Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அவனுக்குத்தான்..........

Featured Replies

ஊரில் வைத்தியரைவிட வெளிநாட்டு மாப்பிளைக்குத்தானே இன்றும் மவுசு.

[size=5]அது உங்களைப் போல் ஆட்களுக்கு ஆக்கும்[/size]

நாங்கள் போய் சப்பாத்தும் விலையுயர்ந்த விதம் விதமாக உடுப்புக்களும் சென்ரும் அடித்து வலம் வந்தால்........???

[size=5]உங்களது 2வது காதலி மாதிரி ஆட்களுக்கு அது பெரிது தான்[/size]

  • Replies 91
  • Views 8.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அண்ணா.. உங்க ஆட்டோகிராப்.. சேரனின் ஆட்டோகிராபை மிஞ்சிடும் போல இருக்கே. நல்லாத் தான் அனுபவிச்சிருக்கிறீங்க.. அந்த வயதை..! அந்தந்த வயதை அப்படி அப்படி அனுபவிக்கனுன்னு பெரியவா சொல்லுவா.. அது இது தானா..?! :lol::icon_idea:

தொடர்ந்து சொல்லுங்க.... படிப்பம்..!

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்து எழுதுங்கள். நானும் வாசிக்கிறேன்.

நீங்கள் எழுதும் உண்மை சம்பவம் யாரையும் (உங்களையோ அல்லது அந்த பெண்ணையோ/ பெண்களையோ) :icon_mrgreen: பாதிக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

நிச்சயமாக கா..

என் தங்கைகள் பிள்ளைகள் பார்த்து பதில் எழுதுவார்கள் என்பதும் நினைவிலிருக்கும்.

நன்றாக எழுதுகின்றீர்கள் வி.அண்ணா. தொடருங்கள் ..........

நன்றி தமிழ் இனி

களத்திற்குள் அண்ணனுக்காய் வந்து போனதற்கு....

தொடருங்கள்...

நன்றி தங்கள் ஊக்குவிப்பு.

இதுக்குப் போயி.. சிம்பிள் மாற்றர். ரெம்ப பீல் பண்ணுறீங்க..! நீங்களா.. விசுகு அண்ணா சொன்னீங்க.. ஓடி வந்து எட்டிப்பார் என்று. அவையா.. எட்டிப் பார்த்திச்சினம்.. காதல் வயப்பட்டிச்சினம்.. அது அவைட பிரச்சனை..! நல்ல காலம்.. அப்ப எடுத்த நல்லதொரு முடிவால தான்.. இன்றைக்கு நீங்க.. இந்த நிலையில இருக்கீங்க என்று நினைக்கிறன்..! :)

ம்ம்ம்... தொடருங்க..! இப்படி குட்டி குட்டியா எழுதினால் தான் படிப்பம். நீட்டா எழுதினீங்க... படிக்க மாட்டம்..! :lol:

இல்லை ராசா

நானும் பார்த்தேன்

ஆசைகளை வளர்த்தேன்

தப்பு தப்புத்தான்

உடலைக்கெடுப்பதைவிட அதிகம் பாரதூரமானது மனதைக்கெடுப்பது.

இப்பவும் மனிதில் ஒரு மூலையில் இது இருக்கு அப்படி என்று சொன்னால் அந்த மனச்சாட்சி சொல்லுது தப்பு செய்தாயடா என்று.

தொடருங்கள் தொடருங்கள் அண்ணா ...........ஆர்வமுடன் வாசிக்க காத்திருக்கிறேன்.

நன்றி தம்பி தமிழ்சூரியன்

தங்கள் ஊக்குவிப்பு.

[size=1][size=4]வசந்த கால நினைவுகள் தொடரட்டும்...[/size].........[/size][size=1] :D[/size]

நன்றி பாட்டி

அவை கட்டையில போகுமட்டும்....

ஒ..........................................உங்களுக்குள் இப்படியும் ஒன்று இருக்கா....................................... எதிர்பார்க்கவே இல்லை....

நானும் மனுசன் தானே ராசா....

ம்ம்ம்.........பிறேக் அடிச்சாச்சு நல்ல விசயம்.

