Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெனீவா போகவில்லையாம் – அறிக்கை வெளியிட்டார் சம்பந்தன்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

sampanthan1.jpg

ஐ.நா. மனித உரிமை பேரவைக் கூட்டத்தொடரின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜெனீவாவில் பிரசன்னமாகுவதில்லை எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் விடுத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“ஒட்டுமொத்த நல்ல நிலையை நாடு தற்போது இருக்கும் நிலைமைக்கு அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகளும், மேற்கொள்ளத் தவறிய நடவடிக்கைகளும் மட்டுமே மூலகாரணம் என்பதை நாட்டுமக்கள் உணர்ந்து கொள்ளவேண்டும்.

இனப்பிரச்சினைக்கான இறுதித்தீர்வை எட்டுவதில் எவ்வித தடையையும் அரச தரப்பு போடக்கூடாதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுக்கிறது” எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் அவ்வறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஜெனீவாவில் பெப்ரவரி 27, 2012 தொடக்கம் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் மன்றத்தின் 19 ஆம் கூட்டத் தொடரிலே இலங்கை தொடர்பான விடயம் முக்கிய இடம் வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐக்கியநாடுகள் செயலாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு அறிக்கை மற்றும் இலங்கை அரசினால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்களும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை ஆகிய இரு அறிக்கைகள் சர்வதேச மனிதநேய மற்றும் மனித உரிமைகள் சட்டம் ஆகியவைகளை மீறியமை, இனப்பிரச்சினைக்கான காரணிகள், மெய்யான நல்லிணக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய அரசியற்தீர்வொன்றை அடைதல், இராணுவமயமாக்குதலை நீக்குதல், துணை ஆயுதக்குழுக்களை கட்டுப்படுத்தல், குடியியல் நிர்வாகத்தை வலிவூட்டுவதற்கான அத்தியாவசியத் தேவை, தகவல் சுதந்திரம், ஊடக சுயாதீனம், தடுப்பு சம்பந்தமான வெளிப்படைத்தன்மை, மேலும் தடுத்துவைத்துள்ளவர்களைச் சந்திக்கும் சுயாதீனம் உட்பட வேறு விடயங்களையும் உள்ளடக்கியுள்ளன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதித்துவப்படுத்தி நிற்கின்ற, இனப்பிரச்சினையினால் பிரதானமாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த விடயங்கள் மிக முக்கியமானவைகளாகும். யுத்தமும் அது தொடரப்பட்ட முறையும் அவர்களுக்கு பாரிய பின்விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது.

இப்படியான விடயங்கள் கலந்துரையாடப்படும் எந்த தொடர் நிகழ்வுகளைப் பற்றியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நியாயமான கரிசனையைக் கொண்டுள்ளது. இந்த இரு அறிக்கைகள் தொடர்பிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது நிலைப்பாட்டைப் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளதுடன் அதன் நிலைப்பாட்டினை மீளவும் வலியுறுத்துகிறது.

கடந்த ஆறு தசாப்த காலமாக இலங்கை அரசானது இலங்கைக்குள் இருக்கும் பல்தேசிய, பல்கலாசார பன்மைச் சமுகத்துக்கான தனது கடப்பாடுகளை நிறைவேற்றத் தவறியுள்ளமையும், சர்வதேச உடன்படிக்கைகள் மற்றும் அது கைச்சாத்திட்டுள்ள சர்வதேச உடன்பாடுகள் ஆகியவைகளை மீறிச்செயற்படுவது கவலைக்குரிய விடயங்கள் என்பதையும், இதனால் தான் தற்போதைய நிலைமைக்கு இலங்கை முகம்கொடுக்க நேர்ந்துள்ளது என்பதையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேலும் கூறிவைக்கிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐக்கிய இலங்கைக்குள் நிலைத்து நிற்கத்தக்கதும் நடைமுறைக்கு ஏதுவானதுமான நேர்மையான அரசியற்தீர்வைக் கண்டடைவதற்கான தனது அர்ப்பணத்தைப் பகிரங்கமாகக் கூறிவந்துள்ளதுடன், அதனை அது மீளவும் வலியுறுத்துகிறது. ஒரு வருட காலத்துக்கு மேலாக அரசாங்கத்துடன் சேர்ந்து அத்தகைய தீர்வைக் கண்டடைவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆக்கபூர்வமான வழிமுறைகளிலே முயன்றும் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய அரசியற் தீர்வை கண்டடைவதிலே அரசுக்கு நேர்மையான அர்ப்பணிப்பு இல்லாமையினால் அது எவ்வித முன்னேற்றத்தையுமே காணவில்லை.

தானே ஏற்றுக்கொண்ட பொறுப்புக்களை மீறுவதில் இலங்கை அரசாங்கம் பெயர்போனது. அதுமட்டுமன்றி, பொறுப்புக்கூற வேண்டிய கடப்பாட்டை பகிரங்க அறிக்கைகள் மூலமாக நிறைவேற்றுவதிலும் அது பெயர்போனது.

தற்போது நிலவும் நிலையற்ற நிலைமை தொடருமேயானால் அது வன்முறைக்கு வித்திடலாம், குடிமக்கள் அதனால் மீண்டும் பாதிக்கப்படலாம் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அஞ்சுகிறது. தற்போதைய சூழ்நிலையிலே அமைதி காக்கப்படுவதும், பிரச்சினைகளைத் தவிர்ப்பதும் அவசியமான செயற்பாடுகளென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கருதுகிறது.

