Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்கள் தாம் தொடர்ந்தும் இராணுவ ஆக்கிரமிப்பில் இருப்பதாகவே உணர்கிறார்கள் - நல்லிணக்கம் இன்றேல் இலங்கையில் மீண்டும் ஒரு ஆயுத மோதல் வெடிக்கும்: அமெரிக்கா எச்சரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Robert-O-Blake_150seithy.jpg

ஐ.நா மனித உரிமைக் கவுன்ஸில் கூட்டத்தில் போர்க் குற்றசாட்டுகளுக்குப் பதிலளிக்கப்படாமல் போனால் - இலங்கையில் மீண்டும் ஒரு ஆயுத மோதல் வெடிக்கலாம் என அமெரிக்கா இலங்கையை எச்சரித்துள்ளது. அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்குப் பொறுப்பான உதவி இராஜாங்கச் செயலாளர் ரொபேட் ஓ பிளேக் மேற்கண்டவாறு எச்சரித்துள்ளார்.

சர்வதேச செய்திச் சேவை ஒறுக்கு அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ரொபேட் ஓ பிளேக் கூறியுள்ளதாவது:

இலங்கையின் நலன்களுக்கு பொறுப்புக் கூறுதல் மற்றும் நல்லிணக்கம் என்பன முக்கியமானவை. இதன்மூலம் அவர்கள் உண்மையான அமைதியையும் பாதுகாப்பையும் அடைய முடியும். இல்லையேல், சொந்த சமூகத்தினரின் கோபத்தினால் நாட்டில் புதிய வன்முறைகள் ஏற்படும். நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறுதலுக்கு பொருத்தமான நடவடிக்கை எடுக்கத் தவறியவர்கள் மீளத்தோற்றம் பெற்ற கிளர்ச்சிகளை தொடர்ச்சியாக அனுபவிக்கிறார்கள்.

இலங்கையிலும் இதேபோன்ற நிலையை நாம் எதிர்பார்க்கக் கூடும். மேலும், யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் இலங்கை அரசாங்கம் பல வீதிகளையும் அடிப்படைக் கட்டுமான வசதிகளையும் வடக்கில் கட்டியெழுப்பியுள்ளது. ஆனால் வடக்கில் உள்ள பல தமிழர்கள் தாம் தொடர்ந்தும் இராணுவ ஆக்கிரமிப்பில் இருப்பதாகவே உணர்கிறார்கள்.

இந்நிலையில், தமிழர்கள் தமது பகுதியில் சுயமாக கட்டுப்பாடுகளின்றி வாழ்வதற்கு இலங்கை அரசாங்கம் வழிசெய்ய வேண்டும் என்று ரொபேட் ஓ பிளேக் தெரிவித்துள்ளார்.

http://www.seithy.co...&language=tamil

எதசர்வதேசம் உரிய தீர்வை வழங்க மறுத்தால் ஆயுதப் போராட்டம் தவிர்க்க முடியாதது!

ற்காக அடிக்கடி வன்னிக்குப் போனீர்கள்..? நீங்கள் கல்வி கற்பதற்கு புலிகள் பணம் வழங்கினார்களா..? புலிகளுக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டீர்களா? உங்கள் குடும்பத்திற்கும் புலிகளுக்கும் எந்த வகையான தொடர்புகள் இருந்தன..?

இது சிறீலங்கா இராணுவப் புலனாய்வாளர்களின் அடுக்கடுக்கான கேள்விகள். வன்னியிலிருந்து வருகை தந்து யாழ்.பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வெளியேறிய மாணவர்களை நோக்கியே இந்தக் கேள்விக் கணைகள் தொடுக்கப்பட்டுள்ளன. கடந்த 2005, 2006, 2007, 2008 மற்றும் யுத்தம் முடிவடைந்த 2009ம் ஆண்டு ஆகிய காலப்பகுதிகளில் யாழ்.பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வெளியேறிய மாணவர்களை இலக்குவைத்து சிறீலங்கா இராணுவ புலனாய்வுக் குழுவொன்று களமிறக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக வன்னியிலிருந்து வருகை தந்து கல்வி கற்ற மாணவர்களை இலக்கு வைத்தே சிங்கள இராணுவப் புலனாய்வுக் குழு வலை விரித்திருக்கின்றது. தமிழர் தாயகப் பகுதியில் இரண்டு பல்கலைக்கழகங்கள் உள்ளன. வடக்கில், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களின் மாணவர்களை உள்ளடக்கியதாக யாழ். பல்கலைக்கழகமும் கிழக்கில், திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியதாக மட்டக்களப்புப் பல்கலைக்கழகமும் அமைந்துள்ளன.