நன்றி பிள்ளை

வழமையான காதல்க்கதை. குடும்பம் அதற்கு வில்லன்.

தொடருங்கள் விசுகு அண்ணை

முடிவில் சுபமாக இருந்தால் மகிழ்ச்சி.

ம்ம்ம்

நன்றி வாத்தியார்

விசுகு அண்ணா அந்தப் பெண்ணை காதலித்து விட்டாலும்,அவரில் பிழை இருந்தாலும் தான் செய்தது பிழை என ஒத்துக் கொள்ளவா போறார் :unsure:

நம்பிக்கை தான் வாழ்க்கை ரதி

பொய் சொல்லவேண்டிய அவசியமில்லை. அதிலும் பெண் பிள்ளைகளை வைத்திருப்பவன் நான்.

எங்கும் எப்பொழுதும் பொய் சொல்லியதில்லை. அதற்கான தேவையுமில்லை. அப்படியொரு விம்பத்தை வளர்க்கவேண்டிய அவசியமும் இல்லை

[size=5]நல்லாயிருக்கு விசுகு அண்ணா, என்னதான் மூடி மூடி வச்சாலும் , சில நேரங்கள் வாழ்கையை திரும்பி பார்த்து யோசிக்கும் போது சில இனிமையான சம்பவங்கள் கோடையில் பெய்யிற மழை போல நினைவுகள் எல்லாம் சில்லிடும் .[/size]

[size=5]தொடருங்கோ ...[/size]

அதைத்தான் இங்கு செய்கின்றேன்.

இறக்கி வைவக்கணும் என்று தோன்றியது. இறக்கியாச்சு.

அதுவுவும் பொறுப்படன்.

நன்றி தங்கள் ஊக்கத்திற்கு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒருத்தியோடை பழகேக்க இருக்கிற துணிவு , நல்லது கெட்டதைச் சொல்லேக்கையும் இருக்கவேணும் விசுகர் . மற்றும்படி கதைக்கு குறை சொல்லேலாது . தொடருங்கோ .

உங்கள் கருத்துக்கு ஒரு விருப்பு வாக்கும் விழுந்திருக்கு.

அதையும் கவனித்துத்தான் எழுதுகின்றேன்.

18 வயதில் அது வரல கோ...

ஆனால் இப்பவும் சொல்கின்றேன். அந்த வயதில் இந்த முடிவை எடுத்தவரை சரியாகத்தான் நான் நினைக்கின்றேன். நேரே போயிருந்தால் கண்ணீருக்குள் காணாமல் போயிருப்பேன்.

snapback.pngவிசுகு, on 25 June 2012 - 05:01 PM, said:

ஊரில் வைத்தியரைவிட வெளிநாட்டு மாப்பிளைக்குத்தானே இன்றும் மவுசு.

[size=5]அது உங்களைப் போல் ஆட்களுக்கு ஆக்கும்[/size]

நாங்கள் போய் சப்பாத்தும் விலையுயர்ந்த விதம் விதமாக உடுப்புக்களும் சென்ரும் அடித்து வலம் வந்தால்........???

[size=5]உங்களது 2வது காதலி மாதிரி ஆட்களுக்கு அது பெரிது தான்[/size]

[size=5]அலை மகளுக்கு பதில் எழுத விரும்பல.[/size]

[size=5]நீங்கள் வீம்புக்கு பதில் எழுதுவது போலிருக்கு.[/size]

[size=5]நன்றி வணக்கம்.[/size]

இல்லை ராசா

நானும் பார்த்தேன்

ஆசைகளை வளர்த்தேன்

தப்பு தப்புத்தான்

உடலைக்கெடுப்பதைவிட அதிகம் பாரதூரமானது மனதைக்கெடுப்பது.

இந்த வரிகளை நீங்கள் சொல்வீர்களா இல்லையா என்று உங்கள் பதிலை எதிர்பார்த்தேன். நன்றி. இதுவரைக்கும் நான் பார்த்ததை வைத்து நீங்கள் ஒரு நடுநிலையாளர் என்பது புலப்படுகிறது. . :)

காதல் என்பது வாயால் மட்டுமல்ல. கண்களாலும் சொல்லப்படும், கடத்தப்படும். :)

நல்ல சுவாரஸ்யம் வி அண்ணா ....காதல் கதையுடன் கூடிய ஓர் படம் பார்ப்பது போன்ற ஓர் பிரமை ......தொடருங்கள் ...அடுக்கடுக்காக உங்கள் காதல் நினைவுகளை ....

