Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முஸ்லீம்கள் - தனித்துவம் மிக்க ஒரு சமூகம்

Featured Replies

  • தொடங்கியவர்

தமிழீழம் என்று வருகின்ற போது தனி அலகு கேட்பதும், மாகாண சபைகளைக் கொண்ட ஐக்கிய இலங்கை என்று வருகின்ற போது தனி அலகு கோராமால் இருப்பதும் முஸ்லீம்களின் நிலைப்பாடாக இருக்கிறது என்பதே என்னுடைய புரிதல் ஆகும்.

முஸ்லீம்களின் நிலைப்பாடு இதுவாக இருக்கின்ற நிலையில் அது ஆச்சரியத்திற்கு உரிய ஒன்று அல்ல.

முஸ்லீம்கள் தமிழர்களோடும் சிங்களவர்களோடு பல கசப்பான அனுபவங்களைப் பெற்றிருக்கிறார்கள். சிங்களவர்களோடு பல கலவரங்களைக் கண்டிருக்கிறார்கள். அப்பொழுது தமிழ்த் தலைவர்கள் சிங்களவர்களுக்கு ஆதரவு அளித்ததையும் பார்த்திருக்கிறார்கள்.

கடைசியாக நடந்த தமிழீழப் போராட்டத்திலும் நிறைய இழப்புகளை சந்தித்திருக்கிறார்கள். அவர்களுக்கு தமிழர்கள் பற்றியும் சிங்களவர்கள் பற்றிய பெருத்த நம்பிக்கையீனம் இருக்கின்றது.

ஐக்கியப்பட்ட இலங்கையில் சந்தர்ப்பத்திற்கு ஏற்ற அரசியல் செய்யவும், நடுவால் ஓடி தம்மை தக்க வைத்து முன்னேறவும் அவர்களுக்கு நிறையவே வாய்ப்பு இருக்கிறது. கிழக்கு மாகாணத்தில் ஆட்சி அமைக்கின்ற பலமு ம்அவர்களிடம் இருக்கிறது.

ஆனால் தமிழீழம் அமைந்தால் அவர்கள் மேலாதிக்க மனப்பான்மை மிக்க தமிழர்கள் மத்தியில் சிறுபான்மையினராக வாழ வேண்டி வரும். ஏற்கனவே நடந்த சம்பவங்களால் அது குறித்து அவர்கள் அச்சப்படுகிறார்கள்.

  • Replies 153
  • Views 10.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
:o :o :o
  • தொடங்கியவர்

அதன் அடிப்படையில் அவர்கள் தமிழீழத்தில் தனி அலகு கேட்டார்கள். பெரும்பான்மை இனத்தால் அச்சுறுத்தலை எதிர்நோக்குகின்ற ஒரு சிறுபான்மை சமூகம் என்ற வகையில் அதற்கு அவர்களுக்கான உரிமை இருக்கவே செய்கிறது.

இன்றைக்கு தமிழீழம் வெகுதொலைவுக்கு சென்று விட்டது. வடக்கும் கிழக்கும் பிரிக்கப்பட்டு விட்டது. சிங்களம் தமிழர் மீதும் முஸ்லீம்கள் மீதும் தனது மேலாதிக்க கரங்களை பரப்பி வருகின்றது.

இந்த நிலையில் தமிழர்கள் நட்புரீதியான சமிக்ஞைகளை முஸ்லீம்களுக்கு அனுப்ப வேண்டாமா? தம்புள்ளவிலும் காலியிலும் முஸ்லீம்களுக்கு ஆதரவாக நிற்க வேண்டாமா?

வேண்டும். அவர்கள் எங்களுக்கு வேண்டும். தமிழீழத்தில் நாங்கள் பெரும்பான்மை சமூகம். ஆகவே நாங்கள்தான் அவர்களுக்கு எங்களைப் பற்றி உள்ள அச்சத்தை போக்க வேண்டும்.

அதற்கு நாம் அவர்களை தனித்துவம் மிக்க சமூகமாக முதலில் ஏற்றுக் கொள்ள வேண்டும். பேசுவதற்கு இதுவே முதற்படி

எந்த கருத்தையும் சபேசன் சிந்தித்து எழுதவில்லை என்பதே. எல்லாமே யரோதான் எழுதுவது. இதில் அவர்மட்டுமல்ல, சபேசனுக்காக எழுதிக்கொடுப்பவரும் குழம்புகிறார் என்று வைத்துகொள்ளவும் முடியும்.

உங்கள் சந்தேகத்திற்கு சிலவேளை இத்திரி கொஞ்சம் விளக்கம் தரலாம்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=103683&st=0

Edited by காதல்

  • கருத்துக்கள உறவுகள்

"தேசிய இனப்பிரச்சினையும் முஸ்லிம் மக்களும்" என்று 83 இல் கவிஞர் எழுதிய புத்தகம் நூலகத்தில் கிடைக்கின்றது!

http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%87%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D

மேலும் உயிர்ப்பு சஞ்சிகையின் ஒரு இதழில் நீண்ட கட்டுரை உள்ளது..

http://noolaham.net/project/24/2313/2313.pdf

விவாதங்களுக்கு இவற்றைப் படிப்பது துணைபுரியும்.. விதண்டவாதங்களுக்கு எதையுமே படிக்கத்தேவையில்லை :lol:

  • கருத்துக்கள உறவுகள்

சபேசன் முதலில் தமிழீழம் கிடைப்பதற்கான எழுத்துப்பணிகளை

மீண்டும் ஆரம்பியுங்கள். பின்னர் இஸ்லாமியத் தமிழர்களின்

தனித்துவத்தைப் பற்றி அலசுவோம்

  • கருத்துக்கள உறவுகள்

"தேசிய இனப்பிரச்சினையும் முஸ்லிம் மக்களும்" என்று 83 இல் கவிஞர் எழுதிய புத்தகம் நூலகத்தில் கிடைக்கின்றது!

http://www.noolaham....ஸ்லிம்_மக்களும்

மேலும் உயிர்ப்பு சஞ்சிகையின் ஒரு இதழில் நீண்ட கட்டுரை உள்ளது..