வடபகுதி மாணவர்கள் யாழ். பல்கலைக்கழகத்திலும் கிழக்கு மாணவர்கள் மட்டக்களப்பு பல்கலைக்கழகத்திலும் கல்வி கற்கின்ற போதிலும் சிறீலங்காவிலுள்ள ஏனைய பல்கலைக்கழகங்களைப் போலவே மேற்படி இரு பல்கலைக்கழகங்களும் பாட வசதி மற்றும் இட ஒதுக்கீடுகளுக்கு ஏற்ப மாணவர்களைப் பரிமாறிக் கொள்வதும் உண்டு.

ஆயினும் தமிழீழத் தேசியப் போராட்ட வரலாற்றில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு காத்திரமான பங்கு உண்டு. போராட்டத்தின் ஆரம்பகாலம், போராட்ட வளர்ச்சி, போராட்டத்தின் நியாயப்பாடும் தமிழர்களின் அரசியல் அபிலாசைகளும் சர்வதேச அரங்கிற்கு எடுத்துச் செல்லப்பட்டமை போன்ற பல்வேறு பரிணாமங்களிலும் யாழ்.பல்கலைக்கழகம் முனைப்புடனேயே செயலாற்றியது.

பொங்குதமிழ் என்ற எழுச்சிப் போராட்டம் மூலம் யாழ். பல்கலைக்கழகம் உலகின் மூலை முடுக்கெங்கும் புகுந்து கொண்டது. ஈழத் தமிழ் மக்களின் பேசு பொருளாகவும் ஆணித்தரமான குரலாகவும் விளங்கிய யாழ். பல்கலைக்கழகம் இன்று வரை சிறிதும் பிசகின்றி - நிலை தளம்பாமல் - தடுமாறாமல் தன் பணியை ஆற்றி வருகின்றது.

கடந்த 2011ம் ஆண்டு மாவீரர் தினத்தன்று, யாழ். பல்கலைக்கழக மாணவர் விடுதியில் உள்ள பாரிய நீர்த்தாங்கியின் மேலே ஏறி, வானளாவக் கொழுந்து விட்டு எரியக்கூடிய ஈகைச்சுடரை ஏற்றி மாணவர்கள் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியிருக்கிறார்கள்.

சந்திக்குச் சந்தி காவலரண்களும் தினமும் இராணுவ ரோந்துகளும் நடைபெறுகின்ற யாழ். மண்ணில் இவ்வாறான செயல்களைச் செய்வதற்கு அசாத்தியமான துணிவு தேவை. இந்த எவருக்கும் அஞ்சாத மிடுக்கோடு தமிழ் மக்களுக்கான பணியை இன்று வரை யாழ். பல்கலைக்கழகம் ஆற்றி வருகின்றது.

விடுதலைப் பாசறையில் வளர்கின்ற வேங்கைகளுக்கு இயல்பாகவே வீரம் பிறப்பதைப் போல யாழ். பல்கலைக்கழகத்தில் கற்கின்ற மாணவர்களுக்கும் தானாகவே வீரமும் துணிவும் பிறக்கிறது. இதனால் தான் சிங்கள இராணுவத்திற்கும் இராணுவப் புலனாய்வாளார்களுக்கும் யாழ். பல்கலைக்கழகம் சிம்ம சொப்பனமாகத் தெரிகிறது.

