Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வென்றாலும் அடி தோற்றாலும் அடி.

Featured Replies

சின்னனில மாட்ச் கொழுவிறதண்டால் பெரிய விடயம்.கோயிலடியில ஒரு டீமை தொடங்கிபோட்டு பிறகு எதிர்த்து மாட்ச் விளையாட வேறுடீமை தேடி அலையிறது.அதே ஊரிலே பிறகு வடக்கு ,கிழக்கு என்று எங்கட சைசில இருக்கின்ற பெடிகளை தேடிப்போய் வாற சனி மாட்ச் விளையாடுவமோ என கேட்கின்றது ,ஒமேன்று பதில் வந்தால் பிறகு பதினோன்றை சேர்க்க பெரும்பாடு படவேண்டும்.ஆறு அல்லது ஏழு பேர்கள் தான் ஒழுங்காக விளையாடும் மிச்சம் எண்ணுக்கணக்குத்தான்.பிறகு சனி வர இரண்டு மணிபோல் ஒவ்வொன்றாய் போய் பிடித்து கோயிலடிக்கு கொண்டுவர மூன்று மணியாகிவிடும்.மற்ற டீம் வரமட்டும் களைக்ககூடாது என்று பந்த்தை தட்டிக்கொண்டு நிக்கிறது.அவர்கள் வந்து சேர பெரிய சந்தோசம்.நடுவர்கள் இல்லை, எனவே முதலே லைன் எல்லாம் காட்டி அளா ப்பக்கூடாது என்ற வாய்வழி ஒப்பந்ததுடன் மாட்ச் தொடங்கும்.பிறகென்ன பாஸ் பண்ணாமல் வெட்டுக்காட்டி அவனவன் கோல் அடிக்க முயற்சித்து முழு வீதியும் சுத்தியடிப்பதுதான் விளையாட்டு.

அப்பிடி தொடங்கிய எமது புட்போல் டீம் இப்ப FIRST TEAM ஆகிவிட்டது.காங்கேசன்துறையிலிருந்து ஊர்காவற்துறை வரை எமது போய் விளையாட தொடங்கிவிட்டோம்.சிலர் புதிது, முக்கால் வாசி அதே ஆட்கள் தான்.ஓரளவு நல்ல டீமென பேர் எடுத்ததால் எங்கட இடத்தை தேடி மற்ற டீம்கள் மாட்ச் கொழுவ வருவினம்.காங்கேசன்துறை யங்ரோயலுடன் நடேஸ்வரா கிரவுன்ண்டில் போய் வென்றதாலே பேர் அந்த மாதிரி பரவிவிட்டது.எங்கட டீமில மூன்று நாலு பேர் பாடசாலை டீமிலும் கலக்கிகொண்டிருந்தார்கள்.

நான் விளையாடுவது சென்ற போவோட்,மற்றவர்கள் கஷ்டப்பட்டு விளையாட, அப்பிடி இப்பிடி ஆட்களின்ரை காலுக்க போகாமல் நின்றுவிட்டு ஒரு மாதிரி கோல்களை அடித்துவிடுவேன்.எங்கட டீம் மூன்று,நாலு கோல்கள் அடித்து வென்றால் அதில் இரண்டாவது நான் அடித்ததாகத்தான் இருக்கும்.

ஒருநாள் ஊர்காவற்துறையில் இருந்து மாட்ச்கொழுவ வந்தார்கள்.அதுவும் கொஞ்சம் உள்ளுக்கையாம்.அங்கு வர தூரம்,வசதியும் இல்லை முடியாது என்றுவிட்டோம்.தாங்களே வான் அனுப்புவதாக சொன்னார்கள். அடுத்த சனிக்கு சரி என்று சொல்லிவிட்டோம்.