எனவே, இந்தக் காரணங்களால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜெனீவாவில் பிரசன்னமாயிருக்க மாட்டாது எனத் தீர்மானித்துள்ளது.

ஒட்டுமொத்த நல்ல நிலையை நாடு தற்போது இருக்கும் நிலைமைக்கு அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகளும், மேற்கொள்ளத் தவறிய நடவடிக்கைகளும் மட்டுமே மூலகாரணம் என்பதை நாட்டுமக்கள் உணர்ந்து கொள்ளவேண்டும். இனப்பிரச்சினைக்கான இறுதித்தீர்வை எட்டுவதில் எவ்வித தடையையும் அரச தரப்பு போடக்கூடாதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுக்கிறது.

http://www.saritham.com/?p=51836

நல்ல முடிவு என்றே எண்ணுகிறேன்.

ஏற்கனவே சிங்களம் தனக்கு எதிர்பார்த்த ஆதரவு கிடைக்காத நிலையில் அங்கு செல்வது மூலம் சிங்கள கோபம் எமது மக்கள் மீதே திரும்பும். மாறாக இரகசிய சந்திப்புக்களையும் அரசியல் நடவைக்களையும் எமது மக்களின் விடுதலை நோக்கி நகர்த்தவேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சம்பந்தர் நல்லா அரசியல் செய்றார்.

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பு பேச வேண்டிய இடத்தில் பேசாமல் கொழும்பில் நின்று கத்தி என்ன பிரயோசனம்??

எமது மக்களை பிரநிதித்துவப்படுத்துபவர்கள் நிச்சயமமாக உலகின் பல நாடுகள் கலந்து கொள்ளும் நிகழ்வில் கலந்து கொண்டு எமது மக்களின் குறைகளை தெரிவிப்பது நல்லது என நினைக்கிறேன்.அதாவது எமக்கு சார்பாக பேசும் நாடுகளுக்கு உறுதுணையாக செயற்பட்டு போர்க்குற்றங்களை நிரூபிக்க உதவும்.

கூட்டமைப்பு தனது இருப்பை தக்க வைக்க (கொழுப்பில்) இப்படி ஒரு செயலை செய்வதாக எண்ண தோன்றுகிறது.

Edited by nunavilan

... சம்பந்தரும், மகிந்தரும் அண்மையில் சந்தித்தித்தபோது எடுக்கப்பட்ட இம்முடிபு எடுக்கப்பட்டதா????????? .... இந்த சம்பந்தன்/சுமத்திரன் கும்பல் தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்குள் இருக்கும் மட்டும் ... மகிந்தரின்/சிங்களவரின் காட்டில் மழைதான்!!!

இந்த முறை போகவேண்டிய அவசியம் இல்லைத்தான்!

ஆனால் சுரேஷ் அல்லது யாரோ கூட்டமைப்பைச் இளநிலை உறுப்பினர்கள் பார்வையாளராக போவது நல்லது. நிறைய அரசியல் கற்றுக்கொள்ளலாம்.

ஜெனிவா செல்வதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேற்கொண்ட தீர்மானத்திற்கு இலங்கை அரசாங்கத்தினதும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கடும் போக்காளர்களதும் கடுமையான அழுத்தங்களே காரணம் என குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தெரிய வந்துள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கனகரட்ணம், கிழக்கு மாகாணத்தில் இருந்து அருண் தம்பிமுத்து மற்றும் பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லா ஆகியோர் இன்று ஜெனிவாவை சென்றடைய உள்ளதாக குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பில் இருந்து தெரிலித்துள்ளார்.

தானே ஏற்றுக்கொண்ட பொறுப்புக்களை மீறுவதில் இலங்கை அரசாங்கம் பெயர்போனது. அதுமட்டுமன்றி, பொறுப்புக்கூற வேண்டிய கடப்பாட்டை பகிரங்க அறிக்கைகள் மூலமாக நிறைவேற்றுவதிலும் அது பெயர்போனது.

தற்போது நிலவும் நிலையற்ற நிலைமை தொடருமேயானால் அது வன்முறைக்கு வித்திடலாம், குடிமக்கள் அதனால் மீண்டும் பாதிக்கப்படலாம் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அஞ்சுகிறது. தற்போதைய சூழ்நிலையிலே அமைதி காக்கப்படுவதும், பிரச்சினைகளைத் தவிர்ப்பதும் அவசியமான செயற்பாடுகளென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கருதுகிறது.

எனவே, இந்தக் காரணங்களால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜெனீவாவில் பிரசன்னமாயிருக்க மாட்டாது எனத் தீர்மானித்துள்ளது

கூட்டமைப்பு போகாமல் விடுவது முற்று முழுதாக எதிர்க்கப்படவேண்டிய சமாசாரமில்லை. ஆனால் சம்பந்தர் ஏன் கூட்டமைப்பு போகவில்லை என்பதை விளங்கப்படுத்தியிருக்கும் விதம் சர்வதேசமோ அல்லது தமிழ்மக்களோ எளிதில் புரிந்து கொள்ளத்தக்க மாதிரியாக இருப்பதாகத்தெரியவில்லை. இது "சம்பந்தர் எதிர்ப்புக்கு" தூபம் போட மட்டும் காணும் போல்த்தான் இருக்கு.