இலங்கையிலேயே ஒரு பல்கலைக்கழகத்தைச் சுற்றி அதிகமான படையினர் காவல் நிற்கின்றனரென்றால் அது யாழ்ப்பாணம் பல்கலைக்கழகமாகவே இருக்க முடியும். இந்தப் பின்னணியில், யாழ். பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கின்ற மாணவர்களென்றால் சிங்களத்திற்கு சினம் வருகின்றது.

கடந்த காலங்களில் இங்கு கல்வி கற்று வெளியேறிய மாணவர்களிடம் யுத்தம் முடிவடைந்த தற்போதைய காலப்பகுதியில் விசாரணைகள் இடம்பெறுகின்றன. முதற் கட்டமாக யாழ்.பல்கலையில் கல்வி கற்ற வன்னி மாணவர்கள் மீது சிங்களத்தின் பார்வை திரும்பியிருக்கிறது.

ஈழ விடுதலைப் போராட்டத்தில் 2005 தொடக்கம் 2009 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதி மிக முக்கியமான காலகட்டமாகும் பல்வேறு திருப்பங்களும் இன அழிப்புகளும் இடம்பெற்றது இக் காலத்திலேயேயாகும். இக் காலப் பகுதியில் யாழ். பல்கலைகயில் கல்வி கற்ற வன்னி மாணவர்கள் எதிர்காலத்தில் அரசுக்கெதிரான சக்திகளாக உருவெடுக்கலாமென்ற அச்சம் ஏற்பட்டதன் காரணமாகவே அவர்களை அச்சுறுத்தி அடக்கும் பணியை மேற்கொள்ளுமாறு அரசாங்கத்தினால் இராணுவ புலனாய்வுத்துறை ஏவி விடப்பட்டுள்ளது.

ஏற்கனவே திரட்டப்பட்ட மேற்படி மாணவர்களின் விபரங்களுடன் யாழ்ப்பாணம், மற்றும் வன்னியில் இருக்கின்ற மாணவர்களின் வீடுகளுக்கு நேரடியாகச் செல்கின்ற இராணுவப் புலனாயவாளர்கள், குறித்த மாணவர்களை விசாரணைக்குட்படுத்தி வருகின்றனர்.

படிக்கின்ற காலப் பகுதியில் எதற்காக அடிக்கடி வன்னிக்குச் சென்றீர்கள்..? பல்கலைக்கழகத்தில் நீங்கள் தங்கி நின்று கல்வி கற்றபோது செலவுகளுக்கு யார் பணம் வழங்கியது..? புலிகளிடம் ஆயுதப் பயிற்சி எடுத்தீர்களா.? என்ற கோணத்தில் விசாரணைகள் இடம்பெறுகின்றன.

மேற்படிக் காலப்பகுதியில் கல்வி கற்று வெளியேறிய சிலர் திருமணமாகிய நிலையில் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களில் பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர். ஏனைய பலர் வேலையற்ற பட்டதாரிகளாக உள்ளனர். இவர்களில் திருமணம் செய்து குழந்தைகளுடன் வாழ்பவர்களை விடுத்து ஏனையவர்களிடமே விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

கடந்த சில மாதங்களாக இந்த விசாரணைகள் இடம்பெற்று வருகின்ற போதிலும், இத் தகவல்களை வெளியே கூறவேண்டாமென்று இராணுவம் புனாய்வாளர்கள் தங்களை அச்சுறுத்தியதாகவும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டோர் தெரிவித்தனர். விசாரணையின் போது தமது கை, கால்கள் மற்றும் உடற்கட்டமைப்பு மற்றும் உடல் பகுதியில் காயங்கள் ஏதும் உள்ளனவா போன்றவற்றை இராணுவப் புலனாய்வாளர்கள் தீவிரமாக அவதானிப்பதாகவும் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டோர் கூறுகின்றனர்.

