கதைக் களம்
கள உறுப்பினர்களின் சிறுகதை | மொழியாக்க கதை| தொடர்கதை | பயண அனுபவங்கள் | நாடகம்
கதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, பயண அனுபவங்கள், நாடகம் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுயமான சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், பயண அனுபங்கள், நாடகங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.
648 topics in this forum
-
லின்சன் குடும்பத்தின் கடைக்குட்டி, மூத்தவர்கள் இருவரும் பெண்கள் .தந்தை இளம் வயதிலயே இறக்க தாயின் மீது குடும்ப சுமை விழுகின்றது.வீட்டின் செல்லப்பிள்ளை லின்சன் .சிறுவயது முதல் பெண்களுடன் தான் அவன் அதிகமாக விளையாடுவான்,ஆண் நண்பர்கள் இல்லை என்றே சொல்லலாம். சகோதரிகளின் உடைகளை சிறுவயதில் அவனுக்கு அணிந்துவித்து அழகுபார்ப்பாள் தாயார்.அவனுக்கு அந்த ஆடைகள் மிகவும் பிடித்தமானதாகவிருந்தது.பாடசாலைக்கு செல்லும் வயதிலும் சகோதரிகளின் ஆடைகளை அணிந்து மகிழ்வான்,தாயார் சகோதரிகள் பேசி தடுத்தாலும் அவர்களுக்கு தெரியாமல் தனிமையில் அணிந்து மகிழ்வான். பாடசாலையிலும் அவன் பெண்களுடனே அதிகம் பழகினான் .இது பாடசாலை அதிபருக்கு ஒரு பிரச்சனையாக இருந்தது.அந்த சமுகம் ஆண்கள் பெண்களுடன் பழகுவதை ஒரு மதகு…
-
- 12 replies
- 2.6k views
-
-
MY NOVEL "KALSSUVADU" ”காலச்சுவடு” நாவல் . பாதியில் கைவிடப்பட்ட எனது காலச்சுவடு நாவல் பிரதியை நீண்டகாலத்தின் பின்னர் மீண்டும் தூசி தட்டி எடுத்து திருத்தி எழுத ஆரம்பித்திருக்கிறேன். அந்த நாவலுக்கு முகவுரையாக நான் எழுதியவற்றை இங்கு வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். . காலச்சுவடு வ.ஐ.ச.ஜெயபாலன் , காட்டை வகிடு பிரிக்கும் காலச் சுவடான ஒற்றையடிப் பாதை - இளவேனிலும் உளவனும் 1970 . நூற்றாண்டுகாலங்களாக நம் மூதாதையர்கள் வழி வழியாகச் சொல்லி வந்த போதைதரும் கதைகளால் என் மனசு நொதிக்கும் செந் திராட்சை மது ஜாடியாக நிரம்பி வழிகிறது. என் முன்னோர்களாலும் சகபாடிகளாலும் பல லட்சம் தடவைகள் ஏற்கனவே சொல்லப்பட்ட அந்தக்கதைகளை என் பங்கிற்கான கற்பனைகளுடன் பல்லாயிரம்…
-
- 0 replies
- 1.6k views
-
-
அதிசய நகரம் பெற்றா முதல் எம்மாவுஸ் வரை....... எமது ஆன்மீகத்தின் வேர்களைத் தேடி புனித பூமிக்கான திருப்பயணம் -2017 (ஜோர்தான்-- இஸ்ரவேல் -- பலஸ்தீனம்) என் தெய்வம் வாழ்ந்த தெய்வீக பூமி இது. இயற்கை அழகும் செயற்கை நிர்மாணிப்பும் கலந்த அற்புதமான உலகம். மலைப்பாங்கான பிரதேசம். ஜோர்தான் நதிப்பள்ளத்தாக்கு வரட்சியில் வாட அதைத்தாண்டி வனாந்தரம் கண்ணுக்கெட்டிய தூரம் புல் பூண்டுகளற்று பசுமைகளற்று பரந்து விரிந்து பாலைவனமாகக் காட்சியளித்தது. என் நீண்டநாள் கனவு நிறைவேறிய மகிழ்வு மனதுக்குள் மத்தாப்பூவாய் மலர்ந்தது. கார்த்திகை மாதம் 23ம் திகதி. இந்த நாளுக்காய் எத்தனை காலம் ஏங்கித் தவித்திருந்தோம். மாலை 9.40க்கு பியசன் விமானநிலையத்தில் இருந்து எயார்…
