Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'ஈரான் மீதான தாக்குதலுக்கு அமெரிக்கா, பிரிட்டன் திட்டம்'

Featured Replies

'ஈரான் மீதான தாக்குதலுக்கு அமெரிக்கா, பிரிட்டன் திட்டம்'; தானும் தயார் என்கிறது ஈரான்

ஈரானிய அணுசக்தி நிலைகள் மீது பிரித்தானிய, அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்துவதற்கான திட்டம் குறித்து ஆராய்ந்து வருவதாக பிரிட்டனின் டெய்லி மெய்ல் பத்திரிகை தெரிவித்துள்ளது.

ஈரானிடம் நான்கு அணுவாயுதங்களை தயாரிப்பதற்கு போதுமானளவு, செறிவூட்டப்பட்ட யுரேனியம் இருப்பதாக தகவல்கள் வெளியானதையடுத்து அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவும் பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூனும் யுத்தத்திற்கு தயாராகி வருகின்றனர் என அப்பத்திரிகை தெரிவித்துள்ளது.

ஈரானிய நிலைகள் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தவதற்கான திட்டத்தை அமெரிக்கா முன்னெடுக்கும் என பிரித்தானிய இராணுவ அதிகாரிகள் கருதுகின்றனர். அமெரிக்கா வலியுறுத்தினால் எந்த நடவடிக்கைக்கும் பிரித்தானிய இராணுவ உதவியை அமெரிக்கா பெறும என பிரித்தானிய இராணுவ அதிகாரிகளை மேற்கோள்காட்டி பிரிட்டனின் கார்டியன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

பிரிட்டனிலுள்ள இராணுவ அதிகாரிகள் பிரித்தானிய கப்பல்கள், டொமாஹாவ்க் ஏவுகணை பொருத்தப்பட்ட நீர்மூழ்கிகளை எதிர்வரும் மாதங்களில் எங்கு நிலைகொள்ளச் செய்வது சிறப்பானது என ஆராய்ந்துவருவதாக டெய்லி மெய்ல் தெரிவித்துள்ளது.

அதேவேளை இந்து சமுத்திரத்திலுள்ள பிரிட்டனின் கட்டுப்பாட்டிலுள்ள தீவான டியாகோ கார்ஸியாவிலிருந்து தகர்குதல் நடத்துவதற்கு அமெரிக்க அனுமதி கோரும் என பிரித்தானிய அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர். அத்தீவில் கடற்படைத் தளமொன்றை கொண்டுள்ள அமெரிக்கா அதை முந்தைய மத்திய கிழக்கு மோதல்களின் போது பயன்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

அடுத்த வருடம் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு முன் தாக்குதலொன்றை ஆரம்பிப்பதற்கு பராக் ஒபாமா தயங்குவதாகவும் ஆனால் ஈரானிய அணுசக்தி திட்டங்கள் தொடர்பான அதிகரித்து வரும் பதற்றங்கள் இந்நிலையை மாற்றிவிடும் எனவும் பிரித்தானிய அரசாங்க மற்றும் இராணுவ வட்டாரங்கள் தெரிவித்ததாக கார்டியன் பத்திரிகை தெரிவித்துள்ளது.

சவூதி ராஜதந்திரியொருவர் கடந்த மே மாதம் கொல்லப்பட்டதிலும் வாஷிங்டனிலுள்ள சவூதி தூதுவரை கடந்த கொல்வதற்கு இடம்பெற்ற சதியிலும் ஈரான் பின்னணியில் இருப்பதற்கான சாட்சியங்கள் உள்ளதாக கூறப்படுகிறது.

ஈரான் மீது தாக்குதல் நடத்தவேண்டுமென இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெத்தன் யாஹு வலியுறுத்தியுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஈரானுக்கு மேற்குப்புறத்திலுள்ள ஆப்கானிஸ்தனரில் 98,000 அமெரிக்க துருப்பினர் உள்ளனர். கிழக்கிலுள்ள ஈராக்கில் 43,500 அமெரிக்கப் படையினர் உள்ளனர். ஆப்கானிஸ்தானில் 10,000 பிரித்தானிய துருப்பினரும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஈரான் தயார்

இதேவேளை நேற்று வியாழக்கிழமை லிபியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஈரானிய வெளிவிவகார அமைச்சர் அலி அக்பர் சலாஹி, மேற்படி செய்திகள் குறித்து கூறுகையில், எந்த அச்சுறுத்தலையும் ஈரான் தண்டிக்கும் எனக் கூறினார்.