http://noolaham.net/...4/2313/2313.pdf

விவாதங்களுக்கு இவற்றைப் படிப்பது துணைபுரியும்.. விதண்டவாதங்களுக்கு எதையுமே படிக்கத்தேவையில்லை :lol:

நான் இவற்றை வாசிக்கவில்லை ஆனால் 83 ஆம் ஆண்டு கவிஞர் எழுதிய புத்தகம் கிட்டதட்ட எழுதி 30 ஆண்டுகள் ஆகப் போற நிலையில் பயன் படுமா?..."தலையிடியும்,காய்ச்சலும் வந்தவனுக்குத் தான் தெரியும்" <_<

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் வாழும் இஸ்லாமியர்களுக்குத் தனித்துவமான் தேசிய அடையாளங்கள்

எதுவுமில்லை. இலங்கைத்தமிழர்கள் என்றவகையில் அவர்களுக்கு ஈழத்தில் வாழும் உரிமை உண்டு.

அவர்கள் இஸ்லாமிய சமயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களது மதம் சார்ந்த

அனைத்து உரிமைகளும் அவர்களுக்கு அளிக்கப்பட்டுச் சகோதரர்களாக இந்து மற்றும்

கிறிஸ்தவத் தமிழர்களுடன் சேர்ந்து வாழ்வதற்கான வழிகள் அமைத்துக் கொடுக்கப்படும்.

அண்ணா,

இப்ப சபேசன் அண்ணா சொல்கிறார். தமிழீழம் கிடைத்தால் அதிலிருந்து முஸ்லிம்களுக்கு தனியலகு பிரித்துக்கொடுக்க வேண்டுமாம்...

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணா,

இப்ப சபேசன் அண்ணா சொல்கிறார். தமிழீழம் கிடைத்தால் அதிலிருந்து முஸ்லிம்களுக்கு தனியலகு பிரித்துக்கொடுக்க வேண்டுமாம்...

ஈழத்திலும் ஒரு பாண்டிச்சேரி வேண்டும் என்கின்றார்.

சபேசன், அரைத்தமாவை அரைப்பதைவிட, திரியை ஆரம்பித்த நோக்கம் தொடங்கி மற்றயவை எதுவாவதற்கோ விளக்கமோ, ஆதாரமோ தராமல், விவாதத்திற்கு வெளியே நின்று, தான் தனது விருப்பங்களை சொல்ல முயல்கிறார். நான் தொடர்ந்து சபேசனிடமிருந்து அவர் கூறுவனவற்றுக்கு விளக்கம் பெறமுயல்வதை மற்றைய உறவுகள் கண்டிக்க முன் நானும் சொல்ல விரும்பும் ஒன்றிரண்டை சொல்லிவிட்டு இனி இந்த திரியை விட்டு விலகப் போகிறேன். இவர்கள் இங்கே முயல்வது சிங்களத்தின் நிகழ்ச்சி நிரலை நடை முறைப்படுத்தவே. வலிந்த வாதாட்டத்துடன் வந்திறங்கி, புது திரியை தொடக்கி, சொல்லவந்த கருத்துக்களுக்கு மற்றவர்களின் துணையை காணாமல் பரதவித்து, பொல்லைக்கொடுத்து அடிவாங்குகிறோமா என்று தமக்குள் தாம் பயப்படும் இந்த மெலிந்த விவாதிகளை எல்லோரும் சேர்ந்து “நாயிற்கு அடித்து பல்லிளிபார்ப்பது” போல் காணப்படும் கூட்டத்தில் நிற்க நான் விரும்பவில்லை.

தம்புள்ள பள்ளிவாசல் உடைப்புக்கு உங்களில் பலர் இந்த தளத்தில் எதிர்ப்பு காட்டினீர்கள் (அது மனித முறை- சமயப்பிரிவு மனத்தில் இருக்கலாம்; இல்லாமல் இருக்கலாம்- ஆனால் எதிர்ப்பது கட்டாயமானது) அது வந்தாரை வாழவைக்கும் இளிச்சவாய்த்தமிழரின் தொன்று தொட்ட பழக்கம். நாம் அதை செய்யாவிட்டிருந்தால் நாம் தமிழர் அல்ல. நாம் எமக்கு தமிழர் என்ற பெயரை விட்டு விட்டு இன்னொரு பெயர் கண்டு பிடித்திருக்க வேண்டும். (இதனால்த்தான் இலங்கை வந்த அரேபிய முஸ்லீம் வியாபாரிகள் தமிழரிடம் பெண் எடுத்தார்கள்) எனவே அதிலிருந்து யாழ் விலகியிருக்க முடியாது. தம்புள்ள விவகாரத்தில் நா.க.அ., உலகத் தமிழர் பேரவை, கூட்டமைப்பு, மலைய மக்கள் முன்னனி எல்லோருமே ஒரே மொழியில் கதைத்து தமிழர்கள் ஜனநாயத்தில் அசையாத நம்பிக்கை வைத்துள்ள இனம் என்று ஆணித்தரமாக நிறுவியிருந்தார்கள். ஆனால் ரிசாத் பதியுதின் மட்டும் அதைப்பற்றி எதுவும் பேசவில்லை. அத்தோடு இந்த களத்தில் இலங்கை முஸ்லீம்களுடன் இணக்க அரசியல் போதிப்போரும் இதைப் பற்றி சட்டை செய்யவில்லை. ஏன் எனில் அது அவர்களின் சிங்கள முதலாளிகளுக்கு ஏற்புடையதாக இருக்காது என்பதினாலேயே. இப்போது சிங்கள அரசுமீது முஸ்லீம் நாடுகளின் எதிர்ப்பு அதிகமாகிறது. இதை திசை திருப்பத்தான் மன்னர் ஆயர்மீது பதியுதீன் தாக்குதல் நடத்தினார். இது அவருக்கு சிங்கள மேலிடத்திலிருந்து கிடைத்த ஆணை என்றேதான் சொல்ல வேண்டும். ஆயர் தனது 146,000 கணக்கை சிங்கள இ(கு)ணக்கப்பாடு ஆணக்குழுவின் முன் கறுப்பு-வெள்ளையாக நிறுவி ஒருஆண்டு கழிந்துவிட்டது. வேறு எதுவும் பதியுதினுக்கு கிடைக்காததால்தான் அவர் அந்த பழைய கதையை தூசி தட்டி ஆயரை தாக்கி தனக்கு தரப்பட்ட ஆணையை நிறைவேற்றினார். அதையேதான் யாழிலும் செய்கிறார்கள். தொடர்பில்லாமல் திரிகள் தொடங்குவதும் முஸ்லீம் – தமிழ் பிரிவினை கற்பித்து ஆப்பிறுக்கவும் இவர்களுக்கு கிடைத்த ஆணைகளைத்தான் நிறை வேற்றுகிறார்கள்.