-
- 13 replies
- 3.9k views
-
-
பிரிவுகள் தரும் சுமை. 01.10.2017. அவள் என் கைகளிலிருந்து விடுபட்டு தனித்து வாழப்போக வேண்டிய தருணத்தை காலம் எழுதிக் கொண்டு கடந்தது. வாழ்வின் அடுத்த கட்டம் அவளது பல்கலைக்கழகப்படிப்புக்கான பிரிவு. தனது அறையிலிருந்த தனது பொருட்களை அடுக்கிக் கொண்டிருந்தாள். அம்மா...குண்டம்மா..., என்ற அவளது குறும்பும் கதைகளும் இனி என்னைவிட்டுத் தொலைவாகப் போகிறது. படிக்கத்தானே போறாள்....,யோசிக்காதை....சொல்லும் தோழமையின் முன்னால் உடையும் கண்ணீரை மறைக்க எடுக்கும் முயற்சிகள் தோற்றுப் போக மௌனம் கொள்கிறேன். இந்த நாட்களை எப்படிக் கடப்பேன்...? இரவுகள் இப்போது தூக்கம் வருவதில்ல…
-
- 12 replies
- 4.1k views
-
-
செய்தது நீ தானா …-சிறுகதை விடுமுறை நாளென்றாலே கொஞ்சநேரம் அதிகமாக நித்திரை கொள்ளவேண்டும் என்று நினைத்துக்கொண்டு படுத்தாலும் வேலை நேரத்துக்கே வழமை போல எழும்பிவிடுவேன். ஆனால் அவசரப்படாமல் ஆடியசைந்து ஒரு தேநீரை போட்டு எடுத்துக்கொண்டு போனில் யூ ரியுப் அப்பில் இளையராஜாவின் இனிய கானங்களை எடுத்து அப்படியே விரலால் சுண்டிவிட அது தொலைகாட்சி திரைக்கு தாவி அகன்ற திரையில் ஓடத் தொடங்கியதும் சோபாவில் சாய்ந்தபடி கண்ணை மூடி காட்சியை பார்க்காமல் கேட்பதே ஒரு இன்பம். தமிழ் சினிமாவுக்கு இளையராஜா வராமல் போயிருந்தால் எனது தலைமுறையினருக்கு தேனிசைத் தென்றல் தேவா தான் தெய்வமாகியிருப்பர். வித்தியாசாகரும்,மரகத மணியும் மனதில் நின்றிருப்பார்கள். வாத்தியார் பிள்ளை மக்க…
-
- 0 replies
- 2k views
-
-
எனக்கு மனதில் பயத்துடன் கூடிய ஒரு பெருமிதமும் தோன்றியது. செய்வது திருட்டு. இதற்குள் என்ன பெருமிதம் என்று மனதில் எண்ணம் எழ மனதுக்குள்ளேயே சிரித்தும் கொண்டேன். என்றாலும் இது ஒரு அசட்டுத் துணிவு என்பதும் தெரிந்தே தான் இருந்தது. அம்மாவுக்குத் தெரிந்தால் என்ன நினைப்பா என்று ஒரு பயம் ஏற்பட்டாலும் இப்படி திருட்டுத்தனமாய் பள்ளிக்கூடத்தைக் கட் பண்ணிவிட்டு படம் பார்க்க வருவது ஒரு திரில்லான அனுபவமாகத்தான் இருக்கு என எண்ணிக் கொண்டது மனது. இருந்தாலும் அடிமனதில் யாராவது ஊரவர்கள் பார்த்துவிடுவார்களோ என்னும் அச்சம் ஓடிக்கொண்டே இருந்தது. தனிய நான் வரவில்லைத்தான். இன்னும் மூன்றுபேர் மாலி, நந்தினி, ஹேமா, ரதி இத்தனை பேருடன் தான் வந்திருக்கிறேன். பாடசாலைக்குப் பக்கத்தில் இருக்கும் மாலியின்…
-
- 34 replies
- 5.5k views
