Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளின் பௌத்த ஆலயங்கள் மீதான தாக்குதல் தொடர்பில் கூட்டமைப்பு வெட்கமடைகிறது – சம்பந்தன்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Sampanthan-6_CI-100x100.jpg

புலம்பெயர் தமிழர்களை சிலர் இலங்கைக்கு எதிரானவர்கள் என குற்றம் சுமத்தினாலும் அவர்கள் இலங்கையில் முதலீடுகளை செய்யவும் தயாராக இருப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இதனால் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வை வழங்கி, புலம்பெயர் தமிழர்களை வெற்றிக் கொள்வது அரசாங்கத்தின் பொறுப்பு என கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் பல அரசியல் கட்சிகளை இரண்டாக உடைத்துள்ளதுடன், தமிழ் தேசியக் கூட்டமைப்பையும் உடைக்க முயற்சித்து வருகிறது எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். அதேவேளை விடுதலைப்புலிகள் பௌத்த ஆலயங்கள் மீது நடத்திய தாக்குதல் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெட்கமடைவதாகவும் சம்பந்தன் கூறியுள்ளார்.

http://www.saritham.com/?p=53667

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜெனிவாக்கு வந்தால் புலிமுத்திரை குத்தபடும் என்று வராது இருந்த சம்பந்தர்

. புலிசெய்ததுக்கு இவர் ஏன் இப்ப வெக்கபடுறார்.

Edited by சித்தன்

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தம் அவர்களே ஒரு பச்சைத்துரோகிக்கான அனைத்து அடையாளங்களையும் பெற்றுகொள்வதர்கான முயற்சியில் இறங்கிவிட்டீர்கள். சிலவேளை " தமிழர்மீதான தாக்குதல்களை, தமிழர் வாழ்விடங்கள்மீதான தாக்குதல்களை, தமிழர் கலாச்சாரச் சின்னங்கள்மீதான தாக்குதல்களை, சிங்களம் தான் செய்ததாக ஏற்றுகொண்டு அவற்றுக்கு வெட்கப்படுகிறோம்" என கூறும்பட்சத்தில், நாமும் பௌத்தகோவில்கள் மீதான புலிகளின் பெயரில் செய்த தாக்குதல்களுக்கு வெட்கப்படுகிறோம் எனச் சொல்லியிருந்தால் ஏற்றுகொள்ளலாம். அனால் நீங்கள்தானெ இப்போது பத்திரிகையாளர்களது நியாயமான கேள்விகளுக்கே சீறிச்சினக்கும் பக்குவமில்லாத அரசியல் தலைவராகக் காட்சிதருகிறீர்கள். பிரபாகரத்தைத் தமிழினம் பெற்றதுக்குப் பெருமைப்படுகிறோம் தற்போது தங்களை தமிழர் தரப்பு தமது பிரதிநிதியாகத் தெரிவுசெய்தமைக்கு ஒட்டுமொத்தத் தமிழினமே வேதனையுடன் வெட்கப்படுகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப அந்த அறிக்கைக்கு என்ன அவசியம்? ஜெனிவாவில் கொண்டு வரப்படும் தீர்மானம் சிறிலங்காவுக்கு எதிரானதே ஒழிய புலிகளுக்கு எதிரானது அல்ல.இந்த அறிக்கை ஜெனிவாத் தீர்மானத்தை திசை திருப்ப விடப்பட்டதாகும்.சம்பந்தா சம்பந்தமில்லாமல் அறிக்கைகளை விடாமல் கொஞ்சக்காலம் பொத்திக்கொண்டு இருந்தால் (அடக்கி வாசித்தால் நல்லது என்று எழுத நினைத்தாலும் சம்பந்தர் தேவையில்லாமல் பிரசரைக் கூட்டிறார்.)

கூடவே சிறிலங்கா இந்து கத்தோலிக்க ஆலயங்களை தாக்கியதைப்பற்றி வசதியாக மறந்து விட்டார்.