சனி ஒரு மணிக்கே ஒரு தட்டிவான் எமது வாசகசாலையடிக்கு வந்துவிட்டது.ஒருவாறு பதின்னாலு பேரை சேர்த்துக்கொண்டு போய்விட்டோம்.அங்கு போனால் அவர்கள் பச்சை நிற ஜேசி,கருப்பு காற்சட்டை எல்லோரும் பூட்ஸ் நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு நிற்கிறார்கள்.பார்வையாளர்கள் வேறு ஒரு நூறுக்கு மேல்.எங்கட டீமில அவனவன் விரும்பிய உடுப்பு ,மூன்று பேர்தான் பூட்ஸ் கொண்டுவந்திருந் தார்கள்.

மாட்ச் தொடங்கி பத்து நிமிசத்திலேயே அவர்கள் விளையாட்டு ஸ்டைல் பிடிபட்டு விட்டது ,ஒரே கிக்கும்,மறுத்தான் அடியும்,மூச்சிரைக்க ஓடுவதாகவும் இருந்தார்கள்.மெல்ல இருபதாவது நிமிச மட்டில் ஒரு கோலை தட்டிவிட்டேன்.அவர்கள் தங்களுக்குள் பேசுப்படுவதும், கொஞ்சம் காலுக்கு அடிக்கவும் ஆரம்பிதிருந்தார்கள்.கால்ப்டைம் வரமுதல் நம்ம புல்பக் அவர்கள் ஒருவனை கொஞ்சமிடிக்க பெனால்டி கொடுத்து ஸ்கோர் ஒன்றும் ஒன்றாக அரைநேர விசில் அடித்தது.

அடுத்து மீண்டும் நாங்கள் ஒருகோலை அடித்துவிட்டோம்.மாட்ச் முடிய இன்னமும் பத்து நிமிஷத்திற்கு கிட்டதான் இருக்கு, எங்கட கோலி சொன்னான் பின்னால இருக்கின்ற வீடுகளில் ஆட்கள் நடமாடும் சத்தமும் ஏதோ பிரச்சனை வரப்போகின்றதற்கான அறிகுறியும் தெரிகின்றதேன்று.அதற்குள் இன்னொருவன் சொன்னான் தான் வேலிக்கு கீழால வாள் கண்டதாக.எல்லோருக்கும் ஒரு வித பயம் வந்துவிட்டது.விளையாடியபடியே எங்களுக்குள் கதைத்து அவர்களை அடுத்தடுத்து இரு கோல்கள் அடிக்க விட்டுவிட்டோம்.

மாட்ச் முடிய எங்களுக்கு.வடை ,பிஸ்கட்,நேக்டோ என்று பெரிய பாட்டி.அதில் ஒருவர் சொன்னார் 'எங்களுக்கு தெரியும் கடைசியில் எப்படியும் அடிப்பம்" என்று.

"அது எங்களுக்கும் தெரியும்" என்று நண்பன் சொன்னான்.

தட்டிவானில் கொண்டுவந்தது ஊரிலவிடும் போது டிரைவர் இடம் கேட்டோம் "மாட்ச் தற்செயலாக நாங்கள் வென்றிருந்தால் எங்களுக்க அடித்திருப்பார்களோ" என்று.

உவங்கள் நல்லவங்கள் தம்பி தாங்கள் தோத்தா மாத்திரம் தான் அடிப்பாங்கள் அங்கால இன்னொரு டீமிருக்கு "வென்றாலும் அடி தோத்தாலும் அடி".

Edited by arjun

அர்ஜூன் இன்ரை வாய்க்கு கிலோ சீனி . இனி இது தான் உங்கடை பாதை அரக்கக்கூடாது . நான் விடியவே ஒரு பச்சை உங்களுக்கு தாறன் . தலைப்பு வென்றாலும் அடி தோத்தாலும் அடி உள்குத்து ஒண்டும் இல்லை தானே , நம்புறன் . இயன்ற வரையில் ஆங்கில சொற்களை தவிர்தால் நல்லது அர்ஜூன் :) :) :) :) .

