கதைக் களம்
கள உறுப்பினர்களின் சிறுகதை | மொழியாக்க கதை| தொடர்கதை | பயண அனுபவங்கள் | நாடகம்
கதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, பயண அனுபவங்கள், நாடகம் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுயமான சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், பயண அனுபங்கள், நாடகங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.
648 topics in this forum
-
போராட்டத்துக்குக் கட்டியங்கூறி பண்டார வன்னியன் நினைவில் அரை நூற்றாண்டுகளின் முன்னம் 1968ல் எழுதபட்ட எனது முதல் கவிதை மொழி பெயர்புடன் . . நகர்கிறதுபாலி ஆறு - வ.ஐ.ச.ஜெயபாலன் அங்கும் இங்குமாய் இடையிடையே வயல் வெளியில் உழவு நடக்கிறது இயந்திரங்கள் ஆங்காங்கு இயங்கு கின்ற ஓசை இருந்தாலும் எங்கும் ஒரே அமைதி ஏது மொரு ஆர்ப்பாட்டம் இல்லாமல் முன் நோக்கி பாலி ஆறு நகர்கிறது. ஆங்காங்கே நாணல் அடங்காமல் காற்றோடு இரகசியம் பேசி ஏதேதோ சலசலக்கும். எண்ணற்ற வகைப் பறவை எழுப்பும் சங்கீதங்கள். துள்ள…
-
- 0 replies
- 3.5k views
-
-
அருகில் உள்ள உணவகமொன்றில் வேலை செய்யும் என்னுடைய பிரெஞ்சு கார நண்பனொருவன் இன்று என் வேலையிடத்துக்கு காலையிலேயே சோகத்தோடு வந்தவன் பாரில் நின்ற என்னிடம் ஒரு கிளாஸ் விஸ்க்கி வேணுமென்றான் . காலங்காதாலையேவா என்ன பிரச்னை என்றேன் ..குடிக்கிறதுக்கு நேரம் காலம் என்று ஏதாவது சட்டமிருக்கா என்றான் ..இல்லைதான் உனக்கு வேலை இல்லையா என்றதும் அதெல்லாம் தன்பாட்டில் நடக்கும் என்றவனுக்கு விஸ்கியை ஊற்றி கொடுத்தபடி மேலே சொல்லு என்றேன் .. எனக்கும் மனிசிக்கும் பிரச்னை ... இதை தானே ஆறு மாதமாய் சொல்கிறாய் புதிதா வேறை ஏதாவது சொல் .. இப்போ பெரிய பிரச்னை ... என்ன உன்னை போட்டு அடிச்சாளா .... அதெல்லாம் அப்பப்போ நடக்கிற சின்ன பிரச்னை ... அப்போ நீயே சொல்லு .... …
-
- 3 replies
- 5k views
-
-
காலை 7 மணி கைத்தொலைபேசியும் வீட்டு தொலைபேசியும் மாறி மாறி அடிக்க. . யார்ராது காலங்காத்தால என்று எரிச்சலோடு போனை எடுத்தால் .. மனிசி பதட்டதோடு " என்னங்கோ. மரியா வீட்டு பெல்லை கனநேரமா அடிக்கிறேன் நாய்கள். குலைக்கிற சத்தம் தான் கேட்கிது கதவு திறக்கேல்ல . எனக்கு பயமாயிருக்கு. கெதியா வாங்கோ" என்றார் . ஆறுதலாக சோம்பல் முறித்து கொட்டாவி விட்டபடி. 10 மணிக்கு எழும்பும் நான் அரக்கப்பரக்க. எழும்பி சப்பாத்தை கொழுவிக்கொண்டு ஓடிப்போனேன் . மழை வேறு 4 வது நாளாக. விடாமல் அழுதுகொண்டேயிருந்தது .மரியா வீட்டுக்கு போவ துக்கிடையில் அவரைப்பற்றி சொல்லி விடுகிறேன். மரியா வயது 78 .வீட்டுக்கு அருகிலிருக்கும் வசதியானவர்கள் வசிக்கும். அதி நவீன வசதிகளுடன் கூடிய அடுக்குமாடி குடியிருப்பில் 7 வது ம…
