Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

என்ரை முதல் அனுபவம்

Featured Replies

இது வெறும் நகைச்சுவைக்காகவே என்னால் எழுதப்பட்டது . உள்நோக்கங்கள் எதுவும் இதில் இல்லை .

நேசமுடன் கோமகன்

*************************************************************************************************************************

நேற்று இரவைக்கே என்ரை மனிசி சொல்லிப்போட்டா , நாளைக்கு வேலையால வரேக்கே வோட் பண்ணவேணும் எண்டு . நான் போவம் எண்டு சொல்லிப் போட்டு யாழ் இணையத்தை நோண்டிக் கொண்டிருந்தன் . விடிய எழும்பி ரெண்டு பேரும் வேலைக்கு போகேக்கை என்ரை வாக்காளர் அட்டையை மறக்காமல் மனிசி தந்தா . நான் வேலை செய்யேக்கை என்ரை மண்டையுக்கை சுருள் சுருளாய் வட்டம் போச்சுது .

ப்ப நான் ஏழாம் வகுப்பு படிச்சுக் கொண்டிருக்கறன் . எங்கடை கோப்பாய் தொகுதிக்கு கதிரவேற்ப்பிள்ளை ஐய்யா தான் கூட்டணி வேட்பாளர் . லெக்சன் கிட்டிது . கண்ட றோட்டில எல்லாம் நோட்டிசும் பசைவாளியோடையும் நோட்டிஸ் ஒட்டிக் கொண்டிருந்திச்சினம் , பேரவை அண்ணைமார் . நாங்கள் சின்னப்பெடியள் எண்டபடியால விடுப்பு மட்டும் தான் பாப்பம் . லவுஸ்பீக்கர் வேற வாத்தியாற்ரை பாட்டுகளை போட்டு சனங்களை குசி ஏத்தீச்சிது . சில பேர் கள்ளைப் போட்டிட்டு வாத்தியார் மாதிரி அபினயிச்சு பாடீச்சினம் . நான் வாயைப் பிளந்து கொண்டு நிண்டு லவுஸ்பீக்கறையும் , கட்டின தோறணங்கள் , கடுதாசிப் பேப்பர் அலங்கரிப்புகளை எல்லாம் பிராக்கு பாத்தன் . லெக்சன் தொடங்க முதல் நாளைக்கு முதல் நாள் கோப்பாய் கந்தசாமி கோயலடியில பெரிய கூட்டம் . செல்வநாயகம் , அமீர் , யோகேஸ் எல்லாரும் வந்தீச்சினம் . மங்கையக்கா தமிழ்தாய் பாட்டு பாடி கையில பிளேட்டால வெட்டி அதால வந்த ரத்தத்தை அமீருக்கு பொட்டு வைச்சா . சனம் எல்லாம் உரு ஏறி ஏங்கடை வோட்டு உங்களக்குத் தான் எண்டு கத்தீச்சிது . பக்கத்தில நிண்ட அப்பாவும் சனத்தோடை சேந்து கத்தினார் . எனக்கு ஒரு கோதாரியும் அந்த வயசில விளங்கேல .

ேந்து அங்கை இங்கை ஓடி எண்பத்தி ஆறில இங்கை வந்தன் . அப்பவும் எனக்கு உந்த சின்னப்பிள்ளை குணங்கள் போகேல . லெக்சன் எண்டால் கொஞ்சம் விளங்கத் தொடங்கீச்சுது . ஆனால் என்னால வோட் பண்ணேலாமல் போச்சு . ஒவ்வரு முறையும் இங்கை லெச்சனுக்கு , முதல் கேக்கிற ரெண்டு பாட்டியளும் ரீவீயில நேரை வந்து ரீவி காறங்களின்ரை கேள்வியளுக்கு மறுமழி சொல்லுவீனம் . நான் அப்பவும் விடுப்பு பாப்பன் . ஆனால் லவுஸ்பீக்கர் , தோறணங்கள் , எடுபிடியள் இல்லாமல் போனது எனக்கு பெரிய குறையா போச்சுது .