முஸ்லீம் பெண்கள் மீது ஆரம்பமான மர்மமனித சேட்டைகளை கமீது, பௌசி போன்றோர் மறுத்தார்கள். ஆனால் மனோகனேசன், கூட்டமைப்பினர் போன்றோர்தான் பாராளுமன்றம் வரை எடுத்து சென்றார்கள். அது வந்து தேவானந்த, கருணா போன்று நடந்து கொள்ளும் தரங்கெட்ட முஸ்லீம் மந்திரிகள் சிங்கள அரசின் நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றும் பண்பு. இதை பின்வருமாறு விளங்கப்படுத்துவது பொருந்தாது. “ஆங்கிலேயரின் அடிகளைவருடி பதவிகளை தமிழர்கள் வாங்கினார்கள். ஆனால் அந்த கலையை இப்போ மறந்து போய்விட்டார்கள். அதனால்தான் சிங்கள முதலாளிகளிடம் பாவிக்கமுடியாமல் தடுமாறுகிறார்கள். அதை முஸ்லீம் மந்திரிகள் இரகசியமாக படித்துவிட்டார்கள். நன்றாக சிங்கள முதலாளிகளிடம் பாவிக்கிறார்கள். ஆனல் அது தமிழ் முதலாளிகளாக வந்தால் முஸ்லீம்களும் அந்தகலையை மறந்து விடுவார்கள். திடுதிடுப்பென தமிழ் மேலாண்மையை உணர்ந்து மனம் உடைந்து போகிறார்கள்”.

தனிநாடு என்பது த.வி.கூ வட்டுக்கோட்டை தீர்மானத்தின்போது நிறைவேற்றி, தேர்தலில் பரீட்சிக்கப்பட்ட தமிழரின் ஆணை. தனி அலகென்பது சிங்கள அரசில் அங்கம் வகித்த முஸ்லீம் மந்திரிகளால், சிங்கள அரசால் பேச்சுவார்த்தைகளை குழப்பும் படி தூண்டபட்ட போது கண்டுபிடிக்கபட்ட குழப்ப யுக்தி. எந்த காலத்திலும், எந்த தமிழ் கட்சியும் இலங்கை அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் போது தமிழீழம் சாத்தியமாகிற சந்தர்பம் இருக்கவில்லை. தலைவர், கமீதுடன் நடத்திய பேச்சுவார்த்தைகளில் தனி அலகு வாக்குறுதிகள் வழங்கப்படவில்லை. எனவே சபேசனின், "தமீழீழம் சாத்தியமாக இருந்ததால் தனி அலகு தேவைப்பட்ட"தாக சொல்லும் கதை சுத்த பொய். இந்த தனி அலகில் மறைந்திருக்கும் இன்னொரு ஊத்தைப்பக்கம், சிங்களவர்களுடன் இருக்கும் போது அந்த மோடையாக்களை ஏமாற்றி தாம் முன்னே சென்றுவிடலாமென்றும், ஆனால் தமிழரின் ஜனநாயக ஆட்சியில், வெள்ளைக்கரர் காலத்தில் நிரூபிக்கபட்ட தமிழரின் திறமைகளுடன் தாம் போட்டியிட முடியாது என்றும் சில கோளை மந்திரிகள் பயப்பட்டதனாலேயே அந்த அலகுக் கதை பிறந்தது. இதை சபேசனின் “சிங்களவரிடமிருந்தும், தமிழரிடமிருந்தும் முஸ்லீம்களுக்கு இடைஞ்சல்கள் வருகிறது, ஆனால் தமிழரை தான் மேலாண்மை பயன் படுத்துவதாக குற்றம் சாட்டலாம். சிங்களரின் கதை வரும் போது மட்டும் முஸ்லீம்கள் தமிழருக்கும், சிங்களவருக்குமிடையில் புகுந்து விளையாடி விடுவார்கள்” என்ற விளக்கத்தால் விளங்கப் படுத்த முடியாது. தயவு செய்து, 150 ஆண்டுகள் தாம் தமிழரை ஆண்டு, 60 ஆண்டுகளுக்கு முன்னர் கைவிட்டு வந்த வெள்ளைக்காரின் பிரபல பத்திரிகை அகதிகளாக இங்கிலாந்தில் தஞ்சம் புகுந்த தமிழரை பற்றி “Tamil Tigers in Britain Burning less bright?” என்று கட்டுரையில் எழுதியிருப்பதை படித்துப் பாருங்கள். அதில் நிச்சயமாக தமிழர் தம் கால்களில் விழுந்து பதவி வாங்கியவர்கள் என்பது போல குறிப்பிட்டில்லை. “That the struggle is rooted in geography, not religion, is one reason. Another is that young Sri Lankans are too successful to need to march or plot. They are more likely than other Asians to be employed (though they earn slightly less than Indians) and Sri Lankan children do better at school than any ethnic group bar the Chinese. Intensive extracurricular learning and well-educated parents (especially the mothers) help to explain it, suggests Jill Rutter of IPPR, a think-tank. Branding helps too: teachers may label Somali refugees damaged basket-cases, but Tamil children, sometimes no less traumatised, are stereotyped as industrious maths geeks. Labels can be self-fulfilling. Popular actresses such as Amara Karan are further signs of the community's success” http://www.economist.com/node/11546741

