Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நோர்வே அறிக்கை- உருத்ரகுமாரன் கருத்து

Featured Replies

நோர்வே அறிக்கை- உருத்ரகுமாரன் கருத்து

இலங்கை இனப்பிரச்சினையில் நோர்வே எடுத்த மத்யஸ்த்த முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்ததற்கு இரு தரப்புகளும் மேற்கொண்ட இறுக்கமான நிலைப்பாடே காரணம் என்று நோர்வே அறிக்கை கூறியிருப்பதை, விடுதலைப்புலிகள் அமைப்புக்கு இந்தப் பேச்சுவார்த்தைகளில் சிலவற்றின் போது சட்ட ஆலோசகராக செயல்பட்டவரும், நாடுகடந்த தமிழீழ அரசு என்ற அமைப்பின் பிரதமருமான, விஸ்வநாதன் உருத்திரகுமாரன் நிராகரித்துள்ளார்.

விடுதலைப்புலிகள் இந்தப் பேச்சுவார்த்தைகளில் உளச்சுத்தியுடன் ஈடுபட்டனர். ஆனால் இந்தப் பேச்சுவார்த்தைகள் நடக்கும்போதே, விடுதலைப்புலிகள் அமைப்பை பயங்கவரவாதம் என்ற கண்ணாடியினூடாகவே பார்த்து அவர்கள் இலங்கை அரசிடம் கொண்டிருந்த சமநிலையைக் குலைத்த, சர்வதேச சமூகம்தான் இந்தப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததற்குக் காரணம் என்று உருத்திரகுமாரன் கூறினார்.

விடுதலைப்புலிகள் இந்தப் பேச்சுவார்த்தைகளின் போது, பல விட்டுக்கொடுப்புகளைச் செய்தனர் என்று கூறிய உருத்திரகுமாரன், போர்நிறுத்த மீறல்கள் விஷயத்திலும், இலங்கை அரசே பாரிய மீறல்களில் ஈடுபட்டது என்றார். யுத்த நிறுத்த மீறல்கள் விஷயத்த்தில், இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்பு குழு கூட,மீறல்கள் குறித்த எண்ணிக்கையை மேலோட்டமாகப் பார்க்கக்கூடாது, அதன் கீழுள்ள தாத்பர்யத்தைப் பார்க்கவேண்டும் என்று குறிப்பிட்டிருந்ததாக உருத்திரகுமாரன் கூறினார்.

புலம்பெயர் தமிழர்கள்

இனி இலங்கை இனப்பிரச்சினையில், புலம்பெயர் தமிழர்கள் முன்னணி நிலையை எடுக்காமல், தலைமைத்துவத்தை, இலங்கையில் வசிக்கும் தமிழர்கள் எடுக்கவேண்டும் என்று நோர்வே அமைச்சர் எரிக் சோல்ஹெய்ம் குறிப்பிட்டதைப் பற்றிக் கருத்து தெரிவித்த உருத்திரகுமாரன், "இது போன்று, புலம்பெயர் தமிழர்கள், உள்நாட்டில் களத்தில் வாழும் தமிழர்கள் என்ற பேதம் உண்மையானதல்ல, இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு தங்களது கருத்துக்களை சுதந்திரமாகக் கூறவும் செயல்படவும் தேவையான அரசியல் வெளி, இலங்கையில் இருக்கவில்லை. இலங்கை ஒரு ஜனநாயக ரீதியாகத் தோல்வியடைந்த நாடு என்று இந்த அறிக்கையே கூறுகிறது, எனவே புலம்பெயர்தமிழர்கள், இலங்கைப் பிரச்சினையில் குரல் கொடுப்பதில் தவறில்லை," என்றார் உருத்திரகுமாரன்.

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2011/11/111114_pmrejectsnorwayreport.shtml

  • Replies 85
  • Views 6.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

மிகச்சரியான நேரத்தில் விடுக்கப்பட்ட மிகச்சரியான அறிக்கை

மிகச்சரியான நேரத்தில் விடுக்கப்பட்ட மிகச்சரியான அறிக்கை

உண்மையிலும் உண்மை பாராட்டப்படவேண்டிய வரவேற்கப்படவேண்டிய அறிக்கை.

விடுதலைப்புலிகள் இந்தப் பேச்சுவார்த்தைகளில் உளச்சுத்தியுடன் ஈடுபட்டனர். ஆனால் இந்தப் பேச்சுவார்த்தைகள் நடக்கும்போதே, விடுதலைப்புலிகள் அமைப்பை பயங்கவரவாதம் என்ற கண்ணாடியினூடாகவே பார்த்து அவர்கள் இலங்கை அரசிடம் கொண்டிருந்த சமநிலையைக் குலைத்த, சர்வதேச சமூகம்தான் இந்தப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததற்குக் காரணம் என்று உருத்திரகுமாரன் கூறினார்.

இலங்கையின் இனப்பிரச்சனையில் நோர்வேயின் மத்தியஸ்த முயற்சிகள் குறித்து நோர்வேயினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை குறித்து இன்று திங்கட்கிழமை (14-11-2011) பிபிசி தமிழோசைக்கு வழங்கிய செவ்வி ஒன்றிலேயே நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் இக்கருத்தினை தெரிவித்துள்ளார்.

விடுதலைப்புலிகள் இந்தப் பேச்சுவார்த்தைகளின் போது, பல விட்டுக்கொடுப்புகளைச் செய்தனர் என்று கூறிய பிரதமர்வி.உருத்திரகுமாரன்அவர்கள், போர்நிறுத்த மீறல்கள் விடயத்தில், சிறிலங்கா அரசே பாரிய மீறல்களில் ஈடுபட்டது என கோடிட்டு காட்டினார்.

யுத்த நிறுத்த மீறல்கள் விடயத்த்தில், இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்பு குழு கூட,மீறல்கள் குறித்த எண்ணிக்கையை மேலோட்டமாகப் பார்க்கக்கூடாது, அதன் கீழுள்ள தார்ப்பரி;யத்தைப் பார்க்கவேண்டும் எனவும் பிரதமர்வி.உருத்திரகுமாரன் அவர்கள் எடுத்துரைத்தார்.

இதேவேளை இனி இலங்கை இனப்பிரச்சினையில், புலம்பெயர் தமிழர்கள் முன்னணி நிலையை எடுக்காமல், தலைமைத்துவத்தை,

இலங்கையில் வசிக்கும் தமிழர்கள் எடுக்கவேண்டும் என்று நோர்வே அமைச்சர் எரிக் சோல்ஹெய்ம் குறிப்பிட்டதைப் பற்றிக் கருத்து தெரிவித்த பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள், 'இது போன்று, புலம்பெயர் தமிழர்கள், உள்நாட்டில் களத்தில் வாழும் தமிழர்கள் என்ற பேதம் உண்மையானதல்ல, இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு தங்களது கருத்துக்களை சுதந்திரமாகக் கூறவும் செயல்படவும் தேவையான அரசியல் வெளி, இலங்கையில் இருக்கவில்லை. இலங்கை ஒரு ஜனநாயக ரீதியாகத் தோல்வியடைந்த நாடு என்று இந்த அறிக்கையே கூறுகிறது, எனவே புலம்பெயர்தமிழர்கள், இலங்கைப் பிரச்சினையில் குரல் கொடுப்பதில் தவறில்லை,' என்று உறுபட தெரிவித்தார்.