இப்பிடியே போய் இண்டைக்கு முதல்தரம் கலியாணம் கட்டின மதிரி வோட்போட திறில்லங்கா இருக்கிறன் . வேலையை கெதியா முடிச்சு கொண்டு ஒரே ஓட்டமாய் வந்து , வீட்டுக்கு கிட்ட ஒரு பள்ளிகூடத்தடியல வோட் போடுற இடம் கிடந்திது . நான் அங்கை போனால் ஒரு அசுமாத்தத்தையும் காணேல . பாட்டுகள் தோறணங்களை காணேல . எனக்கு மனிசீல ஐமிச்சம் . வேணுமெண்டு அட்ரசை மாறித் தந்து போட்டாளோ எண்டு . வாசலில ஒரு கறுவல் உயரமாய் நிண்டான் . நான் அவனிட்டை வோட்டு போட வந்தன் எண்டு சொன்னன் . அவன் என்ரை ஐடியை பாத்திட்டு உள்ளுக்கை விட்டான் . நான் பதகளிச்சுக் கொண்டு உள்ளுக்கை உள்ளட்டன் . அங்கை ரெண்டு மூண்டு வெள்ளையள் இருந்தீச்சினம் . நான் அவையிட்டை பயந்து கொண்டு விசயத்தை சொன்னன் . அவை சார்கோசியின்ரை பேரையும் , பிரான்ஸ்சுவா ஹோலண்ட் இன்ரை துண்டுகளையும் ஒரு என்வலப்பையம் தந்தீச்சினம் . எனக்கு என்னன செய்யிறது எண்டு தெரியேல . பேந்து மற்றர சனத்தை பாத்தன் . அவை உடுப்பு மாத்தற அறை போல ஒண்டுக்குள்ளை போய் வெளியில வந்து , அங்கால வோட்டு போடிற பெட்டிக்கு கிட்ட நிண்டீச்சினம் . நான் அறைக்கை போய் சார்க்கோசியின்ரை பேர் துண்டை எடுத்து என்வலப்புக்குள்ளை வைச்சு துப்பலாலை ஒட்டினன் . அங்கால போனா ஒரு வெள்ளைப் பொம்பிளை என்ரை என்வல்ப்பை பெட்டிக்குமேலை வைக்கச்சொன்னா . நான் வைக்க , ஒரு இரும்பு பிடியை பிறென்ஜ் சில "வோட்தே " எண்டு சொல்லி தன்ரை பக்கம் இழுத்தா . என்ரை என்வலப் பெட்டீக்கை போய் விழுந்திது . நான் பேந்தும் நிண்டன் . என்ன எனபது போல அவா பாத்தா . நீங்கள் எனக்கு கையில மை போடேல எண்டன் . அவா சிரிச்சுக் கொண்டு சொன்னா , இங்கை அப்படியெல்லாம் செய்யிறேல போட்டு வா எண்டு . எனக்கு சப்பெண்டு போச்சிது .

உங்களுக்கும் பிள்ளையள் உப்படி உங்கடை நாடுகளில ஏதாவது முதல் அனுபவங்கள் இருக்கோ???????? வெக்கப்படாமல் அவுத்து விடுங்கோ . பம்பலாய் கேப்பம் .

Edited by கோமகன்

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர்ந்த நான் முதன்முதலில் வாக்களித்தது

ஒரு சோஸலிசக் கட்சிக்கும் அதன் தலைவருக்கும்.

அந்தத் தேர்தலில் அந்தக் கட்சியும் அவரும் தோற்றுவிட்டார்கள். :lol::lol::D

அடுத்த ஞாயிறு குறுநிலத்திற்கான தேர்தல் வருகின்றது.

மீண்டும் அவர்களுக்கே வாக்களிப்பதாக உத்தேசம். :D

கோமகன் உங்கள் பதிவு ரசிக்கக்கூடியதாக இருக்கின்றது

சொன்னா நம்ப மாட்டீங்க சார் ..17 வயதிலையே உந்த வோட்டு குத்தி போடுற பார்லிமண்ட் முறை லெக்சனலை நம்பிக்கை இல்லை ..அன்றைய கால கட்டத்தின் முக்கிய தேவை கருதி எனது வயது சார்ந்த இளைஞர்களுடன் தமிழர் விடுதலை கூட்டணிக்காக வோட்டு கன்வர்சிங் ஈடுபட்ட பொழுது நம்மூர் முதியவர்கள் ..வோட்டில்லா பொடியள் வைத்து கொண்டு கூத்தடிக்கிறாங்கள் ..வென்ற மாதிரி தான் என்று.. .....ஆனால் நாமும் வோட்டு போட்டோமே..நாங்கள் எத்தனை வோட்டு போட்டோமென்று எங்களுக்கே தெரியாதுங்க ...செத்தவங்க காணமால் போனவங்க சோம்பீறங்க என்று எல்லோருடைய வோட்டையும் போட்டு தள்ளினது ..கை மையை கள்ளு நுரையால் அழித்தது ..எல்லாவற்றையும் ஞாபகம் வர பண்ணினதுக்கு கோமகன் அண்ணாச்சிக்கு ஒரு நன்றிக்ள்..நான் முதல் அனுபவம் என்றவுடன் என்னவோ ஏதோ என்று முதலில் நினத்தேன்

Edited by matharasi

  • கருத்துக்கள உறவுகள்

தலைப்பைப் பார்த்திட்டு நான் ஏதோ அதுவாக்கும் எண்டு அரக்கப்பரக்க விழுந்தடிச்சுத் திரியைத் வாசித்தால்..... ஆனாலும் சூப்பர் அனுபவம்தான் கோமகன் அண்ணா...

