Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவர்ச்சி. காதல். காமம்.கண்ணியமான நட்பு . கடந்துவந்தபாதை. பாகம் 6

Featured Replies

அவனது பிஸ்ரல் இயங்கி முடிக்கவும் பிறேம் சைக்கிளை கொண்டு வந்து அவனருகில் பிறேக் அடிக்கவும் சரியாக இருந்தது. சைக்கிளில் ஏறப்போனவன் ஏதோ நினைத்தவனாக சைக்கிளில் தொங்கிய துணிப்பையில் இருந்த கைக்குண்டுகளில் ஒன்றை எடுத்தவன் கீறீசா பூசுறாய் என்றபடி சரிந்து கிடந்த சீக்கியனின் தொடைகளிற்கிடையில் வைத்து அதன் கிளிப்பை உருவி எறிந்து விட்டு சைக்கிளில் பாய்ந்து ஏறினான். காவலரண் அதிர்ந்து அடங்கியது. அவர்கள் சங்கானை சுடலையை கடந்து சைக்கிளில் போய்க்கொண்டிருந்தபொழுது ரவீந்திரனின் கனவுகள் கற்பனைகளோடு அவனது உடலும் எரிந்து முடிந்து சாம்பலில் இருந்து புகைமட்டும் வெளிவந்துகொண்டிருந்தது அந்த தேசத்தை போலவே.

அந்த நேரத்தில் எடுத்த முடிவு சரியாக இருந்தாலும் சிங்குக்கு சாம்பல் பூசியிருக்கலாம் .

  • Replies 303
  • Views 61.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ரவிந்த்திரனுக்கு என் அஞ்சலிகள் . தொடரட்டும் சாத்திரி .யாராவது ஊர்பேர் தெரியாது போன கரும்புலிகளின் தியாகங்களை எழுதங்களேன் .மண்ணோடு மண்ணாக போவதற்குமுன் .

ரவிந்த்திரனுக்கு என் அஞ்சலிகள் . தொடரட்டும் சாத்திரி .யாராவது ஊர்பேர் தெரியாது போன கரும்புலிகளின் தியாகங்களை எழுதங்களேன் .மண்ணோடு மண்ணாக போவதற்குமுன் .

நீங்களும் எழுதலாம் தானே!

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு ஒன்றிரண்டைத் தவிர மிகுதி ரகசியம் எதுவும் தெரியாது .

  • கருத்துக்கள உறவுகள்

பி.கு. நண்பன் ரவீந்திரனின் நினைவுகளோடு இதனை எழுதி முடித்திருந்தாலும். இன்று நினைத்து பார்க்கும்போது எங்கோ பிறந்த சீக்கியன் இரண்டு உயிர்களுமே அனியாயமான இழப்புக்கள்தான்.

இன்று நாம் இப்படி நினைப்பதற்க்கு காரணம் எமது வயதா?அன்று எமக்கு இதே அறிவுரையை எமது மூத்தோர் சொல்லும் பொழுது கேட்க மனம் வரவில்லை இன்று நாம் அதே அறிவுரையை சொல்லுகிறோம் மற்றவருக்கு....இதைத்தான் சொல்லுவதோ மாற்றம் மட்டுமே நிரந்தரம் என்று.....பகிர்வுக்கு நன்றிகள் சாத்திரியார்

Edited by putthan

எப்ப அடுத்தது வரும் என்று ஆவலுடன் பார்த்திருப்பேன் .உண்மைகளை எழுதும் போது சிலவேளைகளில் கசந்தாலும் அதனால் அது உண்டாகும் தாக்கம் கற்பனையில் இருக்காது .

பெருமூச்சு ,ஏக்கம் ,இயலாமை அத்தனையும் தான் மிஞ்சுகின்றது .

டாக்டர் நாகநாதனின் தம்பி ஜெகநாதன் (இப்போ ஆஸியில் ) லண்டனில் எனது அத்தானின் ரூம்மேட் ,பின்னர் அவர் தம்பி சிவநேசன் எனது ரூம்மேட் .

