால் முடியாததை மற்றவன் செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பது அது பற்றிக் கதைப்பது எல்லாம் மிகவும் போலியான அரசியல்.

என்ன மற்றவன்,,செய்யமுடியாததை நான் செய்யணும்னு??

நாரதர் கலகம் ... நன்மைலயே முடிஞ்சிருச்சா..?! அட ச்சே... சப்புன்னுபோயிருச்சே! <_<

உண்மைய சொல்லணும்னா,,,

சுகனோட எழுத்துக்கள் எல்லா இடங்களிலும் இல்ல/.....பெரும்பாலான இடங்களில், லவ்வர கட்டி புடிக்குறமாதிரி,,சுகம்மா இருக்கும்!

ஆனா சுகன் , கடந்தகாலங்களை திரும்பி பார்ப்பதற்கும் /நோண்டி பார்ப்பதற்கும் நெறைய வித்யாசம் இருக்கு!

உணர்ச்சிவசப்பட்டு ,,ஓவரா பேசினாலும், நெடுக்கு கோவமும் எனக்கு புடிச்சிருக்கு! :)

  • கருத்துக்கள உறவுகள்

சுகன் மீண்டும் மீண்டும் பேசியதை திருப்பித் திருப்பிப்பேசுவதில் பயன் இல்லை.

இந்தக் கருத்தாடலை சில தொகுப்புக்களுடன் முடிக்கிறேன்.

1)தமிழத் தேசிய விடுதலைப் போரட்டம் தவறானது அல்ல.

2) தொடர்ந்தும் நாம் போராட வேண்டும்.

3) செயற்படுவதே போராடுவது என்பது.

4) சமூகத் தளத்தை மாற்றுவதும் போராட்ட முன்னணிச் சக்திகளின் கையிலையே இருக்கிறது.

5) போராட்ட முன்னணிச் சக்தியாகுவதற்கான களம் எல்லாருக்கும் திறந்து இருக்கிறது.

6)போராட்ட முன்னணிச் சக்தி என்பது புலத்தில் அல்ல களத்திலையே உருவாக முடியும்.

7) புலத்தில் இருந்து களச் சக்திகளுக்கு இப்படிப் போராடுங்கள் எனக் கட்டளை இட எம்மில் எவருக்குமே தார்மீக நியாயம் கிடையாது.

8) எம்மால் எதைச் செய்ய முடியுமோ அது பற்றி நாம் பேசுவதே நியாயமானதும் பிரியோசனமானதும் ஆகும்.

9) எம்மால் முடியாததை மற்றவன் செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பது அது பற்றிக் கதைப்பது எல்லாம் மிகவும் போலியான அரசியல்.

10) ஆகவே எனது தனிப்பட்ட கருத்து நாம் போர்க் குற்றம் சார்ந்து மேற்குலகின் தற்போதைய நலன் சார்ந்து அதற்கான வேலகளை புலத்தில் இருக்கும் மக்கள்,அமைப்புக்கள்,கட்சிகள் ,நீதி மன்றங்கள் என எல்லா இடமும் காவிச் செல்ல வேண்டும்.அவ்வாறு செய்யும் அமைக்குளை உருவாக்குதல் அல்லது அவ்வாறு செயற்படும் அமைப்புகளுடன் சேர்ந்து வேலை செய்ய வேண்டும்.

உரையாடலுக்கு நன்றி .

நாரதரின் தொகுப்பில் உள்ளவைகளுடன் ஒத்துப்போகமுடிகின்றது, முக்கியமாக முதல் இரண்டும்!

எல்லோராலும் சகலதையும் செய்யமுடியாது. ஒவ்வொருவரும் தமது சக்திக்கு ஏற்பவும், விருப்பத்தின் அடிப்படையிலும் பங்களிக்கமுடியும். அந்த வகையில் அரசியல் உரையாடல்கள் முக்கியமானவைதான்.

நாரதருக்கு ஏழு பச்சை ,

எனக்கு பெரும் குழப்பம்.போராட்டம் தேவை என்பதும் அதை தொடரவேண்டும் என்பது அன்று செல்வா சொன்னதும் இன்று சம்பந்தர் சொல்வதும் அதேதான் .