இந்த அமர்வு இலங்கைக்கு பக்கசார்பானது. இலங்கை எதிர்க்கிறதோ இல்லையோ. சம்பந்தர் இதைப் பகிஸ்கரிக்கலாம். போகாமல் விடுவது எதையும் கெடுக்காது. யாராவது ஒருவரின் உயிரை இலங்கை அரசிடமிருந்து காக்காகுமாயின் அதை வார்த்தை அளவிலேயே ஏற்றுக்கொள்ளாம்.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம் ஒரு பிழைப்பு.. இவரு கருணாநிதியவிட பெரிய ஆளா தெரியறார்.. என்ன சிங்களவன் போட்டுவிடுவானோ..? அப்படியே போட்டா தான் என்ன..? சிங்களத்தின் உண்மை முகம் வெளியாள் வரும் இல்லையப்பா..? கலந்து கொண்டால் புலிகளுக்கு பதில் பதில் சொல்ல வேண்டிய கடப்பாடு வந்துடும் என பயமோ நல்லா ஆடுறாங்கப்பா கேமை..

2010070850370405.jpg

இவர்கள் கலந்து கொள்ளாதற்கு கிந்திய கைத்தடிகளின் ஆசை வார்த்தை .. இஞ்சி மிட்டாய் ... குச்சி ஐசு ... போன்ற காரணங்களே உள்ளது என தெள்ள தெளிவாக தெரியவருகிறது... ^_^ ^_^

டிஸ்கி:

வேற நல்ல ஆட்களை தேர்ந்தெடுங்கப்பா... ஜெனீவா காரன் கூப்பிட்டாலும் இவர்கள் போக மாட்டார்கள் போல தெரியுது... ^_^ ^_^

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இந்தச் செய்தியை வாசித்ததும் இரத்தக்கொதிப்பு ஏறிவிட்டது.கருணாநிதி பாணி அரசியலாக இருக்கிறது. ஜெனிவாவில் கலந்து கொண்டு எமது பிரச்சனையைச் சர்வதேசம் அறியச்செய்ய வேண்டிய பொறுப்பிலிருந்து கூட்டமைப்பு தவறிவிட்டது.கூட்டமைப்பு எந்த மிரட்டலுக்கும் அஞ்ச வேண்டிய நிலை தற்போதைய நிலையில் இல்லை.ஏனெனில் சிறிலங்காவுக்கு மேற்குலக நாடுகள் சுருக்கு போட்டுள்ள நிலையில் அதை மேலும் இறுக்கக் கூடிய பாதகமான வேலையை சிறிலங்கா செய்யாது. எனக்கு ஒரு சந்தேகம் இந்தியா மேற்குலகத்தை திருப்திப்படுத்துவதற்காக சிறிலங்காவுக்குச் சார்பாக ஜெனிவாவில் நடந்துகொள்வது சாத்தியமில்லை என்ற செய்தி வெளியாகி அடுத்த நாளே கூட்டமைப்பு குத்துக்கரணமடித்திருப்பது இதுவும் இந்தியாவின் ஆலோசனைப்படி நடத்தப்பட்ட இந்தியாவின் டபுள்கேம் ஆக ஏன் இருக்கக் கூடாது.வழக்கு என்று வரும்போது பாதிக்கப்பட்டவர் பிரசன்னமாகி தனக்கு ஏற்பட்ட கொடுமைகளை விபரிக்க வேண்டும்.பிரதிவாதியின் பிரசன்னம் அவசியமில்லை.வாதியே வழக்குபற்றி அக்கறை கொள்ளாதபோது வழக்கை நடத்துவதில் பொருள்இல்லை.தள்ளுபடி செய்யப்படும்.

கூட்டமைப்பு ஜெனிவா செல்லாததை சாதகமான முறையில் பார்த்தோமானால்

1.உறுதியற்ற வெளியார் அழுத்தங்களுக்கு பணியக்கூடிய ஒரு அரசியல் குழுவை நம்பி மேற்குலகம் தனது நடவடிக்கைகளை மேற்கொள்ளாது.(மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்காது.)

2.அப்படியான அழுத்தங்களுக்கு அப்பாற்பட்ட புலம்பெயர் தமிழர் அமைப்புக்களை நோக்கி அதன் கவனம் திரும்பலாம்.

3.வெண்ணை திரண்டு வரும்போது தாழியை உடைக்கும் ஆண்மையற்ற கூட்டமைப்பைத் தூக்கியெறிந்து புதிய அரசியல் கட்டமைப்பை தாயக மக்கள் தேர்ந்தெடுக்கலாம்.அது தமிழ்க் காங்கிரசாக தற்போதைய நிலையில் ஏற்றுக்கொள்ளப்படலாம்.அங்கு இளய தலைமுறை அரசியல்வாதிகளும் கூட்டமைப்பினால் ஒதுக்கிவைக்கப்பட்ட புலிகளுக்குச் சார்பானவர்கள் பலர் இருக்கிறார்கள்.அவர்களும் ஏமாற்றும் நிலைவரின் மீண்டும் ஓரு ஆயுதப்போராட்டம் தவிர்க்க முடியாத நிலையில் ஏய்படக் கூடிய சாத்தியங்களும் இல்லாமல் இல்லை.