-
-
அழைப்புமணி யின் சத்தம் கேட்டு போய் கதவை திறந்தேன் கனகர் வாசலில் நின்றார்.வெளிநாட்டு சம்பிராதயம் பார்க்காமல் பழகிற மனுசன் என்றால் எங்கன்ட கனகர்தான்.தொலைபேசியில் அழைத்து உங்கன்ட வீட்டை வரப்போகிறேன் என்று முன் அனுமதி கேட்டு கனகர் வீட்டை போற பழக்கம் எனக்கும் இல்லை அதேபோல கனகர் என்ட வீட்டை வாறதற்க்கும் முன்னனுமதி கேட்காமல் வருவார்.கனகர் ஒரு சமுகசேவகர் என்று சொல்லலாம் .இளைப்பாறிவிட்டார் அதனால் முழுநேர சமுக சேவையில் ஈடுபடுகிறார்.நானும் பகுதி நேரமாக அவருடன் சமுக சேவையில ஈடு படுவதுண்டு.சமுக சேவை என்றால் நீங்கள் பெரிதாக ஒன்றும் நினைக்க கூடாது.என்ட ஆககூடிய சமுக சேவை எங்கன்ட சனத்திற்க்கு ,பொழுது போக்கு நிகழ்ச்சிகளுக்கு டிக்கட் விற்கிறதுதான். அதுவும் ஒரு சமூக சேவை என நானே தீர்ம…
-
- 16 replies
- 2.5k views
-
-
" உயர்தர பரீட்சை எடுத்தவுடன் நண்பர்களுடன் ஊர் சுற்றி திறியும் பொழுது , இப்ப இருப்பது போல் கையடக்க தொலைபேசி ஒன்றுமில்லைதானே ஆனபடியால் நாலுக்கும் நாலரை மணிக்குமிடையில் எல்லோரும் பாடசாலை முன்றலில் ஒன்றுகூடுவோம் ,குறைந்தது ஐந்து சைக்கிளில் நண்பர்களுடன் ஊர் உலாத்தலுக்கு வெளிக்கிடுவோம் முதலில் போவது மருதடிக்கு .சைக்கிளை எம் மீது சாய்த்துக்கொண்டு மருதடியானை வணங்குவோம் உள் சென்று தரிசிப்பதை தவிர்த்து கொள்வோம் ,வேறு தரிசனங்கள் செய்வதற்காக.,.சந்தனம்,விபூதி மறக்காமல் பூசிகொள்வோம் காரணம் வீட்டை போகும் பொழுது அம்மா கேட்டால் பள்ளிகூடத்தில விளையாடிவிட்டு, கோவிலுக்கு போயிற்று வாறோம் என்று சொல்லி நல்ல பிள்ளைகள் என்று பெயர் எடுப்பதற்காக அந்த திருவிளையாடலை செய்வோம்.. நாலு திசையு…
-
- 34 replies
- 7.5k views
-
-
வேலையின் களைப்பு வீடு செல்லும் வேகத்தில் ரயில் தரிப்பிடம் நோக்கி வேகமா வந்து கொட்டாவி விட்டபடி கடிகாரம் பார்த்தேன் இன்னும் இரண்டு நிமிடம் வந்திடும் ரயில் சுற்றும் முற்றும் யாராவது தெரிந்த முகம் நிக்கும் என்னும் நினைவில் கண்களை எல்லா திசையிலும் சுழற்றி பார்த்த படி மனதில் நாட்டு நிலவரம் செய்திகளும் வந்து வந்து போனது அப்பொழுது பெரும் இரைச்சலுடன் தரிப்பிடம் வந்து நின்றது ரயில் . ஏறி நடுப்பக்கம் ஒரு சீட்டில் இருந்து விட்டால் எழும்ப வேண்டிய தேவை இருக்காது என்று எண்ணி முண்டி அடித்து இடம் பிடித்து அமர்த்தேன் பக்கத்தில் ஒரு ஆபிரிக்க நாட்டு இளையன் அவனின் காதுகளில் மாட்டி இருந்த மார்க்கான கேட்போனில் இருந்து வந்த பாடல் இரைச்சல் என் காதுகளுக்கு வண்டுகளின் சத்தமா கேட்டது ...அப்படிய…
-
- 9 replies
- 2.2k views
-
-