இராணுவப் புலனாய்வாளர்களின் அச்சுறுத்தல்கள் காரணமாக இந்த விசாரணை விடயங்கள் வெளியே தெரியவராத போதிலும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டோரும் அவர்களின் குடும்பத்தினரும் கடும் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். வன்னியில் பெற்றோரைப் பார்க்கப் போனதும், மீண்டும் வந்து கல்வி கற்றதும், விடுமுறைகளின் போது வீட்டுக்குச் சென்றதும் தவறா என்றும் மேற்படி விசாரணைக்குட்படுத்தப்பட்ட, பெயர் குறிப்பிட விரும்பாத ஒருவர் கேள்வியெழுப்பினார்.

தமிழ் மக்களுக்கான விடுதலைப் போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்த சம நேரத்திலேயே தமிழீழ தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன் அவர்கள், தமிழ் மக்களின் கல்வி, கலை, கலாசாரம், பண்பாடு போன்ற துறைகளையும் கட்டி வளர்த்துக் கொண்டிருந்தார். ‘கல்வியும் மொழியும், பண்பாடும், நிலமும் எமது இனக் கட்டமைப்பைத் தாங்கி நிற்கும் தூண்கள்’ என்று தெளிவாகவே அவர் எடுத்தியம்பினார்.

தலைவரின் கொள்கை வழி நடந்த புலிகள் இயக்கத்தின் அரசியல் பீடம், தமிழ் மக்களின் பாதிப்புக்களை ஓரளவேனும் குறைக்க வேண்டுமென்பதைக் கருத்தில் கொண்டு `தேசியத் தலைவர் நிதியம்` என்ற ஒன்றை ஆரம்பித்தது. தலைவரின் நேரடி நெறிப்படுத்தலில் இயங்கிய இந்த நிதியத்தின் ஊடாக, வறுமையில் வாடிய நிலையில் அவசர சிகிச்சைக்கு நிதி தேவைப்பட்டோர், வறுமை காரணமாக கற்றலைத் தொடர முடியாதோர், போன்றோருக்கு நிதியுதவி வழங்கப்பட்டது.

கடந்த 2006ம் ஆண்டு இடம்பெற்ற சுனாமிப் பேரவலத்தின் போது தமிழர் தாயகப் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்காக இதே நிதியத்திலிருந்தே தேசியத் தலைவர் 30 கோடி ருபாவை ஒதுக்கீடு செயதிருந்தார். ஈழத் தமிழர்களும் புலம்பெயர்ந்த தமிழர்களும் இதனை இலகுவில் மறந்து விட மாட்டார்கள். மறக்கவும் முடியாது.

இந்நிலையில், வறுமையால் பாதிக்கப்பட்டு பல்கலைக்கழக் கல்வியைத் தொடர முடியாத பல மாணவர்களுக்கு தேசியத் தலைவர் நிதியத்திலிருந்து தமிழீழ கல்விக் கழகத்தினூடாக மாதாந்தம் உதவுதொகை வழங்கப்பட்டது. தமிழீழ விடுதலைப் புலிகளின் இந்தச் சேவை தாயகத்திலும் புலத்திலும் வாழ்கின்ற பல தமிழ் மக்களுக்கே இன்று வரை தெரியாத நிலையில் சிறீலங்கா அரச படையின் புலனாய்வாளர்களின் காதுகளுக்கும் தற்போது தான் இவ்விடயம் தெரியவந்திருக்கிறது.

இதனாலேயே புலிகளின் நிதியில் கல்வி கற்ற மாணவர்களை அச்சுறுத்தி அடிபணியவைக்க சிங்களப் புலனாய்வுத்துறை முயன்று வருகிறது. தமிழ் இளைஞர், யுவதிகளை அச்சுறுத்தி அடிபணிய வைக்கலாமென்று சிறீலங்கா இராணுவமும் புலனாய்வுத்துறையும் நம்பிக்கொண்டிருக்கிறது.

ஒன்றை மட்டும் இவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். வீரம் விளையாடிய மண்ணில் பிறந்தவர்கள் சோரம் போக மாட்டார்கள். தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட அடக்கு முறைகளுக்கு எதிராக தொடங்கப்பட்ட ஆயுதப் போராட்டம் இன்னும் முற்றுப் பெறவில்லை. பாரியதொரு திருப்பத்தில் வந்து நிற்கின்றது. சர்வதேசம் உரிய தீர்வை வழங்க மறுத்தால் தமிழினம் மீண்டும், `தலைவன் சொன்ன வேதம் கேட்டு யாகம் செய்யப் புறப்படுமே தவிர அமைதியாக அடங்கியிருக்காது`.