சர்வதேச விவகாரங்களைக் கையாள்வதில் துரதிஷ்டவசமாக, அமெரிக்கா தனது மதிநுட்பத்தை இழந்துவிட்டது. அது பலத்தில் மாத்திரமே தங்கியுள்ளது. ஆம் நாம் மோசமானதை எதிர்கெர்ள தயாராகவுள்ளோம். ஆனால் ஈரானுக்கு எதிராக மோதலில் ஈடுபடுவற்கு முன் அவர்கள் இரு தடவை சிந்திப்பார்கள் என நம்புகிறோம் என ஈரானிய வெளிவிவகார அமைச்சர் சலாஹி கூறினார்.

ஈரான் எப்போதும் இஸ்ரேலின் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளது. எனவே இது எமக்குப் புதிதல்ல. எட்டு வருடங்களாக இஸ்ரேலின் அச்சுறுத்தல் குpத்து நாம் கேள்விப்பட்டுவருகிறோம்.

எமது நாடு ஐக்கியமான ஒரு நாடு. எமது படைகளுக்கு நீண்ட வரலாறு உள்ளது. எமக்கு இந்த அச்சுறுத்தல்கள் புதியவை அல்ல. எமக்கு நம்பிக்கை உள்ளது. எமது நாட்டை நாம் பாதுகாத்துக்கொள்ள முடியும் என துருக்கிய பத்திரிகையொன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியுள்ளார்.

http://tamilmirror.l...3-20-03-44.html

Edited by akootha

  • தொடங்கியவர்

World War III Could Erupt - Russia Warns US of Israel Not To Attack Iran

http://www.youtube.com/watch?v=ocjUgF6vne4&feature=player_embedded

Edited by akootha

  • தொடங்கியவர்

Iran warns US against 'collision course' over nuclear programme

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா, பிரிட்டனை விட ஈரானை தாக்குவதில் இஸ்ரேல் தான் மும்முரமாக உள்ளது. இஸ்ரேலுக்கு தான் ஈரானால் தான் ஆபத்து என இஸ்ரேல் நம்புகிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈரானுக்கு அடிக்கிறதுக்கு....தடிதண்டுகளெல்லாம் எடுக்கவெளிக்கிட்டுட்டாங்கள் போலைகிடக்கு.......ஈரானுக்கு மரண அடிஅடிக்க மிச்சசொச்சம் பிச்சைவேண்டாம் நாயைபிடி எண்டு ஓடுவினம்.............. எண்டும் கதைக்கிறாங்கள்.

  • தொடங்கியவர்

இஸ்ரேல் ஆரம்பத்தில் இருந்தே ஒபாமா ஆட்சியை விரும்பவில்லை. காரணம் தமக்காக அமெரிக்க உயிர்களையும் வரிப்பணத்தையும் இறைக்கும் கொள்கையில் மாற்றம் வருவதை ஏற்கவில்லை.

இன்று ஈரான் இஸ்ரேலின் இருப்புக்கு சவாலாக மாறி, அதாவது தானும் ஒரு அணு ஆயுத வல்லரசாக மாறி வருவதை, இஸ்ரேல் அமெரிக்க உதவியுடன் மறுக்க முனைகிறது. அதை ஆகாய தாக்குதல் மூலமே செய்ய மேற்குலகம் விரும்பும், தரையால் உள்ளே போக விரும்பா. அப்படி போனால் அது பாரிய அழிவை உருவாக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

World War III Could Erupt - Russia Warns US of Israel Not To Attack Iran

சதாம் ,கடாபி போன்ற தலவர்களை கூட காப்பாற்ற வக்கில்லை அதுக்குள்ள அமெரிக்காவுக்கு எச்சரிக்கை....கடாபிக்கு ஒரு புகலிடம் கொடுத்திருக்கலாமே.... ஈரான்,ரஸ்யா,சீனா போன்ற நாடுகள்...

அமேரிக்காவை நம்பிய சில அரச தலைவர்கள் காப்பற்றபட்டிருக்கிறாகள்..அமெரிக்காவில் அரசியல் தஞ்சம் கொடுத்திருக்கிறாங்கள் ஆனால் இந்த ரஸ்யாகாரனை ,சீனாக்காரனையும் நம்பினவனுக்கு அதோ கதி.....

  • கருத்துக்கள உறவுகள்

சதாம் ,கடாபி போன்ற தலவர்களை கூட காப்பாற்ற வக்கில்லை அதுக்குள்ள அமெரிக்காவுக்கு எச்சரிக்கை....கடாபிக்கு ஒரு புகலிடம் கொடுத்திருக்கலாமே.... ஈரான்,ரஸ்யா,சீனா போன்ற நாடுகள்...