ஊரில அந்தகாலத்தில பெண்கள் வயதுக்கு வந்த பின்போ அல்லது பருவமடையப்போகிறாள் என்ற அறிகுறிகள் தெரிந்தவுடன் தனியாக வெளியே செல்வதற்கு அநேகமான வீடுகளில் தடை போடுவார்கள்.அப்பா, அண்ணா ,தம்பி போன்றோரின் துணையுடன் தான் செல்வார்கள்.பக்கத்துவீட்டு அக்காமாருக்கு சில தம்பிமாரை துணைக்கு அனுப்புவினம், ஆனால் தங்கச்சிமாருக்கு பக்கத்துவீட்டு அண்ணமாரை அனுப்பமாட்டினம் அந்த விசயத்திலமட்டும் சனம் தெளிவாக இருக்கும்.சுரேசும் உப்படி இரண்டு மூன்று அக்காமாருக்கு போடிகார்ட் வேலை பார்த்திருக்கிறான்.பக்கத்துவீட்டில நாலு பொம்பிளை பிள்ளைகள் மூத்தவர் உயர்தரம் படிக்கும் பொழுது சுரேஸ் ஏழாம் வகுப்பு படிக்கிறான் .இரண்டாவது அக்கா பத்தாம் வகுப்பு .அடுத்த இரண்டு பெண்களும் ஐந்தாம் ,மூன்றாம்.வகுப்பு படித்துகொண்டிரு…
-
- 23 replies
- 3.3k views
- 1 follower
-
-
என்ன நடந்ததென்றால்.. நான் சங்கக்கடைக்கு போனேனா .. ஒரு லீற்றர் தேங்காயெண்ணெய் என்று கேட்டு போட்டு தான் bag ஐ பார்த்தேன்.. ஐயோ போத்திலை விட்டிட்டு வந்திட்டேன்.. சாமானை அங்காலை எடுத்து வையுங்கோ என்று சொல்லிபோட்டு ... வீட்டை ஓடிவந்து கேற்றுக்கு வெளியிலே சைக்கிளை விட்டிட்டு ... இப்ப வாறது தானே என்று பூட்டாமல் வீட்டுக்குள்ளே போய் ... தேங்காயெண்ணெய் போத்திலை எடுத்து கொண்டுவந்து சைக்கிளை பார்த்தால்.. காணவில்லை.. "நடுவிலே கொஞ்ச பக்கத்தை காணோம்" படத்திலே வாற விஜய் சேதுபதி மாதிரி, எங்கட அம்மா ஐந்தாவது தடவையாக பரமேஸ்வரா சந்தி இந்திய ராணுவ முகாம் பொறுப்பதிகாரி சர்மாவுக்கு சொல்லிகொண்டிருந்தா. சர்மாவுக்கு தலை எல்லாம் சுத்தியது. பலாலி வீதியில் இருந்த அந்த அடுக்குமாடி…
-
- 24 replies
- 3.1k views
-
-
தொண்ணூறுகளின் நடுப்பகுதியில் திருமலையை ஆட்டிப்படைத்த ராணுவ புலனாய்வாளர்களின் பெயரை ஐந்து வயது குழந்தை கூட சொல்லும். அந்த அளவுக்கு பிரபல்யம் வாய்ந்தவர்கள் பெர்னாண்டோ, பைத்துல்லா, ராஜப்த்தீன். அவர்கள் செய்த கொடுமைகள் சொல்ல இந்த கதை போதாது. நிறைய குறுக்கு தெருக்களை கொண்ட திருமலை நகரின் மத்தியை நிறைந்த படையினரை கொண்டு அடைத்து விட்டு, நீல வானை கொண்டுவந்து, திருமலை மாவட்ட அடையாள அட்டை (முதலில் மஞ்சள் பின்னர் வெள்ளை) பரிசோதிக்கும் படையினரை இப்போ நினைத்தால் கூட வடிவேலு பாணியில் பில்டிங்கை ஸ்ட்ரோங் ஆக வைத்து கொண்டு பேஸ்மெண்டை நடுங்கும் பலரை இப்போதும் காணலாம். இவர்களது ஆட்டங்கள் கோலாச்சிய அந்த கால பகுதியில், திருமலை நகரின் மத்தியில் கல்லூரி வீதியையும் மூர் வீதியையும் இண…
-
- 13 replies
- 2.7k views
-
-