  • கருத்துக்கள உறவுகள்

2வது பச்சை எனது அர்யுன்.

உங்கள் ஞாபகங்களை அனுபவங்களை பதிவு செய்யுங்கோ. *வென்றாலும் அடி தோற்றாலும் அடி* :lol: எங்கேயோ ஒரு திசையில ஓங்கிக் குத்தினமாதிரி இருக்கு. :mellow::lol:

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பதிவு அர்ஜுன் அண்ணா..அருமை...தொடர்ந்து உங்கடை ஆக்கங்களை யாழில் எதிர்பார்க்கிறம்...ஏமாற்றி விடாதீர்கள்...தொடர்ந்து எழுதுங்கோ...

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக எழுதுறீங்கள் அண்ணா ஆனால் யாரையோ மறைமுகமாய் போட்டு தாக்கின மாதிரி இருக்குது...உங்கள் மூன்றாவது பச்சை என்னோடது

அர்ஜூன் தொடர்ந்து எழுதுங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான பதிவு.பழைய நினைவுகள் சில வந்து போனது.நானும் ஒரு பச்சை குத்தியுள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்

அர்யூன் உங்களிடம் எவ்வளவு திறமை இருக்கிறது....நன்றாக ரசித்து வாசித்தேன். :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

நானும் கஸ்தபட்டு இப்படி ஒரு உதைபந்தாட்ட கழகத்தை உருவாக்கினேன். ( இதை வாசிக்கும்போது அந்த நினைவுகள்தான் வந்து போனது)

ஒரு கவலையான விடயம் சேர்த்திருந்த ஒரு கழகத்தை பிரித்தெடுத்தது .............. எனது சுயநல புத்திக்கு ஆதரவு தருவதற்கு சில பெரியவரும் இருந்தது வெட்கப்படவேண்டியது.

நாம் ஒரு ஊர் என்ற கிணத்துக்குள் இருந்துவிட்டோம் அவரையும் இவரையும் குற்றங்களுக்கு கைகாட்ட முடியாது. வெளி உலகை எட்டி பார்கும்போதுதான் எமது குற்றங்கள் தெரிகின்றது.

மற்றைய படி சண்டைகள் எல்லாம் பெரியவர்கள் செய்ததால். அடிவாங்க வேண்டிய தேவை எமக்கு இருக்கவில்லை. அடிக்க கூடாது என்ற ஒப்பந்தம் கச்சதிட்டே சென்றுவருவோம்.

சும்மாவே ஆள்பற்றா இதிலே அடிதடி என்றவுடன் அங்கேயும் பின்வாங்கல் ............. அதை சமாளிக்க நான் செய்த ஒரு அரசியல் நகர்வு. அடிக்க கூடாது என்ற ஒப்பந்தம் முன்கூடியே செய்யபட்டுள்ளதை எல்லோருக்கும் உறுதிபடுத்துவது.

ஏன் இப்படி அடிபட்டோம் என்பது இப்போது நினைக்கும்போது அருவெறுப்பாக இருக்கிறது.

  • தொடங்கியவர்

நான் எழுதுவது கதையோ ,கிறுக்கலோ அல்லது அலட்டலோ தெரியவில்லை , ஊக்கப்படுத்திய அனைவருக்கும் நன்றிகள் .மனம்விட்டு உள்ளதை சொல்லுங்கள் திருத்திக்கொள்கின்றேன்.

குறிப்பாக முன்னோடிகளிடம் இருந்து எங்கே கவனம் அதிகம் தேவை என்பதையும் எதிர்பார்க்கின்றேன்.

மனதில் கனக்க இருக்கு கொட்ட யாழ் தான் கிடைத்திருக்கு . யாழ் களத்திற்கு நன்றிகள் .