இலங்கை இனப்பிரச்சனை விவகாரத்தில் நோர்வேயின் தலைமையில் இடம்பெற்ற பேச்சுவார்தைகளில் தமிழீழ விடுதலைப்புலிகளின் பிரதிநிதியாக கலந்து கொண்டதோடு விடுதலைப் புலிகளின் சட்ட ஆலோசகராகவும் வி.உருத்திரகுமான் அவர்கள் இருந்தமை இங்கு குறிப்பிடதக்கது.

http://www.youtube.com/watch?v=Kw9kABMFSCw

செய்தி மூலம் : பிபிசி தமிழோசை

- நாதம் ஊடகசேவை -

post-2864-0-61879700-1321302900_thumb.jp

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச சமூகம்தான் இந்தப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததற்குக் காரணம் என்று உருத்திரகுமாரன் கூறினார்.

wold_army_20090805.jpg

இங்காலை பேச்சுவார்த்தைக்கு மத்தியஸ்தம் அங்காலே சிங்களவருக்கு புலிகளை அழிக்க பயிற்சி.

Edited by nunavilan

சரியான அறிக்கை.

சமாதான பேச்சுவார்த்தை தோற்றதிற்கு காரணம் சொல்கெய்ம் வன்னீயில் ஓற்றர் வேலை செய்து புலிகளைக்காட்டி குடுத்து, பின் அரசாங்கத்தின் கை ஓங்க தொடங்க சமாதானப்பேச்சில் வெல்வோரின் நிபந்த்னைகளை தோற்போர் ஏற்க வேண்டும் என்று வாதாடி ஏமாற்றியதால்த்தான்.

போருக்கு முதல், போர்காலத்தில், போருக்கு பின் வரை எப்போதுமே சிங்கள அரசுகள் தமிழர் தோற்கதக்க சமாதான உடன்படிக்கைகள்தான் எழுதின.

தலைவர் பிரபாகரனும், பாலசிங்கமும் இன்று உயிருடன் இல்லை என்ற துணிவில் தமது பிழைகளை மூடிமறைத்து காட்டுமிராண்டி ஜனநாயக அரச பயங்கரவாதிகளை ஓரளவு பாதுகாக்கும் நோக்குடன் வெளியிடப்பட்ட மதி பிறழ்ந்துள்ள சொல்ஹேமின் கற்பனையில் உருவான அறிக்கை.

பேச்சுவார்த்தை குழம்பியதற்கு முக்கிய காரணங்கள் சில:

(1) மத்தியஸ்தம் வகித்த நாடுகள் இருதரப்பையும் (சிங்கள அரச பயங்கரவாதிகளையும், அடிப்படை உரிமைகளுக்காக போராடிய தமிழர் தரப்பையும்) உரிய முறையில் நடத்தாமை

(2) போர் நிறுத்த ஒப்பந்தத்தின் முக்கிய சரத்தான உயர் பாதுகாப்பு வலயம் பற்றிய சரத்தை அமுல்படுத்த வக்கில்லாதவர்களாக மத்தியஸ்தம் வகித்த நாடுகள் இருந்தமை

(3) தமிழின விரோத ஹிந்திய காட்டுமிராண்டி ஜனநாயகவாதிகளின் சதிவலையில் மத்தியஸ்த நாடுகள் பரிதாபமாக வீழ்ந்தமை.

(4) தமிழின விரோத ஹிந்திய காட்டுமிராண்டி ஜனநாயகவாதிகளின் நயவஞ்சக சதித்திட்டங்கள்

(5) சிங்கள அரச பயங்கரவாதிகளின் வழங்கிய மதுபானங்களையும், பெண்களையும் கடலில் அனுபவித்து ஒருபக்கச் சார்பாக நடந்த கடற்கண்காணிப்புக் குழுவினர்.

(6) சிங்கள அரச பயங்கரவாதிகளின் கவனிப்புக்களில் மயங்கி சிங்கள அரச பயங்கரவாதிகளின் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் மீறல்களை கட்டுப்படுத்த முயலாமை

(7) தமிழனப் படுகொலைகளை காலம் காலமாக செய்த சிங்கள அரச பயங்கரவாதிகளுக்குச் சார்பாக, அபகரிக்கப்பட்ட தமது உரிமைகளுக்குப் போராடிய புலிகளை பயங்கரவாதிகளாக சித்தரிக்க முயன்றமை.

(8) சிங்கள கவனிப்புக்களில் மயங்கிய பிளேக், ஆர்மிற்றேஜ் போன்றவர்கள் தமிழர் தரப்பை புறக்கணித்து உதவி வழங்கும் மாநாட்டை நடத்த முற்பட்டமை.

இவை ஒரு சில முக்கிய காரணங்கள்.

மதி பிறழ்ந்துள்ள சொல்ஹேமின் கற்பனையில் உருவான அறிக்கையில் அனைவரும் அறிந்துள்ள இவை எதையும் காணவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

மேற்க்கு நாடுகளினதும் பிராந்திய வல்லரசுகளதும் உளவ்வுத்துறையினரால் ஈழ மற்றும் புலம் பெயர் தம்ழர்களின் முக்கியஸ்தர்களது எல்லா கருத்துகளதும் மொழி பெயர்க்கப்பட்டு தம் தமது அரசுகளுக்கு வளங்கப் படுகிறது.

நாடுகடந்த அரச அதிகாரிகள் என அடையாளப் படுத்துகிறவர்களது மொழி இராசதந்திர மொழியாக இருக்க வேண்டும். மேற்க்கு நாடுகளின் குற்றச்சாட்டுகள்தொடர்பாக அவர்கள் வைதிருக்கும் ஆதாரம் எங்களிடம் இருக்கும் ஆதாரம் என்பவற்றை கருத்தில் கொண்டே நாம் எதுபற்றிப் பேசுவது எதுபற்றி மெளனம் சாதிப்பது என்பதை முடிவு செய்ய வேண்டும்.

இவற்றைவிட மேற்படி நாடுகளுடன் நாம் வைக்க விரும்பும் உறவு நிலையே அடிப்படையில் எம் மொழியை முடிவு செய்கிறது.

மேற்க்கு நாடுகளின் பிரசைகளாக மேற்க்குச் சமூகங்களின் மத்தியில் வாழ்ந்து அவர்கள் ஆதரவை நாடும் நிலையில் இருக்கும் புலம்பெயர்ந்தோரின் அமைப்புகள் குறிப்பாக நாடுகடந்த அரசு மிகவும் பொறுப்புடன் பேசவும் செயல்ப்படவும் வேண்டும். அல்லாத பட்ச்சத்தில் அத்தகைய அமைப்புகள் கழத்தில் வாழும் மக்களின் தலைமைகள் உருவாக்கும் நல் உறவுகளைக்கூட சிதைத்து விடுகிற ஆபத்துள்ளது. மேதகு உருத்திரகுமாரனின் மொழி சிங்களவரையும் புலம்பெயர்ந்த தமிழ் ஆர்வலர்களையும் இலக்காக வைத்து எழுதப்பட்டதாகத் தெரிகிறது.ஆனால் அறிக்கையின் உண்மையான இலக்கு மேற்க்கு நாடுகளாகும். இத்தகைய ஒரு அறிக்கை அவசியமானால் வேறு ஒரு அமைப்புமூலம் அல்லது அரசில் கீழ் நிலையில் உள்ள ஒருவர்மூலம் வெளியிடப் பட்டிருக்கலாம்.