முஸ்லீம்கள் தாக்கப்பட்டால் இவர்கள் இங்கே முதலாக செய்தி இணைத்து கருத்துகளை தொடக்கி வைப்பது கிடையாது. இங்கே முஸ்லீம்களின் அநுதாபிகள் போல நடிப்பது தமது சுயநலத்துக்காகவே. நான் சொல்லத்தக்கது, முஸ்லீம்களின்மீது உண்மையான அக்கறை உள்ளவர்கள், இங்கே எழுதுப்படுபவற்றை பற்றி உங்கள் மனத்தில் பெரிது படுத்தாதீர்கள். இது கருத்துக்களம். கோழி முட்டி குஞ்சு முடம் ஆகிவிடாது. விவாதிப்பதால் போலிகள் அடையாளம் காணப்பட்டு இலங்கை முஸ்லீம்களுக்கும் நல்ல தீர்வு பிறக்கும். இங்கே கூட்டமைப்பை, நா,க,அரசை கண்டிப்போர் பலரும் இந்த கட்சிகளின் பாதைகளில் தான் பயணிக்கிறார்கள். இரகசிய வாக்களிப்புகளில் கூட இவர்கள் அவர்களின் ஆதரவாளர்களே. பேச்சுவார்த்களின் போது வரத்தக்க தீர்வில் கூட்டமைப்புதான் பிரதான பங்காளி. தீர்வில், மலைநாட்டு தமிழர், வட-கிழக்கு தமிழர் எல்லோரின் பதுகாப்பும் நிச்சயக்கப்படும். எப்படி வடக்கு-கிழக்கு சாதிப்பிரிவினைகளுக்கு ஜனநாயக தீர்வு வழங்கப்படுமோ அதே போல் வடக்கு-கிழக்கு முஸ்லீம்கள் தங்கள் மதத்தை பேண நிச்சயமாக கூட்டமைப்பு அதற்கு தேவையானவர்களுடன் தேவையானபடி பேசித்தான் முடிவெடுக்கும். இந்த ஆப்பிறுக்கல்களை நடத்தி தங்களால் மட்டும்தான் சீண்டமுடியும் என்று காட்டப்பார்போர், எற்கனவே அரசியல் தீர்வில் தங்களால் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தமுடியாது என்று கண்டு குழம்பிப் போய் இருப்பவர்களே.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நிலையில் தமிழர்கள் நட்புரீதியான சமிக்ஞைகளை முஸ்லீம்களுக்கு அனுப்ப வேண்டாமா? தம்புள்ளவிலும் காலியிலும் முஸ்லீம்களுக்கு ஆதரவாக நிற்க வேண்டாமா?

நான் நினைக்கிறேன் முஸ்லிம்களுக்கு தமிழர்கள் நட்பு ரீதியான சமிக்ஞை காட்டுவதிலும் பார்க்க சிங்களவர்களுக்கு நட்புரீதியான சமிக்ஞை காட்டி ஒன்றுபட்ட சிறிலங்காவில் ஐக்கியமாக வாழவதுதான் சிறந்தது .சர்வதேசமும் அதைதான் விரும்புகின்றது.

அவர்கள் எங்களுக்கு வேண்டும். தமிழீழத்தில் நாங்கள் பெரும்பான்மை சமூகம். ஆகவே நாங்கள்தான் அவர்களுக்கு எங்களைப் பற்றி உள்ள அச்சத்தை போக்க வேண்டும்.

எல்லாத் தமிழனும் முஸ்லிமாக மாறி உருவ வழிபாட்டை விட்டால் அவர்களுக்கு எங்கள் மீது இருக்கும் அச்சம் நிச்சயமாக நீங்கும்

  • கருத்துக்கள உறவுகள்

நான் இவற்றை வாசிக்கவில்லை ஆனால் 83 ஆம் ஆண்டு கவிஞர் எழுதிய புத்தகம் கிட்டதட்ட எழுதி 30 ஆண்டுகள் ஆகப் போற நிலையில் பயன் படுமா?..."தலையிடியும்,காய்ச்சலும் வந்தவனுக்குத் தான் தெரியும்" <_<

30 ஆண்டுகள்தானே கழிந்தன.. எதையும் படிக்காமலேயே உதறித் தள்ளும் படிக்காத மேதைகளாக இருப்பதனால்தான் நாங்கள் மீண்டும் மீண்டும் சில்லுகளை உருட்டுவது எப்படி என்று ஆராய்ந்துகொண்டிருக்கின்றோம் :icon_mrgreen:

அண்ணே

நாங்க இங்கால ஒரு 100 பேர் காலேலூயா காறங்கள் இருக்கிறம். எங்களுக்கும் எதாவது போட்டு தாங்கோ :D :D

நாங்களும் இனி ஒரு தனித்துவமான இனம் தான் :D

ஓஓஓ யீசசு அல்லா எம்பெருமானே

முஸ்லீம்,தமிழர் பிர‌ச்ச‌னை 83 ம் ஆண்டுக்கு முதல் இருந்ததோ எனக்கு தெரியாது ஆனால் அதற்குப் பிறகு தான் தீவிர‌மானது...இர‌வில் முஸ்லீம்கள் வெட்ட வருவான் என்ட‌ பயத்தில் தலை மாட்டில கத்தியையும்,தூளையும் வச்சிட்டு படுத்த எங்களால் முஸ்லீம் மக்களோடு சேர்ந்து வாழ முடியாது :) ...ஈழம் கிடைத்தால் பங்கும் கொடுக்க முடியாது :lol: ...முஸ்லீம்களைப் பார்க்க சிங்களவன் மேல்...நேருக்கு நேர் எதிரி <_<

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணே

நாங்க இங்கால ஒரு 100 பேர் காலேலூயா காறங்கள் இருக்கிறம். எங்களுக்கும் எதாவது போட்டு தாங்கோ :D :D

நாங்களும் இனி ஒரு தனித்துவமான இனம் தான் :D

ஓஓஓ யீசசு அல்லா எம்பெருமானே

கேட்டாலும் கேட்பியள்.....உங்களை நம்பேலாது :D எரியிற வீட்டிலை புடுங்கினது லாபம் எண்டு புத்தகத்தோடை கதவு தட்டுற ஆக்களெல்லே :lol:

சபேசன் முதலில் தமிழீழம் கிடைப்பதற்கான எழுத்துப்பணிகளை

மீண்டும் ஆரம்பியுங்கள். பின்னர் இஸ்லாமியத் தமிழர்களின்

தனித்துவத்தைப் பற்றி அலசுவோம்

வழிமொழிகிறேன்.