  • கருத்துக்கள உறவுகள்

நான் வீடு மாறினதாலை ஓட்டு பாதிய பிந்திவிட்டது அதாலை வோட்டு பேடேல்லை ..உங்கள் அனுபவத்தை பதிந்தமைக்கு நன்றிகள். அதுசரி இத்தனை வருசமா வோட்டு போடேல்லையோ??

வணக்கம் கோமகன் அண்ணா! (நீங்கள் கதிரவேற்பிள்ளை ஐயாவைப் பற்றிக் கதைச்சதாலை அண்ணா தான்)

அதுசரி நீங்கள் ஒருக்காலும் சிறிலங்காவிலை வோட் பண்ண இல்லையா! அட வாழ்க்கையிலை பாதியை வீணாக்கிப் போட்டியள். அங்கை எலக்சன் எணடால் திருவிழா எல்லோ! வோட் போடப் போற ஆக்களுக்கும் நல்ல மரியாதை. நடந்து போய்க் கொண்டிருந்தால் எல்லாக் கட்சிக் காறறின்ரை வாகனங்களும் மறிச்சு ஏத்திக் கொண்டு போகும். அங்கையும் வாசலிலை நிண்டு எல்லாக் கட்சிக் காறரும் கும்பிடு போடுவினம்.

நானும் இங்கிலாந்து வந்த பிறகு கவுன்சில் எலக்சனிலை எங்கடை தயா இடைக்காறர் ஐயா போட்டி போடுறார் எண்டு வோட் போடப் போனனான். எனக்கும் இலங்கை எலக்சன் எண்ணம் தான். சரியெண்டு காட்டைத் தூக்கிக் கொண்டு அவை சொன்ன பள்ளிக்கூடத்தடிக்குப் போனால் எலக்சன் நடக்கிற ஒரு அசுமாத்தமும் இல்லை. நானும் அந்தப் பள்ளிக்கூடத்தை பொரிச்ச மீனைப் பூனை பாக்கிற மாதிரிப் பாத்துக் கொண்டு நிக்கேக்கை ஒரு வெள்ளை ஆச்சி ஒராள் காட்டோடை வந்தா. அவாட்டை எலக்சன் எங்கை நடக்குது எண்டு கேக்க இங்கை தான் நானுமு; வோட் போடத் தான் போறன் எ;டிட்டுப் போனா. சரியெண்டு பின்னாலை போனா பள்ளிக்4டம் தன்ரை பாட்டிலை நடந்து கொண்டிருக்னகுது. ஒரு சின்ன அறைக்குள்ளை மூண்டு பேர் ஈயடிச்சக் கொண்டிருந்தினம். நான் காட்டைக் குடுக்க மையடிக்கிற வேலை ஒண்டும் இல்லாமல் வாக்குச் சீட்டைத் தூக்கித் தந்தினம். எனக்குச் சப்பெண்டு போச்சுது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உள்ளதை சொல்லுறன்...... என்ரை வாழ்க்கையிலை இன்னும் வோட் போடவேயில்லை :huh: நம்புறதும் நம்பாமல் விடுறதும் உங்கடை பிரச்சனை :icon_mrgreen: .......இதை வாசிச்சவுடனை உங்கை ஒருசில ஆக்களுக்கு அடிவயித்திலையிருந்து ஒருநக்கல் சிரிப்பு மேலையெழும்பி வருமெண்டு நினைக்கிறன் :lol: .....ஐயா கோமகன்!முதல் அனுபவத்தை கதைவடிவில் தந்ததிற்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையை சொல்லப் போனால் நானும் இன்னும் ஒரு வோட்டும் ஒழுங்காகப் போட‌வில்லை...நான் போடப் போற முதல் வோட்டு தமிழிழத்திற்காக போட‌ வேண்டும் என்ட‌ ஒரு விருப்பம் இருந்தது[இனி மேல் அது எல்லாம் எப்ப சரி வர‌ப் போகுது] இங்கே என்னை ஒருக்கா கட்டாயப்படுத்தி வோட் போட‌ கூட்டிக் கொண்டு போனவை நான் அந்த வோட்டில் எல்லோருக்கும் குத்தி செல்லாத வோட்டாக்கிப் போட்டு வந்திட்டன் :lol: அதுக்குப் பிறகு ஒரு தேர்தலுக்கும் போறதில்லை

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் கோ

26 வருடங்கள் பிரான்சிலிருந்து இன்னும் தோரணைகளையும் மேளத்தையும் எதிர்பார்த்தேன் என உங்களை நீங்களே கேலி செய்யலாமா?

