Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பரிணாம வளர்ச்சி நிஜமே!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பரிணாம வளர்ச்சி நிஜமே!

பத்ரி சேஷாத்ரி

richard_dawkins.jpg

ரிச்சர்ட் டாக்கின்ஸ் உலகப் புகழ் பெற்ற பரிணாம உயிரியல் விஞ்ஞானி. ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் வேலை செய்து ஓய்வுபெற்றவர். ஆனால், பொதுவாக பரிசோதனைச் சாலையில் உட்கார்ந்து ஆராய்ச்சிகள் செய்து, விஞ்ஞான மாநாடுகளில் கட்டுரை வாசித்து, வீட்டுக்குப் போய் ஓய்வெடுக்கும் ரகம் அல்ல அவர். பொதுமக்கள் படித்து புரிந்துகொள்ளும் வகையில் புத்தகங்கள் எழுதுவது; அந்தக் கருத்துகள் மக்களிடம் சென்று சேரக்கூடியவகையில் தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகள் தயாரிப்பது, மக்கள் கூட்டத்துக்கு இடையே பேசுவது என தீவிர களப்பணி ஆற்றுவதிலும் முன்னணியில் நிற்பவர்.

ஆனால் மிகவும் சர்ச்சைக்குரிய மனிதர்!

இதில் சர்ச்சை எங்கிருந்து வருகிறது? ரிச்சர்ட் டாக்கின்ஸ் வேலை செய்துவந்த துறை அப்படிப்பட்டது. சார்லஸ் டார்வின், பரிணாம வளர்ச்சி என்ற கோட்பாட்டை முன்வைத்தார். இந்தக் கோட்பாட்டின்படி, பல்வேறு விதமான உயிர்கள் உருவாவதற்கு கடவுள் என்ற கோட்பாடு அவசியமே இல்லை. ரிச்சர்ட் டாக்கின்ஸும் மற்ற பலரும் இந்தக் கோட்பாட்டை மேலும் முன்னுக்கு எடுத்துச் சென்றனர். அதனால் கிறிஸ்தவ மதத்தில் தீவிர ஈடுபாடு கொண்டவர்களுக்கு இந்தக் குறிப்பிட்ட அறிவியல் துறைமீது பிரச்னை ஏற்பட்டது. அவர்கள், ‘படைப்புவாதம்’ (கிரியேஷனிசம்) என்ற புதிய ‘அறிவியல்’ துறையை உருவாக்கினார்கள்.

இதைப்பற்றி இந்தியாவில் இருக்கும் நாம் அதிகம் கேட்டிருக்கக்கூட மாட்டோம். ஆனால் அமெரிக்காவில் கொடிகட்டிப் பறக்கும் ஒரு துறை இது. அமெரிக்க மக்கள்தொகையில் 40% மேலானவர்கள் டார்வின் ஒரு சாத்தான் என்றும், அவரது பரிணாம வளர்ச்சிக் கொள்கை அவர்களது மதத்துக்கு எதிரானது என்றும், படைப்புவாதமே சரியானது என்றும் நினைக்கிறார்கள். ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும் வலுவான எண்ணிக்கையில் இருக்கும் இவர்கள் பள்ளிக்கூடங்களில் டார்வினின் கருத்துகளைச் சொல்லிக்கொடுக்கக்கூடாது என்பதில் பல இடங்களில் வெற்றியும் பெற்றுள்ளனர்.

greatest_show_on_earth.jpg

எவொல்யூஷன் எனப்படும் பரிணாம வளர்ச்சிக் கொள்கை என்பது உண்மைதானா? அதற்கு என்ன சாட்சிகள், நிரூபணங்கள் உள்ளன என்று படைப்புவாதிகள் கேட்கிறார்கள். முதலில் சுருக்கமாக பரிணாம வளர்ச்சி என்றால் என்ன என்று புரிந்துகொள்வோம். உயிர் வகைகள் புதிது புதிதாகத் தோன்றுகின்றன என்கிறது பரிணாம வளர்ச்சிக் கொள்கை. ஒரு குறிப்பிட்ட உயிரினத்தின் சில தனிப்பட்ட நபர்களில் ஏற்படும் மாற்றங்கள், அந்த நபர்கள் பிறரைவிட அதிக நாள் உயிர்வாழும் சாத்தியத்தை ஏற்படுத்தினால், அந்த ‘நல்ல’ மாற்றங்கள் குறிப்பிட்ட உயிரினத்தில் அதிகரிக்க ஆரம்பிக்கும். அந்த ‘நல்ல’ குணம் கொண்ட நபர்களின் சந்ததிகள் அதிகரிப்பதால் இது நிகழ்கிறது. இப்படியே இந்த மாற்றங்கள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வந்தால், இறுதியில் ஒரு புதுக் கிளை உருவாகி, நாளடைவில் முற்றிலும் புதிய உயிரினம் உருவாகிவிடுகிறது.

இப்படித்தான் ஏதோ ஓர் உயிரினத்தில் தொடங்கி இன்று மனிதர்கள் தோன்றியுள்ளனர். மனிதர்கள் போன்ற பாலூட்டிகள் அனைத்துக்கும் ஒரு கட்டத்தில் ஒரு பொதுவான பெற்றோர் உயிரினம் இருந்துள்ளது. பாலூட்டிகளுக்கும் பறவைகளுக்கு பொதுவான ஒரு பெற்றோர் உயிரினம் இருந்துள்ளது. இப்படியே பின்னோக்கிப் போனால் எல்லாவித உயிரினங்களுமே ஒரே ஒரு உயிரிலிருந்து கிளைத்ததாக இருக்கவேண்டும்.

இந்தக் கொள்கை தீவிர ஆப்ரகாமிய மதத்தைச் சேர்ந்தவர்கள் (யூதர்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள்) அனைவருக்கும் கோபத்தைக் கிளப்புவதில் ஆச்சரியமில்லை. அந்த மதங்களின்படி, உலகம் என்பதை இறைவன் தோற்றுவித்தது மட்டுமின்றி, உலகில் உள்ள அனைத்து உயிர்களையும் ஆறே நாள்களில் உருவாக்கினான். அப்போதே உலக உயிர்கள் அனைத்தையும், ஈ முதல் எறும்பு வரை, மாடு முதல் மான் வரை, திமிங்கிலம் முதல் தேள்வரை அனைத்தையும் உருவாக்கிவிட்டான். அப்போது உருவாக்கப்படாத எந்தப் புது உயிரும் இனி உருவாகாது. இன்று காணப்படும் எந்த உயிரும் என்றோ உருவாக்கப்பட்டுவிட்டன. அதுவுமின்றி இந்தத் தோற்றம் அனைத்தும் நடந்து சுமார் 5,000 வருடங்கள்தான் ஆகியுள்ளன.

ஆனால் பரிணாம வளர்ச்சிக் கொள்கையின்படி, தினம் தினம் மாற்றங்கள் நிகழ்கின்றன; சில லட்சம் ஆண்டுகள் கழித்து முற்றிலும் புதிய, இதுவரையில் இல்லாத உயிரினங்கள் உருவாகியிருக்கும். மேலும் உயிர்கள் தோன்றி பல கோடி ஆண்டுகளுக்குமேல் ஆகிவிட்டன.