சபேசன்,

1.

எனக்கு முஸ்லிம்கள் ஒரு தேசிய இனம் என்பதிலோ அல்லது அவர்களுக்கும் தமிழர்களுக்கு நிகரான அரசியல் ரீதியான உரிமைகள் அவசியம் என்பதிலோ மாற்றுக் கருத்து இல்லை

எந்த இனமும் சேர்ந்து வாழ்வதற்கு அரசியல் ரீதியான பாதுகாப்பும், அரசியல் சட்டங்களில் அதற்கான ஏற்பாடுகளும் இருத்தல் அவசியம்.

இலங்கையைப் பொறுத்தவரைக்கும் தமிழ் முஸ்லிம் இனங்களுக்கு இவை இல்லை.

இவற்றை நாடி ஒரு இனமான தமிழ் இனம் போராடிக் கொண்டிருக்கும் போது, அதற்கான தார்மீக ஆதரவை வழங்காமல் வெட்டி ஓடி அரசியல் செய்தால் தம்மை பாதுக்காக்கலாம் என்ற நோக்கில் மட்டுமே சிந்தித்து செயலாற்றியது அனைத்து முஸ்லிம் தலமைகளும் . இடையில் வந்த அஸ்ரப்பும் இதனைத் தான் செய்தார். பின் வந்த ஹக்கீமும் இதனைத் தான் செய்கின்றார்.

ஈழத்தில் சிறுபான்மை இனங்கள் சுதந்திரமாக வாழ்வதற்கு நிச்சயம் தமிழ் முஸ்லிம் இனங்களுக்குடையிலான ஒற்றுமை காலத்தால் ஏற்படுத்தப் பட்ட முன் நிபந்தனையாக இருந்தாலும், அதை நோக்கி எந்த ஒரு முஸ்லிம் தலைமைகளும் நகர்வதற்கான ஒரு சிறு துரும்பளவு முயற்சிகளையும் எடுக்காது இன்று வரைக்கும் சிங்கள இனத்துக்கான நிபந்தனை அற்ற ஆதரவுகளைத் தான் தந்து கொண்டு இருக்கின்றனர்.

பின்னை நாட்களில் தமிழ் மக்களின் விடுதலை படையான புலிகள் தமிழ் முஸ்லிம் ஒற்றுமை தொடர்பாக பல முன்முயற்சிகளை எடுக்க தொடங்கிய காலகட்டங்களிலும் கூட முஸ்லிம் தலைமைகள் அவற்றை உதாசீனப்படுத்தியே வந்திருந்தன. தன் கண் முன்னே நிகழ்ந்த மாபெரும் தமிழ் இன படுகொலையை நிகழ்த்தியவர்களைக் கூட போர்க் குற்றங்களில் இருந்து பாதுக்காக்கவே இன்றும் முஸ்லிம் தலைமைகள் (அது கிழக்கு மாகாண தலைமைகளாக இருந்தாலென்ன தெற்கு சார்ந்த தலைமைகளாக இருந்தால் என்ன) முன்னிற்கின்றன.

இவ்வாறு முஸ்லிம்களின் அனைத்து செயல்பாடுகளும் தமிழர்களுக்கு முற்றிலும் எதிராக இருக்கும் காலகட்டத்தில் தமிழ் மக்களிடம் வந்து முஸ்லிம்களை அரவணைக்கச் சொல்வது ஏற்புடையது இல்லை. போராடி தோற்று இனி இழப்பதற்கு ஒன்றுமில்லை என்று இருக்கும் ஒரு இனத்திடம் வந்து மீண்டும் மீண்டும் விட்டுக் கொடுங்கள் என்பதும், அரவணைத்துப் போங்கள் என்பதும் கூட யதார்த்த பூர்வமான ஒரு விடயம் இல்லை. இனி இரு இனமும் ஒற்றுமையாக போகவேண்டும் எனில் அதற்கான முன் முயற்சி முஸ்லிம் தரப்புகளிடம் இருந்து தான் ஆரம்பிக்க வேண்டும். தமிழர் தரப்புகளின் பக்கத்தில் இருந்து அல்ல

2.

யாழ் கள உறவுகளாயினும் சரி, பொதுவாக எந்த தமிழராக இருந்தாலும் சரி முஸ்லிம்கள் தொடர்பாக மிகுந்த வெறுப்பைக் காட்டுவதற்கு காரணம் முஸ்லிம்களின் தொடர்ச்சியான தமிழர் விரோதப் போக்குத்தான். விடுதலைப் புலிகள் முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்தப்பட்ட படுகொலைகளால் முஸ்லிம்கள் தமிழர்களை வெறுக்கின்ற மாதிரித்தான் முஸ்லிம் ஊர்காவல் படைகளாலும், முஸ்லிம் கிராமவாசிகளாலும் தமிழர்களும் மிக மோசமாக படுகொலை செய்யப்பட்டதனால் முஸ்லிம்களை தமிழர்கள் வெறுக்கின்றனர். இவற்றை விட முஸ்லிம் தலமைகளின் தொடர்ச்சியான தமிழர் விரோதப் போக்கினாலும் இந்த வெறுப்பு தணியாமல் தொடர்கின்றது. யாழ்ப்பாணத்திலும் மன்னாரிலும் மிகவும் முஸ்லிம்களுடன் மிகவும் ஒற்றுமையாக வாழ்ந்த தமிழர்கள் தான் இன்று அவர்களை வெறுப்பதில் முன்னிற்கின்றனர்.

