Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலவ(ஈழ)ம் காத்தவர்கள்

Featured Replies

சாத்திரியின் பதிலுக்கு நன்றி.

முதல் தரம் வாசிக்கையில் கதையின் உள்ளீட்டம் மனதை குத்தியதால், சாத்திரியாரின் எழுத்து வேறு ஒரு பரிமாணத்தைத் தொட்டிருப்பதை கவனிக்கவில்லை.

நாரதரின் கருத்துத்தான் எனதும். தோல்விக்கான காரணிகள் தெரிந்தால்தான் எதிர்காலத்திலேயாவது அவற்றைத் தவிர்க்கலாம்.

ஆபிரிக்க நாடொன்றிலிருந்து சிறிலங்காவிற்கான ஆயுதக் கப்பல் ஒன்றை புலிகள் கடத்திச் சென்றதிலிருந்து (1998?) , இராணுவ ஆய்வாளர் இக்பால் அத்தாஸ் புலிகளுக்கான கடல்வழி ஆயுத வழங்கலை தடுக்க வேண்டியதன அவசியத்தை தொடர்ச்சியாக வலியுறுத்திக் கொண்டிருந்தார்.

ஆயுத வழங்களில் செய்த நெளிவு சுளிவுகளை சர்வதேச அரசியலிலும் செய்யாதது தோல்விக்கான காரணங்களில் ஒன்று என நினைக்கிறேன்.

சாத்திரி குசும்பு தாங்க முடியல...கழுத்தில் கட்டுவது பட்டி....மாத்திவிடுங்கள்.

தமிழில் புதிய முயற்சி, நன்றாக இருந்தது. விட்டுவிடுங்களேன். :lol:

Edited by தப்பிலி

  • Replies 148
  • Views 17k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சாத்து உங்கள் வழமையான கதை சொல்லும் பாணியிலிருந்து ரொம்ப விலகி அற்புதமாக சொல்லி உள்ளீர்கள்.உரு படம் பாத்த மாதிரி இருந்திச்சு்ஆனால் முடிவின் தாக்கத்திலிருந்து இன்னும் நான் முழுசா விடுபடவில்லை.பி.கு -உங்கள் நகைச்சுவை எழுத்தையும் தொடரவும். :)

சாத்ஸ் அண்ணோய்! கதை சூப்பர். :) 8 இன்னும் கொஞ்சம் ஆழமாப் போயிருந்தால்.... பதின்மக் காலத்து "ஒளித்துவைத்த புத்தகக் கதைகளும்" ஞாபகத்துக்கு வந்திருக்கும். :wub::lol: பரவாயில்லை, அளவோடு நிப்பாட்டிட்டிங்கள். :D

அதுக்காகச் சொல்லவில்லை.

உண்மையிலும் இந்தக் கதை மிகவும் அருமை. அதைவிட முற்றிலும் (98%) உண்மைத்தன்மை உடையதென பல வகையிலும் ஈழமக்கள் அனைவருக்கும் தெரியும்.

அண்ணை மறைக்காமல் சொல்லுங்கோ...... அந்த "ரிசி" என்பவர் யார்? :lol:

சூப்பர் : மிக அருமை :D

Edited by கவிதை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணை மறைக்காமல் சொல்லுங்கோ...... அந்த "ரிசி" என்பவர் யார்?

அது றிசி.. அதை திருப்பிப் போடுங்கோ..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாத் அதையும் எழுதவும், நடந்தவை பற்றி அறிய ஆவல். இந்தப் பையன் நாம் சொல்லி எழுதுவானா :rolleyes:

நண்பர் ஒருவரும் தொடர்பு கொண்டு இந்த கதையை முழுதுமாக விபரங்களோடு நாவலாக எழுதும்படி கேட்டிருந்தார். அந்தளவு நேரம் எனக்கு கிடைப்பது கஸ்ரம் பாக்கலாம்

சாத்திரியின் வேண்டுகோளுக்கிணங்க

நான் இக்கதையை வாசிக்கவில்லை என்பதை இத்தால் உறுதிப்படுத்துகின்றேன்.

ஏனெனில் நானொரு விசுவாசி.

நன்றி.

அச்சாப்பிள்ளை அப்படியே கண்ணைமூடிக்கொண்டே இருக்கவேணும் ^_^

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரி பதிலுக்கு நன்றி,

அளப்பரிய தியாகங்கள், சாதனைகள் எல்லாம் செய்தவர்கள் சில்லறைத் தனமாக அழிக்கப்பட்டத்தை நம்ப முடியாமல் இருக்கிறது.