பரிணாம வளர்ச்சியை ஏற்காத படைப்புவாதிகள் பல கேள்விகளை முன்வைக்கின்றனர். ரிச்சர்ட் டாக்கின்ஸின் புத்தகம் இந்தக் கேள்விகளை ஒன்றன்பின் ஒன்றாக எதிர்கொள்கிறது. மிகவும் எளிய முறையில் எழுதப்பட்டுள்ள இந்தப் புத்தகம், அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும் என்ற ஆதங்கத்துடன் எழுதப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

டாக்கின்ஸ் படிப்படியாக நம்மை பரிணாம வளர்ச்சிக் கொள்கைக்குள் அழைத்துச் செல்கிறார். முதல் கேள்வி: இந்த விஷயத்தை டார்வின் என்று ஓர் ஆசாமி 19-ம் நூற்றாண்டில் வந்து சொல்லும்வரை ஏன் வேறு யாரும் கண்டுபிடிக்கவில்லை? இதற்குக் காரணம், பிளேடோ என்ற கிரேக்கத் தத்துவஞானியின் கருத்துகள் மேற்கத்திய விஞ்ஞானிகளை பரிணாம வளர்ச்சிக் கொள்கை பற்றி சிந்திக்கவிடாமல் செய்துவிட்டதே என்கிறார் டாக்கின்ஸ். பிளேடோவின் அடிப்படைக் கொள்கை, சாராம்சவாதம். எல்லா உயிரினங்களும் ஒரு சிறந்த வடிவமைப்பின் குறைபட்ட வடிவங்களே. டார்வினின் கருத்தாக்கத்தில் இப்படி ‘கச்சிதமான’ வடிவமைப்பு ஏதும் கிடையாது. ஆனால் மேற்கத்திய விஞ்ஞானிகள் அனைவருமே பிளேடோவின் சிந்தனைத் தாக்கத்திலிருந்து மீளாததால் மாற்றி யோசிக்கவில்லை. எனவே டார்வினின் தரிசனம் அவர்களுக்குக் கிடைக்கவில்லை.

டார்வின் தன்னைச் சுற்றிலும் நடப்பதைக் கவனமாகப் பார்த்தார். மனிதன் தன் விருப்பத்துக்கு ஏற்றவாறு நாய்களையும், புறாக்களையும், குதிரைகளையும் உருவாக்குவதைக் கண்டார். மனிதன் செயற்கையாக தனக்கு விருப்பமான தன்மைகள் உடைய உயிரினங்களை உருவாக்கும்போது, இயற்கையிலேயேகூட அப்படி ஒரு நிகழ்வு ஏன் நடந்திருக்கக்கூடாது என்று யோசித்தார். அப்படி அவர் உருவாக்கிய கருத்துதான் ‘இயற்கைத் தேர்வுமுறை’.

ஆனால் இந்த இயற்கைத் தேர்வு நடப்பதை மனிதக் கண்ணால் பார்ப்பது கடினம். ஏனெனில் இந்த முறையின்மூலம் மாற்றங்கள் ஏற்பட பல ஆயிரம் வருடங்களாவது குறைந்தது ஆகிவிடும். நம் வாழ்நாளோ நூறு வருடங்களுக்கும் குறைவே. ஆனால் புதைபடிவ நிரூபணங்கள் நிறையக் கிடைக்கின்றன. மண்ணுக்கு அடியில் புதைந்துள்ள பல்வேறு உயிரினங்களை எடுத்து ஆராயும்போது என்னென்ன முற்றிலும் வித்தியாசமான உயிரினங்கள் ஒரு காலத்தில் வாழ்ந்துள்ள என்பதை நம்மால் அறிந்துகொள்ள முடிகிறது.

அடுத்து டாக்கின்ஸ் எதிர்கொள்வது உயிர்களின் வயதை. கார்பன் டேட்டிங் என்ற முறையைப் பற்றி எளிமையாக விளக்கும் டாக்கின்ஸ் எப்படி உலகத்தின், மரங்களின், உயிர்களின் வயதைக் கணக்கிடமுடியும் என்று காண்பிக்கிறார். பிறகு அந்தக் கணக்குகளின்மூலம் இந்த உலகம் எப்படி பல கோடி ஆண்டுகள் என்பதைத் தெளிவாக்குகிறார்.

பரிணாம வளர்ச்சி பல ஆயிரம் ஆண்டுகள் ஆகும் என்று சொல்லித் தான் தப்பித்துவிடவில்லை எனும் டாக்கின்ஸ் சில பத்து ஆண்டுகளுக்குள்ளாகவே நடக்கும், நடந்துள்ள சில பரிணாம வளர்ச்சி மாற்றங்களை உதாரணங்களாகத் தருகிறார்.

குரோவேஷியா நாட்டுக்கு அருகில் உள்ள இரண்டு தீவுகள் போட் கோபிஸ்டே, போட் மெர்காரு. போட் கோபிஸ்டாவில் வாழும் ஒரு பல்லி இனம், போட் மெர்காருவில் ஒன்றுகூடக் கிடையாது. 1971-ல் கோபிஸ்டாவில் இருந்து இந்தப் பல்லிகள் சிலவற்றைப் பிடித்து மெர்காருவில் போட்டார்கள். மீண்டும் 2008-ல் மெர்காரு சென்று கடந்த 37 வருடங்களில் என்னதான் ஆகியுள்ளது என்று கண்டறிய முற்பட்டார்கள். மெர்காருவில் உள்ள பல்லிகளுக்கு கோபிஸ்டேவில் உள்ளவற்றைவிட தலை சற்றே நீளமாகவும் அகலமாகவும் ஆகியிருந்தன! ஏன்? கோபிஸ்டேவில் உள்ள பல்லிகள் பூச்சிகளைப் பிடித்து சாப்பிட்டுக்கொண்டிருந்தன. ஆனால் அதிக பூச்சிகள் இல்லாத மெர்காருவில், அங்கே உள்ள தாவர இலைகளைத் தின்று பழக ஆரம்பித்த இந்தப் பல்லிகள். தாவர இலைகளைக் கடித்துத் தின்ன அழுத்திக் கடிக்கவேண்டும். எனவே தலை பெரிதாக வளர்ந்தது; பற்கள் சற்றே பெரிதாக, கடினமாக இருந்தன. ஆக, வெறும் 37 ஆண்டுகளிலேயே, சூழ்நிலை மாற்றத்துக்குத் தக்கவாறு, ஓர் உயிரினத்தின் கிளையில், கண்ணால் கண்டறியக்கூடிய மாற்றம் உருவாகத் தொடங்கிவிடுகிறது.

இதேபோல் நுண்ணுயிரிகளைக் கொண்டு நடந்த சோதனை முயற்சி ஒன்றையும் விளக்குகிறார் ரிச்சர்ட் டாக்கின்ஸ். கப்பி மீன்கள் கொண்டு நடந்த ஒரு சோதனையை விளக்குகிறார். இயற்கையில் பரிணாம வளர்ச்சி என்பதை என்று சில உயிரினங்களில் காணவும் முடிகிறது. ஆனால் பொதுவாகவே, கண்டறியக்கூடிய மாற்றங்கள் கொண்ட பரிணாம வளர்ச்சி நடைபெறும் காலகட்டம் என்பது பல ஆயிரம் வருடங்களாவது இருக்கும்.