ஒஸ்லோ பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட இருதரப்பும் இதய சுத்தியுடன் இல்லை என்கிற கருத்து மேற்க்கு நாடுகளின் இராச தந்தரிகளது மத்தியில் பேச்சுவார்த்தை ஆரம்பித்த காலத்திலேயே இருந்தது என்பது மேதகு உருத்திரகுமாரனு தெரியாமல் இருந்திருக்காது. . இதுபற்றி நான் வன்னிக்கு கடிதத்திலும் நேரடியாகவும் பலதடவை அறிவுறுத்தி இருக்கிறேன். பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளும் பிரதி நிதிகளை பிரசாரக் கூட்டங்களில் கலந்து கொள்ள அனுமதிக்காதீர்கள் என வன்னியை வலியுறுத்திக் கேட்டிருருக்கிறேன். ஏனெனில் இதுபற்றி என்னுடன் பேசிய மேற்க்கு நாட்டு இராச தந்திரிகள் சிலர் கூறியவை அதிற்ச்சி தருவதாக இருந்தது. ”காலையில் சமாதானத்தில் தாங்கள் உறுதியாக இருப்பதாக எங்களிடம் கூறும் தமிழ்செல்வன் போன்றவர்கள் மாலையில் புலம்பெயர்ந்த தமிழர்களது கூட்டங்களில் இரகசிய சந்திப்புகளிலும் கடைசி அடிக்கு பணம் கேட்டு ராகெட்ட் வாங்க பணம் கேட்டு பிரச்சாரம் செய்கிறார்கள் என்று அவர்கள் கூறினார்கள். இரகசிய சந்திப்புக்களில் பேசப்படும் விடயங்களைக்கூட அவர்களால் பெறக்கூடியதாக இருந்தது என்றே கருதுகிறேன். இருந்தும் பாலசிங்கம் அண்ணர் தொடர்பாக மட்டுமே அவர்கள் நம்பிக்கை கொண்டிருந்தார்கள். இதுபற்றி விரிவாக வன்னிக்கு தெரிவித்திருக்கிறேன். இதுபற்றி என் நூலில் விரிவாக எழுதுவேன். .

நாடுகடந்த அரசு ஓய்வுபெற்ற தமிழ்/மேற்குலக professional இராசதந்தரிகளின் ஆலோசனைகளை பெற வேண்டிய அவசியம் இருக்கிறது. அவர்கள் ஒரு அரசியல் இயக்கம்போல பேசுவது ஆபத்தானது மட்டுமல்ல எதிர் விழைவுகளை ஏற்ப்படுத்தக் கூடியதாகும்.. .

நாடுகடந்த அரசின் பிரதமர் அரசியல் சட்ட அல்லது சமூக விஞான மொழியில் பேசவேண்டும். புலத்தில் வாழும் நாமும் களத்தில் வாழும் நம் உறவுகளும் ஒன்று என்று கூறமுடியுமா? கழத்தின் தலைமையின் மறைமுக அங்கீகாரத்தைப் பெற்ற குறை நிரப்பியாக (complimentary) மட்டுமே புலம்பெயர்ந்த அரசை சர்வதேச சமூகம் ஏற்றுக் கொள்ளும்.

இத்ஹகைய விடயங்களில் மெளனமே சிறந்த இராச தந்திர மொழியாகும்.

உண்மையில் நம் அனைத்து அமைப்புகளும் கழத்தில் வாழும் தமிழர்களின் உரிமைக்காக போராடும் நம் உறவுகளின் ஆதரவு (solidarity group) அமைப்புகள்தானே. முள்ளிவாய்க்கலின்பின்னர் கழத்தில் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகள் யாராவது புலம் பெயர்ந்து நாடுகடந்த அரசின் தலைமைக் குழுவில் சேர்ந்துகொண்டால் நாடுகடந்த அரசின் அந்தஸ்த்து வேறு தளத்துக்கு மேம்படும். அப்பொழுது கொஞ்சம் அட்டகாசமாகப் பேசலாமே.

Edited by poet

மேதகு உருத்திரகுமாரனின் மொழி சிங்களவரையும் புலம்பெயர்ந்த தமிழ் ஆர்வலர்களையும் இலக்காக வைத்து எழுதப்பட்டதாகத் தெரிகிறது.

குறிப்பாக புலத்துத் தமிழர் மனங்களை கவர்வதை நோக்காக கொண்டு இந்த அறிக்கை வெளிக்கொண்டுவரப்பட்டுள்ளது.

உருத்திராவின் நோக்கம் புலம் பெயர் தமிழரின் தலைமையைக் கைப்பற்றுவதே.

  • கருத்துக்கள உறவுகள்

பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டவர் என்ற ரீதியில் உருத்திரகுமாரனின் அறிக்கை சரியானதே.எல்லோரும் அழிந்து விட்டார்கள் என்று பொய் சொல்லும் சொல்கெய்ம் இற்கு பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டவரே நேரடிச் சாட்சியம் கூறுவது அதிர்ச்சியாகத்தான் இருக்கும்.போர்நிறுத்த உடன் படிக்கையில் இருபகுதியினரும் தங்களை ஆயுத அரசியல் ரீதியாகப் பலப்படுத்துவதை தவிர்க்குமாறு கூறப்படவில்லை. மேலும் கவிஞருக்கு சிறிலங்கா அரசு செய்த போர்நிறுத்த மீறல்களும் போருக்கான தயாரிப்புகளும் கண்ணுக்குத் தெரியவில்லை.புலிகள் மீதே முழுக்குற்றச்சாட்டுக்களையும் வைக்கிறார்.களம் வேறு புலம் வேறு என்று பிரிவினை வேறு பேசுகிறார்.வன்னிக்குக் கடிதம் எழுதினேன் புத்தகம் எழுதிப் பிழைக்கப் போகிறேன் என்கிறார்.இல்லாதவர்கள் வந்து சாட்சி சொல்ல மாட்டார்கள் என்ற தைரியத்தில் வாய்க்கு வந்ததைச் சொல்வது எழுதுவதுமே பலருக்கு இப்பொழுது பிழைப்பாகப் போய்விட்டது.

தமிழர் விடயத்தில் எந்த ஒரு நாடும் விசுவாசமாகச் செயற்படவில்லை. முதலில் அவர்கள் தங்கள் நலனையும் அரசாங்கம் பாதிக்கப்படக்கூடாதென்ற கண்ணோட்டத்திலுமே செயற்படுகிறர்கள். தமிழர் தரப்பு, நோர்வே ஈடுப்டட காலத்தில் மட்டும்தானா பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது? இலங்கை சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்தே தமிழர் பேச்சுவார்த்தை பேச்சுவார்த்தை என்று ஏமாற்றப்பட்டுக்கொண்டே வருகிறார்கள். இன்று உலகமே சேர்ந்துதான் அதாவது சொல்கைம் உட்பட தமிழரை ஏமாற்றிக் கொன்றுள்ளனர். இப்போது சொல்கைம் தான் செய்த தவறில் இருந்து தப்பிக்கப் பார்க்கிறார். ஆரம்பகாலங்களில் சிங்கள தரப்புடன் தமிழர் தரப்பு எத்தனை ஒப்பந்தங்கள் செய்தது. அதன் நிலை எப்படிப்போனதென்பது சொல்கைமுக்கு தெரியாதா? அரசியல் வாதிகள் பதவியில் இருக்கும்போது உண்மையைக் கூறமாட்டார்கள். பதவி விலகி நாற்காலியில் சாய்ந்து ஓய்வெடுக்கும்போதுதான் உண்மையை புத்தமமாக எழுதுவார்கள். மனிதனை உயிருடன் இருக்கும்போது பாதுகாக்க நினைப்பதில்லை. இறந்தபின் ஒப்புக்காக ஏதும் சொல்வார்கள். இலங்கையில் பாரிய இனப்படுகொலை நடந்ததை ஐ.நாடு உட்பட எந்த நாடு நேரடியாகக் கண்டித்து நடவடிக்கை எடுத்தது. தக்க தருணத்தில் தவறுகள் சுட்டிக்காட்டப்பட வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

மேதகு உருத்திரகுமாரனின் மொழி சிங்களவரையும் புலம்பெயர்ந்த தமிழ் ஆர்வலர்களையும் இலக்காக வைத்து எழுதப்பட்டதாகத் தெரிகிறது.

