Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எனக்கு பிடித்த எழுத்தாளார்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒண்டும் வேண்டாம் எண்டிட்டு சும்மாயிருக்கிறன் ஆளால் பேந்தும் பேந்தும் வம்புக்கிழுக்கிறதெண்டே அடம் பிடிக்கிறீங்களே ??அதுவும் இந்த நேரத்திலை :D:(அவலத்தாலை பாதிக்கப்பட்ட பலபேர் இன்னமும் இங்கை உலாவினம் எதுக்கு அவங்களை கடுப்பேத்துவான் அதுதான் :(:lol:

ஒரு நாட்டிலை பாராளுமன்றம் எண்டு ஒண்டிருந்தால் எதிர்க்கட்சிகள் பலகோணத்திலைதான் இருக்கும் அதுக்காக வாயைபொத்திக்கொண்டிருந்தால்

நேற்று பெய்த மழைக்கு இன்றைக்கு முளைத்த காளான்களின் அழகுதனியாக அமர்க்களமாக தெரியும் :lol:

  • Replies 152
  • Views 25.6k
  • Created
  • Last Reply

இன்னும் அழைப்பு அனுப்பல்லையே.. :)

அழையா விருந்தாளியாக போயிட்டு பிறகு சொல்ல வேண்டியதுதானே மகிந்தாவின் ஸ்பேசல் இன்விட்டேசனில போயிட்டு வந்தனான் என்று :wub:

  • கருத்துக்கள உறவுகள்

எழுதுற ஆக்கள்ளை எங்கடை சாத்திரியாரையும் எனக்கு பிடிக்கும்.

ஐரோப்பிய அவலத்தை ஒருக்கால் வாசிச்சு பாருங்கோ :D

உந்தச்சாத்திரியின்ரை அவலத்தை நாடகமாக்கினதாலை இன்னும் நினைச்சு நினைச்சு அடிக்கிற மனிசர்கள் இன்னும் கனபேர் :rolleyes::lol: :lol: :D இதுக்கை சாத்திரியை திரும்பி கூப்பிட்டு ஏன் குமாரசாமி திரும்பவும் :(

சாத்திரி இப்ப தனது பொன்னான நேரங்களை நேசக்கரத்துக்காக அர்ப்பணிப்பதாக வாக்குறுதி தந்துள்ளார். வாக்குறுதியலை மண்ணைப்போடாதையுங்கோ :D

இன்னும் அழைப்பு அனுப்பல்லையே.. :)

முதுகில எண்ணை பூசீட்டு காத்துக்கொண்டிருக்கிறமாதிரி தெரியுது சயந்தன் சரியோ ? :D

கிட்டத்தட்ட அனைத்து நாவல்களையும் நான் படித்திருக்கிறேன் என நினைக்கிறேன்..மிகவும் சுவாரசியமாக இருக்கும்.. தமிழில் சுசிலா கனகதுர்க்கா மொழிபெயர்த்து வந்தார். மற்றும் தமிழ்வாணன்..கல்கி..சாண்டில்யன்..என பல எழுத்தாளர்களும் என்னைக் கவர்ந்தவர்கள்.ஆனால் கிட்டத்தட்ட வெளிநாட்டுக்கு வந்தபின் நாவல் வாசிப்பது இல்லை என்றே கூறலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு முந்தி கன எழுத்தாளர்களை பிடிக்கும். வாசிப்பேன்.

ஒரு, கட்டத்தில் இது, ஒரு விசர்கதை எழுதுறான். என்று வாசிப்பையே நிறுத்தி விட்டேன்.

இப்ப..... சின்ன, ஒரு பக்க கதை படிப்பேன்.

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு பிடித்த எழுத்தாளர் ஈழ எழுத்தாளர் கவிஞ்சர் தமிழ்நதி...

n727685833_1499279_5395.jpg

மற்றும் தமிழகத்தில்.. தமிழ் தேசிய பொதுவுடமை கட்சி இதழ் ஆசிரியர் ..மற்றும் இளந்தமிழர் இயக்க ஒருங்கிணைப்பாளர்

p5.JPG

தோழர் க.அருணபாரதி...

:lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் அண்மையில் தகழி சங்கரம்பிள்ளை[மலையாளம்] எழுதி சுந்தர ராமசாமி தமிழில் மொழி பெயர்த்த செம்மீன் என்ட நூல் வாசித்தேன்...இந்த நூலுக்கு சாகித்திய அகடமி விருது கிடைத்ததாம்...யாராவது இந் நூலை வாசித்து உள்ளீர்களா? வித்தியாசமான மீனவ வாழ்க்கையை அடிப்படையாக கொண்ட கதை ஆனால் எனக்கு முடிவு பிடிக்கவில்லை...இந்த கதையைப் பற்றி உங்களது அபிப்பிராயம் என்ன?

நான் வாசித்த நாவல்களிலேயே எனக்கு மிகவும் பிடித்தது செம்மீன் தான் என்று முன்பே எழுதியிருந்தேன்.மொழிபெயர்ப்பு நாவல் போல் ஒரு உணர்வு ஏற்படாவண்ணம் அமைந்தது பெரும் பாக்கியம்.இதைவிட வேறுவிதமாக முடிவு அமைந்திருக்கமுடியாது என்றுதான் என் எண்ணம்.பரீக்குட்டியின் கதாபாத்திரம் என்னை மிகவும் பாதிததது.செம்மீன் படமாக வந்தது.கதைக்கு நிகராக படமும் பாட்டுகளும் இருந்தது.மறக்கமுடியாத் ஒரு படம்..பல பாடல்கள் ஜேசுதாஸ் பாடியவை.காலத்தால் அழியாத காவியம்.

வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசமும்,கருவாச்சிக் காவியமும் வாசிக்கவும்.கள்ளிக் காட்டு இதிகாசம் மிகமிக நல்ல கட்டாயம் வாசிக்க வேண்டிய நாவல்.

நான் அண்மையில் தகழி சங்கரம்பிள்ளை[மலையாளம்] எழுதி சுந்தர ராமசாமி தமிழில் மொழி பெயர்த்த செம்மீன் என்ட நூல் வாசித்தேன்...இந்த நூலுக்கு சாகித்திய அகடமி விருது கிடைத்ததாம்...யாராவது இந் நூலை வாசித்து உள்ளீர்களா? வித்தியாசமான மீனவ வாழ்க்கையை அடிப்படையாக கொண்ட கதை ஆனால் எனக்கு முடிவு பிடிக்கவில்லை...இந்த கதையைப் பற்றி உங்களது அபிப்பிராயம் என்ன?

நானும் சில வருடங்களுக்கு முன்பு செம்மீன் வாசித்தனான். முடிவு இயல்பானதாக இருந்தது. தகழி இந்தக் நாவலை எழுதும் காலத்தில் மீனவர்கள் சமூகம் எவராலும் மதிக்கப்படாத சமூகமாக இருந்தது என்றும், அவர்களின் வாழ்க்கை முறையைப் பற்றி மற்ற சமூகத்துக்கு பெரியளவில் அக்கறை இருந்ததில்லை என்றும் அறிந்தன். கடலில் மீனவர் நிற்கையில் அவர்களின் உயிர் மனைவியின் கற்பில் தான் தங்கி இருக்குது போன்ற அவர்களின் நம்பிக்கைகள் ஆச்சரியம் அளித்தன. வாசிக்கும் பொது உப்புக்காற்றும் மீன்களின் வாசமும் எமக்குள் எழுவதை போன்ற ஒரு உணர்வும் வரும்

புலிகளின் நிதர்சனம் தொலைக்காட்சியில் செம்மீன் படத்தை ஒளிபரப்பி இருந்தார்கள். அப்ப சின்ன வயது என்பதால் பார்க்க விரும்பவில்லை (சண்டைப் படங்கள் மட்டுமே பிடிக்கும் வயது அது)

=========

போன கிழமை, லா.சா.ரா வின் சிறுகதைத் தொகுப்பில் இருந்த (தொகுப்பின் பெயர் "ஜனனி") "புற்று" என்ற சிறுகதையை படித்து அதிர்ந்து போனன். எப்படி இவர்களால் இப்படி எழுத முடிகின்றது என்று ஆச்சரியமாக இருந்தது. முடிந்தால் அக் கதையை தேடிப் படிக்கவும்