பகிடியாக இருந்தாலும் சகிக்கல. :lol::D :D

  • தொடங்கியவர்

மிக்க நன்றிகள் வாத்தியார் உங்கள் கருத்துக்களுக்கு . உங்கள் குறுநிலத்தேர்லையும் சந்தித்துவிட்டு அந்த அனுபவத்தையும் எழுதுங்கள் .

  • தொடங்கியவர்

சொன்னா நம்ப மாட்டீங்க சார் ..17 வயதிலையே உந்த வோட்டு குத்தி போடுற பார்லிமண்ட் முறை லெக்சனலை நம்பிக்கை இல்லை ..அன்றைய கால கட்டத்தின் முக்கிய தேவை கருதி எனது வயது சார்ந்த இளைஞர்களுடன் தமிழர் விடுதலை கூட்டணிக்காக வோட்டு கன்வர்சிங் ஈடுபட்ட பொழுது நம்மூர் முதியவர்கள் ..வோட்டில்லா பொடியள் வைத்து கொண்டு கூத்தடிக்கிறாங்கள் ..வென்ற மாதிரி தான் என்று.. .....ஆனால் நாமும் வோட்டு போட்டோமே..நாங்கள் எத்தனை வோட்டு போட்டோமென்று எங்களுக்கே தெரியாதுங்க ...செத்தவங்க காணமால் போனவங்க சோம்பீறங்க என்று எல்லோருடைய வோட்டையும் போட்டு தள்ளினது ..கை மையை கள்ளு நுரையால் அழித்தது ..எல்லாவற்றையும் ஞாபகம் வர பண்ணினதுக்கு கோமகன் அண்ணாச்சிக்கு ஒரு நன்றிக்ள்..நான் முதல் அனுபவம் என்றவுடன் என்னவோ ஏதோ என்று முதலில் நினத்தேன்

உங்களை மீண்டும் களத்தில் கண்டதில் மிக்க மகிழ்சி . கள்ளால் மை அழிக்கின்ற ரெக்னிக் எனக்கு தெரியாது . நான் சிறிய வயதில் 77களில் பாத்த தேர்தல் நினைவுகளை மையப் படுத்தினேன் . அதில் ஒன்றை விட்டு விட்டேன் , அந்தக் கூட்டத்திற்கு அடுத்த நாள் தேர்தல் பணிகளை முடித்து விட்டுத் திரும்பிய பரமேஸ்வரன் இன்ஸ்பெக்ரர் பத்மநாதனால் படுகொலை செய்யப்பட்டது . அதுவே அந்த நேரத்தில் நடந்த முதல் அரசியல் படுகொலையுமாகும் . மிக்க நன்றிகள் மதராசி உங்கள் கருத்துக்களுக்கு .

தலைப்பைப் பார்த்திட்டு நான் ஏதோ அதுவாக்கும் எண்டு அரக்கப்பரக்க விழுந்தடிச்சுத் திரியைத் வாசித்தால்..... ஆனாலும் சூப்பர் அனுபவம்தான் கோமகன் அண்ணா...

அதுவெண்டால் என்னப்பன் ? கனக்க உணர்ச்சிவசப்பட்டக் கூடாது .

நான் வீடு மாறினதாலை ஓட்டு பாதிய பிந்திவிட்டது அதாலை வோட்டு பேடேல்லை ..உங்கள் அனுபவத்தை பதிந்தமைக்கு நன்றிகள். அதுசரி இத்தனை வருசமா வோட்டு போடேல்லையோ??

எனக்கு 2010 ல தான் பல தொடர் போராராட்டங்களுக்கு பிறகு நீ வோட்டுப் போடலாமடாப்பா எண்டு சொன்னாங்கள் . அதுக்கு முதல் அணில் ஏறவிட்ட நாய் தான் .

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

வணக்கம் கோமகன் அண்ணா! (நீங்கள் கதிரவேற்பிள்ளை ஐயாவைப் பற்றிக் கதைச்சதாலை அண்ணா தான்)

அதுசரி நீங்கள் ஒருக்காலும் சிறிலங்காவிலை வோட் பண்ண இல்லையா! அட வாழ்க்கையிலை பாதியை வீணாக்கிப் போட்டியள். அங்கை எலக்சன் எணடால் திருவிழா எல்லோ! வோட் போடப் போற ஆக்களுக்கும் நல்ல மரியாதை. நடந்து போய்க் கொண்டிருந்தால் எல்லாக் கட்சிக் காறறின்ரை வாகனங்களும் மறிச்சு ஏத்திக் கொண்டு போகும். அங்கையும் வாசலிலை நிண்டு எல்லாக் கட்சிக் காறரும் கும்பிடு போடுவினம்.