அமேரிக்காவை நம்பிய சில அரச தலைவர்கள் காப்பற்றபட்டிருக்கிறாகள்..அமெரிக்காவில் அரசியல் தஞ்சம் கொடுத்திருக்கிறாங்கள் ஆனால் இந்த ரஸ்யாகாரனை ,சீனாக்காரனையும் நம்பினவனுக்கு அதோ கதி.....

உண்மைதான் புத்தன்,

போர் ஆரம்பிக்க முதல், சவுண்டு விட்டுக் கொண்டிருப்பாங்கள், பிறகு ஆக்களை காணக்கிடைக்காது.smiley_emoticons_papiertuete-kopf.gifroter-dinosaurier-versteckt.gifversteck.gif

  • கருத்துக்கள உறவுகள்

ஈரான் மீதான தாக்குதல்களுக்கான ஆரம்பவேலைகள் ஈராக்குக்குள் இவர்கள் நுழையமுன்பே ஆரம்பிக்கப்பட்டுவிட்டன. தற்போது வெற்றிக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்தநிலையில் போருக்கான அழைப்புகளும் சீண்டுதல்களும் தொடரும். அது பெரும் போராகவும் இருக்கும். ஏனெனில் இதுவே அரபு ராச்சியங்களின் கடைசிப்பிடிப்பு. அத்துடன் இது உலகப்போராகவும் மாறக்கூடும். ஏனெனில் இதுவே வடகொரிய ரசிய மற்றும் சீனர்களையும் அடக்கும் சண்டையாக இருக்கப்போகிறது.

தனிப்பட்ட கருத்து: ஈரானுக்கு அடிக்கணும். அது அழியணும். எம்மை அழிக்க உதவிய சிலருக்கு இது பாடத்தை கொடுக்கணும். இனியாவது அடக்கிவாசிக்கணும்.

எல்லாருமே சேர்ந்து நம்மள கும்மி அடிச்சதால,....

எவனை எவன் அடிச்சாலும், சந்தோசப்பட்டுக்கவும் முடியல்ல,

துக்கப்படவும் முடியல்ல, இப்டி ஒரு கண்றாவி நில்மை உலகில எவனுக்கும் வரகூடாது!!

ஆனா ஒண்ணு,, அரபுலகத்த ஒரு கை பார்த்தப்புறம், அமெரிக்க பிரித்தானிய ,,

அடுத்த மூவ்மென்ட் சீனாக்காரனுக்கு யால்ரா போடுறவங்கள ,,உலகமெங்கும் ஒரு வழிபாக்குறதாதான் இருக்கும்!

எங்காவது ஒரு சின்ன வழி தேடி அலைவாங்க , உள்ளே மூக்கை நீட்டுறதுக்கு!

சிறிலங்காவுக்குத்தான் இருக்கவே இருக்கு,, போர்க்குற்றம்..!

எலே சிங்கள பயபுள்ளைங்களா , இருக்குடி உங்களுக்கு ஆப்பு!

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவின் வீரப்பிரதாபங்கள் எல்லாம் அதன் முன்னாள் நண்பர்களிடம் தான் வேக்கவுட் ஆகும்.

ஈராக்கில் சதாம்.. முன்னாள் அமெரிக்க கூட்டாளி.

ஆப்கானிஸ்தானில்.. தலிபான்கள் முன்னாள் அமெரிக்க கூட்டாளிகள்.

பாகிஸ்தானில்.. ஒசாமா.. முன்னாள் அமெரிக்கக் கூட்டாளி.

லிபியாவில்.. கடாபி.. முன்னாள் அமெரிக்கக் கூட்டாளி.

ஈரான் அப்படியல்ல. அமெரிக்காவை எப்போதும் பகையுணர்வோடு அணுகும் நாடு. ஜோர்சியாவை ரஷ்சியா தாக்கிய போது.. அமெரிக்கா என்ன வெட்டியா புடிங்கினது. ஓரமா நின்று குலைச்சுக் கொண்டிருந்தது தான்.

ரஷ்சியாவைப் பொறுத்தவரை.. அழிவதெல்லாம்.. அதன் முன்னாள் எதிரிகள். சதாம் கூட ஈரான்.. ஈராக் சண்டையில் ரஷ்சிய எதிர்ப்பு நிலை எடுத்து அமெரிக்காவிடம் உதவி வாங்கிய ஒருவர். அமெரிக்காவின் முன்னாள் நண்பர்கள். இதன் மூலம்.. அமெரிக்காவோடு நட்பைப் பேணவே எனி.. ஒன்றுக்கு ஆயிரம் தரம் சிந்திக்கும்.. உலக நாடுகள்.