Edited by நிழலி

  • கருத்துக்கள உறவுகள்

சின்ன வயதில் பெரிய பெரிய நாவல்கள் வாசித்துள்ளேன். கல்கி, சாண்டில்யன் போன்றோரின் நாவல்கள் பிடிக்கும். காவியங்கள் இலக்கியங்களைக் கடந்து சமூக நாவல்கள் என்றுபார்த்தால் ஜெயக்காந்தனின் சினிமாவுக்குப் போன சித்தாளு, சில நேரங்களில் சில மனிதர்கள், எஸ்போவின் சடங்கு, மற்றும் இன்னொரு ஈழத்து எழுத்தாளரின் நிலக்கிளி இவையெல்லாம் பிடிக்கும். இவையெல்லாம் பன்னிரண்டு வயதிற்கு முன்பு வாசித்தவை பின்னாட்களில் சிறுகதைகள் மட்டுமே வாசிக்கும் பழக்கும். நிறைய சிறுகதைகளை வாசிப்பதால் எழுத்தாளர்களை நினைவில் வைக்க முடிவதில்லை.

இங்கு இன்னொரு விடயத்தையும் சொல்லித்தான் ஆக வேண்டும். கல்கி எனக்குள் பெரும் மாற்றத்தை உருவாக்கிய படைப்பாளி. எழுத்துத்துறையில் சாதிக்கவேண்டும் என்ற ஒரு எண்ணத்தை எனக்குள் உருவாக்கியது அவர் எழுதிய 'பொன்னியின் செல்வன்" நாவல். இன்றைய காலத்தில் எனது எழுத்தில் 'வேங்கையன் பூங்கொடி" உருவாக ஆரம்பித்திருப்பது பொன்னியின் செல்வனின் தாக்கமே.

  • 4 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் சமீபத்தில் காணல் வரி என்னும் நாவல் வாசித்தேன்...மிகவும் அற்புதமாய் எழுதியுள்ளார் எழுத்தாளார்...இது தான் நான் வாசிக்கும் அவரது முதலாவது நாவல்...எழுதியுள்ளவர் ஒரு பெண் அதுவும் ஈழத்தை சேர்ந்த பெண்... விசுகு அண்ணா போன்றவர்கள் இவரது நாவல்களை வாசிக்க வேண்டும் அதுக்குப் பிறகாகவது புரியும் ஈழத்தை சேர்ந்த பெண்கள் தற்போது என்ன மாதிரி எழுதுகிறார்கள் என!.. அந்த என்னைக் கவர்ந்த பெருமைக்குரிய எழுத்தாளார் தமிழ்நதி.

The Motorcycle Diaries என்னும் ஆங்கில நூல் வாசித்தேன்.

ஒரு 23 வயது மருத்துவக் கல்லூரி மாணவன் தனது 29 வயது நண்பனுடன் தென் அமெரிக்காவில் 8000 கிலோ மீற்றர் மோட்டார் சைக்கிளில் பயணிக்கிறார்கள், அந்தப் பயணத்தில் அவர்கள் அடைந்த அனுபவங்களை விபரித்து இருக்கிறார்கள். ஆங்கிலத்தில் உள்ளதால், வாசிக்கும் போது பொறுமையாக புலன்களை புத்தகத்தில் முழுதாக செலுத்தி வாசிக்க நேரம் இருக்கவில்லை. ஆனால் அடிப்படைக் கரு புரிந்தது.

அதை வைத்து 2004ஆம் ஆண்டு திரைப்படமும் வெளிவெளிவந்ததென்று கேள்விப்பட்டு ஒரு dvd வாங்கி அண்மையில் பார்த்தேன் மிகவும் பிடித்திருந்தது. :) பார்த்த பின்பு, இவ்வளவு நாளும் பார்க்காமல் விட்டு விட்டோமே என்று ஒரு பீலிங் ^_^

பெரும்பாலானோர் பாத்திருப்பீர்கள். அப்படிப் பார்க்காதவர்கள்/ பார்க்க ஆர்வமாய் உள்ளவர்கள் நேரம் இருக்கும் போது பார்த்துவிட்டு உங்கள் கருத்தையும் எழுதுங்கள்.

