மெய்யெனப் படுவது
மெய்யியல் | நற்சிந்தனைகள் | ஆன்மீகம் | இசங்கள் | பகுத்தறிவு
மெய்யெனப் படுவது பகுதியில் மெய்யியல், நற்சிந்தனைகள், ஆன்மீகம், இசங்கள், பகுத்தறிவு பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் மதப் பிரச்சாரம், திருவிழாக்கள் போன்ற பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும்.
1238 topics in this forum
-
இந்து மதமா? தமிழர் மதமா? தமிழர்களே சிந்திப்பீர் ! ஆரியர்கள் வகுத்த இந்து மதத்தில் நால் வகை வருணங்கள் பிறப்பின் அடிப்படையில் பிரிக்கப்படுகிறது. தமிழர்களை பொறுத்தவரை இந்த நால் வகை வருணங்கள் நமக்கு இல்லையென்றாலும், பிற்காலத்தில் இந்த வருண பேதத்தால் தமிழர்களும் சாதிய வேறுபாடுகளால் துண்டாடப் பட்டனர் என்பது தான் உண்மை . பிறப்பின் அடிப்படையில் மனிதர்களை பிரிப்பது கொடுமை என்று தான் தமிழக பெருமக்கள் நமக்கு சங்க காலம் தொட்டே போதித்து வந்துள்ளனர். தொல்காப்பியர், வள்ளுவர், ஒளவையார் முதல் வள்ளலார் வரை இந்த வருணாஸ்ரம தர்மத்தை எதிர்த்தே வந்துள்ளனர். பிறப்பால் அனைத்து மனிதர்களும் சமம் என்றே போதித்து உள்ளனர். ஆனால் நயவஞ்சக ஆரிய இந்து மதமோ , பிறப்பாலே மனிதர்களை வேறுபடுத்தி பார்க்கிறது …
-
- 52 replies
- 25.3k views
-
-
உ திருச்சிற்றம்பலம் ஸ்ரீ மெய்கண்ட தேசிகன் திருவடி வாழ்க திருக்குறள் பொது நூலா? சித்தாந்த பண்டித பூஷணம் ஆ.ஈசுரமூர்த்திப் பிள்ளை திருநெல்வேலி பேட்டை தோற்றுவாய் விஞ்ஞானிகள் அதிகரிக்கின்றனர். விஞ்ஞானம் வளர்கிறது. அதனால் அற்புதங்கள் பல ஆக்கம் பெறுகின்றன. ஆயினும் அவற்றுள் தீங்கு பயப்பன பல. அவையும் நலத்துக்குப் பயன்படுத்தப்படுமா? அத்தீங்கு அகற்றப்படுமா? அவ்வாசையோடு செய்யப்படும் முயற்சிகளுமுள. நலம் பயக்கும் அற்புதங்களும் பலவே. ஆனால் எதிர்பாராத விதத்தில் ஆபத்துக்கள் அவற்றாலும் விளைவதுண்டு. எப்படியும் அவ்வற்புதங்கள் அற்புதங்களே. அவற்றால் உலகம் செழிக்கிறது. நாகரிகம் மேற்போகிறது. மக்கள் சுகிக்கின்றனர். அதனை நாமுஞ் …
-
- 130 replies
- 25.1k views
-
-
