Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்களாக மாற்றப்படும் தமிழர்கள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அம்பாறை மாவட்டம் முஸ்ஸிம் பகுதிகளுக்குச் வேலைக்காக செல்லும் தமிழ் வறிய குடும்பங்களை கட்டாயப்படுத்தி மதமாற்றும் நடவடிக்கையில் முஸ்ஸிம் பள்ளிவாசல்களைச் சார்ந்தவர்கள் ஈடுபட்டுவருகின்றனர். 

 

கல்முனைஇ அட்டப்பள்ளம் சாய்ந்தமருது நிந்தவூர் சம்மாந்துறை போன்ற பகுதிகளுக்கு அரிசி ஆலை வேலை செங்கல் அறுப்பு வேலை சில பகுதிகளில் துணிக்கடைகளில் வேலைக்கு செல்பவர்களை அவர்களின் வறுமையை ஒழிப்பதாக தெரிவித்து இஸ்ஸாம் மதத்திற்கு மாற்றியுள்ளதாக தெரியவருகிறது. நைனாக்காடு பகுதியில் செங்கல் அறுப்புத் தொழிலுக்கு சென்ற குடும்பங்கள் இவ்வாறு மதம் மாற்றப்பட்டு அவர்களுக்கு அப்பகுதியில் சிறிய வீடுகளை அமைத்துக் கொடுத்த பள்ளிவாசலும் அமைக்கப்பட்டுள்ளது.

 

அம்பாறை மாவட்டத்தில் கூடுதலான மக்கள் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்ற சலவைத் தொழில் சிகை அலங்காரம் செய்பவர்கள் போன்றவர்கள் வாழ்ந்த பகுதியே கூடுதலாக முஸ்ஸிங்களினால் அபகரிக்கப்பட்டுள்ளது. அவர்களை விரட்டியடித்தல் அல்லது அவர்களுக்கு ஒரு தொகைப் பணத்தை வழங்கி நிலத்தை ஆக்கிரமிப்பு செய்கின்றனர். அம்பாறை மாவட்டத்தில் 111948 தமிழர்கள் வாழ்கின்றனர். பொத்துவில் சம்மாந்துறை கல்முனை அம்பாறை ஆகிய தேர்தல் தொகுதிகளில் வாக்களிப்பதற்கு தகுதியாக 85000 தமிழர்கள் உள்ளனர்.

 

வறுமை காரணமாக கல்முனை அக்கரைப்பற்று பகுதியில் அமைந்துள்ள முஸ்ஸிங்களின் துணிக் கடைகளுக்கு தொழிலுக்காக செல்லும் தமிழ் யுவதிகள் பாலியல் ரீதியாகவும் பாதிக்கப்படுவதுடன் அவர்களை வேறு இடங்களுக்கு விபச்சார நடவடிக்கைக்காக விற்பனை செய்துவருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அம்பாறை மாவட்டத்தில் சிங்களவர்கள் மற்றும் முஸ்ஸிங்களினால் தமிழர்களின் பாரம்பரிய கிராமங்கள் சுமார் 44 அபகரிக்கப்பட்டுள்ளன. முஸ்ஸிங்களினால் அபகரிக்கப்பட்ட கிராமங்களில் இந்து மத சின்னங்கள் அமைந்திருந்த இடங்களில் பள்ளிவாசல்கள் அமைக்கப்பட்டுள்ளன.

 

அம்பாறை மாவட்டத்தின் எல்லை தமிழ் கிராமமான தங்கவேலாயுதபுரம் கிராமத்தில் இருந்து திருக்கோவி தம்பிலிவில் ஆலையடிவேம்பு பகுதியில் உள்ள பாடசாலைக்கு சுமார் 10 கிலோமீற்றர் தூரம் கால்நடையாகச் செல்லும் மாணவர்களுக்கு இந்த துவிச்சக்கரவண்டிகள் வழங்கப்பட்டன.

 

நோர்வே நாட்டின் அஸ்கர் மற்றும் பாறும் உதவி நிதி மையத்தின் நிதியுதவியுடன் மக்கள் மேம்பாட்டுச் சங்கமும் புஸ்ப்பா கல்வி சமூக அபிவிருத்தி அமைப்பும் இணைந்து திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள தங்கவேலாயுதபுரம் கிராமத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு பிரதேச சபை தவிசாளர்களினால் துவிச்சக்கரவண்டிகள் வழங்கப்பட்டன.

ampari%2001.jpg

ampari%2002.jpg

ampari%2003.jpg

இந்த சந்தர்ப்பத்தில் அம்பாறை மாவட்டம் பற்றிய ஒரு சிறு குறிப்பொன்றையும் தெரியப்படுத்திக் கொள்ளவேண்டும்.

 

1967 ஆண்டு சித்திரை மாதம் 13 திகதியிருந்து இன்றுவரைக்கும் அம்பாறை மாவட்டத்தில் 3500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்துள்ளன. 6500க்கும் மேற்பட்ட ஏக்கர் நெற்காணிகள் 3500க்கும் மேற்பட்ட ஏக்கர் தென்னைந்தோட்டக் காணிகள் 2000 ஏக்கருக்கு மேற்பட்ட கரும்பு செய்கை பண்ணும் நிலங்கள் முஸ்ஸிம் சிங்களவர்களினால் அபகரிக்கப்பட்டுள்ளன.

 

பிள்ளையார் கோவில் ஐயனார் கோவில் முருகன் கோவில் அம்மன் கோவில் விஸ்ணு கோவில் மீனாட்சியம்மன் கோவில் என 20க்கு மேற்பட்ட ஆலயங்கள் அழித்தொழிக்கப்பட்டுள்ளது. அவ்விடங்களில் பள்ளிவாசல்களும் பொதுச் சந்தையும் பௌத்த விகாரை அமைக்கப்பட்டு தமிழர் என்ற சின்னமே முற்று முழுதாக இல்லாதொழிக்கப்பட்டுள்ளது.

 

இவ்வாறான ஆக்கிரமிப்புக்கள் அனைத்தும் போர் நடைபெற்ற காலங்களில் இடம்பெற்றவையாக இருந்தாலும் கிழக்கு மாகாணத்தில் 2007 ஆம் ஆண்டு போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னரும் அதிகமாக சிங்களவர்கள் தமிழர்கள் வாழ்ந்த இடங்களை அபகரித்ததுடன் புதிய பௌத்த விகாரைகளையும் அமைந்துள்ளனர்.

யுத்த காலத்தின் போது தமிழ் பிரதேசங்கள் திட்டமிட்ட முறையில் இராணுவம் மற்றும் முஸ்ஸிம் ஊர்காவல்படைகளினால் அழிக்கப்பட்டன இடம்பெயர்ந்தனர். மீள்குடியேற்றம் என்ற போர்வையில் மக்களை ஒரு சில இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்களே தவிர அவர்களுக்கான வசதிகளை செய்து கொடுக்கப்படவில்லை.

 

இடம்பெயர்ந்த இடங்களல் இருந்த பாடசாலைகள் வைத்தியசாலைகள் வீதி பொது கட்டடங்கள் வீட்டுத் திட்டம் மின்சாரம் போன்ற வசதிகளை அரசாங்கம் செய்து கொடுக்கவில்லை.ஆனால் யுத்தத்தினால் பாதிக்கப்படாத முஸ்ஸிம் பகுதி மற்றும் தற்போது போர் முடிவடைந்த பின்னர் சிங்களவர்களின் குடியேற்றக் கிராமங்களில் அனைத்து வசதிகளையும் உள்ளடக்கியதாக நவீன கிராமங்களை மஹிந்த அரசாங்கம் அமைத்து அத்துமீறிய குடியேற்றங்களை மேற்கொண்டுவருகின்றனர். அம்பாறை மாவட்டத்தைப் பொறுத்தவரையில் அங்குள்ள தமிழர்களுக்கு அரசியல் ரீதியான தலைமைத்துவங்களும் இல்லாத காரணத்தினால் இரு சமூகங்களும் அடக்கியாழுகின்றனர். அம்பாறை மாவட்டத்தில் காணி உட்பட அப்பகுதி மக்களின் அடிப்படை பிரச்சினைகள் அதிகம் காணப்படுகின்றன.

கொழும்பு அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்படும் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டத்தில் தமிழ் பிரதேசங்கள் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டுகின்றது.அம்பாறை மாவட்டத்தில் 20 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 5க்கும் மேற்பட்ட தமிழ் பிரதேசங்கள் கடந்த 55 வருடத்திற்கு மேலாக இனரீதியாகவும் அபிவிருத்தி ரீதியாகவும் பாதிக்கப்பட்டுவருகிறது.

 

அம்பாறை மாவட்டத்தில் 111948 தமிழர்கள் வாழ்கின்றனர். பொத்துவில் சம்மாந்துறை கல்முனை அம்பாறை ஆகிய தேர்தல் தொகுதிகளில் வாக்களிப்பதற்கு தகுதியாக 85000 தமிழர்கள் உள்ளனர். 1957 ஆம் ஆண்டுக்கு முன்னர் அம்பாறை மாவட்டத்தில் பெரும்பான்மையாக வாழ்ந்தவர்கள் தமிழர்கள் இந்த குடிப்பரம்பல் எண்ணிக்கையை திட்டமிட்டே சிங்கள அரசாங்கங்கள் இல்லாதொழித்துள்ளது. அழிவுகளின் உச்சக்கட்டமாக கடந்த 1990 ஆண்டுக்குப் பின்னர் பாரியளவில் தமிழ் கிராமங்கள் அழிக்கப்பட்டுள்ளதுடன் பல கிராமங்கள் அபகரிக்கப்பட்டுள்ளன.

 

அம்பாறை மாவட்டத்தின் 15 பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள 40 தமிழ் கிராமங்களிலிருந்து தமிழ் மக்கள் சிங்களவர்களினாலும் முஸ்ஸிங்களினாலும் விரட்டியடிக்கப்பட்டுள்ளதுடன் அந்த கிராமங்கள் இன்று முஸ்ஸிம் சிங்களக் கிராமங்களாக மாற்றப்பட்டுள்ளன.