இங்கே உடைந்து போகவுள்ள அரசும், ஓரளவுக்கு புதிய செய்தி, கூட்டமைப்பை உடைக்க முனையும் அரசும், ஓரளவுக்கு பழைய செய்தி முக்கியமானதாக தெரிகின்றன.

அரசாங்கம் பல அரசியல் கட்சிகளை இரண்டாக உடைத்துள்ளதுடன், தமிழ் தேசியக் கூட்டமைப்பையும் உடைக்க முயற்சித்து வருகிறது எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

ஒன்று உடையும் பொழுது மற்றையது பலம் பெறும். அது கூட்டமைப்பாக இருக்கக்கூடாது.

Edited by akootha

புலிகள் தலதா மாளிகையைத் தவிர வேறு எந்த பெளத்த ஆலயங்களையும் தாக்குதல் இலக்காக தேர்ந்தெடுத்து இருக்கவில்லை...

சம்பந்தர் பேசாமல் ஈபிடிபி யில் போய்ச் சேரலாம்

அரசாங்கம் பல அரசியல் கட்சிகளை இரண்டாக உடைத்துள்ளதுடன், தமிழ் தேசியக் கூட்டமைப்பையும் உடைக்க முயற்சித்து வருகிறது எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பை யாராலும் பிளவுபடுத்த முடியாது அவ்வாறு நினைப்பது பகல் கனவாகவே இருக்கும் என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.

மட். கல்குடா களுவங்கேணி விவேகானந்தா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனைக் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜெனிவா அமர்வுக்கு செல்லவில்லையென பலரும் பலவிதமாக கதைக்கிறார்கள் தமிழ் தேசிய பற்றாளர்கள்,தமிழ் தேசிய உணர்வாளர்கள், தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களித்த எமது மக்கள் தமிழ் தேசியத்தை நேசிக்கும் புலம்பெயர்ந்து வாழ்கின்ற எமது உறவுகள் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பினை விமர்சிப்பவர்கள் என பலதரப்பட்டோரும் தமிழ் தேசிய கூட்டமைப்பினை விமர்சனம் செய்கின்றனர்.

இவர்களின் இந்த விமர்சனங்களையும் கருத்துக்களையும் நாம் வரவேற்கின்றோம். மேலும் இவர்களின் கருத்துக்களை பரிசீலனை செய்வதற்கும் அவர்களுக்கு உரிய பதிலை வழங்குவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தயாராக இருக்கின்றது இதில் எதுவித மாற்றுக் கருத்துக்களுக்கும் இடமில்லை.

ஆனால் தமிழ் தேசியத்திற்கு விரோதமான பச்சோந்திகளும்,எதிரிகளும்,சந்தர்ப்பவாதிகளும் மகிந்த அரசாங்க போடும் எழும்புத் துண்டுக்காக தமிழ் இனத்தை குட்டிச்சுவராக்குகின்றவர்களும் தமிழ் தேசிய கூட்டமைப்பினைப் பற்றி குறை கூறுவதற்கோ விமர்சனம் செய்வதற்கோ அல்லது தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு அறிவுரை கூறுவதற்கோ எதுவித அருகதையும் இல்லை.

ஜெனிவா செல்லாத காரணத்தைக் காட்டி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை பிளவுபடுத்துவதற்கு சில தீய சக்திகள் அரசாங்கத்தின் ஊது குழலாக இருக்கின்ற ஊடகங்களை பயன்படுத்தி பிரச்சாரம் செய்கின்றன.

இதை எமது மக்களும் புலம்பெயர்ந்து வாழ்கின்ற மக்களும் எமது தமிழ் தேசியத்தை நேசிக்கின்ற ஊடகங்களும் இதனை நன்கு புரிந்துகொள்ள வேண்டும். இப்பொழுது தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருக்கின்ற 13 பாராளுமன்ற உறுப்பினர்களில் இருந்து ஒருவரைக் கூட விலைக்கு வாங்கலாம் அல்லது பிரிக்கலாம் என்று மகிந்த அரசாங்கம் நினைப்பது பகல்கனவாகவே அமையும்.