டிஸ்கி .....

அண்ணா நீங்கள் ரொம்ப மச்சக்காரனுங்க............எப்படியண்ணா அடுத்தடுத்து .........ஒன்று போனால் இன்னொன்று .ரோம்பக்குடுத்துவச்சநீர்கள்........................ :D :D :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

ந‌ன்றாக இருக்குது விசுகு தொட‌ருங்கள் , உண்மையாக நட‌ந்த சம்பவம் என்ட‌ படியால் அப்படியே தருவீர்கள் என எதிர் பார்க்கிறேன் . :D

நன்றாக இருக்கிறது தொடருங்கள் ....... :)

உங்களை குத்திக்காட்டாவோ , எகடியம் பேசவோ அப்படி நான் எழுதவில்லை . என்னைப் பொறுத்தவரையில் நீங்கள் கதையின்படி ஒரு சூழ்நிலைக்கைதி . அந்த உளப்பாங்கு இருக்கக்கூடாது என்பது எனது அபிப்பிரயம் . ஒரு பெண் தான் விரும்பியவினிடம் நல்லதோ கெட்டதோ எதிர்பார்பது விரும்பியவனாலேயே . மூன்றாமவரால் இல்லை . அந்த அணுகுமுறை அந்தப் பெண்ணிடம் உங்களப்பற்றிய பிம்பங்களை முற்றுமுழுதாகவே மாற்றியமைத்துவிடும் .

Edited by கோமகன்

நானும் இதை வி.அண்ணா சொல்லுவாரோ என எதிர் பார்த்தேன்...நன்றி அண்ணா :)

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை ராசா

நானும் பார்த்தேன்

ஆசைகளை வளர்த்தேன்

தப்பு தப்புத்தான்

உடலைக்கெடுப்பதைவிட அதிகம் பாரதூரமானது மனதைக்கெடுப்பது.

இப்பவும் மனிதில் ஒரு மூலையில் இது இருக்கு அப்படி என்று சொன்னால் அந்த மனச்சாட்சி சொல்லுது தப்பு செய்தாயடா என்று.

மனச்சாட்சியாவது மண்ணாங்கட்டியாவது. உங்கட அம்மா.. அப்பா உங்களுக்கு சோறூட்டினது கூடத்தான் நினைவில நிற்குது. அதற்காக.. அவங்களை சதா நினைச்சிக்கிட்டா வாழுறீங்க இல்லையே..!

அந்தப் பொண்ணுங்க எட்டிப்பார்க்கிறதை நீங்க கண்டிராட்டி அந்த ஏதோ (நீங்களே சொல்லிட்டீங்க.. காதலை நான் சொல்லேல்லைன்னு.. அப்புறம் அது எப்படி காதல் ஆகும்..!) உங்களுக்க வந்திருக்காது. அதுதான் அந்தப் பொண்ணு பின்னாடி போகத் தூண்டிச்சு. அது ஒரு பையன்.. பொண்ணப் பார்த்தா நிகழுற சாதாரண விசயம். ஆனா.. நீங்கள் உங்கள் விருப்பைச் சொல்லாமலே உங்க மேல காதல் வளர்த்தது உங்க தப்பில்லையே விசுகு அண்ணா. அப்புறம் எதுக்கு மனச்சாட்சின்னு.. அநேகரில்.. இல்லாத ஒன்றை இருப்பதா கற்பனை செய்து.. அதில உங்களை சிறை வைக்கிறீங்க..! (சில வேளை உங்களுக்கு அது இருந்தாலும்.. இதெல்லாம் அதில எழ வேண்டிய அவசியமே இல்ல..! பொண்ணுங்க என்னா சும்மா அழுது குளறுவாங்க.. நீங்க கிடைக்கல்லன்னிட்டு அவா செத்தா போனா.. இல்லையே...!!!!! அவாவும் சும்மா வெருட்டி தானே இருக்கா....! ) :lol::icon_idea:

நன்றாக கதை போகிறது விசுகு அண்ணா.

