Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மட்டக்களப்பு நகரில் மஹாத்மா காந்தி ,பேடர்ன் பவுல் உருவச்சிலைகள் சேதமாக்கப்பட்டு தகர்ப்பு

Featured Replies

மட்டக்களப்பு நகரில் மஹாத்மா காந்தி ,பேடர்ன் பவுல் உருவச்சிலைகள் சேதமாக்கப்பட்டு தகர்ப்பு

இந்திய நாட்டின் தேசபிதா அஹிம்சா மூர்த்தி அண்ணல் மஹாத்மா காந்தி மற்றும் சாரணிய இயக்கத்தின் தந்தை பேடர்ன் பவுல் ஆகியோரின் உருவச்சிலைகள் மட்டக்களப்பு நகரில் தாகர்க்கப்பட்டுள்ளன. சிலைகளின் தலைகள் உடைத்து சேதமாக்கப்பட்டு ள்ளன.

மட்டக்களப்பு நகரில் நிர்மாணிக்கப்பட்டிருந்த இவ்உருவச்சிலைகள் தகர்க்கப்பட்டுள்ளன. சம்பவ இடத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா மற்றும் மாகாணசபை உறுப்பினர்களான பி.பிரசாந்தன் மாசிலாமணி உட்பட மக்கள் பிரதிநிதிகள் நேரடியாகச்சென்று பார்வையிட்டனர்.

சம்பவ இடத்தில் இராணுவ பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு தலைமையக பொலிஸாh'; விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

01.jpg

03.jpg

http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=37466

  • கருத்துக்கள உறவுகள்
:rolleyes: :rolleyes: :rolleyes:
  • தொடங்கியவர்

முகநூலில் / குறுஞ்செய்தியில் தரவேற்றம் செய்யலாம்.

Sri Lanka : Mahathma Gandhi statue is vandalized

Several statues in Batticaloa, including that of Mahathma Gandhi and Lord Baden Powell the founder of the world scout movement have been vandalized in the early hours today by an unidentified gang, police said.

The statue of Lord Baden Powell was a memorial statue erected in honour of the leader of the movement, while the statue of Mahathma Ghandhi was erected over 40 years ago in honour of the Indian freedom fighter.

The heads of the statues have been completely mutilated by the gang. The statues of Swamy Vipulananthar erected in the premises of the Batticoloa Anaipanthi Vidyalayam and the statue of Palavarmani Periyathambipillai in the vicinity of Batticoloa zonal education office has also been vandalized by the gang.

The Batticaloa police are currently conducting investigations into the incident.

http://www.dailymirror.lk/top-story/17828-gandhi-statue-broken-in-batti.html

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளையானும் கருணாவும் என்ன செய்கின்றார்கள் அதெல்ல வற்றையும் பிள்ளையானும் கருணாவும் பார்த்து கொள்வார்கள் :lol::icon_mrgreen:

முன்னர் விவேகானந்தரின் சிலைகளை இசுலாமிய மதவெறியர்கள் உடைத்தார்கள்.

இப்போதும் அவர்களின் கைவரிசை என்றுதான் கதையடிபடுது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிள்ளையானும் கருணாவும் என்ன செய்கின்றார்கள் அதெல்ல வற்றையும் பிள்ளையானும் கருணாவும் பார்த்து கொள்வார்கள் :lol::icon_mrgreen:

என்ன? வேலையோ? அப்ப எப்ப தண்ணி அடிக்கிறது?

சும்மா ஐடியா குடுத்து எங்கட கள்ள பிழைப்பை கெடுக்காதீங்கோ. 

இந்திய சுதந்திரத்திற்காக போராடிய மகாத்மா காந்திக்கே இந்த நிலையா?

தலை முற்றாக அறுத்து எறியப்பட்டுள்ளது. :(

  • தொடங்கியவர்

முகநூலில் / குறுஞ்செய்தியில் தரவேற்றம் செய்யலாம்.

Gandhi statue vandalised in Sri Lanka

Statues of Indian independence icon Mahatma Gandhi and Britain's Robert Baden-Powell have been vandalised in Sri Lanka amid an anti-Indian and anti-Western campaign on the island, police said Friday.

Attackers beheaded the statues of Gandhi and Baden-Powell, the founder of the Scout movement, in the town of Batticaloa, 300 kilometres (187 miles) east of Colombo by road, a police spokesman said.

