Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மரண வீடு:கவிதை நிழலி

Featured Replies

மரண வீடு

எல்லா செத்த வீடுகளிலும்

என் மனம்

என் சாவுக்காக அழுகின்றது,

தான் செத்த பின்

தனக்காக அழ முடியாத்

துயரம் அதுக்கு,

பாவம்.

வளர்த்தப்பட்ட உடலில்

தன் உடலை ஒட்டி

அழும் மனிதர்களில்

தன் மனிதர்களை ஒட்டி

வேவு பார்க்கின்றது

கள்ள மனசு

ஒவ்வொரு சாவு வீடும்

தனக்கான

ஒரு ஒத்திகை பார்க்கும்

இடம் என்று

சொல்லுது

மனம்

எல்லாச் சாவுகளின்

செய்திகளின் போதும்

எல்லா மரணம் பற்றிய

தகவல்களின் போதும்

விக்கித்து

தன் சாவை

நினைத்து ஒரு கணம்

தடுமாறுகின்றது

எல்லா வீதி விபத்துகளும்

என்னை அச்சுறுத்துவன போன்றுதான்

எல்லாச் சாவுகளும்

என்னை அச்சுறுத்துகின்றன

செத்தவருக்காக அழும் கண்ணீர்

துளிகளில் பல

எனக்காக அழுவன

என கண்கள் சொல்வதில்லை

மரணம் பற்றிய

செய்திக் குறிப்புகளில்

என் சாவு

பற்றிய தேடல்களை

செய்கின்றது

மனம்

நிழலி: 2012-07-28 இரவு 9:00

ஒவ்வொரு சாவு வீடும்

தனக்கான

ஒரு ஒத்திகை பார்க்கும்

இடம் என்று

சொல்லுது

மனம்

ஒருவகையில் சுடலை ஞானம் என்றும் சொல்லலாம் . உணர்வுக்கவிதைக்கு மிக்கநன்றிகள் .

Edited by கோமகன்

  • கருத்துக்கள உறவுகள்

மரணத் தேவதை,

மறைந்தும் மறையாமல்,

முக்காடு விலக்கி,

முகம் காட்டும் வேளை!

நெஞ்சு ஒரு முறை,

நிமிர்ந்து குனிகையில்,

நெருடுகின்றது, எனக்கு!

எனது நாட்களும்,

எண்ணப் படுகின்றன!

உங்கள் உணர்வுகளை, அப்படியே கவிதையாகக் கீறியுள்ளீர்கள், நிழலி!

Edited by புங்கையூரன்

  • கருத்துக்கள உறவுகள்

மரணம் என்பது, ஒருவருக்கு கிடைத்த விடுதலையாக இருந்தாலும்...

அது மற்றவர்களுக்கு ஒரு சுமையே.

மரணத்தின் கண்ணீரை, கவிதையில் வடித்த விதம் நன்றாக இருந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

மரணத்தை நினைத்தால் தானே பயப்படுவதுற்கு, கல்லி வல்லி...சந்தோஷமாக இருக்கும் பொழுதை செலவிடுங்கள்,

நல்ல கவிதை, நன்றி பகிர்வுக்கு நிழலி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=5]நல்ல கவிதை[/size]

மரணம் என்ற சொல்லை ஒவ்வொரு மனிதனும் கடந்து விடத்தான் நினைக்கிறான். மரணம் பற்றிய அழகான கவிதை. நன்றி நிழலி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி நிழலி அண்ணா கவிதைக்கு. :)

நீங்கள் முன்னரும் பலதடவைகள் இது குறித்துப்பேசியுள்ளீர்கள்.

என்னுடைய கேள்வி யாதெனில் மரணம் குறித்த பயம் எதற்கு? மரணம் என்பதை ஏன் மிகவும் பயங்கரமான ஒன்றாக பார்க்க வேண்டும்?