-
- 6 replies
- 4.4k views
-
-
ஓடிப் போனவள் .. -சிறுகதை-சாத்திரி வேலை முடிந்து வெளியே வந்ததும் கைத்தொலைபேசியை எடுதுப்பர்தேன். நாங்கள் பத்திரமாக வந்து சேர்ந்து விட்டோம் என்று குறுஞ்செய்தி வந்திருந்தது. ‘பெண்டாட்டி ஊருக்கு போயிட்டா.’ என்கிற மகிழ்ச்சி மனதில் துள்ளியது. கோடை விடுமுறை மனைவியும் மகளும் ஊருக்கு போய் விட்டார்கள். எனக்கு புதிய வேலைஎன்பதால் லீவு எடுக்க முடியவில்லை. இல்லையில்லை, லீவு எடுக்க விரும்பவில்லை என்றும் சொல்லலாம். அவர்களை ஊருக்கு அனுப்பி விட்டுக் கொஞ்சம் தனிமையாக இருக்க மனது விரும்பியது. இன்று பிரான்சின் குடியரசு தினம். பொதுவிடுமுறை நாள். ஆனால் எனக்கு மட்டும் சரியான வேலை. நாடு முழுவதும் ஏன் உலகம் முழுவதுமே விடுமுறையானாலும் உணவு விடுதிகளி…
-
- 19 replies
- 6.4k views
-
-
தண்ணிய குடியேன்டா நானும் எத்தின தடவையம்மா குடிச்சிட்டன் இந்த விக்கல் போகமாட்டேன் என்கிறது இந்தா கொஞ்சம் சீனியை வாய்க்க போடு ம் தாங்கோ அப்பவும் நிக்காட்டி கொஞ்சம் நித்திரைய கொள்ளு சரி சரி என கட்டிலில் சாய்ந்து படுக்க ஆரம்பித்தாலும் விக் இக் விக் என விக்கல் விடுவதாக இல்லை அப்படியே தலையணையை பிடித்து முகத்தை இறுக்கிய படி கண்களை மூட நித்திரை இறுக பிடித்துக்கொண்டது பல மணிநேரம் கழிந்த பிறகு எழுந்தேன் எல்லாம் இருட்டாக இருந்தது மின் ஆழியை அழுத்திய போது மின்சாரம் இருக்க வில்லை கும் இருட்டில் தட்டி தடிவி ஒரு சிமிழி விளக்கை கதவு மூலையில் இருந்து எடுத்து நேரத்தை பார்க்க நேரமோ நிற்காத மேகமாய் ஓடியோடி களைப்பில்லாத மூன்று கால் குதிரை போல மரதன் ஓடி இரவு பன்னிரண்டு முப்பதை காட்ட…
-
- 12 replies
- 3.9k views
-
-
"என்னடி வழமையா இந்த நேரத்தில் வாலை ஆட்டிகொண்டு ஒடி வருவாய் என்ன இன்றைக்கு பேசாமல் படுத்திருக்கிறாய்" " ஒவ்வோரு நாளும் சாம்பாறும் சோறும் தின்று நாக்கு மறந்து போய்விட்டதடி" "வாவன் அந்த காம்புக்குள்ள போய் சாப்பிடுவம் நல்ல மாட்டிறைச்சி கறி கிடைக்கும்" "போடி நான் வரவில்லை மயிலரின்ட கடுவனை உவங்கள் தானே போட்டுத்தள்ளினவங்கள்" " அந்த மயிலரின்ட கடுவனை போட்டு தள்ளினதுக்கும் உன்ட சாப்பாட்டுக்கும் என்னடி சம்பந்தம்" "ஊ ஊ ஊ " "என்னடி தப்பா கேட்டுப்போட்டேன் என்று ஊளையிடுகின்றாய்" "அன்று செக்கல் நேரம் நானும் மையிலரின்ட கடுவனும் மையிலரின்ட அடிவளவுக்குள்ள மினக்கெட்டுக்கொண்டு நின்றனாங்கள் ஊஊஊஊ" "சும்மா ஊளையிடாமல் விசயத்திற்கு வா" "எங்களை கண்ட மை…