நானும் இங்கிலாந்து வந்த பிறகு கவுன்சில் எலக்சனிலை எங்கடை தயா இடைக்காறர் ஐயா போட்டி போடுறார் எண்டு வோட் போடப் போனனான். எனக்கும் இலங்கை எலக்சன் எண்ணம் தான். சரியெண்டு காட்டைத் தூக்கிக் கொண்டு அவை சொன்ன பள்ளிக்கூடத்தடிக்குப் போனால் எலக்சன் நடக்கிற ஒரு அசுமாத்தமும் இல்லை. நானும் அந்தப் பள்ளிக்கூடத்தை பொரிச்ச மீனைப் பூனை பாக்கிற மாதிரிப் பாத்துக் கொண்டு நிக்கேக்கை ஒரு வெள்ளை ஆச்சி ஒராள் காட்டோடை வந்தா. அவாட்டை எலக்சன் எங்கை நடக்குது எண்டு கேக்க இங்கை தான் நானுமு; வோட் போடத் தான் போறன் எ;டிட்டுப் போனா. சரியெண்டு பின்னாலை போனா பள்ளிக்4டம் தன்ரை பாட்டிலை நடந்து கொண்டிருக்னகுது. ஒரு சின்ன அறைக்குள்ளை மூண்டு பேர் ஈயடிச்சக் கொண்டிருந்தினம். நான் காட்டைக் குடுக்க மையடிக்கிற வேலை ஒண்டும் இல்லாமல் வாக்குச் சீட்டைத் தூக்கித் தந்தினம். எனக்குச் சப்பெண்டு போச்சுது.

உங்கள் அனுபவங்களின் முன்பு நான் சின்னப் பிள்ளை . இலங்கையில் உயர்தரம் மட்டுமே இருந்தேன் . பின்பு தமிழகத்தில் படிப்பு என்று போய்விட்டது . என்னால் ஒரு இடத்திலும் வோட் பண்ணமுடியவில்லையே என்ற வெக்கிராணமும் இதை எழுத ஒரு காரணம் . மிக்க நன்றிகள் மணிவாசகன் உங்கள் விரிவான கருத்திற்கும் அக்கறைக்கும் .

உள்ளதை சொல்லுறன்...... என்ரை வாழ்க்கையிலை இன்னும் வோட் போடவேயில்லை :huh: நம்புறதும் நம்பாமல் விடுறதும் உங்கடை பிரச்சனை :icon_mrgreen: .......இதை வாசிச்சவுடனை உங்கை ஒருசில ஆக்களுக்கு அடிவயித்திலையிருந்து ஒருநக்கல் சிரிப்பு மேலையெழும்பி வருமெண்டு நினைக்கிறன் :lol: .....ஐயா கோமகன்!முதல் அனுபவத்தை கதைவடிவில் தந்ததிற்கு நன்றி.

உள்ளதைச் சொன்ன குமாரசாமியருக்கு ஒரு ஓ............. . என்னை ஐயா எண்டு கூப்பிடாதையுங்கோ . நான் சின்னப்பெடியன் ஒருமாதிரி இருக்கிது . உங்ளுக்கும் மிக்க நன்றிகள் .

  • தொடங்கியவர்

உண்மையை சொல்லப் போனால் நானும் இன்னும் ஒரு வோட்டும் ஒழுங்காகப் போட‌வில்லை...நான் போடப் போற முதல் வோட்டு தமிழிழத்திற்காக போட‌ வேண்டும் என்ட‌ ஒரு விருப்பம் இருந்தது[இனி மேல் அது எல்லாம் எப்ப சரி வர‌ப் போகுது] இங்கே என்னை ஒருக்கா கட்டாயப்படுத்தி வோட் போட‌ கூட்டிக் கொண்டு போனவை நான் அந்த வோட்டில் எல்லோருக்கும் குத்தி செல்லாத வோட்டாக்கிப் போட்டு வந்திட்டன் :lol: அதுக்குப் பிறகு ஒரு தேர்தலுக்கும் போறதில்லை

எழுதேக்கை விளப்பமா எழுதவேணும் ரதி . என்ன டீல் அவையோடை போட்டியள் ??? ஏன் அவை உங்களை கட்டாயப்படுத்தவேணும்??? இப்படி கனபம்பலுகள் இருக்கு . பிள்ளையள் பாவங்களெல்லோ , அந்தரிக்கப் போறாங்கள் . உங்கள் கருத்துக்களுக்கும் மிக்க நன்றிகள் .

  • தொடங்கியவர்

வணக்கம் கோ

26 வருடங்கள் பிரான்சிலிருந்து இன்னும் தோரணைகளையும் மேளத்தையும் எதிர்பார்த்தேன் என உங்களை நீங்களே கேலி செய்யலாமா?