Anti-Western graffiti appeared in many parts of the country after the UN human rights council last month adopted a US-led resolution urging Sri Lanka to probe alleged war crimes committed by its troops.

Demonstrations denouncing the United States and its allies, backed by senior figures in the cabinet, were also held across the country.

Neighbouring India, which had previously supported Sri Lanka, sided with the West in voting for the resolution. Several local media have criticised India after the UNHRC vote.

http://www.google.co...12f444e7a37.4b1

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

அய்யா தோழர் பொருளாதார நிபுணர் அவர்களே..!

அவசரபட்டு கடிதம் ஏதும் தயாரிக்க வேண்டாம்.. இதை விட்டு பிடிக்க வேண்டும் .. அவன் கிந்து ராமு .. சோ .. மற்றும் எக்ஸ்ரா கோஸ்டிகள் புலி பயங்கரவாதிகளால் உடைக்கபட்டுள்ளது என தலையங்கம் தீட்டி விடுவார்கள்....

காந்தி தாத்தா பூந்தி தின்னாராம் கடலோரம் போய் ... வைத்தாராம்..!!

காந்தி கழியறாரோ இல்லையோ ..அவர் பெயரை சொல்லிட்டு இவனுங்க சிங்கள் பூந்தி திண்ணுட்டு இவனுங்க பேப்பரில் கழிந்து வைத்து விடுவார்கள்

உலேகமே போற்றும் மதிப்புக்குரிய மகாத்மா காந்தி அவர்களுடைய சிலையை தலை இல்லாமல் பார்க்கும் போது கஷ்டமாகத்தான் இருக்கிறது.

இன்னொருவிடயம்...இன்றுள்ள இந்தியாவின் நிலைமையும் இப்படித்தான் இருக்கிறது என்பதற்கு .....................................

... கருணாவோ? பிள்ளையானோ? ... யாராயினும் வாழ்த்துக்கள்! ... அடுத்த உங்கள் இலக்கு இந்திய தூதரகமாக இருக்கட்டும் ... நமோ நமோ மாதா!

  • கருத்துக்கள உறவுகள்

சம்பவ இடத்தில் இராணுவ பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு தலைமையக பொலிஸாh'; ஏன் முழுமையாக உடைக்கவில்லை என விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

எப்பா சாமி!! விசாரணை நல்ல படியா நடக்க வாழ்த்துக்கள்!!

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பில் சிலைகள் உடைப்பு

120406100752_gandhi_304x171_bbc_nocredit.jpg

உடைக்கப்பட்ட காந்தியின் சிலை

மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள சுவாமி விபுலானந்தர், மகாத்மா காந்தி உருவச் சிலைகள் உட்பட நான்கு முழு உருவச் சிலைகள் நேற்று வியாழக்கிழமை நள்ளிரவு விசமிகளினால் சேதமாக்கப்பட்டுள்ளன.

நகரின் மத்தியில் அமைந்துள்ள மகாத்மா காந்தி மற்றும் சாரணியத் தந்தை சேர் பேடன் பவுல் சிலைகளின் தலைகள் துண்டிக்கப்பட்டுள்ள அதேவேளை ஆனைப்பந்தி பெண்கள் பாடசாலை முன்றலில் அமைந்துள்ள சுவாமி விபுலானந்தர் சிலை மற்றும் கல்வி அலுவலகச சந்தியில் அமைந்திருந்த புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை சிலைகளின் தலைகள் அடித்து சேதமாக்கப்பட்டுள்ளன.

120406100527_bedan_powell_304x171_bbc_nocredit.jpg

உடைக்கப்பட்ட பேடன் பவுல் சிலை

மட்டக்களப்பு நகரில் நிறுவப்பட்டுள்ள இந்த உருவச் சிலைகள் சேதமாக்கப்பட்ட சம்பவம் அரசியல்வாதிகள், தமிழ் ஆர்வலர்கள் உட்பட பலரையும் பெரும் அதிர்ச்சிக்கும் கவலைக்கும் உள்ளாக்கியுள்ளது.

குறித்த சிலைகளில் மகாத்மா காந்தி சிலை சுமார் 40 வருடங்களுக்கு முன்னர் நிறுவப்பட்டது. ஏனைய சிலைகள் சுமார் 10 முதல் 15 வருடங்களுக்கு முன்னர் நிறுவப்பட்டவை.

இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் மட்டக்களப்பு பொலிசார் இதன் பின்னணி என்பது குறித்தோ அல்லது சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் குறித்தோ இதுவரை தெரியவரவில்லை என்கின்றனர்.

29 வது ஆசிய பசுபிக் பிராந்திய சாரணர் ஜம்போரியும் நூற்றாண்டுக் கொண்டாட்டங்கள் தம்புள்ளை நகரில் கடந்த முதலாம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகி இன்று வெள்ளிக்கிழமை முடிவடையவிருக்கும் வேளையில் சாரணியத் தந்தை சேர் பேடன் பவுலின் சிலை சேதமாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2012/04/120406_gandhistatuedestroy.shtml

ஈழத்தமிழன் என்றால் சீலையை உரிந்துபோட்டு கொலைகள் பண்ணும் இந்த மோடையா கூட்டத்திற்கு, இந்தியா, மேலை நாடுகள் என்றால் சிலையை மட்டும்தான் உடைக்க முடிகிறதா?

அவனுகள் சிங்களத்தை ஜெனீவாவில் வைத்து சீலை உரிந்துதான் வீட்டே அனுப்பினார்கள். எங்கே துணிச்சல் இருந்தால் விமலோ சம்பிக்கவோ அவங்கள் ஒருத்தரின் நாட்டுக்குள் இறங்கி இப்படி செய்துபோட்டு வரட்டும்.

எப்பா சாமி!! விசாரணை நல்ல படியா நடக்க வாழ்த்துக்கள்!!

ஏன் முழுமையாக உடைக்கவில்லை என விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

:D :D :icon_idea:

Edited by tamilsooriyan

  • கருத்துக்கள உறவுகள்

நெல்லையனுக்கு ஒரு பச்சை.

காந்திதேசத்திற்கு காந்தி சிலையை உடைத்துப் பதிலடி. பேடன் பவல் சிலையை எதற்கு உடைத்தார்கள்?

  • தொடங்கியவர்

காந்திதேசத்திற்கு காந்தி சிலையை உடைத்துப் பதிலடி. பேடன் பவல் சிலையை எதற்கு உடைத்தார்கள்?

பேடன் பவல் - பிரித்தானியர். அமேரிக்கா தீர்மானத்தை கொண்டுவந்ததால் மேற்குலகம் மீதான கோபம் ஒரு காரணமாக இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

... கருணாவோ? பிள்ளையானோ? ... யாராயினும் வாழ்த்துக்கள்! ... அடுத்த உங்கள் இலக்கு இந்திய தூதரகமாக இருக்கட்டும் ... நமோ நமோ மாதா!

அதே..அதே. அடுத்த இலக்கு இந்தியத் தூதரமாக இருக்கட்டும். மேவின் சில்வாவின் காதுகளுக்குள் இதைப் போட்டுவைத்தால் இன்னும் சிறப்பு.

  • கருத்துக்கள உறவுகள்

இனிமேல், காந்தி, சுவாமி விவேகானந்தர், பேடன் பவல் போன்றவர்களின் சிலைகளுக்கு, பொருத்தமான வடிவில், புத்தரின் தலைகளை வைத்தால், சிங்களவன் காவலிருப்பான்!

சிலை போனாலும், தலை ஒருநாளும் போகாமல் இருக்கும்! :icon_idea:

இந்த உடைப்புற்ற சிலைகளுக்கு இடையில் எந்த பொது சமன்பாடுகளோ அல்லது பொது பண்புகளோ இல்லை. காந்திக்கும் சாரணர் இயக்க பேடனுக்கும் தொடர்பு இல்லை பேடனுக்கும் விவேகானந்தருக்கும் தொடர்பு இல்லை

எனக்கு என்றால் ஒரு பெரிய திட்டத்தின் முதல் அங்கம் தான் இது என்று படுகுது. சுற்றி வர ஆமியும் சிறிலங்கா காவல்துறையும் இருக்கும் போது ஆள் நடமாற்றம் இல்லா இரவுப் பொழுதுகளில் இவை நடந்து இருக்கு...... இவை. நிச்சயம் இது திட்டமிடப்பட்ட ஒரு செயல்; ஆட்டுவித்தவர்களின் நோக்கம் வேறு

மட்டு சிலைகள் உடைப்பின் பின்னணியில் கிழக்கு முதலமைச்சர் குழுவினர்! வெகுஜன அமைப்புக்களின் ஒன்றியம் கண்டனம்