எங்களுக்கு வாக்களித்த மக்களுக்கும் எங்களை நேசிக்கின்ற புலம்பெயர்ந்த மக்களுக்கும் எந்தவித துரோகங்களும் நாங்கள் செய்ய மாட்டோம் யாராவது செய்வதையும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம். நாங்கள் அனைவரும் கொள்கையில் உறுதியுடன் இருக்கின்றோம் எங்களுக்குள் ஏற்படும் வாத பிரதிவாதங்களை எங்களுக்குள்ளேயே தீர்த்துக்கொண்டு

செயற்படுகின்றோம். ஏனென்றால் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களித்த மக்கள் தமிழ் மக்களுக்கு ஒரு அரசியல் பலத்தையும் அதனூடாக ஒரு அரசியல் தீர்வையுமே வேண்டி நிற்கின்றனர்.

எனவே இந்த விடயங்களை மக்கள் புரிந்துகொண்டு எம்மை பிரிக்கின்ற சதிலைக்கு பின்னால் இருக்கின்றவர்களையும் இந்த சதிவலைக்கு துணைபோகின்ற ஊடகங்களையும் இனம்கண்டு தமிழ் மக்கள் அவதானமாக செயற்பட வேண்டும். இவ்வாறான சதிமுயற்சிகள் எப்போது அரங்கேறினாலும் அவை அனைத்தையும் முறியடித்து எமது விடுதலைப் பாதையில் இருந்து விலகாமல் செல்வதற்கு தமிழ் மக்கள் அனைவரும் உறுதியுடன் செயற்படவேண்டும் என தெரிவித்துள்ளார்.

http://184.107.230.170/~onlineut/News_More.php?id=24549893011176809

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் தலதா மாளிகையைத் தவிர வேறு எந்த பெளத்த ஆலயங்களையும் தாக்குதல் இலக்காக தேர்ந்தெடுத்து இருக்கவில்லை...

சம்பந்தர் பேசாமல் ஈபிடிபி யில் போய்ச் சேரலாம்

சரியா சொன்னீங்கள்....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவருடைய இனவெறி ச்ரி லங்கா அரசு மட்டும் தேவாலயம், கோவில், மசூதி என்று மக்களோடு குண்டு போட்டு கொத்தாக கொல்லலாம்.

அதுக்கெல்லாம் இந்த ஸ்ரீ லங்கா பரதேசிகள் வெட்கப்பட மாட்டார்கள். 

உங்களுக்கு வாக்களித்த தமிழ் மக்களுக்கு வெக்கமா இருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

அவரை நொந்து என்ன பயன்???

விட்டுக்கொடுப்பு அரசியல் அல்லது சமரச அரசியல் என்பதன் ஒரு பகுதி இதுதான்.

நமக்கு எல்லாமே தப்பாக தெரிவதற்கு நாம் இன்னும் இவை பற்றி தெளிவில்லாது இருப்பதுதான் காரணம். எனக்கு தெளிவிருக்கிறது. அதனால் சம்பந்தரை வசை பாடமுடியவில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யோவ் ........ புலிகளைச்சொல்லித்தானே பதவிக்கு வந்தனியள், புலிகளின் பெயரை சொல்லாது தேர்தலில் நின்றிருந்தால் உங்களின் இலட்சணம் தெரிந்திருக்கும்.

தாங்க முடியல ரொம்பவும் ஆடுறாரு வயசான காலத்தில எங்கேயாவது விழுந்து தொலையப்போகுது .........

புலிகள் தலதா மாளிகையைத் தவிர வேறு எந்த பெளத்த ஆலயங்களையும் தாக்குதல் இலக்காக தேர்ந்தெடுத்து இருக்கவில்லை...