பகிடியாக இருந்தாலும் சகிக்கல. :lol::D :D

எனக்கு முதலே இங்கை வந்து , வெள்ளயோடை வெள்ளையா கலந்த மாதிரி நடிச்சுக்கொண்டு , தங்கடை வீட்டு சாமத்தியச் சடங்குகளிலையும் , கலியாண வீட்டிலையும் , தோறணங்களையும் , வாழைக் குலையையும் , மேளதாளத்தோட கெலியிலயும் , முத்துப்பல்லக்கிலும் பெடிச்சியை சாமத்திய சடங்குக்கு இறக்கிற எங்கடை புலம்பெயர் டமில்ஸ் மத்தியில் , என்ரை சின்னவயசு தேர்தல் ஞாபகத்தைக் கொண்டு வந்து , இரண்டு தேர்தலையும் ஒப்பீடு செய்து , தோறணத்தையும் மேளத்தையும் எதிர்பார்கிறதுதில ஒருபிழையும் இருக்கிறதாய் எனக்குத் தெரியேல விசுகர்........... மிக்க நன்றிகள் உங்கள் நேரத்திற்கும் கருத்துகளுக்கும் .

Edited by கோமகன்

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு கட்டாயம் வோட் போடனும், முதல் தரம் போடும்போது கொஞ்சம் ரென்சனாகதான் இருந்தது யாருக்குப போட என்று, போட்ட அம்மா ஆட்சிக்கு வந்திட்டா, ஆனா தாங்க முடியவில்லை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கோம்ஸ் அண்ணா,

எங்களுக்கு கள்ளவோட் போட்டு தான்பா தெரியும். அதுவும் ஒரே நாள்ளை 3 இடத்திலை 10,15 எண்டு போட்டவங்களும் பம்மிக்கொண்டு :rolleyes: இருக்கிறாங்கள்.. அதெல்லாம் ஒரு த்ரில்.

2004 தேர்தல். செத்தவங்கள்,வெளிநாட்டுக்கு போனவங்கள் எல்லாரும் :unsure: வோட்டு போட்டவங்கள் எண்டால் பாருங்கோ :lol:

நானும் இன்னொரு பொடியனும் தான் தெரிஞ்ச ஒரு ஆக்களின்ரை(அவங்கள் 2பேரும் வெளிநாட்டிலை) வோட்டை வாங்கிகொண்டு அதுவும் பேர் கொஞ்சம் நம்பகூடியமாதிரி இருக்க வேணும் என்று தேடி எடுத்து பக்கத்திலை இருக்கிற பள்ளி கூடத்துக்கு காலமை 9.30-10.00மணிக்கே போறம். இப்பவே பால்வடியுறமுகம் :icon_mrgreen::lol: அப்ப சொல்லவே வேணும்? :unsure: பெரிய ஆள் போலை இருக்க வேணும் என்று சாரத்தையும் கட்டிக்கொண்டு போய் வாசல்லை ஒரு நோட்டம் விட்டு பார்த்தால் பொலிஸை கண்டிட்டு கூட வந்தவன் நீ முதல் போட்டிட்டு வா எண்டு கழட்டி விட்டுட்டான். அம்மாளாச்சி நீ தான் காப்பாத்துனு :lol: சொல்லிட்டு உள்ளை போனால் படிப்பிச்ச ரீச்சர் சொல்லவே வேணும் பீலிங்ஸ்க்கு... நல்ல காலம் அவவும் கண்டும் காணதும் போல இருக்க வரிசைய இருந்த ஆக்களிலை ஒருத்தர் மை தடவி விட பக்கத்திலை இருந்தவா வோட் போடுற சீட் தர ஒரு ரெலிபோன்பூத் போல பெட்டியிலை போய் புள்ளடி போட்டிட்டு (பேனைய சுட்டிடுவாங்கள் எண்டு நூலிலை கட்டி நல்ல பாதுகாப்பு வேறை) மடிச்சு பெட்டியிலை போட்டிட்டு வந்தாப்போலை தான் நெஞ்சுக்குள்ளை தண்ணியே வந்திச்சுது :D

பிறகு அந்த மைய போக்காட்ட உள்ள திராவகம் எல்லாத்தையும் போட்டு மண்ணிலை இருந்து,பிரேக் ஓயில் வரை போட்டு தேய்ச்சு ஒரு மாதிரி போக்காட்டி போட்டு அடுத்த தாக்குதலுக்கு :rolleyes: கைக்கு அசின்...சீ ..பிசின் :lol: பூசிப்போட்டு போய் வதிரி,தம்பசிட்டியிலை போட்டது.