எங்களை வரிசையாக நிற்க சொன்னார்கள். சேறு பூசிய எங்கள் உடம்பில் இடுப்பிற்கு கீழே மறைப்பதற்கான உள்ளாடையை தவிர எதுவுமே இல்லை. எந்த திசையை நோக்கி நிற்கிறோம் என்று கூட தெரியாமல் கண்கள் கட்டப்பட்டிருந்தன. வெறும் கால்களால் தடவியதில் நாங்கள் ஒரு சேற்று பகுதி நிறைந்த புற்தரையில் நிற்பதை உணர்ந்தேன். எங்களுக்கான வரிசைக்குப் பின்னே பெண்களை கண்கள் கட்டிய நிலையில் வரிசைப்படுத்தி இருந்தார்கள். அவர்களின் பரிதவிப்பான குரல்களும் அடுத்த நிலை தெரியாத தவிப்பும் அவர்களின் குரல்களில் ஒலித்தது மட்டும் காதுகளில் கேட்டு கொண்டிருந்தது. எங்களை வரிசைபடுத்தியவர்கள் யாரோ ஒருவரின் கட்டளைக்காக காத்திருப்பது மட்டும் புரிந்தது. அது அவர்களின் பொறுப்பாளனாகவோ அல்லது அவர்களின் தலைவனாக கூட இருக்கல…
-
- 7 replies
- 2.2k views
-
-
1990 ம் ஆண்டு, இரண்டாம் கட்ட ஈழப்போரின் ஆரம்பகாலகட்டம். தாயகத்தின் சகல மாவட்டங்களிலும் சண்டைகள் பரவலாகவும் தீவிரமாகவும் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருந்தன. யாழ்மாவட்டம் கோட்டையைச் சுற்றி தளபதி பிரிகேடியர் பானு அண்ணை தலைமையில் உருவாக்கப்பட்ட இறுக்கமான முற்றுகையைத் தகர்க்க முடியாமல் சிறிலங்காப்படை திணறிக்கொண்டிருந்தது. முற்றுகையை உடைக்கச் சிறிலங்கா தனது முப்படைகளின் முழுப்பலத்தையும் பிரயோகித்தது. நூற்றியேழு நாட்கள் கடுமையாகப் போரிட்ட சிறிலங்கா இராணுவம் இறுதியில் இரவோடிரவாக யாழ்; கோட்டையைக் கைவிட்டு ஒடிவிட்டது. யாழ்க்கோட்டையின் பின்னடைவை ஈடு செய்வதற்காக, ஒரு மாதத்திற்குள்ளாகவே பலாலி இராணுவத்தளத்தில் இருந்து பாரிய நகர்வைச் செய்தது சிங்கள இராணுவம். தாக்குதலணிகள் கடுமையான …
-
- 21 replies
- 2.8k views
-
-
அண்ணனின் முகத்தினை மீண்டும் மீண்டும் பார்க்கின்றேன் நெற்றி அப்படியே இருக்கின்றது. வழக்கமாக அவன் வைக்கும் சந்தனப் பொட்டின் இடம் மட்டும் வெறுமையாக தெரிகின்றது நெற்றியின் கீழ் ஆழமாக காயம் தொடங்குகின்றது மூக்கும் வாயும் சிதைந்து போகத் தொடங்கி பின் வாயின் கீழ் உருக்குலைந்து கிடக்கின்றது காதுகள் இருந்த இடம் தெரியவில்லை. நிண நீரால் நிறைந்து கிடக்கின்றது அவன் முகம். கவனமின்றி தண்டவாளங்களினூடாக அவன் நடக்கையில் ஒரு ரயில் அவனை மிதித்து இருக்கலாம், அல்லது எவனோ அவனை தள்ளியும் விட்டு இருக்கலாம். இல்லை அம்மா இன்னொருவருடன் இருப்பதைக் கண்டு வெறுத்து அவன் அதற்கும் முன் பாய்ந்து செத்து இருக்கலாம். அவன் உடலை தலையின் கீழ் பகுதியில் பக்கவாட்டாக ரயில் பிளந்து விட்டிருந்தத…
-
- 25 replies
- 3.2k views
-
-