வான்கலந்த மாணிக்கவாசகம் 01 பேராசிரியர் ந. கிருஷ்ணன் ‘மெய்யாகவே இறைவனிடம் அன்பு செலுத்துவதும் அவனை அடைவதும் எப்படி?’ என்று மனித உடலில் வாழும்போதே இறையனுபவம் பெற்ற மாணிக்கவாசகரிடமே கேட்டுவிடுவோம் என்ற எண்ணம் தோன்றியது. மாணிக்கவாசகர் இறைவனுக்கு எழுதிய காதல் கடிதங்களை வாசித்தால் விடை கிடைக்கும் என்று தோன்றியது. நல்லவேளை, அத்தகைய கடிதங்களைத் தொகுத்துத் ‘திருவாசகம்’ என்றும், ‘திருக்கோவையார்’ என்றும் வைத்திருந்தார்கள். ஒவ்வொரு கடிதமாக வாசிக்கத் தொடங்கினேன். ஒரே புலம்பலாகத் தோன்றியது. பக்கங்கள் ஓடின. சரிப்பட்டுவராது என்று மனதில்பட்டது; மூடிவைத்துவிட்டேன். சரி, குத்துமதிப்பாக ஒரு பக்கத்தைத் திறப்போ…
-
- 39 replies
- 24.8k views
-
-
கடவுளை நம்ப முட்டாளே போதும் என்னைப்பற்றிச் சொல்ல வேண்டுமானால் கடவுள் என்று ஒருவர் இருக்கிறார் என்றோ, இல்லையென்றோ சொல்ல முன் வரவில்லை. அதுபோலவே நீங்கள் அனைவரும் என் பேச்சைக் கேட்டுத்தான் ஆக வேண்டுமென்று கூறவில்லை. இன்னொன்றும் சொல்கிறேன், கடவுள் இருக்கிறார் என்று சொல்லிக் கொள்ள அறிவாளி தேவையில்லை. சாதாரணமாக ஒரு முட்டாள்கூட சொல்லிவிடலாம். ஆனால், கடவுள் இல்லையென்று மறுத்துக்கூற ஒரு அறிவாளியால்தான் முடியும். மறுப்பதற்கான பல ஆதாரங்களைச் சொல்ல வேண்டும்; சிந்தித்து அதற்கான காரணங்களைக் கூற வேண்டும். உலகில் இன்று கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் சுமார் 100 கோடி மக்கள் இருப்பார்கள். கடவுள் நம்பிக்கை இருப்பவர்கள் சற்றுக் கூடுதலாக இருப்பார்கள். நாம் எல்லோரும் கடவுள் நம்பிக்க…
-
- 177 replies
- 24.3k views
-
-
தொடரும்..
-
- 52 replies
- 23.9k views
-
-
உயிர் வளர்க்கும் திருமந்திரம் 01: யாக்கையில் தொடங்கி காக்கை உயிர் என்னும் சொல் ‘உய்’ என்னும் வேரிலிருந்து தோன்றியதாகக் கணக்கு. உய்தல் என்றால் வாழ்தல் என்று பொருள். ‘உய், உய்’ என்னும் சீழ்க்கை ஒலியோடு மூச்சிழுப்பு நிகழ்கிறது. மூச்சிழுத்தல்தான் ஒருவர் வாழ்ந்திருப்பதற்கான அடையாளம். மூச்சிழுக்கும் செயலுக்கு உயிர்த்தல் என்று பெயர். பெருமூச்சு விடுவதை நெட்டுயிர்த்தல் (நீளமாக உயிர்த்தல்) என்று சொல்வது இப்போது அற்றுப் போய்விட்ட வழக்கு. பிராண வாயு என்று வடமொழி குறிப்பது தமிழில் உயிர் வளி என்று வழங்கப்படும். இந்த அடிப்படையில் பார்க்கும்போது மூச்சிழுத்து வாழ்ந்திருப்பது எதுவோ அது உயிர். உய்தல் என்ற சொல்லுக்குக் கடைத்தேறுதல் என்றும…
-
- 52 replies
- 22.8k views
- 1 follower
-
-