  • தொடங்கியவர்

இங்கு கட்டாயம் வோட் போடனும், முதல் தரம் போடும்போது கொஞ்சம் ரென்சனாகதான் இருந்தது யாருக்குப போட என்று, போட்ட அம்மா ஆட்சிக்கு வந்திட்டா, ஆனா தாங்க முடியவில்லை

மிக்க நன்றிகள் உடையார் உங்கள் முதல் அனுபத்திற்கும் கருத்துக்களுக்கும் .

  • தொடங்கியவர்

கோம்ஸ் அண்ணா,

எங்களுக்கு கள்ளவோட் போட்டு தான்பா தெரியும். அதுவும் ஒரே நாள்ளை 3 இடத்திலை 10,15 எண்டு போட்டவங்களும் பம்மிக்கொண்டு :rolleyes: இருக்கிறாங்கள்.. அதெல்லாம் ஒரு த்ரில்.

2004 தேர்தல். செத்தவங்கள்,வெளிநாட்டுக்கு போனவங்கள் எல்லாரும் :unsure: வோட்டு போட்டவங்கள் எண்டால் பாருங்கோ :lol:

நானும் இன்னொரு பொடியனும் தான் தெரிஞ்ச ஒரு ஆக்களின்ரை(அவங்கள் 2பேரும் வெளிநாட்டிலை) வோட்டை வாங்கிகொண்டு அதுவும் பேர் கொஞ்சம் நம்பகூடியமாதிரி இருக்க வேணும் என்று தேடி எடுத்து பக்கத்திலை இருக்கிற பள்ளி கூடத்துக்கு காலமை 9.30-10.00மணிக்கே போறம். இப்பவே பால்வடியுறமுகம் :icon_mrgreen::lol: அப்ப சொல்லவே வேணும்? :unsure: பெரிய ஆள் போலை இருக்க வேணும் என்று சாரத்தையும் கட்டிக்கொண்டு போய் வாசல்லை ஒரு நோட்டம் விட்டு பார்த்தால் பொலிஸை கண்டிட்டு கூட வந்தவன் நீ முதல் போட்டிட்டு வா எண்டு கழட்டி விட்டுட்டான். அம்மாளாச்சி நீ தான் காப்பாத்துனு :lol: சொல்லிட்டு உள்ளை போனால் படிப்பிச்ச ரீச்சர் சொல்லவே வேணும் பீலிங்ஸ்க்கு... நல்ல காலம் அவவும் கண்டும் காணதும் போல இருக்க வரிசைய இருந்த ஆக்களிலை ஒருத்தர் மை தடவி விட பக்கத்திலை இருந்தவா வோட் போடுற சீட் தர ஒரு ரெலிபோன்பூத் போல பெட்டியிலை போய் புள்ளடி போட்டிட்டு (பேனைய சுட்டிடுவாங்கள் எண்டு நூலிலை கட்டி நல்ல பாதுகாப்பு வேறை) மடிச்சு பெட்டியிலை போட்டிட்டு வந்தாப்போலை தான் நெஞ்சுக்குள்ளை தண்ணியே வந்திச்சுது :D

பிறகு அந்த மைய போக்காட்ட உள்ள திராவகம் எல்லாத்தையும் போட்டு மண்ணிலை இருந்து,பிரேக் ஓயில் வரை போட்டு தேய்ச்சு ஒரு மாதிரி போக்காட்டி போட்டு அடுத்த தாக்குதலுக்கு :rolleyes: கைக்கு அசின்...சீ ..பிசின் :lol: பூசிப்போட்டு போய் வதிரி,தம்பசிட்டியிலை போட்டது.

உங்களுக்கு எப்பிடியான பீலிங்ஸ்சுகள் வந்தது ஜவா ? பேந்து பிள்ளையள் வீடே கட்டிப்போடுவங்கள் . விளப்பமா எழுதும் . மற்றப்படி உம்மடை தேர்தல் முதல் அனுபவங்கள் ஒரு திறிலிங்காய் தான் இருக்கு . விரிவான அனுபவப் பகிர்வுக்கு மிக்க நன்றிகள் ஜீவா .

  • கருத்துக்கள உறவுகள்

தலைப்பு கொஞ்சம் கிழுகிழுப்பாக இருக்குது என்டு வந்ந்தாலும்.விடையம் சுவாரிசியமாக இருக்குது.நான் இங்கு இன்னும் வோட்டு குத்தேல்ல.ஆனால் நம்ம ஊரில நல்லதும் குத்தியிருக்கிறன்.கள்ளமாகவும் குத்தியிருக்கிறன்.மற்றும்படி உங்கள் கற்ப்பனை ஒப்பீடு ரசிக்க கூடியதாக .இருந்தது.பகிர்வுக்கு நன்றி.

நான் ஒரு தொழிலாளி என்பதால், எனது முதல் ஒட்டு தொழிலாளர் கட்சிக்கு பிரித்தானியாவில் போட்டேன். அன்றிலிருந்து எந்தத் தேர்தலையும் புறம்தள்ளுவதில்லை...