பொதுவாக படைப்புவாதிகள் மட்டுமல்லாது படித்தவர்களுமே கேட்கும் ஒரு கேள்வி, ‘குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்றால் குரங்குகள் இன்னமும் ஏன் உள்ளன?’ என்பது. இது, பரிணாம வளர்ச்சித் தத்துவத்தைப் புரிந்துகொள்ளாததான் உருவாகும் கேள்வி. திடீரென ஒரு குறிப்பிட்ட நாள் அன்று இன்று நாம் காணும் ஒரு குரங்குவகை, தன் தோலை சட்டையைக் கழற்றுவதுபோல் கழற்றி மனிதத்தோலை அணிந்துகொண்டு இரண்டு கால்களால் நடந்து மனிதனாக ஆகிவிடுவதில்லை. எந்த ஒரு தனி குரங்கும், மனிதனாக ஆகிவிடுவதில்லை. குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என்று சொல்வதே தவறு. குரங்கு, மனிதன் இரண்டுக்கும் ஒரு பொது பெற்றோர் இனம் ஒன்று இருந்தது. அந்தப் பெற்றோரிலிருந்து குரங்குக் கிளையும் மனிதக் கிளையும் பிரிந்தன. தனித்தனியாக வளர்ந்தன. இதுதான் உண்மை நிலை.

எப்படி இயற்கையில் விதவிதமான உருவங்கள் உருவாகின்றன என்பது பற்றி விளக்குகிறார் டாக்கின்ஸ். ஒரு நண்டு, ஒரு வண்டு இரண்டும் எப்படி முற்றிலும் புதுமையான, வித்தியாசமான வடிவத்தைப் பெறுகின்றன? தெளிவற்ற ரேண்டம் வரைகணித முறைப்படி இயங்கும்போது, புதிது புதிதான தோற்றங்கள் உருவாகும் அல்லவா? தாள் ஒன்றில் இங்கைத் தெளித்து, அந்தத் தாளை கன்னாபின்னாவென்று மடித்து, மீண்டும் பிரித்துப் பார்க்கும்போது அந்தத் தாளில் ஒரு அழகான வடிவம் ஒன்றைக் காண்பீர்கள். அப்படிப்பட்ட வடிவங்கள்தான் இயற்கையில் உயிர்களின் உருவமாக உருவாகின்றன. அவற்றில் பல வடிவங்கள் வாழமுடியாமல் அழிந்துபோக, ஒரு சில வடிவங்கள் மட்டும் கடல்வாழ், நிலவாழ் உயிரினங்களின் வடிவங்களாகத் தங்கிவிடுகின்றன என்பதை பல ஆதாரங்களுடன் எடுத்துக்காண்பிக்கிறார்.

உயிர்கள் மிகவும் சிக்கலான வடிவம் கொண்டவை என்பதால் அவை நிச்சயம், மிக அதிக சக்திவாய்ந்த ‘கடவுள்’ போன்ற ஒருவரால் மட்டுமே உருவாக்கப்பட்டிருக்கமுடியும் என்ற வாதத்தை மிக அழகாகக் கையாளுகிறார் டாக்கின்ஸ். கேயாஸ் சிஸ்டம் என்ற கருத்தாக்கத்தை முன்வைத்து, எப்படி மிகவும் சிக்கலான இடங்களிலும் வரிசையும் தெளிவும் ஏற்படுகின்றன என்பதைக் காண்பித்து, உயிர்கள் ஒற்றை செல்லிலிருந்து பிரிந்து பிரிந்து பல செல்களாக மாறி, கடைசியில் ஒரு மானாக, ஒரு கழுதையாக, ஒரு கனகாம்பரம் செடியாக ஆகும்போது எப்படி ஒரு செல்லுக்கு தான் பூவாகவேண்டும், தான் காதாக வேண்டும், கண்ணாக வேண்டும் என்றெல்லாம் தெரிகிறது என்றும் அதனை மிகச் சரியாக அது எப்படிச் செய்கிறது என்பதையும் மிக எளிமையான முறையில் விளக்குகிறார்.

இந்தப் புத்தகத்தில் டாக்கின்ஸ் எழுதியுள்ள மிக அற்புதமான அத்தியாயம் அத இறுதி அத்தியாயம். அதில் டார்வினின் ‘உயிர்களின் தோற்றம்’ (ஆரிஜின் ஆஃப் ஸ்பீஷிஸ்) என்ற புத்தகத்தில், அவரது கடைசி வரியை எடுத்துக்கொண்டு, அதில் உள்ள ஒவ்வொரு வார்த்தையையும் தெளிவாக விளக்குவது. அந்த ஓர் அத்தியாயத்துக்காகவே இந்தப் புத்தகத்தைப் படிக்கலாம்!

உலகத்திலேயே மிகவும் ஆச்சரியகரமான விஷயம் என்பது உயிர்கள்தான். ஆனால் இந்த ஆச்சரியத்தை முற்றிலும் புரிந்துகொண்டு ரசிப்பதைக் காட்டிலும், எல்லாமே ஒரு ‘மீ-சக்தியின்’ திருவிளையாடல் என்று தவறாகப் புரிந்துகொண்டு, இயற்கையின் அழகை மக்கள் ரசிக்காமல் விட்டுவிடுகிறார்களே என்ற ஆதங்கம் புத்தகம் முழுக்க விரிவடைகிறது.

அவசியம் படித்தே ஆகவேண்டிய நூல்களில் ஒன்று இது.

The Greatest Show on Earth: The Evidence for Evolution, Richard Dawkins, Bantam Press (A unit of Transworld Publishers, A Random House Group Company)

http://thoughtsintam...-post_9611.html

  • கருத்துக்கள உறவுகள்

பரிணாம வளர்ச்சி நிஜமே!

பத்ரி சேஷாத்ரி

richard_dawkins.jpg

டாக்கின்ஸ் படிப்படியாக நம்மை பரிணாம வளர்ச்சிக் கொள்கைக்குள் அழைத்துச் செல்கிறார். முதல் கேள்வி: இந்த விஷயத்தை டார்வின் என்று ஓர் ஆசாமி 19-ம் நூற்றாண்டில் வந்து சொல்லும்வரை ஏன் வேறு யாரும் கண்டுபிடிக்கவில்லை? இதற்குக் காரணம், பிளேடோ என்ற கிரேக்கத் தத்துவஞானியின் கருத்துகள் மேற்கத்திய விஞ்ஞானிகளை பரிணாம வளர்ச்சிக் கொள்கை பற்றி சிந்திக்கவிடாமல் செய்துவிட்டதே என்கிறார் டாக்கின்ஸ். பிளேடோவின் அடிப்படைக் கொள்கை, சாராம்சவாதம். எல்லா உயிரினங்களும் ஒரு சிறந்த வடிவமைப்பின் குறைபட்ட வடிவங்களே. டார்வினின் கருத்தாக்கத்தில் இப்படி ‘கச்சிதமான’ வடிவமைப்பு ஏதும் கிடையாது. ஆனால் மேற்கத்திய விஞ்ஞானிகள் அனைவருமே பிளேடோவின் சிந்தனைத் தாக்கத்திலிருந்து மீளாததால் மாற்றி யோசிக்கவில்லை. எனவே டார்வினின் தரிசனம் அவர்களுக்குக் கிடைக்கவில்லை.

பரிணாம வளர்ச்சி பல ஆயிரம் ஆண்டுகள் ஆகும் என்று சொல்லித் தான் தப்பித்துவிடவில்லை எனும் டாக்கின்ஸ் சில பத்து ஆண்டுகளுக்குள்ளாகவே நடக்கும், நடந்துள்ள சில பரிணாம வளர்ச்சி மாற்றங்களை உதாரணங்களாகத் தருகிறார்.