  • கருத்துக்கள உறவுகள்

அந்தச் சீக்கியன், போக வேண்டியவன் தானே, சாத்திரி?

எப்படிப்போனான், என்பது தான் பிரச்சனையே!

நீதியும், சட்டமும் இல்லாத நிலையில், நீதியைக் கையில் எடுப்பதைத் தவிர, வேறு வழியில்லை!

சில இளைஞர்களாவது, காப்பாற்றப் பட்டிருப்பார்கள்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்று நாம் இப்படி நினைப்பதற்க்கு காரணம் எமது வயதா?அன்று எமக்கு இதே அறிவுரையை எமது மூத்தோர் சொல்லும் பொழுது கேட்க மனம் வரவில்லை இன்று நாம் அதே அறிவுரையை சொல்லுகிறோம் மற்றவருக்கு....இதைத்தான் சொல்லுவதோ மாற்றம் மட்டுமே நிரந்தரம் என்று.....பகிர்வுக்கு நன்றிகள் சாத்திரியார்

நாங்கள் எல்லாம் புத்தனாய்(போதி மரத்து) மாறிக்கொண்டிருக்கிறோம்"புத்தன் அண்ணா": :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் எல்லாம் புத்தனாய்(போதி மரத்து) மாறிக்கொண்டிருக்கிறோம்"புத்தன் அண்ணா": :unsure:

மாற விரும்புகின்றோம்

மாறிவிடுவோம் என்பதே இன்றைய நிலை.

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப அந்த காலத்திலேயே இந்த கதையில் வரும் அவன் ஒரு பிஸ்டல் காயா?

:D

பிஸ்டல் காய் அல்ல பனங்காய்.

இயக்க காசில் (பொதுமக்களின் காசில்) தனது பாலியல் தேவையை பூர்த்தி செய்த ஒருவர்.

இவர் சிங்கையில் செய்ததை தமிழீழத்தில் ஒருவர் செய்திருந்தால் என்ன தண்டனை கொடுக்கப்பட்டிருக்கும் என்று சற்று நினைத்துப் பாருங்கள்.

இவரை ஒரு பாலியல் நோயளி என்று அழைப்பதில் தவறில்லை.

Edited by Donkey

உங்களுக்கு இயக்கத்தின் நடைமுறைகள் கட்டுப்பாடுகள் தெரிந்ததால் மட்டும் கதையுங்கள் .விதண்டாவாத்திற்கு எழுதவேண்டாம் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரவிந்த்திரனுக்கு என் அஞ்சலிகள் . தொடரட்டும் சாத்திரி .யாராவது ஊர்பேர் தெரியாது போன கரும்புலிகளின் தியாகங்களை எழுதங்களேன் .மண்ணோடு மண்ணாக போவதற்குமுன் .

முடிந்தவரை எழுதுகிறேன்.96 களிற்கு முன்னர் வடகிழக்கிற்கு வெளியே நடந்த சம்பவங்கள் பற்றி பெரும்பாலனவை என்னுடைய புத்தகத்தில் இணைத்துள்ளேன்.96ற்கு பின்னர் என்னுடைய பக்கம் முழுக்க முழுக்க வேறான பாதை என்பதால் அதற்கு பின்னர் நடந்த விடயங்களில் உள்விபரங்கள் எனக்கு பெரியளவு தெரியாது அதன் பின்னர் நடந்த சம்பவங்களுடன் தொடர்புடைய நிக்சன் ..அருணகிரி ([size=2]கதிர்காமத்தம்பி அறிவழகன் )[/size]வேறும்பலர் வெளிநாடுகளில்தான் வசிக்கிறார்கள் யாழின் வாசகர்களாகவும் இருக்கிறார்கள். அவர்களாக எழுதினால்தான் மிகுதி விடையங்கள் வெளிவரும்.ஆனால் அவர்களிற்கு எழுத்து பக்கங்களில் பழக்கம் இல்லாதவர்கள்.எனவே அவர்கள் எழுதுவார்களா என்பதும் கேள்விக்குறிதான். இல்லாட்டி கருணா தானே பல விடயங்களை செய்ததாக ஒத்துக்கொண்டு எழுதவேண்டும். அதுவும் நடக்காது