மக்கள் வெறுப்பை விருப்பாக மாற்றத் துடிக்கும் தமிழின எதிர்ப்பு அரசியல் வாதிகளின் இயலாமை அரசியலே மட்டக்களப்பு மாவட்டத்தில் வரலாற்று சிறப்பு மிக்க பல தலைவர்களின் சிலை உடைப்பு என கிழக்கு வெகுஜன அமைப்புக்களின் ஒன்றியம் விடுத்துள்ள கண்டன அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.கண்டன அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-மட்டக்களப்பு மாவட்டத்தில் 05.04.2012 வியாழக்கிழமை இரவு மட்டக்களப்பு மாநகரின் மணிக்கூட்டு கோபுரம் அருகில் இருந்த மகாத்மா காந்தியின் சிலையும்இ சாரணர் இயக்க தந்தை சேர் பேடன் பவல் அவர்களின் சிலையும்இ ஆனைப்பந்தி பாடசாலையில் இருந்த விபுலானந்தர் சிலையும்இ வலயக் கல்வி அலுவலகத்திற்கு அருகாமையில் இருந்த புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை அவர்களின் சிலையும் உடைக்கப்பட்டமைக்கு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியும் அதன் தலைவரான முதலமைச்சர் பிள்ளையான் அவர்களும்இ அவரது கையாளும்இ கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான பூ.பிரசாந்தன் என்பவருமே இதனை மேற்கொண்டுள்ளனர் என்பது தெளிவாக தெரிகிறது.தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தற்போது தங்களை மட்டக்களப்பு மாவட்டத்தில் பலப்படுத்தும் முகமாக பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. ஆறு கோடி ரூபா நிதி செலவில் மகாநாடு நடாத்தியதுடன்இ சினிமா படங்களில் காட்டப்படும் அரசியல் வாதிகள் போன்று மக்களை ஏமாற்றி அரசியல் இலாபம் தேடும் வகையில் செயற்படுகின்றனர்.இவ்வகையில் ஆரையம்பதிஇ காத்தான்குடி எல்லையில் விவேகானந்தர் சிலையை உடைத்தவர்கள் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளர் பிரசாந்தன் தலைமையிலான குழுவினரே. இக்குழு பல அட்டூழியங்களை ஆரையம்பதி பிரதேசத்தில் மேற்கொண்டு வருகின்றது. இதற்கான உத்தரவுகள் கிழக்கு மாகாண முதலமைச்சரால் வழங்கப்படுகின்றது.முன்பு தாங்களே சிலையை உருவாக்கி அதன் பின் அரசியல் இலாபம் தேடும் முகமாக தாங்கள் உடைத்த சிலையை முஸ்லிம்கள் உடைத்ததாக காட்டி அரசியல் இலாபம் தேடியுள்ளனர்.பின் தாங்களே புதிதாக ஒரு விவேகானந்தர் சிலையை தயாரித்து மக்களை ஒன்று கூட்டி விவேகானந்தர் சிலையை மீண்டும் தாபித்துள்ளனர். ஏனெனில் ஆரையம்பதியில் பிறந்த மாகாண சபை உறுப்பினர் பிரசாந்தன் என்பவருக்கு ஆரையம்பதியில் எதுவித ஆதரவும் இல்லை.இதனால் முஸ்லிம்களை காட்டி ஆரையம்பதி மக்களை தன்பக்கம் திருப்பும் நடவடிக்கைக்கான நாடகமே விவோகனந்தர் சிலை உடைப்பும்இ பின்னர் புதிய சிலை வைத்த நடவடிக்கையுமாகும். இதை ஆரையம்பதி மக்கள் நன்கு அறிவர்.இனிவரும் நாட்களில் அடாவடி அரசியல் செய்ய முடியாது என்பதை உணர்ந்து மக்கள் செல்வாக்கு இல்லாததை அதிகரித்து கொள்வதற்காக கிழக்கு முதலமைச்சரும் மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தனும் இணைந்து நடாத்தும் அரசியல் நாடகமே இச் சிலை தகர்ப்பும் புணர்நிர்மாணமும்.முப்படையினரும் குவிக்கப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்ட பகுதியில் இச் செயல் நடாத்தும் திறன் அரசுடன் இணைந்திருக்கும் ஒட்டுக் குழுக்களைத் தவிர வேறு எவராலும் செய்ய முடியாது.