ஈரான் மீது அவ்வளவு இலகுவாக இஸ்ரேலோ.. அமெரிக்காவோ.. பிரிட்டனோ கைவைக்க முடியாது. வட கொரியா மீதும் அதே நிலை தான். இந்த இரண்டு நாடுகளும்.. அமெரிக்காவின் நிரந்தரப் பகையாளிகள். அவர்களின் பலம்.. பலவீனம் அமெரிக்காவிற்கு சரியாகத் தெரியாது.

ஏன் விடுதலைப்புலிகள் கூட.. மேற்குலகை நம்பாத வரை நல்லாத்தான் இருந்தாங்க. எப்ப நம்பினார்களோ.. அன்றே அழிவையும் தீர்மானிச்சிட்டார்கள். மேற்குலக கொள்கை வகுப்பாளர்கள்.. தங்களின் நலனுக்காக வளைஞ்சு கொடுத்து.. தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் ஒரு வகை கடும்போக்காளர்கள் என்றே சொல்ல வேண்டும்.

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துவதை.. ரஷ்சியா.. சீனா கடுமையாக எதிர்க்கக் கூடும். ஏலவே ரஷ்சியா அமெரிக்கா தனது எல்லைகளை நோக்கி நேட்டோ விரிவாக்கம் என்ற போர்வையில் ஆயுதங்களைக் குவிப்பதை அறிந்து வைத்திருக்கிறது. ஈரான்.. வடகொரிய அச்சுறுத்தல்களை முடித்துவிட்டால்.. அமெரிக்காவின் ஏகபோகம்.. ரஷ்சியா மீதும் சீனா மீதும் மட்டுமே இருக்கும். அந்த வகையில்.. ரஷ்சியா.. சீனா.. நாடுகள்.. ஈரான் மீதான மேற்குலக நடவடிக்கையை அவ்வளவு இலகுவாக.. மேற்குலகம் மேற்கொள்ள அனுமதியா..!

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

ஈரான் மீது அவ்வளவு இலகுவாக இஸ்ரேலோ.. அமெரிக்காவோ.. பிரிட்டனோ கைவைக்க முடியாது. வட கொரியா மீதும் அதே நிலை தான். இந்த இரண்டு நாடுகளும்.. அமெரிக்காவின் நிரந்தரப் பகையாளிகள். அவர்களின் பலம்.. பலவீனம் அமெரிக்காவிற்கு சரியாகத் தெரியாது.

நிலத்தால் எந்த நடவடிக்கையையும் ஈரானுக்கு எதிராக மேற்கொள்ளுவது ஆபத்தானது, நீண்டு செல்லக்கூடியது. வானத்தால் எங்கு அணுஆயுத தயாரிப்புக்கள் நடக்கின்றன என சந்தேகம் கொள்கிறதோ அங்கெல்லாம் தாக்குதல் நடக்கும்.

இரண்டு பேரும் அடிபட்டு கொள்ளட்டும். இருவருமே எம் பேரழிவின் பங்குதாரர்கள். நாம் பொப்கோர்ன் கொறித்துக் கொண்டு ரசிப்போம்

(இந்தப் போர் ஏற்பட்டு அதனால் IT industry க்கு ஏதேனும் ஆப்பு வரும்வரைக்கும் நான் ரசித்துக் கொண்டு இருப்பன். லிபிய போருக்கு பின் சுவாரசியமாக வாசிக்க ஒன்றுமில்லை என்று இருக்கும் போது இந்தச் செய்தி கண்களில் பாலை வார்கின்றது)

Edited by நிழலி

இரண்டு பேரும் அடிபட்டு கொள்ளட்டும். இருவருமே எம் பேரழிவின் பங்குதாரர்கள். நாம் பொப்கோர்ன் கொறித்துக் கொண்டு ரசிப்போம்

(இந்தப் போர் ஏற்பட்டு அதனால் IT industry க்கு ஏதேனும் ஆப்பு வரும்வரைக்கும் நான் ரசித்துக் கொண்டு இருப்பன். லிபிய போருக்கு பின் சுவாரசியமாக வாசிக்க ஒன்றுமில்லை என்று இருக்கும் போது இந்தச் செய்தி கண்களில் பாலை வார்கின்றது)

நிழலிக்கு மிகவும் நல்ல மனசு,

வாழ்க மனிதநேயம். :icon_mrgreen:

  • தொடங்கியவர்

மேற்குகலம் உலகில் உள்ள தெரிவுகளுக்குள் : இந்திய, சீன, உருசிய, இஸ்லாமிய நாடுகள் - வல்லரசுகளுடன் ஒப்பிடும்பொழுது நல்லதே என்பது ஏகோபித்த கருத்தாக உள்ளது. இதில் சாதாரண இந்தியர்கள், சீனர்கள், உருசியர்கள், இஸ்லாமியர்கள் கூட அடங்குவர்.