குரோவேஷியா நாட்டுக்கு அருகில் உள்ள இரண்டு தீவுகள் போட் கோபிஸ்டே, போட் மெர்காரு. போட் கோபிஸ்டாவில் வாழும் ஒரு பல்லி இனம், போட் மெர்காருவில் ஒன்றுகூடக் கிடையாது. 1971-ல் கோபிஸ்டாவில் இருந்து இந்தப் பல்லிகள் சிலவற்றைப் பிடித்து மெர்காருவில் போட்டார்கள். மீண்டும் 2008-ல் மெர்காரு சென்று கடந்த 37 வருடங்களில் என்னதான் ஆகியுள்ளது என்று கண்டறிய முற்பட்டார்கள். மெர்காருவில் உள்ள பல்லிகளுக்கு கோபிஸ்டேவில் உள்ளவற்றைவிட தலை சற்றே நீளமாகவும் அகலமாகவும் ஆகியிருந்தன! ஏன்? கோபிஸ்டேவில் உள்ள பல்லிகள் பூச்சிகளைப் பிடித்து சாப்பிட்டுக்கொண்டிருந்தன. ஆனால் அதிக பூச்சிகள் இல்லாத மெர்காருவில், அங்கே உள்ள தாவர இலைகளைத் தின்று பழக ஆரம்பித்த இந்தப் பல்லிகள். தாவர இலைகளைக் கடித்துத் தின்ன அழுத்திக் கடிக்கவேண்டும். எனவே தலை பெரிதாக வளர்ந்தது; பற்கள் சற்றே பெரிதாக, கடினமாக இருந்தன. ஆக, வெறும் 37 ஆண்டுகளிலேயே, சூழ்நிலை மாற்றத்துக்குத் தக்கவாறு, ஓர் உயிரினத்தின் கிளையில், கண்ணால் கண்டறியக்கூடிய மாற்றம் உருவாகத் தொடங்கிவிடுகிறது.

The Greatest Show on Earth: The Evidence for Evolution, Richard Dawkins, Bantam Press (A unit of Transworld Publishers, A Random House Group Company)

http://thoughtsintam...-post_9611.html

நல்லதோர் இணைப்பு கிருபன்! வாங்க முடியுமானால் வாங்கி வாசிக்க முயல்கின்றேன்!

ஒரு பச்சை உங்களுக்கு!

அது சரி! யாழ்ப்பாணத்தில் முன்பு நிரம்ப வெற்றிலை சாப்பிட்டார்கள்!

இப்போது அதிகம் பேர் வெத்திலை சாப்பிட்டதைக் காணவில்லை?

இது அவர்களின் முக அமைப்பைக் காலப் போக்கில் மாற்றி விடுமா? :wub:

எங்கள் ஆட்கள் வெற்றிலை சாப்பிடுவது மாதிரி வெற்றிலை சாப்பிட்டால் வாய்ப்புற்று நோய் வரும், கூர்ப்பு மாற்றம் வராது. ஆனால் கூர்ப்பினால் உயிர்களின் உடலமைப்பு மாறுவதற்கு பல உதாரணங்கள் உண்டு. கறுப்பு ஆபிரிக்கர்களின் நாசித்துவாரங்கள் கொஞ்சம் அகன்றவையாக இருக்கும். வெப்பமான சூழலில் கடின உடல் உழைப்பில் ஈடுபடும் போது சுவாசிப்பதை இலகுவாக்கவே இப்படியான மாற்றம் வந்ததாக நம்புகிறார்கள். மிருகவைத்தியம் முதலாம் ஆண்டில் பல் வேறு விலங்கினங்களின் உடலமைப்பைப் பற்றிப் படித்த போது கூர்ப்பின் உண்மைத் தன்மை தெரிந்தது. உதாரணத்திற்கு பல குட்டிகளை ஈண வேண்டிய பன்றி போன்ற விலங்குகளின் கருப்பை சுருள் சுருளாக நீண்டிருக்கும். அப்படியே மாடு, குதிரை, குரங்கு, மனிதன் என்று மேலே வரும் போது, கருப்பை சிறிதாகி ஒரு பை போல மாறி விடுகிறது. இப்படிப் பல உண்டு.

நல்ல தகவல்கள், ஜஸ்டின்! நன்றிகள்!!!

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ ஐயோ .............. அபச்சாரம் அபச்சாரம்!

தெரியாம வந்துபுட்டேன்!

அப்ப சுன்னாகத்து ............ யாழ் உயர் வேளாள குல மனிதர்களும் ஒன்றா?

என்னைய கதை விடுறீங்க ........... நீங்க எல்லாம் உருபடுவீங்கள?

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி இணைப்பிற்கு, கூர்ப்பில் முன்னேறியவர்கள் சப்பட்டைகள் / அடையார்

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் ஆட்கள் வெற்றிலை சாப்பிடுவது மாதிரி வெற்றிலை சாப்பிட்டால் வாய்ப்புற்று நோய் வரும்,

இந்தக் கூற்று தவறானது.

வெற்றிலை சாப்பிடுவதால் புற்றுநோய் வரும் என்பது தவறு. வெற்றிலையோடு சேர்த்து உண்ணப்படும்.. சுண்ணாம்பு... மிகவும் காரமானது. மேலும் பாக்கும் பல இரசாயனங்களைக் கொண்டுள்ளது. இவற்றின் சேர்கையின் விளைவு.. அபாயகர இரசாயன நிலையை வாய்க்குள் ஏற்படுத்துவதால்.. புற்றுநோய் தோன்றுவதற்காக வாய்ப்பு (risk) அதிகம்..!

வெறுமனவே வெற்றிலையை உண்பதால்.. புற்றுநோய் வரும்.. (Definitely) என்ற தகவலுக்கு என்ன அடிப்படை இருக்கிறது.. ஜஸ்டின்..??! அதை இங்கு முன் வைத்தால்.. நன்றாக இருக்குமே..!

எப்போதும் ஆராய்ச்சிகள் சம்பந்தப்பட்ட தகவல்களை வழங்கும் போது.. risk அதிகம் என்ற பதத்தைப் பாவிப்பதே மக்களுக்கு சரியான வடிவில் தகவல் போக உதவும்..! :):icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

டார்வினின் கூர்ப்புக் கொள்கை.. அதாவது அது ஒரு கொள்கை. இன்னும் அதனை யாரும் அறிவியலின் விதியாகக் கொள்ளவில்லை. டார்வினின் கூர்ப்புக் கொள்கை.. மரத்தின் நுனியில் இருந்து வேரை நோக்கிப் போவது போன்றது. வேரின் அடியில்.. அதன் நுனியில்.. போய் நின்று கொண்டு.. அது எப்படி தோன்றியது என்று கேட்டால்.. அதற்கு விடை இருக்காது.. அங்கு தான் பிரச்சனையே ஆரம்பமாகிறது. மரத்தின் நுனியில் இருந்து.. வேர் நுனி வரைக்கும்.. டார்வினின் கொள்கை சரி என்பதாகவே தோன்றும். ஆனால் அதற்குப் பிறகு.. டார்வின் காணாமல் போயிடுவார்..! இதுதான் டார்வினின் கூர்ப்புக் கொள்கையின் பலவீனம்..! மற்றும்படி.. டார்வினின் கொள்கை.. கொள்கை அளவில் ஏற்றுக் கொள்ளக் கூடிய சான்றுகளைக் கொண்டுள்ளதே. அதற்காக அது முற்றிலும் உண்மை.. விதி என்ற நிலை கொள்ள முடியாது.