கண்ணன் மச்சானின் தங்கை தான் உங்கள் வாழ்க்கையின் நாயகி என்று நம்புகிறேன்.! சரிதானே?

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா மலரும் நினைவுகளா.ம்ம் நடக்கட்டும் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இப்பதான் ஒண்டு வந்திருக்கு மிச்சங்களையும் கெதியா எடுத்து விடுங்கோ :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புத்துக்காலை ஒருபாம்பு இப்பத்தான் வெளிக்கிடுது. :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அண்ணா.. உங்க ஆட்டோகிராப்.. சேரனின் ஆட்டோகிராபை மிஞ்சிடும் போல இருக்கே. நல்லாத் தான் அனுபவிச்சிருக்கிறீங்க.. அந்த வயதை..! அந்தந்த வயதை அப்படி அப்படி அனுபவிக்கனுன்னு பெரியவா சொல்லுவா.. அது இது தானா..?! :lol::icon_idea:

தொடர்ந்து சொல்லுங்க.... படிப்பம்..!

ம்ம்ம்

நீங்க சொல்வது சரிதான்

அந்த அந்த வயதை அப்படியே அனுவித்தவன் நான்.

ஆனால் எப்பொழுது வெளியில் வந்தேனோ அன்றிருந்து எனக்காக அல்லாது குடும்பத்துக்காக வாழவேண்டிய சூழல் ஒட்டிக்கொண்டது.

தற்போதைய கனவு பென்சன் வாழ்க்கையை ஒரு சொர்க்க வாழ்க்கையாக மனைவியுடன் சேர்ந்து உலகம் சுற்றவேண்டும் என்பதே. காசு பணமெல்லாம் சேர்ப்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது.

(முன்பும் சொன்னதுண்டு. பாட்சா படத்தில் வரும் பாடல். எட்டு எட்டா வாழ்க்கை தனை வகுத்துக்கோ. இப்போ எந்த எட்டில் நீ இருக்கிறாய் தெரிஞ்சிக்கோ என்ற பாடல் அப்படியே எனக்கு பொருந்தும்.)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த வரிகளை நீங்கள் சொல்வீர்களா இல்லையா என்று உங்கள் பதிலை எதிர்பார்த்தேன். நன்றி. இதுவரைக்கும் நான் பார்த்ததை வைத்து நீங்கள் ஒரு நடுநிலையாளர் என்பது புலப்படுகிறது. . :)

காதல் என்பது வாயால் மட்டுமல்ல. கண்களாலும் சொல்லப்படும், கடத்தப்படும். :)

காதல் என்பது வாயால் மட்டுமல்ல. கண்களாலும் சொல்லப்படும், கடத்தப்படும்

ம்ம்ம்

அதே.

பேசியது குறைவு. கண்களும் செயல்களுமே வலையைப்பின்னின.

மறுக்க முடியாது.

ஆனால் ஒரு எல்லைக்கோட்டுக்குள் நின்று கொண்டதால் இந்த முடிவை எடுக்கமுடிந்தது.

நானும் இதை வி.அண்ணா சொல்லுவாரோ என எதிர் பார்த்தேன்...நன்றி அண்ணா :)

ரதி

ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளுங்கள்.

இவ்வளவு காலத்திற்குப் பின்

இந்த வயதில் இதை இங்கு கொட்டுகின்றேன் என்றால் அது ஒரு பாவமன்னிப்பு கேட்பது போன்றது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல சுவாரஸ்யம் வி அண்ணா ....காதல் கதையுடன் கூடிய ஓர் படம் பார்ப்பது போன்ற ஓர் பிரமை ......தொடருங்கள் ...அடுக்கடுக்காக உங்கள் காதல் நினைவுகளை ....

டிஸ்கி .....