யாழில் எழுதுவது தான் நீங்கள் சொன்ன மூன்றாவது , அதைவிட மற்றவன் என்ன செய்தான்,செய்கின்றான் என்றது தெரியாமல் நாலு பேரை போடுவதுதான் செயற்பாடு என்று நம்புபவர்கள் தான் அதிகம் .

களம் இப்போ தான் தான் திறந்திருக்கு,அதற்கு ராஜபக்சாவிற்குத்தான் நன்றி சொல்ல வேண்டும் .மிச்சம் எல்லாம் நாம் எழுதி களைத்தவை.

இன்றாவது களம் திறந்திருக்கு என்று சொல்ல வந்ததற்கு நன்றி ,அதை விட்டு அகூதா மாதிரி எல்லோரும் சேர்ந்து எங்களுடன் வாருங்கள் என்பது போலில்லாமல் .

ஏகபோகம் ஏகபிரநிதித்துவம்,எங்களுக்கு பின்னால் வாங்கோ என்பதையெல்லாம் கை விடுங்கோ .நாங்ககளும் சிங்களத்திற்கு எதிராகத்தான் போராடுகின்றோம் ,அதே நேரம் எங்களுக்குள் இருக்கும் அடக்குமுறைக்கும் எதிராகவும் போராடுகின்றோம் .

Edited by arjun

சேர்.. நோ மோர் அடக்குமுறை.. :wub:

ரைகர்ஸ் ஆர் ஆல் டெட்..! :( த ஸ்ரேஜ் இஸ் தேர் ஃபொர் எவ்றிவன்..! :rolleyes:

சுகன் மீண்டும் மீண்டும் பேசியதை திருப்பித் திருப்பிப்பேசுவதில் பயன் இல்லை.

இந்தக் கருத்தாடலை சில தொகுப்புக்களுடன் முடிக்கிறேன்.

1)தமிழத் தேசிய விடுதலைப் போரட்டம் தவறானது அல்ல.

2) தொடர்ந்தும் நாம் போராட வேண்டும்.

3) செயற்படுவதே போராடுவது என்பது.

4) சமூகத் தளத்தை மாற்றுவதும் போராட்ட முன்னணிச் சக்திகளின் கையிலையே இருக்கிறது.

5) போராட்ட முன்னணிச் சக்தியாகுவதற்கான களம் எல்லாருக்கும் திறந்து இருக்கிறது.

6)போராட்ட முன்னணிச் சக்தி என்பது புலத்தில் அல்ல களத்திலையே உருவாக முடியும்.

7) புலத்தில் இருந்து களச் சக்திகளுக்கு இப்படிப் போராடுங்கள் எனக் கட்டளை இட எம்மில் எவருக்குமே தார்மீக நியாயம் கிடையாது.

8) எம்மால் எதைச் செய்ய முடியுமோ அது பற்றி நாம் பேசுவதே நியாயமானதும் பிரியோசனமானதும் ஆகும்.

9) எம்மால் முடியாததை மற்றவன் செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பது அது பற்றிக் கதைப்பது எல்லாம் மிகவும் போலியான அரசியல்.

10) ஆகவே எனது தனிப்பட்ட கருத்து நாம் போர்க் குற்றம் சார்ந்து மேற்குலகின் தற்போதைய நலன் சார்ந்து அதற்கான வேலகளை புலத்தில் இருக்கும் மக்கள்,அமைப்புக்கள்,கட்சிகள் ,நீதி மன்றங்கள் என எல்லா இடமும் காவிச் செல்ல வேண்டும்.அவ்வாறு செய்யும் அமைக்குளை உருவாக்குதல் அல்லது அவ்வாறு செயற்படும் அமைப்புகளுடன் சேர்ந்து வேலை செய்ய வேண்டும்.

உரையாடலுக்கு நன்றி .

சிறப்பான தொகுப்பு நாரதர்....நீங்கள் குறிப்பிட்டுள்ள அனைத்துடனும் உடன்பட முடிகின்றது. ஆறாவதும் ஏழாவதும் மிகச் சரியான யதார்த்த பூர்வமான ஆனால் புலம்பெயர் தேசங்களிலுள்ள தமிழ் அரசியல் சக்திகளில் பலர் மறுக்க முனைகின்ற விடயங்கள்.