டார்வினிற்கு ஆப்படிக்க என்றே சில உயிரினங்கள் இன்னும் உலகில் வாழ்கின்றன. டார்வினின் கூர்ப்புக் கொள்கைப் படி இன்று வாழும் உயிரினங்கள் எல்லாம்.. ஆதியில் இருந்து கூர்ப்படைந்து வந்திருக்க வேண்டும். அப்போ.. ஏன் சூழல் மாறியும்.. பக்ரீரியா போன்ற அங்கிகள் இன்னும் அப்படியே மாறாமல் இருக்கின்றன... ஆதியில் தோன்றிய உயிரினங்கள் பலவும் பக்ரீரியாவை ஒத்தே இருந்துள்ளன என்றால் பக்ரீரியா போன்றவற்றை விட்டு.. ஏன் அவை மட்டும் கூர்ப்படைந்தன..??! இப்படி கேள்வி கேட்கும் அறிவியலாளர்களும் உள்ளனர். அதற்கும் சூழல் மாற்றம் என்ற காரணியை டார்வினின் கொள்கை முன்வைக்கிறது. டார்வினின் கொள்கை.. நவீன மரபணு விளக்க முறையில் மேலும் அதிக சான்றுகளைக் கொண்டு பலமடைந்து வருகிறது என்பதை எதிர் அறிவியலாளர்களும் ஏற்றுக் கொண்டே தான் ஆக வேண்டும். :):icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

டார்வின் தன்னைச் சுற்றிலும் நடப்பதைக் கவனமாகப் பார்த்தார். மனிதன் தன் விருப்பத்துக்கு ஏற்றவாறு நாய்களையும், புறாக்களையும், குதிரைகளையும் உருவாக்குவதைக் கண்டார். மனிதன் செயற்கையாக தனக்கு விருப்பமான தன்மைகள் உடைய உயிரினங்களை உருவாக்கும்போது, இயற்கையிலேயேகூட அப்படி ஒரு நிகழ்வு ஏன் நடந்திருக்கக்கூடாது என்று யோசித்தார். அப்படி அவர் உருவாக்கிய கருத்துதான் ‘இயற்கைத் தேர்வுமுறை’.

நல்ல பதிவு கிருபன்.

கோழி கூட முன்பொரு காலத்தில் வானத்தில் பறக்கும் பறவையாக இருந்தது. கோழியின் நெஞ்சு விலா எலும்பின் அமைப்பை அவதானித்தால்... நன்கு அறியலாம். கோழியை மனிதன் தனது வீட்டுத்தேவைக்காக வளர்க்கும் போது... கோழிக்கு பறந்து இரை தேட வேண்டிய அவசியம் இல்லாமல் போய்விட்டது.

இதே போல... மேற்கத்திய நாடுகளில் வீட்டில் வளர்க்கும் நாய், பூனையை மனிதன் இல்லாத இடத்தில் விட்டால்.... அதற்கு தானாக உணவு தேடிச் சாப்பிடத் தெரியாத நிலையில் இறந்து விடும். இந்தக் கூர்ப்பு மாற்றத்தை நம் வாழில் சற்று அவதானமாக உற்று நோக்கினால்.... நன்கு அறியக்கூடியதாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

நான் டார்வின் கூர்ப்புக் கொள்கையை ஒரு எல்லை வரை அங்கீகரிக்கின்ற அதேவேளை.. முரண்பாடுகளையும் உற்றுநோக்குகிறேன்.

கோழி.. மனிதர்களின் வளர்ப்பால் தான் பறக்கல்லைன்னா.. பென்குயின் ஏன் பறக்கல்ல. காட்டுக் கோழி ஏன் பறக்கல்ல..???! :):icon_idea:

Platypus-sketch.jpg

(Wikipedia)

அடுத்தது இவர்.. பிளாரிபஸ்.. இது ஒரு பாலூட்டி.. இடுவது என்னவோ முட்டை. வாத்துப் போன்ற அலகு.. கால்கள்.. நீரில் வாழ்வதற்காக. டார்வினின் இயற்கைத் தேர்வு.. என்பதும் கூட ஒரே சூழலில் பல இனங்கள் தேர்வாகும் தன்மையில் காணப்படும் விதமும்.. கொஞ்சம்.. சர்ச்சைக்குள்ளானதாகவே இருக்கிறது. :):icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

கோழி.. மனிதர்களின் வளர்ப்பால் தான் பறக்கல்லைன்னா.. பென்குயின் ஏன் பறக்கல்ல. காட்டுக் கோழி ஏன் பறக்கல்ல..???! :):icon_idea:

நெடுக்ஸ்...

பென்குயின், பறவை இனத்தில் அடங்குமா என்று தெரியவில்லை, அப்படி இருந்தாலும்....

பென்குயின் மீன் சாப்பிடும் பிராணி. அதுக்கு வானத்தில் பறந்தால்.... மீன் கிடைக்குமா?penguin.gif

ஊர்க் கோழியை விட... காட்டுக் கோழி சில நூறு மீற்றர்கள் பறக்கும் தன்மையுடயவை. :)

பென்குயின் பறவை தான் சிறியண்ணா. கோழியும் பறக்கும் தானே. அதுபோக.. எல்லாக் காட்டுக் கோழியும் தூரத்திற்குப் பறக்காது. ஆபத்து என்றால் மட்டும்.. இரைகெளவியிடம் இருந்து தப்ப பறக்கும். கோழியும் குஞ்சைப் பிடிக்க வந்தா பறக்கும். நான் இதனை கண்டிருக்கிறன். ஊரில கோழிகளை மரத்தில படுக்க விடுவினம். அது பின்னேரமாக தானா போய் பறந்து மரத்தில ஏறிப் படுக்கும்.

கொக்கும் மீன் பிடிச்சுத் தான் சாப்பிடுது. அது பறக்கல்லையா. வாத்து.. தாரா.. மிதப்பதற்கு வசதியாக குண்டான உடலை வைச்சிருந்தாலும்.. மீன் பிடிச்சுச் சாப்பிட்டாலும்.. பறக்கின்றன தானே..???! :):lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு, "எங்கள் ஆட்கள் வெற்றிலை சாப்பிடுவது போல" என்ற வசனத்திலேயே சுண்ணாம்பு, புகையிலை, பாக்கு எல்லாம் அடங்கியிருக்கிறது. வெற்றிலையால் வாய்ப்புற்று நோய் வரும் என்று நான் எழுதவில்லை. மேலும், சாதாரண ஒருவருக்கு "புற்று நோய்" வரும் என்ற பதம் ஆபத்தை விளக்கப் போதுமானது. இதற்காக risk, odds ratio எல்லாம் அட்டவணை போட்டு விளங்கப் படுத்துவது வகுப்பறையில் வேணுமெண்டாப் பயன்படும். பொதுமக்களுக்கு அறிவைக் கொடுக்க பயன்படுமென்று நினைக்கவில்லை.

Edited by Justin

வெற்றிலை என்பது.. ஆகுபெயராகி வந்திருக்கிறதா. நல்லது. இதனை இப்போ மக்கள் தெளிவு படுத்திக் கொண்டிருப்பார்கள்.