-
- 22 replies
- 5.6k views
-
-
பிழைக்கத் தெரிந்தவள் நீண்ட நாட்களுக்குப்பின் சரஸ்வதி ரீச்சரை சந்தித்தேன். கையில் பூங்கொத்து வைத்திருந்தார். அவரது உடலில், பேச்சில் தளர்வு தெரிந்தது. சரஸ்வதி ரீச்சர் பிரதான புகையிரத நிலையத்தில் பூக்கடை நடாத்தி வருகிறார். கடையில் காலையில் இருந்து இரவு வரை வியாபாரத்தைக் கவனிக்க வேண்டியதால் அவரை வெளி இடங்களில் காண்பது அரிது. “ எப்பிடி இருக்கிறீங்கள்?” “என்னத்தைச் சொல்ல....” சரஸ்வதி ரீச்சரின் வார்த்தை இழுப்பில் அவரிடம் இருந்த அலுப்பு தெரிந்தது. ஆனாலும் நான் கேட்டதுக்கு அவர் உடனேயே பதில் தந்தார். “கை கொஞ்சக் காலமா விறைக்குது. ஒத்தோப்பேடியிட்டைப் போறன்” “carpal tunnel பிரச்சினையாக இருக்கலாம்’ “அப்பிடித்தான் டொக்டரும் சொல்லுறார். …
-
- 38 replies
- 8.4k views
-
-
Sunday, June 17, 2018 நூறாய் பெருகும் நினைவு நீங்க இலங்கையா? கேட்போருக்கு..., ஓமோம்... சொல்லியும் ! நீங்க இந்தியாவா? கேட்போருக்கு...., ஆமாங்க... சொல்லியும் கடந்து போகிறேன் மனிதர்களை. அப்ப ஊரில எந்த இடம்? சிலருக்கு பூராயம் ஆராயாமல் பொச்சம் அடங்காது நீளும் கேள்விக்கு வாயில் வரும் ஊரைச் சொல்லிக் கடக்க முயல்வேன். அதையும் மீறி வரும் கேள்வி இது :...., …
-
- 11 replies
- 4k views
-
-
அந்த கரித்துண்டை தூக்கி அங்காலை எறியுங்கோ கார்ல் ஒல்காß ஆஸ்பத்திரியை விட்டு வெளியே வந்தபோது என்னுள் இருந்த வழமையான கலகலப்பு இல்லாமல் போயிருந்தது.குமாரசாமி அண்ணன் எனது வேலையிடத்துத் தோழன். தோழன் என்று ஒருமையில் சொல்வது அவ்வளவு நன்றாக இருக்காது தோழர் என்று அழைப்பதுதான் பொருத்தமாக இருக்கும். ஏனென்றால் குமாரசாமி அண்ணன் என்னைவிட ஆறு வயதுகள் மூத்தவர். ஆனால் குமாரசாமி அண்ணன் வயது வித்தியாசத்தை எல்லாம் தள்ளி வைத்துவிட்டு “கவி, கவி..” என்று சொல்லி ஒரு சம வயது நண்பனாகவே என்னுடன் பழகிக் கொண்டிருந்தார். “கத்தரிக்காயை நல்ல மெல்லிய துண்டுகளாகச் சீவி சின்னன் சின்னனா வெட்டி எண்ணையிலை போட்டு ‘கலகல’ எண்டு பொரிச்செடுத்து வைச்சிட்டு, ஊர் வெங்காயத்தையும் பிஞ்சு மிளகாயையும் …
-
- 8 replies
- 2.8k views
-
-
ஒவ்வொரு வருடமும் நடக்கும் இராபோசண விருந்துக்கு நான் போவது வழமை இந்த இராபோசண விருந்தை ஒழுங்கு செய்வதில் எனது நண்பர் ஒருவரும் முக்கிய பங்கு வகிக்கின்றார்.இந்த தடவையும் சென்றிருந்தேன் இருபதைந்து டொலருக்கு ஒரு டிக்கட்டை எடுத்து போட்டு நானும் ஷரிட்டிற்க்கு காசு கொடுக்கிறனான் என்று சொல்லுவதில் எனக்கு ஒரு பெருமை. என்னை மாதிரி கொஞ்ச சனம் புலத்தில இருக்கினம்.