பைபிள் கதைகள் 1: தோட்டத்தை இழந்த தோழர்கள் இத்தனை அழகான பூமியை கடவுள் எதற்காகப் படைத்திருப்பார்? சந்தேகமே வேண்டாம்; மனிதர்களுக்காகவே அவர் பூமியைப் படைத்தார். மனிதர்களைப் படைக்கும் முன் கடவுள் வானதூதர்களை உண்டாக்கினார். அவர்கள் சர்வ வல்லமைகொண்ட கடவுளுக்கு கீழ்படிந்து நடக்கும் அவரது ஊழியர்கள். அவர்கள் கடவுளைப்போல் ஆவித்தன்மை கொண்டவர்கள். ஆனால் அவரைப்போல் தலைமைப் பண்பு கொண்டவர்கள் அல்ல. இந்த ஊழியர்களில் ஒருவன் கடவுளைப்போல் இந்த பிரபஞ்சத்தை ஆள விரும்பினான். அவருக்கு எதிரியாக மாறினான். எனவே கடவுள் அவனுக்குத் தந்திருந்த புனிதத்தன்மையை இழந்தான். சாத்தானாக போகும்படி கடவுளால் சபிக்கப்பட்டான். கோபம்கொண்ட சாத்தான், “ நீ…
-
- 66 replies
- 22.6k views
-
-
வணக்கம் கள உறவுகளே!! ஒரு குறுந்தொடர் ஊடாக உங்களை சந்திக்கின்றேன் . நான் படித்த , கேட்ட சிறு நீதிக்கதைகளை இத்தொடர் ஊடாக உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன் . வழமை போலவே உங்கள் விமர்சனங்களை எதிர்பார்க்கின்றேன் . நேசமுடன் கோமகன் ***************************************************************** அதிசயம் பான்கெய் என்ற ஜென் மாஸ்டர். தன்னுடைய சிஷ்யர்களுக்குப் போதனை செய்துகொண்டிருந்தார். அப்போது அங்கே ஒரு பூசாரி வந்தார். உள்ளூர்க் கோவிலில் வழிபாடு நடத்துகிறவர் அவர். புத்தர்மீதோ ஜென்மீதோ அவருக்கு நம்பிக்கை இல்லை. ஆகவே, அவர் புத்தரை இழிவுபடுத்திப் பேசினார். ‘ஜென் என்பது சுத்தப் பைத்தியக்காரத்தனம்’ என்றார். பான்கெய் அவரைக் கண்டிக்கவோ மறுக்கவோ இல்லை. ‘ஐயா, உங…
-
- 208 replies
- 21.6k views
-
-
64 பைரவர்களின் பெயர்களை காணலாம். காலபைரவர், சிவபெருமானின் ருத்திர ரூபம் . முதலில் தோன்றிய பைரவர் சொர்ண பைரவரே ஆவார். ஒரு வடிவம் பின்பு 8 பைரவர்களாக மாறியது. பின்னர் 8 பைரவ வடிவங்கள் ஒவ்வொன்றும் 8 வடிவங்களாக மாறி 64 பைரவர்களாக வெளிப்பட்டனர். கங்கைக் கரையில் 64 கட்டங்களில் 64 பைரவர்கள் உள்ளனர். 1.நீலகண்ட பைரவர் 2.விசாலாட்சி பைரவர் 3.மார்த்தாண்ட பைரவர் 4.முண்டனப் பிரபு பைரவர் 5.ஸ்வஸ்சந்த பைரவர் 6.அதிசந்துஷ்ட பைரவர் 7.கேர பைரவர் 8.சம்ஹார பைரவர் 9.விஸ்வரூப பைரவர் 10.நானாரூப பைரவர் 11.பரம பைரவர் 12.தண்டகர்ண பைரவர் 13.ஸ்தாபாத்ர பைரவர் 14.சீரீட பைரவர் 15.உன்மத்த பைரவர் 16.மேகநாத பைரவர் 17.மனோவேக பைரவர் …
-
- 7 replies
- 21.3k views
-
-