 

சம்மாந்துறை நிந்தவூர் அட்டாளைச்சேனை அக்கரைப்பற்று பொத்துவில் கல்முனை சாய்ந்தமருது இறக்காமம் அம்பாறை ஆலயடிவேம்பு காரைதீவு நாவிதன்வெளி திருக்கோவில் உகணை லவக்கல போன்ற பிரதேச செயலாளர் பிரிவில் இருந்த தமிழ் கிராமங்களே இவ்வாறு அழிக்கப்பட்டுள்ளன.இவற்றில் குறிப்பாக சாய்ந்தமருது நிந்தவூர் அட்டப்பள்ளம் சிங்காரத்தோப்பு செங்கப்பட்டை மாட்டுப்பண்ணை திராய்க்கேணி பாலமுனை மீனோடைக்கட்டு அட்டாளைச்சேனை ஒலுவில் அக்கரைப்பற்று கிறவல்குழி பட்டிமேடு சிறுநீத்ன இலுக்குச்சேனை வரிப்பந்தாஞ்சேனை பள்ளவெளி சம்மாந்துறை இறக்காமம் மாணிக்கமடு நுரைச்சோலை முறிவல்ஆற நீத்தை நயினாகாடு மல்லையத்தீவு வளத்தாப்பிட்டி போன்றனவும் அடங்கு கின்றன.

 

 

http://www.sankathi24.com/news/34838/64//d,fullart.aspx

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை: அபகரிக்கப்பட்ட கிழக்கு மாகாண நிலங்கள் – 1.2.3.

Markkandu Devarajah.(L,L,B)

Switzerland,

Srilanka_nachchimar_kovil.jpgஇலங்கையின் தமிழர் தாயகப் பகுதியான வடக்குகிழக்கு மாகாணத்தில் கிழக்கு மாகாணம் மிகவும் முக்கியத்துவம் மிக்கதொன்றாகும். மிகவும் செழிப்பு மிக்க இம்மாகாணத்தில் கடல் மற்றும் தரை வளங்கள் அதன் முதுகெலும்பாகக் காணப்படுகின்றது. “என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்” என்ற வாசகம் கிழக்கு மாகாணத்திற்கும் பொருந்தும். அந்தளவுக்கு சகல வளங்களும் நிறைந்த மாகாணமாகவே அது விளங்குகிறது . இந்த மாகாணம் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியதாக உள்ளது

கிழக்கு மாகாணத்தின் பூர்வீகக் குடிகளான தமிழர் பண்டைய மன்னராட்சியின் கீழ் சிற்றரசுகளை அமைத்து ஆண்டு வந்தனர். ஆனால் இந்த தமிழர்களுடைய பாரம்பரியமான நிலங்கள் சுதந்திரத்திற்குப் பின்னர் திட்டமிட்ட முறையில் ஆக்கிரமிக்கப்பட்டு சின்னா பின்னமாக்கப் பட்டுள்ளன. கிழக்கு மாகாணத்தில் சிங்களக் குடியேற்றங்கள் சிங்கள ஆட்சியாளர்களால் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ள அதேவேளையில் இஸ்லாமியர்களும் திட்டமிட்ட குடியேற்றங்கள் மற்றும் ஆக்கிரமிப்பு நடவடிக்கை மூலமாகவும் தமிழர்களுடைய நிலங்களை தமதுடைமையாக்கியுள்ளனர் என்பதும் கசப்பான வரலாறாகும்.

கிழக்கு மாகாணத்திற்கு வியாபார நடவடிக்கைக்காகச் சென்ற முஸ்லிம்கள் அப்பகுதியில் தற்காலிகமாகத் தங்கி வியாபாரத்தில் ஈடுபட்டனர். சிலர் நிலச்சுவாந்திரர்களான தமிழர்களிடம் அவர்களின் விவசாய செய்கைக்கு கூலிகளாகவும் இருந்து தொழில் செய்து வந்தனர். ஆனால் பின்னர் வியாபாரத்திற்குச் சென்றவர்களும் விவசாயத்திற்கு கூலிகளாக இருந்தவர்களும் எவ்வாறு அங்கு தமது இருப்பை ஏற்படுத்திக் கொண்டார்கள் என்பதும் காணி நிலங்களுக்குச் சொந்தக்காரர்களாகி அப்பகுதி தமது தாயகப் பகுதி என எவ்வாறு மாற்றிக் கொண்டார்கள் என்பதும் இன்று மறைக்கப்பட்ட வரலாறாகவே உள்ளது. இன்று முஸ்லிம் புத்தி ஜீவிகளும் அரசியல் வாதிகளும் இந்த வரலாற்றைத் திரித்துக் கூறி கிழக்கை மட்டுமல்ல வடக்கையும் தமது தாயகப் பகுதியாக உரிமை கொண்டாடி வருகின்றனர்.

முஸ்லிம்களின் வரலாறு இவ்வாறு இருக்கும்போது இன்று வடமாகாணத்தில் தமது பூர்வீக நிலத்தில் இருந்து குறிப்பாக யாழ்ப்பாணத்தில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டனர். கிழக்கில் இருந்து முஸ்லிம்களின் நிலங்கள் தமிழர்களால் பறிக்கப்பட்டு விரட்டியடிக்கப்பட்டனர் என்றெல்லாம் புதுக்கதை சொல்லுகின்றனர்.

இந்த முஸ்லிம் இனத்தவர்கள் தமிழ் மக்களின் பூர்வீக நிலத்தில் இருந்துவிட்டார்கள் அதுவும் சில பகுதிகளில் செறிவாகவும் சில பகுதிகளில் பரந்துபட்டும் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் இஸ்லாமியத் தமிழர்களாக இருப்பதால் குறிப்பிட்ட பகுதியில் அவர்கள்வாழ்ந்துவிட்டுப் போகட்டும் என்ற நிலையே தமிழ் மக்களிடமும் தமிழ் அரசியல் தலைவர்களிடமும் இருந்து வந்தது. ஆனால் பிற்பட்ட காலத்தில் குறிப்பாக எண்பதுக்கு பின்னரான காலத்தில் அவர்கள் வடக்குக் கிழக்கு தமது தாயகம் என்று கூறும் அளவிற்கும் வந்துவிட்டதுடன் அத்தமீறிய குடியேற்றங்கள் மூலமாகவும் மிரட்டல்கள் மூலமாக தமிழர்களின் காணிகளை குறைந்த விலையில் சுரண்டியெடுத்தல் மூலமாகவும் நேரடியாகவும் மறைமுகமாகவும் தமிழர்களின் பூர்வீக நிலங்களை ஆக்கிரமிக்கத் தொடங்கியிருந்தனர். இதனால் தமிழர்கள் படிப்படியாக தமது நிலங்களை முஸ்லிம்களிடம் இழந்தனர்.

முஸ்லிம்களின் இந்த வரலாறு தெரியாமல் தற்போதைய காலகட்டத்தில் சில ஊடகங்களும் சில அறிவாளர்களும் தமிழர்களால் முஸ்லிம்கள் வடக்குக் கிழக்கில் விரட்டியடிக்கப்பட்டனர் என கூறிவருவது தமிழ் மக்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தி உள்ளது மாத்திரமல்ல மனக்கிலேசத்தையும் ஏற்படுத்தி உள்ளது என்பதுஉண்மை.

கிழக்கில் எவ்வாறு திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் நடைபெற்றதோ அதேபோன்று தாமும் சளைத்தவர்களல்ல என்ற வகையில் முஸ்லிம் குடியேற்றங்களும் தமிழர் நிலப்பறிப்புகளும் இடம் பெற்றுள்ளன என்பதை குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களை மையப்படுத்தி எழுதியுள்ள “அழிக்கப்பட்ட தமிழ் கிராமங்கள்” என்ற நூலில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள எஸ்.ஜயானந்தமூர்த்தி அவர்கள் இதை எழுதியுள்ளார். அவர் நாடாளுமன்ற உறுப்பினராக கடந்த 2004 ஆம் ஆண்டு தெரிவு செய்யப்படுவதற்கு முன்னர் ஒரு ஊடகவியலாளராகவும் இருந்தார்.

Resettlement_sinhalese2.jpg

அந்த வேளையில் அவர் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரில் சென்றும் பாதிக்கப்பட்டவர்களை நேரடியாகச் சந்தித்தும் தொடர் கட்டுரையாக இலங்கையில் இருந்து வெளியாகும் வீரகேசரி வாரவெளியீட்டுக்கு எழுதியிருந்தார். கடந்த வருடம் முற்பகுதியில் இதை ஒரு ஆவணப்பதிப்பாக நூலுருவில் வெளியிட்டுள்ளார். இந்த நூலே கிழக்கில் முஸ்லிம்களின் அத்துமீறிய குடியேற்றங்களுக்குச் சிறந்த ஆதாரமாக உள்ளது. இந்த நூலில் எழுதப்படாத இன்னும் சில தமிழ் கிராமங்கள் பற்றியும் திருகோணமலையில் தமிழ் கிராமங்கள் எவ்வாறு அழிக்கப்பட்டன என்பன பற்றியும் அவரின் மற்றொரு புத்தகத்தில் வெளிவரவுள்ளதாக நூலாசிரியரான எஸ்.ஜயானந்தமூர்த்தி தெரிவித்துள்ளார். எனினும் இக்கட்டுரையில் திருகோணமலையில் முஸ்லிம்களின் அத்துமீறிய குடியேற்றங்கள் பற்றியும் தொட்டுச் செல்லப்படுகின்றது.

சரி இனி கிழக்கின் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களில் நடந்த அத்துமீறிய குடியேற்றங்கள் பற்றி விரிவாகப் பார்ப்போம். முதலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் நடந்த குடியேற்றங்கள் தமிழ் மக்களின் வெறியேற்றம் என்பன பற்றி ஆராய்வோம்.

மட்டக்களப்பு மாவட்டம் வடக்காக வெருகல் வாவி தொடக்கம் தெற்காக நீலாவணை வரை நீண்டுள்ளது. கிழக்கில் வங்காள விரிகுடா கடல் பரந்து கிடக்கின்றது. மேற்கு எல்லையாக பொலனறுவை மற்றம் பதுளை மாவட்டங்களின் சிங்கள கிராமங்கள் அமைந்துள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் (கோறளைப்பற்று) அமைந்துள்ள அழகிய தமிழ் கிராமம் மிறாவேடை தமிழ் கிராமம். இது மிகவும் பழமை வாய்ந்த கிராமம். இங்கு சுமார் 460 குடும்பங்கள் வாழ்ந்து வந்தன. பாடசாலை, பிள்ளையார். காளிஅம்மன், முருகன் ஆலயங்களும் இருந்தன. இதந்த தமிழ் கிராமத்திற்கு அருகில் மிறாவோடை (முஸ்லிம்)மற்றும் மாஞ்சோலை ஆகிய முஸ்லிம் கிராமங்கள் இருந்தன.