சம்பந்தர் பேசாமல் ஈபிடிபி யில் போய்ச் சேரலாம்

செயலாளர் நாயகம் சம்பந்தரின் தகுதி குறைவாக உள்ள காரணத்தை காட்டி அவரை கட்சியில் சேர்க்கமுடியாது என நிராகரித்துள்ளார் :D

  • கருத்துக்கள உறவுகள்

உந்தாள்.... தேவையான வேலையை, பாக்கிறதை விட்டுட்டு...

தேவையில்லாத வேலை பாத்துக் கொண்டு திரியுது.

  • கருத்துக்கள உறவுகள்

செயலாளர் நாயகம் சம்பந்தரின் தகுதி குறைவாக உள்ள காரணத்தை காட்டி அவரை கட்சியில் சேர்க்கமுடியாது என நிராகரித்துள்ளார் :D

அதுதான்

செயலாளர் நாயகம் எந்த மாதிரி தகுதிகளை எதிர்பார்க்கிறார் என்று அவர்களது நடவடிக்கைகளே சொல்லுதே....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதுவரைக்கும் நல்ல பெயரை தேடிவைக்கவில்லை இனியாவது வாயை இறுக்கி மூடிக்கொண்டு இருக்கலாம் இல்லையா ?

ஜெனிவாக்கு வந்தால் புலிமுத்திரை குத்தபடும் என்று வராது இருந்த சம்பந்தர்

. புலிசெய்ததுக்கு இவர் ஏன் இப்ப வெக்கபடுறார்.

புலிகளால் செய்த ராஜீவு கொலைக்கு துரோகி அன்ரன் பாலசிங்கம் எப்படி மன்னிப்பு கேக்கலாம்?

புலிகள் தலதா மாளிகையைத் தவிர வேறு எந்த பெளத்த ஆலயங்களையும் தாக்குதல் இலக்காக தேர்ந்தெடுத்து இருக்கவில்லை...

சம்பந்தர் பேசாமல் ஈபிடிபி யில் போய்ச் சேரலாம்

நாளைக்கு முக்காடுகளை யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியேற்றியதுக்கு மன்னிப்பு கேப்பார், அப்போது எங்கை போய் சேரனும்?

கூட்டமைப்பை ஒறுமையாக இருப்பது தான் சிங்களவன் விரும்புவான். பிரிந்தால் ஏதாவது ஒன்று தமிழ்த்தேசியத்தில் விசுவாசமாக இருக்கும். அது அவர்களுக்கு தலையீடியைக் கொடுக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் வெளிப்படையானவர்கள் அவர்களை சம்பந்தன் அல்ல யாரும் விமர்சிக்கலாம். அது தவறல்ல.

யாழ் ஆரிய குளத்தில் இருந்த பெளத்த ஆலயம் மீது.. ரெலோ புதையல் தேடி அதனை சேதப்படுத்தியதை இட்டும் சம்பந்தன் வெட்கப்படுதல் வேண்டும். எல்லாம் புலிகளால் தான் அதுதான் நாங்கள் தூர விலகி வந்திட்டம் என்ற தோறணையை சம்பந்தன் ஏற்படுத்த நினைக்கிறார் போல..!

இதனால அவர் மகிந்தவின்.. அனுக்கிரகத்தைப் பெற்று அதன் மூலம்.. வடக்கிக் கிழக்கு தனித்தனி மாகாண சபைகளுக்கு ஐக்கிய இலங்கைக்குள்.. 13+ க்குள்ளால பொலிஸ் காணி அதிகாரங்கள் வாங்கித்தரப் போறார். பொறுத்திருந்து பாருங்கோ..???! :rolleyes:

இந்த மதில் மேல் பூனைகளை நம்பி தலைவர்... மக்கள் கடமைகளை ஒப்படைச்சது தான் தப்பு. வேற எதுவுமே தப்பில்ல..!

