Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

எதுவரைக்கும் எழுதுவது...: நிழலி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இப்பவே நிழலிக்கு தலை சுத்து ஆரம்பித்திருக்கும்

இவர்கள் பாராட்டுகிறார்களா?

பதம்பார்க்கிறார்களா? என்று. :lol::D :D

  • Replies 58
  • Views 6.7k
  • Created
  • Last Reply

இப்பவே நிழலிக்கு தலை சுத்து ஆரம்பித்திருக்கும்

இவர்கள் பாராட்டுகிறார்களா?

பதம்பார்க்கிறார்களா? என்று. :lol::D :D

உண்மை தான்.

இனி ஆதாரமும் கேட்பார்கள். :lol:

இப்பவே நிழலிக்கு தலை சுத்து ஆரம்பித்திருக்கும்

இவர்கள் பாராட்டுகிறார்களா?

பதம்பார்க்கிறார்களா? என்று. :lol::D :D

என்ன விசுகு அண்ணா, இந்த கருத்துக்கும் (முகக்குறி போட்ட பிறகும்) சிவப்பு குத்துகிறார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

அது நானும் பார்த்தேன் என்ற குத்து

ஆனால் பச்சை இல்லாவிட்டால் இருப்பதை தெளிக்கவேண்டியது தானே?

ஆனால் எதைத்தெளித்தாலும் நமக்கு சுணைக்காது....? :lol::D :D

இப்பொழுது எனக்கும் சிவப்பு குத்தப்பட்டு விட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

(அமலா பாலுக்காக வேண்டும் என்றால் இன்னொரு பெயரில் வந்து வருணித்து எழுதிவிட்டு போகலாம்...ஆனால் என் சொந்த அனுபவங்களை இன்னொரு புனைப் பெயரில் எழுத முடியாது :icon_idea: )

நல்ல தொடர் நிழலி, தொடருங்கள், அமலா பாலை விடமாட்டீங்கள் போல, பாவம் சின்ன பெண்ணு

  • தொடங்கியவர்

3.

முதலில் நான் தெளிவு படுத்த வேண்டிய மிக முக்கிய விடயம்: நான் எழுதுவது ஒரு வரலாற்று ஆவணமாகவோ அல்லது போராட்டம் ஒன்றின் சாட்சியமாகவோ அல்ல.

நான் போராளியும் அல்ல, வரலாற்றின் தகவல்களை எனக்குள் சேகரித்து கொள்ளும் அவதானியும் அல்ல. யாழ்ப்பாண மேட்டுக் குடியில் பிறந்து படிப்பின் மூலமே முன்னுக்கு வரலாம் என்று கருதி, போராட்டக் குழுவில் முழுமையாக இணைந்து போராட வேண்டிய அனைத்து சூழல்களையும் புறக்கணித்தும் தவிர்த்தும் வருவதன் மூலம் வாழ்வில் மனிதனுக்கு ஏற்படும் அனைத்து இச்சைகளையும் தீவிரமாக அனுபவிக்க விரும்பி அனுபவித்தவன். என் அனுபவங்கள் அரை குறையானவை. மிகவும் சாமானியனது ஒரு அனுபவத் தொகுப்பு மட்டுமே இது. இடைக்கிடை அரசியல் பிரக்ஞை தலை தூக்குவதால் சில சில செயற்பாடுகளில் நான் இணைந்து இருப்பினும் அவை என் நாளாந்த பொருளீட்டும் வாழ்வை குழப்பாத வண்ணம் பார்த்துக் கொண்டவன். ஒரு வேளை யாழ் இணையம் இல்லாமல் விட்டு இருந்தால் என்னை உங்களுக்கும் தெரியாமல் போய் விட்டு இருக்கும். எனது எழுத்துக்களும் குப்பை தொட்டிகளில் போயிருக்கும்.