இந்த முஸ்லிம் கிராமத்தில் வாழ்ந்தவர்களுக்கு அருகில் இருந்த மிறாவேடை தமிழ் கிராமத்தின் மீது ஒரு கண் இருந்துகொண்டே வந்தது. அங்கிருந்து தமிழ் மக்களை விரட்;டியடித்துவிட்டு அதை அபகரிக்க வேண்டுமென்பதே இதற்குக் காரணம். அதனால் அக்கிராம மக்கள் மீது முஸ்லிம்கள் தொடர்ந்து முறுகல் நிலையை ஏற்படுத்தி வந்தனர். இந்த முறுகல் நிலை மெல்ல மெல்ல அதிகரித்து முதல் தடவையாக 1985 இல் காணித்தகராறு ஒன்று காரணமாக தமிழர்கள் மீது முஸ்லிம்கள் தாக்குதலை நடத்தினார்கள். இது பின்னர் இனக்கலவரமாக மாறியது. முஸ்லிம்களுக்கு ஆதரவாக இராணுவத்தினர் பலமாக இருந்தனர் இராணுவத்தினரின் உதவியுடன் பல வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன கொள்ளையடிக்கப்பட்டன. இதனால் அக்கிராம மக்கள் அச்சம் காரணமாக முதல் தடவையாக கிராமத்தைவிட்டு வெளியேறினர்.

batticoala.jpg

சில மாதங்களின் பின்னர் சுமுகநிலை வந்ததை அடுத்து தமிழ் மக்கள் மீண்டும் தமது சொந்தக் கிராமத்திற்குத் திரும்பியிருந்தனர். எனினும் அச்சநிலையும் இரு இனங்களுக்கிடையே முறுகல் நிலையும் இருந்து கொண்டே வந்தன. சில வருடங்கள் இந்த நிலை இருந்தாலும் இரண்டாம் கட்ட ஈழப்போர் ஆரம்பமான 1990 ஆம் ஆண்டுக்குப் பின்னர் பல முஸ்லிம் இளைஞர்கள் இலங்கை படையின் ஒரு பிரிவான ஊர்காவல் படையிலும் பொலிசிலும் இணைந்தனர். இதன் பின்னர் நிலமை மிகவும் மோசமானது. இரண்டாவது தடவையாக முஸ்லிம்களும் ஊர்காவல் படையினரும் இணைந்து மேற்படி தமிழ் கிராமத்தின் மீது தாக்குதல் நடத்தினர். இதனால் பெரும் வன்முறையை முஸ்லிம்கள் தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விட்டனர். இந்த வன்முறை இக்கிராமத்து தமிழர்கள் மாத்திரமின்றி மாவட்டத்தில் இருந்த முஸ்லிம் கிராமங்களுக்கு அருகில் இருந்த அனேகமான தமிழ் கிராமங்களில் நடந்தேறின. இவ்வன்முறையினால் மிறாவோடை தமிழ் கிராமம் ஏறக்குறைய முற்றாக அழிக்கப்பட்டது. மக்கள் நிரந்தரமாக இடம் பெயர்ந்து அயலில் இருந்த தமிழ் கிராமங்களான கிண்ணையடி, சுங்கான்கேணி, வாழைச்சேனை, வினாயகபுரம் ஆகிய கிராமங்களுக்குச் சென்றனர். அதன் பின்னர் முஸ்லிம்கள் திட்டமிட்டவாறு பல நூறு ஏக்கர் காணிகளைச் சுவீகரித்துக் கொண்டனர். இதனால் அக்கிராமத்தின் அரைவாசிக்பகுதிக்கு மேல் அத்துமீறிய குடியேற்றங்களைச் செய்தும் பெரும் பகுதியை அபகரித்துக் கொண்டனர். பாடசாலை கோயில்கள் பொதுக் கட்டிடங்கள் அனைத்துமே அழிக்கப்பட்டன.

வாழைச்சேனை பிரதேசத்தில் அமைந்திருந்த மற்றொரு தமிழ் கிராமம் தியாவட்டவான். இக்கிராமமும் மிகவும் பழமைவாய்ந்த தமிழ் கிராமம். ஆனால் அது தற்போது முஸ்லிம்களினால் ஆக்கிரமிக்கப்பட்டு முஸ்லிம் கிராமமாக மாற்றப்பட்டுள்ளது. இக்கிராமம் கொழும்பு- மட்டக்களப்பு வீதியில் உள்ளது. இக்கிராமத்திற்கு அருகில் காவத்தமுனை முஸ்லிம் கிராமமும் ஓட்டமாவடி முஸ்லிம் பகுதியின் எல்லையும் அமைந்திருந்தன. தியாவட்டவான் கிராமத்தில் நீண்டகால வரலாற்றைக் கொண்ட தமிழ் கலவன் பாடசாலை மற்றும் ஆலயங்கள் என்பனவும் இருந்தன. அருகில் வாழைச்சேனை கடதாசி தொழிற்சாலை இருந்ததால் இக்கிராமம் மிகவும் வளர்ச்சி கண்டிருந்தது. இதனால் இக்கிராமத்தை அபகரிக்க வேண்டுமென்ற எண்ணம் முஸ்லிம்களுக்கு நீண்ட காலமாக இருந்து வந்தது, இந்த கடதாசி தொழிச்சாலையைப் பற்றிக் கூறுவதானால் இலங்கையில் ஒரேயொரு கடதாசித் தொழிச்சாலையாக இது இருந்தது. கொழும்பு நாரகென்பிட்டியவில் இதன் உபநிலையம் உள்ளது. எண்பது காலகட்டத்தில் இக்கடதாசி தொழிச்சாலையில் சுமார் இரண்டாயிரத்திற்கு மேற்பட்டவர்கள் வேலை செய்தனர். அதில் சுமார் பத்து வீதத்திற்கும் குறைந்தவர்களே முஸ்லிம் தொழிலாளர்கள். அதிலும் உயர் பதவிகளில் இருந்தவர்கள் அனைவரும் தமிழர்கள். முஸ்லிம்கள் சாதாரண தொழிலாளர்களாகவே இருந்தனர். இக்கடதாசித் தொழிச்சாலையும் தற்போது முஸ்லிம்களின் கைகளுக்குச் சென்று விட்டது.

சரி தியாவட்டவான் கிராமம் பற்றி…

இலங்கை: அபகரிக்கப்பட்ட கிழக்கு மாகாண நிலங்கள் – 2

srilanka-flag-300x214.jpg

 
கிழக்கு மாகாணத்தின் பூர்வீகக் குடிகளான தமிழர் பண்டைய மன்னராட்சியின் கீழ் சிற்றரசுகளை அமைத்து ஆண்டு வந்தனர். ஆனால் இந்த தமிழர்களுடைய பாரம்பரியமான நிலங்கள் சுதந்திரத்திற்குப் பின்னர் திட்டமிட்ட முறையில் ஆக்கிரமிக்கப்பட்டு சின்னா பின்னமாக்கப் பட்டுள்ளன. கிழக்கு மாகாணத்தில் சிங்களக் குடியேற்றங்கள் சிங்கள ஆட்சியாளர்களால் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ள அதேவேளையில் இஸ்லாமியர்களும் திட்டமிட்ட குடியேற்றங்கள் மற்றும் ஆக்கிரமிப்பு நடவடிக்கை மூலமாகவும் தமிழர்களுடைய நிலங்களை தமதுடைமையாக்கியுள்ளனர் என்பதும் கசப்பான வரலாறாகும்.

வாழைச்சேனை பிரதேசத்தில் அமைந்திருந்த மற்றொரு தமிழ் கிராமம் தியாவட்டவான். இக்கிராமமும் மிகவும் பழமைவாய்ந்த தமிழ் கிராமம். ஆனால் அது தற்போது முஸ்லிம்களினால் ஆக்கிரமிக்கப்பட்டு முஸ்லிம் கிராமமாக மாற்றப்பட்டுள்ளது. இக்கிராமம் கொழும்பு- மட்டக்களப்பு வீதியில் உள்ளது. இக்கிராமத்திற்கு அருகில் காவத்தமுனை முஸ்லிம் கிராமமும் ஓட்டமாவடி முஸ்லிம் பகுதியின் எல்லையும் அமைந்திருந்தன.

தியாவட்டவான் கிராமத்தில் நீண்டகால வரலாற்றைக் கொண்ட தமிழ் கலவன் பாடசாலை மற்றும் ஆலயங்கள் என்பனவும் இருந்தன. அருகில் வாழைச்சேனை கடதாசி தொழிற்சாலை இருந்ததால் இக்கிராமம் மிகவும் வளர்ச்சி கண்டிருந்தது. இதனால் இக்கிராமத்தை அபகரிக்க வேண்டுமென்ற எண்ணம் முஸ்லிம்களுக்கு நீண்ட காலமாக இருந்து வந்தது…

இனி…

தியாவட்டவான் கிராமத்தில் முதற்தடவையாக 1983 ஆகஸ்ட் மாதத்தில் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதுவும் முஸ்லிம் காடையர்களால் அரங்கேற்றப்பட்டது. அதன் பின்னர் 1985 ஆம் ஆண்டிலும் மற்றொரு தாக்குதல் தமிழர்கள் மீது நடத்தப்பட்டது. இத்தாக்குதல்கள் காரணமாக பல வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டன. சிலர் கொல்லப்பட்டனர். இத்தாக்குதல் காரணமாக தமிழ் மக்கள் கிராமத்தை விட்டு வெளியேறினர். இத்தாக்குதல்களுக்குப் பின்னாலும் இலங்கை படையினரின் உதவி இருந்தது. இலங்கை இராணுவத்தில் முஸ்லிம் இளைஞர்களும் இருந்தது மாத்திரமின்றி முஸ்லிம்கள் தமது வியாபாரம்,மரக்கடத்தல் மற்றும் கஞ்சாக் கடத்தல் போன்ற சுயநலத்திற்காக இராணுவத்தினருக்கு உதவிகளை செய்வதும் வழக்கமாக இருந்தது. தியாவட்டவான் கிராமத்தை விட்டு வெளியேறியவர்கள் அயற்கிராமங்களிலேயே நீண்டகாலம் அகதிகளாக இருந்தனர். பின்னர் அவர்கள் 1988 ஆம் ஆண்டில் இந்திய இராணுவத்தினரின் வருகைக்குப் பின்னர் சொந்த கிராமத்திற்குச் சென்றனர்.