அண்ணா நீங்கள் ரொம்ப மச்சக்காரனுங்க............எப்படியண்ணா அடுத்தடுத்து .........ஒன்று போனால் இன்னொன்று .ரோம்பக்குடுத்துவச்சநீர்கள்........................ :D :D :icon_idea:

நான் இருக்கும் இடம் கலகலப்பாக இருக்கும். அங்கு சிரிப்பு மட்டுமே இருக்கும். அந்தவகையில் எல்லோருக்கும் என்னைப்பிடிக்கும். :wub:

ஆனால் என்ன செய்வது திருமணம் என்பது ஒருவருடன் மட்டுமே தானே....??? :icon_idea:

ந‌ன்றாக இருக்குது விசுகு தொட‌ருங்கள் , உண்மையாக நட‌ந்த சம்பவம் என்ட‌ படியால் அப்படியே தருவீர்கள் என எதிர் பார்க்கிறேன் . :D

நன்றாக இருக்கிறது தொடருங்கள் ....... :)

நன்றி

தமிழ் அரசு

இன்னும் ஒன்றுடன் நிறுத்திவிடுவேன்.

கொஞ்சம் நீளமாக இருக்கும் என்பதால் காலமெடுக்கும்.

உங்களை குத்திக்காட்டாவோ , எகடியம் பேசவோ அப்படி நான் எழுதவில்லை . என்னைப் பொறுத்தவரையில் நீங்கள் கதையின்படி ஒரு சூழ்நிலைக்கைதி . அந்த உளப்பாங்கு இருக்கக்கூடாது என்பது எனது அபிப்பிரயம் . ஒரு பெண் தான் விரும்பியவினிடம் நல்லதோ கெட்டதோ எதிர்பார்பது விரும்பியவனாலேயே . மூன்றாமவரால் இல்லை . அந்த அணுகுமுறை அந்தப் பெண்ணிடம் உங்களப்பற்றிய பிம்பங்களை முற்றுமுழுதாகவே மாற்றியமைத்துவிடும் .

உங்கள் கருத்தில் எந்த பிழையுமில்லை.

எனது இயலாமைதான்.

அதை நான் ஒத்துக்கொள்கின்றேன்.

ஆனால் சந்திக்கும் தெம்பு எனக்கிருக்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

முன்பு போல் எனக்கு கருத்துக்கள் எழுதுவதற்கு விருப்பம் வாறது இல்லை...ஆனாலும் எனக்கு இது காதல் சம்பந்தப்பட்ட கதையாக இருக்கப் போகிறது என்று தெரியாமலே வாசிக்கத் தொடங்கி சில கட்டங்கள் கடந்த பின்னார் தான் புரிந்து கொண்டேன்.பொதுவாக காதல் சம்பந்தமான எதுவாக இருந்தாலும் இப்போ சற்று தூரம் தள்ளியே நிக்க தோன்றுது...சரி அதை விடுவம்.....நீங்கள் தானே அந்தப் பிள்ளையோடு கதைத்கக ஆரம்பிச்சது அப்படி இருக்கும் போது மீண்டும் அந்த உறவை விலத்திக் கொள்வற்காக குடும்பத்தில் இருக்க கூடிய மற்றவர்களை அனுப்பி சிலவற்றை கையாண்ட விதம் தவறு...இதனால் உங்களுக்கு ஒன்றும் இல்லை காலம் முழுவதும் அந்த அக்காவுக்கு தான் வேதனை இல்லையா..உங்களைத் திருத்த வர இல்லை..என் மனதில் தென்பட்டதை சொன்னேன்.

  • கருத்துக்கள உறவுகள்

கதை ஆரம்பித்த இடமும், அதை நகர்த்தும் விதமும் அழகு, விசுகு.

நல்ல ஒரு அனுபவத்தை வாசிக்கக் காத்திருக்கின்றோம். :)

  • கருத்துக்கள உறவுகள்

விசுகர், உங்கள் நிலையை, நானும் தாண்டியிருக்கின்றேன்!

அன்புக்கும், பாசத்திற்கும், இடையே நடந்த பயங்கரமான போராட்டம், அது!

உங்கள் கதையை வாசிக்கும் போது, திரும்பவும் நினைவுக்கு, வந்து உறுத்துகின்றது!

