Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உங்களுடைய காதலர் தினம் எப்பிடி?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காதலர் தினம் வணிக மயப்படுத்தப்பட்டிருந்தாலும், வருசத்துக்கு ஒருமுறை "வலண்டைன்ஸ் டே" சாட்டில இருவர் ஒருமித்து மகிழ்ச்சியாக இருப்பது தப்பில்லையே. அந்த வகையில நேற்று நடந்த எனது அனுபவத்த எழுதிறன் உங்களில் யாருக்கும் அப்பிடி அனுபவம் இருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்.

பதின் மூண்டாம் திகதி திங்கள்கிழமை, என்ட மனிசி நாள் முழுக்க என்ட அண்ணியோட சேந்து எதோ பிசி பிசி எண்டு ஓடுபட்டு திரிஞ்சா. எனக்கு இவ வலண்டைன்ஸ் டேயுக்குத் தான் எதோ அடுக்குப் பண்ணுறாள் எண்டு விளங்கினாலும் தெரியாத மாதிரி என்ட பாட்டில இருந்தன். அலுவலகத்தால வீட்ட போகும் போது கடையில் நிப்பாட்டி ஒரு கொத்து சிவப்பு ரோசாப் பூவும் ஒரு போத்தல் சிவத்த வைனும் வாங்கிக்கொண்டு வீட்ட போனா மனிசி கேக், சொக்கிலட், சாப்பாடு எண்டு ஒரே அமர்களப்படுத்தியிருந்தாள். அது மட்டுமில்ல முழு லைட்டையும் நூத்துப் போட்டு வீடு முழுக்க ஒரே மெழுகு திரி வெளிச்சம். மனிசியின்ட சாப்பாட்ட ஒருகை பிடிச்சுப் போட்டு, கொஞ்சம் ரெட்வைனையும் உள்ள அனுப்ப நேற்றைய நாள் இனிய நினைவுகளுடன் நிறைவுக்கு வந்தது.

DSC_0927_77.jpg

DSC_0936_86.jpg

DSC_0896_46.jpg

DSC_0915.jpg

DSC_0928.jpg

DSC_0954.jpg

DSC_0956.jpg

DSC_0932.jpg

DSC_0944_93.jpg

Edited by Thumpalayan

  • கருத்துக்கள உறவுகள்

தும்பளையான் உங்களுடைய காதலர் தின அனுபவங்களை எம்முடன் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

மேசை அலங்காரம் நன்றாக உள்ளது :) .

என்னுடைய அனுபவம் கொஞ்சம் வித்தியாசமானது.

காதலர் தினத்துக்கு வீட்டிலை ஒரு, அசுமாத்தத்தையும் காணேல்லை....

நேரமும் போய்க் கொண்டிருக்குது, இனியும் வாயை மூடிக் கொண்டிருந்தால்.. சரி வராது எண்டிட்டு....

இண்டைக்கு காதலர் தினத்துக்கு, ஒரு விசேசமும் இல்லையோப்பா.... எண்டு துணிஞ்சு கேட்டுட்டன்.

கெட்ட கேட்டுக்கு... இது ஒண்டு தான் குறைச்சல் எண்டு கத்த தொடங்கியவள், அரை மணித்தியாலமாகியும் நிப்பாட்டேல்லை.

ஏன் கேட்டன், எண்டு ஒரு மாதிரிப் போச்சு. :D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

just இவ்வளவும் தானா..??! இதுக்கொரு தினம் தேவையா..??! நாங்க தினம் தினம் தான் உந்த சொக்கிலேட்.. பிஸ்கட்.. மபின் எல்லாம் சாப்பிடுறமே...! அப்ப பச்சளர்ஸ் நமக்கு தினம் தினம் காதலர் தினம் தானா. அதுதான் நம்மளப் பார்த்து கல்யாணம் கட்டினவன் எல்லாம் அங்கலாய்க்கிறாங்க. இப்ப தானே புரியுது சங்கதி..! :lol:

எதுஎப்படியோ.. கணவன் - மனைவியாக காதலர் தினத்தை கொண்டாடிய (ம்) தும்ஸுக்கும்.. அதை இன்னொரு வடிவில் கொண்டாடிய.. அதை துணிஞ்சு இஞ்ச எழுதின.. சிறீ அண்ணாக்கும் வாழ்த்துக்கள்..! இருந்தாலும் சிறீயண்ணா.. நீங்களாவது ஏதாவது செய்து அல்லது வாங்கிக் கொடுத்து ஆளை அசத்தி இருக்கலாம். better luck for next time. :)

பகிர்ந்து கொண்டதற்கு நன்றி தும்ஸ்..! :)

Edited by nedukkalapoovan

தும்பளையான் உங்கள் மனைவி அசத்திவிட்டார்.

இது தான் முதல் வலண்டைன்ஸ் தினமா? இல்லையென்றால் இன்னும் சந்தோஷமே!!

நெடுக்ஸ் - இது உங்களுக்கு தேவையற்ற தலைப்பு - :lol:

போய் மிச்ச ஆராய்ச்சியை செய்து முடிக்கவும்! :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

மெட்ரோவில் போய் ஒரு ரோசா மரகண்டு பூக்களோடை இருந்திச்சு..! வாங்கிக் குடுத்து எஸ்கேப் ஆயிட்டன்..! :D

ஆனால் அலுவலகத்தில் சிவப்பு ரோஜா, சொக்லெட், வாழ்த்துமடல் என்று தந்தார்கள்..! எனக்கு ஒரு வயதான மூதாட்டி அதைத் தந்ததில் வருத்தமே..! :lol:

மெட்ரோவில் போய் ஒரு ரோசா மரகண்டு பூக்களோடை இருந்திச்சு..! வாங்கிக் குடுத்து எஸ்கேப் ஆயிட்டன்..! :D

ஆனால் அலுவலகத்தில் சிவப்பு ரோஜா, சொக்லெட், வாழ்த்துமடல் என்று தந்தார்கள்..! எனக்கு ஒரு வயதான மூதாட்டி அதைத் தந்ததில் வருத்தமே..! :lol:

பார்த்து - ரோசக்கண்டு டேஞ்சர் - அதால அடிவிழுந்தால் முள் குத்தும். அது இருக்கும் வரை கவனமாக நடந்து கொள்ளவும்! :lol:

அலுவலகத்தில் வயதான மூதாட்டியாவது தந்தாரே. அதுவும் இல்லாவிட்டால்? சற்று யோசித்துப்பார்க்க வேண்டும்! :D

  • கருத்துக்கள உறவுகள்

அனுபவித்து எழுதியுள்ளார் தும்பிளையான்

இதுக்கு ஒரு காலம்வரைதான் நேரம் கிடைக்கும். அது கிடைக்கும்போது அனுபவித்துவிடணும்.

வாழ்த்துக்கள்.

நமக்கு சாதாரண நாட்கள்போலவே போய்விட்டது

அம்மாவுக்கு உடல் நலமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் தும்பளையான் மனிசி ஓடி,ஓடி திரிந்து கேக்கும்,மபினும்,காட்டும் தானா தந்தவா?...ஸ்பெசலாக ஒன்றும் சமைக்கவில்லையா?...எது,எப்படி இருந்தாலும் இந்த வலன்டைஸ் டே போல வாழ்க்கை பூரா சந்தோசமாய் இருக்க எனது வாழ்த்துக்கள்.

இந்த முறை எனக்கும் எக்கசக்க காட்டுக்கள்,கேக்குகள்,சொக்கிலேற்கள்,பூக்கள் கிடைத்தன...நான் பிறந்ததற்கான பலனை நேற்று தான் உணர்ந்தேன்.