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

களம் என்பது எங்கே இருக்கு? :rolleyes: முழு இலங்கைத்தீவும் சிங்களவனுக்குத்தானே சொந்தம்? :wub:

என்னைப் பொறுத்தவரையில் களம் என்பது கடலுக்கைதான் இருக்கு..! :icon_mrgreen:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாரதருக்கு ஏழு பச்சை ,

எனக்கு பெரும் குழப்பம்.போராட்டம் தேவை என்பதும் அதை தொடரவேண்டும் என்பது அன்று செல்வா சொன்னதும் இன்று சம்பந்தர் சொல்வதும் அதேதான் .

யாழில் எழுதுவது தான் நீங்கள் சொன்ன மூன்றாவது , அதைவிட மற்றவன் என்ன செய்தான்,செய்கின்றான் என்றது தெரியாமல் நாலு பேரை போடுவதுதான் செயற்பாடு என்று நம்புபவர்கள் தான் அதிகம் .

களம் இப்போ தான் தான் திறந்திருக்கு,அதற்கு ராஜபக்சாவிற்குத்தான் நன்றி சொல்ல வேண்டும் .மிச்சம் எல்லாம் நாம் எழுதி களைத்தவை.

இன்றாவது களம் திறந்திருக்கு என்று சொல்ல வந்ததற்கு நன்றி ,அதை விட்டு அகூதா மாதிரி எல்லோரும் சேர்ந்து எங்களுடன் வாருங்கள் என்பது போலில்லாமல் .

ஏகபோகம் ஏகபிரநிதித்துவம்,எங்களுக்கு பின்னால் வாங்கோ என்பதையெல்லாம் கை விடுங்கோ .நாங்ககளும் சிங்களத்திற்கு எதிராகத்தான் போராடுகின்றோம் ,அதே நேரம் எங்களுக்குள் இருக்கும் அடக்குமுறைக்கும் எதிராகவும் போராடுகின்றோம் .

சரி எல்லாத்தையும் விடுவம்......யார் குத்தினாலும் அரிசியானால் சரி இதுதான் இப்போதைய நிலைப்பாடு...ஆனால் நீங்கள் எந்தநிலையில்??????நீங்கள் சிங்களத்திற்கு எதிராக போராடுகின்றீர்கள்????எங்கை?என்ன மாதிரி?

சுகன் மீண்டும் மீண்டும் பேசியதை திருப்பித் திருப்பிப்பேசுவதில் பயன் இல்லை.

இந்தக் கருத்தாடலை சில தொகுப்புக்களுடன் முடிக்கிறேன்.

1)தமிழத் தேசிய விடுதலைப் போரட்டம் தவறானது அல்ல.

2) தொடர்ந்தும் நாம் போராட வேண்டும்.

3) செயற்படுவதே போராடுவது என்பது.

4) சமூகத் தளத்தை மாற்றுவதும் போராட்ட முன்னணிச் சக்திகளின் கையிலையே இருக்கிறது.

5) போராட்ட முன்னணிச் சக்தியாகுவதற்கான களம் எல்லாருக்கும் திறந்து இருக்கிறது.

6)போராட்ட முன்னணிச் சக்தி என்பது புலத்தில் அல்ல களத்திலையே உருவாக முடியும்.

7) புலத்தில் இருந்து களச் சக்திகளுக்கு இப்படிப் போராடுங்கள் எனக் கட்டளை இட எம்மில் எவருக்குமே தார்மீக நியாயம் கிடையாது.

8) எம்மால் எதைச் செய்ய முடியுமோ அது பற்றி நாம் பேசுவதே நியாயமானதும் பிரியோசனமானதும் ஆகும்.

9) எம்மால் முடியாததை மற்றவன் செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பது அது பற்றிக் கதைப்பது எல்லாம் மிகவும் போலியான அரசியல்.

10) ஆகவே எனது தனிப்பட்ட கருத்து நாம் போர்க் குற்றம் சார்ந்து மேற்குலகின் தற்போதைய நலன் சார்ந்து அதற்கான வேலகளை புலத்தில் இருக்கும் மக்கள்,அமைப்புக்கள்,கட்சிகள் ,நீதி மன்றங்கள் என எல்லா இடமும் காவிச் செல்ல வேண்டும்.அவ்வாறு செய்யும் அமைக்குளை உருவாக்குதல் அல்லது அவ்வாறு செயற்படும் அமைப்புகளுடன் சேர்ந்து வேலை செய்ய வேண்டும்.