மேலும்.. நோய் வர அதிக வாய்ப்பு இருக்கிறது என்பதை... நோய் வரும் என்று எழுதின் அது மக்களை தவறாகத் தானே போய் சேரும். அப்படி சாதாரண மக்களிடம் உண்மைக்கு மாறாக எழுதுவது சரியா..??! குறிப்பாக நோய்கள் தொடர்பில்..! :o:icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

டார்வினின் கூர்ப்புக் கொள்கை.. அதாவது அது ஒரு கொள்கை. இன்னும் அதனை யாரும் அறிவியலின் விதியாகக் கொள்ளவில்லை. டார்வினின் கூர்ப்புக் கொள்கை.. மரத்தின் நுனியில் இருந்து வேரை நோக்கிப் போவது போன்றது. வேரின் அடியில்.. அதன் நுனியில்.. போய் நின்று கொண்டு.. அது எப்படி தோன்றியது என்று கேட்டால்.. அதற்கு விடை இருக்காது.. அங்கு தான் பிரச்சனையே ஆரம்பமாகிறது. மரத்தின் நுனியில் இருந்து.. வேர் நுனி வரைக்கும்.. டார்வினின் கொள்கை சரி என்பதாகவே தோன்றும். ஆனால் அதற்குப் பிறகு.. டார்வின் காணாமல் போயிடுவார்..! இதுதான் டார்வினின் கூர்ப்புக் கொள்கையின் பலவீனம்..! மற்றும்படி.. டார்வினின் கொள்கை.. கொள்கை அளவில் ஏற்றுக் கொள்ளக் கூடிய சான்றுகளைக் கொண்டுள்ளதே. அதற்காக அது முற்றிலும் உண்மை.. விதி என்ற நிலை கொள்ள முடியாது.

டார்வினிற்கு ஆப்படிக்க என்றே சில உயிரினங்கள் இன்னும் உலகில் வாழ்கின்றன. டார்வினின் கூர்ப்புக் கொள்கைப் படி இன்று வாழும் உயிரினங்கள் எல்லாம்.. ஆதியில் இருந்து கூர்ப்படைந்து வந்திருக்க வேண்டும். அப்போ.. ஏன் சூழல் மாறியும்.. பக்ரீரியா போன்ற அங்கிகள் இன்னும் அப்படியே மாறாமல் இருக்கின்றன... ஆதியில் தோன்றிய உயிரினங்கள் பலவும் பக்ரீரியாவை ஒத்தே இருந்துள்ளன என்றால் பக்ரீரியா போன்றவற்றை விட்டு.. ஏன் அவை மட்டும் கூர்ப்படைந்தன..??! இப்படி கேள்வி கேட்கும் அறிவியலாளர்களும் உள்ளனர். அதற்கும் சூழல் மாற்றம் என்ற காரணியை டார்வினின் கொள்கை முன்வைக்கிறது. டார்வினின் கொள்கை.. நவீன மரபணு விளக்க முறையில் மேலும் அதிக சான்றுகளைக் கொண்டு பலமடைந்து வருகிறது என்பதை எதிர் அறிவியலாளர்களும் ஏற்றுக் கொண்டே தான் ஆக வேண்டும். :):icon_idea:

கூர்ப்புக்கொள்கையை அடியோடு நிராகரிக்கும் "கிரியேஷன்" தத்துவத்தை சரி என்று சொல்லாமல் விட்டதற்கு நன்றிகள். டார்வினின் கொள்கைகளைக் கேள்விக்கு உள்ளாக்கித்தான் உயிர்களின் தோற்றுவாய்களைக் கண்டுபிடிக்க்கவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

------

கொக்கும் மீன் பிடிச்சுத் தான் சாப்பிடுது. அது பறக்கல்லையா. வாத்து.. தாரா.. மிதப்பதற்கு வசதியாக குண்டான உடலை வைச்சிருந்தாலும்.. மீன் பிடிச்சுச் சாப்பிட்டாலும்.. பறக்கின்றன தானே..???! :):lol:

நெடுக்ஸ்,

கொக்கு, வாத்து, தாரா போன்றவை உள்ளூர் குளத்தில் மீன் பிடிப்பவை.

புல்லுக்குளத்தில் மீன் அம்பிடாவிட்டால்.... ஆரியகுளத்துக்கும், அங்கும் இல்லாவிட்டால் சேந்தான்குளத்துக்கும் பறந்து போக வேண்டிய தேவை இருப்பதால் அவைகள் பறப்பதற்குரிய பரிணாம வளர்ச்சியை அடைந்துள்ளன. சில கொக்கு பண்ணைக் கடலுக்குப் போனாலும்.... ஆழம் குறைந்த பகுதியிலேயே... மினக்கெடுவார். கொக்கு ஒற்றைக்காலில் தவமிருந்து ஆழ்கடலில் மீன் பிடிக்கமுடியாது. பென்குயினுக்கு பறக்கவேண்டிய தேவையே இல்லை. அதன் காலடியில் உள்ள, ஆழமான சமுத்திரத்தில் எக்கச்சக்க மீன் கொட்டிக்கிடக்கிறது. :rolleyes:

  • 1 month later...

சபாஷ் சரியான போட்டி.. தொடருங்கள்.. நெடுக்கு?

  • கருத்துக்கள உறவுகள்

பரிணாம வளர்ச்சியில் வந்ததா மனித இனம்..?

சகோதரர்களே

!பரிணாம வளர்ச்சியில் இந்த மனித இனம் தோன்றியதாக மார் தட்டிக்கொள்ளும் நபர்கள் அநேகர் உண்டு டார்வினின் கொள்கை என்பது இந்த பரிணாம வளர்ச்சி ,அதாவது ஓர் உயிரினத்தின் பண்புகள், தலைமுறை தலைமுறையாக மரபணுவழி எடுத்துச் செல்லும் பொழுது காலப்போக்கில் அவ்வுயிரினத்தின் தேவை, சூழல், தன்னேர்ச்சியான நிகழ்வுகள் ஆகியவற்றால் அந்த உயிரினம் தன்னை மாற்றி கொள்கிறது.இத்தகு இயற் கைத் தேர்வு தொடர்ச்சியாகவும், வழி வழியாகவும் நடந்து வருவதால், சூழ்நிலையிலே எவ்வளவுக்கு வேறுபாடுகள் உண்டாகியிருக்குமோ, அந்த அளவுக்கு வேறுபட்ட விலங் கினங்களும் தோன்றிக் கொண்டு வரும் என்று டார்வின் தம் கண்டுபிடிப்பாகக் கூறினார். டார்வினின் பரிணாம வளர்ச்சிக் கொள்கை என்பது இதுதான். குரங்கிலிருந்து படிப் படியாக மனிதன் உருவானான் என்பது அவர்தம் ஆய்வின் முடிவு.படிப்படியாக ஒரு செல் உயிரில் இருந்து வந்தான் என கூறும் இந்த கொள்கை இன்று விஞ்சான ரீதியாக பொய்பிக்கபட்டது ஒரு புறம் இருக்கட்டும் ..நாம் சற்று அறிவு ரீதியாக சிந்திப்போம்.