திருப்புகழ் | அருணகிரிநாத சுவாமிகள் http://www.skandagurunatha.org/works/thiruppugal/audio/170d.mp3'>http://www.skandagurunatha.org/works/thiruppugal/audio/170d.mp3 நாத விந்து கலாதி நமோ நம வேத மந்திர ஸ்வரூபா நமோ நம ஞான பண்டித ஸ்வாமி நமோ நம வெகுகோடி நாம சம்பு குமாரா நமோ நம போக அந்தரி பாலா நமோ நம நாக பந்த மயூரா நமோ நம பரசூரர் சேத தண்ட வினோதா நமோ நம கீத கிண்கிணி பாதா நமோ நம தீர சம்பிரம வீரா நமோ நம கிரிராஜ தீப மங்கள ஜோதி நமோ நம தூய அம்பல லீலா நமோ நம தேவ குஞ்சரி பாகா நமோ நம அருள்தாராய் ஈதலும் பல கோலால பூஜையும் ஓதலும் குண ஆசார நீதியும் ஈரமும் குரு சீர்பாத சேவையும் மறவாத ஏழ்தலம் புகழ் காவேரியால் விளை சோழ மண்டல மீதே மனோஹ…
-
- 7 replies
- 20.3k views
-
-
ஆணவம் ! மாயை !கன்மம் ! என்பது யாது ? ஆணவம் , மாயை ,கன்மம் , என்னும் வார்த்தை ஆன்மீகத்தில் அனைவராலும் பேசப்படும் வார்த்தையாகும் , ஆன்மா என்னும் ஒளியை, ஆணவம் ,மாயை ,கன்மம் என்னும் மும்மலங்கள் மறைத்துக் கொண்டு உள்ளதால் ,உண்மையான கடவுளை அறிய முடியவில்லை என்கிறார்கள் ,அதை அழித்தால் தான் கடவுளை அறிய முடியும் என்பது ஆன்மீக,சமய ..மத .. வாதிகளின் கருத்தாகும் . இதற்கு வள்ளல்பெருமான் என்ன சொல்கிறார் என்பதைப் பார்ப்போம்! . ஆன்மாக்கள் என்பது ,ஆண்டவரால் அனுப்பப் பட்ட ,ஆண்டவரின் குழந்தைகளாகும் .அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்பது ,அனைத்து அண்டங்களையும் இயக்கிக் கொண்டு இருக்கும்,,ஒரு மாபெரும் பேரொளியாகும். அந்த பேரொளி இருக்கும் இடம் ,அகண்ட ,அளவிடமுடியாத அர…
-
- 0 replies
- 19.6k views
-
-
திருக்கைலாய யாத்திரை நான் இணையத்தில் வாசித்த நல்ல ஆன்மிகப் பயணக்கட்டுரை. இரண்டு பகுதிகளை இங்கே இனைத்துள்ளேன். பிடித்திருந்தால் சொல்லுங்கள் தொடர்ந்து இணைக்கின்றேன். நன்றி. நன்றி: நிகழ்காலத்தில் சிவா - http://www.arivhedeivam.com/
-
- 39 replies
- 19.5k views
-
-
தாலியும் குலக்குறிச் சின்னமும் ஞா. ஸ்டீபன் தமிழ்ப் பண்பாட்டில் தாலி பழங்காலந் தொட்டு வழக்கில் உள்ளதா என்பது குறித்து பல விவாதங்கள் தமிழில் நடந்துள்ளன. மா. இராசமாணிக்கனார், தமிழ்ப் பண்பாட்டில் தாலி பிற்காலத்தில் குறிப்பாக 12ஆம் நூற்றாண்டு வாக்கில் வழக்கிற்கு வந்தது என்றும், அதற்குமுன் அது வழக்கில் இல்லை என்றும் உறுதிபடக் கூறினார். இதற்கு மாறாக ம.பொ.