உரையாடலுக்கு நன்றி .

மிக மிக அற்புதமான சிந்தனைகள். நாரதருக்கு பாராட்டுகள்.

ஒவ்வொன்றுக்கும் எனது கருத்துக்களையும் இணைக்க விளைகிறேன்.

(1) தமிழத் தேசிய விடுதலைப் போரட்டம் தவறானது அல்ல.

(கடந்தகால வரலாறுகளில் இருந்து தமிழ்த் தேசிய விடுதலைப் போரட்டம் மிக மிக அவசியம், வேறு வழியில்லை என்பது தெளிவு)

(2) தொடர்ந்தும் நாம் போராட வேண்டும்.

(தமிழின விரோத சக்திகளுக்கெதிரான பல வடிவப் போராட்டமே தமிழனின் இருப்பை உறுதிப்படுத்தும். ஒரு வடிவத்துக்குள் மட்டுப்பட்டுவிடக் கூடாது. உதாரணமாக போர்க்குற்றம் என்ற ஒன்றுக்குள் மட்டும் புலத்துப் போராட்டம் மட்டுப்பட்டுவிடக் கூடாது. சந்தர்ப்பம் சூழ்நிலை காரணமாக அதற்கு முதலிடம் கொடுக்கலாம். அதற்க்குச் சமாந்தரமாக, தற்போதைய நல்ல சூழ்நிலையைப் பயன்படுத்தி தமிழரின் அரசியல் அபிலாசைகளையும், ஏனைய நீண்டகாலப் பிரச்சினைகளையும் - முறையாக தயாரிக்கப்பட்ட ஆவணங்களின் உதவியுடன் - சம்பந்தப்பட்ட அனைவருது மனதிலும் ஆழமாக பதிக்க ஒவ்வெருவரும் முற்படவேண்டும். 64 வருட வரலாற்றைப் பயன்படுத்தி, சகல சிங்கள ஆட்சியாளர்களுக்கும் எதிரான நிலைப்பாட்டை உருவாக்க வேண்டும். இல்லையெனின் போர்க்குற்றம் என்ற தலைப்பு மறைந்தால், மீண்டும் வெறுமை தான் மிஞ்சும். மகிந்த கும்பல் மறைந்தால், ஆட்சியில் இருந்து அகன்றால், சம்பந்தப்பட்ட ஒருசிலர் மரணித்தால் போர்க்குற்றத்தின் வலிமை குறைந்துவிடும். ரணில், சந்திரிக்கா, சஜித் பிரேமதாச போன்ற ஏனைய சிங்களத் தலைமைகள் மேல் இக்குற்றச்சாட்டு பெருமளவில் இல்லை என்பதுவும், இவர்களைப் போன்ற சிங்களத் தலைமைகள் அதற்குச் சாதகமான அறிக்கைகளை அவ்வப்போது விட்டு, மேலைநாடுகளில் தமது நற்பெயரை பாதுகாத்து வருவதும் ஆபத்தானது).

(3) செயற்படுவதே போராடுவது என்பது.

(ஒவ்வொருவரும் உணரவேண்டிய கருத்து. ஒவ்வொருவரும், பேச்சை, அறிக்கைகளை, ஆலோசனைகளைக் குறைத்து, அர்த்தமுள்ள செயல்களில் தளரா மனத்துடன் இறங்க வேண்டும். செயற்பாடுகள் தமிழ்த் தேசிய விடுதலைப் போரட்ட முன்னணிச் சக்திகளை பலப்படுத்தும் ஒன்றிணைக்கும் வகையிலும், தமிழின விரோத சக்திகளை பலவீனப்படுத்தும் முறியடிக்கும் வகையிலும் அமைய வேண்டும். சொல்வதற்கு முன் செயல் வேண்டும்).

(4) சமூகத் தளத்தை மாற்றுவதும் போராட்ட முன்னணிச் சக்திகளின் கையிலையே இருக்கிறது.