இந்த வெறுப்பு இலங்கை அரசின் போர்க்குற்றங்களை மறைக்க முஸ்லிம்கள் எடுத்துக் கொண்டிருக்கும் முயற்சிகளினால் அதீத கட்டத்தை தாண்டி விட்டது

முஸ்லிம்கள் தமிழர்கள் உரிமை பற்றி பேச முனையும் நீங்களும் சரி, முஸ்லிம்களின் பிரதிநிதியாக தனக்குள் கற்பனை செய்து கொண்டிருக்கும் வ.ஐ,ச ஜெயபாலனானாலும் சரி (ஆனால் முஸ்லிம்கள் அவரை ஏற்பதில்லை என்பது இன்னொரு விடயம்) , முஸ்லிம்கள் செய்த படுகொலைகளையும், அரசியல் ரீதியான தவறுகளையும் ஏன் ஒளிவு மறைவின்றி விமர்சிப்பதில்லை? எப்போதுமே ஒரு தரப்பின் பிழைகளை மட்டுமே சொல்லிக் கொண்டிருப்பதன் அவசியம் என்ன? முஸ்லிம் தரப்பில் இருந்து தமிழ் முஸ்லிம் உறவுகள் மேம்படைய முன்னெடுக்கும் ஒரு செயலையாயினும் கூற முடிகின்றதா உங்களால்? அல்லது முஸ்லிம் அரசியல் ஆய்வாளர்கள், பத்திரிகையாளர்கள் (பெளசர் முதற் கொண்டு ..) தமிழ் முஸ்லிம் ஒற்றுமை பற்றி முஸ்லிம்களுக்கு எடுத்துச் சொல்லும் ஒரு முயற்சியையாவது தர முடிகின்றதா உங்களால்

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

எனது கருத்தை சொல்லலாம் எண்டு இருந்தேன், நிழலி அண்ணர் அதே கருத்தை சொல்லி விட்டார். எனது தனிப்பட்ட பார்வைகள்.

1) முஸ்லீம்களை வடக்கிலிருந்து அகற்றியது சரி என கூறவில்லை, ஆனால் எவ்வளவு காலத்துக்குத் தான் அதையே சாக்காக கூறி தமிழர் தரப்புடன் முரண்பட முடியும். த.வி.பு கூட சமாதான பேச்சு வார்த்தைகளின் போது முஸ்லீம் தலைவர்களை அழைத்ததன் மூலம் தமது நல்லெண்ணத்தை வெளிப் படுத்தி இருந்தார்கள். ஒரு கதைக்கு, முஸ்லீம்கள் தமிழர்களின் இடத்திலும், தமிழர்கள் முஸ்லீம்களின் இடத்திலும் இருந்து அவர்கள் பேச்சு வார்த்தைக்கு சென்றால் நிச்சயமாக தமிழர் தரப்பை அழைப்பது பற்றி யோசிக்கக் கூட மாட்டார்கள்.

முஸ்லீம்கள் பொதுவாகவே தங்களது வியாபாரத்துக்கு, குடும்பத்துக்கு, மதத்துக்கு, இனத்துக்கு ஏதாவது நன்மை வந்தால் மட்டுமே ஏதாவது செயலில் செய்வார்கள். தற்போதைக்கு அவர்களுக்கு தமிழர் தரப்பால் ஏதும் நன்மை வரப்போவதில்லை அதனால் அவர்கள் எங்களுக்கு எதுவித உதவிகளையும் செய்யப் போவதில்லை.

2) முஸ்லீம் அரசியல் வாதிகள் தமிழர் தரப்பை எதிரிகளாகக் காட்டித்தான் அரசியல் செய்தார்கள், செய்கிறார்கள். இவர்களுக்கு தமிழர் தரப்பு பலதரம் பாசக் கரம் நீட்டி விட்டது, பந்து இப்போது அவர்களிடம் தான் உள்ளது. எனவே ஆக்க பூர்வமாக ஏதாவது செய்ய வேண்டியது அவர்களில் தான் தங்கியுள்ளது.

3) முடிவாக முஸ்லீம்களுக்கு படியளக்கும் நிலையில் தமிழர் தரப்பு தற்போது இல்லை என்றே கருதுகிறேன் (நாங்க என்ன வச்சுக் கொண்டா வஞ்சகம் செய்யுறம்?)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
  • கருத்துக்கள உறவுகள்

முதலாவது முஸ்லிம்கள் தமக்கென ஒரு சரியான தலைமையை உருவாக்கி யாருடன் வாழப்போகிறார்கள் என கூறட்டும்.அவர்கள் சிங்கள மக்களுடன் தான் வாழ்வார்கள் என்பது வெள்ளிடைமலை.கடந்த 30 ஆண்டு தமிழர் போராட்டத்திலும் சரி அதற்கு முன்னரான தமிழர் விடுதலைக்கூட்டணியின் அகிம்சை போராட்டத்திலும் சரி விரல்விட்டு எண்ணக்கூடிய முஸ்லிம்களே பங்கேற்றனர்.ஏன் அவர்கள் முழுமையாக பங்கேற்கவில்லை ஒரு சிறுபான்மை இனமாக இருந்தும் என சிந்திக்க வேண்டும்.தலைவரை வெளிநாட்டுக்காரர் சந்திக்கிறார்கள் என்றவுடன் பாய்ந்தடித்து ஹக்கீம் அங்கு சென்று பேசுகிறார்.பின்னர் ஜெனிவாவில் தமக்கும் பேச்சுவார்த்தைக்கு ஓரிடம் தரவேண்டும் என்கிறார்கள்.நோகாமல் நுங்கு குடிப்பதில் வல்லவர்கள் என்பதை இது காட்டவில்லையா?