இயக்கம் அழிக்கப்பட்டதற்க்கு பல காரணக்கள் கூறப்பட்டாலும், சர்வதேச வழங்கல் ஊடுருவப்பட்டு அழிக்கப் பட்டதே பிரதானமான காரணி.இதன் பின்னாலையே ஒரு சர்வதேசச் சதி இருப்பதாக நான் கருதுகிறேன்.

ஒவ்வொரு வருக்குத் தெரிந்ததை எழுதுவதன் மூலமே உண்மையைக் கண்டறிய முடியும்.

முக்கியமாக அமெரிக்க உளவு அமைப்பும் ரோவும் இதில் முக்கிய பங்காற்றி உள்ளன.இவர்களுக்கு உடந்தையாக இருந்தவர்கள் தற்போதும் எம் மத்தியில் உலாவலாம் அரசியல் செய்யலாம்.இவர்களை அடையாளம் காண எங்களுக்கு உண்மையில் என்ன நடந்த்து என்பது தெரிய வேண்டும்.

புலிகளின் சர்வதேச வலையமைப்பை உடைப்பதில் இந்தியா இறுதியாகவே பங்கெடுத்திருந்தது. ஆனால் பல வருடங்களாகவே அமெரிக்காவும் .கனடாவும் இதற்கான முயற்சியில் இறங்கியிருந்தன.

ஜரோப்பவும் அதற்கு உதவியது.இந்தியா விடம் இதுபற்றிய நீண்டகால தயாரிப்பு எதுவும் இருந்திருக்கவில்லை. அது இலங்கையரசை பலப்படுத்துவதிலேயே குறியாக இருந்தது

அதற்கு புலிகள் 2001 ல் கொண்டுவந்த மாற்றங்களும் வசதியாய் போய்விட்டது. புதியவர்களின் அனுபவமின்மையை அவர்கள் தங்களிற்கான சாதமாக பயன்படுத்திவிட்டனர்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நேற்று இரவு வாசித்தேன் .உண்மையில் ஜேம்ஸ் பொன்ட் படம் பார்ப்பது போலிருந்தது .அவர்தான் போகுமிடமெல்லாம் ஒவ்வொரு ஆளை மடக்கிவிடுவார் .

இருப்பினும் இது எங்கள் போராட்டம் சார்ந்தது என்று பார்க்கையில் விரக்திதான் மிஞ்சுகின்றது .

ரோகனும் ,ரிசியும் யார் ?

ஜேம்ஸ்பொண்ட் படங்களைவிட திரில்லான விடயங்களை இவர்கள் செய்திருக்கிறார்கள். உதாரணம் இலங்கையரசு வாங்கிய ஆயுதத்தை புலிகளிடம் கொண்டுசென்று சேர்த்தது. அதுபற்றி நேரம் கிடைக்கும் போது ஒரு பதிவு; போடுகிறேன்.

றோகனும் றிசியும் நல்ல நண்பர்கள் :wub:

  • கருத்துக்கள உறவுகள்

நேற்றே வாசிக்க நினைத்தேன் முடியவில்லை.

கதை முடியும் வரை விடாமல் வாசிக்க வைத்தது.

நல்லதொரு எழுத்தாக்கம். நிச்சயமாக நாவலாக வெளியிட்டால்

நிறைய வரவேற்புக் கிடைக்கும்.

கஞ்சாவைப்பற்றி எழுதாவிட்டாலும் விறுவிறுப்புக் குறைந்திருக்காது சாத்திரி அண்ணா.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை சம்பவங்கள் கதையை விட, திரை படத்தினை விட திகிலாக இருக்கும் ஆனால் அதை சிறிதும் குன்றாமல் எழுத்து வடிவில் கொண்டுவருவதுதான் மிகச்சாமர்த்தியமாக விருக்கும் அது எல்லாருக்கும் கை வருவதில்லை அரிதாக சிலருக்கு கை வந்து விடுகிறது. பொறாமையாக இருக்கிறது எப்படி இப்படி எல்லாம் எழுதுகின்றார்கள் என்று.

  • கருத்துக்கள உறவுகள்

சோழர்களைப் பற்றிப் பெருமை பேசிப் புளித்துப் போன தமிழர்களுக்கு புதியபாணியில் உண்மைகளை எழுதுவதும் பழங்கதைகள் பேசிப் பெருமூச்சுவிட உதவும்தான்.

விசுகு அண்ணா போன்றவர்களின் அளவுக்கு மிஞ்சிய விசுவாசம் பற்றியும் ஒரு உண்மைக் கதை எழுதினால் நல்லது!

  • கருத்துக்கள உறவுகள்

இம்முறை சாத்திரி கதையை அசத்தீட்டீங்கள்.