குறிப்பாக புலத்துத் தமிழர் மனங்களை கவர்வதை நோக்காக கொண்டு இந்த அறிக்கை வெளிக்கொண்டுவரப்பட்டுள்ளது.

உருத்திராவின் நோக்கம் புலம் பெயர் தமிழரின் தலைமையைக் கைப்பற்றுவதே.

அவர் உண்மையைச் சொல்வதாகவே தெரிகிறது. இவர் சொல்வதைத் தான் அன்று தமிழ்செல்வன் அண்ணாவும் சொன்னார்கள். எனவே இதில்.. வேறு நோக்கங்கள் இருப்பதாக உணர முடியவில்லை.

எங்களுக்கு ஒரு தலைவர் இருந்தார்.. அவர் இப்ப இல்லை என்றால்.. இன்னொரு தலைமையை பக்குவமாக ஏற்றுக் கொள்ளும் தன்மை இல்லை. எல்லோரும் தலைவர் ஆகனுன்னு நினைச்சா.. அந்த இனம் நிச்சயம் ஆளும் இனமாக இருக்காது. அடிமையாத் தான் கிடக்கும்..! பிரபாகரன் தோன்றும் வரை ஏன் நீங்க அடிமையா கிடந்தீங்க.. அப்புறம் எப்படி தலைநிமிர்ந்தீங்க.. இப்ப ஏன்.. மீண்டும் பழைய அடிமை நிலைக்குப் போய்க்கிட்டு இருக்கீங்கன்னு.. யோசிச்சுப் பாருங்க.. தமிழர்களின் பலவீனம் புரியும்.

இன்னொன்று தமிழர்கள்.. தமிழர்களின் நியாயமான அறிவுரைகளையும் கேட்கமாட்டார்கள். இந்த நிலையில்... பாவம் உருத்திரகுமாரன் அண்ணா..! அவர் சர்வதேசம் கேட்கவாவது உண்மைகளைச் சொல்லத் தான் வேண்டும். தமிழர்கள் கேட்டால் என்ன விட்டால் என்ன. அவர்கள் நினைச்சதை குளப்பபி அடிச்சுக்கிட்டே இருப்பாங்க. ஒரு பிரச்சனையை தீர்க்காம.. அதை வளர்த்து.. சிக்கலாக்கி.. அந்தச் சிக்கலில் மாட்டிக்கிட்டு அழியுறது தான் தமிழர்களின் சிந்தனைப் போக்கு. உது மாறாத வரை தமிழர்களுக்கு விமோசனம் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

மேதகு உருத்திரகுமாரனின் மொழி சிங்களவரையும் புலம்பெயர்ந்த தமிழ் ஆர்வலர்களையும் இலக்காக வைத்து எழுதப்பட்டதாகத் தெரிகிறது.

குறிப்பாக புலத்துத் தமிழர் மனங்களை கவர்வதை நோக்காக கொண்டு இந்த அறிக்கை வெளிக்கொண்டுவரப்பட்டுள்ளது.

உருத்திராவின் நோக்கம் புலம் பெயர் தமிழரின் தலைமையைக் கைப்பற்றுவதே.

உண்மை நிலையை தான் எழுதி உள்ளார்.இதில் சிங்களைவரையும்,புலம் பெயர்ந்த ஆர்வலரையும் கவர உருத்திரகுமாரனுக்கு தற்போது என்ன அவசரம் வந்து விட்டது??

உங்கள் பார்வையில் உண்மை நிலை என யாழ் கள உறுப்பினர்களுக்கு கூறமுடியுமா? .நீங்கள் களத்தில் இறங்கி திடீர் செஞ்செரிகளை அடிப்பதால தான் இந்த கேள்வி உங்களிடம்.

மேதகு உருத்திரகுமாரனின் மொழி சிங்களவரையும் புலம்பெயர்ந்த தமிழ் ஆர்வலர்களையும் இலக்காக வைத்து எழுதப்பட்டதாகத் தெரிகிறது.

குறிப்பாக புலத்துத் தமிழர் மனங்களை கவர்வதை நோக்காக கொண்டு இந்த அறிக்கை வெளிக்கொண்டுவரப்பட்டுள்ளது.

உருத்திராவின் நோக்கம் புலம் பெயர் தமிழரின் தலைமையைக் கைப்பற்றுவதே.

விடுதலைப் புலிகள் மீதான குற்றச்சாட்டுக்கு உருத்திரகுமாரன் பதிலளிக்கிறார்.

தேசியத் தலைவரினால் உருவாக்கப்பட்ட கட்டமைப்பு என்று சொல்லி தங்களின் ஊடகங்களில் அடுத்தவர்களிற்கு துரோக முத்திரை குத்துபவர்களிற்கு தமது கட்டமைப்பை உள்ளடங்கிய அமைப்பு மீதான குற்றச்சாட்டுப்பற்றி கவலையும் இல்லை. அதை மறுத்து அறிக்கை விடவேண்டும் என்ற அரசியல் அறிவும் இல்லை.

ஏன் நோர்வேயின் அமைதி முயற்சிகள் தொடர்பான ஆய்வறிக்கைப் படித்துப் பார்த்திருப்பாரகளா என்பதே சந்தேகம்.

அவர்களிற்கு இருக்கும் ஒரேவேலை புலம்பெயர் நாடுகளிலிருந்து யார் போராட்டத்தை முன்னெடுக்க வாரார்களோ அவர்களைத் துரோகியாக்கி அவர்களை முடக்குவதே.

இதுதான் அவர்கள் இப்ப போராட்டத்திற்குச் செய்யும் ஒரே பங்களிப்பு

  • கருத்துக்கள உறவுகள்

ஆமை சுடுவது மல்லாத்தி என்றுதான் சொல்கிறேன். நாங்கள் ஆமை பிடித்து சுடவேண்டும் என்பதுதான் என் இலக்கு. சிங்களவன் மல்லாத்தாமல்தான் சுட முயல்கிறான் அது உங்கள் கண்ணுக்குத் தெரியவில்லை என்று அடிக்கிற விவாதம்தான் எங்கள் தோல்வியின் பிளையான தருக்கமாய் இருக்கிறது. இடிப்பாரை இல்லா மன்னன் கெடுப்பார் (எதிரி) இல்லாமல் கெடும் என்று வள்ளுவர் சொல்கிறார்.