Edited by sathiri

பழைய அனுபவங்களை சுவாரசியமாய் எழுதுவது சரி, ஆனால் இதன்மூலம் தேவையில்லாத வில்லங்கங்கள், சோலிகள், சட்டச்சிக்கல்கள் வராதோ?

உங்கள் அனுபவங்கள்: பொல்லுக்கொடுத்து அடிவாங்குதல் : http://www.yarl.com/forum3/index.php?showtopic=49190

  • கருத்துக்கள உறவுகள்

சீக்கியனின் இழப்பு அனியாயமானதல்ல. எத்தனையோ ஈழத்து பெண்கள், ஆண்களின் கற்பினைக் காப்பாற்றியிருக்கிறீர்கள். ஏன் இந்தியப் பெண்கள் ஆண்களின் கற்பினையும் காப்பாற்றியிருக்கிறீர்கள். இந்த நாய் ஈழத்தில் செய்ததினை அசாமிலோ, கஸ்மீரிலோ செய்திருக்கும்.

தனலட்சுமி தான் பாவம்.

பழைய அனுபவங்களை சுவாரசியமாய் எழுதுவது சரி, ஆனால் இதன்மூலம் தேவையில்லாத வில்லங்கங்கள், சோலிகள், சட்டச்சிக்கல்கள் வராதோ?

உங்கள் அனுபவங்கள்: பொல்லுக்கொடுத்து அடிவாங்குதல் : http://www.yarl.com/...showtopic=49190

இயக்கதில இருந்தவர்களுக்கும் இல்லாதர்களுக்குக்கும் இருக்கும் இடைவெளியே அதுதான் .

தங்கள் ஈரடி விருத்தம் விளங்கவில்லை புலவரே.

சீக்கியன் போகவேண்டியவன் தானே... இதுக்குள்ள என்ன அனுதாபம் அவனுக்கு? தம் அரசியல் தலமைகளின் தவறால் தமிழர்களுக்கு எதிராக போராட வேண்டி வந்தது அவன் தவறல்ல. ஆனால், அப்படி வந்தவன் செய்த பாலியல் வன்புணர்வுகளுக்கு அவனும் அவனது நேரடித் தலைமையும் தான் பொறுப்பு. எனக்கென்னமோ சாத்து அவன் பற்றிய இறுதி வரியை வலிந்து எழுதின மாதிரி இருக்கு (நேர்மை மிஸ்ஸிங்).

அந்த சீக்கியனை சுடாமல், சோடாப் போத்தலை பின்னுக்கு ஏத்தி வாய்க்கிலாள எடுத்து இருக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

சீக்கியன் அழிக்கப்படவேண்டியவனே.

ஆனால் இந்தக்கோபம் என்பது தனிப்பட்ட ஒரு இராணுவத்தினருக்கும் எதிராகவன்றி அதை அனுப்பியவனுக்கெதிராகவே வரவேண்டும். ஒட்டுமொத்த கோபமாக அது பிரதிபலித்திருக்கணும்.

ஒரு கேள்வி சாத்திரியிடம்.

இந் தாக்குதலுக்கு தங்களுக்கு மேலிடத்து அனுமதி கிடைத்ததா?

அல்லது தனிப்பட்ட முடிவா???