மீண்டும், நான் எழுதுவது ஒரு மிகச் சாதரணமான ஒரு சாமானியனின் தொடர் தான். ஒரு யுத்த கால வரலாற்றில் தன் சுயநல வாழ்வை தக்க வைத்துக் கொண்ட / அதற்காக நிதமும் போராடிய ஒருவனின் குறிப்புகள் தான் இவை.

  • கருத்துக்கள உறவுகள்

அனுபவம்தான் நல்ல ஆசான் என்ற யதார்த்தம் உணர்ந்த மனிதன். :)

(தொகுப்புக்கு காரனம் எழுத்துப்பிழை)

Edited by sagevan

இதை முகவுரையில் எழுதி இருக்க வேண்டும்.....சரி விசயத்துக்கு வாங்கோ ...தொடருங்கோ...

நிழலி அண்ணா...உங்கட வெளிப்படைத் தன்மைக்கும் எழுத்து நேர்மைக்கும் ஒரு சலாம்...உங்களிடம் இருந்து இவற்றை நானும் களவாடிக் கொள்கிறேன்....

தொடரை விட்டு விடாமல் தொடருங்கள்...எங்களுக்கு மிக அருகில் நிகழ்ந்த இழப்புக்களை,தோல்விகளை,வெற்றிகளை,அந்த வெற்றிகளுக்கு சொந்தக்காரர்களை,வலிகளுடன் வாழ்ந்த மக்களை,அந்த மக்களின் வாழ்க்கையை,மரணங்களை,மரணம் மலிந்த அந்த பூமியை,அந்த நிலத்தில் வெளித்தெரியாமல் புளுதிகளின் பின்னால் மண்டிக்கிடந்த அந்த நிலத்தின் சொந்தக்காரர்களின் துயரங்களை பற்றி உங்கள் பேனாவுக்கு மையூற்றும் குழிகளில் தேக்கிவைத்திருப்பவற்றை பகிருங்கள்...உங்கள் எழுத்து வழி தரிசிக்க காத்திருக்கிறோம்...இந்தத் தொடரின் மூலம் உங்களுடைய வாழ்வதற்காகக் கொடுக்கப்பட்டிருக்கிற நேரத்தில் கொஞ்சம் தொலைந்து போகிறது, உங்களுக்காகக் காத்திருக்கிற உங்களுடைய குழந்தையின் சிரிப்பும், விளையாட்டும் மறுக்கப்படுகிறது, ஆனாலும் எங்கள் வாழ்தலின் சிறு துளியைப் பதிந்துகொள்வதன் மூலம் இந்த இனத்தின் விடுதலை வேண்டிப் போராடிய வரலாற்றில் வாழ்ந்ததற்கான ஒரு அடையாளத்தை,அந்த இனத்தின் வலியின் சுவடுகளுடன் நடந்ததற்கான ஒரு தடத்தை நீங்கள் விட்டுச் செல்கிறீர்கள்...

Edited by சுபேஸ்

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி ஒரு சாமானியனின் பதிவாக மீண்டும் எழுத ஆரம்பித்திருக்கிறீர்கள். தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்.

எதுவரைக்கும் எழுதுவது...: நிழலி

நீன்க மேலிடமுன்க உன்க கருதை நீன்க அழிகமடும் எழுதுன்கோபா hearty-laugh.gif

  • கருத்துக்கள உறவுகள்

எதுவரைக்கும் எழுதுவது...: நிழலி

நீன்க மேலிடமுன்க உன்க கருதை நீன்க அழிகமடும் எழுதுன்கோபா hearty-laugh.gif

:lol: :lol: :lol:

எதுவரைக்கும் எழுதுவது...: நிழலி

நீன்க மேலிடமுன்க உன்க கருதை நீன்க அழிகமடும் எழுதுன்கோபா hearty-laugh.gif

எனக்கு தமிழ் மறந்திடும் போல இருக்கு குண்டா :lol: :lol: :wub:

  • கருத்துக்கள உறவுகள்

எதுவரைக்கும் எழுதுவது...: நிழலி

நீன்க மேலிடமுன்க உன்க கருதை நீன்க அழிகமடும் எழுதுன்கோபா hearty-laugh.gif

:lol: :lol: :lol:

எதுவரைக்கும் எழுதுவது...: நிழலி

நீன்க மேலிடமுன்க உன்க கருதை நீன்க அழிகமடும் எழுதுன்கோபா hearty-laugh.gif

:lol: :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குண்டன் இப்படி கீரோவாயிட்டானே முடியலை :lol: :lol: :lol:

  • தொடங்கியவர்

4.

என் அப்பாவின் பிணம் வளர்த்தப்பட்டு இருந்தது.

பிரேதப்பெட்டியின் இரு மருங்கிலும் வெள்ளை நிறத்திலான துணியின் அலங்கார துணிகள் வெளியே நீட்டிக் கொண்டு இருந்தன. அப்பாவை சவப் பெட்டிக்குள் வைக்க முன் அவது உடலை மலர்ச்சாலையில் embalm பண்ணும் முன் ஒரு வாங்கில் வளர்த்தி இருந்ததை நான் பார்த்து இருந்தேன். அப்ப முகத்தில் தெரிந்த சாவின் பின்னான தெளிவு embalm பண்ணிய பின் மறைந்து இருந்தது

விறைத்து இருந்த அப்பாவின் கைவிரல்களை மெல்ல பிடித்து தடவ தொடங்கினேன். எல்லாரும் அழுது முடித்து போன பின் இரவின் 11 மணி அளவில் அவரது செத்துப் போன உடலின் அருகில் ஒரு கதிரையில் அமர்ந்து தொடும் போது மனசு கொஞ்சம் கொஞ்சமாக இலேசாகிக் கொண்டு வந்தது. ஒருவரின் இறந்த உடல், உயிரோடு இருப்பவர்களின் மனதில் ஏற்படுத்தும் அதிர்வுகள் பலவகைப்படும் என நினைக்கின்றேன். அனைத்து அதிர்வுகளின் மத்திமத்தில் இருப்பது நாமும் நாளை சாகப்போகின்றோம் என்ற அதிர்வு தான்.

அந்த விரல்களை பிடித்து நடந்த தூரங்களும், கண்ட காட்சிகளும் மனதில் வரிசையாக வந்து போகின. ஒரு முறை மட்டக்களப்பில் கடலுடன் அடித்துச் செல்லப்படும் போதும் அப்பாதான் என்னை காப்பாற்றி இருந்தார்

நான் சிறு வயதில் 5 வயது வரை, குருணாகல் போகும் முன் இருந்தது மட்டக்களப்பில். அப்பா அரசாங்க உத்தியோகத்தர் என்றதால் அடிக்கடி இடமாற்றங்கள் வந்து கொண்டிருந்த காலம் அது. கல்லடி உப்போடை என்ற இடத்தில் இருந்தோம். எல்லாருக்கும் மிகச் சின்ன வயதின் அனுபங்களில் மிகச் சில விடயங்கள் மனசில் தெளிவாக இன்று நினைத்து பார்த்தாலும் தெரிவது போன்று இப்பவும் எனக்கு என் 5 வயது வரையான சில ஞாபங்கள் மனசுள் நிற்கின்றன. இவை பின் வந்த காலங்களில் நான் கேட்டுத் தெரிந்து கொண்ட விடயங்களால் இடைவெளிகள் நிரப்பப் பட்ட காட்சிகளாகக் கூட இருக்கலாம்.