நன்றி : ஈழமுரசு

2

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் மீண்டும் ஒரு ஆயுத மோதல் வெடிக்கும்: அமெரிக்கா எச்சரிக்கை

அப்படியொரு நிலைவந்தால் லிபியாவில் புரட்சிக்குளுக்களுக்கு கொடுத்ததுபோல் ஆயுதங்களும் ஆதரவும் கொடுப்பீர்களா ?????

  • கருத்துக்கள உறவுகள்
:unsure::rolleyes:

ஆயுதப் போராட்டமும் வன்முறையும் ஒன்றா ?

In Washington, Robert Blake, U.S. assistant secretary of state for South and Central Asia, said thataccountability and reconciliation were in Sri Lanka's best interests, so "they really can achieve peace and security and not sow anger in their own community that could give rise to new violence."

"Experience in many civil conflicts around the world has shown that countries that don't take adequate measures to address reconciliation and accountability frequently experience a regeneration of the insurgency that they faced," he told The Associated Press. "We could see very much that similar situation in Sri Lanka."

http://news.yahoo.co...-174218089.html

Edited by இணையவன்

  • கருத்துக்கள உறவுகள்

Robert-O-Blake_150seithy.jpg

ஐ.நா மனித உரிமைக் கவுன்ஸில் கூட்டத்தில் போர்க் குற்றசாட்டுகளுக்குப் பதிலளிக்கப்படாமல் போனால் - இலங்கையில் மீண்டும் ஒரு ஆயுத மோதல் வெடிக்கலாம் என அமெரிக்கா இலங்கையை எச்சரித்துள்ளது. அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்குப் பொறுப்பான உதவி இராஜாங்கச் செயலாளர் ரொபேட் ஓ பிளேக் மேற்கண்டவாறு எச்சரித்துள்ளார்.

http://www.seithy.co...&language=tamil

அப்படியொரு பயங்கரவாத போராட்டம் தொடங்கினால்.

அதை அழிக்க சகல ஆயுத ஆலோசனை உதவிகளை நீங்கள் செய்வீர்கள் என்ற கடந்தகால உறுதிமொழிகளையும் கொடுத்தால்தானே சொறிலங்கா அதைப்பற்றி யோசிக்கும்?

சேர்ந்துதானே பெட்ரோல் ஊத்தின்னிங்கள்?இப்ப மட்டும் இராணுவ கெடுபிடிஎன்றால்?

என்ன ப்ளேக்கு ஒண்ணுமே புரியமாட்டேங்குது?

  • கருத்துக்கள உறவுகள்

என்ன ப்ளேக்கு ஒண்ணுமே புரியமாட்டேங்குது?

பிளேக்கு எல்லாம் புரியுது ஆனால் புரியவில்லை என அடம்பிடிக்கிறார்

  • கருத்துக்கள உறவுகள்

இதை உணர உங்களுக்கு இவ்வளவு நாட்கள் எடுத்ததோ. ? :lol::icon_idea:

பிளேக் பிளேட்டை மாற்றிப்போடும் ஒரு அரசியல்வாதி :D. அவர்களின் கணக்கு, சிங்களத்தை பற்றி போட்ட கணக்கு, பிழைத்து விட்டது. தவறு அவர்களில் இருந்தாலும், நட்டம் எமக்குத்தான் அதிகம்.

நாமும் இந்த மீள் மாற்றங்களில் எமக்கு தேவையான மாற்றங்களை பெறுவதே முக்கியம்.