(போராட்ட முன்னணிச் சக்திகளில் பெரிதும் தங்கியுள்ளது. முன்னணிச் சக்திகளால் மட்டும் செய்திவிட முடியாது. இதை உணர்ந்த அனைவரும் தம்மால் இயன்றவரை, சரியான தளத்தில் இல்லாதவர்களை - தாம் அறிந்தவர்களை, அவர்கள் மனம் நோகாமல் மாற்ற வேண்டும். எம்மினத்தைப் பொறுத்தவரையில் இது மிகவும் சவாலாகவே அமையும். ஆனால் தமிழினப் பற்றாளர்கள் அனைவரும் முயற்சித்தால் இது இலகுவில் சாத்தியமாகும்)

(5) போராட்ட முன்னணிச் சக்தியாகுவதற்கான களம் எல்லாருக்கும் திறந்து இருக்கிறது.

(உறுதியான, பொருத்தமான முன்னணிச் சக்திகள் - புலத்திலும் களத்திலும் - விரைவில் வெளிப்படும் என நம்பலாம்).

(6) போராட்ட முன்னணிச் சக்தி என்பது புலத்தில் அல்ல களத்திலையே உருவாக முடியும்.

(முன்னணி களத்தில் என்பது உண்மைதான். அது தனியே களத்தில் மட்டும் உருவாக முடியாது என நினைக்கிறேன். ஆனால் அதற்கு பின்னணியும் வேண்டும். சுதந்திரமாக, தைரியமாக சிந்தித்துச் செயலாற்றும் வலுவான புலத்தின் பின்னணி மிக மிக அவசியம்).

(7) புலத்தில் இருந்து களச் சக்திகளுக்கு இப்படிப் போராடுங்கள் எனக் கட்டளை இட எம்மில் எவருக்குமே தார்மீக நியாயம் கிடையாது.

(தாமீக யதார்த்தம் தான். புலத்தில் இருந்து களச் சக்திகளுக்கு கட்டளையிடும், களத்தில் இருந்து புலச் சக்திகளுக்கு கட்டளையிடும் மனநிலை ஆரோக்கியமற்றது என நினைக்கிறேன். நாடு கடந்த தமிழீழ அரசைக் கட்டுப்படுத்த கூட்டமைப்பும், கூட்டமைப்பைக் கட்டுப்படுத்த நாடு கடந்த தமிழீழ அரசும் முயல்வது பின்னடைவுகளை ஏற்படுத்தும் என்பதைப் போல. ஆனால் இருவரும் ஒரே இலட்சியத்துடன் தமது வழிகளில் புரிந்துணர்வுடன், ஒருவரை ஒருவர் பாதிக்காமல் பயணிக்க வேண்டும்).

(8) எம்மால் எதைச் செய்ய முடியுமோ அது பற்றி நாம் பேசுவதே நியாயமானதும் பிரியோசனமானதும் ஆகும்.

(நியாயமான கருத்து. அதுவும் செய்துவிட்டு, முக்கியமாக செய்துகொண்டிருக்கும் போது, செய்த அனுபவத்தின் அடியில் தேவையானவற்றை, வலுச்சேர்க்கும் வகையில் பேசுவதே நியாயமானதும் பயனுள்ளதுமாகும்).

(9) எம்மால் முடியாததை மற்றவன் செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பது அது பற்றிக் கதைப்பது எல்லாம் மிகவும் போலியான அரசியல்.

(ஒவ்வொருவரும் உணரவேண்டிய கருத்து. தொடர்ந்து செயல்ப்பட்டுக் கொண்டிருப்பதே அவசியம். கதைகூடத் தேவையில்லை).

(10) ஆகவே எனது தனிப்பட்ட கருத்து நாம் போர்க் குற்றம் சார்ந்து மேற்குலகின் தற்போதைய நலன் சார்ந்து அதற்கான வேலகளை புலத்தில் இருக்கும் மக்கள்,அமைப்புக்கள்,கட்சிகள் ,நீதி மன்றங்கள் என எல்லா இடமும் காவிச் செல்ல வேண்டும்.அவ்வாறு செய்யும் அமைக்குளை உருவாக்குதல் அல்லது அவ்வாறு செயற்படும் அமைப்புகளுடன் சேர்ந்து வேலை செய்ய வேண்டும்.