ஆனால் அங்கு தமது பெரும்பாலான காணிகளிலும் வீடுகளிலும் முஸ்லிம்கள் அத்துமீறிக் குடியேறியிருந்தனர். அங்கிருந்த தமிழ் கலவன் பாடசாலை அரபா முஸ்லிம் பாடசாலையாக பெயர் மாற்றம் செய்யப்பட்டிருந்தது. ஆலயத்தின் அடையாளமே தெரியாமல் குடியேற்றம் இடம் பெற்றிருந்தது. எனினும் மக்கள் எங்கு முறையிட்டாலும் உரிய பலன் கிடைக்கவில்லை. சில தமிழ் வீடுகள் எஞ்சியிருந்தன. அதில் குறைந்த குடும்பங்கள் குடியேறினர். எனினும் மீண்டும் அவர்கள் மீதும் 1990 ஐ{ன் மாதத்தில் மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டன. இதனால் அவர்களும் முற்று முழுமாக வெளியேற்றி விட்டனர். இதனால் தற்போது இத்தமிழ் கிராமம் முற்று முழுதாக முஸ்லிம் கிராமமாக மாறியுள்ளது. தற்போது கடதாசி தொழிச்சாலை குறைந்த ஊழியர்களுடன் இயங்கினாலும் 90சதவீதமானவர்கள் முஸ்லிம்களே.

ஓட்டமாவடி கிராமம் பற்றியும் கூறவேண்டும். இது ஒரு கலப்புக் கிராமம்தான். ஆனால் கிராமத்தின் அதிகாரமும் அதன் மையப்பகுதியும் தமிழர்களுடையது. ஓட்டமாவடியில் 60 வீதமானவர்கள் முஸ்லிம்களாகவும் ஏனையவர்கள் தமிழர்களும் வாழ்ந்தனர். ஓட்டமாவடி கிட்டத்தட்ட ஒரு உபநகரமாகவே இருந்தது. பல கடைகளும் பெரும் கல்வீடுகளும் நகரின் மையப்பகுதியில் தமிழர்களுடையதாகவே இருந்தன. தமிழர்களின் வழிநடத்தலிலே இக்கிராமம் இயங்கியது. இதன் மையப்பகுதியில் பிள்ளையார் ஆலயம் இருந்தது. அது தமிழர்களின் வழிபாட்டுத்தலம். முஸ்லிம்களுக்குச் சற்றுத் தொலைவில் பள்ளிவாசல் இருந்தது.தமிழர்களின் மயானமும் மையப்பகுதியில் ஒரு புறத்தில் அமைந்திருந்தது. இக்கிராமத்தில் வாழ்ந்தவர்கள் இரு இனத்தினரும் ஆரம்பகாலத்தில் ஒற்றுமையாகவே வாழ்ந்தனர். ஆனால் 83 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இங்கிருந்த தமிழர்கள் மீதும் தாக்குதல்கள் ஆரம்பமாகின.

இத்தாக்குதல்கள் மெல்ல மெல்ல அதிகரித்து 85, 90 ஆம் ஆண்டுப்பகுதியில் அங்காங்கு நடந்த தமிழர் மீதான தாக்குதல்கள் போன்றே ஓட்டமாவடி தமிழ் மக்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டன. பெரும் கடைகள் வீடுகள் என்பன அடித்து நொருக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்ட பின்னர் தீயிட்டுக் கொழுத்தப்பட்டன. இதனால் தமிழர்களுக்கு முஸ்லிம்களுக்கு எதிராக தாக்குதல் நடத்த முடியாமல் அப்பகுதியை விட்டு வெளியேறினர். வெளியேறிய தமிழர்கள் கறுவாக்கேணி கிராமத்தில் தற்போது நிரந்தரமாக வாழுகின்றனர். ஓட்டமாவடியில் இருந்த தமிழர்களின் பல காணிகள் வீடுகள் என்பன முஸ்லிம்களினால் அத்துமீறிப் பிடிக்கப்பட்டன. சில காணிகளை மனச்சாட்சியுள்ள சில முஸ்லிம்கள் தமிழர்களிடம் காசு கொடுத்து வாங்கிக் கொண்டனர். அங்கிருந்த பிள்ளையார் அலயம் உடைக்கப்பட்டு தற்போது அதில் மீன்சந்தை கட்டப்பட்டுள்ளது. மயானம் அழிக்கப்பட்டு தபாலகம், பிரதேச செயலகம் என்பன கட்டப்பட்டுள்ளன.

இந்த ஓட்டமாவடி பகுதி 1990 ஆம் ஆண்டுக்கு முன்னர் வாழைச்சேனை தமிழ் பிரதேச செயலகப் பிரிவுக்குள்ளேயே இருந்தது. ஆனால் 90 ஆம் ஆண்டு ஏற்பட்ட அசாதாரண சூழல் மற்றும் இனவன்முறைகள் காரணமாக அரசாங்கம் தற்காலிகமாக இந்த பகுதியை நிருவாக ரீதியாக ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவாக (முஸ்லிம்) மாற்றப்பட்டு தற்போது முழுமையான முஸ்லிம் பிரதேசமாக மாற்றப்பட்டுள்ளது. உண்மையில் இந்த வன்முறைகள் மற்றும் தனியான செயலக நிருவாக பிரிவுகள் என்பனவற்றை ஏற்படுத்துவதில் முஸ்லிம் அரசியல் வாதிகளுக்கு நிறையவே பங்கிருந்தது. அத்துமீறிய குடியேற்றங்களையும் இவர்களே அதிகம் தூண்டி விட்டனர். முஸ்லிம் ஊர்காவல் படை மற்றும் முஸ்லிம் இளைஞர்களை பொலிஸ் சேவையில் இணைத்தல் போன்றவற்றையும் இந்த அரசியல்வாதிகளே திட்டமிட்டும் செய்தனர்.

இதன் மூலம் தமிழர்களின் பலத்தை அழிப்பது மாத்திரமின்றி போராட்டத்தையும் சிதைப்பதும் அதன் மூலம் கிழக்கில் முஸ்லிம்களுக்கென தனியான மாகாண அலகுகளை ஏற்படுத்துவதும் நோக்கமாக இருந்தது. இந்த வகையில் இந்த அரசியல்வாதிகளினதும் முஸ்லிம் காடையர்களின் நோக்கங்களில் தனியான பிரதேச செயலகம் அமைத்தது முதற்படியாக வெற்றி பெற்றது.

இந்த திட்டமிட்ட நடவடிக்கைகளின் பின்னணியில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் அமைச்சருமான எம்.எச்.எம்.அஸ்ரப், தற்போதைய கட்சித் தலைவர் ரவூப் கக்கீம், பசீர் சேகுதாவூத், எம்.எல்.ஏ.எம்.கிஸ்புல்லா உட்பட பலர் செயற்பட்டனர். உண்மையில் மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தவரையில் 85 ஆம் ஆண்டுக்கு முன்னர் முஸ்லிம்கள் பரந்துபட்டோ அல்லது பல இடங்களிலோ வாழவில்லை. அவர்கள் பிரதான நெடுஞ்சாலையை அண்டியதாக கொழும்பு-மட்டக்களப்பு வீதியில் ஓட்டமாவடி, ஏறாவூர்,காத்தான்குடி ஆகிய மூன்று இடங்களிலுமே வாழ்ந்தனர். இந்த இடங்களை ஒட்டியதாக ஒரு சில கிராமங்களும் இருந்தன. ஆனால் தற்போது நில ஆக்கிரமிப்பு, திட்டமிட்ட குடியேற்றம் போன்றனவற்றால் குறைந்தது ஐம்பது கிராமங்கவரை அமைத்துள்ளனர்.

eravur.jpg

ஏறாவூரில் லிபியா மீதான தாக்குதலை எதிர்க்கும் முஸ்லிம்கள்...

ஓட்டமாவடியில் தமிழர்களை விரட்டியடித்ததுபோலவே ஏறாவூர் தமிழ் கிராமத்தில் இருந்தும் தமிழர்கள் விரட்டடியக்கப்பட்டனர். இந்த சம்பவங்களும் 83, 85, மற்றும் 90 ஜூன் மாதத்திலும் இடம் பெற்றன. ஏறாவுர் தமிழ் கிராமம் மிகவும் செழிப்பான கிராமம். அங்குள்ளவர்களில் அதிகமானோர் பொற்கொல்லர்களாகவும் பெரும் வியாபாரிகளாகவும் இருந்தனர். இதனால் ஏறாவூர் நகர் மிகவும் பரபரப்பாகவே எப்போதும் இருக்கும். அது மாத்திரமின்றி அங்கு வாரச்சந்தை நடப்பதும் வழங்கம். இத்தமிழ் கிராமத்திற்கு அருகில் இருந்தது ஏறாவூர் முஸ்லிம் பகுதி. அது அப்போது பெரியளவில் அபிவிருத்தியடைந்து இருக்கவில்லை.

இதனால் தமிழ் பகுதியைப் பார்த்து ஆத்திரமும் வெறுப்பும் அடைந்திருந்த முஸ்லிம்கள் சந்தர்ப்பம் பார்த்திருந்து தாக்குதல்களை நடத்தினர். இத்தாக்குதல்களில் 90 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் நடந்த தாக்குதலே மிகவும் மோசமானதாக அமைந்திருந்தன. இத்தாக்குதலால் ஏறாவூர் தமிழ் கிராமம் முற்றாக அழிக்கப்பட்டன. தற்போதும் அந்த அழிவுகள் அப்படியே கிடப்பதைக் காணலாம். இந்த மக்கள் இன்னமும் மீளக் குடியமரவில்லை. ஆனால் இக்கிராமத்தின் எல்லைப்பகுதிகள் மற்றும் சில பகுதிகளை முஸ்லிம்கள் ஆக்கிரமத்துள்ளனர். இதுதவிர அப்பகுதியில் இருந்த தமிழ் மக்களுக்கான பல ஏக்கர்கணக்கான தோட்டக்காணிகள் அரச நிலம் என்பனவற்றை ஆக்கிரமித்து ஐpன்னாநகர், மிச்நகர் என்று பல கிராமங்களை புதிதாக அமைத்துள்ளனர்.