The Motorcycle Diaries (book)

The Motorcycle Diaries (film)

The Motorcycle Diaries Film Review

Book

DVD

Trailer

!.. அந்த என்னைக் கவர்ந்த பெருமைக்குரிய எழுத்தாளார் தமிழ்நதி.

தமிழ்நதி முன்பு யாழில் எழுதுபவர் என நினைக்கிறேன்.

குட்டி இந்த கதை சேகுவேராவின் கதையை போன்றது என எங்கோ வாசித்த ஞாபகம்.

விருந்து போன்ற புத்தகங்கள்தான் எனக்குத்தெரியும் மற்றது எதுவும் தெரியாது.

அது சேகுவாரவின் பயோகிரபி தான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நதி முன்பு யாழில் எழுதுபவர் என நினைக்கிறேன்.

குட்டி இந்த கதை சேகுவேராவின் கதையை போன்றது என எங்கோ வாசித்த ஞாபகம்.

தப்பிலிக்கு பழைய விபரம் எல்லாம் தெரிந்து இருக்குது :unsure:

இந்த சேகுவாராவின் கதை தமிழில் மொழி பெயர்த்து தினமுரசில் வந்தது என நினைக்கிறேன்...சின்னனில் வாசித்தது சரியாய் ஞாபகம் இல்லை

  • 4 months later...
  • கருத்துக்கள உறவுகள்

சின்ன வயதில் பெரிய பெரிய நாவல்கள் வாசித்துள்ளேன். கல்கி, சாண்டில்யன் போன்றோரின் நாவல்கள் பிடிக்கும். காவியங்கள் இலக்கியங்களைக் கடந்து சமூக நாவல்கள் என்றுபார்த்தால் ஜெயக்காந்தனின் சினிமாவுக்குப் போன சித்தாளு, சில நேரங்களில் சில மனிதர்கள், எஸ்போவின் சடங்கு, மற்றும் இன்னொரு ஈழத்து எழுத்தாளரின் நிலக்கிளி இவையெல்லாம் பிடிக்கும். இவையெல்லாம் பன்னிரண்டு வயதிற்கு முன்பு வாசித்தவை பின்னாட்களில் சிறுகதைகள் மட்டுமே வாசிக்கும் பழக்கும். நிறைய சிறுகதைகளை வாசிப்பதால் எழுத்தாளர்களை நினைவில் வைக்க முடிவதில்லை.

இங்கு இன்னொரு விடயத்தையும் சொல்லித்தான் ஆக வேண்டும். கல்கி எனக்குள் பெரும் மாற்றத்தை உருவாக்கிய படைப்பாளி. எழுத்துத்துறையில் சாதிக்கவேண்டும் என்ற ஒரு எண்ணத்தை எனக்குள் உருவாக்கியது அவர் எழுதிய 'பொன்னியின் செல்வன்" நாவல். இன்றைய காலத்தில் எனது எழுத்தில் 'வேங்கையன் பூங்கொடி" உருவாக ஆரம்பித்திருப்பது பொன்னியின் செல்வனின் தாக்கமே.

25912122411346095193410.jpg

நிழலி நீங்கள் கேட்டது மேலே உள்ளது.

1225240_Rs.55.jpgwriters12.jpg

... வாசிப்புக்கும் எனக்கும் வெகுதூரம்... ஆனால் என் பொறுமையையும் மீறி சில புத்தகங்கள் ... கண்ணதாஸனின் அர்த்தமுள்ள இந்துமத தொடர்கள், புஸ்பா தங்கத்துரையின் ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது, இப்படி சில ... அதில் ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது ... இன்றும் மனத்திரையில் ... ஓர்ர் ஆபாச எழுத்தாளர் என பெயர் எடுத்த புஸ்பா தங்கத்துரை ... இதனையும் என்னால் முடியும் என்று நிரூபித்தவர்!