இன்னும் சிலர் இருக்கிறார்கள் அமைப்புக்களின் பணத்தை பொருளாதரத்தில் பின்தங்கியவர்களுக்கு கொடுத்து அதை தாங்கள் வழங்குவது போன்று ஒரு புகைப்படுத்தை எடுத்து முகப்புத்தகத்திலும் வட்சப்பிலும் போட்டுவிடுவார்கள். அதை பார்ப்பவர்கள் நினைப்பார்கள் இவருடைய பணத்தில் தான் உதவிகளை செய்கிறார்கள் என்று. எது எப்படியோ தேவையானோருக்கு பணம…
-
- 25 replies
- 5.6k views
-
-
அவர்கள் வாழட்டும் கலா பாக்யராஜ் தம்பதிகளுக்கு இறைவன் கொடுத்த பிள்ளைச் செல்வங்கள் மூன்று ஆண் குழந்தைகள். புலப்பெயர்ந்து ஜேர்மனி சென்ற இவர்கள் படட கஷ்டங்கள் ஏராளம் குழந்தைகள் இரண்டு வருட இடைவெளியில் பிறந்ததால் மனைவி அவ்ர்களைக் கவனிக்க கணவன் இரண்டு வேலை செய்து பிள்ளைகளை அன்போடும் பன்பொடும் கண்ணுங் கரு த்துமாய் வளர்த்தார். உறவினர்கள் லண்டனில் வாழ்ந்ததால் இவர்களும் அங்கு சென்று குழந்தைகளை வளர்க்க எண்ணினார்கள். இடம் மாறி அங்கு சென்ற பின் இலகுவாக இருக்கவில்லை வாழ்க்கை முறை. மொழிமாற்றம் என குழந்தைகள் கஷ்ட படவே ஒரு வாத்தியாரை ஓழுங்கு செய்து ..அவர்களுக்கு ஆங்கிலத்தில் முழுத்தேர்ச்சி அடைய ஆன மட்டும் முயற்சி செ ய்தார் தந்தை . பிள்ளை கள் வளர…
-
- 12 replies
- 3.8k views
-
-
எங்க ஊர் முதலாளி ஒரு காலத்தில் நகரத்தையே தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்த ஆளுமை மிகுந்தவர் முதலாளி. எங்கள் துறைமுகப் பகுதியில் கடலின் ஆழம் போதாது, வணிகக் கப்பல்கள் அங்கு வர முடியாது என்ற நிலை இருந்த போது, துறைமுகத்துக்கு ஒரு மைல் தள்ளி வணிகக் கப்பல்களை நிறுத்திவிட்டு, படகுகளில் போய் பொருட்களை ஏற்றி, கரைக்கு கொண்டுவரலாம் என்று செய்து காட்டி பலருக்கு நகரத்தில் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்த பெருமை முதலாளியினுடையது. முதலாளிக்கு வணிகத் திறமை மட்டுமல்ல பெண்களை வசியப் படுத்தும் கலையும் நன்றாக வரும். முதலாளியுடன் நெருக்கமாகப் பழகும் அவரது நண்பர்களுக்கு, குழந்தை பிறக்கும் போது, தங்களது குழந்தை முதலாளியைப் போல இருந்து விடுமோ என்ற அச்சம் ஒட்டிக்…
-
- 10 replies
- 3.4k views
-
-
முத்து அக்கா முத்து அக்காவிடம் கனக்க மஞ்சள் பைகள் இருந்தன. அழுக்கின் கறைகள் இல்லாமல் சிவப்பு நிறத்தில் ‘முருகா முருகா’ என்ற பெரிய எழுத்துக்களுடன் பளிச்சென்று தூய்மையாக எப்போதும் ஒரு மஞ்சள் பை அவர் கையில் தொங்கிக் கொண்டிருக்கும். பால் வியாபாரம்தான் முத்து அக்காவின் குடும்பத்துக்கான ஆதாரம். எங்கள் தெருவில் அநேகமான வீடுகளுக்கு முத்து அக்காதான் பால் கொண்டு வந்து கொடுப்பார். சாரயப் போத்தல் - ‘முழுப் போத்தல்’, எலிபன்ற் பிராண்ட் சோடாப் போத்தல் - அரைப் போத்தல் என்ற அளவில் அவரது பால் வியாபாரக் கணக்கு இருக்கும். காலையில் ஆறு மணிக்கே எங்கள் தெருவிலுள்ள ஒவ்வொருவர் வீட்டு அடுப்பிலும் பால் கொதிக்க ஆரம்பித்து விடும். அதிலும் எங்கள் வீட்டில்தான் முதலில் பால் பொங்க ஆர…