முஸ்லிம்கள் பல தமிழ் கிராமங்களை அபகரித்தது மாத்திரமின்றி பல புதிய கிராமங்களையும் அத்துமீறி அமைத்துள்ளனர். அது மாத்திரமின்றி இன்னும் சில தமிழ் கிராமங்களை அரைகுறையாக அத்துமீறி அபகரித்துள்ளதுடன் மேலும் பல கிராமங்களை குற்றுயிராக்கியுமுள்ளனர்.

கொழும்பு வீதியில் புனாணை கிராமத்திற்கு எதிராக இருந்த தமிழர்களின் காணிகள் மற்றும் வன இலாகாவுக்கான காணிகளில் திட்டமிட்ட முஸ்லிம் குடியேற்றத்தை கிஸ்புல்லா 94 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அமைச்சராக இருந்தபோது ஏற்படுத்தினார். தற்போது அது பெரும் நகரமாக அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது. தற்போது மேலும் இந்த பகுதியிலும் வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள புனாணை கிழக்கு பகுதியிலும் தமிழர்களின் பூர்வீகக் காணிகளைச் சுவீகரித்து அத்துமீறிய குடியேற்றங்களை முஸ்லிம்கள் செய்து வருகின்றனர். இதற்கு பின்னணியில் தற்போது இருப்பவர் அமைச்சர் எம்.எஸ்.அமீர் அலி.

இதுதவிர முஸ்லிம்களால் குற்றுயிராக்கப்பட்ட பல தமிழ் கிராமங்கள் உள்ளன. ஆறுமுகத்தான்குடியிருப்பு, வாழைச்சேனை தமிழ் கிராமம், நாவலடிச்சந்தி, ஆரையம்பதி எல்லைக்கிராமம், புதுக்குடியிருப்பு, செல்வாநகர் என கிராமங்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்லுகின்றது.

அம்பாறைமாவட்டம்

அம்பாறை மாவட்டம் முற்றுமுழுதாக தமிழ் பாரம்பரிய கிராமங்களைக் கொண்டதாகவும் அவர்களே பெரும்பான்மையினத்தவராகவும் இருந்ததுடன் ஆங்காங்கே முஸ்லிம்களும் சிங்களவர்களும் திட்டுத்திட்டாக வாழ்ந்தனர். ஆனால் 1956 ஆம் ஆண்டு அப்போதைய இலங்கையின் பிரதமர் டி.எஸ்.சேனநாயக்கவினால் கல்லோயாத்திட்டம் என்ற பெயரில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம் ஆரம்பிக்கப்பட்டது. அதன் பின்னர் படிப்படியாக தமிழர்கள் சிங்களவர்களால் விரட்டியடிக்கப்பட்டு பல குடியேற்றங்களை செய்தனர். இதே காலப்பகுதியில் முஸ்லிம்களும் பல இடங்களில் குடியேறியும் தமிழர்களின் நிலங்களை கொள்ளையடித்தும் அத்துமீறியும் தமது இருப்பைப் பலப்படுத்திக் கொண்டனர். எனினும் முஸ்லிம்கள் அம்பாறை மாவட்டத்தில் கண்மூடித்தனமாகக் குடியேற்றங்களைச் செய்தனர். இன்று அந்த மாவட்டத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாகவும் அடுத்த படியாக சிங்களவர்களும் அதற்கடுத்ததாகவே தமிழர்களும் உள்ளனர்.

இலங்கை: அபகரிக்கப்பட்ட கிழக்கு மாகாண நிலங்கள் – 3

Srilanka_nachchimar_kovil.jpg

கிழக்கு மாகாணத்தின் பூர்வீகக் குடிகளான தமிழர் பண்டைய மன்னராட்சியின் கீழ் சிற்றரசுகளை அமைத்து ஆண்டு வந்தனர்.  கிழக்கு மாகாணத்தில் சிங்களக் குடியேற்றங்கள் சிங்கள ஆட்சியாளர்களால் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ள அதேவேளையில் இஸ்லாமியர்களும் திட்டமிட்ட குடியேற்றங்கள் மற்றும் ஆக்கிரமிப்பு நடவடிக்கை மூலமாகவும் தமிழர்களுடைய நிலங்களை தமதுடைமையாக்கியுள்ளனர் என்பதும் கசப்பான வரலாறாகும்.

1983ல் இலங்கை இனக்கலவரம் ஆரம்பித்தது. அதற்கும் முன்பே, இலங்கை வாழ் இந்துத் தமிழர்களை அழிக்க ஆரம்பித்தனர் அமைதி மார்க்க இஸ்லாமியர்.  உள்நாட்டுப் போரில் தமிழர்களின் ஆளுகைக்கு வந்த எந்தப் பகுதியிலும் இஸ்லாமிய, பௌத்த வழிபாட்டுத் தலங்களோ, பாடசாலைகளோ, வீடுகளோ இந்துத் தமிழர்களால் அழிக்கப்படவில்லை. ஆக்கிரமிக்கப்படவில்லை. மாறாக இலங்கை ராணுவத்திலும், அரசியலிலும் செல்வாக்குப் பெற்ற இஸ்லாமியர்கள் தமிழர் பகுதிகளை அழித்து ஆக்கிரமிக்கத் தயங்கவே இல்லை. அமைதி மார்க்க இஸ்லாமியர் அழித்த ஏனைய கிழக்கு மாகாண தமிழர் கிராமங்கள் பற்றிய இறுதிப் பகுதி

.

மீனோடைக்கட்டு கிராமம் மிக நீண்டகாலத் தமிழ் கிராமம்.

ஆனால்,  தற்போது அது ஒரு முஸ்லிம் கிராமமாக மாறியுள்ளது. இக்கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட தமிழ்க் குடும்பங்கள் தொன்றுதொட்டு வாழ்ந்து வந்தன. இக்கிராமத்திற்கு அயற்கிராமங்களாக முஸ்லிம் கிராமங்கள் இருந்தன. ஆனால், 1978 ஆம் ஆண்டு தொடக்கமே இத்தமிழ்க் கிராமம் மீது முஸ்லிம்கள் தாக்குதல்களை நடத்தினர். இதனால் எல்லைப்பகுதியில் இருந்த மக்கள் படிப்படியாகத் தமது இடங்களை  விட்டு வெளியேறத் தொடங்கினர்.

Srilanka_islam_jihad_hindu_village_Templ

இஸ்லாம் அழிக்கும் இலங்கை இந்துக் கிராமங்களில் ஒன்று

அதன் பின்னர் 1985.07.12 ஆம் திகதி இக்கிராமத்தின் மீது முஸ்லிம்கள் கடுமையான தாக்குதல்களை நடத்தினர். அரசினர் தமிழ் கலவன் பாடசாலை, கோயில்கள்,  வீடுகள் என்பன முற்றாக அழிக்கப்பட்டன. இதையடுத்து அப்பகுதி மக்கள் முற்றாக வெளியேறிவிட்டனர். அதன் பின்னர் அக்கிராமம் முழுமையான முஸ்லிம் கிராமமாக மாறியது.

Srilanka_School_Islam_Jihad.jpg

இஸ்லாமியப் பள்ளிவாசல்கள் கட்ட இடிக்கப்படும் இந்துக்களின் பாடசாலைகள்

தற்போது அங்கு அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை உள்ளது. மீனோடைக்கட்டு என்று கூறினால் தற்போது அது எல்லோருக்கும் முஸ்லிம் கிராமமாகவே தெரியும். அவ்வாறு அதன் வரலாறே மாற்றப்பட்டுள்ளது.

மீனோடைக்கட்டைப்போன்றே ஒலுவில், பாலமுனை ஆகிய இரு முஸ்லிம் கிராமங்களை எல்லையாகக் கொண்ட கிராமம் திராய்க்கேணி கிராமம். இக்கிராமத்தையும் அழிக்கும் வகையிலும் அதை முஸ்லிம் கிராமமாக்கும் வகையிலும் பல முயற்சிகள் நடந்தன.

இக்கிராமத்தில் 360 குடும்பங்கள் இருந்தன. இங்கு வாழ்ந்தத் தமிழர்கள் மீது முதல் தடவையாக 1985 இல் தான் தாக்குதல் நடந்தது. இதனால் வழக்கம்போல் மக்கள் இடம் பெயர்ந்தனர். பின்னர் ஒரிரு ஆண்டில் மீண்டும் மீளக்குடியமர்ந்தனர்.

Islam_Jihad_Srilanka_MHM_ASHRAFF.jpg

எம். ஹெச்.எம். அஷ்ரஃப் - தலைவர், ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ்

ஆனால், திராய்கேணியின் சில பகுதிகளை முஸ்லிம்கள் ஆக்கிரமித்து குடியேறியிருந்தனர். ஆனால்,  இவர்களை எழுப்புவதற்கு எடுத்த முயற்சிகள் அனைத்தும் தடைப்பட்டன. இதற்குக் காரணமாக இருந்தவர் அமைச்சர் அஸ்ரப்.

அவரின் நோக்கமே மீனோடைக்கட்டு கிராமம் போன்று திராய்க்கேணி கிராமத்தையும் முஸ்லிம் கிராமமாக மாற்ற வேண்டும் என்பதே.

இதற்குப் பின்னர் 06.08.90 ஆம் ஆண்டில் விசேட அதிரடிப்படையின் உதவியுடன் முஸ்லிம் ஊர்காவல் படையினர் மற்றும் முஸ்லிம் காடையர்கள் இணைந்து  இக்கிராமத்தைத் தாக்கினார்கள். இத்தாக்குதலின்போது 46 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு பெரியதம்பிரான் ஆலயவளவுக்குள் புதைக்கப்பட்டனர்.

வீடுகள், ஆலயம், பாடசாலை என்பன முற்றாக அழிக்கப்பட்டன. தற்போது இக்கிராமத்தின் பெரும் பகுதியில் முஸ்லிம்களே வாழ்கின்றனர்.