  • கருத்துக்கள உறவுகள்

இந்த அடிபாடுகள் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன்..! :rolleyes: இந்தமாதிரியான கரக்டர்களையெல்லாம் வைத்துக்கொண்டுதான் ஒரு போராட்டம் முப்பதாண்டுகாலம் நடைபெற்றது என்பதை இங்கே குறிப்பிட்டாகவேண்டும்..! :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

அடிடா பச்சை :icon_mrgreen: . ஹி ஹி அர்ஜுன் அண்ணா சும்மா அந்த மாதிரி எழுதியிருக்கிறியள். எனக்கும் கனக்க பழைய ஞாபகங்கள் வந்து போனது. ஒரு வித்தியாசம் நாங்கள் விளையாடினது கிரிகெட், அதோட வேற வேற டியூசன் காரரோட தான் மச் கொளுவுறது. நான் சயன்ஸ் செண்டர் எண்ட படியால புலோலி P.E.C, மதவடி C.M.E , துன்னாலை டலன்ட், நெல்லண்டை வாணி, மாலுசந்தி சதாபொன்ஸ், நெல்லியடி சயன்ஸ் செண்டர் எண்டு ஏதாவதொரு டியூசனோட மச் கேக்கிறது. அப்ப, மொபைலும் இல்லை ஒண்டும் இல்லை, ஏதாவது தகவல் சொல்லோனும் எண்டா துன்னாலை, மாலு சாந்தி, நெல்லியடி எண்டு வெயிலுக்குள்ள ஒரே சைக்கிளோட்டம் தான். நீங்கள் சொன்ன மாதிரி பதினோரு பேர தேடியெடுக்க உயிரே போயிடும். சில பன்னாடைகளை வீடு வழிய போய் சைக்கிளில ஏத்திக்கொண்டு கூட வந்திருக்கிறன். அனேகமா தோக்கிற பக்கம் அலாப்பத் தொடங்கீடுவாங்கள். LBW, run out கடைசி மட்டும் தர மாட்டாங்கள். நாங்களும் போய் விக்கட்ட காலால உதஞ்சு போட்டு வந்திடுவம் :o .

  • கருத்துக்கள உறவுகள்

நான் எழுதுவது கதையோ ,கிறுக்கலோ அல்லது அலட்டலோ தெரியவில்லை , ஊக்கப்படுத்திய அனைவருக்கும் நன்றிகள் .மனம்விட்டு உள்ளதை சொல்லுங்கள் திருத்திக்கொள்கின்றேன்.

குறிப்பாக முன்னோடிகளிடம் இருந்து எங்கே கவனம் அதிகம் தேவை என்பதையும் எதிர்பார்க்கின்றேன்.

மனதில் கனக்க இருக்கு கொட்ட யாழ் தான் கிடைத்திருக்கு . யாழ் களத்திற்கு நன்றிகள் .

உங்களின் வீட்டுக்குள் இருந்து புலிய வெளியிலே விட்டுவிட்டால் உங்கள் வீடு அழகானது. நீங்கள் போராட்ட தொடக்க காலத்தில் நானும் சேகுவரா போன்று உலகத்தில் வந்துவிடலாம் என்ற கனவோடு. இந்தியா போய் பின்பு தமிழனுக்கே உரித்தான நானா நீயா போட்டியை பார்த்து இந்த சேகுவாரா கனவெல்லாம் கற்பனைக்கே தகும் என்று திரும்பி வந்தவர்.

யோசித்து பாருங்கள் நீங்கள் இந்தியா போன நேரத்தில் ஒரு குழந்தை ஈழத்தில் பிறக்கிறது......

௨௦௦௦ ஆம் ஆண்டு அந்த குழந்தைக்கு ௨௦ வயது தனது இனத்திற்கு எதிரான அடக்குமுறை என்பது உங்கள் காலத்திலும் பார்க்க இப்போதுதான் கழுத்தை நெரிக்கும் வேகத்தில் இருந்தது.