  • கருத்துக்கள உறவுகள்

நான் சின்னவயசில் இருந்தே விரும்பி படிச்சது ஜி.நேசனின் புத்தகங்கள் குறிப்பாக பாலை வனத்து றோஜா... பிறகு சரோஜாதேவி காயத்திரி இதுகள்தான். எப்படியெல்லாம் இவர்களால் இப்படி எழுதமுடிந்தென்று வியந்திருக்கிறேன். :)

எனக்கு இந்த தலைப்பு உண்மையில் விளக்கம் இல்லாமையும் அதேவளையில் மனக்கவலையையும் கொடுக்கின்ற விடையமாக இருக்கின்றது.வாசிப்பு ஒருவரை முழுமையாக்குகின்றதுதான் ஆனால் எப்படி முழுமையாக்குகின்றது என்பதில்தான் பிரச்சனையே இருக்கின்றது. ஈழத்து எழுத்தாளர்களின் படைப்புகள் எந்தவிதத்திலும் தமிழக எழுத்தாளரகளுக்கு சளைத்ததும் இல்லை அத்துடன் அவர்களுடைய படைப்புகளைவிட உயிர்புடன் கூடி எம்வாழ்வுடன் அன்றாடங்கலந்தவை. ஆனால் அவர்களுக்கு உரிய அங்கீகாரத்தை குடுக்காத எங்களை என்ன சொல்ல. எனது தெரிவு எப்பொழுதும் செங்கைஆழியான் செம்பியன்செல்வன் செ.யோகநாதன் தான். மற்றும் பாலமனோகரன் தாமரைச்செல்வி ஆகியோரது கதைகளையும் வாசிப்பேன்.செங்கையாழியானின் "கடல்கோட்டை" "ஆச்சி கொழும்புக்குப் போறா" "முற்றத்து ஒற்றைப்பனை" "கொத்தியின்காதல்" பாலமனோகரனின் "வட்டப்பூ" என்பனவற்றை பலமுறை வாசித்துள்ளேன். டானியல் அகத்தியர் ஆகியோரது படப்புகளும் விருப்புத் தேர்வு அதிலும் டானியலின் "கோவிந்தன்" அகத்தியரின் "பஞ்சமர்" ஏற்படுத்திய தாக்கம் மிகப்பெரியது. கவிஞர்களில் இ.முருகையனையும் சேரனையும் வா.செ.ஐ. ஜெயபாலனையும் பிடிக்கும். என்னை பொறுத்தவரையில் தமிழக எழுத்தாளரகளது எழுத்துக்களில் பார்பானியப் புகுத்தலும் பிற்போக்குத்தனமான செய்திகளும் உ+ம் பாலகுமாரன், லட்சுமி, ரமணிச்சந்திரன் கொஞ்சம் தூக்கலாகவே காணப்படுகின்றன.

Edited by komagan

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்து எழுத்தாளர்களின் படைப்புகள் எந்தவிதத்திலும் தமிழக எழுத்தாளரகளுக்கு சளைத்ததும் இல்லை அத்துடன் அவர்களுடைய படைப்புகளைவிட உயிர்புடன் கூடி எம்வாழ்வுடன் அன்றாடங்கலந்தவை. ஆனால் அவர்களுக்கு உரிய அங்கீகாரத்தை குடுக்காத எங்களை என்ன சொல்ல.

நானும் பலதடவைகள் யோசிப்பதுண்டு. இதற்கு என்ன காரணம் என்று. அவர்களின் எழுத்து நடையா அல்லது எழுத்தாளர்கள் அங்கு முக்கியத்துவப்படுத்தப்படுகிறார்களா

நானும் பலதடவைகள் யோசிப்பதுண்டு. இதற்கு என்ன காரணம் என்று. அவர்களின் எழுத்து நடையா அல்லது எழுத்தாளர்கள் அங்கு முக்கியத்துவப்படுத்தப்படுகிறார்களா