ஒரு தாயின் கருவறையில் குழந்தை இருக்கும் போது அக்குழந்தைக்கு அந்த கருப்பை தான் உலகம். குழந்தை பூமியில் பிறக்கும் போது ஒரு மரணத்தில் தானே ஜனனம் நிகழ்கிறது? ஒரு உலகத்தை விட்டுத்தானே மறு உலகம் வருகிறது? அது போலத்தானே மனிதனும் பூவுலகை விட்டு பிரியும் போது அடுத்த உலகத்துக்கு செல்கிறான். இதுவும் ஒரு இறப்பின் பின்னரான பிறப்பாய் இருக்கலாமே? இறப்பின் பின்னரான உயிரின் அடுத்த நிலை தான் என்ன என்று தெளிவில்லையே தவிர இதை ஏன் பாரிய விடையமாக எடுக்க வேண்டும்?

கருவறையில் குழந்தையின் காலம் 10 மாதம் போல பூவுலகில் மனிதனின் சராசரி காலம் 60 ஆண்டுகள் என்று வைத்தாலும், காலம் தான் மாறுபடுகிறதே தவிர இறப்பும்,பிறப்பும் தொடர்ந்து கொண்டு தானே இருக்கும்? :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி அண்ணா அடிக்கடி மரணம் பற்றிய கவிதை எழுதுவது வளமை தானே..

நாள் கோள்

நற்பலன் பாராது

இயற்கையின்-இரக்கமற்ற

அழைப்பு.

நெடிய உயிர் துடிப்பின்

இயக்கம் நின்று விட்ட,

பொழுதுகள் மரணம்

என்ற பெயர் பெற்று

நிற்கும்..

ஜனனத்தின் போது

வாழ்த்துக்கள் கூறி

வரவேற்ற சொந்த

பந்தங்கள் போகும்

போது கண்ணீர்

அஞ்சலிகளோடும்

ஒப்பாரிகளோடும்

வளி அனுப்பி

நிற்பர்...

கொடிய காலன் கோவம்

கொள்ளும் போது தன்

பாசக்கயிற்றை வயது

வரம்பின்றி வலையாய்

வீசி பார்க்கிறான்..

நாங்கள் என்ன

மீனவன் வலையில்

சிக்கும் மீன்களா..

ஆனாலும் என்றோ

ஓரு நாள் போவது

நிட்சயம்.

வாழும் மட்டும்

புதிதாய் புலரும்

எல்லா நாளும்

நாம் இறவா நாளே.

கவிதைக்கு நன்றி

யாயினி

. நன்றாக உள்ளது.

Edited by ukkarikalan

  • கருத்துக்கள உறவுகள்

மரணத்தை விட கொடியது மரண பயமாம்...எனக்கு சாவிற்கு பயமில்லை ஆனால் உத்தரித்து சாகாமல் உடனே செத்து விட வேண்டும் என்பது என் ஆசை

  • தொடங்கியவர்

கருத்தெழுதிய அனைத்து அன்பு உறவுகளுக்கும் என் நன்றிகள்

1.

சாவு பயத்துக்கும் சாவு பற்றிய பிரக்ஞைக்கும் இடையில் வித்தியாசம் இருக்கு என நம்புகின்றேன். எனக்கு இருப்பது சாவு பற்றிய பிரக்ஞை நான் வாழ்க்கையை பார்க்கும் விதமே சாவின் ஊடாகத்தான். இன்று இருப்பேன் நாளை இல்லை என்ற ரீதியில் பார்ப்பதால் தான் என்னால் என் வாழ்வின் ஒவ்வொரு விடயத்தையும் ரசித்து வாழ முடிகின்றது. ஒவ்வொரு ஊராய் போய் பார்த்து களிக்க முடிகின்றது. ஒவ்வொரு பெண்ணின் அழகையும் ஆராதிக்க முடிகின்றது. இவை எல்லாவற்றையும் விட சக மனிதர்களை ஓரளவுக்கேனும் நேசிக்க முடிகின்றது. ஜீவா எழுதியதன் பொழிப்பை இன்னொரு விதத்தில் நான் உள் வாங்கி வாழ்கின்றேன். பிறப்புக்கும் சாவுக்கும் இடையில் இருக்கும் இந்த வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்தையும் என்னால் வாழ முடிகின்றதே இந்த வாழ்க்கை எந்த நிமிடமும் முடிந்து விடும் என்பதால் தான். அதிகமான கோட்பாடுகளோ, தலையில் வைத்து சுமக்க முடியாத கொள்கைகளோ என்னிடம் இல்லாமல் இருப்பதும் வாழ்க்கையை அது முடியும் முன் அணு அணுவாக ரசிக்க வேண்டும் என்ற அவாவில் தான்.