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லிம்கள் ரசியாக்காரர்கள் சீனாக்காரர் இந்தியன் (கிந்திக்காரர்கள் ) இவர்களை விட மேற்கு நாட்டவர் எவ்வளவோ மேல் இவர்கள் பலருக்கு அடைக்கலம் வழங்கியுள்ளார்கள் ஓரளவு மனித நேயம் உடையவர்கள் பொதுவாக மேலே குறிப்பிட்டவர்களை விட மேற்கு நாட்டவர் பரவாயில்லை

  • தொடங்கியவர்

G20 சந்திப்பில் பிரான்சின் சர்கோசியும் அமெரிக்கவின் ஒபாமாவும் இஸ்ரேலை பற்றி பரிமாறிய கருத்துக்கள் அவர்களுக்கு தெரியாமல் யாவரும் கேட்க கூடியதாக இருந்தது.

France’s President Nicolas Sarkozy regards Mr. Netanyahu as “a liar”

Frankly says: ‘I can’t bear Netanyahu” - Obama

“You’re fed up, but I have to deal with him every day” - Obama

http://www.theglobea...article2229048/

தலைவர்கள் வெறுத்தாலும் மேற்கு நாடுகளில் வாழும் யூதர்கள் அவர்களின் அமைப்புக்கள் எவ்வளவு பலம் பொருந்தியவை என்பது தெளிவாகின்றது.

Edited by akootha

சதாம் ,கடாபி போன்ற தலவர்களை கூட காப்பாற்ற வக்கில்லை அதுக்குள்ள அமெரிக்காவுக்கு எச்சரிக்கை....கடாபிக்கு ஒரு புகலிடம் கொடுத்திருக்கலாமே.... ஈரான்,ரஸ்யா,சீனா போன்ற நாடுகள்...

அமேரிக்காவை நம்பிய சில அரச தலைவர்கள் காப்பற்றபட்டிருக்கிறாகள்..அமெரிக்காவில் அரசியல் தஞ்சம் கொடுத்திருக்கிறாங்கள் ஆனால் இந்த ரஸ்யாகாரனை ,சீனாக்காரனையும் நம்பினவனுக்கு அதோ கதி.....

புத்தன் உங்கள் கருத்தை அப்படியே ஏற்றுக்கொள்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கரின் கருத்துகள் நூறு வீதம் சரியானவை அல்ல.

1. ரஷ்யா, சீனா ஏன் ஈரானை ஆதரிக்க வேண்டும் என்று ஒரு கேள்வி கேட்டால் பதில் அவ்வளவு நீளமாக இல்லை. மேற்குலகை எரிச்சல் படுத்த ரஷ்யா ஈரானை ஆதரிக்கும் என்ற பதில் சாத்தியமான ஒன்றாக இல்லை. ஈரானால் ரஷ்யாவுக்கு பெரிய வருமானம் இல்லை, எண்ணை கூட சவூதியில் தான் பெருமளவில் இருக்கிறது, அதை விட எரிவாயுவில் தன்னிறைவு கொண்ட தேசம் ரஷ்யா. ஆனால், மேற்குலகோடு (குறிப்பாக ஐரோப்பாவோடு) பாரிய வியாபாரத் தொடர்புகளும் வருமானமும் இருக்கின்றன. இதெல்லாம் தான் இனி யார் யாரை ஆதரிப்பார் என்பதைத் தீர்மானிக்கும் காரணிகள்.சீனாவுக்கு எண்ணெய் தேவை. ஆனால் தான் ட்ரில்லியன் டொலர்கள் கணக்கில் முதலீடு செய்திருக்கும் அமெரிக்காவின் பொருளாதாரமும் பலமும் சிதைந்து போக சீனா விரும்பாது. கொள்கை ரீதியான (ideological enemy) எதிரியின் பாதுகாப்பிலேயே தங்கியிருக்க வேண்டிய சிக்கலான தேவை சீனாவுக்கு. "பிடிக்கிற இடத்தில் எல்லாம் உனக்கும் எண்ணெய் தருகிறேன்" என்று அமெரிக்கா சொன்னால் ஈரானைப் பற்றி சீனா கணக்கிலெடுக்காது.