இன்னுமொரு பிறவி எடுத்தால்,யாழ்ப்பாணத்தில் அதிக சகோதரிகளுடன், பிறக்கக் கூடாது என்று மட்டும் இப்போதைக்குச் சொல்ல முடியும்!

தொடர்ந்து பகிருங்கள்! :D

  • கருத்துக்கள உறவுகள்

இன்னுமொரு பிறவி எடுத்தால்,யாழ்ப்பாணத்தில் அதிக சகோதரிகளுடன், பிறக்கக் கூடாது என்று மட்டும் இப்போதைக்குச் சொல்ல முடியும்!

தொடர்ந்து பகிருங்கள்! :D

இப்படிச் சொல்லக் கூடாது.. இப்படிச் சொல்லனும்... யாழ்ப்பாணப் பெற்றோருக்கே பிள்ளையாப் பிறக்கக் கூடாது... அதிலும்... தமிழனாவே பிறக்கக் கூடாது...! அப்பதான் வாழ்க்கையை சுதந்திரமா அனுபவிக்கலாம்..! :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=1]தொடருங்கள் எழுத்துநடைநன்றாக இருக்கிறது [/size]

  • கருத்துக்கள உறவுகள்

இப்படிச் சொல்லக் கூடாது.. இப்படிச் சொல்லனும்... யாழ்ப்பாணப் பெற்றோருக்கே பிள்ளையாப் பிறக்கக் கூடாது... அதிலும்... தமிழனாவே பிறக்கக் கூடாது...! அப்பதான் வாழ்க்கையை சுதந்திரமா அனுபவிக்கலாம்..! :lol:

அதே யாழ்ப்பாணத்தானுக்கு பிறந்தபடியால்தான் புலத்திற்க்கு பலர் வரக்கூடியதாக இருந்தது என்பதையும் மறக்ககூடாது.......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உறவுகளே

இது உங்களுக்கான எனது அனுபவப்பகிர்வு.

கதையைத்தொடருமுன் சில அனுபவ பாடங்களை பதிய விளைகின்றேன்.

முதலில் கண் படுதல் என்பது ஒரு நிலை

நெஞ்சுக்குள் வருதல் அதன் அடுத்தநிலை

காதலிப்பது என்பது அதன் தொடர்ச்சி

ஆனால் திருமணம் என்பது அதன் கடைசி நிலை.

இதையெல்லாம் போட்டுக்குழப்பிக்கொள்கின்றோம் சிறு வயதில்.

உதாரணமாக அழகான அல்லது அழகாக உடையணிந்த பெண்கள் போனால் இரண்டாவது முறையும் திரும்பிப்பார்க்கச்சொல்லும். இது சாதாரண மனித ஏன் மிருகங்களும் செய்யும் லீலை. இது தற்போதும் எனக்கு வரும்.

இதற்கு வயதும் இல்லை.

ஆனால் பருவ வயதில் அதையும் காதலாக சிலர் பார்ப்பதுண்டு.

அடுத்தது

நெஞ்சுக்குள் வருதல்.

அதற்கு சில தெரிவுகள். விருப்பங்கள். பிடிப்பனவுகள் தேவை. அது இருவருக்கும் புரியும். ஆனால் அதுவும் காதலோ கல்யாணமோ அல்ல. பலரை அவ்வாறு தெரிவு செய்யமுடியும். உங்களது அனுபவங்களும் அப்படித்தான் இருக்கும். ஆனால் என்னைப்பொறுத்தவரை ஒருவர் நெஞ்சுக்குள் வந்து விட்டால் எந்த ஒரு பெண்ணோ அல்லது ஆணோ தம்மை மாற்றிக்கொள்வார்கள். முன்பு கெட்டவர்களாக ஏன் நடத்தை கெட்டவர்கள் கூட இதன்பின் மாறி விடுவார்கள். ஒரு சில எதிர் மறைகள் இருக்கலாம்.

இந்ததெரிவில் நான் எடுத்தநிலை உலக அழகியை திருமணம் முடிக்க வேண்டுமாயின் நம்ம முகத்தை முதலில் கண்ணாடியில் பார்க்கணும். அல்லாது விட்டால் அமிதாப்பச்சனின் மகனாகவாவது இருக்கணும். (இது தற்போதையநிலை)

அடுத்தது

காதலிப்பது

இங்கு தான் கவனமாக இருக்கணும்.