சி. சங்ககாலத்திலிருந்து தாலி வழக்கிலிருந்தது என்றும், தாலி தமிழனின் தனித்த பண்பாட்டு அடையாளம் என்றும் வாதிட்டார். வெறும் இலக்கியச்சான்றுகளை மட்டும் சான்றாதாரங்களாகக் கொள் ளாமல் மானிடவியல், நாட்டார் வழக்காற்றியல், சமூகவியல் சார்ந்த மெய்ம்மைகளையும் குறுக்கு நோக்கீடு செய்து புதிய வெளிச்சம் பாய்ப்பது இன்றியமையாதது. தற்கால வழக்க…
-
- 0 replies
- 19.4k views
-
-
காண்டம் பற்றிய உங்கள் கருத்து என்ன? சில நண்பர்களுடன் உரையாடும்போது மிகவும் வியப்பாக விதந்துரைத்தார்கள். அப்படியே உண்மையென்றும் அடித்துச் சொன்னார்கள். முற்பிறப்பு முதல் கொண்டு தற்போதய வாழ்க்கை...எதிர்கால வாழ்க்கை என்பன பற்றி கூறுவது எல்லாம் அப்படியே நடந்ததாக பலர் கூறக் கேட்டுள்ளேன். சாத்திரம், சம்பிரதாயங்கள் எதையும் நம்பி என் வாழ்க்கையை நடத்தாத நான்..காண்டம் என்பதை மட்டும் நம்பலாமோ என்று தோன்றுகின்றது. அதைப்பற்றி பதிவுலக நண்பர்களாகிய உங்களிடமும் ஆராயலாம் என்று தோன்றியது. உங்கள் கருத்துக்கள்....உங்கள் அனுபவங்கள்....ஆக்க பூர்வமான விவாதங்களையும் எதிர்பார்க்கின்றோம்;. பலருக்கும் இது பற்றிய தெளிவும் அறிவும் இந்த பகுதியூடாக கிடைக்கும் என்று நம்புகின்றேன்.
-
- 24 replies
- 19.3k views
-
-
உ சிவமயம் திருச்சிற்றம்பலம் ஸ்ரீலஸ்ரீ யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுக நாவலரின் சைவ வினா விடை முதல் புத்தகம் 1. கடவுள் இயல் 1. உலகத்துக்குக் கருத்தா யாவர்? சிவபெருமான். 2. சிவபெருமான் எப்படிப்பட்டவர்? என்றும் உள்ளவர்; எங்கும் நிறைந்தவர்; எல்லாம் அறிபவர்; எல்லாம் வல்லவர். 3. சிவபெருமான் ஆன்மாக்களுக்காகச் செய்யுந் தொழில்கள் யாவை? படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் மூன்றுமாம். 4. சிவபெருமான் இந்த மூன்று தொழில்களையும் எதைக் கொண்டு செய்வார்? தமது சத்தியைக் கொண்டு செய்வார். 5. சத்தி என்னுஞ் சொல்லுக்குப் பொருள் யாது? வல்லமை. 6. சிவபெருமானுக்குச் சத்தி யாவர்? …
-
- 95 replies
- 19.3k views
-
-
"நாம் யார்க்கும் குடி அல்லோம் .... நமனை அஞ்சோம் " என்று எட்டாம் நூற்றாண்டில் தேவாரத்தை பாடிய திருநாவுக்கரசரும் இப்போ பயங்கரவாதியா "கற்றுணை பூட்டி கடலினுள் பாச்சினும் " நற்றுணை வேண்டும் என்று சொன்னாரே ..... அப்பர் சுவாமிகள் . என்ன அர்த்தத்தில் சொன்னார் என்று நீங்கள் கருதுகின்றீர்கள் ?