2. ஜோர்ஜியா விஷயத்தில் நடந்தது முற்றிலும் வேறானது. "சண்டைக்குப் போகாதே" என்று அமெரிக்க ஆலோசகர்கள் சொல்லிக் கொண்டே இருக்கத் தக்கதாக உணர்ச்சி வசப்பட்டு சாகாஸ்விலி தாக்குதல் நடத்தியது அமெரிக்கர்களுக்கே பிடிக்கவில்லை-இதனால் அமெரிக்கா கைகட்டிப் பார்த்திருந்தது ஒன்றும் அதிசயமான விடயமல்ல. மேலும் அமெரிக்காவுக்கு வட கொரியாவினதும் ஈரானினதும் பலம் தெரியாது என்பது பெரிய பகிடியான ஒரு கருத்து. இந்த நாடுகளை உளவறிய அமெரிக்காவும் மேற்கு நாடுகளும் பயன் படுத்தும் தொழில்நுட்பங்கள் சாதாரண மனிதர்களால் கற்பனை செய்து பார்க்க இயலாத அளவு நவீனமானவை. இந்த தொழில் நுட்பங்கள் வெளியே வர இன்னும் ஒரு தசாப்தம் ஆகலாம்.

  • தொடங்கியவர்

மேலும் அமெரிக்காவுக்கு வட கொரியாவினதும் ஈரானினதும் பலம் தெரியாது என்பது பெரிய பகிடியான ஒரு கருத்து. இந்த நாடுகளை உளவறிய அமெரிக்காவும் மேற்கு நாடுகளும் பயன் படுத்தும் தொழில்நுட்பங்கள் சாதாரண மனிதர்களால் கற்பனை செய்து பார்க்க இயலாத அளவு நவீனமானவை. இந்த தொழில் நுட்பங்கள் வெளியே வர இன்னும் ஒரு தசாப்தம் ஆகலாம்.

இந்த இடைவெளியை, தொழில்நுட்பத்தில், சீனா வேகமாக முன்னேறிவருகின்றது. அண்மையில் சீனர்கள்

உருசியாவில் இருந்து வாங்கிய கப்பலை ஒரு பெரிய கப்பல் யுத்ததாங்கியாக மாற்றியுள்ளனர். அவர்களிடம் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் உள்ளன.

மேலும், தற்பொழுது விண்வெளி கலங்கள் மூலம் அமெரிக்க

சற்றலைட்டுக்களை செயலிழக்கும் வண்ணம் ஒரு திட்டத்தை முன்னெடுத்துவருகிறார்கள். இது அமெரிக்காவுக்கு சவாலாக உள்ளது.

அத்துடன் கல்வித்தரம், ஆராய்ச்சிக்கு செலவழிக்கும் பணம் என பலதுறைகளிலும் அமெரிக்காவை நெருங்கி வருகிறது சீனா.

ஒரு சில தசாப்க காலத்தில் சீனா நெருங்கிவிடும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரே கிரவுடு எங்கபார்த்தாலும் ஒரே கிரவுடு அடிச்சுகிட்டு சாவுங்கப்பா.. ஜனத்தொகை குறையட்டும்.. :) :)

எல்லாம் மாயை( மாயா இல்லை) தான், அமெரிக்காவுக்கும் சரி ஜரோப்பாவுக்கும் சரி சீனாவுக்கோ அல்லத் ரஸ்யாவுக்கோ அடிக்க வேண்டும் என்ற கொலைவெறி இல்லை .

  • கருத்துக்கள உறவுகள்

ஏதோ என்னால் முடிந்தது.அறிவிலிக்கு ஒரு பச்சை :)

  • கருத்துக்கள உறவுகள்

ஒபாமா அமெரிக்க ஜனாதிபதியாக இருக்கும் வரை ஈரான் எவ்வளவும் கதைக்கலாம்.

ஈரான் மீதோ அல்லது வேறெந்த நாட்டின் மீதோ ஒபாமா அமெரிக்க நாட்டின் ஜனாதிபதியாக இருக்கும் வரை அமெரிக்காவினால் நேரடியான தாக்குதல் நடைபெற சாத்தியம் இல்லை.

ஆனால் இஸ்ரயேலைத் தூண்டி விட்டு நேட்டோவின் உதவியுடன் அமெரிக்கா அமைதி காக்க ஈரானைத் தாக்க முயற்சிகள் நடைபெறுகின்றன.

முடியா விட்டால் அமெரிக்காவின் புதிய தலைவரினால் ஈரான் மீது அமெரிக்கா போர் தொடுக்கும்.

ஈரான் மீதான போர் ஒபாமாவின் தலைவிதியை நிர்ணயிக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கரின் கருத்துகள் நூறு வீதம் சரியானவை அல்ல.