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்று நாம் இப்படி நினைப்பதற்க்கு காரணம் எமது வயதா?அன்று எமக்கு இதே அறிவுரையை எமது மூத்தோர் சொல்லும் பொழுது கேட்க மனம் வரவில்லை இன்று நாம் அதே அறிவுரையை சொல்லுகிறோம் மற்றவருக்கு....இதைத்தான் சொல்லுவதோ மாற்றம் மட்டுமே நிரந்தரம் என்று.....பகிர்வுக்கு நன்றிகள் சாத்திரியார்

புங்கையூரன்

Posted Yesterday, 09:35 AM

அந்தச் சீக்கியன், போக வேண்டியவன் தானே, சாத்திரி?

எப்படிப்போனான், என்பது தான் பிரச்சனையே!

நீதியும், சட்டமும் இல்லாத நிலையில், நீதியைக் கையில் எடுப்பதைத் தவிர, வேறு வழியில்லை!

சில இளைஞர்களாவது, காப்பாற்றப் பட்டிருப்பார்கள்!

[

நிழலி

Posted Today, 02:55 PM

சீக்கியன் போகவேண்டியவன் தானே... இதுக்குள்ள என்ன அனுதாபம் அவனுக்கு? தம் அரசியல் தலமைகளின் தவறால் தமிழர்களுக்கு எதிராக போராட வேண்டி வந்தது அவன் தவறல்ல. ஆனால், அப்படி வந்தவன் செய்த பாலியல் வன்புணர்வுகளுக்கு அவனும் அவனது நேரடித் தலைமையும் தான் பொறுப்பு. எனக்கென்னமோ சாத்து அவன் பற்றிய இறுதி வரியை வலிந்து எழுதின மாதிரி இருக்கு (நேர்மை மிஸ்ஸிங்).

அந்த சீக்கியனை சுடாமல், சோடாப் போத்தலை பின்னுக்கு ஏத்தி வாய்க்கிலாள எடுத்து இருக்க வேண்டும்.

புத்தன் புங்கையூரான் மற்றும் நிழலி ஈழத்தமிழனாக இந்திய இராணுவத்தால் நேரடியாக பாதிக்கப்பட்டவன் என்கிற முறையில் அந்த சீக்கியனின் முடிவு என்பது சரியானதுதான்.அதில் எந்த மறு கருத்தும் கிடையாது. ஆனால் ஒரு படைப்பாளியாக கடந்த கால அனுபவங்களினூடாகவும் பல கோணங்களில் பார்க்கும் போது அன்று கொல்லப்பட்ட நாற்பது வயதுகள் மதிக்கத்தக்க அந்த சீக்கியனிற்கு நிச்சயம் திருமணமாகி பிள்ளைகளும் இருந்திருக்கும். இறந்து போன சீக்கியனின் உடல் நிச்சயமாக ரி என் ரி குண்டின் தாக்கத்தால் இடுப்பிற்கு கீழே சிதறிப் போயிருக்கும். பாதி உடலை பாசல் பண்ணி அனுப்பும் அளவிற்கு அவன் பெரிய அதிகாரியும் கிடையாது சாதாரண சிப்பாய். எனவே அவனது மரணச் செய்தி மட்டும் அவனது குடும்பத்திற்கு பலநாட்களோ பலமாதங்களோ கழித்து தெரியப்படுத்தப்பட்டிருக்கும். அதுவும் இலங்கையில் அமைதிப் பணியில் ஈடுபட்டிருந்தபோது எல் டி டி தீவிரவாதிகளால் கொல்லப் பட்டான் தனது உயிரை கொடுத்து இந்திய நாட்டின் மானத்தை காப்பாற்றினான் என்று சொல்லி ஒரு தொகை பணத்தையும் கொடுத்திருப்பார்கள்.