அதிகாலை ஒரு மணி இருக்கும். வெடிச்சத்தம் காதைப் பிளக்க.. நித்திரை இடையில் கலைகிறது. "சண்டை தொடங்கிட்டுது எல்லாரும் எழும்புங்கோ" அம்மா அவசரப்படுத்திக் கொண்டிருக்க, பலாலிப்பக்கம் இருந்து 'ஆட்லறிகளும்' கூவுகின்றன. "மண்டை தீவுப்பக்கம் தான் அடி விழுகுது" அப்பா தன் பங்குக்கு சொல்லும் பொழுதே வெடிச்சத்தம் உக்கிரமடைகிறது. பயம் கெளவிக் கொள்ள வீட்டை விட்டு வெளிய வந்து மாமரத்துக்கு அருகில் நின்றபடி அவதானிக்கிறோம். "சந்திரிக்கா போட்ட யுத்த நிறுத்தம் இந்தளவும் தானா?" அம்மா ஏக்கத்தோடு என்னைப் பார்த்துக் கேக்க, "அவள் கதிரை பிடிச்சிட்டாள் எல்லோ எனி என்னவும் செய்வாள்" அப்பா பதிலுரைக்கிறார். நித்திரை குழம்பிய பக்கத்து வீட்டு 'அங்கிளும்'. வெளியே வந்து, வீதியில் நின்றபடி " என்ன அடி தொடங்கிட்டு…
-
- 8 replies
- 1.7k views
-
-
அவர் ஒரு ஆபிரிக்க செனகல் நாட்டைச்சேர்ந்த வயதான பெண். அடிக்கடி கடைக்கு வருவார். நிறைப்பணம் செலவளிப்பார். ஊருக்கும் அனுப்புவார். கனக்க பைல்கள் கொண்டு வந்து போட்டோக்கொப்பி எடுத்து பல இடங்களுக்கும் அனுப்புவார். பைல்கள் முறையாக அடுக்கப்பட்டு அதற்கேற்ப ஒழுங்கமைக்கப்பட்டு இருக்கும். எழுதப்படிக்கத்தெரியாத அவரது இந்தத்திறமையைக்கண்டு நான் பிரமித்ததுண்டு. எழுதப்படிக்கத்தெரியாததால் என்னிடம் விலாசங்களை எழுதித்தரும்படி கேட்பார். அதில் பிள்ளைகளின் படிப்பு மற்றும் சொத்துக்கள் சம்பந்தமானதும் விவாகரத்து மற்றும் முறைப்பாடுகள் சார்ந்த அமைச்சுக்களின் விலாசங்களும் இருக்கும். ஒருநாள் கனநேரமாக தொலைபேசியில் அழுதபடியிருந்தார். என்னுடனும் …
-
- 5 replies
- 2.5k views
-
-
புத்தக வெளியீடு என்ற விளம்பரத்தை இணையத்தில பார்த்தவுடன் அதில் கலந்துகொள்வது எனமுடிவெடுத்தேன். மெல்பேர்னிலிருந்து எழுத்தாளர்கள் வேறு பங்குபற்றுகிறார்கள் என எழுதியிருந்தார்கள் எனவே நிச்சயம் போகவேணும் என தீர்மானித்தேன். அந்த நாளும் வந்தது. கதிரவன் இளைபாறும் நேரம். மனிதர்களுக்கு அடுத்த நாள் ஒய்வு. வாயில் சுவிங்கத்தை போட்டு மென்றுகொண்டு பின்வரிசையில் போய் உட்கார்ந்தேன். முற்போக்கு பிற்போக்கு, நடுபோக்கு எழுத்தாளர்கள் எல்லாம் மேடையில் இருந்தார்கள். புத்தக வெளியீட்டு வைபவம் தொடங்கியது. வரவேற்புரை, மெளனஞ்சலி என சம்பிராதய சடங்குகள் முடிவடைந்த பின்பு, இப்பொழுது மெல்பேர்னிலிருந்து வந்த முற்போக்கு எழுத்தாளர் ,கவிஞர், நாடக நடிகர் ,பேச்சாளர் .சு.கா.....பேசுவார் என் அறிவிப்பாளர்…
-
- 17 replies
- 2.5k views
-
-
சிறு வயதுக்காதல் -- இப்ப வேண்டாமே.. இளம் வயசில் ஆயிரம் பூக்கள் பூக்கும் அப்படித்தான் காதலுமா? யாருக்குத்தெரியும் அதை காதல் என்பதா? உணர்வா? காமமா?.... இன்றும் தெரியவில்லை... இப்படித்தான் அவளுக்கும் எனக்கும் ஒரு இது இருந்தது... பகிடி விடுவது நக்கலடிப்பது நுள்ளப்போவது (தொட்டது கிடையாது) இப்படித்தான் நேரம் போச்சு.. ஒரு நாள் கேட்டாள் என்னை பிடிச்சிருக்கா.....? பதில் சொல்லவரவில்லை அதற்கு நான் தயாரில்லை........ அதை நான் எதிர்பார்க்கவுமில்லை..... ஒன்றும் சொல்லாது விலகிச்சென்று விட்டேன் வீட்டுக்கு போன எனக்கு இதே யோசனை... அவளுக்கும் எனக்கும் ஒரே வயசு நான் படித்து முடித்து வர......?? ஆனால் அவளைப்பிடித்திருந்தது அதேநேரம் எனக்காக இன்னும் குறை…
