Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதிய ஆண்டும் யாழும்

Featured Replies

இங்கு விளம்பரம் பற்றி தானே கருத்துக்கள பொறுப்பாளர் ஆலோசனை கேட்டு எழுதி உள்ளார். Flickr சந்தா பணம் கட்டி பாவிக்கும் போது இலவச சேவையில் கிடைக்காத கூடுதல் பயன்பாடுகள் கிடைக்கும்

  • Replies 54
  • Views 4.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் மோகன்,

நீங்கள் என்ன முடிவெடுத்தாலும் நான் அதற்க்கு ஒத்துழைப்பு வழங்குவேன்.

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் மோகன்

புத்தாண்டு வாழ்த்துக்கள்.

எப்போதோ செய்திருக்க வேண்டியது.காலம் தாழ்த்தியாவது செய்வதையிட்டு மகிழ்ச்சி.

சகல நாடுகளில் உள்ளவர்களையும் இணைத்துக் கொள்ளுங்கள்.

  • தொடங்கியவர்

அனைவரின் ஆலோசனைக்கும் நன்றி

...

இதைச் செய்வதற்கு யாழின் வீச்சு என்ன என்பதற்கான தரவுகள் தேவைப்படும்.

திட்டங்கள் வெற்றிபெற எனது முன்கூட்டிய வாழ்த்துக்கள்..!

தரவுகள் வெளியிடுவதில் எதுவித பிரச்சனைகளும் இல்லை.

மேலும்...... ஒரு யோசனை, இப்போ.... தான் உதித்தது.

மாதாந்திர சந்தாவாக, விரும்பிக் கட்டும் 5 € வை அவர்கள் தங்கள் நாட்டிலிருக்கும் பெறுமதி மூலம், ரூபாயாகவோ, டொலராகவோ, பவுண்ஸ் ஆகவோ, தினாராகவோ கட்டினால் நல்லது என நினைக்கின்றேன். ஏனெனில் தாங்களும் இதில் பங்கு பற்றுகின்றோம் என்னும் ஆர்வம் வரும். காசு கட்டியவர்களின் பெயர்களை... எல்லோரும் பார்க்கும் படி, இணைத்தால்.... தாங்கள் காசு, கட்டாமல் கருத்து எழுதுகிறோமே... என்று கூச்சப் பட்டு, மற்றவர்களும் காசு கட்டுவார்கள்.

இவ்வாறன திட்டங்கள் சிக்கல்களை உருவாக்கும் என்பதால் பலமுறை இதுபோன்ற வேண்டுகோள்கள்?? வைக்கப்பட்டபோதும் நடைமுறைப்படுத்தப்படவில்லை

மோகன் அண்ணாக்கும் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

ஒரே பிகரை எத்தனை நாளைக்கு தான் அண்ணா பார்க்க முடியும்?

ஒரு சேஞ்ச் வேண்டாமா???? :rolleyes: :lol:

முகத்தை..சே... முகப்பை மாத்தி விளம்பரங்களையும் போட்டால் கண்ணுக்கும் குளிர்ச்சியா இருக்கும்

நாலு காசு வந்து அதை கஸ்டபட்ட மக்களுக்கு உதவினதாகவும் இருக்கும். :)

என்னை பொறுத்தவரைக்கும் மரணஅறிவித்தல்,நினைவுநாட்கள்,பிறந்தநாள் வாழ்த்துக்களை இணைக்கலாம் என்று நினைக்கிறேன். தனிப்பட்ட நிறுவனங்களின் விளம்பரங்களை இணைக்கும் போது

தேசியத்தூண்களுக்கு ஆதவரவா இல்லை மாற்றுக்கருத்து மாணிக்கங்களின் விளம்பரங்களை இணைத்துள்ளார்கள் என்று வரும். அதனால் யாழின் தற்சிறப்பு கெடாத வகையில் விளம்பரங்களை இணைத்தால் நல்லது. இது எனது தனிப்பட்ட கருத்தே :):icon_idea:

வடிவமைப்பு மாற்றப்படவேண்டும். தற்போதைய யாழ் முகப்பானது drupal cms கொண்டு உருவாக்கப்பட்டது. யாராவது drupal template செய்யக்கூடியவர்கள் உதவினால் மிக நன்று.