இதே முஸ்லிம் அரசியல் தலைவர்களால் ஆரம்பகாலத்தில் முஸ்லிம்களால் ஆயுதப்படை கிழக்கில் உருவாக்கப்பட்டது.இவர்கள் கிழக்கில் என்ன செய்தார்கள் என்பது கிழக்கில் உள்ள தமிழ் மக்களுக்கு நன்கு தெரியும்.150க்கு மேற்பட்டவர்கள் 1986ல் புலிகளால் சுற்றி வளைக்கப்பட்டு கொல்லப்பட்டதுடன் ஆயுதங்கள் பறிக்கப்பட்டதும் பலருக்கு தெரிந்திருக்கலாம்.

முஸ்லிம்களுடன் சேர்வதால் பலம் என நாம் நினைக்கும் அதே நேரம் கடந்த கால வரலாறை பார்க்கும் போது எம்மை பலவீனமாக்குபவர்களாக தான் இருந்திருக்கிறார்கள்.

இந்நிலையில் தமிழர்கள் தமக்கு ஒரு தீர்வை எடுப்பதற்கு தீவிரமாக முயற்சிப்பதை விட்டு விட்டு முஸ்லிம்களே தமக்கான தீர்வை எடுக்க முயற்சிக்காத போது நாம் ஏன் முந்திரிக்கொட்டையாக முன் நிற்க வேண்டும்??

  • தொடங்கியவர்

என்னுடைய பார்வையில் முஸ்லீம் மக்கள் பாதிக்கப்பட்ட தரப்பினர்தான்.

அரசியற் போரில் இலங்கைத் தீவில் மூன்று தரப்புக்கள் இருக்கின்றன. ஆனால் அங்கே ஆயுதப் போரில் அங்கே இரு இராணுவத் தரப்புகள்தான் இருந்தன. ஒன்று சிங்களவர்களின் இராணுவம் மற்றது தமிழர்களின் விடுதலைப் புலிகள். அங்கே மூன்றாவது ஆயுதத் தரப்பு இருக்கவில்லை.

இலங்கை இராணுவம் தன்னிடம் துணைப்படைகளை வைத்திருந்தது. அதில் தமிழ் துணைப்படைகள் இருந்தன. முஸ்லீம் துணைப்படைகள் இருந்தன. தன்னுடைய போருக்கு இராணுவம் இந்தத் துணைப்படைகளை பயன்படுத்தின.

தமிழ் துணைப்படைகள் தமிழ் மக்கள் மீது நடத்திய தாக்குதல்களை நான் தமிழர்கள் செய்த தாக்குதலாகப் பார்க்கவில்லை. முஸ்லீம் துணைப்படைகள் செய்த தாக்குதலையும் நான் முஸ்லீம் மக்கள் செய்ததாகப் பார்க்கவில்லை.

விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலையும் சிறிலங்கா இராணுவத்தால் இயக்கப்படுகின்ற முஸ்லீம் துணைப்படையினர் செய்த தாக்குதலையும் நான் ஒரே தராசில் வைக்கவில்லை. நான் முஸ்லீம் துணைப்படையினர் செய்த தாக்குதல்களையும் சிறிலங்கா இராணுவத்தின் கணக்கிலேயே சேர்க்கின்றேன்.

சபேசன்,

1.

எனக்கு முஸ்லிம்கள் ஒரு தேசிய இனம் என்பதிலோ அல்லது அவர்களுக்கும் தமிழர்களுக்கு நிகரான அரசியல் ரீதியான உரிமைகள் அவசியம் என்பதிலோ மாற்றுக் கருத்து இல்லை

எந்த இனமும் சேர்ந்து வாழ்வதற்கு அரசியல் ரீதியான பாதுகாப்பும், அரசியல் சட்டங்களில் அதற்கான ஏற்பாடுகளும் இருத்தல் அவசியம்.

இலங்கையைப் பொறுத்தவரைக்கும் தமிழ் முஸ்லிம் இனங்களுக்கு இவை இல்லை.

இவற்றை நாடி ஒரு இனமான தமிழ் இனம் போராடிக் கொண்டிருக்கும் போது, அதற்கான தார்மீக ஆதரவை வழங்காமல் வெட்டி ஓடி அரசியல் செய்தால் தம்மை பாதுக்காக்கலாம் என்ற நோக்கில் மட்டுமே சிந்தித்து செயலாற்றியது அனைத்து முஸ்லிம் தலமைகளும் . இடையில் வந்த அஸ்ரப்பும் இதனைத் தான் செய்தார். பின் வந்த ஹக்கீமும் இதனைத் தான் செய்கின்றார்.

ஈழத்தில் சிறுபான்மை இனங்கள் சுதந்திரமாக வாழ்வதற்கு நிச்சயம் தமிழ் முஸ்லிம் இனங்களுக்குடையிலான ஒற்றுமை காலத்தால் ஏற்படுத்தப் பட்ட முன் நிபந்தனையாக இருந்தாலும், அதை நோக்கி எந்த ஒரு முஸ்லிம் தலைமைகளும் நகர்வதற்கான ஒரு சிறு துரும்பளவு முயற்சிகளையும் எடுக்காது இன்று வரைக்கும் சிங்கள இனத்துக்கான நிபந்தனை அற்ற ஆதரவுகளைத் தான் தந்து கொண்டு இருக்கின்றனர்.

பின்னை நாட்களில் தமிழ் மக்களின் விடுதலை படையான புலிகள் தமிழ் முஸ்லிம் ஒற்றுமை தொடர்பாக பல முன்முயற்சிகளை எடுக்க தொடங்கிய காலகட்டங்களிலும் கூட முஸ்லிம் தலைமைகள் அவற்றை உதாசீனப்படுத்தியே வந்திருந்தன. தன் கண் முன்னே நிகழ்ந்த மாபெரும் தமிழ் இன படுகொலையை நிகழ்த்தியவர்களைக் கூட போர்க் குற்றங்களில் இருந்து பாதுக்காக்கவே இன்றும் முஸ்லிம் தலைமைகள் (அது கிழக்கு மாகாண தலைமைகளாக இருந்தாலென்ன தெற்கு சார்ந்த தலைமைகளாக இருந்தால் என்ன) முன்னிற்கின்றன.