Edited by புலவர்

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் தற்போது வராதது சரியாகவே படுகிறது

அரசு ஐ.நாவில் தோற்கும்நிலை வரும்போது அவர்களை காக்கும்படி அங்கு வைத்து அழுத்தம் கொடுக்கப்பட்டால் தாம் திரும்பிப்போகணும் என்ற நிலையை கவனத்தில் எடுத்து அவர்கள் தாளம்போடவேண்டிய இக்கட்டான நிலை வரலாம்.

எனவே அவர்கள் ஏன் வரவில்லை என்ற செய்தியுடன் (சமாதானப்பேச்சை நாமாக கெடுக்கவிரும்பவில்லை) இலங்கை அரசு தொடர்ந்து ஏமாற்றிவருகிறது நீங்கள் அழுத்தம் கொடுங்கள் என்ற செய்தியையும் அவர் சொல்லியுள்ளதாகவே தெரிகிறது.

இதுவே தற்போது அவர்களால் அங்கு முடியும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் மீது தமிழ் மக்களுக்கு எப்போது ஒருவித சந்தேகமுள்ளது அதைப்போக்க கூட்டமைப்பினர் நிறைய உழைக்க வேண்டியுள்ளது அதிலும் குறிப்பாக சுமந்திரன் போன்றோரில் நிச்சயம் அவர்களைப்பற்றிய சந்தேகங்களை போக்கவேண்டும்.

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு ஜெனிவா செல்லலாம் என்ற செய்தி முன்பு

வந்தபின்பு, இப்போது மாறானசெய்தி வருவது மிகுந்த ஏமாற்றம் த‌ருகிறது.

இவர்களை வழிநடத்தும் மேலதிகாரிகள் வேறு எங்கோ இருக்கிறார்கள்.இவர்கள்

வெறுமனே 'அடிபணி அரசியல்' நடத்தும் கூட்டமே என்ற எண்ணமே

எழுகிறது.தமிழர்களின் நலனில் அக்கறையுள்ள எல்லோரும் இவர்களின்

வருகையை வேண்டிநிற்கும்போது இவர்களின் செய்கை மிகுந்த வருத்தம்

தருகிறது.மற்றவர்களின் செயற்பாட்டில் சுயநலம்,சூழ்ச்சி,இரட்டைவேடம்

இருக்கிறது என்று குற்றம்சாட்டும் நாம், இந்த நம்மவர்களின் செயலை

எப்படி விபரிப்பது? ஒரு அன்பர் மேலே குறிப்பிட்டதுபோல் இந்தியாவின்

'கட்டளை' இருக்குமோ? பொறுத்திருந்து பார்ப்போம்.இறைவன் அருளால்

நல்லது நடக்குமென்று நம்புவோம்.

இதெல்லாம் ஒரு பிழைப்பு.. இவரு கருணாநிதியவிட பெரிய ஆளா தெரியறார்.. என்ன சிங்களவன் போட்டுவிடுவானோ..? அப்படியே போட்டா தான் என்ன..? சிங்களத்தின் உண்மை முகம் வெளியாள் வரும் இல்லையப்பா..? கலந்து கொண்டால் புலிகளுக்கு பதில் பதில் சொல்ல வேண்டிய கடப்பாடு வந்துடும் என பயமோ நல்லா ஆடுறாங்கப்பா கேமை..

2010070850370405.jpg

இவர்கள் கலந்து கொள்ளாதற்கு கிந்திய கைத்தடிகளின் ஆசை வார்த்தை .. இஞ்சி மிட்டாய் ... குச்சி ஐசு ... போன்ற காரணங்களே உள்ளது என தெள்ள தெளிவாக தெரியவருகிறது... ^_^ ^_^

டிஸ்கி:

வேற நல்ல ஆட்களை தேர்ந்தெடுங்கப்பா... ஜெனீவா காரன் கூப்பிட்டாலும் இவர்கள் போக மாட்டார்கள் போல தெரியுது... ^_^ ^_^

உமக்கு என்ன புரிந்து நக்கல் பன்னுறீர்?

சமந்தர் கூட்டம் போய் ஜெனிவாவில் போட்டுக் கொடுத்தாலும் கோவத்தில் தமிழர்கள் மீது அடிப்பார்கள் அதே நேரம் போட்டுக் கொடுத்தும் இலங்கை அரசு தப்பினால் அந்த சந்தோசத்திலும் தமிழர்களுக்கு அடிப்பார்கள் சம்ந்தர் போய் சொல்லி தான் இலங்கை மீதான் குற்ற பிரேரனை வெற்றி பெறும் என்ற நிலையில்லை . இந்த நிலையில் சம்ந்தர் சோர்று வழியை பார்த்து இருக்கிறார்................

  • கருத்துக்கள உறவுகள்

ஐநாவிலிருந்து அழைப்பு வந்தால்தானே பங்குபற்றமுடியும்..! இல்லாவிட்டால் வெறும் பார்வையாளர்களாகச் சென்று வரலாம்..! அப்படிச் செல்வதால் பயன் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை..! :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பு ஜெனீவா போயி.. பீரிஸ்.. டக்கிளசோட சேர்ந்து நின்று படம் பிடிச்சிட்டு வரத்தான் முடியுமே தவிர.. அதற்கு மிஞ்சி என்ன செய்ய முடியும். அதிலும் ஊரில் நின்று கொண்டு மக்களின் கோரிக்கைகளை ஐநா விடம் ஆணித்தரமாக முன் வைத்தால்.. அமெரிக்கா போன்ற நாடுகள் தங்களின் முடிவுக்கு உள்ளூரிலும் ஆதரவு உள்ளது என்பதை அறிந்து கொண்டு.. உறுதியாக செயற்பட முடியும்..!