அந்த குழந்தைக்கு இப்போது புலியை விட வேறு என்ன தெரிவு இருந்தது ஈழத்தில்?

உமாவும் பிரபாகரனும் சிரியும் பத்மாவும் கட்சி பிரிந்து அடிபட்ட கதைகள்................. அந்த குழந்தையின் எதிர்ர்கலத்தை வளமாக்க உதவுமா? அப்படி எனில் ஏன் காக்கை வன்னியன் பண்டார வன்னியன் கதைகள் உங்களுடைய வாழ்க்கையை வழமைக்கவில்லை?

இப்போது அந்த குழந்தைக்கு எதிரான உங்கள் பிரச்சாரம் எந்தவகையில் நியாயம் ஆனது? இந்தியா சிங்கள காடைகளுடன் சேர்ந்து அந்த குழந்தையை கொன்றதை எப்படி தரமான வாழ்வென்று வக்காலத்து வாங்குகின்றீர்கள்?

நீங்கள் தொடக்கிவிட்டு சென்றதை உயிர் உள்ளமட்டும் செய்த அந்த குழந்தையை மீது இத்தனை விமர்சனமா?

நீங்கள் போராட்ட களத்தில் இருந்து தூரம் போய்விட்டீர்கள் ................ உங்களுக்கு கிடைத்ததெல்லாம் ஒரு மூன்றாம் சார்பு நிலை கதைகள் மட்டுமே. எத்தனையோ துரோகங்களை இந்தியா செய்ததென்றும் எப்படியெல்லாம் இயக்கத்தை அழிக்க மாத்தையா உதவினார் என்றும் பலபேருக்கும் பல நெருக்கடி காலத்திலும் யோகி சொல்லியிருக்கிறார். ஆனால் புலியை பற்றி ஏதோ யோகி சொன்னதாக இருக்கும் நண்பரே உங்களுக்கு நண்பராக இறுக்கிறார். சேற்றுக்குள் நின்றுகொண்டே உங்களை கழுவுகிண்றீரகள். மூன்றம் சார்பு கதைகளை மட்டும் வைத்து உங்களுக்கும் புலிமீது இருந்த வெறுப்பையும் வைத்து நீங்கள் எழுதினால். வாந்தியாக அன்றி வேறு எதுவாக இருக்கும்.

ஆக உங்கள் காலத்தில் புலி என்ன செய்ததென்று எங்களுக்கு தேவை இல்லை எங்களுக்கு எதிரான அடக்குமுறையில் இருந்து மீளவேண்டும் இதுதான் எங்களுடைய தேவை. சோழமன்னன் காலத்தில் கட்டாய ஆள்சேர்ப்பு சாதரணமான ஒன்று.............. நீங்கள் வாழும் கனடாவில் எத்தனை பேர் இரண்டாம் உலக போர் காலத்தில் அமெரிக்க இராணுவ வேட்டுக்குல்லால் தப்பி வந்து வாழ்கிறார்கள்.

புலிக்கு மட்டும் வேறு ஒரு திரைகதை பொருந்த வேண்டும் என்ற உங்களின் ஏக்கம் புரியவில்லை. புலிகள் இந்த உலகில் இருக்கவில்லையா? உங்களுடைய கற்பனையில் புலிகள் வாழ்ந்துவிட்டார்கள் என்பதற்கு இதுவே ஆதாரம்.

முடிந்தால் நிஜத்திற்கு வாருங்கள். அல்லது தயவு செய்து புலியை வெளியிலே விட்டு விடுங்கள்.

Edited by Maruthankerny

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் நேரத்திற்கு எனது அனுதாபங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணைமார் கதை கதையாம் பகுதியிலாவது அரசியல் வேண்டாமே :) . (இது ஒரு வேண்டு கோள் மட்டுமே)

  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜுனைப் பற்றி தப்பான முன்னபிப்பிராயம் பலர் மனதில் உள்ளதால், அதைத் தாண்டி கருத்துக்களைச் சொல்லமுடியவில்லை.. அடிபிடிகள், அளாப்புதல்கள் இல்லாமல் விளையாட்டுக்கள் இருந்ததாக எனக்குத் தெரியாது!