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் தும்பளையான் மனிசி ஓடி,ஓடி திரிந்து கேக்கும்,மபினும்,காட்டும் தானா தந்தவா?...ஸ்பெசலாக ஒன்றும் சமைக்கவில்லையா?...எது,எப்படி இருந்தாலும் இந்த வலன்டைஸ் டே போல வாழ்க்கை பூரா சந்தோசமாய் இருக்க எனது வாழ்த்துக்கள்.

இந்த முறை எனக்கும் எக்கசக்க காட்டுக்கள்,கேக்குகள்,சொக்கிலேற்கள்,பூக்கள் கிடைத்தன...நான் பிறந்ததற்கான பலனை நேற்று தான் உணர்ந்தேன்.

அதெல்லாம் சமையல் அறையில் சமைப்பதில்லை. :rolleyes: உங்களுக்கு கிடைத்த தின் பன்டங்களை ஒரு ஓரோமாக இருந்து சாப்பிட வேண்டியது தானே. :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னத்தை சொல்லுறது எண்டு தெரியேல்லை? என்ரைமூத்தது சிவப்பு பலூனோடையும் ஒரு றோசாப்புகெட்டோடையும் காலமை வெள்ளனவே ஏரியா செய்ய வெளிக்கிட்டுது.........கடைக்குட்டி எனக்கும் மனுசிக்கும் காவல்????பலன்ரையினோடை கொஞ்சம் புடுங்குப்பட்டுப்போட்டு......பிறகு வழமையான சோறுகறியோடை வலன்ரையின் டே முடிந்சுது........எண்டாலும்.......

:D

:lol:

.

வீட்டில குட்டீஸ் வந்திட்டினம் என்டால் வலன்டைன்ஸ் டே, வாலில டின் கட்டின டேய்ஸ் ஆயிடும். அதற்குமுன் அனுபவிக்க வேண்டியத அனுபவிச்சிறோனும் தும்பளையான்.

Project deadline கிட்ட என்பதால் வேலை முடிந்து இரவு லேட்டாக வீட்டை போனால் புட்டும் கணவாய்க்கறியும் இருந்தது. ஒரு வெட்டு வெட்டிவிட்டு ஏப்பம் வரமுதல் படுத்தவன் தான் அடுத்த நாள் 5:30 க்குத் தான் முழிச்சுப் பார்த்தன் :(

  • கருத்துக்கள உறவுகள்

அதெல்லாம் சமையல் அறையில் சமைப்பதில்லை. :rolleyes: உங்களுக்கு கிடைத்த தின் பன்டங்களை ஒரு ஓரோமாக இருந்து சாப்பிட வேண்டியது தானே. :)

உங்களுக்கு இது ஒன்டுமே கிடைக்கவில்லை என்டு பொறாமை :D:lol::D

காலையில் வேலைக்குப் போனால், கரும் ரோஜா நிறத்தில் ஒரு அழகான 'என்வொலப்' விசைப்பலகையின் கீழ் சொருகியிருந்தது. ஒரு கணம் தேவதைகள் வந்து இதயத்தில் குதிப்பது மாதிரி ஒரு உணர்வு. யாராயிருக்கும் என நினைத்து கடிதத்தை உடைக்கப் போனேன். மனச்சாட்சி தடுத்தது.

வேண்டாம் எறிந்து விடு. கண்ணியமாய் வாழ். (சே... சொன்னாக் கேட்கிறாளுகளா. இந்தப் பொண்ணுங்களோட தொல்லை தாங்க முடியல்லப்பா)

குப்பைக் கூடையை நோக்கி நடந்தேன். இருந்தாலும் மனம் பொறுக்கவில்லை. சாத்தான் ஆலோசனை சொன்னான்.

'யாரது என்றாவது பார்க்கலாம்தானே'

(நேற்றுக்கூட 'அந்தியா' வுடன் வேலை விடையமாமாகக் கதைக்கும் பொழுது, அவளின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றித்தான் கூடக் கதைத்தாள். அவளின் பார்வையும் சரியில்லை.

சீ... அவளாயிராது. அவளுக்கு ஏற்கனவே ஒரு 'போய் பிறண்ட்' தடியன் இருக்கிறான்.)