-
- 18 replies
- 2.8k views
-
-
சாதாரண தரவகுப்பு நான் ஒரு பிரிவு (வகுப்பு) அவனும் அவளும் இன்னொரு பிரிவு(வகுப்பு).... மூவரும் முதல்வரிசை மாணவர்கள் படிப்பு பற்றியே அதிகம் பேசினாலும் வயதுக்குணங்களும் இடைக்கிடை வந்து போகும்.... பாடசாலைக்காலங்களில் அதிகம் நான் பகிர்ந்து கொண்டது அவனிடம் தான்... அவனும் அப்படித்தான்... இவன் எனக்கு உறவு என்றாலும் நட்பும் இவன் தான் அவளும் அப்படித்தான் உரிமையோடு பழகுவாள்.... இருவரும் என்னிடம் கொட்டியதில் இருவருக்கும் ஒரு காதல் இளையோடி இருப்பதை அறிந்தாலும் இருவரும் தேவையென்பதாலும் இதை வெளியிடப்போய் விரிசல் வந்துவிடுவோ என்ற பயத்திலும் தவிர்த்து வந்தேன்... அவளிடமும் இவன் மீது நாட்டமிருப்பது தெரிந்தாலும் பெண் என்பதால் சிலசங்கடங்களும் கணிப்பு சரியா என்ற தயக…
-
- 36 replies
- 4k views
-
-
இருளில் தெரிந்த தேவதை.(இது கதையல்ல) கடந்த மார்கழி 13 ந் திகதி விடுமுறைக்கான பயணம்.இலங்கைக்கு செல்லக்கூடிய சாதகமான சூழல் இன்னமும் சரி வராததால் வழைமை போல இந்தியாவிற்கான பயணம்.ஒன்ரரை மாதங்கள் விடுமுறைக்காலம் என்பதால் எனது நண்பர்களையும் சந்தித்து போவது என முடிவெடுத்து முதலில் மும்பையில் இறங்கி அங்கு நான்கு நாட்கள் பின்னர் கோவா.கர்நாடகா.தமிழ்நாடு என பயணப் பாதை திட்டமிடப் பட்டது.மும்பையில் எனது மனைவியின் தம்பி ஒரு தனியார் கப்பல் நிறுவனத்தில் பொறியியலாளராக இருப்பதால் அவனும் விடுமுறை எடுத்து எங்களிற்காக காத்திருந்தான்.மும்பையில் இரண்டாம் நாள் மாலை மனைவி தனது தம்பியுடன் பொருட்கள் வாங்க போய்விட நான் எனது நீண்டகால நண்பன் டோனியலை சந்திப்பத்காக அவன் கடை வைத்திருக்கும் மல…
-
- 13 replies
- 2.6k views
-
-
புன்னாலைக்கட்டுவன் பெற்ற புலிவீரன் மேஜர் தமிழரசன் (டொச்சன்) நவம்பர் 15, 2013 | ஒரு போராளியின் குருதிச் சுவடுகள். Edit Post (இயற்பெயர் - கந்தசாமி.ஜெயக்குமார்) வீரப்பிறப்பு- 21.06.1966 – வீரச்சாவு – 24.11.1992 வடக்குப்புன்னாலைக்கட்டுவன் 80களில் விடுதலைப்புலிகளை ஆதரித்த ஊர்களில் ஒன்று. இங்கு பல ஆரம்பகால விடுதலைப்புலிகளின் வரலாறும் பலரது வரலாற்றின் வேர்களும் பரவியிருக்கிறது. தலைவர் பிரபாகரன் வந்து தங்கி வாழ்ந்து அவரைப் பாதுகாத்த ஊர்களில் வடக்குப்புன்னாலைக்கட்டுவனும் ஒன்று. தலைவருடன் வாழ்ந்த போராளிகளில் ஒருவர் தலைவர் நன்றியுடன் ஞாபகம் கொள்ளும் ஒருவர் பற்றி ஒருமுறை உரையாடிய போது சொன்னவை :- புன்னாலைக்கட்டுவனில் தலைவரை பாதுகாத்த குடும்பங்களில் ஒன்று சுவிஸ் குல…