  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜுனைப் பற்றி தப்பான முன்னபிப்பிராயம் பலர் மனதில் உள்ளதால், அதைத் தாண்டி கருத்துக்களைச் சொல்லமுடியவில்லை.. அடிபிடிகள், அளாப்புதல்கள் இல்லாமல் விளையாட்டுக்கள் இருந்ததாக எனக்குத் தெரியாது!

தப்பான அபிபிராயம் என்பதற்கு உங்களிடம் என்ன ஆதாரம் இருக்கிறது?

நீங்கள் தினமும் அர்ஜுனுடன் ஒரே வீட்டில் குடியிருக்கும் அவருடைய மனைவியா?

அப்படி ஒன்றாக இருப்பவளுக்கே தெரியாமல் எத்தனை பேர் சின்ன வீடு வைத்திருக்கிறார்கள். சொந்த மனைவியே உண்மையான அபிப்பிராயம் வைக்கமுடியாத நிலையில் உங்களுடைய வாதம்?

உங்களுடையதே ஒரு கற்பனை அபிப்பிராயமே.......... அவருடைய கருத்துக்களுக்கே பதில்கள் வருகின்றன.

அவர் தனது கற்பனைகளையும் தட்புகலாதாரங்களையும் கைவிடும் இடத்து அவர் தன்னை சுற்றி ஒரு மதிப்பை உருவாக்கலாம் என்பதே மேலே எழுதபட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

தப்பான அபிபிராயம் என்பதற்கு உங்களிடம் என்ன ஆதாரம் இருக்கிறது?

நீங்கள் தினமும் அர்ஜுனுடன் ஒரே வீட்டில் குடியிருக்கும் அவருடைய மனைவியா?

அப்படி ஒன்றாக இருப்பவளுக்கே தெரியாமல் எத்தனை பேர் சின்ன வீடு வைத்திருக்கிறார்கள். சொந்த மனைவியே உண்மையான அபிப்பிராயம் வைக்கமுடியாத நிலையில் உங்களுடைய வாதம்?

உங்களுடையதே ஒரு கற்பனை அபிப்பிராயமே.......... அவருடைய கருத்துக்களுக்கே பதில்கள் வருகின்றன.

அவர் தனது கற்பனைகளையும் தட்புகலாதாரங்களையும் கைவிடும் இடத்து அவர் தன்னை சுற்றி ஒரு மதிப்பை உருவாக்கலாம் என்பதே மேலே எழுதபட்டுள்ளது.

எனது கருத்தும் ஒரு தப்பான முன்னபிப்பிராயத்தால்தான் (prejudice) வந்தது..

தப்பான அபிப்பிராயத்திற்கும் தப்பான முன்னபிப்பிராயத்திற்கும் வித்தியாசம் உள்ளதல்லவா! இதற்குள் ஏன் மனைவி அது இது என்று மொக்கையாக எழுதவேண்டும் மருதங்கேணி? என்னைப் போல உங்களுக்கும் தற்போது வேறு வேலைகள் இல்லையா? :icon_mrgreen::lol:

  • கருத்துக்கள உறவுகள்

அர்யூன் உங்களிடம் எவ்வளவு திறமை இருக்கிறது....நன்றாக ரசித்து வாசித்தேன். :rolleyes:

நான் நினைக்கிறேன் அர்ஜீன் அண்ணா நன்றாக இலக்கியம் தெரிந்த,பிரபல்யம் ஆன ஆளாக இருக்க கூடும்[நிழலிக்கு தெரிந்து இருக்கும் யார் என] :)

  • கருத்துக்கள உறவுகள்

எனது கருத்தும் ஒரு தப்பான முன்னபிப்பிராயத்தால்தான் (prejudice) வந்தது..