கரவாகு கிராமம் மிகவும் தொன்மை மிக்கது. இதைச் சாய்ந்தமருது தமிழ் டிவிசன் என்றும் அழைப்பதுண்டு. அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்களால் அபகரிக்கப்பட்ட தமிழ் கிராமங்களில் இதுவும் ஒன்று. ஆனால், இக்கிராமம் 1965 ஆம் ஆண்டுக்கு முன்னரே பறிபோய்விட்டது.

இக்கிராமத்தில் 660 குடும்பங்களைச் சேர்ந்த தமிழர்கள் வாழ்ந்து வந்தனர். இங்கு கரவாகு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை, கதிரேசபிள்ளையார் ஆலயம், விஸ்ணு ஆலயம் மற்றும் ஐயனார் ஆலயம் என்பனவும் தொன்று தொண்டு இருந்து வந்தன.

islam_jihad_srilanka_nizam_kariyappa.jpg

தமிழர் வயல்களை வன்முறையால் வயப்படுத்திய இஸ்லாமியத் தலைவர்

அவை  மாத்திரமின்றி இங்கு வாழ்ந்த மக்கள் விவசாயிகளாக இருந்ததுடன் கரவாகு வட்டை என்ற பகுதியில் ஆயிரக்காணக்கான பொன்கொழிக்கும் நெல்வயல்கள் இவர்களிடம் இருந்தது. ஆனால், இக்கிராமத்தை 1965 ஆம் ஆண்டு முஸ்லிம் காடையர்கள் தாக்கியதில் அதற்கு ஈடுகொடுக்க முடியாது கிராம மக்கள் வெளியேறினர். அதன் பின்னர் இக்கிராமம் தனி முஸ்லிம் கிராமமாக மாறியது. இதற்கு அப்போது அங்கு அரசியல்வாதியாக இருந்த எம்.எஸ்.காரியப்பர் பின்னணியில்  இருந்தார்.

தமிழ்ப் பாடசாலை 70 ஆம் ஆண்டில் அல்.அமீன் வித்தியாலயம் என பெயர் மாற்றப்பட்டது. கோயில்கள் இருந்த இடத்தில் பள்ளிவாசல்களும் அமைக்கப்பட்டன. அவர்களின் வயல்காணிகள் அனைத்தும் முஸ்லிம்களின் உடமையானது.

வீரமுனை கிராமத்தையும் பல தடவைகள் முஸ்லிம்கள் இராணுவத்தினரின் உதவியுடன் அழித்தனர். அக்கிராமத்தின் பெரும் பகுதியில் அத்துமீறிக் குடியேறினார்கள். தற்போதும் முஸ்லிம்கள் தமிழர்களின் காணிகளில் சுதந்திரமாக வாழ்ந்து அனுபவித்து  வருகின்றனர்.

இந்த வீரமுனைக்கிராமம் வரலாற்றைக் கொண்ட கிராமம். இங்கு வாழ்ந்த தமிழ் மக்கள் மீது முதன் முதலில் 1954 இல் தாக்குதல் நடத்தப்பட்டது. பின்னர் 1958 இல் தாக்குதல் நடத்நதது. இவையனைத்தும் முஸ்லிம்களினாலேயே நடத்தப்பட்டன. பின்னர் 12.081990 இல் தாக்கப்பட்டு பின்னர் முழுமையாக அழிக்கப்பட்டது. இத்தாக்குதலை விசேச  அதிரடிப்படையினரும் முஸ்லிம்களுமே செய்தனர்.

850 குடும்பங்கள் இங்கு வாழ்ந்து வந்தன. ஆரம்பம் முதல் இறுதிவரையான இத்தாக்குதல்களின் போது நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். வீரமுனை கிராமம் தற்போதுவரை அதன் பழைய நிலையை அடையவில்லை.

இக்கிராமம் மாத்திரமின்றி அருகில் இருந்த தமிழர்களின் பாரம்பரிய கிராமங்களான சம்மாந்துறை தமிழ்ப்  பிரிவு, கோரக்கர்கோயில் கிராமம், மல்வத்தை புதுநகரம், கணபதிபுரம், வளத்தாப்பிட்டி, மல்லிகைத்தீவு, வீரன்சோலை ஆகிய கிராமங்களும் அழிக்கப்பட்டதுடன் முஸ்லிம் குடியேற்றங்கள் செய்யப்பட்டன.

Sri-Lanka-Before-14.jpg

அழிக்கப்பட்ட இந்துக் கோயிலில் அலைபாயும் தமிழ் சிறார்

திருகோணமலை மாவட்டம் 

திருகோணமலை மாவட்டம் தமிழர்களின் தலைநகராக உள்ளது. இங்கு பல வளங்களும் உள்ளதுடன் இயற்கைத் துறைமுகமும் அமைந்துள்ளது.

இங்குள்ள வளங்கள் மற்றும் புவிசார் அமைப்பைக் காரணங்களாகக் கொண்டு சிங்களக் குடியேற்றங்கள் மிகவும் துரித கதியில் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளன; மாத்திரமின்றி, உலக நாடுகளும் இங்குத் தமது தளங்களை அமைத்துள்ளன. இந்த வகையில் முஸ்லிம்களும் தங்கள் இருப்பைப் பலப்படுத்தும் வகையில் பல அத்துமீறிய குடியேற்றங்களைத் தமிழ் பகுதிகளில் செய்துள்ளன.

Srilanka_Palali_Temple1.jpg

பாழாக்கப்பட்ட பாலாலி கோவில்

பள்ளிக்குடியிருப்பு கிராமம் மிகவும் செழிப்பான தமிழர்களின் ஆதிக்கிராமம். இதற்கு அருகில் தோப்பூர் கலப்புக் கிராமம் உள்ளது. ஆனால், 1990 ஆம் ஆண்டு முதல் பள்ளிக்குடியிருப்புக் கிராமத்தின் மீது முஸ்லிம்கள் தாக்குதலை நடத்தத் தொடங்கினர். இதனால் அங்கிருந்த மக்கள் அச்சம் காரணமாக வெளியேறத் தொடங்கினர். எனினும், பல குடும்பங்கள் அச்சத்திற்கு மத்தியிலும் தொடர்ந்து வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் பள்ளிக்குடியிருப்பு கிராமத்தின் சில பகுதிகளை உள்ளடக்கியதாக இக்பாலநகர் என்ற புதிய கிராமத்தை முஸ்லிம்கள் உருவாக்கியுள்ளனர். இக்கிராமம் தற்போது பரபரப்பான வளமுடைய கிராமமாக மாறியுள்ளது. ஆனால், ஆதிக்கிராமமான பள்ளிக்குடியிருப்பு தற்போது பின்தள்ளப்பட்டுத் தேய்ந்து போய்விட்டது.

thiriyai_4_120602.jpg

அழிக்கப்பட்ட அம்மன் கோவிலில் கதறும் பூஜாரி

உப்பாறு கிராமம் பல தடவைகளில் முஸ்லிம்களின் தாக்குதலுக்கு இலக்கானது. இக்கிராமம் கிண்ணியாவுக்கு அருகில் உள்ளது. கிண்ணியாவில் இரு இனத்தவரும் இரு வேறு பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர். இங்கும் அடிக்கடி கலவரங்களை முஸ்லிம்கள் ஏற்படுத்தினாலும், தமிழ் மக்கள் அந்நேரத்தில் இடம் பெயர்ந்தாலும், பின்னர் தங்கள் இருப்பிடங்களுக்குத் திரும்பி விடுவது வழக்கம். ஆதலால் உப்பாறு மக்கள் 1983, 1985 ஆண்டுகளில் ஏற்பட்ட கலவரங்களின்போது இடம் பெயர்ந்தபோதிலும் பின்னர் நிலமை சீரானதும் மீளக்குடியேறினர். எனினும், முஸ்லிம் காடையர்களும் ஊர்காவல் படையினரும் தொடர்ந்து இக்கிராம மக்கள் மீது தாக்குதலை நடத்தியே வந்தனர். இறுதியில் 90 ஆம் ஆண்டு இக்கிராமத்தின் மீது பாரிய அளவு தாக்குதல் நடத்தியதால் தமிழர்களின் வீடுகள், பாடசாலை, ஆலயங்கள் சேதமாக்கப்பட்டன.

இந்நடவடிக்கைகளுக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திடீர்தௌபீக் மற்றம் அப்துல் மஜீத் போன்றோர் பின்னணியில் இருந்தனர். தற்போது உப்பாறு கிராமம் முஸ்லிம் கிராமமாக மாறியுள்ளது. அங்கிருந்த றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை தற்போது முஸ்லிம் வித்தியாலயமாக மாற்றப்பட்டுள்ளது.

சிவன்கோயில், பிள்ளையார் கோயில்கள் இருந்த இடங்களில் பள்ளிவாசல்களும் பொதுக் கட்டிடங்களும் அமைக்கப்பட்டுச் செறிவான குடியேற்றம் நடத்தப்பட்டுள்ளது. தமிழ் மாணவர்கள் கற்று வந்த றோமன் கத்தோலிக்கத் தமிழ் கலவன் பாடசாலை அயற்கிராமத்திற்கு இடம் பெயர்ந்து இயங்கி வருகின்றது.

குரங்குபாஞ்சான் கிராமமும் அப்பகுதி நிலங்களும் தமிழர்களின் சொத்து. ஆனால், 90 ஆம் ஆண்டுக்குப் பிற்பட்ட காலத்தில் இக்கிராமத்தின் பெரும் பகுதிகளை ஆக்கிரமித்த முஸ்லிம்கள் தற்போது குடியேற்றத்தைச் செய்து வாழ்ந்து வருகின்றனர்.

இறக்கக்கண்டி கிராமத்தின் பெரும் பகுதியும் தற்போது தமிழர்களிடமிருந்து பறிபோயுள்ளது. இங்கிருந்தும் தமிழர்களை விரட்டியடிப்பதில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திடீர்தௌபீக் காரணமாக இருந்தார். இவரின் பின்னணியில் முஸ்லிம்கள் மக்களை விரட்டியடித்தனர். இதனால் அங்கும் முஸ்லிம் குடியேற்றம் நடைபெற்றுள்ளது. தமிழர்கள் தற்போது சிறுபான்மையாகவே இக்கிராமத்தில் வாழுகின்றனர்.