இதைத் தான் சாவு பற்றிய பிரக்ஞை என்கின்றேன்

மற்றவரின் சாவு என்பது அவரை முன்னுக்கு அனுப்பி நாங்கள் போகக் காத்திருக்கும் விடயம் என்றுதான் நான் எப்பவும் நினைப்பதுண்டு.

2.

செத்த வீடுகளில் இருக்கும் சூனியம், அமைதி, பயம் எல்லாவற்றையும் உற்றுப் பார்த்து இருக்கின்றீர்களா? வளர்த்தப்பட்ட உடலை சூழ நிற்பவர்களின் கண்களில் தெரியும் கலவரத்தை கவனித்து இருக்கின்றீர்களா?

ஒரு இறந்த உடலைக் கண்டு அதிர்வுறாத மனம் இருக்குமா? எல்லா உயிர்களும் சாகப்போகுது என்று தெரிந்த பின்னும் ஏன் இந்த அதிர்வு? ஏனெனில், எல்லா செத்த வீடுகளிலும் 'நாம் செத்தால் இப்படித் தான் செய்வர்' அல்லது 'நானும் இப்படித்தான் கைகள் கோர்த்து கிடப்பன்' என்ற ஒரு நினைவு ஒரு வினாடியாவது உள் மனதில் வந்து போகும். அந்த வினாடியில் எழுவதைத்தான் கவிதையாக்க முனைந்தேன்.

செத்தவர் எமக்கு நெருக்கமானவராக இல்லாத போதும் ஒரு செத்த வீட்டில் மனம் இனம் புரியா அமைதியை கொள்வது, எம் சாவைப் பற்றிய நினைவு உள் மனதில் எழுவதால்தான் என நம்புகின்றேன்.

ரெம்பவே ஃபீல் செஞ்சு எழுதியிருக்கீங்க நிழலி அண்ணன் :( . எங்க ஊரில சாவுவீட்லை துக்கம் இருந்தாலும் அவங்க சுடுகாட்டுக்கு போறப்போ ரெம்ப ஜாலியா தமுக்கு அடிச்சு டான்சு எல்லாம் ஆடி அவங்கள எரிச்சிட்டு வர்றோம் . அப்போ இதுகூட எங்கள நாமே சீட் பண்றோம்னு எடுத்துக்கலாமாநிழலி அண்ணன் :):) ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=4]கவிதை நன்றாக உள்ளது[/size]

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க்கையை எப்படி அனுபவிக்கின்றிர்களோ அப்படியே மரணத்தையும் எதிர்கொள்ளுங்கள் என்று பாலா அண்ணர் தன்னுடைய இறுதிக்காலத்தில் சொன்னார் .இது உண்மை ,

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒவ்வொரு மரணம்um எங்களுக்கு சொல்லுகிற செய்தி ஒன்றாக விருப்பினும் அதை நாங்கள் உணர்ந்து கொள்ளுகிற விதம் ஆளுக்கு ஆள் நேரத்துக்கு நேரம் மாறத்தான் செய்கிறது.

இந்த கவிதை நிழலி எழுதுவததர்ற்கு முதல் நாள் நிழலியுடன் நான் திண்ணையில் கதைத்தேன்-அதனால் இந்த கவிதைக்குரிய உடனடிக் காரணத்தை என்னால் உணர்ந்து/ தெரிந்து கொள்ள முடிகிறது- அதன் பிறகு எனக்கு தொடர்ந்து இரவு வேலை, யாழ் பார்பதோடு மட்டும் முடிந்துவிடும், கருத்து/ பின்னுட்டம் எழுதுகிற மனநிலை இருப்பதில்லை.