கல்லடி உப்போடையில் நாங்கள் இருந்தது ரமேஸ் அப்பா என்று அழைக்கப்படும் ஒருவரின் வீட்டுக்கு அடுத்த வீட்டில். என் முதல் பால்ய நண்பனாக ரமேஸ் எனும் பெடியன் தான் இருந்தான். அவனது சுருள் முடி மட்டும்தான் இன்னும் நினைவில் மிஞ்சுது. அவனிற்கு காது கேளாத ஒரு அண்ணன் இருந்தான் என்பதும், அவன் வீட்டின் முன் ஒரு மாமரமும், அதில் மாம்பழங்களை சாப்பிட விடாமல் தடுக்க ஒரு மணி கட்டி இருந்ததும் கூட நினைவில் நிற்கின்றன. நாம் இருந்த கல்லடி உப்போடை ஒழுங்கை ஒன்றின் முடிவில் ஆறு (களப்பு?) இருந்ததும், அதன் கரையில் ஒரு முஸ்லிம் பெரியவரின் கல்லறை இருந்ததும் நினைவில் நின்றாலும், அந்த ஆற்று ஒழுங்கையில் ஒரு இடத்தில் சீனியப்பு என்ற கடைக்காரரும் அந்தக் கடையில் திருநீறு வட்ட வடிவாக உருட்டி அம்மா இரவில் தரும் சோத்து பிடி போல இருந்ததும் இப்ப கூட நினைவில் இருக்கு.

எங்கள் வீட்டில் இருந்து சைக்கிளில் செல்லும் தூரத்தில் கடல் இருந்தது. மணல் வெளிகளால் நடந்து போனாலும் கடலை சென்றடையலாம். ஒரு உதைப்பந்தாட்ட மைதானமும் கிட்ட இருந்தது. நாங்கள் அடிக்கடி கடற்கரைக்கு போவோம். அப்பாக்கு நீச்சல் அத்துப்படி. சின்ன வயதில் தன்னை கிணற்றுக்குள் இறக்கி தன் அப்பா நீச்சல் பழக்கியதாக சொல்லுவார்.

ஒருக்கால் சோகியும் சிப்பியும் பொறுக்கிக் கொண்டு இருக்கும் போது கடலலையில் நான் அள்ளுப்பட்டு போக அப்பாதான் காப்பாற்றினார். இன்று இந்த நிகழ்வு செய்திக்குரிய நிழல் காட்சிகளாக கற்பனையில் விரிந்தாலும் அந்தக் கடல் இன்னும் மறக்கவில்லை. நான் நினைக்கின்றேன் ஒரு முறை கடலை பார்த்த பின் அதன் அலைகள் என்றுமே மனதின் ஓரத்தில் அடித்துக் கொண்டு தான் இருக்கும் என்றும்.

கடல் தன் ஆழத்தை இறக்கி வைக்க மனித மனசைத்தான் தேடுகின்றன போலும்.

என் பால்ய காலத்து அநேக நினைவுகளில் எல்லாருக்கும் இருப்பது போல அப்பாவுடனான பொழுதுகள் தான் நிறைய இருக்கின்றன. அப்பாவுக்கு மாற்றலாகி குருணாகலுக்கு முதன் முதலில் வரும் போது ஏதோ ஒரு சிங்கள ஊரை ரயில் கடக்கும் போது அப்பா என்னை ரயிலின் யன்னலிற்கு வெளியில் எட்டிப் பார்க்க வேண்டாம் என்று எச்சரித்தார்