-
- 11 replies
- 4.3k views
-
-
காளிதாசரைப் பற்றிய குறிப்புகளை அவ்வப்போது பத்திரிக்கைகளில் வாசித்ததுண்டு ஆனால் அக்கவிஞனின் படைப்புகளின் சுவையை இதுவரைப் பருகியதில்லை அதற்கான வாய்ப்பும் அமையவில்லை. இணையத்தில் சங்கப்பாடல்களைத் தேடிக்கொண்டிருந்த வேளையில் அவர் இயற்றிய ஓரிரு பாடல்களை வாசிக்க முடிந்தது, அதனூடே அக்கவிஞனின் வரலாற்றையும் அவரின் கவித்தொகுப்புகளைப் பற்றிய தேடலும் தொடங்கிற்று. அத்தகு கவிஞனின் சிறப்பை உணர்த்தும் சில எடுத்துக்காட்டுகளை பின்வருமாறு காணலாம்; “கற்கும்போதே இதயத்தில் இனிக்குமாம் இரு வித்தைகள்… ஒன்று கலவி மற்றொன்று காளிதாசனின் கவிதை….” “காளிதாசனின் கவிதை இளமையான வயது கெட்டியான எருமைத் தயிர் சர்க்கரை சேர்த்த பால் மானின் மாமிசம் அழகிய பெண் துணை என் ஒவ…
-
- 0 replies
- 2.7k views
-
-
அழைப்பு மணி ஒலித்த பத்தாவது நிமிடம் கதவு திறக்கிறது. புலநாய்வில் கைதேர்ந்த சீலனிற்கு ஒரு தடவைக்கு மேல் மணி ஒலி எழுப்பும் அவசியம் இருக்கவில்லை. உள்ளே அவர்கள் இருக்கிறார்கள் என்பதும் என்ன நிலையில் இருக்கிறார்கள் என்பதும் மணியினை அமிழ்த்து முன்னரே அவனிற்குத் துல்லியமாய்த் தெரிந்திருந்தது. அதனால் கதவு திறக்கும் வரை பொறுமையாய்க் காத்திருந்தான். நிலா கதவினைத் திறந்தாள். பம்பாய் வெங்காயத்தின் மூன்றாவது அடுக்கின் நிறத்தில் அழகிய மென்மையான மேற்சட்டை அணிந்திருந்தாள். வெள்ளி நிறத்தில் பாதணிகள் அணிந்திருந்தாள். அவள் தொப்புளிற்கும் பாதணிகளிற்கும் இடைப்பட்ட பகுதியில் எந்த ஆடையும் இருக்கவில்லை. விமான ஓடுதளத்தில் பாதைதெரிவதற்காகப் பொருத்தப்பட்டிருக்கும் விளக்குகள் போன்று, அவளது ப…
-
- 14 replies
- 3.2k views
-
-
MY NOVEL "KALSSUVADU" ”காலச்சுவடு” நாவல் . பாதியில் கைவிடப்பட்ட எனது காலச்சுவடு நாவல் பிரதியை நீண்டகாலத்தின் பின்னர் மீண்டும் தூசி தட்டி எடுத்து திருத்தி எழுத ஆரம்பித்திருக்கிறேன். அந்த நாவலுக்கு முகவுரையாக நான் எழுதியவற்றை இங்கு வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். . காலச்சுவடு வ.ஐ.ச.ஜெயபாலன் , காட்டை வகிடு பிரிக்கும் காலச் சுவடான ஒற்றையடிப் பாதை - இளவேனிலும் உளவனும் 1970 . நூற்றாண்டுகாலங்களாக நம் மூதாதையர்கள் வழி வழியாகச் சொல்லி வந்த போதைதரும் கதைகளால் என் மனசு நொதிக்கும் செந் திராட்சை மது ஜாடியாக நிரம்பி வழிகிறது. என் முன்னோர்களாலும் சகபாடிகளாலும் பல லட்சம் தடவைகள் ஏற்கனவே சொல்லப்பட்ட அந்தக்கதைகளை என் பங்கிற்கான கற்பனைகளுடன் பல்லாயிரம்…