இன்று நான் அறிந்த செய்தி- நேற்று இரவு; எனக்கு பதில் போட சொல்லுகிறது; நான் வேலை செய்கிற இடத்தில் உள்ள ஒரு இந்தியன் மருத்துவர், பழகுவதர்ற்கு இனிமையானவர், அவர் ஒரு Gastroenterologist - என்கின்ற- குடல் சமிபாடு சம்பந்தபட்ட நிபுணர், USA இல் மிகவும் கூடிய வருமானம் பெரும் வைத்திய பிரிவுகளில் ஒன்று. வடிவாக தெரியவில்லை, கிட்டதட்ட ஒரு மாதத்திற்கு/ அதை விட குறைந்த காலத்துக்குள்; colonoscopy - எனப்படுகிற குடல் குழாய் பரிசோதனை செய்தாரம்- ஏதேன் நோய் அறிகுறி இருந்து செய்தாரோ, அல்லது வழமையான screening எனப்படுகிற வருமுன் காப்பு முறைக்காக செய்தாரோ தெரியவில்லை, அவருக்கு குடலில் ஒரு கட்டி இருந்தாம், USA உள்ள முதல் 100 க்குள் வரக்கூடிய வைத்தியசாலையில் , அறுவை சிகிச்சை நடந்து 3 அல்லது 4 ஆம் நாள் இறந்து விட்டார். அவரது வயது எங்களுக்கு வடிவாக தெரியவில்லை ஆனால் ஒரு 55 இருந்து 60 .......... 65 தாண்டாது. செய்தி கேள்விபட்டவுடன் உடனே எனக்கு ஞாபகதிர்ற்கு வந்தது, "பன்ன வீட்டில பாய் இல்லை; வைத்தியர் பெண்சாதி, புழு கொட்டி செத்தாளம்".

எங்களுக்கு சாவுக்கான காரணங்கள் தெரிகிறது, ஆனால் சாவு மாத்திரம் மாறுகிறதாய் தெரிவதில்லை..

வந்தவர் எல்லாம் தங்கி விட்டல் இந்த மண்ணில் நமக்கே இடம் எது?...யாரோ செத்ததால் தான் நான் வாழுகிறேன் என்று நினைத்தால் சாவைப்பற்றிய பயம்; எதிர்பார்ப்பு குறையுமோ தெரியவில்லை.

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

கருத்தெழுதிய அனைத்து அன்பு உறவுகளுக்கும் என் நன்றிகள்

1.

சாவு பயத்துக்கும் சாவு பற்றிய பிரக்ஞைக்கும் இடையில் வித்தியாசம் இருக்கு என நம்புகின்றேன். எனக்கு இருப்பது சாவு பற்றிய பிரக்ஞை நான் வாழ்க்கையை பார்க்கும் விதமே சாவின் ஊடாகத்தான். இன்று இருப்பேன் நாளை இல்லை என்ற ரீதியில் பார்ப்பதால் தான் என்னால் என் வாழ்வின் ஒவ்வொரு விடயத்தையும் ரசித்து வாழ முடிகின்றது. ஒவ்வொரு ஊராய் போய் பார்த்து களிக்க முடிகின்றது. ஒவ்வொரு பெண்ணின் அழகையும் ஆராதிக்க முடிகின்றது. இவை எல்லாவற்றையும் விட சக மனிதர்களை ஓரளவுக்கேனும் நேசிக்க முடிகின்றது. ஜீவா எழுதியதன் பொழிப்பை இன்னொரு விதத்தில் நான் உள் வாங்கி வாழ்கின்றேன். பிறப்புக்கும் சாவுக்கும் இடையில் இருக்கும் இந்த வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்தையும் என்னால் வாழ முடிகின்றதே இந்த வாழ்க்கை எந்த நிமிடமும் முடிந்து விடும் என்பதால் தான். அதிகமான கோட்பாடுகளோ, தலையில் வைத்து சுமக்க முடியாத கொள்கைகளோ என்னிடம் இல்லாமல் இருப்பதும் வாழ்க்கையை அது முடியும் முன் அணு அணுவாக ரசிக்க வேண்டும் என்ற அவாவில் தான்.

இதைத் தான் சாவு பற்றிய பிரக்ஞை என்கின்றேன்

மற்றவரின் சாவு என்பது அவரை முன்னுக்கு அனுப்பி நாங்கள் போகக் காத்திருக்கும் விடயம் என்றுதான் நான் எப்பவும் நினைப்பதுண்டு.

2.

செத்த வீடுகளில் இருக்கும் சூனியம், அமைதி, பயம் எல்லாவற்றையும் உற்றுப் பார்த்து இருக்கின்றீர்களா? வளர்த்தப்பட்ட உடலை சூழ நிற்பவர்களின் கண்களில் தெரியும் கலவரத்தை கவனித்து இருக்கின்றீர்களா?