1. ரஷ்யா, சீனா ஏன் ஈரானை ஆதரிக்க வேண்டும் என்று ஒரு கேள்வி கேட்டால் பதில் அவ்வளவு நீளமாக இல்லை. மேற்குலகை எரிச்சல் படுத்த ரஷ்யா ஈரானை ஆதரிக்கும் என்ற பதில் சாத்தியமான ஒன்றாக இல்லை. ஈரானால் ரஷ்யாவுக்கு பெரிய வருமானம் இல்லை, எண்ணை கூட சவூதியில் தான் பெருமளவில் இருக்கிறது, அதை விட எரிவாயுவில் தன்னிறைவு கொண்ட தேசம் ரஷ்யா. ஆனால், மேற்குலகோடு (குறிப்பாக ஐரோப்பாவோடு) பாரிய வியாபாரத் தொடர்புகளும் வருமானமும் இருக்கின்றன. இதெல்லாம் தான் இனி யார் யாரை ஆதரிப்பார் என்பதைத் தீர்மானிக்கும் காரணிகள்.சீனாவுக்கு எண்ணெய் தேவை. ஆனால் தான் ட்ரில்லியன் டொலர்கள் கணக்கில் முதலீடு செய்திருக்கும் அமெரிக்காவின் பொருளாதாரமும் பலமும் சிதைந்து போக சீனா விரும்பாது. கொள்கை ரீதியான (ideological enemy) எதிரியின் பாதுகாப்பிலேயே தங்கியிருக்க வேண்டிய சிக்கலான தேவை சீனாவுக்கு. "பிடிக்கிற இடத்தில் எல்லாம் உனக்கும் எண்ணெய் தருகிறேன்" என்று அமெரிக்கா சொன்னால் ஈரானைப் பற்றி சீனா கணக்கிலெடுக்காது.

2. ஜோர்ஜியா விஷயத்தில் நடந்தது முற்றிலும் வேறானது. "சண்டைக்குப் போகாதே" என்று அமெரிக்க ஆலோசகர்கள் சொல்லிக் கொண்டே இருக்கத் தக்கதாக உணர்ச்சி வசப்பட்டு சாகாஸ்விலி தாக்குதல் நடத்தியது அமெரிக்கர்களுக்கே பிடிக்கவில்லை-இதனால் அமெரிக்கா கைகட்டிப் பார்த்திருந்தது ஒன்றும் அதிசயமான விடயமல்ல. மேலும் அமெரிக்காவுக்கு வட கொரியாவினதும் ஈரானினதும் பலம் தெரியாது என்பது பெரிய பகிடியான ஒரு கருத்து. இந்த நாடுகளை உளவறிய அமெரிக்காவும் மேற்கு நாடுகளும் பயன் படுத்தும் தொழில்நுட்பங்கள் சாதாரண மனிதர்களால் கற்பனை செய்து பார்க்க இயலாத அளவு நவீனமானவை. இந்த தொழில் நுட்பங்கள் வெளியே வர இன்னும் ஒரு தசாப்தம் ஆகலாம்.

Iran_oil_exports_1385_en.jpg

ஈரானின் எண்ணெய் (கறுப்பு வளையங்கள்.. மற்றும் பிற பொருட்கள்.. ஏற்றுமதி செய்யப்படும் நாடுகள். (Wikipedia)

ஈரான்.. சோவியத்.. ரஷ்சியா.. சீன உறவு நீண்ட காலமானது. வர்த்தக.. மற்றும் எண்ணொய் மற்றும் அரபுலகுடனான ரஷ்சியாவின் செல்வாக்கை தீர்மானிக்கும் சக்தியாக ஈரான் ரஷ்சியாவுக்கு உள்ளது. அதே நிலை சீனாவுடனும். தெற்காசியாவில் இந்தியா போல.. அரபுலகில்.. ரஷ்சியாவின் நம்பகமான நண்பன்.. ஈரான். அதனை ரஷ்சியா ஒருபோதும் இழக்க விரும்பாது. அது அரபுலகில் ரஷ்சியா தனித்து விடப்படுவதைச் செய்யும். ரஷ்சியா வெறுமனவே எரிவாயுவை நம்பி இருக்கவில்லை. எண்ணெய் வளத்தை விட இராணுவ வர்த்தகத்தை நடத்த ஈரானின் சந்தைகளை ரஷ்சியா பயன்படுத்துகிறது. பிற ஈரானியப் பொருட்கள் ரஷ்சியாவை அடைகின்றன. இத்தனை தடைகள்.. எச்சரிக்கைகளின் மத்தியிலும்.. ரஷ்சியா தான் ஈரானில் அணு உலைகளை அமைத்து வருகிறது. முதலீடுகளைச் செய்து வருகிறது. ஒரு பலவீனமான நாட்டில் போய் நின்று கொண்டு இவ்வாறான முதலீடுகளை செய்ய ரஷ்சியர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை.