எங்கள் வழியும் மொழியும் வழகுரைஞர்களின் வழியும் மொழியுமாகவே தொடர்கிறது. இராச தந்திரிகளின் வழியும் மொழியும் அவசியம், ஏனென்றால் சர்வதேசத்தைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றி அவர்களுடன் வளக்காடுவதல்ல அவர்களை வென்றெடுப்பதே எங்கள் தலையாய பணியாக இருக்கிறது. சர்வதேசத்தை வெற்றிபெறும் வழிகளும் மொழியும் இலாததால் நாம் மகிந்தவை விட்டுவிட்டு சர்வதேசத்தை குற்றவாளிக் கூண்டில் ஏற்ற முனைப்புக் காட்டுகிறோம். இந்த அபத்தம் மகிந்தவுக்கு மட்டும்தான் மகிழ்ச்சி தரும். புலம் பெயர்ந்தவர்களுக்கு வந்தா மலை போனா மசிர். களத்தில் நொந்து நூலாகி இருக்கும் களத்து உறவுகளுக்கோ போனா உசிர் என்கிற நிலமை. இதை இன்னும் சிலர் உணரவில்லை என்பது கவலையாய் இருக்கு. .

நான் எழுதுகிற நூல்பற்றிய புலவைரின் கரிசனைக்கு நன்றி. புலவரே என்னைப் பற்றி இயன்றவரை அவதூறு சொல்லலாம்.

என்னுடைய எழுத்து 1000 வருடங்கள் நிலைக்கும். அதற்க்கான பொறுப்புணர்வும் சத்தியமும் என் எழுத்துக்களில் இருக்கு. காலம் என்னை எடுத்துகொள்ளமுன்னம் என் மக்ககள் மீட்ச்சியை பாடிவிடவேண்டும் என்பதுதான் என் ஒரே கவலையாக இருக்கு.

Edited by poet

இன்னும் இரண்டு முன்று வருடங்களில் இவர் யார் என்பதே மறந்துவிடுவோம்.

  • கருத்துக்கள உறவுகள்

நேரமில்லாத நாட்களை எதிர்நோக்கும் நிலையில் எனது போர்கால நினைவுகளை புத்தகமாக எழுதலாம் என இருக்கிறேன். அதனால் அடிக்கடி யாழ்க்கழ நண்பர்களைச் சந்திக்க இயலாமல் போய்விடலாம். நல்வாழ்த்துக்களுடன்

Edited by poet

  • கருத்துக்கள உறவுகள்

கவிஞரின் புத்தகம் விரைவில் வெளிவர வாழ்த்துக்கள்.. கட்டாயம் வாங்கிப் படிப்பேன்!

உருத்திரகுமாரின் அறிக்கை வரவேற்க்கத் தக்கது. நோர்வயின் அறிக்கை அதன் பின்னால் இணையத்தில் தரவேற்றப்பட்ட கலந்துரையாடல் எல்லவற்றிற்க்கும் தகுந்த பதில். நோர்வேயும் அமெரிக்காவும் படுகொலகளுக்கான பழியை சிறிலங்கா அரசு மீதும் இந்திய அரசு மீதும் சீன அரசு மீதும் புலிகள் மீதும் ஏற்றி விட்டு தங்களின் பங்களிப்பை மறைக்க நாடகமாடுகிறார்கள்.இங்கிலாந்த்தில் இருந்து சென்ற தமிழப் பேராசிரியர் இதனை அதே மேடையில் வைத்து அமெரிக்க முன்னள் இராஜாங்க செயலரின் 2009 ஆம் ஆண்டு அறிகையை வாசித்தும் அம்பலப்படுதினார்.

தமக்கான பூகோள நலங்களின் பாற்பட்டு செயற்படுவதே இராசதந்திர மொழி.இங்கே பவ்வியமான எதோ மாய மொழி இருப்பதாக வ சே ஜெயபாலன் அவிச்சுக் கொட்டுகிறார். நோர்வே சொல்கையுமுக்கு கூச தூக்கின நேரம் அவருக்கு வேணும் எண்டா இந்த பவியமான மொழி பதைவியைக் குடுத்திருக்கலாம், அது அவரின் தனிப்பட்ட விடயம்.

சமாதான உடன் படிக்கை கைச்சாத்திட்ட ஒரு வருட்டத்திற்க்குள் சிறிலங்கா அரசை அமெரிக்கா இந்தியா என்பன இராணுவ ரீதியாகப் பலப்படுத்தின.அதே நேரம் புலிகள் மீது நிதிச் சேகரிப்பு கொள்வனவு கடற் போக்குவரத்து என்பனவற்றைத் தடை செய்து, இராணுவச் சமனிலையைக் குலைத்தன.சமாதான ஒப்பந்த்தம் ஏற்பட்டதே சிறிலங்கா அரசு இராணுவ பொருளாதார ரீதியாக பலவீனமான ஒரு நிலையில்.அதனைப் பலப்படுத்த இந்தியா , நோர்வையை முன் வைத்து சமாதானம் என்னும் சதி வலையைப் பின்னியது.

ரோ அதிகாரிகள் , புலிகள் மீதான தடையை நீக்குவோம் என்று கூட வாக்குறிதிகளை அள்ளி வழங்கினர்.ஊடுருவல் , போலியான எத்ரிபார்ப்புக்களை உருவாக்குதல், புலிகளுக்குள் முரண்பாடுகளைத் தோற்றுவித்தல் என்பவை சமாதான காலத்தில் நோர்வே இந்திய அரசுகளின் தயவில் இயங்கிய அரசாரா நிறுவங்களின் மறைமுக வேலைத் திட்டமாக இருந்தது.இதற்க்கு அவர்கள் சில புலன் பெயர்ந்தவர்களை பயன்படுதினார்கள்.சிலர் கடைசிக் காலத்தில் வன்னியில் அடையாளம் காணப்பட்டு வெளியேற்றப்பட்டனர் அல்லது வெளியேறும் படி கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

நேரமில்லாத நாட்களை எதிர்நோக்கும் நிலையில் எனது போர்கால நினைவுகளை புத்தகமாக எழுதலாம் என இருக்கிறேன்.

பொயட் எழுதுங்கள். உண்மைகளை எழுதுங்கள். எதிர்காலச் சந்ததி வாசிக்கட்டும். வாழ்த்துக்கள்.

நான் எழுதுகிற நூல்பற்றிய புலவைரின் கரிசனைக்கு நன்றி. புலவரே என்னைப் பற்றி இயன்றவரை அவதூறு சொல்லலாம்.

என்னுடைய எழுத்து 1000 வருடங்கள் நிலைக்கும். அதற்க்கான பொறுப்புணர்வும் சத்தியமும் என் எழுத்துக்களில்

இடிப்பாரை இல்லா மன்னன் கெடுப்பார் (எதிரி) இல்லாமல் கெடும் என்று வள்ளுவர் சொல்கிறார்.

ஆனால் இடி மட்டும்தான் தொடர்ந்து விழுந்தால் எப்படி மடிதாங்கும்.

ஒன்று மட்டும் எனக்கு விளங்கவில்லை.

உருத்திரா சிலரிடம் பொதுமக்கள் சம்பந்தமான எதையோ பேசினார். அதைத் திரித்து, தங்கள் அக்கிரமங்களை மறைத்து பகிரங்க அறிக்கை விடுகிறார்கள் அவர்கள். உருத்திரா நா.க.அ. சின் பிரதமர். அவரிடம் தலைமையை எதிபார்ப்பவர்களுக்கு சில விளக்கங்கள் சொல்வதற்க்கான பொறுப்புணர்வும், சத்தியமும் அவர் பேச்சுக்களில் இருக்கவேண்டும். எப்படி அவர் தனது மனத்திற்கு உண்மை என்று தெரிந்ததை மூடிமறைப்பதோ அல்லது வெளியே ஒரு பொய்யை சிலரை திருப்தி படுத்த மட்டுமோ சொல்ல முடியும்?