எவ்வகையான விளம்பரங்களை இணைப்பது போன்ற விடயங்களை குழுவே முடிவு செய்யும்.

நல்ல விடயம் மோகன் அண்ணா. முன்னரைப் போன்று ஆரம்பித்துவிட்டு அப்படியே கிடப்பில் போட்டமாதிரி இந்தமுறையும் செய்யாமல், கொஞ்சம் முயற்சி எடுத்துச் செயற்படுத்தவேண்டும். முதன்மைக் குழுவில் இருப்பவர்களுடன் ஒத்துழைத்துச் செயற்படுத்த இயன்றளவு முயற்சி செய்கின்றேன்..

தளரவிடாது செய்துபார்ப்போம்.

நல்ல விடயம் மோகன் அண்ணா.என்னாலான பங்களிப்பு நிச்சயம் உண்டு.

யாழ் களத்தில் விளம்பரங்களை போட தெரியப்படுத்துவதற்கு அல்லது ஊக்குவிப்பதற்கு ஒரு விளம்பரம் தேவை.அதனை யாழ் கள உறுப்பினர்களை கொண்டோ அல்லது வேறு வழியிலாயினும் எப்படி செய்யலாம் என யாழ் கள உறுப்பினர்கள் தான் சொல்ல வேண்டும்.

கூகிள் இணைய தளம் சில விளம்பரங்களை சொடுக்குவதால் பணம் வழங்குகிறார்கள்.அவற்றை கூட யாழில் இணைத்து பணத்தை பெற்றுக்கொள்ளலாம்.

குழு என்பது ஆலோசனைக்கும் சில முடிவுகளை எடுப்பதற்கென்றே இருக்கும். மற்றும்படி கள உறுப்பினர்கள் அனைவரின் ஒத்துழைப்புடனேயே இவைகள் செய்வது இலகுவாக இருக்கும்.

மேலே ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்டவர்கள் அனைவரும் இந்தக் குழுவில் இணைந்து கொள்வது பற்றி அவர்களின் நிலைப்பாட்டினை அறியத் தந்தால் உதவியாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!!!!!!!யாழ்களம் தனித்துவத்துடன் மிளிரவேண்டுமாயின்.யாழ்களத்திற்கென தனித்துவமான விளம்பரம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும். எல்லா இணையத்தளங்களிலும் கவர்ச்சிகரமான விளம்பரம் பெரிய வண்ணமயமான எழுத்துக்களில் இருக்கவேண்டும்.ஒருமுறை ஒருவர் யாழ்களத்திற்கு வந்தால் அது எல்லா இணையத்தளங்களின் செய்திகள் படைப்புக்களை ஒரேதளத்தில் வாசிக்கலாம் எனத் தெரியவரும்.ஆனால் யாழ்களத்தின் உள்ளடக்கமானது செய்திகள் மற்றம் விளம்பரங்கள் போன்றவை எல்லோராலும் இலகுவில் கையாளப் படக் கூடியவாறு எளிமைப்படத்தப்படவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

முதற் கண் மோகன் அண்ணாவிற்கும்,சக கள உறுப்பினர்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...மோகன் அண்ணா எத்தனை புதிய திட்டங்கள் வேண்டுமானால் போடுங்கள்,என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள் ஆனால் யாழ் மட்டும் தொடர்ந்து இயங்க வேண்டும் :)

  • கருத்துக்கள உறவுகள்

மோகன் அண்ணா

இதுவரை யாழைத் தனியாக உங்கள்

தோளில் சுமந்ததற்கு எனது நன்றிகள்.

எனது பங்களிப்பு உங்களுக்கு என்றும் கிடைக்கும்.

மலரப் போகும் புத்தாண்டில் யாழ் மேன்மேலும்

ஒளி பெறட்டும்.