உங்களின் அமெரிக்க.. சீன டீல்.. நல்ல கற்பனை. உலகின் வளங்களை எல்லாம் சுருட்டி.. உற்பத்திப் பொருளாக்கி உலகின் பிரதான பொருண்மிய நாடாக விளங்கத் துடிக்கும் சீனா.. அமெரிக்கா போடும் பிச்சையில் வளர நினைப்பது.. வெறும் கற்பனைக்கு மட்டுமே உதவும். லிபியாவில் கூட நேட்டோவை.. தரைமார்க்கமாக இறங்க விடவில்லை. லிபியாவுடன் ஈரான் தனது ராஜதந்திர உறவுகளை உடனேயே ஆரம்பித்துவிட்டது. ரஷ்சியாவும் அப்படி.

அமெரிக்கா தான் ஓர் இழப்பும் இன்றி.. கடாபியை அகற்றி விட்டதாக மார்தட்டுகிறது. ஆனால்.. கடாபியை துரத்தியவர்கள்.. அமெரிக்காவின் நட்பை நிரந்தரமாக விரும்பியவர்கள் அல்ல.. என்பதை நேட்டோவின் நேரடி இராணுவத் தலையீட்டை நிராகரித்ததில் இருந்து மேற்குலகம் உணர்ந்திருக்கும். அதுமட்டுமன்றி.. அமெரிக்காவின் கொள்கைகளுக்கு கடாபியே அதிகம்.. உறுதுணையானவர். அவருக்கும் இஸ்லாமிய தீவிரவாதிகளைப் பிடிக்காது. அந்த வகையில் தான் அமெரிக்கா கடாபியுடனான உறவுகளை புதுப்பிக்க நினைத்தது. ஆனாலும் கடாபியின் விட்டுக்கொடுக்காத மனநிலை.. அமெரிக்காவின் தேவைகளுக்கு தடையாக அமைந்ததால்.. கடாபியை என்ன விலை கொடுத்தாலும் அகற்ற அமெரிக்கா முடிவெடுத்தது. அமெரிக்கா.. மார்தட்டுவது போல.. போர் ஒன்றும் இழப்புக்கள் இன்றி முடியவில்லை. 70,000 மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டு.. பல மனித உரிமை மீறல்கள் நிகழ்த்தப்பட்டு இந்தப் போர் வெல்லப்பட்டுள்ளது. அத்தனையும் கன கச்சிதமாக மறைக்கப்பட்டுள்ளன.

ஜோர்ஜியா பிரச்சனையை தூண்டி விட்டதே அமெரிக்கா தான். ரஷ்சிய எரிவாயு வழங்கல்கள் மீது கட்டுப்பாடுகளை உருவாக்க.. ஜோர்ஜிய எல்லைகளை நீட்ட முயன்றது அமெரிக்கா. அதுவும் இன்றி தனது ஏவுகணை எதிர்ப்பு தொழில்நுட்பத்திற்காக.. கருங்கடலில்.. ரஷ்சிய ஆதிக்கத்தை முற்றாக அழிக்க நினைத்தது. அதை உணர்ந்து கொண்ட ரஷ்சியா.. ஜோர்ஜியாவை தோற்கடித்துத் துரத்திவிட்டு.. தனக்கு வேண்டிய பிரதேசங்களை தனிநாடாக்கி தன் சொல்லுக்குள் அடக்கிக் கொண்டுள்ளது.

வடகொரியா.. அமெரிக்க உளவு சற்றலைட்டுக்களை விஞ்சி அணு உலைகளையே அமைத்திருக்கிறது. ஏவுகணைகளைக் கூட பரிசோதித்துள்ளது. ஈரான் கூட.. அமெரிக்கா சற்றலைட்டில்.. படம் பிடிச்சு ஐநாவிடம் காட்டிய ஆதாரத்தை நேரில் காண முடியாது செய்துவிட்டது. அமெரிக்க உளவுச் செய்மதிகள் சுற்றி திரிய.. இந்தியா அவை அறியாமல் அணு குண்டுகளை வெடித்தது. இப்படி அமெரிக்க தொழில்நுட்பம்.. சாதாரண.. சோமாலியர்களிடம் தோற்றுப் போனதைப் போல.. தோற்ற சம்பவங்கள் பல.

விடுதலைப்புலிகள்.. அமெரிக்க தொழில்நுட்பத்திடம் சிக்க முக்கிய காரணம்.. பாரம்பரிய தொழில்நுட்பங்களை கைவிட்டு.. நவீன தொழில்நுட்பங்களை எங்கும் புகுத்திக் கொண்டதே. அவை அவர்களை உளவு பார்க்க.. அமெரிக்காவிற்கு இலகுவாக அமைந்துவிட்டது.

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.