இப்படியே புலிகளைச் சாட்டி வட்டுக்கோட்டை தீர்மானம் மொழிந்த தமிழீழத்தை கைவிட்டுட்டார் .. அப்புறம் ராஜீவ் கொலைக்கும் புலிகள் தான் காரணம் என்றிட்டார்.. எனக்கும் புலிக்கும் தொடர்பில்ல என்றிட்டார். இப்ப பெளத்த தேவாலயங்கள் தாக்குதலுக்கும் புலிகள் தான் காரணம் என்றிட்டார். சிங்களம் செய்த படுகொலைகளை மறப்போம் மன்னிப்போம் என்றிட்டார். சிறீலங்கா மீதான காதலின் வெளிப்பாடாக.. ஜெனிவாவிற்கு வரம் என்றிட்டார். புலம்பெயர் தமிழ் மக்களுக்க பிளவு அவை புலிக்கு ஆதரவும் இல்ல தமிழீழமும் கேட்கல்ல.. என்றிட்டார்..! எனி என்ன இருக்குது..??! :icon_idea::unsure::rolleyes:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த தேர்த்தலில் மக்களின் முன் என்ன முகத்துடன் போய் நிற்கிறார் என்று பார்ப்போம்.ஏற்கனவே ஜெனிவாவில் உலக நாடுகளுடன் வெட்டி வீழ்த்தியதாக சுமந்திரன் போன்றவர்கள் (இருந்து கொண்டு அலுவல் பாக்கினமாம்)கருத்து சொல்ல தொடங்கி விட்டார்கள்.

அடிக்கடி தோன்றும் புத்தர் சிலை பற்றி ஒரு வரி கூட சொல்லவில்லை. என்ன அறளை பெயர்ந்த தலைவரப்பா!!!

  • கருத்துக்கள உறவுகள்

இதைத் தான் 'மேட்டுக்குடி அபிப்பிராயம்' என்பது!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதுக்கே டென்சனான எப்புடி? வெகு விரைவில் இந்தாள் 2009 இல் வன்னியில் மக்கள் கொல்லப்பட்டதுக்கு முக்கிய காரணம் புலிகள் தான் எண்டு அறிக்கை விட்டாலும் விடும்.

இதுக்கே டென்சனான எப்புடி? வெகு விரைவில் இந்தாள் 2009 இல் வன்னியில் மக்கள் கொல்லப்பட்டதுக்கு முக்கிய காரணம் புலிகள் தான் எண்டு அறிக்கை விட்டாலும் விடும்.

ஏன் வாக்கு மாறிவிட்டதோ ?

இவர்கள் தமிழர்களின் பிரதி நிதிகள் என்று சொல்லுமளவுக்கு தமிழர்களுக்கு என்ன செய்தவர்கள் ?

சனல் நாலு செய்ததைகூட இந்த கூட்டமைப்பு செய்யவில்லை என்பதே உண்மையாகும்.

கீறல் விழுந்த இசைத்தட்டுப் போல மிக நீண்டகாலமாக சம்பந்தன் திரும்பத் திரும்ப உளறி வருவதில் இதுவும் ஒன்று. இதன் மூலம், இந்திய அரச பயங்கரவாதிகளின் விருப்பத்துக்கமைய, புலிகள் பயங்கரவாத அமைப்பாக தடைசெய்யப்பட சம்பந்தன் உதவியது பலரும் அறியாத விஷயம்.

தலதா மாளிகை ஒரு பௌத்த தேவாலயம் இல்லை. அது இலங்கையின் கடைசி தமிழ் மன்னனின் வீடு. அங்கு இந்து ஆலயங்கள் தான் இருந்தன. அதை சிங்களப் பயங்கரவாதிகள் ஆக்கிரமித்துள்ளனர். அதன் மீதே தாக்குதல் நடாத்தப்பட்டது. இந்தியப் பயங்கரவாதிகளின் அடிவருடி சம்பந்தனுக்கு இதெல்லாம் தெரிந்திருக்காது.

கூத்தமைப்பின் கூத்துக்கள் தொடர்பாக தழிழர்கள் வெட்கப்படுகின்றனர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.