மோகன் அண்ணாவிற்கும் கள உறுப்பினர்களுக்கும்

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

வணக்கம் மோகன் அண்ணா, புதுவருட வாழ்த்துக்கள்,

சாத்திரி மற்றும் தமிழ்சிறி முன்மொழிந்த கருத்துகளைதான் நானும் வழிமொழிகிறேன்.

எல்லோருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள! இது நல்ல முயற்சி . "மணமகன், மணமகள் தேவை" குறித்த விளம்பரத்தையும் உள்ளடக்கலாம் என்று நினைக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள! இது நல்ல முயற்சி . "மணமகன், மணமகள் தேவை" குறித்த விளம்பரத்தையும் உள்ளடக்கலாம் என்று நினைக்கின்றேன்.

அலைமகள் கூறிய மாதிரி,

திருமண விளம்பரமும்....

வேலை, ~~~, வில்லட்டிப் பிரச்சினைகளை அவரவரே... கண்டு பிடிச்சு,

சுமூகமாக... திருமண பந்தத்தில் இணைய வாய்ப்பு ஏற்படுத்தலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

சகோதரன் மோகன் உட்பட அனைத்து உறவுகளிற்கும் இன்னும் சில மணித்துளிகளில் பிறக்கவிருக்கும் ஆங்கில புத்தாண்டு 2012 இனியதாக அமைய வாழ்த்துக்கள்.

_____

நிலாமதி அக்கா சொன்ன கருத்தே எனதும்.

இது எங்களது இளைப்பாறும் மடம் அல்லது தளம் என்றும் சொல்லாம். இந்த வீட்டின் உரிமையாளர் எடுக்கும் நல்ல வேலைத் திட்டங்களிற்கு என்னால் இயன்ற பங்களிப்பையும் செய்ய விரும்புகின்றேன்.

இதில் செயல்படும் அனைத்து உறவுகளிற்கும் பாராட்டுக்கள்.

வணக்கம் மோகன் அண்ணா, புதுவருட வாழ்த்துக்கள்,

இதில் எழுதுமளவுக்கு எனக்கு அனுபவம் போதாது நீங்கள் எடுக்கும் எந்த முடிவுக்கும் கட்டுபட்டு செயற்படுவேன்.

மோகன் அண்ணா!

தங்களது இந்த முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

என்னால் முடிந்தவரை என் ஒத்துழைப்புக்கள் வந்துசேரும். :)

யாழுக்கும், தங்களுக்கும்... என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! :)

... ஏறக்குறைய 12 வருடங்கள் யாழில் இந்த பன்னிரு வருடங்களும் மனைவி, மகனுடன் நேரத்தை செலவிடுவதிலும் யாழுடன் தான் இருந்தது கூட!! ... இடையிடையே சில இணையங்களில் பங்கு ... என்றாலும் இது தாய்த்தமிழ்க்களம்! ... என் உதவி எப்பவும் யாழுக்கு இருக்கும், பல முறை மோகனுக்கும் தெரிவித்திருக்கிறேன்!

சில காலத்துக்கு முன் ஓர் அமைப்பு மூலம் ஓர் குடும்பத்துக்கு மாதாந்தம் 25 பவுண்களுக்கு மேல் வழங்கி, சில பிரட்சனைகளால் நிறுத்தி விட்டேன் ... யாழ்களம், அங்குள்ள மக்களுக்கு உதவும் ஓர் அமைப்பை உருவாக்குமாயின், அதை யாழினூடாக தொடர விரும்புகிறேன்!

  • கருத்துக்கள உறவுகள்

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்....அவுஸ்ரேலியா குழுவின் உறுப்பினர்கள் யார்?தொடரட்டும் யாழின் சேவை.....

  • கருத்துக்கள உறவுகள்

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்....அவுஸ்ரேலியா குழுவின் உறுப்பினர்கள் யார்?தொடரட்டும் யாழின் சேவை.....

புத்தாண்டு வாழ்த்துக்கள், புத்தன்!

நீங்கள் தான் புத்தன்!