விடை சுலபம் கறுப்பி. ஈழத்து எழுத்தாளர்கள் சினிமாத்தனம் இல்லாதவர்கள்.அண்மையில் மறைந்த சிரித்திரன் சுந்தர் கார்ட்டூன் என்றால் என்ன நகச்சுவை என்றால் எப்படி இருக்க வேண்டும் என்று எங்களுக்குக் காட்டியவர். ஆனால் தமிழகத்து காரடூனிஸ்ற் மதனை தெரிந்த எத்தனை பேரிற்கு சுந்தரை தெரியும் இவரின் மிஸ்ரர் & மிஸிஸ் டாமோடிரன் தெரியுமா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இந்த தலைப்பு உண்மையில் விளக்கம் இல்லாமையும் அதேவளையில் மனக்கவலையையும் கொடுக்கின்ற விடையமாக இருக்கின்றது.வாசிப்பு ஒருவரை முழுமையாக்குகின்றதுதான் ஆனால் எப்படி முழுமையாக்குகின்றது என்பதில்தான் பிரச்சனையே இருக்கின்றது. ஈழத்து எழுத்தாளர்களின் படைப்புகள் எந்தவிதத்திலும் தமிழக எழுத்தாளரகளுக்கு சளைத்ததும் இல்லை அத்துடன் அவர்களுடைய படைப்புகளைவிட உயிர்புடன் கூடி எம்வாழ்வுடன் அன்றாடங்கலந்தவை. ஆனால் அவர்களுக்கு உரிய அங்கீகாரத்தை குடுக்காத எங்களை என்ன சொல்ல. எனது தெரிவு எப்பொழுதும் செங்கைஆழியான் செம்பியன்செல்வன் செ.யோகநாதன் தான். மற்றும் பாலமனோகரன் தாமரைச்செல்வி ஆகியோரது கதைகளையும் வாசிப்பேன்.செங்கையாழியானின் "கடல்கோட்டை" "ஆச்சி கொழும்புக்குப் போறா" "முற்றத்து ஒற்றைப்பனை" "கொத்தியின்காதல்" பாலமனோகரனின் "வட்டப்பூ" என்பனவற்றை பலமுறை வாசித்துள்ளேன். டானியல் அகத்தியர் ஆகியோரது படப்புகளும் விருப்புத் தேர்வு அதிலும் டானியலின் "கோவிந்தன்" அகத்தியரின் "பஞ்சமர்" ஏற்படுத்திய தாக்கம் மிகப்பெரியது. கவிஞர்களில் இ.முருகையனையும் சேரனையும் வா.செ.ஐ. ஜெயபாலனையும் பிடிக்கும். என்னை பொறுத்தவரையில் தமிழக எழுத்தாளரகளது எழுத்துக்களில் பார்பானியப் புகுத்தலும் பிற்போக்குத்தனமான செய்திகளும் உ+ம் பாலகுமாரன், லட்சுமி, ரமணிச்சந்திரன் கொஞ்சம் தூக்கலாகவே காணப்படுகின்றன.

கோமகன் எல்லோரும் எல்லாவற்றையும் வாசிக்க வேண்டும் ஆனால் அதை வாசித்து விட்டு அந்த எழுத்தாளர்களை அப்படியே தொட‌ர‌ வேண்டும் என்று இல்லை...ஒவ்வொருவருக்கும் ர‌ச‌னை வேறுபடும் எனக்குப் பிடித்த எழுத்தாளாரை உங்களுக்கு பிடிக்க வேண்டும் என்று இல்லை...இந்த பதிவின் மூலம் இந்தியா எழுத்தாளார் தான் சிறந்தவர் என்டோ ஈழத்து எழுத்தாளார்கள் தாழ்ந்தவர்கள் என யாரும் கூற வர‌வில்லை...எல்லோரும் எல்லா எழுத்தாளார்களையும் அறிந்து கொள்ள வேண்டும் என்ட‌ நோக்கத்தில் தான் இந்தப் பதிவை ஆர‌ம்பித்தேன்...உங்களுக்கு தெரிந்த எங்களுக்கு தெரியாத ஈழத்து எழுத்தாளார்கள் இருந்தால் அவர்களையும்,அவர்கள் நாவல்கள் பற்றியும் இந்தப் பதிவில் வந்து எழுதுங்கள் நாங்களும் அறிந்து கொள்வோம் :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.