இந்தக்கதையில் வாழ்ந்த றோகன் போன்ற பலரது வரலாறுகள் எழுதப்படாமல் மௌனமாக மௌனிக்கப்பட்டுவிட்டது. தங்களை ஒறுத்து வெறுத்து வாழ்ந்த பல வரலாறுகள் இன்று !!!!!!!!!!!!!!!!

மீண்டும் வருவேனென்றும் ஒரு நாள் சந்திப்போமென்றும் போன அந்தத்தோழனுக்காக காலம் தாழ்த்திய கண்ணீர் வணக்கங்கள்.

அது றிசி.. அதை திருப்பிப் போடுங்கோ..

காவடி கெட்டிக்காரன்தான். :lol::icon_idea:

அருமையான உரை நடையில் எழுதியிருக்கிறீர்கள்.....

கள உறுப்பினர் சயந்தன் அண்ணா ''ஆறாவடு'' என்ற நாவலை நாவலை வெளியிட்டிருக்கிறார்....... அதே பாணியில் நீங்களும் நாவலொன்றை எழுதலாமே..... :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாத்திரியின் வேண்டுகோளுக்கிணங்க

நான் இக்கதையை வாசிக்கவில்லை என்பதை இத்தால் உறுதிப்படுத்துகின்றேன்.

ஏனெனில் நானொரு விசுவாசி.

நன்றி.

ஏன் விசுகண்ணா நீங்கள் விரதமா ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சூப்பர் சாத்திரி ...எனக்கு இந்த கதையின் உள்ளடக்கத்தில் எனக்கு அக்கறையும் இல்லை ..ஆர்வமும் இல்லை ஆனால் .இந்த கதை கொண்டு போன விதம் நன்றாக இருக்கிறது..உங்களையும் உந்த சர்வதேச தர எழுத்தாளர் போட்டியில் ஈடுபட வைத்து காப்டன் பதவி தரப்போறாங்கள் ,,பார்த்து சாத்திரியார் :lol:

நாகேஸ் உந்த பதவியளை யாருமே இப்ப கணக்கிலை எடுக்கிறேல்லை. அப்பிடி பாத்தால் நான் எப்பவே லெப்.கேணல் :lol: :lol: கருத்திற்கு நன்றி

சாத்திரி, அற்புதமாக எழுதியுள்ளீர்கள்.

நிச்சயமாக நீங்கள் இவை அனைத்தையும் உள்ளடக்கி ஒரு நாவல் எழுதவேண்டும்.

Edited by Innumoruvan

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரி, அற்புதமாக எழுதியுள்ளீர்கள்.

நிச்சயமாக நீங்கள் இவை அனைத்தையும் உள்ளடக்கி ஒரு நாவல் எழுதவேண்டும்.

விளங்கினதோ சாத்திரி உதைத்தான் வருசககலக்கா சொல்றம் நாவலாக எழுதுங்கோண்டு கேக்கிறியளில்லை. ஒரு நாவலுக்கான வேலையை துவங்குங்கோ. பலருக்கு தெரியாத வரலாறு எழுதப்படாம் இருக்கிறது. பிள்ளையார் சுழியை போடுங்கோ.

நாவலாக எழுதுவதே சிறந்தது.அத்தோடு உண்மைகளை உண்மைகளாக எழுதவும்.

நேரம் எடுத்து ஆறுதலாக எழுதலாம் சயந்த்தன் எழுதின மாதிரி.வரும் காலத்திற்க்கு இவை அவசியம் ஆனது.

நாங்கள் எழுதாவிட்டால் பலர் புனைவுகளை வரலாறாக எழுதுவார்கள்.வருங்க்காலச் சந்த்ததி உண்மைகளைத் தெரிந்து கொள்ள வேண்டும் அவர்களுக்கு உண்மை தெரிந்த்தால் தான் நண்பர்களையும் எத்ரிகளையும் அறிவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோருமாக சேர்ந்து உசுப்பேற்றி சாஸ்திரியை நடு றோட்டில நிறுத்திற பிளான் போல :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த கதைக்கு அதிகமானவர்கள் கருத்திட்டிருப்பதால் கவிதை .வசி.அர்ஜீன்.காவடி.சுபேஸ் அலை .ரதி. வாத்தியார் மற்றும் அனைவரிற்கும் நன்றிகள். பெரும்பாலும் கதைகளிற்கு கருத்து தெரிவிக்காத சுகன் மற்றும் இன்னுமொருவன் ஆகியோரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்திருந்தார்கள் நன்றிகள். எமது போராட்டத்தின் தோல்வியின் பின்னர் நாவல் எழுதும் ஆசை எனக்கு இருந்ததில்லை

சேகரித்து வைத்திருந்த குறிப்புக்களைக்கூட விரக்தியில் அழித்துவிட்டிருந்தேன் நினைவில் மட்டும் நிற்பவைகளை வைத்து முயற்சிக்கிறேன்.