பக்கத்திலிருந்த கழிப்பறைக்குள் சென்று கதவைச் சாத்தினேன். கையில் சிறிது நடுக்கம். கடிதத்தை மெதுவாக பிரிக்கத் தொடங்கினேன். அட்டையின் முன்பக்கத்தில் மெல்லிய இளம் சிவப்பில் ஒரு இதயம் வரையப்பட்டு அதன் மேல் 14 என்று எழுதியிருந்தது. அடுத்த பக்கத்தைத் புரட்டத் தொடங்கினேன்...........

'வேண்டாம். திறக்காதே. எறிந்துவிடு'

'ஒருதரம் யார் அனுப்பியிருக்கிறாள் என்று பார்ப்பதால் ஒன்றும் குறையப்போறதில்லை'

மடலின் அடுத்த பக்கத்தைப் புரட்டினேன்.

'இன்று உன்னைக் காண்பதில் மகிழ்ச்சியடைகிறோம்'

பன்னாடைகள். நான் வேலை செய்யும் நிறுவனம், ஊழியர்கள் அனைவருக்கும் 'வலண்டைன் வாழ்த்து மடல் அனுப்பியுள்ளார்கள். ரொம்ப முக்கியம்.

போங்கடா நீங்களும் உங்கட வாழைப்பழ வலண்டையினும்.

Edited by தப்பிலி

  • கருத்துக்கள உறவுகள்

தொலைபேசி மணி அடித்தது .

மகள்: அப்பா இண்டைக்கு என்ன நாள் தெரியுமா?

நான்: இல்லை என் பிள்ளை?

மகள்: இண்டைக்கு காதலர் தினம்.

நான்:அதுக்கு என்ன?

மகள்:அம்மாக்கு ஏதாவது வாங்கிக் கொண்டு வாங்கோ.

நான்:அதெல்லாம் ஒண்டுமில்லை விசர் விளையாட்டு

நீ புத்தகத்தை எடுத்துப்படி வீட்டுப்பாடங்களைக் கவனி

மகள்:அப்பா அதெல்லாம் நான் செய்யிறன்

நீங்க மறக்காமல் வாங்கிக் கொண்டு வரவேணும்.

நான்:வேண்டாம் பிள்ளை

மகள்:ஏன் உங்களுக்கு அம்மாவில் விருப்பம் இல்லையா?

நான்:யார் சொன்னது ?அதுக்கு எதுக்குப் பரிசு

மகள்:இல்லை அப்பா அம்மாக்கு ஏதாவது வாங்கி கொண்டு வராவிட்டால்

நான் உங்களோடை கதைக்க மாட்டன்

நான்:சரி சரி வாங்கிக் கொண்டு வாறன். :D

பக்கத்தில் இருக்கும் பூக்கடை

பூக்கள் வாங்கினது போன காதலர் தினத்திற்கு

அதுவும் மகளோடை வற்புறுத்தலால்.

மூன்று ரோஜாப்பூக்கள் சேர்த்துக் கட்டியிருந்தார்கள்

அழகாக இருந்தது.வாங்கி வீட்டை கொண்டு சென்று மனைவியிடம்

கொடுத்தேன்.

அம்மா மகளைக் கட்டிப் பிடித்துக் கொஞ்சினா. :D

மகள் அம்மாவிற்காக செய்து வைத்திருந்த கடித உறையை

மனைவி என்னிடம் தந்தா.

நான் உன்னைக் காதலிக்கிறேன் என் எழுதியிருந்தது.

நான் சிரித்தேன் மகளைக் கட்டிப் பிடித்துக் கொஞ்சினேன்.