பெண்கள் எப்பொழுதுமே ஒருவரை மனதில் ஏற்றுக்கொண்டு விட்டால் அவரை தனக்கானவர் மட்டும் என ஆக்க சில வலைகளை விரிப்பார்கள். அதை அவர்களின் சில விட்டுக்கொடுப்புகள் மூலம் புரிந்து கொள்ளமுடியும். விட்டுக்கொடுப்புக்கள் அதிகரிக்க அதிகரிக்க மகனே நீ மாட்டுப்பட்டதை உணர்வாய். அதன்பின் நீ அடிமை. அவ்வளவுதான். வெளியில் வரமுடியாது. சிலபேர் முயற்சிக்கக்கூட மாட்டார்கள். சில ஆண்களை இப்படி இருந்தவன் காதலில் பின் அல்லது திருமணத்தின்பின் இப்படி ஆகிற்றானே என்பது இதனால்தான். வெளியில் சொல்லமுடியாத வலை. (எனக்கு இது சில இடங்களில் இறுகியது. தொடாமல் தப்பித்துக்கொண்டேன்)

அடுத்துத்தான் திருமணம்.

அததற்கான தேர்வுகள் வேறு.

இதை இங்கு எழுதக்காரணம்

எவரென்றே தெரியாத

இந்த கண்டதும் காதல்

ஓடிப்போதல்

குடும்பங்கள் முழுவதையும் வெறுத்தல்.......... போன்றனவற்றை அடியோடு வெறுப்வன் நான்.

காதலிக்கும்போதே

எனது குடும்பத்துடன் ஒத்துவருமா?

அவர்களுடன் சேர்ந்து மகிழ்ச்சியாக எதிர்காலத்தை உருவாக்கமுடியுமா என முதலிலேயே தீர்மானிக்கவேண்டும்.

ஒருத்தரும் வேண்டாம் ஒரு பெண் அல்லது ஆண் போதும் என்பது வெறும் காமப்பித்தலாட்டம் மட்டுமே. நிலைக்காது. தங்கள் பக்கம் எல்லாம் சரியாக இருந்தால் போராடி வெற்றி பெறணும். காத்திருக்கணும். அப்படி செய்பவர்களைத்தான் எனக்குப்பிடிக்கும். எவரென்றாலும் அப்படித்தான் செய்யணும் என ஊக்குவிப்பேன். அதைத்தான் நான் செய்தேன். அதையே எனது பிள்ளைகளுக்கும் சொல்லியுள்ளேன்.

இனி கதை தொடரும்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

[size=5]இடம் கச்சேரி நல்லூர் வீதி[/size]

[size=5]நல்லூர்[/size]

[size=5] [/size]

[size=5] [/size]

[size=5]சின்ன வயதிலேயே பிடித்துப்போன ஒன்று. அப்படியே மெல்ல மெல்ல வளர்ந்து .....[/size]

[size=5] [/size]

[size=5]விடுமுறைக்காக சென்றால் அநேகமாக படிக்கும் நண்பர்கள் எல்லோரும் வந்து நிற்பார்கள். அவர்களைச்சந்திப்பதற்காக அநேகமாக யாழில் அதுவும் மாமாவீட்டில் தங்கவேண்டி வந்தது. அதுவும் ஒரு காரணம். அத்துடன் எனது குடும்பத்தார் எல்லோருக்கும் மிகவும் எனது மாமனாரைப்பிடிக்கும். [/size]

[size=5]சாதாரணமாகத்தான் தொடங்கியது.[/size]

[size=5]அவர்களது குடும்ப பழக்க வழக்கங்கள் வீட்டு ஒழுங்குகள் உறவினரோடு பழகும் முறைகள் ரொம்ப பிடித்த விட்டன.[/size]

[size=5]உதாரணமாக இவர்கள் 4 பெண் பிள்ளைகள். அதிகாலை 5 மணிக்கு முதலே எழும்பிவிடுவார்கள். [/size]