நீங்கள் தானே மூத்த உறுப்பினர்! :D

அனைத்து யாழ்கள உறவுகளுக்கும் எனது புதுவருட நல்வாழ்த்துக்கள்.

மோகன் அண்ணா,

இது வரவேற்கதக்க நல்ல விடயம். சாத்திரியும்,தமிழ்சிறியும் சொன்னதுபோல் செய்தால் நல்லம்தானே...! என்னாலான பங்களிப்பை கட்டாயம் செய்வேன்.

  • கருத்துக்கள உறவுகள்

மேலே ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்டவர்கள் அனைவரும் இந்தக் குழுவில் இணைந்து கொள்வது பற்றி அவர்களின் நிலைப்பாட்டினை அறியத் தந்தால் உதவியாக இருக்கும்.

வேலைப்பளு காரணமாய் இந்தக்குழுவில் இணைந்துகொள்வது சற்று சிரமமாய் இருக்கிறது என்பதை தெரிவித்துகொள்கிறேன்..

நேரம் கிடைக்கும் பட்சத்தில் என்னால் ஆன உதவிகளை செய்யக்காத்திருக்கிறேன்.

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரும் நல்லவிடயம் என்று வரவேற்றுவிட்டு தமது வேலைகளைப் பார்க்கப் போய்விட்டார்கள் (நானும்தான்).

பூனைக்கு மணிகட்ட ஒரு எலிகளும் தயாராக இல்லைப் போலுள்ளதே! :(

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

ஏதாவது ஏற்பாடுகள் செய்தால்.. முன்னேற்றங்கள் இருந்தால்..

யாராவது அறியத்தரவும்.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரும் நல்லவிடயம் என்று வரவேற்றுவிட்டு தமது வேலைகளைப் பார்க்கப் போய்விட்டார்கள் (நானும்தான்).

பூனைக்கு மணிகட்ட ஒரு எலிகளும் தயாராக இல்லைப் போலுள்ளதே! :(

கிருபன் இங்கு பதிவிட்டுவிட்டு காணாமல் போய்விட்டோம் உண்மைதான். யாழ்க்களத்தை முன்னேற்றுவதற்கு எல்லோரும் பேச்சுப்பல்லக்குத்தான் போல் உள்ளது. எவ்வகை உதவிகளைச் செய்வது என்பதை எம்மால் தீர்மானிக்க முடியவில்லை. கருத்துக்கணிப்பை நடாத்தி உருப்படியாக எதனையும் செய்ய முடியாது என்பதை நிர்வாகம் தெளிவாக உணர்ந்தால் மட்டுமே அடுத்த கட்டத்திற்கு நிர்வாகத்தினர் நகர முடியும்.

எவ்வகையான உதவிகளைச் செய்யவேண்டும் என்று மோகனின் எதிர்பார்ப்பு இருக்கிறது என்று புரியவில்லை. உதவி செய்யும் விருப்பு இருந்தாலும் வழிகளைச் சொன்னால்தான் அவ்வகையில் அவற்றை செய்யலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

இன்று தான் இந்த திரியைக் கண்டேன்..எல்லா தலைப்புக்களுக்குக்குள்ளும் அதிகம் செல்லாத காரணத்தினால் இதுவரை நாளும் கண்டு கொள்ள இல்லை..சரி அது போகட்டும்..அப்புறம் யாழின் முன்னேற்திற்கு நானும் எப்போதும் ஒத்துளைப்பேன்..நாங்கள் எல்லாரும் ஓடி வந்து இளைப்பாறும் இடம்..அதை ஒரு விருட்ச்சமாக்க வேண்டும்.என்ன செய்ய வேண்டும் என்று சொன்னால்,கண்டிப்பாக செய்வோம்.:)

ஓல்மொஸ்d ..,, டைம் ............பாஸிங்க்குதான் .........

எல்லாருமே இங்க வர்றாங்க............

இந்த........ வெத்துவேட்டுகள நம்பி.............

உங்க லைவ்வ பேஜாராக்காதீங்க...................

மோகன் அண்ணா..............!!

அவங்க சைட்லயும் தப்பு இல்ல..........