அம்மாவும் அப்பாவும் காதலிப்பதில் பிள்ளைகளுக்கு

எவ்வளவு சந்தோசம். :D

  • கருத்துக்கள உறவுகள்

என்னை பொறுத்தளவில் எனக்கு எல்லாநாளுமே காதலர்தின நாட்கள்தான் நான் எனது மனைவியை ஒவருநாளும் காதலிப்பேன் அதே போன்று என் மனைவியும் என்னை தினமும் காதலிப்பார்

இதற்காக ஒரு தினம் என்பது எமக்கு தேவைப்படவில்லை

காதலர் தினம் என்பது எப்போதாவது காதலிப்பவர்களுக்குரியது, தினமும் காதலிக்கும் எமக்கு இது தேவைதானா ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அம்மாவும் அப்பாவும் காதலிப்பதில் பிள்ளைகளுக்கு

எவ்வளவு சந்தோசம். :D

அவங்க இப்பவே ட்ரெயினிங் எடுக்கிறாங்கள்.... :lol::icon_mrgreen::icon_idea:

இளன்தாரிகள் என்டு பார்தால் கருது எழுதுற எல்லாம் கிழடுகள் போல இருகபா ? :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

பெப்ரவரி 15 காலை வேலைக்குப் போய் கோப்பி போடும் இயந்திரத்தை தயார் படுத்திக் கொண்டிருக்க பக்கத்து அறையில் இருந்தவன் "நேற்று உன்ர காதலர் தினம் எப்படிப் போனது?" என்று கேட்டான். அப்ப தான் அதுக்கு முதல் நாள் பெப்ரவரி 14 எண்ட ஞாபகம் வந்தது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக் கூறிய அனைவருக்கும் நன்றி. ஈசன் சொன்ன மாதிரி குட்டீஸ் வந்தால் எங்கட கதை குளோஸ் ஆகீடும் அதால தான் "காற்றுள்ள போதே தூற்றிக்கொள்". சஜீவன் அண்ணருக்கு மட்டும் தான் "ஸ்பெசல் சாப்பாடு" விளங்கியிருக்குப் போல. ரதியக்கா மனிசி நல்லா சமைப்பாள் சோ சாப்பாடுக்கு பஞ்சம் இல்லை. வண்டி வந்திடும் எண்டு நான் தான் சாப்பாட்டில் கொஞ்சம் கவனம். நெடுக்ஸ் அண்ணா, என்னதான் வெளியால சாப்பாடு கிடைச்சாலும் வீட்டுச் சாப்பாட்டில ஒரு "கைப் பக்குவம்" இருக்கும் கண்டியளே :icon_mrgreen:

தமிழரசு அண்ணா, எனக்கும் எல்லா நாளும் காதலர் தினம் மாதிரித்தான் எண்டாலும் ஏதாவது வித்தியாசமா செய்து பாக்க விருப்பம். உதாரணமா நேற்றைக்கு மூவீஸ் நைட், இண்டைக்கு சொப்பிங் நைட், நாளைக்கு ஒரு டின்னர்.

.

  • 11 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சா... ஒரு வரியம் டக் எண்டு ஓடீட்டுது. மனிசி மண்டி மண்டி காரை
எடுத்துக்கொண்டு கிளம்பீட்டுது. நேற்றிரவு குசினீக்க சாடையான கேக் வாசம்
வந்தது, அவளிண்ட செப்ரைச ஏன்  குழப்புவான் எண்டிட்டு தெரியாத மாதிரி விட்டிட்டன். வீட்ட போனாத்தான் மிச்ச கள  நிலவரங்கள் தெரிய வரும்.  :wub:

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோருக்கும் காதலர் தின வாழ்த்துக்கள் !


 

ஜேசுவை ஒருமுறை நினையுங்கள்...... எல்லா மனிதரையும் நேசித்துகொள்ளுங்கள் .


 

அன்பினால் எதையும் சாதிக்கலாம் என்று நம்பியவன் ஜேசு.


 

 


 

முடிந்தால் உங்கள் உங்கள் ஜாதிகாரருக்கு ஒரு வலேண்டைன்  கார்டு  வாங்கி போட்டுவிடுங்கள்.


 

 


 

நாம் தமிழரல்லவா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.