ஏதோ ஒரு காரணத்தால் தமிழர்கள் போகும் ரயிலை மட்டும் குறிவைத்து கல்லெறிவார்களாம்

அப்பா சொல்லி முடிக்க முன் ஒரு கல் எம் யன்னலில் பட்டுத் தெறித்தது

  • கருத்துக்கள உறவுகள்

அருமை...மனசைத் தொட்டது நிழலி....அப்பா என்பது வார்த்தைகளால் எழுதிக் கடக்க முடியாத அன்பு மலை...வாழ்க்கை முழுதும் நாம் கடந்துபோகும், நம்மைக் கடந்துபோகும் ஜீவன்களில் அப்பா மட்டுமே இதயத்தின் அடித்தளத்தில், எங்களுக்காய்த் தேய்ந்த முதல் தடமாக, என்றென்றும் நம்மால் மறக்கமுடியாதபடி வீற்றிருப்பார்... நம் மனதின் மகிழ்வு கண்டு உண்மையாய் பூரிக்கவும், துயரம் கண்டு உண்மையாய் வருந்தவும் அவரால் மட்டுமே முடியும்....என் நினைவு நதியில் எதையெதையோவெல்லாம் கிளறி யாழில் என் அடுத்த பதிவாக அப்பாவை பற்றியதாக எழுதும்படி தூண்டி விட்டீர்கள்...

Edited by சுபேஸ்

  • தொடங்கியவர்

5.

ஈழத்தில் 1945 இன் பிறந்த எந்த மனுசருக்கும்; தமிழர் மட்டுமல்ல சிங்களவராக இருந்தாலென்ன முஸ்லிமாக இருந்தாலென்ன அரசியல் ரீதியான பாதிப்பு சின்ன வயதிலேயே வந்து விடுகின்றது

எம் வாழ்வு முற்று முழுதாக தமிழ் அரசியல் அல்லது எதிர் தமிழ் அரசியல் இந்த இரு துருவ நிலைகளுக்குள்ளாகத்தான் கடந்து போகுது. ஒன்று சிங்கள இனவாதத்துக்கு எதிரான அல்லது அதனுடன் ஒத்துப் போகும் தமிழ் அரசியல், இன்னொன்று தன் இருப்பை நிலை நாட்ட அனைத்து வளங்களையும் தன் இருப்பிற்காய் நேர்வழியில் அல்லது எதிர் வழியில் ஒன்று குவிக்கும் சிங்கள இனம், மற்றது இந்த இரு இனங்களின் அதிகாரப் போட்டியில் தன் அடையாளங்களை தக்க வைக்க அதிகாரம் கூடிய பக்கத்துக்கு சார்பாக போராடும் முஸ்லிம் இனம்.

இந்த 3 சமூகங்களிலும் பிறந்த எவருக்கும் சின்ன வயதில் இருந்து அரசியல் ரீதியிலான பாதிப்புகள் வந்தடையும் என நம்புகின்றேன்

குருணாகலில் அதிக செல்வாக்குள்ள ஒரு பதவியில் அப்பா இருந்தார். எங்கள் வீட்டின் முன் தான் குருணாகலின் பொது நூலகம் இருந்தது. எம் வீடும் பொது நூலகமும் ஒரே வளவில் தான் இருந்தது. வீரகேசரி, தினகரன். தினபதி (80 களின் ஆரம்பம் வரை தினபதி வெளிவந்தது; பிரேமதாசாவின் சூழ்சியால் இந்த பத்திரிகை நிறுவனம் தொடர்ந்து இயங்காமல் போனது), தினபதியின் ஞாயிறு வெளியீடான சிந்தாமணி போன்ற பத்திரிகைகளும் குமுதம், ஆனந்த விகடன், இதயம், கலைமகள், கல்கி போன்ற தமிழக சஞ்சிகைகளும் அந்த நூலகத்திற்கு வந்து கொண்டு இருந்தன

வார இறுதி நாட்கள் முழுக்க இந்த நூலகத்தில் தான் எமது பொழுது கழியும். சேர்ந்து ஓடிப் பிடித்து விளையாட ஒரே ஒரு சிங்கள் நண்பனைத் தவிர வேறு எவரும் இல்லாத சூழ்நிலையில் நூலகம் மட்டுமே தோழனாய் இருந்து வந்தது,

ஒரு முறை ஒரு பேப்பர் ஒன்றினை தூக்கி வாசிக்கும் போது காமினி திசநாயக்கா சொல்லி இருந்தது மிகத் தெளிவாக என் ஞாபத்தில் இருக்கு