மேலும் சிறீலங்காவுடனான முறுகல் போக்கை விடுத்து.. சர்வதேசத்திற்கு நாம் சிறீலங்காவோடு இணங்கிச் செயற்பட்டும் அவர்கள் தீர்வை தருகிறார்கள் இல்லை. எனவே நீங்கள் தான் அதனை பெற்றுத் தர வேண்டும் என்று சொல்ல இதனைப் பயன்படுத்தலாம். கூட்டமைப்பின் இந்த நகர்வை அப்படியான ஒரு கண்ணோட்டத்தில் பார்ப்பது தமிழ் மக்களுக்கு நல்லது. கூட்டமைப்பு மீதான சந்தேக பார்வை.. மற்றும் முரண்பாட்டை தவிர்த்து. கூட்டமைப்பில் உள்ள சுமந்திரன் போன்றவர்களின் செயலில் சந்தேகம் இருப்பினும் எல்லோர் மீதும் சந்தேகம் கொள்வது நல்லதல்ல..!

மேலும்.. கூட்டமைப்பு சாராத இதர தமிழ் தேசியம் சார் கட்சிகளும்.. இந்த நேரத்தில் சர்வதேச சமூகத்திற்கு ஆதரவாக சிறீலங்கா மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை தர வேண்டும். புலம்பெயர்.. மற்றும் தமிழக.. மலேசிய.. உலகத் தமிழ் சொந்தங்களும் இதனைச் செய்ய வேண்டும். அதுவே சர்வதேசம் நமக்காக துணிந்து நின்று குரல் கொடுக்க அவற்றை இன்னும் இன்னும் தூண்டும்..! :icon_idea:

Edited by nedukkalapoovan

நிச்சயமாக ... சம்பந்தருக்கு மகிந்தர் உயிராபத்தை ஏற்படுத்தும் அச்சுறுத்தல் விடுத்திருக்கலாம்???? ... இல்லை ... சம்பந்தரும் சேர்ந்து மகிந்தருடன் நாடகமாடி இருக்கலாம்? ... இரண்டுக்கும் சந்தர்ப்பங்கள் இருக்கின்றன!! ... சம்பந்தர் அன்ட் கோ கண்டிப்பாக சென்றிருக்க வேண்டும் ... ஈழத்தமிழர்களின் குரல்களேன, இவர்களின் கருத்துக்கள் நிச்சயம் எடுபட்டிருக்கும்!

நிச்சயமாக ... சம்பந்தருக்கு மகிந்தர் உயிராபத்தை ஏற்படுத்தும் அச்சுறுத்தல் விடுத்திருக்கலாம்???? ... இல்லை ... சம்பந்தரும் சேர்ந்து மகிந்தருடன் நாடகமாடி இருக்கலாம்? ... இரண்டுக்கும் சந்தர்ப்பங்கள் இருக்கின்றன!! ... சம்பந்தர் அன்ட் கோ கண்டிப்பாக சென்றிருக்க வேண்டும் ... ஈழத்தமிழர்களின் குரல்களேன, இவர்களின் கருத்துக்கள் நிச்சயம் எடுபட்டிருக்கும்!

நெல்லையான்: மேலே ஒரு கருத்துக் கூறுகிறது அழையாமல் சம்பந்தர் சென்றிருந்தால் அவர் பார்வையாளராக மட்டும் தான் இருக்க முடியும் என்று. அவர் பார்வையாளராக போனால் ஈழத்தவர்களின் குரலாக இருந்திருப்பாரா?

சம்பந்தர் தனது உயிருக்கு ஆபத்து என்று அறிக்கையில் குறிப்பிடவோ அல்லது மறை முகமாகவோ சுட்டவில்லை. சம்பந்தர் செய்தது தவறு இல்லாமலிருக்கலாம் என்று நினைப்போர், உயிராபத்து அவர் வரைக்கும் போகலாம் என்று கருத்து படத்தான் எழுதினோம். அது இலங்கையில் கடந்த காலங்களில் நடந்தவற்றை வைத்து நம் தனிப்பட அப்பிப்பிராயமாகத்தான் எழுதினோம்.

ந.க.அரசு ஏற்கனவே சில பிரதிநிதிகளின் பெயர்களைக் குறிப்பிட்டுவிட்டார்கள். நெடிவயன் போவார இல்லையா தெரியாது. இமானுவல் அடிகளார் போகிறாரா?. பொதுவில் தமிழ்தலைவர்கள் பெரிதாக அக்கறை காட்டாத இடதிற்கு சம்பந்தர் அழையா விருந்தாளியாகப் தனியப் போய், டக்கிளஸ், கனகரத்தினம், ...50 மேற்பட்ட சிங்கள, முஸ்லீம் தலைவர்களுடன் எப்படி போட்டி போடு ஒரு கருத்தை வெளிக்கொணர முடியும்?