இவ்வாறு முஸ்லிம்களின் அனைத்து செயல்பாடுகளும் தமிழர்களுக்கு முற்றிலும் எதிராக இருக்கும் காலகட்டத்தில் தமிழ் மக்களிடம் வந்து முஸ்லிம்களை அரவணைக்கச் சொல்வது ஏற்புடையது இல்லை. போராடி தோற்று இனி இழப்பதற்கு ஒன்றுமில்லை என்று இருக்கும் ஒரு இனத்திடம் வந்து மீண்டும் மீண்டும் விட்டுக் கொடுங்கள் என்பதும், அரவணைத்துப் போங்கள் என்பதும் கூட யதார்த்த பூர்வமான ஒரு விடயம் இல்லை. இனி இரு இனமும் ஒற்றுமையாக போகவேண்டும் எனில் அதற்கான முன் முயற்சி முஸ்லிம் தரப்புகளிடம் இருந்து தான் ஆரம்பிக்க வேண்டும். தமிழர் தரப்புகளின் பக்கத்தில் இருந்து அல்ல

2.

யாழ் கள உறவுகளாயினும் சரி, பொதுவாக எந்த தமிழராக இருந்தாலும் சரி முஸ்லிம்கள் தொடர்பாக மிகுந்த வெறுப்பைக் காட்டுவதற்கு காரணம் முஸ்லிம்களின் தொடர்ச்சியான தமிழர் விரோதப் போக்குத்தான். விடுதலைப் புலிகள் முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்தப்பட்ட படுகொலைகளால் முஸ்லிம்கள் தமிழர்களை வெறுக்கின்ற மாதிரித்தான் முஸ்லிம் ஊர்காவல் படைகளாலும், முஸ்லிம் கிராமவாசிகளாலும் தமிழர்களும் மிக மோசமாக படுகொலை செய்யப்பட்டதனால் முஸ்லிம்களை தமிழர்கள் வெறுக்கின்றனர். இவற்றை விட முஸ்லிம் தலமைகளின் தொடர்ச்சியான தமிழர் விரோதப் போக்கினாலும் இந்த வெறுப்பு தணியாமல் தொடர்கின்றது. யாழ்ப்பாணத்திலும் மன்னாரிலும் மிகவும் முஸ்லிம்களுடன் மிகவும் ஒற்றுமையாக வாழ்ந்த தமிழர்கள் தான் இன்று அவர்களை வெறுப்பதில் முன்னிற்கின்றனர்.

இந்த வெறுப்பு இலங்கை அரசின் போர்க்குற்றங்களை மறைக்க முஸ்லிம்கள் எடுத்துக் கொண்டிருக்கும் முயற்சிகளினால் அதீத கட்டத்தை தாண்டி விட்டது

முஸ்லிம்கள் தமிழர்கள் உரிமை பற்றி பேச முனையும் நீங்களும் சரி, முஸ்லிம்களின் பிரதிநிதியாக தனக்குள் கற்பனை செய்து கொண்டிருக்கும் வ.ஐ,ச ஜெயபாலனானாலும் சரி (ஆனால் முஸ்லிம்கள் அவரை ஏற்பதில்லை என்பது இன்னொரு விடயம்) , முஸ்லிம்கள் செய்த படுகொலைகளையும், அரசியல் ரீதியான தவறுகளையும் ஏன் ஒளிவு மறைவின்றி விமர்சிப்பதில்லை? எப்போதுமே ஒரு தரப்பின் பிழைகளை மட்டுமே சொல்லிக் கொண்டிருப்பதன் அவசியம் என்ன? முஸ்லிம் தரப்பில் இருந்து தமிழ் முஸ்லிம் உறவுகள் மேம்படைய முன்னெடுக்கும் ஒரு செயலையாயினும் கூற முடிகின்றதா உங்களால்? அல்லது முஸ்லிம் அரசியல் ஆய்வாளர்கள், பத்திரிகையாளர்கள் (பெளசர் முதற் கொண்டு ..) தமிழ் முஸ்லிம் ஒற்றுமை பற்றி முஸ்லிம்களுக்கு எடுத்துச் சொல்லும் ஒரு முயற்சியையாவது தர முடிகின்றதா உங்களால்

நன்றி

அது.போட்டான்யா ஒரு போடு.என்ர அரிவாளாலை போட்டமாதிரி.

  • தொடங்கியவர்

முஸ்லீம்கள் செய்த தவறுகளை விமர்சிப்பவர்கள் முஸ்லீம் சமூகத்திற்கு உள்ளே இருந்து வரவேண்டும் என்றே நான் விரும்புகின்றேன்.

ஒரு தமிழனாக இருந்து கொண்டு முஸ்லீம்கள் செய்த தவறுகளை விமர்சித்துக் கொண்டிருந்தால், அது தற்போது சீர்கெட்டுப் போயிருக்கும் உறவிற்கான காரணமாகவும், அதை நியாயப்படுத்துவதற்கான விளக்கமாகவும்தான் இருக்கும்.

என்னுடைய நோக்கம் அதுவல்லவே!

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லீம்கள் செய்த தவறுகளை விமர்சிப்பவர்கள் முஸ்லீம் சமூகத்திற்கு உள்ளே இருந்து வரவேண்டும் என்றே நான் விரும்புகின்றேன்.

அப்படி யாரும் வரவில்லை என்பது தான் உண்மை. இந்த உண்மையோடு தமிழர்களை நோக்கி "முஸ்லிம்களின் சுயாட்சிக்கு ஆதரவு தாருங்கள்" என்ற உங்கள் வாதம் அடி பட்டுப் போகிறது. மேலும், தமிழர் தரப்பிலிருந்து இந்த வாதத்தை முன் வைக்கும் முதல் ஆள் நீங்கள் அல்ல! இந்தத் தடையைத் தாண்ட முஸ்லிம் மக்களும் அவர்கள் தெரிவு செய்யும் தலைவர்களும் தான் உழைக்க வேண்டுமேயொழிய தமிழர்களோ சிங்களவர்களோ அல்ல!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.