அதுமட்டும்மல்ல உருத்திரா பகிரங்க அறிக்கைவிட்டால் அதில் தப்பிருக்கிறது என்று தாங்கள் பகிரங்க அறிக்கை விடுகிறார்கள். இவர்களுக்கு தெரிகிறது இந்த அறிக்கைகளைத்தான் இந்த மேலைநாட்டார் படிகிறார்கள் என்று. அப்போ இப்படி உருதிராவை கண்டித்து பகிரங்க அற்க்கை விடும் நோக்கம்தான் என்னவாக இருக்க முடியும்? இந்த அறிக்கை உருத்திராவின் பேச்சின் வலிமையை கெடுத்து தங்களை நல்லவர்களாக இந்த வெளிநாட்டவருக்கு காட்டவென்றா யாழில் பகிரங்கமாக விடப்பட்டிருக்கிறது?

டொனமூர் ஒற்றை ஆட்சி முறை இலங்கைக்கு நல்லதா என ஆராய வந்தார். சேர். பொன்.அருணாசலம் போன்றோர் பல வாதங்களை வைத்தார்கள். சேர் பட்டம் வாங்குவதற்கு அருணாசலம் ஒரு ஆமையல்ல, ஒராயிரம் ஆமைகள் மல்லாத்தி சுட்டு கொடுத்திருந்திருப்பார் வெள்ளைகாரனுக்கு. (அவர் முதல் முதல் சிவில் சேவிஸ் பாஸ்பண்ணி வெள்ளைகாரர்களிடம் தமிழருக்கும் உயர் பதவிகள் வழங்க வேண்டும் என்று ஏற்படுத்தியிருந்ததை வெள்ளைகாரகளே பெருமையாகத்தான் எழுதி வைத்துள்ளார்கள்) ஆனால் அவர் சொன்னதை டொனமூர் கணக்கிலெடுக்க மறுத்துவிட்டார். இராமநாதனின் கதையோ வேறு. இவர் பிரிட்டின் போய் சிங்கள்வனுக்காக இலங்கையிலிருந்த வெள்ளைகார அதிகாரிகளை எதிர்த்து மல்லாத்தாமல் ஆமை சுட்டு வெற்றி கணடவர், ஆனால் தமிழனுக்காக இலங்கையிலிருந்து கொண்டு டொனமூர்முன் மல்லாத்தி சுடமுடியவில்லை.

சோபரி வந்தார். பொன்னம்பலம் ஒன்பது மணித்தியாலமாக ஒற்றையாட்சியின் கீழ் தமிழருக்கு என்ன நடக்கும் என்பதை எடுத்துக்காட்டி பேசியிருந்தார். ஆனால் சோபரிக்கமிசனை பகிஸ்கரித்த டி.எஸ். சேனநாயக்காவின் விருப்பம்தான் நிறைவேறியது.

சோல்பரி வந்ததின் பின்னாலான 70 வருடங்கள் எவ்வளவோ விவரங்கள் இலங்கை பிரச்சனை பற்றி வெளியிடப்பட்டு விட்டன. இத்தனை ஆவணங்களையும் படிக்க மாட்டாதவர்களாய், இவ்வளவு தமிழ்த்தலைவர்களையும் ஒதுக்கி வைத்தவர்களாக இருக்கிறார்கள் இந்த சர்வதேச சமாதான விரும்பிகள். ஆனால் இந்த சிறிய அறிக்கைகளில் உருத்திராவின் கருத்து என்ன என்பதை பார்த்து, ஒற்றர்கள் மொழிபெயர்த்துக்கொடுக்க அதை பற்றி உருத்திராவிடம் ஒரு சொல் கேளாமல் பதில் நடவடிக்கைகு தயாராக இருக்கிறாகள். இதன்பின் மூடிய கதவுகளுக்குள் பேசி இனியும் என்ன வரப்போகிறது?

இவ்வளவு தடவைகளிலும் மல்லாத்தித்தான் ஆமை சுட்டார்கள் தமிழ்த்தலைவர்கள்.

அது எப்படி தமிழனுக்கு என்றால் சொல்கெம் கூட மல்லாத்தி ஆமை சுட ஆமை எழுந்து ஒடிவிட்டதாம், ஆனால் சிங்களவனுக்கென்றால் தமிழன் மல்லாத்தாமல் சுட்ட ஆமைகள் கூட எழுந்து ஓடவில்லை?

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் கோட்பாட்டு விவாதத்தை முன் வைத்தால் நாரதர் அதை புரிந்துகொள்ளாமல் அங்கு க்றிப்பிடப்படும் விபரம் detail எதையாவது பிடித்துக்கொண்டு விவாதத்தை திசை திருப்பிவிட்டு தனிப்பட்ட வசை பாடுகிறார். வடகிழக்கு மாகாண மக்களின் அரசியல் சமூக வரலாறு புவியியல் இராணுவ புவியியல் பற்றிய ஆய்வறிவும் நமதும் எதிரியதும் தேசிய சர்வதேசிய பலம் பல்கீனம் பற்றிய பற்றிய தெளிவ்ம் இல்லாமல் கோட்பாடுகளை எங்கிருந்தும் விவாதிக்கலாம் என்று நம்புகிறவர்களோடு பேசுவதில் அர்த்தமில்லை.

இன்று களத்தில் உள்ள மக்கள் நலன்கள் கோருவது எதை? அவர்களது அரசியல் வெளியை political space அகட்டும் மார்க்கம் எது என்கிற சிந்தனை முக்கியம். ஏனேனில் களத்தில் உள்ள மக்களின் அரசியல் செயல்பாடுகளில் இருந்தே நமது ஆட்ச்சி அதிகாரம் உருவாக முடியும்.

இன்றைய நிலையில் சர்வதேசத்தை குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவதா? அல்லது மகிந்த குழுவினரை சர்வதேசஉதவியுடன் போர்க் குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவதா? எது முக்கியம் என்கிறதில் தெளிவு பெறவேணும். அல்லது உள்ளதையும் கெடுத்த கதையாகிவிடும்.

போர்குற்றச் சாட்டுத் தொடர்பாக சர்வதேச ஆதரவை வென்றெடுப்பது சிறு வெற்றிகளைப் பெற்றாலே களத்தில் நம் உறவுகளின் அசியல் வெளியை விரிவுபடுத்த உதவும். திரு உருத்திரகுமாரன் அந்தப்பணியின் அவசரத் தன்மையையும் முன்னுரிமைதனையும் உணர்ந்து செயல்பட வேண்டும் என்பது மட்டுமே என் கவலையாகும். யாழ்க் களத்தில் வடக்கு கிழக்கு மாகாண மண்ணையும் மக்களையும் பற்றிய ஆய்வறிவும் பிரக்ஞையும் இல்லாமல் பேசும் ஒரு சிலர் மத்தியில் என்னுடைய நேரத்தை வீணாகுகிறேனோ என்று அஞ்சுகிறேன்.