Edited by மல்லையூரான்

கனகரத்தினம் சிங்கள அரச பயங்கரவாதிகளின் சூழ்நிலைக் கைதி என்பதையும், டக்லஸ் சிங்கள அரச பயங்கரவாதிகளின் நீண்ட நாள் கைக்கூலி என்பதையும், தமிழ் மக்களின் சொத்துக்களைச் சூறையாடிய ஏனையவர்களும் பதவி சுகங்களுக்காக சிங்கள அரச பயங்கரவாதிகளின் விசிறிகளாக உள்ளார்கள் என்றும் கையேடுகளைத் தயாரித்து சகலருக்கும் வழங்கவேண்டும்.

சிங்கள அரச பயங்கரவாதிகளின் கைக்கூலிகளாக இயங்கும் டக்லஸ் குழுவின் கடத்தல், கப்பம், கொள்ளை நாடகம் ஏற்கனவே எல்லாரும் அறிந்ததுதான். மகேஸ்வரன், ரவிராஜ் உட்பட பல தமிழ் அரசியல்வாதிகளின் கொலைகளில், அற்புதன், நிமலராஜன் போன்ற பத்திரிகையாளர்களின் கொலைகளில், மாவை, சிவாஜிலிங்கம் போன்ற தமிழ் அரசியல்வாதிகளின் கொலை முயற்சிகளில் டக்ளசின் பங்களிப்பு போன்றவை இந்தக் கையேடுகளில் இடம்பெற வேண்டும். .

போகாவிட்டாலும் பரவாயில்லை அதற்கான காரணத்தை முன் வைக்க வேண்டும்.

காலம் காலமாக முழு தலைமைகளும் மக்களுக்கு ஒன்றும் சொல்லாமல் தான் ஏமாற்றினார்கள். இது அரசியல் ,ஆயுத தலைமைகளும் அடக்கம்.உங்களுக்கு ஏன் சொல்ல வேண்டும் என்ற அதிகார திமிர்தான் காரணம் ,மக்களுக்கு சொல்லியிருந்தால் பலரின் தலைகள் அவர்களாலேயே தப்பியிருக்கும் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போகாவிட்டாலும் பரவாயில்லை அதற்கான காரணத்தை முன் வைக்க வேண்டும்.

காலம் காலமாக முழு தலைமைகளும் மக்களுக்கு ஒன்றும் சொல்லாமல் தான் ஏமாற்றினார்கள். இது அரசியல் ,ஆயுத தலைமைகளும் அடக்கம்.உங்களுக்கு ஏன் சொல்ல வேண்டும் என்ற அதிகார திமிர்தான் காரணம் ,மக்களுக்கு சொல்லியிருந்தால் பலரின் தலைகள் அவர்களாலேயே தப்பியிருக்கும் .

அதென்னவோ செத்த, செத்துகொண்டிருக்கிற தமிழினத்தை ஆள்வதில், ஆள்வதாக கட்டுவதில் யாருக்குத்தான் குரூர திருப்பதி இல்லை :( ஒன்று மட்டும் நிட்சயம் சம்பந்தன் போக இன்னுமொரு சும்பந்தன், ................ மீண்டும் அதே பாட்டு "ஆழக்கடல் எங்கும் சோழ மகராஜன் ஆட்சி புரிந்தானே அன்று"

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களின் தலைவர்களே ஜெனிவா போகவில்லை.சாதாரண மக்கள் நாங்கள் ஏன் ஜெனிவா போக வேண்டும்?எங்களுக்கும் அழைப்புக் கிடைக்க வில்லையே!!!!!!என்று புலம்பெயர் மக்கள் நினைத்து விட்டால்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

அரசியலில் சொதப்புவது எப்படி? நடைமுறைப்படுத்துகிறது கூட்டமைப்பு – சரிதம் ஆசிரியர் பீடம்!

ஜெனீவாவில் என்ன நடக்கப்போகிறது? என்ற பல்லாயிரம் கேள்விகளுடன் சர்வதேசமும், தமிழ் மக்களும் நாட்களை எண்ணிக் கொண்டிருக்கின்ற பொழுது வாய்ச்சொல் வீரரடி பாணியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அரசியல் வங்குரோத்தின் அடிமட்டத் தனத்தினை வெளிப்படுத்தியிருக்கின்றது.

‘ஜெனீவா மாநாட்டில் நாங்களும் பங்கேற்கிறோம். தமிழ் மக்களுக்கு நேர்ந்த

இன்னல்கள் தொடர்பில் அங்கு நேரடியாகவே முறையிடப்போகிறோம்’ என்று அறிக்கைகளை வெளியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இறுதியில் தனது நிலைப்பாட்டினை மூட்டை கட்டிவைத்துவிட்டு குழந்தைகளுக்கு நிலாச்சோறு காட்டும் பாணியில் இந்தியாவிற்குச் செல்வதாக முடிவெடுத்திருப்பதாகத் தெரிவித்திருக்கின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜெனீவா செல்ல வேண்டும், அங்கு தமிழர் பிரச்சினைகள் தொடர்பில் கருத்துக்களை முன்வைக்கவேண்டும் என்று யாரும் வலியுறுத்தவில்லை. ஆனாலும் தாமாகவே முன்வந்து இவ்வாறான ஒரு தீர்மானத்தினை எடுத்திருந்தமை, வரவேற்கத் தக்கது என்று தமிழ் மக்கள் மத்தியில் ஒரு அபிப்பிராயம் ஏற்பட்டிருந்தது என்பது உண்மை தான்.