அவனது குடும்பத்தினருக்கோ இலங்கையில் என்ன நடக்கிறது என்கிற எவ்வித உண்மையும் தெரிந்திருக்காது. அவர்களும் சீக்கியன் இறந்து போனதற்காக புலிகளை திட்டிதீர்த்திருப்பார்கள். பல வருடங்களிற்கு பின்னர் புலிகள் அமைப்பு அழிக்கப்பட்ட செய்தியை கேள்விப் பட்டு மகிழ்ச்சியும் அடைந்திருப்பார்கள். ஆனால் இந்திய ஆட்சியாளர்களின் அதிகாரமும் ஆணவப் போக்கும் அலட்சியம் என்பவற்றால் ஈழத்தமிழர்கள் பெற்ற அழிவோ அல்லது கொல்லப் பட்ட இந்திய படைகள் பற்றியோ அவர்களிற்கு கவலை கிடையாது. சர்வதேசத்திற்கு வெட்கப்பட்டு கொல்லப் பட்ட தங்கள் இராணுவத்தின் தொகையை கூட குறைத்து அண்ணளவாக மூவாயிரம் இராணுவம் என்று கணக்கு முடித்திருந்தனர். என்னைப்பொறுத்தவரை பத்தாயிரத்தை தாண்டும்.

இந்திய அதிகாரம் நினைத்திருந்தால் சாதாரணமாகவே இவை அனைத்தையும் தவிர்த்திருக்கலாம். அவர்களின் நேரு தொடக்கி வைத்த பிராந்திய வல்லரசு கனவு அனுபவித்து முடித்தது நாங்கள்தான். அது இன்னமும் தொடரப் போகின்றது. தற்பொழுது நடந்து முடிந்த ரெசோ மகாநாடு அதைத்தான் கட்டியம் கூறி நிற்கிறது. மீண்டும் பழைய குருடி தான். இதற்கு எம்மினம் இனிமேலும் பலியாகக் கூடாது எனபது எனது ஆதங்கம் இதைத்தான் சுருக்கமாக அனியாயமான இழப்பக்கள் தவிர்க்கப்பட்டிருக்கலாம் என்று ஒற்றை வரியில் எழுதியிருந்தேன். கடைசியாக நிழலி மிஸ்சாகி போன நேர்மையை எங்கே தேடி கண்டு பிடிக்கலாமெண்டதை தயவு செய்து சொல்லுங்கப்பா பிளீஸ்

Edited by sathiri

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சீக்கியன் அழிக்கப்படவேண்டியவனே.

ஆனால் இந்தக்கோபம் என்பது தனிப்பட்ட ஒரு இராணுவத்தினருக்கும் எதிராகவன்றி அதை அனுப்பியவனுக்கெதிராகவே வரவேண்டும். ஒட்டுமொத்த கோபமாக அது பிரதிபலித்திருக்கணும்.

ஒரு கேள்வி சாத்திரியிடம்.

இந் தாக்குதலுக்கு தங்களுக்கு மேலிடத்து அனுமதி கிடைத்ததா?

அல்லது தனிப்பட்ட முடிவா???

அந்த நேரம் உங்களை தொடர்பு கொள்ள முயற்சித்திருந்தேன் ஆனால் தொடர்பு கிடைக்கவில்லை மன்னிக்கவும்.

உங்களுக்கு இயக்கத்தின் நடைமுறைகள் கட்டுப்பாடுகள் தெரிந்ததால் மட்டும் கதையுங்கள் .விதண்டாவாத்திற்கு எழுதவேண்டாம் .

தெரிந்த நீங்கள் எழுதுங்கள். அதென்ன கட்டுப்பாடுகள் நடைமுறைகள். இதில் எங்கே விதண்டா வாதம் இருக்கிறது.

இந் தாக்குதலுக்கு தங்களுக்கு மேலிடத்து அனுமதி கிடைத்ததா?

அல்லது தனிப்பட்ட முடிவா???

[size=5]விசுகு, நீங்கள் இந்தியன் ஆமிக்காலத்தில் ஊரில் இருக்கவில்லை என்பதைக் காட்டுகின்றது உங்கள் கேள்வி!! அதுசரி எப்ப நீங்கள் இலங்கையை விட்டு வெளியேறினீர்கள்????[/size][size=5]( உங்கள் தனிப்பட்ட விடயம் என்றாலும் ...)[/size]

அந்த நேரம் உங்களை தொடர்பு கொள்ள முயற்சித்திருந்தேன் ஆனால் தொடர்பு கிடைக்கவில்லை மன்னிக்கவும்.