ஏன்னா................... கார் இன்சூரன்ஸுக்கும் , மெயின்ரெனன்சுக்கும்..............

காசு கட்டுறதுக்கே...........

எவ்ளோ கஸ்டப்படுறாங்க அவங்க எல்லாம்!!

இடைல எகத்தாளமா எல்லாம், .

நானும் யாழும் ஒண்ணுனு சவுண்டு விடுவாய்ங்க....

அப்புறம் காணாம போயிடுவாங்க பய புள்ளைங்க!

யாரையும் நம்பாதீங்க மோகன் அண்ணா!! :unsure:

....

யாரையும் நம்பாதீங்க மோகன் அண்ணா!! :unsure:

என் பங்கிற்கு, என்னை விட்டு தூரம் போய் விட்ட என் தாயாரின் நினைவுகளுக்காக, முதலில் நானும் என் தந்தையாரும் உண்மையில் பாதிக்கப்பட்ட இரு குடும்பங்களை யாழ் சார்பில் பொறுப்பேற்க விரும்புகிறோம். எப்போது இதனை ஆரம்பிக்கிறீர்களோ, உடனே இணைகிறேன், இதில் வேறு சிலரையும் இணைக்க முயற்சிக்கிறேன்

ஒரு வியாபாரம் நிறுவனம் எனும் வகையில் வர்த்தக ரீதியாக online இல் யாழ் இணையம் முன்னேற்றம் பெறுவதற்கு ஆலோசனை ஒன்றை கூற விரும்புகின்றோம்.

முதலில் இதை ஒரு தடவை வாசித்து பாருங்கள்: https://buy.louisck.net/news

அவர் தனது வருமானத்தில்

கால் பகுதியை தொண்டு நிறுவனங்களுக்கும்,

கால் பகுதியை தனக்கு பணியாற்றும் ஊழியர்களுக்கும்,

கால் பகுதியை தொடர்ந்த production தேவைகளுக்கும்

கால் பகுதியை தனது சொந்த தேவைக்கும் பயன்படுத்துகின்றார்.

சற்று முயற்சி செய்தால் தாயகத்தில் உள்ள உதவி தேவைப்படும் மக்களிற்கு கூட யாழ் இணையம் மூலம் வருமானம் கிடைக்கும் வகையில் உதவி செய்ய முடியும். மீனை பிடித்து கொடுக்காது பிடிப்பதற்கு கற்று கொடுங்கள் என்று கூறுகின்றார்கள்.

கிடைக்கும் வருமானத்தின் ஒரு பங்கை தொண்டு நிறுவனங்களுக்கு கொடுப்பது வரவேற்கத்தக்கது. ஆனால் தொண்டு நிறுவனங்களுக்கே வருமானம் போக வேண்டும் என நினைப்பது வர்த்தக ரீதியாக முன்னேற்றம் பெறுவதற்கு உதவாது. தெரு தேங்காயை எடுத்து வழி பிள்ளையாருக்கு அடிப்பது போல் இல்லாமல் அல்லது கோயிலில் அடிக்கப்படும் தேங்காயை துண்டுகளை எவராது பொறுக்கி கொண்டு செல்லட்டும் என்றும் இல்லாமல்>யாராவது அடிக்கட்டும் யாராவது பொறுக்கட்டும் என்று விடாது

கருத்து களத்தில் பங்கு பெறும் கருத்தாளர்களிற்கும் நேரடியாக இல்லாவிட்டாலும் மறைமுகமாகவேனும் ஒரு பைசாவாவது ஏதாவது வருமானம் பெறுவதற்கான வாய்ப்பையும் உருவாக்கி கொடுத்தால் நிச்சயம் வர்த்தக ரீதியாக இந்த இணையம் முன்னேற்றம் பெறுவதற்கு அது உதவும். எழுதுவதும் சரி, கொடுப்பதும் சரி வெறுமனே எல்லாம் தொண்டாகவே பார்க்கப்பட்டால் வர்த்த ரீதியாக முன்னேற்றம் பெற முடியாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.