விரைவில் மாகாணசபை நிதியில் பிள்ளையானும்இ பிரசாந்தனும் சேர்ந்து புதிய அழகான சிலையை ஊர்வலமாக கொண்டு வந்து இந்த நான்கு இடத்திலும் தாபிப்பர் (உடைக்கப்பட்ட சிலைகள் போன்று). ஏனெனில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பெயரில் இச்சிலை வைப்பு நடைபெற்றது என்ற சரித்திரத்தையும்இ இவ்வாறான வேளையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினரே இதற்கு நடவடிக்கை எடுத்தனர் என்ற சரித்திரத்தையும் உருவாக்கி எதிர்வரும் மாநகரசபைஇ மாகாணசபை போன்ற தேர்தலில் நகர மக்களின் வாக்குகளை திரட்டும் அரசியல் இலாபம் தேடும் சதிச் செயற்பாடே இச்செயற்பாடாகும்.இந்த வகையில் மட்டக்களப்பு மாநகரில் பல கொலைகள்இ கொள்ளைகள் (புதூர் வங்கி உட்பட)இ பல கடத்தல்கள்இ கப்பம் பெறல் நிகழ்வுகளை மேற்கொண்ட பிள்ளையான் குழுவும்இ அதனது கிளையாக இயங்கும் பிரசாந்தன் குழுவும் தமது கட்சிக்கு அரசியல் இலாபம் தேட முற்பட்டுள்ளனர். இதை எமது தமிழ் சமூகம் என்றும் மறவாது. அத்தோடு இவர்களை மன்னிக்கவும் மாட்டாது.மேலும் இச்சிலை உடைப்புக்கள் நடைபெறும் போது சில பொதுமக்கள் கண்டுள்ளனர். ஆனாலும் ஆயுதக்குழுவாக இயங்கும் பிள்ளையான் குழு தங்களை சுட்டு விடும் என்ற பயத்தினால் வெளிப்படுத்த தயங்கி உள்ளனர்.மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறையிட்டாலும் அங்கும் எதுவித நடவடிக்கையும் இடம்பெறாது. தங்களுக்கே ஆபத்தாக முடியும் என தெரிவிக்கின்றனர்.ஏனெனில் சில கொலைகள்இ வங்கி கொள்ளை உட்பட பல கொள்ளைகள் சில கடத்தல்கள்இ கம்பம் பெறல் போன்றவை மட்டக்களப்பு நகரில் பிள்ளையான் குழுவால் மேற்கொள்ளப்பட்டபோதும் அதை முற்றாக மூடி மறைத்து பிள்ளையானை பாதுகாப்பதில் மட்டக்களப்பு பொலிஸார் முன்பு பல தடவை செயற்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கின்றனர்.இன்று தமிழ் சமூகத்திற்கு எவ்வளவே தேவைகள் உள்ள நிலையில் சிலைகளை உடைத்து அரசியல் செய்யும் வங்குரோத்து நிலை ஏற்பட்டுள்ளதனால் எதிர்கால இருப்பு நிலையை மக்களே தீர்மானிப்பார்கள் என அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.வெகுஜன அமைப்புக்களின் ஒன்றியம்கிழக்கு மாகாணம்http://news.lankasri.com/show-RUmqyETbOUmu1.html

  • கருத்துக்கள உறவுகள்

முன்னர் விவேகானந்தரின் சிலைகளை இசுலாமிய மதவெறியர்கள் உடைத்தார்கள்.

இப்போதும் அவர்களின் கைவரிசை என்றுதான் கதையடிபடுது.

இஸ்லாமியருக்கு சிலை வழிபாடு என்றால் பயங்கர அலர்ஜி.....

இனிமேல், காந்தி, சுவாமி விவேகானந்தர், பேடன் பவல் போன்றவர்களின் சிலைகளுக்கு, பொருத்தமான வடிவில், புத்தரின் தலைகளை வைத்தால், சிங்களவன் காவலிருப்பான்!

சிலை போனாலும், தலை ஒருநாளும் போகாமல் இருக்கும்! :icon_idea:

பேடன் பவலின் உடம்பின் மேல் புத்தரின் தலை இருந்தால் சூப்பராக இருக்கும்....

  • கருத்துக்கள உறவுகள்

நெல்லைக்குப் பச்சை அமெரிக்க பிரித்தானியத் தூதரகங்களையும் ஏன் விட்டு வைப்பான்????????????????

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.