"தமிழர்களின் வாக்குகள் இல்லாவிடினும் நாங்கள் வெல்வோம்"

அப்போது என் அப்பா கொப்பே கடுவ (பெயர் குழப்பம் இருக்கு) எனும் ஒருவரை ஆதரித்து வீட்டில் கதைத்துக் கொண்டு இருந்தார். அந்த தேர்தலில் தான் ஜேவிபி கட்சியின் தலைவர் றோகணவும் சனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டார்

  • கருத்துக்கள உறவுகள்

இன்னொன்று தன் இருப்பை நிலை நாட்ட அனைத்து வளங்களையும் தன் இருப்பிற்காய் நேர்வழியில் அல்லது எதிர் வழியில் ஒன்று குவிக்கும் சிங்கள இனம்

எனக்கு என்னவோ சிங்களம் நேர்வழியில் இதுவரையும் அரசியல் நடத்திய மாதிரி தெரியவில்லை.....தொடருங்கோ

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தில் 1945 இன் பிறந்த எந்த மனுசருக்கும்; தமிழர் மட்டுமல்ல சிங்களவராக இருந்தாலென்ன முஸ்லிமாக இருந்தாலென்ன அரசியல் ரீதியான பாதிப்பு சின்ன வயதிலேயே வந்து விடுகின்றது

எம் வாழ்வு முற்று முழுதாக தமிழ் அரசியல் அல்லது எதிர் தமிழ் அரசியல் இந்த இரு துருவ நிலைகளுக்குள்ளாகத்தான் கடந்து போகுது. ஒன்று சிங்கள இனவாதத்துக்கு எதிரான அல்லது அதனுடன் ஒத்துப் போகும் தமிழ் அரசியல், இன்னொன்று தன் இருப்பை நிலை நாட்ட அனைத்து வளங்களையும் தன் இருப்பிற்காய் நேர்வழியில் அல்லது எதிர் வழியில் ஒன்று குவிக்கும் சிங்கள இனம், மற்றது இந்த இரு இனங்களின் அதிகாரப் போட்டியில் தன் அடையாளங்களை தக்க வைக்க அதிகாரம் கூடிய பக்கத்துக்கு சார்பாக போராடும் முஸ்லிம் இனம்.

இந்த 3 சமூகங்களிலும் பிறந்த எவருக்கும் சின்ன வயதில் இருந்து அரசியல் ரீதியிலான பாதிப்புகள் வந்தடையும் என நம்புகின்றேன்

ஆரம்ப காலங்களில், போராட்ட்டங்கள், இடையிடையே வாழ்கையில் வந்து போவதுண்டு!

பிந்திய காலங்களில் வாழ்க்கையே போராட்டமாகிப் போய் விட்டது!

இதுவே எம்மில் பலருக்கு, வெளிநாட்டில் வெற்றிகரமான வாழ்வை அமைப்பதற்குரிய, மனவலிமையைக் கொடுத்திருக்க வேண்டுமென எண்ணுகின்றேன்!

உங்கள் தந்தை, பற்றிய பதிவு, பல நினைவுகளைக் கிழறி விட்டது!

நீங்கள் அடிக்கடி சொல்லும், தந்தையின் விரல் பிடித்து நடந்த நினைவுகள், பழைய நினைவுகளைக் கீறி விட்டன!

உங்கள் தந்தை பற்றிய கவிதையையும், இங்கு மீள இணைத்து விட்டால், பொருத்தமாக இருக்கும் என எண்ணுகின்றேன்!

.

அப்பா என்ற புனிதமான உறவு. இள வயதில் இழந்திருக்கிறீர்கள் நிழலி. :(

எங்கள் எல்லார் மனதிலும் அப்பாவின் கைபிடித்து நடந்த சிறுவன் வாழ்கிறான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

1983 ஆடி மாதம் நடந்தது இனக்கலவரமா?அல்லது

இனப்படுகொலையா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.