ஆனாலும், வவுனியாவிலும், கிளிநொச்சியிலும் வீரவசனம் பேசிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை ஜனாதிபதி மஹிந்தராஜபக்ச அவசரமாகச் சந்தித்தார். அந்தச் சந்திப்பின் போது “தெரிவுக்குழுவில் இடம்பெறுவது தொடர்பில் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களைக் கோரியிருந்தார் அதனை நேரடியாகவே சம்பந்தன் மறுத்துவிட்டார்”. என்று ஊடகங்கள் விதம் விதமான செய்தித் தலைப்புக்களை வெளியிட்டிருந்தன.

அந்தச் சந்திப்பில் ஒரு அதிசயம் நிகழ்ந்திருந்ததை அவதானிக்க முடியும். கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவையோ, பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவையோ தனிப்பட்ட ரீதியில் சந்தித்திருந்தால் அந்தச் சந்திப்பு தொடர்பிலான செய்திகள் சில வாரங்களின் பின்னரோ அல்லது சில மாதங்களின் பின்னரோ தான் வெளித்தெரியவந்திருக்கும்.

ஆனால் இறுதியாக நடைபெற்ற சந்திப்பினை அடுத்து சம்பந்தன் – மஹிந்த சந்திப்புத் தொடர்பிலான செய்தியும், புகைப்படமும் உடனடியாகவே ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டிருந்தது. இந்த இடத்தில் ஒரு முக்கியவிடயத்தினை சுட்டிக்காட்டலாம். தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஜனாதிபதியைச் சந்திக்கச் செல்கின்ற போது புகைப்படப்பிடிப்பாளரையோ, ஊடகத்தினரையோ அழைத்துச் செல்ல அனுமதித்திருக்க வாய்ப்பே இல்லை. மிக மிக நெருக்கமாக இருக்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கூட சம்பந்தர் – மஹிந்த சந்திப்பிற்கு அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை. இந்நிலையில் சம்பந்தர் – மஹிந்தர் சந்திப்பினை படம் பிடித்தது ஜனாதிபதி விசுவாசிகளாகவே இருக்கவேண்டும். அதனைவிடவும் இவ்வாறான ஒரு இறுக்கமான முடிவினை சம்பந்தன் அறிவிக்கும் போது அதற்கு வக்காளத்துவாங்கும் வகையில் புகைப்படத்தினை வெளியிடும் நிலையில் இலங்கையில் அரச ஜனநாயகம் இருக்கிறதா? போன்ற கேள்விகள் அன்று எழவில்லைத்தான். ஆனால் இன்று எழுந்திருக்கிறது.

அவசர சந்திப்பிற்கான அழைப்பினைவிடுத்த ஜனாதிபதி மஹிந்தராஜபக்ச கூட்டமைப்பின் தலைவரிடம் ஜெனீவாவில் நடைபெறப்போகும் கூட்டத் தொடரில் கூட்டமைப்பினை பங்கேற்க வேண்டாம் என்று வலியுறுத்தியிருக்கின்றார். குறித்த கோரிக்கையினை அடுத்து உடனடியாகவே “தெரிவுக்குழு விடயம் தொடர்பிலான கதையும் கூடவே புகைப்படமும் வெளியாகியிருக்கின்றது என்ற முடிவினை எடுக்கவேண்டியதாகவிருக்கின்றது.

ஜெனீவாப் பயணம் இரத்தானமை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வெளியிட்டிருக்கின்ற அறிக்கையில் என்ன சொல்லப்படுகின்றது?

“தற்போது நிலவும் நிலையற்ற நிலைமை தொடருமேயானால் அது வன்முறைக்கு வித்திடலாம், குடிமக்கள் அதனால் மீண்டும் பாதிக்கப்படலாம் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அஞ்சுகிறது. தற்போதைய சூழ்நிலையிலே அமைதி காக்கப்படுவதும், பிரச்சினைகளைத் தவிர்ப்பதும் அவசியமான செயற்பாடுகளென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கருதுகிறது. எனவே, இந்தக் காரணங்களால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜெனீவாவில் பிரசன்னமாயிருக்க மாட்டாது எனத் தீர்மானித்துள்ளது”

வெளியிடப்பட்ட அறிக்கையில் மேற்குறிப்பிடப்பட்டிருக்கின்ற பந்தியே முக்கியமான காரணமாக சம்பந்தனால் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. பல பத்து ஆண்டுகளுக்கு முன்னர் எடுத்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதில் தற்போது நெருக்கடி ஏற்பட்டிருக்கின்றமையால் அதனைக் கைவிடுவது போன்றவகையில் கருத்துச் சொல்லப்படுகின்றது. சில வாரங்களுக்குள்தான் கூட்டமைப்பினர் தாம் ஜெனீவா செல்லப் போவதாக ஊடகங்களுக்குக் கதை சொல்லியிருந்தனர். இன்று எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பிலான எதிர்வு கூறல் மூத்த அரசியல் வாதி(!)களுக்கு அப்போது புரியவில்லையா? தீர்க்கதரிசனம் நிறைந்தவர்களாகவும் தமிழ் மக்களின் தன்னிகரில்லாத் தலைவர்களாகவும் சொல்லப்படுகின்றவர்கள் இவ்வாறு சிறுபிள்ளைத் தனமாக நடந்து கொள்வது அவர்களின் இன்னொரு முகத்தினை மக்களும் சர்வதேசமும் புரிந்து கொள்வதற்கு வாய்ப்பாக அமைந்துவிடாதா?