-
- 0 replies
- 1.6k views
-
-
எங்கே அவன் தேடுதே சனம் அவரை எல்லோரும் நாட்டாமை என்றுதான் அழைப்பார்கள். மற்றவர்கள் அவரை நாட்டாமை என்று அழைப்பதில் அவருக்கு நிறைந்த மகிழ்ச்சி. கலியாண வீடா? சாமத்தியச் சடங்கா? பிறந்தநாள் விழாவா? இல்லை செத்த வீடா? எங்கள் நகரத்தில் தமிழர்களுடைய எந்த நிகழ்வானாலும் நாட்டாமையே பிரதம விருந்தினர். புலம் பெயர்ந்து யேர்மனிக்கு வந்த காலத்தில் வேலை செய்வதற்கான அனுமதி எங்களுக்குக் கிடையாது. அப்படியான நிலையிலேயே நாட்டாமை, பூ விற்றுக் காசு சேர்த்தவர். பூ விற்பவர் என்பதால் அவரது பெயரோடு ‘பூ’ என்பது அடைமொழியாயிற்று. அதாவது ‘பூ சபா’ என்றாயிற்று. சேர்த்த பணம், அதனால் வந்த அங்கீகாரம் அதோடு இணைந்த ஆணவம் எல்லாம் சேர்ந்ததால் காலம் செல்ல அவர் நாட்டாமை ஆகிப்போனார். அதெப்படி பூ வி…
-
- 24 replies
- 3.8k views
-
-
யார் சொல்லுவார்? சமீபத்தில்(25.03.2018) யாழின் கருத்துக்களத்தில் நவீனன் தரவிட்டிருந்த இணைப்பின் தலையங்கம் ஒன்று, பழைய நினைவொன்றை என்னுள் மீட்டிப்பார்க்க வைத்தது. “பாரிசில் ஈழத்து மாணவி ஒருவர் கடத்தல்” என்பதே அந்தத் தலையங்கம். 83, 84 ஆண்டு காலங்களே அதிகமான தமிழர்கள் யேர்மனிக்கு புலம் பெயர்ந்த காலங்களாக இருந்ததன. ஈழத் தமிழர்களுக்கு வடக்குத்தான் அதிகம் பிடிக்குமோ என்னவோ, பல ஈழத்தமிழர்கள் யேர்மனியின் வட திசை சார்ந்த மாநிலமான Nordrhein-Westfalen இலேயே அப்பொழுது தங்கிக் கொண்டார்கள். புலம் பெயர்ந்து வந்த போதும் தாங்கள் சார்ந்த போராட்டக்குழுக்களை யேர்மனியில் காலூன்ற வைப்பதற்கு அவற்றின் அபிமானிகள் அன்று பெரும் முயற்சி எடுத்துக்கொண்டார்கள். இதில் தெற்கு யேர்மனியில்…
-
- 9 replies
- 2.9k views
-
-
தங்கக் கூண்டு என் பெயர் எழில். பருவப் பெண்களுக்கே உரிய வாழ்க்கை பற்றிய கனவுகள் எனக்கும் உண்டு - பிரத்தியேகமாக எனக்கென்றே பிரம்மனால் படைத்து அனுப்பப்பட்ட தலைவன் வெண்புரவியில் வந்து சேருவான் போன்ற அதீதமான கற்பனைகள் தவிர. இந்த மாதிரியான கற்பனைகள் தோன்றாததற்குக் காரணம் பாழாய்ப் போன(!) வாசிப்புப் பழக்கமும், என் தந்தையாரால் நேர்முகமாகவும் நூல் முகமாகவும் எனக்கு அறிமுகப்படுத்தப்பட்ட பகுத்தறிவாளர்களின் சிந்தனைகளும் என்றே நினைக்கிறேன். என் விருப்பம் போல் அறிவியலில் ஆய்வு மாணவியானேன். என் விருப்பம் போல் ஏனைய பிறவும் வாசித்துத் தள்ளினேன். எழுத்து பற்றி என்னுள் எழுந்த வேட்கை என்னை சிறு பத்திரிக்கைகளில் எழுத வைத்தது. சான்றாண்மை மிக்க ஒரு சிலரின் கேண்ம…