(சர்வதேச சூழல் இதற்க்கு சாதகமாக இருப்பதால் இது காலத்தின் அவசிய தேவையாகும். ஆனால் இத்துடன் மட்டும் எமது இலட்சியத்தை அடைய முடியாது. அதற்கான வலுவான அடித்தளத்தை இன்னமும் இடவேண்டியுள்ளது. சாதகமான சூழலை, எமது இலட்சியத்துக்கான வலுவான அடித்தளமாக மாற்ற வேண்டும். இந்த வெற்றியிலேயே எதிர்காலம் தங்கயுள்ளது. போர்குற்றம் என்பது எமது இலட்சியத்தை அடைவதற்கான ஒரு துருப்புச்சீட்டு மட்டும் தான். நாம் போர்க்குற்றவாளிகளைத் தண்டிக்கக் கோரும் அதே வேளை, பாதிக்கப்பட்டவர்களுக்கு சர்வதேச நியமத்தின் அடிப்படையில் முழுமையான நிவாரணம் கிடைக்கவும் போராட வேண்டும். அதற்கான குரல்களை இன்னமும் காணவில்லை என்பது இன்னுமொரு கவலையான விடயம். ஒரு குழுவினர் போர்க்குற்றவாளிகளை தண்டிக்க முயற்சிக்கட்டும், இன்னொரு குழுவினர் பாதிக்கப்பட்டவர்களுக்கு சர்வதேச நியமத்தின் அடிப்படையில் முழுமையான நிவாரணம் கிடைக்கவும் முயற்சிக்கவும் வேண்டும்).

மீண்டும் நாரதரின் சீரான சிந்தனையோட்டத்துக்கு நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

புலம், களம் என்று பிரிப்பதே முதலில் ஆரோக்கியமற்றது..! வடக்கு கிழக்கு என்று பிரிவினையை ஊட்டி தமிழர்களைப் பிரித்ததுபோலவே இதுவும்..! :unsure:

புலம், களம் இரண்டிலும் வாழ்பவர்கள் தமிழர்களே என்கிற சிந்தனை முதலில் வர வேண்டும்..! :rolleyes:

--இரண்டு பிரிவினரதும் அடிப்படைப் பிரச்சனைகள், பொருளாதார தேவைகள், இரு பிரிவினரும் வாழும் இடங்களில் எதிர்கொள்ளும் அரசியல் நெருக்கடிகள், கலாச்சார வேற்றுமைகள், தலைமுறைகளுக்கிடையே உருவாகி வரும் மொழி வேறுபாடுகள், அடக்குமுறைகள் என்பன முற்றிலும் வேறுவேறானவை. ஒரு பிரிவினரின் பிரச்சனைகளுக்கான தீர்வுகளும் முற்றிலும் வேறு வேறானவை

புலம், களம் என்று பிரிப்பதே முதலில் ஆரோக்கியமற்றது..! வடக்கு கிழக்கு என்று பிரிவினையை ஊட்டி தமிழர்களைப் பிரித்ததுபோலவே இதுவும்..! :unsure:

புலம், களம் இரண்டிலும் வாழ்பவர்கள் தமிழர்களே என்கிற சிந்தனை முதலில் வர வேண்டும்..! :rolleyes:

உலகில் பல புலம்பெயர் இனங்கள் தமது தாயக மக்கள் விடுதலைபெற வேண்டும் என்பதற்காகவும்

நாடு உள்ளவர்கள் தமது நாடுகளை அரசியல் / இராணுவ / பொருளாதார வழிகளில் பலப்படுத்த

மேற்குலக நாடுகளில் உழைக்கின்றனர்.

நாடு வேண்டி பாலஸ்தீனர்களும் திபெத்தியர்களும் ...எனவும் கிடைத்த நாட்டை வளம்படுத்த யூதர்கள், ஆர்மீனியர்கள்.. எனவும் செயற்படுவதை கண்ணால் காணுகிறோம், காதால் கேட்கிறோம்.

இந்த நாடுகளிலும் கூட களத்திலும் புலத்திலும் வேற்றுமைகள் உள்ளன. அதையும் மீறி அவர்கள் இணைந்துள்ளனர், தேசிய நலன்களுக்காக.

.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.