தப்பான அபிப்பிராயத்திற்கும் தப்பான முன்னபிப்பிராயத்திற்கும் வித்தியாசம் உள்ளதல்லவா! இதற்குள் ஏன் மனைவி அது இது என்று மொக்கையாக எழுதவேண்டும் மருதங்கேணி? என்னைப் போல உங்களுக்கும் தற்போது வேறு வேலைகள் இல்லையா? :icon_mrgreen::lol:

நீங்கள் சுட்டிகாட்டிய பின்புதான் யோசிக்கிறேன் ................

இதற்குள் மனிவியையும் இழுக்கவேண்டுமா என்று? அவருடைய மனைவியை பற்றி சொல்லவில்லை பொதுவாக அங்கேயே இபாடி ஒரு நிலை என்பதை சுட்டிகாட்டினேன்.

எனக்கு வேறுவிதமாக அதை சொல்ல தெரியவில்லை.

ஒரு பொது கருத்து களத்தில் இவை தவராக இருக்கலாம். மன்னிக்கவும்

  • கருத்துக்கள உறவுகள்

நான் நினைக்கிறேன் அர்ஜீன் அண்ணா நன்றாக இலக்கியம் தெரிந்த,பிரபல்யம் ஆன ஆளாக இருக்க கூடும்[நிழலிக்கு தெரிந்து இருக்கும் யார் என] :)

ரதி அர்யூனிற்கு இலக்கியத்தில் பரிச்சயம் இருக்கிறது என்பது அவரின் எழுத்துக்கள் ஊடாகவும் அவர் பழகக்கூடிய நண்பர்களைக் கொண்டும் அறிவேன்..

  • தொடங்கியவர்

ரதி அர்யூனிற்கு இலக்கியத்தில் பரிச்சயம் இருக்கிறது என்பது அவரின் எழுத்துக்கள் ஊடாகவும் அவர் பழகக்கூடிய நண்பர்களைக் கொண்டும் அறிவேன்..

அப்பிடி ஒரு கோதாரியும் எனக்கு இல்லை .யாழ் தான் எனது முதல் முயற்சியே .

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியா.. உங்களை எழுத்துத்துறையில் பிரகாசிக்க வாழ்த்துகிறோம். தயவு செய்து அரசியலை நோண்டாமல் சமூக இலக்கியங்களை.... நல்ல நகைச்சுவைப்படைப்புகளைத் தாருங்கள். :rolleyes:

அர்ஜூன்! அருமையான கதை! உங்களுக்கு கால்பந்து மாதிரி... எனக்கு கிரிக்கெட் மட்சில கிட்டத்தட்ட இப்படி ஒரு அனுபவம் ஏற்பட்டிருக்கு! :)

அருமையான கதை!

ஆனாலும் சாதுர்யமாக சொல்லப்பட்ட கதையில்... எல்லோரும் கூறுவதைப்போல உள்ளே என்னவோ இருக்கு! கொஞ்சம் புரியுது! :rolleyes: நடக்கட்டும் ! நடக்கட்டும்! தொடருங்கள்! :D

  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜுன் உங்கள் கதை அந்தக் கால நினைவுகளை மீட்கச் செய்கின்றன.

நாங்களும் அங்கே சென்று பல விளையாட்டுக்களில் ஈடுபட்டிருக்கின்றோம்.

நட்புரீதியாக விளையாடச் சென்றாலும் தோல்வியைச் சகித்துக் கொள்ள முடியாதவர்கள்

எப்பொதும் இப்படித்தான் அடாவடித்தனங்களில் இறங்குவார்கள்.

யாழில் பிரபலமான கல்லூரிகளுக்கிடையில் நடைபெறும் விளையாட்டுக்களிலும் இப்படியான அடாவடித்தனங்கள் அரங்கேறியுள்ளன.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.