Edited by sathiri

  • கருத்துக்கள உறவுகள்

கதை வாசிக்க நெஞ்சு கனக்கிறது.விசுகு மாதிரி வாசிக்காமலே விட்டிருக்கலாமோ என்று தோன்றுகிறது.

முள்ளிவாய்க்காலுக்கு முன்னர் சாத்திரி எழுதுவதற்கும்

முள்ளிவாய்க்காலுக்கு பின்னர் சாத்திர் எழுதுவதற்கும்

நிறையவே வேறுபாடு.

இந்த கதைக்கு அதிகமானவர்கள் கருத்திட்டிருப்பதால் கவிதை .வசி.அர்ஜீன்.காவடி.சுபேஸ் அலை .ரதி. வாத்தியார் மற்றும் அனைவரிற்கும் நன்றிகள். பெரும்பாலும் கதைகளிற்கு கருத்து தெரிவிக்காத சுகன் மற்றும் இன்னுமொருவன் ஆகியோரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்திருந்தார்கள் நன்றிகள். எமது போராட்டத்தின் தோல்வியின் பின்னர் நாவல் எழுதும் ஆசை எனக்கு இருந்ததில்லை

சேகரித்து வைத்திருந்த குறிப்புக்களைக்கூட விரக்தியில் அழித்துவிட்டிருந்தேன் நினைவில் மட்டும் நிற்பவைகளை வைத்து முயற்சிக்கிறேன்.

உப்பிடி நீங்க விட்டிட்டு இருக்க கண்டவனெல்லாம் இயக்க வரலாற்றுக்குள் புனைவைக் கலந்து கதையெழுதி.. பெரிய எழுத்தாளராகிறாங்கள்.......

  • கருத்துக்கள உறவுகள்

உப்பிடி நீங்க விட்டிட்டு இருக்க கண்டவனெல்லாம் இயக்க வரலாற்றுக்குள் புனைவைக் கலந்து கதையெழுதி.. பெரிய எழுத்தாளராகிறாங்கள்.......

ஏற்கனவே நிறைய பொழிப்புரைகள் இணையங்களில் எழுதப்பட்டுள்ளன. புலிகளில் இருக்கும் ஆத்திரத்தை இப்படியும் சிலர் காட்டுகிறார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உப்பிடி நீங்க விட்டிட்டு இருக்க கண்டவனெல்லாம் இயக்க வரலாற்றுக்குள் புனைவைக் கலந்து கதையெழுதி.. பெரிய எழுத்தாளராகிறாங்கள்.......

சிங்கங்கள் வாய்திறக்கும் வரைக்கும் மட்டுமே வேட்டைக்காரர்களது புனைவுகள் வரலாறாகக் கொள்ளப்படுமாம்..

இந்த கதைக்கு அதிகமானவர்கள் கருத்திட்டிருப்பதால் கவிதை .வசி.அர்ஜீன்.காவடி.சுபேஸ் அலை .ரதி. வாத்தியார் மற்றும் அனைவரிற்கும் நன்றிகள். பெரும்பாலும் கதைகளிற்கு கருத்து தெரிவிக்காத சுகன் மற்றும் இன்னுமொருவன் ஆகியோரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்திருந்தார்கள் நன்றிகள். எமது போராட்டத்தின் தோல்வியின் பின்னர் நாவல் எழுதும் ஆசை எனக்கு இருந்ததில்லை

சேகரித்து வைத்திருந்த குறிப்புக்களைக்கூட விரக்தியில் அழித்துவிட்டிருந்தேன் நினைவில் மட்டும் நிற்பவைகளை வைத்து முயற்சிக்கிறேன்.

எழுதக் கூடியவர் என்பதால் தெரிந்தவைகளை எழுதுவது நல்லது.

விஷயம் தெரிந்த பலரும் நடந்த சம்பவங்களை மறந்து விட்டார்கள். ஞாபகமுள்ள சிலரிற்கும் எழுதும் திறமையில்லை.

பிறகு, புனைவு போராட்டக் கதைகள் எழுதுபவர்கள் மேல் ஆத்திரப் பட்டு பிரயோசனமில்லை. எதிர்காலத்தில் அவைதான் வரலாறாக மாறும்.

சிங்கங்கள் வாய்திறக்கும் வரைக்கும் மட்டுமே வேட்டைக்காரர்களது புனைவுகள் வரலாறாகக் கொள்ளப்படுமாம்..

கடைசி வரை வாயே திறக்கமல் விட்டால்.......

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.