-
- 20 replies
- 4k views
- 1 follower
-
-
செய்தது நீ தானா …-சிறுகதை விடுமுறை நாளென்றாலே கொஞ்சநேரம் அதிகமாக நித்திரை கொள்ளவேண்டும் என்று நினைத்துக்கொண்டு படுத்தாலும் வேலை நேரத்துக்கே வழமை போல எழும்பிவிடுவேன். ஆனால் அவசரப்படாமல் ஆடியசைந்து ஒரு தேநீரை போட்டு எடுத்துக்கொண்டு போனில் யூ ரியுப் அப்பில் இளையராஜாவின் இனிய கானங்களை எடுத்து அப்படியே விரலால் சுண்டிவிட அது தொலைகாட்சி திரைக்கு தாவி அகன்ற திரையில் ஓடத் தொடங்கியதும் சோபாவில் சாய்ந்தபடி கண்ணை மூடி காட்சியை பார்க்காமல் கேட்பதே ஒரு இன்பம். தமிழ் சினிமாவுக்கு இளையராஜா வராமல் போயிருந்தால் எனது தலைமுறையினருக்கு தேனிசைத் தென்றல் தேவா தான் தெய்வமாகியிருப்பர். வித்தியாசாகரும்,மரகத மணியும் மனதில் நின்றிருப்பார்கள். வாத்தியார் பிள்ளை மக்க…
-
- 0 replies
- 2k views
-
-
அதிசய நகரம் பெற்றா முதல் எம்மாவுஸ் வரை....... எமது ஆன்மீகத்தின் வேர்களைத் தேடி புனித பூமிக்கான திருப்பயணம் -2017 (ஜோர்தான்-- இஸ்ரவேல் -- பலஸ்தீனம்) என் தெய்வம் வாழ்ந்த தெய்வீக பூமி இது. இயற்கை அழகும் செயற்கை நிர்மாணிப்பும் கலந்த அற்புதமான உலகம். மலைப்பாங்கான பிரதேசம். ஜோர்தான் நதிப்பள்ளத்தாக்கு வரட்சியில் வாட அதைத்தாண்டி வனாந்தரம் கண்ணுக்கெட்டிய தூரம் புல் பூண்டுகளற்று பசுமைகளற்று பரந்து விரிந்து பாலைவனமாகக் காட்சியளித்தது. என் நீண்டநாள் கனவு நிறைவேறிய மகிழ்வு மனதுக்குள் மத்தாப்பூவாய் மலர்ந்தது. கார்த்திகை மாதம் 23ம் திகதி. இந்த நாளுக்காய் எத்தனை காலம் ஏங்கித் தவித்திருந்தோம். மாலை 9.40க்கு பியசன் விமானநிலையத்தில் இருந்து எயார்…
-
- 13 replies
- 3.9k views
-
-
மீன்கொத்திப் பறவை மீன் கொத்தும் லாவகம் அவள் தேனீர் தயாரிப்பதில் இருக்கும். சிப்பந்தி வேலையென அவள் தன் வேலையினைக் கருதியதாய்த் தோன்றவில்லை. வீடு தேடி வந்தவரை உபசரிக்கும் பாங்கில் அந்தத் தேனீர்ச்சாலையில் அவள் நடந்துகொண்டாள். நான்காம் ஆண்டு படித்துக்கொண்டிருந்த காலத்தில் ஒரு நாள் எங்கள் காணிகளை நானே சென்று பார்த்துக்கொள்ளவேண்டும் என்ற ஒரு நாட்டாமைக் குணம் எனக்குள் விளித்துக் கொள்ள வீட்டில் சொன்னேன். கொடுப்பிற்குள் பெருமை சிரிப்பாக அம்மா ஒரு தொழிலாளியுடன் என்னை அனுப்பி வைத்தாள். தென்னங்காணிக்குள் ஒளிந்திருந்த ஒரு துரவோரம் நின்ற காட்டுமரம் என்னைக் கட்டிப்போட்டது. அது என்ன மரமென்று தொழிலாளியிடம் கேட்க அவர் 'ஓம் தம்பி அது வெட்டோணும், நெடுக நினைக்கிறது நேரம் கிடைக்கிறதில…