மூதூர் திருகோணமலை மாவட்டத்தின் ஒரு உபநகரமாகவே இருந்தது. நீண்ட காலமாகத் தமிழர்கள் அங்கு வாழ்ந்து வந்தனர். சில முஸ்லிம்களும் வாழ்ந்தனர். நகரின் பெரும் வியாபார நிலையங்கள் அனைத்தும் தமிழர்களுடையதாகவே இருந்தன. ஆனால், இந்த நகரைத் தமது கையில் கொண்டுவர வேண்டுமென முஸ்லிம்கள் திட்டமிட்டனர். இந்த நிலையில் பல தடவைகளில் மூதூர் நகரமும் தமிழர்களின் சொத்துக்களும் எரிக்கப்பட்டன. இந்தக் காலகட்டங்களில் மூதூர் மக்கள் அயற்கிராமங்களுக்குப் பாதுகாப்புத்தேடிச் செல்வது வழக்கம். எனினும், தொடர்ந்து இத்தாக்குதல்களினால் பாதிக்கப்பட்ட மக்கள் தமது இடங்களை முழுமையாக விட்டுவிட வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால், தற்போது அங்கு முஸ்லிம்களே அதிகம் வாழுகின்றனர். நகரின் பெரும் வியாபார நிலையங்களின் உரிமையாளர்களாக முஸ்லிம்களே உள்ளனர். தற்போது 40 சதவீதத்திற்கும் குறைவான தமிழர்களே மூதூரில் நிரந்தரமாக வாழுகின்றனர்.

sri-lanka-state-terror-terrorist-genocid

உலகம் முழுவதும் இனப்படுகொலை செய்யப்படும் இந்துக்கள்

இதுபோன்று இன்னும் பல தமிழ் கிராமங்களின் சோக வரலாறும் கறைபடிந்த சம்பவங்களும் உள்ளன. குறிப்பாகப் பார்க்கப்போனால் கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் கிராமங்களே அழிக்கப்பட்டன; அத்துமீறிக் குடியேற்றங்கள் திட்டமிட்ட முறையில் செய்யப்பட்டன. இது பெரும்பான்மை சிங்களவர்களாலும் சிறுபான்மை முஸ்லிம்களினாலுமே இடம் பெற்றன.

Buddhistmonkdesecrates-7323291.jpg

இந்தியர் அறியாத இந்துத் தமிழர் துயர்

போர் நடைபெற்ற வேளைகளில் சில சிங்கள முஸ்லிம் கிராமங்கள் பாதிப்புக்கு உள்ளாகின என்பது உண்மை. ஆனால், திட்டமிட்ட முறையில் எந்த இனத்தவருடைய கிராமங்களும் தமிழர்களினால் அழிக்கப்படவோ அல்லது ஆக்கிரமிக்கப்படவோ இல்லை. சிங்கள, முஸ்லிம் இனத்தவரின் வழிபாட்டுத் தலங்கள், பாடசாலைகள் என்பன அழிக்கப்படவோ அல்லது மாற்றப்படவோ இல்லை. ஆனால் தமிழர்களின் பல வணக்கத்தலங்கள், பாடசாலைகள் என்பன முஸ்லிம்களினால் அழிக்கப்பட்டும் பின் தங்களின் இனத்திற்கென மாற்றப்பட்ட சம்பவங்களே வரலாறாக உள்ளன.

- See more at: http://www.arayampathy.com/news.php?id=1664#_

நானும் அம்பாரையைச் சேர்ந்த ஒருவர் தான்... ஆனால் சில இடங்களில் அம்பாரையில் தமிழர்கள் இருக்காங்களா என சிலர் கேட்கும் போது கோபம் வரும் என்ன செய்யுறது,,,..

  • கருத்துக்கள உறவுகள்

இது இவ்வாறிருக்க, இங்கே யாழ்க் களத்தில் சிலபேர் முஸ்லீம்களுக்கு எதிராகச் சிங்களவர்கள் சீறுவதைக் கண்டிப்பதோடு, தமிழர்கள் அதனை எதிர்த்துப் போராடவேண்டுமென்று கருத்தெழுதிக் கொண்டிருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
வெளியிலை வெளிக்கிட்டதுகள் கொஞ்சம் ஜெகோவா, சிஞ்சினுக்கா மதங்களுக்கு மாற.......அங்கையிருக்கிற சனத்தை அவங்கள் மாத்த.......சிங்களவனுக்கு காகம் இருக்க பனம்பழம் விழுந்த கதையாய்த்தான் போகப்போகுது.
 
மதம் மாறுவது அவரவர் பிரச்சனை. ஆனால் அதுவே எமது விடுதலைக்கும் இன அழிவுக்கும் உந்துகோலாக இருக்கக்கூடாது.
 

இஸ்லாம் மதம் பின்பற்றும் தமிழர்கள் என சொந்தம் கொண்டாடிய அனைவருக்கும் இது சமர்பணம்,இன்னுமொரு 10 வருடத்தில் வன்னியிலும் இதே நிலைமை தான், யாழ்பாணத்திலும் இதே நிலைமை.

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்லாம் மதம் பின்பற்றும் தமிழர்கள் என சொந்தம் கொண்டாடிய அனைவருக்கும் இது சமர்பணம்,இன்னுமொரு 10 வருடத்தில் வன்னியிலும் இதே நிலைமை தான், யாழ்பாணத்திலும் இதே நிலைமை.

 

இஸ்லாம் ஒரு நல்ல மதம். இஸ்லாமியத் தமிழர்கள் வாழ்க.!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாம் எப்போதும் 20 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் 70 மில்லியன் தமிழரை பாவிக்க தவறுகிறோம்.

இதனால் தான் 90 மில்லியன் தமிழர் 14 மில்லியன் சிங்களவரிடம் அடி பணியும் கேவலமான நிலையில் உள்ளோம்.

கோவில் சுற்றுலாக்கள், கலை நிகழ்சிகள் ஊடாக தமிழ் நாட்டவரை ஈழத்தில் உலவவிடவேண்டும்.

மற்றும் ஒவ்வொரு தமிழ் மாவட்டத்தில் இருந்தும் வியாபார குழுக்கள் தமிழ் நாடு செல்லவேண்டும்.

மற்றும் எமது புத்தக புழு கல்வியாளர்கள் தமிழர்கள் வாழும் நாட்டு பல்கலைகழகங்களுடன் தொடர்புகள் ஏற்படுத்தவேண்டும்.

புத்தகத்தை கரைத்து குடிக்காமல் மக்களின் அவசர தேவைகளை பூர்த்தி செய்யும் திட்டங்கள், பொருட்கள், உபகரணங்களை உருவாக்கவேண்டும்.

எமது மக்களின் அரசியல் தீர்வு வர காலமெடுக்கும் ஆனால் கீழ்மட்ட பொருளாதாரத்தை (Grass root economy) மேம்படுத்துவதால் எமது மக்களை வலுபடுத்தலாம்.

அண்ணை.. ‘ஈழத்துக்கு’ சுற்றுலா வரும் தமிழகவாசிகளில் றோ கலந்து விடுமே.. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணை.. ‘ஈழத்துக்கு’ சுற்றுலா வரும் தமிழகவாசிகளில் றோ கலந்து விடுமே.. 

 

இப்ப ர ரி ரோ ஒண்டும் இல்லையோ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொஞ்சப்பேர் இருக்கலாம்.. அதில் ஒருத்தர் அங்கு முதலமைச்சராகவும் இருக்கிறார் என்று பேச்சாக இருக்கே..

  • கருத்துக்கள உறவுகள்

நாம் எப்போதும் 20 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் 70 மில்லியன் தமிழரை பாவிக்க தவறுகிறோம்.

இதனால் தான் 90 மில்லியன் தமிழர் 14 மில்லியன் சிங்களவரிடம் அடி பணியும் கேவலமான நிலையில் உள்ளோம்.

கோவில் சுற்றுலாக்கள், கலை நிகழ்சிகள் ஊடாக தமிழ் நாட்டவரை ஈழத்தில் உலவவிடவேண்டும்.

மற்றும் ஒவ்வொரு தமிழ் மாவட்டத்தில் இருந்தும் வியாபார குழுக்கள் தமிழ் நாடு செல்லவேண்டும்.

மற்றும் எமது புத்தக புழு கல்வியாளர்கள் தமிழர்கள் வாழும் நாட்டு பல்கலைகழகங்களுடன் தொடர்புகள் ஏற்படுத்தவேண்டும்.

புத்தகத்தை கரைத்து குடிக்காமல் மக்களின் அவசர தேவைகளை பூர்த்தி செய்யும் திட்டங்கள், பொருட்கள், உபகரணங்களை உருவாக்கவேண்டும்.

எமது மக்களின் அரசியல் தீர்வு வர காலமெடுக்கும் ஆனால் கீழ்மட்ட பொருளாதாரத்தை (Grass root economy) மேம்படுத்துவதால் எமது மக்களை வலுபடுத்தலாம்.

 

முஸ்லீம்களுக்கு... வக்காலாத்து, வாங்கும்..

பொயற் ஜெயபாலன் அவர்களது கருத்தை... எதிர்பாக்கின்றேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொஞ்சப்பேர் இருக்கலாம்.. அதில் ஒருத்தர் அங்கு முதலமைச்சராகவும் இருக்கிறார் என்று பேச்சாக இருக்கே..

 

சரி இருந்துட்டு போகட்டுமே.......அங்கையிருக்கிற சனத்துக்கு ஒண்டும் தெரியாது எண்டுறியள்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரி இருந்துட்டு போகட்டுமே.......அங்கையிருக்கிற சனத்துக்கு ஒண்டும் தெரியாது எண்டுறியள்?

அங்கையிருக்கிற சனத்தை வழிநடத்ததானே நாங்கள் இங்கை இருக்கிறம்...

  • கருத்துக்கள உறவுகள்

அங்கையிருக்கிற சனத்தை வழிநடத்ததானே நாங்கள் இங்கை இருக்கிறம்...

 

அங்கையிருக்கிற சனத்தை வழிநடத்ததானே நாங்கள் இங்கை இருக்கிறம்...