இதனைவிடவும் கூட்டமைப்பு எடுத்திருக்கின்ற அடுத்த கட்ட ஏமாற்று நாடகம் மிக வேதனை தருவதாகவே அமைந்திருக்கின்றது. ஜெனீவாவில் நடைபெறவிருக்கின்ற கூட்டத்தொடர் நடைபெறும் போது இந்தியாவிற்கு சென்று அங்கிருந்து வெளிநாடுகளுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக இந்தியாவை வலியுறுத்தும் நடவடிக்கையில் ஈடுபடப்போவதாகவும் சில நாட்களின் முன்னர் கூட்டமைப்பு கதைவிட்டிருக்கின்றது.

எங்கோ ஒரு மூலையில் கிரிக்கட் போட்டி நடைபெறும் போது தொலைக்காட்சிப் பெட்டிக்கு முன்பாக அமர்ந்திருந்து கைதட்டி, விசில் அடிக்கும் கூட்டத்துக்கு நிகரான நிலைப்பாட்டினையே கூட்டமைப்பு எடுத்திருக்கின்றது. ஜெனீவாவில் கூட்டத் தொடர் நடைபெறுகின்ற பொழுது இந்தியாவில் நின்று கொண்டு எதைச் சாதிக்கப் போகிறார்கள்? இந்தியாவை முழுமையாக நம்பி நம்பியே அவர்களின் கடந்த காலங்கள் கடந்திருக்கின்றன. இந்தியாவின் பாராமுகத்தினாலேயே எமது தேசிய விடுதலைக் கனவும் சிதைக்கப்பட்டு வந்திருக்கின்றது. இனியும் இந்தியாவை நம்பி எதனைச் சாதிக்கப் போகிறார்கள்?, இதனை விடவும் தீர்மானம் நிறைவேற்றப்படும் நாட்களில் உடனடியான அழுத்தங்கள் உலக நாடுகளின் கதவுகளைத் தட்டும் என்ற கதையினை யாருக்குச் சொல்கிறார்கள்?

ஒவ்வொரு நாடுகளுக்கும் ஒவொரு அரசியலமைப்பு, கொள்கைவகுப்பு, தீர்மானிக்கும் அமைப்பு என பல்வேறு கட்டுக்கோப்புக்கள் இருக்கும். கூட்டமைப்பினைப் போன்று உடனடியாக ஒரு சிலர் தீர்மானம் எடுக்கும் நிலையில் ஏனைய நாடுகள் இருக்கப் போவதில்லை. கூட்டத் தொடர் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது இந்தியாவில் கூட்டமைப்பு ஒன்றுகூடியிருக்கின்றது. உடனடியாகவே அதனைக் கருத்தில் கொள்ளவேண்டும் என்ற கட்டாயம் உலக நாடுகளுக்கு இருக்கும் என்று அம்புலமாமா கதைவிடும் நடவடிக்கையினை அவர்கள் கைவிடவேண்டும்.

கூட்டமைப்பின் முடிவின் ஊடாக மிகத் தெளிவான செய்தி சொல்லப்பட்டிருக்கின்றது.

நாங்கள் நாங்களாகவே இருப்போம். காலம் காலமாக நாங்கள் நாங்களாகவே இருந்தோம். நீங்களும் நீங்களாகவே இருங்கள். நாங்கள் இருக்கும் வரையில் நீங்கள் நினைப்பது எதுவும் நடந்துவிடப்போவதில்லை. உங்களுக்காக நாங்கள் இல்லை. எங்களுக்காகவே நீங்கள்.. தமிழன் கனவு.. கப்பல் ஏறி மிக நீண்டநாட்களாகிவிட்டன…என்று எண்ணும் நிலையிலேயே இன்று தமிழினம்.

சரிதம் ஆசிரியர் பீடம்..

http://www.saritham.com/?p=51840

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கெல்லாம்.... அழைப்பு அழைப்பு அனுப்பி போகவேண்டிய விடயமா?

கூட்டமைப தமிழர்கள் தெரிவு செய்த பின், அழைப்பை எதிர்பார்க்கமாலேயே. . முன்னின்று கலந்து கொண்டிருக்க வேண்டிய விடயம் இது.

கூட்டமைப்பின் அரசியலால் ஜெனிவாவில் ஒண்டும் நடக்கவில்லை.

இது சர்வதேசத்தின் அரசியல் அதில் கூட்டமைப்பு போய் புடுங்க ஒன்ருமிளைத்தான்.

ஒருவேளை இவர்களும் போய் அங்கேயும் ஒண்டும் நடக்காட்டால் யாரிடை போய் கூடமைப்பு அழுகிறது.

மண்குதிரையை நம்பி ஆத்தில் இறங்காமல் உள்ளூரில் நடக்கும் அநியாங்களை கூடமைப்பு வெளிக்கொணரவேண்டும்.

தொடர்ந்து உள்ளிருந்தே சிங்களவனின் நித்திரையை குலைக்க வேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
news%5C2012%5C1%5Cimages%5Cnews20-01-2012.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.