-
- 5 replies
- 1.5k views
-
-
எனக்கு முன்னால் இருந்த நாற்காலியில் முழுக்கை நீல நிற மேலங்கியுடன், மெல்லியதேகமும் நிமிர்ந்த பார்வையும் கொண்ட அவனின் கண்களை உற்று நோக்கினேன். எனது தேடலுக்கு எந்தவித பலனும் இல்லாமல் அவனது கண்கள் இருந்தன. மெல்லிய நீல வர்ண பூச்சுடன் இருந்த ஒரு தனியறையில் என்னையும் அவனையும் தவிர வேறு ஒருவரும் இல்லை. எமது உரையாடல்கள் பதிவு செய்யப்பட்டு கொண்டு இருந்தன. அவற்றில் 50 வீதத்துக்கும் அதிகமாக மௌனமே பதியப்பட்டிருந்தது. வாசலில் இரண்டு காவலர்கள் விசாரணை முடிவுக்காக அசைவின்றி காத்திருந்தார்கள். "நான் அதை செய்யவில்லை" என்பதை தவிர அவனிடம் இருந்து வேறு எந்த பதிலும் எனக்கு உருப்படியாக கிடைக்கவில்லை. அம்மான் கரும்புலிகளுக்காக ஆற்றிய உரையை பொதுவெளி இணைய பாவனையில் இருந்த ஒரு கணினி…
-
- 21 replies
- 3.9k views
-
-
பனிக்காலத்தில் வீட்டு வளவுக்குள் அதிகமாக போவதில்லை,அன்று நல்ல வெய்யில் அடிச்சுது ஒரு கோப்பியை போட்டுகொண்டு வெளியால வந்து தோட்டத்து கதிரையில் குந்தினேன்.வீட்டினுள் இருந்த வெப்பநிலையை விட வெளியில் மிகவும் இதமாக இருந்தது. எம்.ஜி. ஆர் காலத்து வாழை தண்டு போலஉடம்பு ஆளே,மடவாழை பாடல்களை முனுமுனுத்தபடி சீனியில்லா கோப்பியை ரசித்து குடிக்கதொடங்கினேன். 'வேதாளம்,வேதாளம்' என சத்தம் கேட்டுது.அக்கம் பக்கம் திரும்பி பார்த்தேன் ஒருத்தரையும் காணவில்லை. 'மரமண்டை,மரமண்டை' கிழக்கு பக்கத்தில இருந்து வந்திச்சு திரும்பி அந்த பக்கத்தையும் பார்த்தேன் ஒன்றையும் காணவில்லை. முதல்நாள் அடிச்ச தண்ணியின் வேளை போல கிடக்கு பெரும் குடிமக்கள் இதைதான் கங்கோவர் என்று சொல்லுறவங்களாக்கும் என நி…
-
- 29 replies
- 4.5k views
-
-
மீன்கொத்திப் பறவை மீன் கொத்தும் லாவகம் அவள் தேனீர் தயாரிப்பதில் இருக்கும். சிப்பந்தி வேலையென அவள் தன் வேலையினைக் கருதியதாய்த் தோன்றவில்லை. வீடு தேடி வந்தவரை உபசரிக்கும் பாங்கில் அந்தத் தேனீர்ச்சாலையில் அவள் நடந்துகொண்டாள். நான்காம் ஆண்டு படித்துக்கொண்டிருந்த காலத்தில் ஒரு நாள் எங்கள் காணிகளை நானே சென்று பார்த்துக்கொள்ளவேண்டும் என்ற ஒரு நாட்டாமைக் குணம் எனக்குள் விளித்துக் கொள்ள வீட்டில் சொன்னேன். கொடுப்பிற்குள் பெருமை சிரிப்பாக அம்மா ஒரு தொழிலாளியுடன் என்னை அனுப்பி வைத்தாள். தென்னங்காணிக்குள் ஒளிந்திருந்த ஒரு துரவோரம் நின்ற காட்டுமரம் என்னைக் கட்டிப்போட்டது. அது என்ன மரமென்று தொழிலாளியிடம் கேட்க அவர் 'ஓம் தம்பி அது வெட்டோணும், நெடுக நினைக்கிறது நேரம் கிடைக்கிறதில…
-
- 3 replies
- 1.3k views
-