[size=5]மூத்தவர். வீடு கூட்டி வளவு கூட்டி தண்ணீர் தெளித்த துப்பரவுகள் செய்வார்.[/size]

[size=5]இரண்டாமவர்[/size]

[size=5]குசினிக்குள் போய் துப்பரவுகள் செய்து காலைத்தேத்தண்ணீர் தயாரிப்பார்.[/size]

[size=5]மூன்றாமவர்[/size]

[size=5]கிணற்றடியில் உடுப்புத்தோய்த்தல் தகப்பன் அல்லது தமையனுடன் சேர்ந்து வாழை மற்றும் பூக்கண்டுகள் தென்னை என்பனவற்றுக்கு தண்ணீர் விடுதல் செய்வார்.[/size]

[size=5]நாலாமவர் சிறு பிள்ளை[/size]

[size=5]தகப்பனுக்கு காலைப்பத்திரிகை வாங்கிவரல் காலைச்சாப்பாட்டுக்கு பாண் மற்றும் பொருட்கள் வாங்குவதற்கு தயாராவார்.[/size]

[size=5] [/size]

[size=5]இவற்றை முடித்ததும் எல்லோரும் கிணற்றடிக்குப்போய்க்குளித்து பாடசாலை உடையணிந்து புறப்படுவார்கள். அதில் ஒரு நேர்த்தியும் அழகும் ஓழுங்கும் இருப்பது என்னைக்கவர்ந்தது.[/size]

[size=5] [/size]

[size=5]கூட்டிக்கொண்டு யாழ் முழுவதும் சுத்துவேன். கொழும்பை அடுத்து யாழ்ப்பாண அனைத்து குறுப்பாதைகளும் ஐயாவுக்கு அத்துப்படி. காரணம் பிரதான வீதிகளால் போகமுடியாதல்லவா?[/size]

[size=5]3 தமையன் மார். அத்தனையும் எதற்கெடுத்தாலும் கையை நீட்டுபவர்கள். ஆனால் நமக்கும் பயத்துக்கும் வெகுதூரம். அவளுக்கு அடிவாங்கிக்கொடுக்கக்கூடாதல்லவா?[/size]

[size=5] [/size]

[size=5]அப்படியே ஆட்கள் இல்லாத சினிமாவுக்கு போகணும் என்று முதலில் பார்த்த படம் தக்காரா(ராஐ◌ா தியேட்டரில்) . ஆனால் அவர் தனக்கு துணையாக ஒன்றுவிட்ட அக்கா ஒருவரைக்கூட்டி வந்திருந்தார். அமைதி - வணக்கம் -மட்டுமே.[/size]

[size=5] அப்புறம் அலைகள் ஓய்வதில்லை . சில படங்கள் அவர்களது குடும்பத்துடன் சென்றும் பார்த்துண்டு. சில படங்கள் அவர்களது வீட்டில் வீடியோவில் பார்த்துண்டு.[/size]

[size=5] [/size]

[size=5]இதன் தொடர்ச்சியாக எனது பிறந்தநாளுக்கும் மற்றும் விசேச தினங்களுக்கும் வாழ்த்துமடல் கொழும்பு வரும். இதில் சில ரூமில் கண்ணமச்சானின் கண்களில் பட்டுவிட்டன. யாரென்று கேட்தற்கு முதலில் பொய் சொல்லாமல் சடையும் பதில் . கொஞ்சம் அதிகாரத்தை காட்ட முனைந்தபோது அது உங்களுக்கு தேவையற்றது என்ற பதில். [/size]

[size=5]ஆனால் எழுத்தில் அவருக்கு சில சந்தேகங்கள் வந்ததால் வீட்டில் போய் அட்டகாசம் செய்து அப்படி எதுவும் இருக்கப்படாது. தாய் காரணம் கேட்டதற்கு பதில் அவன் நல்லவனில்லை. வில்லனாக உருவெடுத்தார்.[/size]

[size=5]அந்த வயதில் இந்த வில்லத்தனத்தை எதிர் கொள்வதென்றால் ரொம்ப பிடிக்கும்...[/size]

[size=5] [/size]

[size=5]தொடரும்............[/size]

[size=5] [/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.