images%255B10%255D.jpg

முதலில் ஒரு டயர் இருந்தது ,பின்னர் வெறும் டயராக இருந்து பிரயோஜனம் இல்லை என்று ஒரு சைக்கிள் ஆக மாறியது ,பின்னர் சைக்கிள் வேகமாக செல்லவில்லை அதனால் நாம் ஒரு ஸ்கூட்டர் ஆக மாறிடுவோம் என்று ஸ்கூட்டர் ஆக மாறியது ,ஸ்கூட்டர் இல் 2 பேர் தான் உட்கார முடியும் அதனால் நாம் ஒரு காராக மாறிடுவோம் என்று காராக மாறியது .காரால் தண்ணீரில் செல்ல முடியவில்லை அதனால் நாம் ஒரு கப்பலாக மாறிடுவோம் என கப்பல் உருவானது .கப்பலால் பறக்க முடியவில்ல எனவே விமானம் உருவானது என நான் சொன்னால் பயித்தியமா டா நீ என கேட்பீர்கள் ஆம் உற்பத்தியாளன் இல்லாமல் இதெல்லாம் உருவாகாது.இப்போ வாங்க டார்வின் கொள்கைக்கு முதலில் ஒரு செல் உயிர் அப்புறம் தன தேவையை உணர்ந்து அடுத்த பரிமாணம் அப்புறம் பல்லி.ஓணான் .முதலை,etc ,அப்புறம் குரங்கு அப்புறம் மனிதன் அப்புறம் ??? அடுத்த பரிமாணத்தை ஏன் மனிதன் அடையவில்லை ?இன்றும் மனிதன் மனிதனாக தான் இருக்கான் குரங்கு குரங்காத்தான் இருக்கு ..பரிணாமம் முழுமை அடைஞ்சுடுசுனு வீண் வாதம் புரிபவர்கள் மனிதனால் ஒரு மானை போல் ஓட முடியாது ,பறவை போல பறக்க முடியாது ,தண்ணீரில் நடக்க முடியாது ,ஆமை போல் தன்னை காக்க முடியாது இன்னும் எத்தனையோ முடியாமை இருக்கு அடுத்த பரிமாணம் அடையவில்லை ஏன்

டார்வினின் கொள்கை விஞ்ஞான அடிப்படையில்தவறு !!

1.இன்றைய மனிதன் மரபணுச் சோதனையிலும் முன்னேறி விட்டான். ஜீனோம் இரகசியத்தைக் கண்டுபிடித்து விட்டான்.

குரங்கின் மரபணுக்களையும், மனிதனின் மரபணுக்களையும் சோதனை செய்து பார்த்து இரண்டும் ஏறத்தாழ ஒத்திருக்கின்றது என்று நிரூபணம் செய்யப்பட்டிருந்தாலோ, வேறு எந்தப் பிராணியின் மரபணுவும் மனிதனின் மரபணுவுக்கு ஒத்ததாக இல்லை என்று உறுதி செய்யப்பட்டிருந்தாலோ டார்வினின் தத்துவத்தை ஓரளவுக்காவது நம்பலாம். அப்படி எந்த நிரூபணமும் இல்லை.

இன்னும் சொல்வதானால் ஜீனோம் கண்டுபிடிப்புக்குப் பின் முழு மனித குலமும் ஒரு ஆப்பிரிக்கத் தாயிலிருந்து தோன்றியவர்கள் தான் என்பதைக் கண்டுபிடித்து விட்டனர்.முழு மனிதனுக்கும் ஒரே தாய் தான் என்ற கண்டுபிடிப்பு டார்வினின் கொள்கையைச் சவக்குழிக்கு அனுப்பி விட்டது.

2.உருவ அமைப்பில் வேண்டுமானால் குரங்கு, மனிதனுக்கு நெருக்கமான வடிவம் பெற்றிருக்கலாம்.

ஒரு மனிதனின் இரத்தத்தை இன்னொரு மனிதனுக்குச் செலுத்துகின்ற காலத்தில் நாம் வாழ்கிறோம்.

மனித இரத்தங்கள் கிடைக்காத சூழ்நிலையில் வேறு உயிரினங்களின் இரத்தத்தை மனிதனுக்குச் செலுத்த முடியுமா என்று ஆய்வு செய்தனர்.

குரங்கு உட்பட எந்தப் பிராணியின் இரத்தமும் மனிதனின் இரத்தத்துக்கு நெருக்கமானதாக இல்லை.

பன்றியின் இரத்தம் தான் மனிதனின் இரத்தத்துடன் அதிக அளவு பொருந்திப் போகிறது.

3.ஒவ்வொரு பிராணியின் இதயத்தையும் ஆராய்ச்சி செய்த போது குரங்கு உட்பட எந்தப் பிராணியின் இதயமும் மனித உடலுக்குப் பொருந்தாது என்பதைக் கண்டறிந்தனர்.

ஆச்சரியமாக பன்றியின் இதயம், மனிதனின் இதயத்துடன் பெருமளவு ஒத்துப் போவதைக் கண்டுபிடித்துள்ளனர். பன்றியின் இதயத்தை மனிதனுக்குப் பொருத்தும் நிலை ஏற்பட்டாலும், அது சாத்தியமற்றது என கண்டுபிடிக்கப்பட்டாலும் மற்ற பிராணிகளின் இதயத்தை விட பன்றியின் இதயம் மனித இதயத்துக்கு நெருக்கமாக இருப்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.

http://amjat.blogspot.com/2011/08/blog-post.html

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதோர் இணைப்பு கிருபன்! வாங்க முடியுமானால் வாங்கி வாசிக்க முயல்கின்றேன்!

ஒரு பச்சை உங்களுக்கு!

அது சரி! யாழ்ப்பாணத்தில் முன்பு நிரம்ப வெற்றிலை சாப்பிட்டார்கள்!

இப்போது அதிகம் பேர் வெத்திலை சாப்பிட்டதைக் காணவில்லை?

இது அவர்களின் முக அமைப்பைக் காலப் போக்கில் மாற்றி விடுமா? :wub:

புங்கையூரான் எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறீர்கள்? :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதோர் இணைப்பு கிருபன்

  • கருத்துக்கள உறவுகள்

நான் முன்பு நிறைய வெத்திலை போடுவேன் ! இப்ப திருந்திட்டேன் என்று சொல்ல முடியாது, இங்கு வெத்திலை எப்பவாகிலும் தான் கிடைக்குது. :)

பரிணாம வளர்ச்சியில் வந்ததா மனித இனம்..?

சகோதரர்களே

!பரிணாம வளர்ச்சியில் இந்த மனித இனம் தோன்றியதாக மார் தட்டிக்கொள்ளும் நபர்கள் அநேகர் உண்டு டார்வினின் கொள்கை என்பது இந்த பரிணாம வளர்ச்சி ,அதாவது ஓர் உயிரினத்தின் பண்புகள், தலைமுறை தலைமுறையாக மரபணுவழி எடுத்துச் செல்லும் பொழுது காலப்போக்கில் அவ்வுயிரினத்தின் தேவை, சூழல், தன்னேர்ச்சியான நிகழ்வுகள் ஆகியவற்றால் அந்த உயிரினம் தன்னை மாற்றி கொள்கிறது.இத்தகு இயற் கைத் தேர்வு தொடர்ச்சியாகவும், வழி வழியாகவும் நடந்து வருவதால், சூழ்நிலையிலே எவ்வளவுக்கு வேறுபாடுகள் உண்டாகியிருக்குமோ, அந்த அளவுக்கு வேறுபட்ட விலங் கினங்களும் தோன்றிக் கொண்டு வரும் என்று டார்வின் தம் கண்டுபிடிப்பாகக் கூறினார். டார்வினின் பரிணாம வளர்ச்சிக் கொள்கை என்பது இதுதான். குரங்கிலிருந்து படிப் படியாக மனிதன் உருவானான் என்பது அவர்தம் ஆய்வின் முடிவு.படிப்படியாக ஒரு செல் உயிரில் இருந்து வந்தான் என கூறும் இந்த கொள்கை இன்று விஞ்சான ரீதியாக பொய்பிக்கபட்டது ஒரு புறம் இருக்கட்டும் ..நாம் சற்று அறிவு ரீதியாக சிந்திப்போம்.