-
- 6 replies
- 19.2k views
-
-
ஓம் சக்தி தனம்தரும், கல்வி தரும் ஒருநாளும் தளர்வு அறியா மனம் தரும் "அபிராம வல்லியை" வணங்கும் நவராத்திரி விரதம் ஆத்தாளை, எங்கள் அபிராம வல்லியை, அண்டம் எல்லாம் பூத்தாளை, மாதுளம் பூ நிறத்தாளை, புவி அடங்கக் காத்தாளை, ஐங்கணைப் பாசங்குசமும் கருப்புவில்லும் சேர்த்தாளை, முக்கண்ணியைத், தொழுவார்க்கு ஒரு தீங்கு இல்லையே. நவராத்திரி விரதம் இவ்வாண்டு ஒக்ரோபர் மாதம் 05.10.2013 ம் திகதி சனிக்கிழமை ஆரம்பமாகின்றது. புரட்டாதி மாத வளர்பிறை பிரதமை முதல் நவமியீறாகவரும் ஒன்பது தினங்கள் நவராத்திரி விரத காலமாகும். 10 வது தினம் விஜயதசமி தினமாகும். அதில் முக்குணங்களுக்கும் மூலமான சர்வ லோக நாயகியை ஒன்பது நாள்களும் பூஜிக்கும்போது, முதல் மூன்று நாள்கள் தமோ குண சஞ்சாரியான ஸ்ரீதுர்கா பரமேஸ்…
-
- 32 replies
- 18.6k views
-
-
குண்டலினி சக்தி குண்டலினி சக்தி குண்டலினி யோகத்தை உணர்ந்து அதன் அளவற்ற ஆற்றல் ஆன பிரபையில் மூழ்கி அந்த ஜோதியில் தானும் ஜோதி மாயம் ஆகி விட்டவர்களே சித்தர்கள்.சித்தர்கள் பலரும் இந்த குண்டலினி சக்தியை வாலை வழிபாடு,வலை பூஜை, ஆயி பூஜை என்றும் கூறுவார். இந்த வலை பெண் சோதி ரூபமுடையவள், சுடர் விட கூடியவள், பிரகாசிப்பவள். குண்டலினி சக்தி என்பது முதுகுத் தண்டின் கீழே தான் இருக்கிறது என்பது உண்மையானது இல்லை. மூலாதாரம் என்பது மல வாசலாகிய குதத்துக்கும் மூத்திர வாசலாகிய நீர்பைக்கும் மத்தியில் உள்ளது . அங்கே தான் குண்டலினி சக்தியாகிய பாம்பு சுருண்டு மண்டல மிட்டபடியாக தூங்கி கொண்டிருக்கிறது.அப்படி தூங்கி கொண்டிருக்கும் அந்த குண்டலினி பாம்பை யோக சக்தியைக் கொண்டு மூலாத…
-
- 9 replies
- 18.6k views
-
-
இந்து மதம் எங்கே போகிறது????????? (பகுதி - 1 ) வணக்கம் கள உறவுகளே !!!!!!! பலத்த சர்ச்சைகளையும் , விமர்சனங்களையும் உருவாக்கியிருந்த ஒரு தொடரை வாசகர்களுக்காகத் தொட்டுச்செல்கின்றேன் . வழமைபோலவே உங்கள் ஆதரவினையும் , ஆக்கபூர்வமான விமர்சனங்களையும் எதிர்பார்க்கின்றேன் . நேசமுடன் கோமகன் ********************************************* இந்து மதம் எங்கிருந்து வந்தது? நான்காயிரம் வருடங்களுக்கு முன்பு ஓடிச் செல்லுங்கள் முடிகிறதா? உங்கள் மனக்குதிரையில் ஏறி உட்கார்ந்து கொண்டு கற்பனை, சிந்தனை இரண்டு சாட்டைகளாலும் விரட்டுங்கள். வரலாறு துல்லியமாக கணிக்க முடியாத காலத்தின் பாதாளப் பகுதி அது. மலைகள், காடுகள் என மனிதர்களையே பயமுறுத்தியது பூமி. இமயமலைக் குளிர் காற…
-
- 78 replies