கோமகன், நீங்கள் பகிடியாகச் சொன்னீர்களா அல்லது உண்மையாகத் தான் குறிப்பிட்டீர்களா என்று தெரியவில்லை, ஆனால் எனக்கு முதல் தரம் ஓட்டுப் போட்டு விட்டு வெளியே வரும் போது ஒரு புத்துணர்வும், தொழிலாளர் கட்சி வெற்றியீட்டிய போது நாட்டில் மாற்றம் உண்டாக நமக்கும் ஒரு பங்கு உள்ளது என்பதையும் உணரக் கூடியதாக இருந்தது...

என்ரை தலைப்பு உங்களையெல்லாம் பாதிச்சுப் போட்டுதெண்டு என்னால உணரக்கூடியதாய் இருக்குது . என்னை மன்னிச்சுக் கொள்ளுங்கோ . இலங்கையில நடக்கிற தேர்தல் திருவிழா அல்லாரிப்புகள் , ஒவ்வொரு வாக்காளருக்கும் ஒரு நாள் ராசாவுக்கான மரியாதைகள் எல்லாத்தையும் ஒப்பிடேக்கை , இங்கை நடக்கிறது ஓரு நிகழ்ச்சி . உங்கடை அனுபவங்களுக்கு மிக்க நன்றிகள் சஜீவன் .

  • தொடங்கியவர்

நான் ஒரு தொழிலாளி என்பதால், எனது முதல் ஒட்டு தொழிலாளர் கட்சிக்கு பிரித்தானியாவில் போட்டேன். அன்றிலிருந்து எந்தத் தேர்தலையும் புறம்தள்ளுவதில்லை...

கோமகன், நீங்கள் பகிடியாகச் சொன்னீர்களா அல்லது உண்மையாகத் தான் குறிப்பிட்டீர்களா என்று தெரியவில்லை, ஆனால் எனக்கு முதல் தரம் ஓட்டுப் போட்டு விட்டு வெளியே வரும் போது ஒரு புத்துணர்வும், தொழிலாளர் கட்சி வெற்றியீட்டிய போது நாட்டில் மாற்றம் உண்டாக நமக்கும் ஒரு பங்கு உள்ளது என்பதையும் உணரக் கூடியதாக இருந்தது...

முதலில் உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றிகள் குட்டி . நான் கதை எழுதும்பொழுதே ஆரம்பத்தில் தெள்ளத்தெளிவாகவே இது நகைச்சுவை கலந்தது என்று குறிப்பிட்டிருந்தேன் . நான் வாக்களித்து விட்டு வெளியே வரும்பொழுது நீங்கள் அனுபவித்த மன உணர்வையே உணர்ந்தேன் . அதேவேளை எனது தாய்மண்ணுக்கு அன்னியனான , சுற்றுலாப் பயணயாகி , எனக்கும் எனது மூலப்பிறப்பற்கும் சற்றேனும் பொருந்தாத ஒரு நாட்டிற்குக் குடிமகனாகி , எனது முதல் தேர்தலில் வாக்களித்தது சொல்லெணா மனவலியைத் தந்தது வேறு விடையம் .

  • கருத்துக்கள உறவுகள்

தலைப்பைப் பார்த்திட்டு நான் ஏதோ அதுவாக்கும் எண்டு அரக்கப்பரக்க விழுந்தடிச்சுத் திரியைத் வாசித்தால்..... ஆனாலும் சூப்பர் அனுபவம்தான் கோமகன் அண்ணா...

உதுக்குத்தான் சொல்றது தம்பி மேற்பார்வையில போப்படாதெண்டு.... :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஊரிலும் தவறாமல் வாக்களித்துவிடுவேன். அதேபோல் இங்கும் தவறாமல் வாக்களிப்பது.வாக்களிக்கும் பாடசாலை வீட்டின் அருகிலேயே இருப்பதால் மிகவும் வசதி!

இந்த தேர்தலில் முதல் ஞாயிறு வெளியூரில் நின்றதால் போட முடியவில்லை. சென்ற ஞாயிறு வாக்களித்தேன். :D

  • கருத்துக்கள உறவுகள்

அநேகமாக வாக்களிப்பு நேரங்களில், வாக்களிப்பு நிலையங்களில் பணி புரிவதுண்டு!

எவ்வளவு இலகுவாக வாக்காளர்களை, மாற்றிவிட முடியும் என்பதைப் பல தடவைகள் அவதானித்திருக்கின்றேன்!

பல இனங்கள், பல மொழிகள் பேசும் மக்களிடையே வேலை செய்யும் அனுபவம் மிகவும் வித்தியாசமானது!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.