images%255B10%255D.jpg

முதலில் ஒரு டயர் இருந்தது ,பின்னர் வெறும் டயராக இருந்து பிரயோஜனம் இல்லை என்று ஒரு சைக்கிள் ஆக மாறியது ,பின்னர் சைக்கிள் வேகமாக செல்லவில்லை அதனால் நாம் ஒரு ஸ்கூட்டர் ஆக மாறிடுவோம் என்று ஸ்கூட்டர் ஆக மாறியது ,ஸ்கூட்டர் இல் 2 பேர் தான் உட்கார முடியும் அதனால் நாம் ஒரு காராக மாறிடுவோம் என்று காராக மாறியது .காரால் தண்ணீரில் செல்ல முடியவில்லை அதனால் நாம் ஒரு கப்பலாக மாறிடுவோம் என கப்பல் உருவானது .கப்பலால் பறக்க முடியவில்ல எனவே விமானம் உருவானது என நான் சொன்னால் பயித்தியமா டா நீ என கேட்பீர்கள் ஆம் உற்பத்தியாளன் இல்லாமல் இதெல்லாம் உருவாகாது.இப்போ வாங்க டார்வின் கொள்கைக்கு முதலில் ஒரு செல் உயிர் அப்புறம் தன தேவையை உணர்ந்து அடுத்த பரிமாணம் அப்புறம் பல்லி.ஓணான் .முதலை,etc ,அப்புறம் குரங்கு அப்புறம் மனிதன் அப்புறம் ??? அடுத்த பரிமாணத்தை ஏன் மனிதன் அடையவில்லை ?இன்றும் மனிதன் மனிதனாக தான் இருக்கான் குரங்கு குரங்காத்தான் இருக்கு ..பரிணாமம் முழுமை அடைஞ்சுடுசுனு வீண் வாதம் புரிபவர்கள் மனிதனால் ஒரு மானை போல் ஓட முடியாது ,பறவை போல பறக்க முடியாது ,தண்ணீரில் நடக்க முடியாது ,ஆமை போல் தன்னை காக்க முடியாது இன்னும் எத்தனையோ முடியாமை இருக்கு அடுத்த பரிமாணம் அடையவில்லை ஏன்

டார்வினின் கொள்கை விஞ்ஞான அடிப்படையில்தவறு !!

1.இன்றைய மனிதன் மரபணுச் சோதனையிலும் முன்னேறி விட்டான். ஜீனோம் இரகசியத்தைக் கண்டுபிடித்து விட்டான்.

குரங்கின் மரபணுக்களையும், மனிதனின் மரபணுக்களையும் சோதனை செய்து பார்த்து இரண்டும் ஏறத்தாழ ஒத்திருக்கின்றது என்று நிரூபணம் செய்யப்பட்டிருந்தாலோ, வேறு எந்தப் பிராணியின் மரபணுவும் மனிதனின் மரபணுவுக்கு ஒத்ததாக இல்லை என்று உறுதி செய்யப்பட்டிருந்தாலோ டார்வினின் தத்துவத்தை ஓரளவுக்காவது நம்பலாம். அப்படி எந்த நிரூபணமும் இல்லை.

இன்னும் சொல்வதானால் ஜீனோம் கண்டுபிடிப்புக்குப் பின் முழு மனித குலமும் ஒரு ஆப்பிரிக்கத் தாயிலிருந்து தோன்றியவர்கள் தான் என்பதைக் கண்டுபிடித்து விட்டனர்.முழு மனிதனுக்கும் ஒரே தாய் தான் என்ற கண்டுபிடிப்பு டார்வினின் கொள்கையைச் சவக்குழிக்கு அனுப்பி விட்டது.

2.உருவ அமைப்பில் வேண்டுமானால் குரங்கு, மனிதனுக்கு நெருக்கமான வடிவம் பெற்றிருக்கலாம்.

ஒரு மனிதனின் இரத்தத்தை இன்னொரு மனிதனுக்குச் செலுத்துகின்ற காலத்தில் நாம் வாழ்கிறோம்.

மனித இரத்தங்கள் கிடைக்காத சூழ்நிலையில் வேறு உயிரினங்களின் இரத்தத்தை மனிதனுக்குச் செலுத்த முடியுமா என்று ஆய்வு செய்தனர்.

குரங்கு உட்பட எந்தப் பிராணியின் இரத்தமும் மனிதனின் இரத்தத்துக்கு நெருக்கமானதாக இல்லை.

பன்றியின் இரத்தம் தான் மனிதனின் இரத்தத்துடன் அதிக அளவு பொருந்திப் போகிறது.

3.ஒவ்வொரு பிராணியின் இதயத்தையும் ஆராய்ச்சி செய்த போது குரங்கு உட்பட எந்தப் பிராணியின் இதயமும் மனித உடலுக்குப் பொருந்தாது என்பதைக் கண்டறிந்தனர்.

ஆச்சரியமாக பன்றியின் இதயம், மனிதனின் இதயத்துடன் பெருமளவு ஒத்துப் போவதைக் கண்டுபிடித்துள்ளனர். பன்றியின் இதயத்தை மனிதனுக்குப் பொருத்தும் நிலை ஏற்பட்டாலும், அது சாத்தியமற்றது என கண்டுபிடிக்கப்பட்டாலும் மற்ற பிராணிகளின் இதயத்தை விட பன்றியின் இதயம் மனித இதயத்துக்கு நெருக்கமாக இருப்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.

http://amjat.blogspo.../blog-post.html

அறியாமை , பொய்கள் நிரம்பிய கட்டுரை. :)

கூர்ப்பு DNA இல் தான் நடக்கிறது.

அந்த DNA உருவாக்கும் உயிர் குறிப்பிட்ட சூழலில் பிழைத்து வாழக்கூடிய இயல்புகளைக் கொண்டிருக்குமாயின் அது வெற்றி பெற்ற இனத்தை உருவாக்குகின்றது.

DNA இல் மாற்றம் தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. இந்த மாற்றம் மிகச் சிறியது. அதனால் தான் ஒரு மிருகம் (மனிதன்) இன்னொரு மிருகத்திலிருந்து (மனிதனிலிருந்து) வேறுபட்டுக் காணப்படுகின்றது / காணப்படுகின்றான்.

ஒரு கல பக்ரீரியாவிலிருந்து மனிதன் வரை DNA இன் அளவு / சிக்கல் தன்மை அதிகரித்துக் காணப்படுவது கூர்ப்பிற்கு இன்னுமொரு ஆதாரம்.

புறச்சூழலின் தாக்கம் ஒரு உயிர் அச்சூழலில் வெற்றி பெற்று வாழுமா என்பதை மட்டும் தீர்மானிக்கும். அன்றி அதன் அகச்சூழலில் (DNA) மாற்றத்தை ஏற்படுத்தாது. டார்வின் விட்ட தவறு இதுதான்.

புதிய ஆண்டில் உங்களை மீண்டும் காண்பதில் மகிழ்ச்சி ஈசன். :):icon_idea:

எனக்கும் தான் நெடுக்ஸ். :)

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி இணைப்பிற்கு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.