அந்த நேரம் பிரெஞ்சு பிரசிடென்ட் மித்திரனுடன் இயக்க அலுவலாக கொன்பிறேன்சில் இருந்தார் .

  • கருத்துக்கள உறவுகள்

அந்த நேரம் உங்களை தொடர்பு கொள்ள முயற்சித்திருந்தேன் ஆனால் தொடர்பு கிடைக்கவில்லை மன்னிக்கவும்.

:o :o :o :o

[size=5]விசுகு, நீங்கள் இந்தியன் ஆமிக்காலத்தில் ஊரில் இருக்கவில்லை என்பதைக் காட்டுகின்றது உங்கள் கேள்வி!! அதுசரி எப்ப நீங்கள் இலங்கையை விட்டு வெளியேறினீர்கள்????[/size][size=5]( உங்கள் தனிப்பட்ட விடயம் என்றாலும் ...)[/size]

அந்தக்காலத்தில் ஊரில் இருக்கவில்லை என்பதால்தான் அந்தக்கேள்வியைக்கேட்டேன்.

இது போன்ற தாக்குதல்களுக்கு அநேகமாக தனிப்பட்ட முடிவுகளே எடுக்கப்பட்டன என கேள்விப்பட்டதால்தான் இதுவும அப்படியா எனக்கேட்டேன்.

ஒரு விடயத்தை சார்ந்தவரிடமே உறுதிப்படுத்துதல் நன்றல்லவா?

ஆனால் சார்ந்தவருக்குத்தான் பொறுமையாக பதிலளிக்க முடியவில்லை. அதன்படி பார்த்தால் தாக்குதலும் இதே ஆவேசத்துடன் எடுக்கப்பட்ட முடிவாகக்கொள்ளலாம்.

நான் 1984ல் நாட்டைவிட்டு வெளியேறினேன்.

அந்த நேரம் பிரெஞ்சு பிரசிடென்ட் மித்திரனுடன் இயக்க அலுவலாக கொன்பிறேன்சில் இருந்தார் .

மீண்டும் நீங்கள் உங்களைது தொடர்புகளை வைத்து நீங்கள் செய்யும் சந்திப்புகளுடன் வைத்து என்னைப்பார்க்கின்றீர்கள். தப்பான பார்வை.

முக்கியமாக புலிகளின் தாக்குதல் சம்பந்தமாக கடுமையான விமர்சனங்களை இங்கு வைக்கும் நீங்கள் சாத்திரியிடம் நேரடியாக கேட்டு பிரபாகரனை திட்டுவதை குறைக்கக்கூடிய அருமையான சந்தப்பம் இதில் கிடைத்தும் அதை தவறவிட்டிருப்பது அவரது அடுத்த கதைகளில் எதைத்தேடி ஆவலாக காத்திருக்கின்றீர்கள் என்பதை எமக்கு தெட்டத்தெளிவாகச்சொல்கிறது.

எப்ப அடுத்தது வரும் என்று ஆவலுடன் பார்த்திருப்பேன் .

உண்மைகளை எழுதும் போது சிலவேளைகளில் கசந்தாலும் அதனால் அது உண்டாகும் தாக்கம் கற்பனையில் இருக்காது .

பெருமூச்சு ,ஏக்கம் ,இயலாமை அத்தனையும் தான் மிஞ்சுகின்றது .

டாக்டர் நாகநாதனின் தம்பி ஜெகநாதன் (இப்போ ஆஸியில் ) லண்டனில் எனது அத்தானின் ரூம்மேட் ,பின்னர் அவர் தம்பி சிவநேசன் எனது ரூம்மேட் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.