- 18.6k views
-
-
விமான தொழில் நுட்பத்தின் முன்னோடிகள் உண்மையில் யார்? -மயூரன்- இன்று விஞ்ஞானம் பல மடங்கு வளர்ந்துவிட்டது. வான்வெளியில் விண்கலங்கள் ஏவுகணைகள். எனப்பல விண்ணை அலங்கரித்துக் கொண்டிருக்கின்றது. இவைகள் அனைத்தும் விண்வெளி உலகின் தத்துவமேதை எனப்படும் ரஷ்யா நாட்டைச் சேர்ந்த கொன்ஸ்டன்டின் ஸியோல்கோவிஸ்கி என்பவரின் தீர்க்க தரிசணத்தால் உருவானவையே இன்று உலகத்தில் நாம் வானை அளந்துகொண்டிருக்கின்ற விமானங்களுக்கு ஆதாரமிட்டவர்கள் ரைட் சகோதரர்களே (1903) என உலகம் புழகாங்கிதம் அடைந்தாலும் உன்மையில் முதன் முதலில் விமானத்தைக் கண்டுபிடித்தவர் கொன்ஸ்டன்டின் ஸியோல்கோவிஸ்கி என்பவரே 1894ஆம் ஆண்டு அவர் இந்தசாதனையை நடாத்தி முடித்தார். உலகில் உள்ள பல நாட்டு நூல்களிலும் விமானங்கள் ஏவு…
-
- 92 replies
- 18.3k views
-
-
தேவார முதலிகளில ஒருவரான திருநாவுக்கரசருக்கு மருணீக்கியார்> தருமசேனர்> வாகீசர்> அப்பர்> தாண்டகவேந்தர் என்னும் நாமங்களுமுண்டு. இதில் அப்பர் என்னும் திருநாமம் திருஞானசம்பந்தரால் கொடுக்கப்படது என்பர். அப்பர் பாடிய முதற்பாடல் “கூற்றாயினவாறு விலக்ககிலீர்..” என்று தொடங்குவதாகும். இந்தப் பதிகம் முழுவதும் அவர் வயிற்று உபாதையால் அதாவது சூலை நோயாற் பட்ட துன்பத்தின் ஆற்றாமையையும் அதனைக் குறைக்குமாறு இறைவனை வேண்டுவதையுமே காட்டி நிற்கின்றது. அப்பர் தான் பெற்ற இறையனுபவத்தைப் பற்றிப் பாடும் “மாசில் வீணையும்…” பாடல் மிகுந்த இயற்கை நுகர்வை அனுபவிக்கும் ஓர் கவிஞனாக அவரை வெளிப்படுத்துகின்றது. அவரின் து}ய இசைப்பற்றும் அதில் தெரிகின்றது. அபசுரம் தட்டாத> பழுதுபடா மாசி…
-
- 5 replies
- 18.1k views
-
-
வேதம் ஓதி, பகுத்தறிவு பேசி, சுயமுரண்பட்டு..... இவை தாம் ஈ வெ ராமசாமி என்பவர் பேசிய.. "பகுத்தறிவுகளின்" சாரம்சம். அவற்றுள் பலவற்றுள் அவரே முன்னுக்குப் பின் சுய முரண்படுகிறார். அதுமட்டுமன்றி யாழ் களத்தில் பேச தடைசெய்யப்பட்ட சொற்களும் அவர் பாவிச்ச வடிவத்தில் இருப்பதால்.. அவருக்காக தணிக்கை செய்யாமல் விடவும். தமிழ் மொழி மீதும் தமிழர்கள் மீதும்.. இந்து மதத்தின் மீது காங்கிரஸின் மீதும் கொண்டிருந்த வெறுப்பும்.. தான் கன்னடன் என்ற இறுமாப்பும்.. இவரின் கருத்துக்களில் ஆழப்பதிந்திருப்பதைக் காணலாம். இடையிடையே தமிழர்களை சமாளிக்க தனது இருப்பை தமிழகத்தில் தக்க வைக்க.. ரஜனி ஸ்ரைலில்.. தத்துவம் பேசி தமிழ் மக்களை நெகிழ்விப்பத்தையும் காணலாம். யாழ் களத்திலும் இந்த பகுத்தரிவு வா…
-
- 67 replies
- 17.7k views
-
-