Edited by poet

  • கருத்துக்கள உறவுகள்

மேற்க்கு நாடுகளினதும் பிராந்திய வல்லரசுகளதும் உளவ்வுத்துறையினரால் ஈழ மற்றும் புலம் பெயர் தம்ழர்களின் முக்கியஸ்தர்களது எல்லா கருத்துகளதும் மொழி பெயர்க்கப்பட்டு தம் தமது அரசுகளுக்கு வளங்கப் படுகிறது.

நாடுகடந்த அரச அதிகாரிகள் என அடையாளப் படுத்துகிறவர்களது மொழி இராசதந்திர மொழியாக இருக்க வேண்டும். மேற்க்கு நாடுகளின் குற்றச்சாட்டுகள்தொடர்பாக அவர்கள் வைதிருக்கும் ஆதாரம் எங்களிடம் இருக்கும் ஆதாரம் என்பவற்றை கருத்தில் கொண்டே நாம் எதுபற்றிப் பேசுவது எதுபற்றி மெளனம் சாதிப்பது என்பதை முடிவு செய்ய வேண்டும்.

இவற்றைவிட மேற்படி நாடுகளுடன் நாம் வைக்க விரும்பும் உறவு நிலையே அடிப்படையில் எம் மொழியை முடிவு செய்கிறது.

மேற்க்கு நாடுகளின் பிரசைகளாக மேற்க்குச் சமூகங்களின் மத்தியில் வாழ்ந்து அவர்கள் ஆதரவை நாடும் நிலையில் இருக்கும் புலம்பெயர்ந்தோரின் அமைப்புகள் குறிப்பாக நாடுகடந்த அரசு மிகவும் பொறுப்புடன் பேசவும் செயல்ப்படவும் வேண்டும். அல்லாத பட்ச்சத்தில் அத்தகைய அமைப்புகள் கழத்தில் வாழும் மக்களின் தலைமைகள் உருவாக்கும் நல் உறவுகளைக்கூட சிதைத்து விடுகிற ஆபத்துள்ளது. மேதகு உருத்திரகுமாரனின் மொழி சிங்களவரையும் புலம்பெயர்ந்த தமிழ் ஆர்வலர்களையும் இலக்காக வைத்து எழுதப்பட்டதாகத் தெரிகிறது.ஆனால் அறிக்கையின் உண்மையான இலக்கு மேற்க்கு நாடுகளாகும். இத்தகைய ஒரு அறிக்கை அவசியமானால் வேறு ஒரு அமைப்புமூலம் அல்லது அரசில் கீழ் நிலையில் உள்ள ஒருவர்மூலம் வெளியிடப் பட்டிருக்கலாம்.

ஒஸ்லோ பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட இருதரப்பும் இதய சுத்தியுடன் இல்லை என்கிற கருத்து மேற்க்கு நாடுகளின் இராச தந்தரிகளது மத்தியில் பேச்சுவார்த்தை ஆரம்பித்த காலத்திலேயே இருந்தது என்பது மேதகு உருத்திரகுமாரனு தெரியாமல் இருந்திருக்காது. . இதுபற்றி நான் வன்னிக்கு கடிதத்திலும் நேரடியாகவும் பலதடவை அறிவுறுத்தி இருக்கிறேன். பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளும் பிரதி நிதிகளை பிரசாரக் கூட்டங்களில் கலந்து கொள்ள அனுமதிக்காதீர்கள் என வன்னியை வலியுறுத்திக் கேட்டிருருக்கிறேன். ஏனெனில் இதுபற்றி என்னுடன் பேசிய மேற்க்கு நாட்டு இராச தந்திரிகள் சிலர் கூறியவை அதிற்ச்சி தருவதாக இருந்தது. ”காலையில் சமாதானத்தில் தாங்கள் உறுதியாக இருப்பதாக எங்களிடம் கூறும் தமிழ்செல்வன் போன்றவர்கள் மாலையில் புலம்பெயர்ந்த தமிழர்களது கூட்டங்களில் இரகசிய சந்திப்புகளிலும் கடைசி அடிக்கு பணம் கேட்டு ராகெட்ட் வாங்க பணம் கேட்டு பிரச்சாரம் செய்கிறார்கள் என்று அவர்கள் கூறினார்கள். இரகசிய சந்திப்புக்களில் பேசப்படும் விடயங்களைக்கூட அவர்களால் பெறக்கூடியதாக இருந்தது என்றே கருதுகிறேன். இருந்தும் பாலசிங்கம் அண்ணர் தொடர்பாக மட்டுமே அவர்கள் நம்பிக்கை கொண்டிருந்தார்கள். இதுபற்றி விரிவாக வன்னிக்கு தெரிவித்திருக்கிறேன். இதுபற்றி என் நூலில் விரிவாக எழுதுவேன். .

நாடுகடந்த அரசு ஓய்வுபெற்ற தமிழ்/மேற்குலக professional இராசதந்தரிகளின் ஆலோசனைகளை பெற வேண்டிய அவசியம் இருக்கிறது. அவர்கள் ஒரு அரசியல் இயக்கம்போல பேசுவது ஆபத்தானது மட்டுமல்ல எதிர் விழைவுகளை ஏற்ப்படுத்தக் கூடியதாகும்.. .

நாடுகடந்த அரசின் பிரதமர் அரசியல் சட்ட அல்லது சமூக விஞான மொழியில் பேசவேண்டும். புலத்தில் வாழும் நாமும் களத்தில் வாழும் நம் உறவுகளும் ஒன்று என்று கூறமுடியுமா? கழத்தின் தலைமையின் மறைமுக அங்கீகாரத்தைப் பெற்ற குறை நிரப்பியாக (complimentary) மட்டுமே புலம்பெயர்ந்த அரசை சர்வதேச சமூகம் ஏற்றுக் கொள்ளும்.

இத்ஹகைய விடயங்களில் மெளனமே சிறந்த இராச தந்திர மொழியாகும்.

உண்மையில் நம் அனைத்து அமைப்புகளும் கழத்தில் வாழும் தமிழர்களின் உரிமைக்காக போராடும் நம் உறவுகளின் ஆதரவு (solidarity group) அமைப்புகள்தானே. முள்ளிவாய்க்கலின்பின்னர் கழத்தில் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகள் யாராவது புலம் பெயர்ந்து நாடுகடந்த அரசின் தலைமைக் குழுவில் சேர்ந்துகொண்டால் நாடுகடந்த அரசின் அந்தஸ்த்து வேறு தளத்துக்கு மேம்படும். அப்பொழுது கொஞ்சம் அட்டகாசமாகப் பேசலாமே.

உங்களுடைய கருத்துக்கள் உண்மை நிலையை கொண்டிருக்கும் அதே நேரம்............

தமிழ் மேதைகளை நா.அ உள்வாங்க வேண்டும் என்ற நிபந்தனை கொஞ்சம் பிற்போக்கானது.

அது உண்மையிலேயே தேவையான ஒன்றாக இருந்தாலும் நடைமுறைக்கு சாத்தியம் இல்லாத ஒன்று. தமிழன் கொஞ்சம் படித்துவிட்டால் மற்றவரை மதிப்பதென்பது அரிதாகவே உள்ளது படித்த தமிழர் நாட்டுக்காக ஏதாவது செய்தார்களா? என்றால் அதை எம்மால் விரல் விட்டு எண்ண கூடியதாக இருக்கிறது. நாடுக்காக அல்லது தான் வாழும் உலகிற்கு எதாவது செய்யவேண்டும் என்ற எண்ணத்தில் படித்தவன்தான் ஏதாவது செய்கிறான். மற்றவன் தான் படித்தவன் படித்தவன் என்பதை பறைசாற்றுகிரானே தவிரே ஏதும் செய்வதில்லை.