-
- 3 replies
- 1.3k views
-
-
பிரிவுகள் தரும் சுமை. 01.10.2017. அவள் என் கைகளிலிருந்து விடுபட்டு தனித்து வாழப்போக வேண்டிய தருணத்தை காலம் எழுதிக் கொண்டு கடந்தது. வாழ்வின் அடுத்த கட்டம் அவளது பல்கலைக்கழகப்படிப்புக்கான பிரிவு. தனது அறையிலிருந்த தனது பொருட்களை அடுக்கிக் கொண்டிருந்தாள். அம்மா...குண்டம்மா..., என்ற அவளது குறும்பும் கதைகளும் இனி என்னைவிட்டுத் தொலைவாகப் போகிறது. படிக்கத்தானே போறாள்....,யோசிக்காதை....சொல்லும் தோழமையின் முன்னால் உடையும் கண்ணீரை மறைக்க எடுக்கும் முயற்சிகள் தோற்றுப் போக மௌனம் கொள்கிறேன். இந்த நாட்களை எப்படிக் கடப்பேன்...? இரவுகள் இப்போது தூக்கம் வருவதில்ல…
-
- 12 replies
- 4.1k views
-
-
கைத்தொலைபேசி காற்சட்டை பொக்கெற்றிலிருந்து சினுங்கியது.நம்பரை பார்த்தேன் மனவியின் தொலைபேசி, நிச்சயம் எடுக்க வேண்டிய அழைப்பு "ஹலோ" "இஞ்சயப்பா வீட்டை போகும் பொழுது முப்பது இடியப்பம் வாங்கி கொண்டு போங்கோ" "சரி"சொல்லி அலைபேசியை பொக்கற்றினுள் வைத்து விட்டு கையை வெளியே எடுக்க மீண்டும் அதே நம்பர் ""எந்த கடையில் இடியப்பம் வாங்கப்போறீயள்" "எந்த கடைக்கு முன்னாலா கார் பார்கிங் கிடைக்குதோ அங்க வாங்கிறேன்" "சு.த.இன்ட கடையில தான் நல்ல இடியப்பம் இருக்கு,கத்தரிக்காய் கறியும் வேணும் ஆனால அதை அங்க வாங்க வேண்டாம் ஒரே எண்ணையாக இருக்கும் அதை ப.தா இன்ட கடையில வாங்குங்கோ,ஆட்டாமா புட்டும் வேணும் அது உந்த இரண்டு கடையிலயும் சரியில்லை புட்டை மூக்கரினட கடையில வாங்குங்க…
-
- 21 replies
- 4.2k views
-
-
அவுஸ்ரேலியாவில் நவம்பர் மாதம் வரும் முதல் செவ்வாய்கிழமை எல்லோருக்கும் ஒரே கொண்டாட்டம் வந்தேறு குடிகளை(ஐம்பது வருடத்திற்கு முன்பு வந்தவர்கள்) தவிர,முக்கியமா விக்டோரியா மாநிலத்தில் அரச விடுமுறையும் விடுவார்கள்.வேலைத்தலங்களில் எந்த குதிரை வெற்றி பெறும் என்று பந்தயம் போடுவார்கள்.ஒவ்வோரு வருடமும் நானும் பந்தயம் கட்டுவேன் இதுவரை வெற்றி பெற்றதில்லை. சாப்பாடு, தண்ணி என்று அமர்க்களப்படும் சில வேலைத்தளங்கள். எல்லோரும் குதிரை பைத்தியமா இருப்பார்கள் .எனக்கு கிருஸ்ன்ரின்ட தேரில் பூட்டிய ஐந்து குதிரையையும் ,கிருஸ்னரைப்பற்றியும் தான் கொஞ்சம் தெரியும் ....ஆனால் சக தொழிலாளிகள் ஒவ்வோரு குதிரையைப்பற்றியும் அதில் சவாரி செய்பவரைப்பற்றியும் பேசிகொண்டிருப்பார்கள்.நான் எனக்கு கிடைத்த பந்…
-
- 7 replies
- 2.7k views
-