இந்திய மக்களின் ஏழ்மையைப் பயன்படுத்தி மதமாற்ற முயலும் கும்பல்களுக்கு எதிராகவும், இந்தியாவின் கலாச்சார அடையாளங்களையும் பேணவும் உருவாக்கப்பட்ட அமைப்புத் தான் சங்கபரிவார், மற்றும் ஆர்எஸ்எஸ். சுனாமி, பூம்பம் போன்ற விடயங்களில் இந்திய அரசை விட முந்திக் கொண்டு செயற்பட்டது குறித்துப் பாராட்டதவர்கள் இல்லை எனலாம். இவர்கள் தான் மதமாற்ற முயலும் கும்பல்களுக்குப் பிரச்சனை. எனவே, இவர்களைப் பற்றி வதந்திகளையும், கெட்ட பெயரையும் உருவாக்கப் பலருக்குப் பணம் கொடுத்து கெட்டபெயரை உருவாக்க முயல்கின்றார்கள். தமிழ்நாட்டிலும் சில அமைப்புக்கள் வெளிநாட்டு மதமாற்றச் சக்திகளிடம் பணம் வாங்கிக் கொண்டு கெட்ட பெயரை உருவாக்க முயன்று கொண்டிருக்கின்றன. இந்த விலை போன தமிழ்நாட்டு அமைப்புக்கள் தங்களுக்க…
-
- 130 replies
- 17.1k views
-
-
இந்து சமயம் – ஓர் அறிமுகம் – 1 செம்பரிதி இந்து சமயம் ஒற்றைப் பெருமதம் என்று பலரும் நினைக்கிறார்கள். அது ஒரு சிந்தனை முறைமை. ஏராளமான மதங்கள், நம்பிக்கைகள், பண்பாட்டு மரபுகள், மொழி மரபுகளை தன்னுள்ளடக்கியதாய், வட்டாரம் சார்ந்து பல்வகைப்பட்ட நியமங்களும் ஆதார நம்பிக்கைகளும் கொண்டதாய், மானுட சமுதாயங்கள் அனைத்துக்கும் பொருந்தக்கூடிய உலகளாவிய அடிப்படை விழுமியங்களை முன்னிருத்துவதாய் உள்ள சிந்தனை முறைமை. இது போக இந்து சமயங்கள் குறித்து இன்னும் சொல்ல இருக்கிறது. சிந்து என்ற சொல், நதி, அகண்ட நீர்பரப்பு, கடல் என்றும் பொருள்படும். இந்தியாவின்மீது படை தொடுத்துக் கொண்டிருந்த பாரசீகர்கள், சிந்து என்ற சொல்லை உச்சரிக்க இயலாமல் இந்து என்று அழைத்தனர். இதுவே பின்னர் இந்தியா என்ற…
-
- 7 replies
- 16.5k views
-
-
யாத்திரைப்பத்து சிவன் உலகம் செல்லும் யாத்திரைக்கு அனைவரையும் அழைத்துக் கூறிய பகுதியாதலின், இது, 'யாத்திரைப்பத்து' எனப்பட்டது. பதிகம் 1. திருச்சிற்றம்பலம் பூவார் சென்னி மன்னன்எம் புயங்கப் பெருமான் சிறியோமை ஓவா துள்ளங் கலந்துணர்வாய் உருக்கும் வெள்ளக் கருணையினால் ஆவா என்னப் பட்டன்பாய் ஆட்பட் டீர்வந் தொருப்படுமின் போவோம் காலம் வந்ததுகாண் பொய்விட் டுடையான் கழல்புகவே. பொருள் : பூ ஆர் - மலர் நிறைந்த, (பூசைனைக்கு மலர்களினால் அலங்கரிக்கப்பட்ட எம்பெருமான்) சென்னி - முடியையுடைய, மன்னன் - அரசனாகிய, எம் புயங்கப் பெருமான் - பாம்பணிந்த எங்கள் பெருமான், சிறியோமை - சிறியவர்களாகிய நம்மை, ஓவாது - இடையறாமல், உள்ளம் கலந்து - உள்ளத்தில் கலந்து, உணர்வு ஆய் - உணர்வுருவாய், உருக…
-
- 13 replies
- 15.7k views
-