மற்று கருத்து மாணிக்கங்கள் கூறும் பொய்போல புலிகள் கருத்து சுதந்திரம் கொடுக்கவில்லை என்ற பொய்களை பேசி இந்த படித்த மேதைகளை மேதாவிகளாக கட்டமுடியுமே தவிரே உண்மை என்பது வெறுமையானதே.

இவர்களை நா. அ விற்கு கூட்டிவந்தால் மறுநாள் உருத்திராவின் பதவி அவர்களுக்கு வேண்டும். அல்லது அதில் ஏதாவது ஒரு குளறுபடி செய்தே தீருவார்கள் இது காலம் தந்த பாடம். உரித்திடாவிடம் உள்ள பதவி என்பது அவரது கடின உழைப்பால் அவருக்கு வந்தது என்பது இந்த காடேரிகளுக்கு விளங்காது.

இதய சுத்தியுடன் இருப்பவனுக்கு புலி என்ன செய்தது என்பது பொருட்டல்ல நான் எனது நாட்டுக்கு என்ன செய்தேன் என்ற கேள்வியுடந்தான் இருக்கிறான். அவன் தனது உழைப்பை எதோ ஒரு வகையில் நாட்டுக்கு கொடுக்கிறான்.

இந்த புத்திஜீவி விவகாரம் நா அ வை குழப்பியடிக்கும் ஒன்றாகவே அமையும். பத்து தமிழனை ஒன்று கூட்டி இதுவரையில் எதையும் செய்ய முயற்சி செய்யாதவர்களே இப்படி பகல் கனவு காண்கிறார்கள். பத்து தமிழனை ஒன்று சேர்த்தவர்கள் தெளிவாக இருக்கிறார்கள் இது வேலைக்கு ஆகாது என்பதுதான் கசப்பான நிஜம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆமை சுடுவது மல்லாத்தி என்றுதான் சொல்கிறேன். நாங்கள் ஆமை பிடித்து சுடவேண்டும் என்பதுதான் என் இலக்கு. சிங்களவன் மல்லாத்தாமல்தான் சுட முயல்கிறான் அது உங்கள் கண்ணுக்குத் தெரியவில்லை என்று அடிக்கிற விவாதம்தான் எங்கள் தோல்வியின் பிளையான தருக்கமாய் இருக்கிறது. இடிப்பாரை இல்லா மன்னன் கெடுப்பார் (எதிரி) இல்லாமல் கெடும் என்று வள்ளுவர் சொல்கிறார்.

எங்கள் வழியும் மொழியும் வழகுரைஞர்களின் வழியும் மொழியுமாகவே தொடர்கிறது. இராச தந்திரிகளின் வழியும் மொழியும் அவசியம், ஏனென்றால் சர்வதேசத்தைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றி அவர்களுடன் வளக்காடுவதல்ல அவர்களை வென்றெடுப்பதே எங்கள் தலையாய பணியாக இருக்கிறது. சர்வதேசத்தை வெற்றிபெறும் வழிகளும் மொழியும் இலாததால் நாம் மகிந்தவை விட்டுவிட்டு சர்வதேசத்தை குற்றவாளிக் கூண்டில் ஏற்ற முனைப்புக் காட்டுகிறோம். இந்த அபத்தம் மகிந்தவுக்கு மட்டும்தான் மகிழ்ச்சி தரும். புலம் பெயர்ந்தவர்களுக்கு வந்தா மலை போனா மசிர். களத்தில் நொந்து நூலாகி இருக்கும் களத்து உறவுகளுக்கோ போனா உசிர் என்கிற நிலமை. இதை இன்னும் சிலர் உணரவில்லை என்பது கவலையாய் இருக்கு. .

நான் எழுதுகிற நூல்பற்றிய புலவைரின் கரிசனைக்கு நன்றி. புலவரே என்னைப் பற்றி இயன்றவரை அவதூறு சொல்லலாம்.

என்னுடைய எழுத்து 1000 வருடங்கள் நிலைக்கும். அதற்க்கான பொறுப்புணர்வும் சத்தியமும் என் எழுத்துக்களில் இருக்கு. காலம் என்னை எடுத்துகொள்ளமுன்னம் என் மக்ககள் மீட்ச்சியை பாடிவிடவேண்டும் என்பதுதான் என் ஒரே கவலையாக இருக்கு.

நாம் இன்னொருமுறை சர்வதேசத்துடன் பேச முற்படும்போது.....

முன்பு சர்வதேசம் இளைத்த பிழைகளை சுட்டிகாட்டவேண்டிய அவசியம் உள்ளது அல்லவா?

இவர்களிடம் உண்மையான தீர்வை முன்வைக்கும் எண்ணம் இல்லாது இருக்கும்போது.........

குட்ட குட்ட குனிந்து கொண்டே போவதில் என்ன பயன் இருக்கும் என நம்புகின்றீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் கோட்பாட்டு விவாதத்தை முன் வைத்தால் நாரதர் அதை புரிந்துகொள்ளாமல் அங்கு க்றிப்பிடப்படும் விபரங்களை எடுத்து விவாதத்தை திசை திருப்பிவிட்டு தனிப்பட்ட வசை பாடுகிறார். வடகிழக்கு மாகாண மக்களின் அரசியல் சமூக வரலாறு புவியியல் இராணுவ புவியியல் பற்றிய ஆய்வறிவும் நமதும் எதிரியதும் தேசிய சர்வதேசிய பலம் பல்கீனம் பற்றிய பற்றிய தெளிவ்ம் இல்லாமல் கொட்பாடுகளை எங்கிருந்தும் விவாதிக்கலாம் என்று நம்புகிறவர்களோடு பேசுவதில் அர்த்தமில்லை.

இன்று களத்தில் உள்ள மக்கள் சர்வதேசத்தை குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவதையல்ல ம்கிந்த குழுவினரை சர்வதேசஉதவியுடன் போர்க் குற்றவாளிக் கூண்டில் ஏற்றும் முயற்சியில் உருவாகும் அரசியல் வெளியையே தெரிவு செய்வார்கள். உருத்திரகுமாரன் அந்தப்பணியை செய்யவேண்டும் என்பதுதான் இங்கே நான் முன்வைக்கும் விவாதம். யாழ்க் களத்தில் என்னுடைய நேரத்தை வீணாகுகிறேனோ என்று அஞ்சுகிறேன்.

உங்களுடைய நேரம் பொன்னானது ............ அதை மண்ணாக்க கூடாது.

வடக்கு கிழக்கு இராணுவ கட்டமைப்பு......

அரசியல் வடிவாக்கம்..........

தேசிய நிலவாக்கம்...........

எதுவும் உங்கள் கருத்திலும் இல்லையே? அதெப்படி அதற்கு பதில் எழுதுபவரின் கருத்தில் இருக்கும்?

உங்களுடைய கருத்து உரித்திராவின் அறிக்கைபற்றியது.....

அவர் கூறிய விடயம் தேவையில்லை என்பது உங்கள் வாதம்.

இல்லை அது தேவை என்பது நாரதர் உடைய வாதம்.

இதில் வடக்கு கிழக்கு இராணுவ கட்டமைப்பு ? புது கல்லை உருட்டி விடுறீங்கள்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.