 

Edited by putthan

  • கருத்துக்கள உறவுகள்

நாம் எப்போதும் 20 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் 70 மில்லியன் தமிழரை பாவிக்க தவறுகிறோம்.

இதனால் தான் 90 மில்லியன் தமிழர் 14 மில்லியன் சிங்களவரிடம் அடி பணியும் கேவலமான நிலையில் உள்ளோம்.

கோவில் சுற்றுலாக்கள், கலை நிகழ்சிகள் ஊடாக தமிழ் நாட்டவரை ஈழத்தில் உலவவிடவேண்டும்.

மற்றும் ஒவ்வொரு தமிழ் மாவட்டத்தில் இருந்தும் வியாபார குழுக்கள் தமிழ் நாடு செல்லவேண்டும்.

மற்றும் எமது புத்தக புழு கல்வியாளர்கள் தமிழர்கள் வாழும் நாட்டு பல்கலைகழகங்களுடன் தொடர்புகள் ஏற்படுத்தவேண்டும்.

புத்தகத்தை கரைத்து குடிக்காமல் மக்களின் அவசர தேவைகளை பூர்த்தி செய்யும் திட்டங்கள், பொருட்கள், உபகரணங்களை உருவாக்கவேண்டும்.

எமது மக்களின் அரசியல் தீர்வு வர காலமெடுக்கும் ஆனால் கீழ்மட்ட பொருளாதாரத்தை (Grass root economy) மேம்படுத்துவதால் எமது மக்களை வலுபடுத்தலாம்.

 

காலத்துக்கு தேவையான கருத்து

தமிழன் தனது பலத்தை

தனது ரத்தத்தை

உணரணும்

ஏற்றுக்கொள்ளணும்

முதலில்.......

 

முஸ்லீம்களுக்கு... வக்காலாத்து, வாங்கும்..

பொயற் ஜெயபாலன் அவர்களது கருத்தை... எதிர்பாக்கின்றேன்.

 

அவர் இந்தப் பக்கமே வரமாட்டார். அவர் என்ன தினசரி பத்திரிகையாளனா?

  • கருத்துக்கள உறவுகள்

அங்கையிருக்கிற சனத்தை வழிநடத்ததானே நாங்கள் இங்கை இருக்கிறம்...

 

வழிநடத்தி ???????

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணா,

தமிழர் தமது பலத்தை உணருவதை தடுக்கதான் இங்கு சிலர் தோற்றுவிட்டோம் புராணம், தமிழக ஈழ ஆதரவாளர் மீது தாக்குதல், புலம்பெயர் ஈழ தமிழரை புண்ணாக்கு என்று திட்டுதல் என்று எல்லாம் முயற்சி செய்கிறார்கள்.

இரண்டு மில்லியன் புலம்பெயர் ஈழ தமிழரின் சொத்து மதிப்பு, வருமானம் பிச்சைக்கார சிறி லங்காவிலும் பார்க்க கூட.

அந்த பயத்தால் தான் எங்களை தொடர்ந்து தாக்குகிறார்கள் 4 சிறி லங்கன் பீ.பீ க்கள்.(பீரிசிண்ட பீட்டர்ஸ்)

 

என் மனதில் சில சோர்வுகள் உண்டு

அவற்றிற்கெல்லாம் பெரும்  உடைப்புக்களை  செய்வதாக

தங்கள் கருத்துக்களும்

செயல்களும்

தரவுகளும் இருக்கின்றன

நன்றி  ராசா..

உங்களது கையில்தான்   தாயகத்தின் சுபிட்சம் உள்ளது.......

  • கருத்துக்கள உறவுகள்

என்னது புலத்தவரின் வருவாய் இலங்கையை விட கூடவா? இதற்க்கு நம்பகமான ஆதாரம் ஏதேனும் தரமுடியுமா?

ஒரு பேச்சுக்கு இதை ஒத்து கொண்டாலும், புலத்தில் இருக்கும் அத்தனை பேரும் தமது வருவாய் முழுவதையும் இதில் செலவிடிவாரா என்பது சந்தேகம். புலத்தில் வியாபாரம் செய்யும் லைக்கா போன்ற பலர் இலங்கை அரசுக்கு எதிராக ஒண்டும் செய்யப் போவதில்லை. வர்தக ரீதியில் இலங்கையை எதிர்க்க சில பெற்றோல் செட் காரரும் ஓகானிக் புண்ணாக்கு வியாபாரிகளுமே முன்வருவர்.

உருப்படியாக யானைமார்க் சோடாவையும் லெமன் பப்பையுமே புறக்கணிக்க முடியாத 2 மில்லியன் ஆக்கள்தான் ஒன்றுபட்டு இலங்கைக்கு வர்தக சவால் விடப்போயினம்.

நல்லகாலம் விக்கேஸ்வரன் போன்றவர்களின் கையில் தலைமை இருப்பதால் மக்கள் தப்பித்தார்கள் என்பதே ஒரே நிம்மதி.

  • கருத்துக்கள உறவுகள்

அனைவருக்கும் வணக்கம்

அதாவது கருத்தாளர்களே கிழக்கில் தொழில் வாய்ப்பு என்பது கூடியது ஆனால் அது முஸ்லிம்கள் கைகளில்

நம் தமிழர்கள்  உதாரணம் ஒரு யட்டி க்கு பத்துரூபா லாபம் வைத்து விற்பார்கள் அவர்கள் ஐந்து ரூபா வைத்து விற்பார்கள் அட நம்ம ட சனங்கள் அள்ள தானே பார்க்கிற  மற்றது 

நம்ம சனங்கள் விவசாயம் செய்து வாழ்வது  மழை வந்தால் நட்டம் , கோடை வந்தால் நீர் இல்லாமல் நட்டம் இப்படி இருக்கிறது நிலமை இதை விட அவர்களின் கடைகளில் வேலை செய்வது ,அரிசி ஆலைகளில் வேலை செய்வது ,செங்கல் சூளைகளில் வேலை செய்வது

 

வெளி நாடுகளில் இருப்பவர்கள் கூட நான் வென்ஸ்,வீ,எம் ,டபிள்யு ,கார் வேண்டுகிறார்கள் ,கடை தொகுதி கட்டுகிறார்கள் ,வாங்குகிறார்கள்  என்று சொல்லி இங்கு {இலங்கையில்} பீத்தி கொள்கிறார்கள் உறவினர்கள்

உங்களால் முடிந்தால் இலங்கை அரசாங்கத்தை இனியும் சொரண்டுவதை விட்டு விட்டு  உங்களூக்கு தெரிந்த அல்லது உங்களின் உறவினரிடம்  முதலீடுகளை கொடுத்து  ஒரு கடை தொகுதியையோ அல்லது அல்லது  உணவகத்தையோ திறந்தால் பல இளைஞர்களூக்கும் ,யுவதிகளூக்கும்  வேலை வாய்ப்பு கிடைக்கும்

 

 

குறிப்பு ....அங்கே சிறு வயது கர்ப்பம் ,இளவயது திருமணங்கள் அதிகரித்து கொண்டு செல்வதாக மட்டக்கப்பு வைத்தியர்கள் சொல்கிறார்கள்

 

யாரையும் குறிப்பிடு சொல்லவில்லை

  • கருத்துக்கள உறவுகள்

நியாயமான கருத்து முனிவர்ஜி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வழிநடத்தி ???????

முந்தி கொண்டுபோய் விட்ட இடத்தில விடுவோமில்ல...

ஒரு மாவட்டமே 50 களில் இருந்து பாதிப்புக்குள்ளாகியுள்ளது.

 

காத்தான்குடி படுகொலை, யாழ் வெளி ஏற்றம் பற்றி மாத்திரம் முக்காடு போட்டுக் கொண்டு ஒப்பாரி வைக்கும் கவிஞர்களை, ஆய்வாளர்களை இந்தத் திரிக்குள் காணோம்.

  • கருத்துக்கள உறவுகள்

என்னது புலத்தவரின் வருவாய் இலங்கையை விட கூடவா? இதற்க்கு நம்பகமான ஆதாரம் ஏதேனும் தரமுடியுமா?

ஒரு பேச்சுக்கு இதை ஒத்து கொண்டாலும், புலத்தில் இருக்கும் அத்தனை பேரும் தமது வருவாய் முழுவதையும் இதில் செலவிடிவாரா என்பது சந்தேகம். புலத்தில் வியாபாரம் செய்யும் லைக்கா போன்ற பலர் இலங்கை அரசுக்கு எதிராக ஒண்டும் செய்யப் போவதில்லை. வர்தக ரீதியில் இலங்கையை எதிர்க்க சில பெற்றோல் செட் காரரும் ஓகானிக் புண்ணாக்கு வியாபாரிகளுமே முன்வருவர்.

உருப்படியாக யானைமார்க் சோடாவையும் லெமன் பப்பையுமே புறக்கணிக்க முடியாத 2 மில்லியன் ஆக்கள்தான் ஒன்றுபட்டு இலங்கைக்கு வர்தக சவால் விடப்போயினம்.

நல்லகாலம் விக்கேஸ்வரன் போன்றவர்களின் கையில் தலைமை இருப்பதால் மக்கள் தப்பித்தார்கள் என்பதே ஒரே நிம்மதி.

 

மக்கள்  தவிப்பில் இருப்பதாக பொய் செய்திகள் எம்மை ஏமாற்றுகிறார்கள். மேல் இருக்கும் செய்தியும் கிட்டதட்ட அப்படியான ஒன்றுபோல்தான் தெரிகிறது.
 
உண்மை நிலைகளை எழுதிவரும் உங்களுக்கு ஆயிரம் நன்றிகள்!
 
அப்போ விக்கினேஸ்வரன் அவர்கள் மக்களை தப்பி பிழைக்க வைத்து விட்டாரா?
 
தகவலை அறிய தந்ததிற்கு உங்களுக்கு எப்படி நன்றி  சொலவதென்றே தெரியவில்லை.
 
அங்கே மக்கள் தவிப்பில் இருப்பதாக பொய் சொல்லி எம்மிடம் பணத்தை சுரண்டுகிறார்கள்.
 
உண்மைகளை எழுதும் உங்களை போன்றவர்களுக்கு கொஞ்ச பண உதவியை செய்தால் ..... உண்மை நிலைகளை அறிய தருவீர்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.