  • கருத்துக்கள உறவுகள்

இவர் அமெரிக்காவில் நிண்டுகொண்டு உசுப்பேத்திறது எனக்குப் பிடிக்கவில்லை..! :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவர் அமெரிக்காவில் நிண்டுகொண்டு உசுப்பேத்திறது எனக்குப் பிடிக்கவில்லை..! :D

நல்ல சவுக்கடி :D:icon_idea:+1

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவர் அமெரிக்காவில் நிண்டுகொண்டு உசுப்பேத்திறது எனக்குப் பிடிக்கவில்லை..! :D

உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்பை ரணகளம் ஆக்கி வச்சு இருக்கிறாங்கள் திரும்பவுமா ஆள விடுங்க சாமி

, நாங்கள் ஜனநாயகம் கற்று கொள்கிறோம்.

புலிகளும் அமெரிக்காவின் நம்பிக்கையை வெல்வதுக்கான நடவடிக்கை ஒன்றும் செய்யவில்லை தானே?

அல்லது புலிகளின் யாரையும் நம்பி இருக்காத தனியே தமிழ்மக்களின் ஆதரவோடு போராடியது அமெரிக்காவுக்கு பொருந்தாத கொள்கை.

எங்கையோ கட்டுரையில் வாசித்த ஞாபகம். புலிகளின் இருப்பு தெற்காசியாவில் பாதுகாப்பு என்று அது இன்று உண்மையாகிக் கொண்டுவருகிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறி லங்காவில் சிங்களவரே பயத்துடன் நடமாடும் காலமிது. 

பிரித்தானிய சிங்களவர் டூர் போய் கொள்ளை, இலஞ்சங்களில் அகபட்டு நொந்து நெத்தலி கருவாடாக வந்தார். 

இவர் அமெரிக்காவில் நிண்டுகொண்டு உசுப்பேத்திறது எனக்குப் பிடிக்கவில்லை..! :D

யாருக்கு தெரியும்க் இந்த உசுப்பேத்தல் தான் ராஜீவ் கொலைவரை போச்சுதோ?

  • கருத்துக்கள உறவுகள்

இவர் அமெரிக்காவில் நிண்டுகொண்டு உசுப்பேத்திறது எனக்குப் பிடிக்கவில்லை..! :D

நான் இதற்கு இப்படி எழுதவந்தேன் இசை

இதையே விசுகு சொன்னால்...?

இதைத்தானே விசுகு இத்தனை நாளாக சொல்லிவருகின்றார்???

மற்றவர்களை நம்பி எம்மினத்தை பலி கொடுத்தது போதும். ஓநாய்களின் கூக்குரலுக்கு மௌனம் சாதிப்பதே நல்லது.

அமெரிக்கன் அமெரிக்காவில் இருந்துதான் சொல்லுவான் , அது யதார்த்தம் .

ஆனால் தமிழிழம் வேண்டும் என்று கோசமிடும் ஈழத்தமிழன் அமெரிக்காவில் இருந்து கத்தினால் அபத்தம்.

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப சந்திர மண்டலத்தில் எதிர்கால சந்ததியை குடியேற்றுவோம் என்பவன் சந்திரனில் பிறந்து அங்கிருந்துதான் சொல்லவேண்டும்?

(அதை எப்படி குடியேறுதல் என்று சொல்வது என்றுதான் புரியவில்லை??)

உசுப்பெத்தினது போதும்.

முதல்ல ஈழத்தை அங்கிகரியுங்கோ... பிறகு ஆயுதம் தூக்கிரதைப் பற்றி நாங்கள் முடிவெடுப்பம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஐ.நா வில் கொண்டுவரப்பட்ட இலங்கையரசுக்கு எதிரான தீரமானத்தை இந்தியா எதிர்த்தால் இந்தியத்தமிழர் தனித் தமிழ்நாடு பெறுவதற்கு நாம் ஒத்துழைக்கவேண்டும்.

ஐ.நா வில் கொண்டுவரப்பட்ட இலங்கையரசுக்கு எதிரான தீரமானத்தை இந்தியா எதிர்த்தால் இந்தியத்தமிழர் தனித் தமிழ்நாடு பெறுவதற்கு நாம் ஒத்துழைக்கவேண்டும்.

:rolleyes::)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.