ஒரு இறந்த உடலைக் கண்டு அதிர்வுறாத மனம் இருக்குமா? எல்லா உயிர்களும் சாகப்போகுது என்று தெரிந்த பின்னும் ஏன் இந்த அதிர்வு? ஏனெனில், எல்லா செத்த வீடுகளிலும் 'நாம் செத்தால் இப்படித் தான் செய்வர்' அல்லது 'நானும் இப்படித்தான் கைகள் கோர்த்து கிடப்பன்' என்ற ஒரு நினைவு ஒரு வினாடியாவது உள் மனதில் வந்து போகும். அந்த வினாடியில் எழுவதைத்தான் கவிதையாக்க முனைந்தேன்.

செத்தவர் எமக்கு நெருக்கமானவராக இல்லாத போதும் ஒரு செத்த வீட்டில் மனம் இனம் புரியா அமைதியை கொள்வது, எம் சாவைப் பற்றிய நினைவு உள் மனதில் எழுவதால்தான் என நம்புகின்றேன்.

ஒவ்வொரு சாவு வீடும்

தனக்கான

ஒரு ஒத்திகை பார்க்கும்

இடம் என்று

சொல்லுது

மனம்

நிறையவே சிந்தனைகளில் ஒன்றித்து இருக்கிறீர்கள் அண்ணா...கூடப் பயணிக்கும் ஒரு சக சிந்தனையாளனை கண்ட திருப்தி...எப்பவாவது வாய்ப்புக்கிடைத்தால் ஒரு மாலைப்பொழுதில் கோப்பைகளை உங்களுக்கு ஊற்றிதந்தபடி நிறையப்பேசணும் அண்ணா...

மரணத்தை பற்றி எப்போதும் சிந்தித்ததில்லை, அது வரும் போது ஏற்றுக்கொள்ளவேண்டியதுதான் இது தான் என் நிலைப்பாடு .

எனது தாயாரின் மரணவீடு கூட நாங்கள் அதை ஓரளவு ஏற்றுக்கொண்ட பக்குவத்துடனேயே நடந்துகொண்டோம் .இறுதி நாள் இறுதி நிகழ்வின் போது உறவினர் யாராவது பெரும் கோஷம் எழுப்பி கத்தி குளறி விழுந்து எழும்பினாலும் என்று அம்மாவின் அருகில் நின்ற நான் மிக ஆணித்தரமாக "அம்மா இருக்கும் போதும் மிக சந்தோசமாகத்தான் இருந்தார் போகும் போதும் அம்மாவை சந்தோசமாகத் தான் வழியனுப்பி வைக்க விரும்புகின்றோம். தயவு செய்து யாரும் கத்தி குளற கூடாது" என்று சொல்லிவிட்டேன் .

இதில் சரி பிழை எமக்கு தெரியவில்லை ஆனால் நாம் அதைத்தான் விரும்பினோம் .

அடுத்தநாள் சில நண்பர்கள் ,உறவினர்கள் சொன்னார்கள் தமக்கு ஒரு மரணவீட்டிற்கு வந்த உணர்வு ஏற்படவில்லை என்று .இதுவும் சரியோ பிழையோ என்று எனக்கு இன்னமும் தெரியவில்லை .

  • கருத்துக்கள உறவுகள்

நிழலியின் கவிதைக்கு நன்றிகள்

இங்கு இதை எழுதுவது சரியோ தெரியில்லை.

அர்யூனின் தெளிவுக்காக எழுதுகின்றேன்.

எனக்கும் இதுபோன்று வயதானவர்கள் இறந்த வீட்டில் கத்தி குளறி அட்டகாசம் செய்யும் பிள்ளைகள் பற்றி ஒரு இழக்காரம் இருந்தது. எனது தகப்பனார் இறக்கும்வரை.

ஆனால் இனிமேல் பார்க்கமாட்டோம் இது தான் கடைசிச்சந்திப்பு என்ற நிலைவரும்போது இதுவரை அடக்கிவைத்திருந்த சோகம் விரக்தி இயலாமை தவிப்பு எல்லாம் சேர்ந்து வெடித்து சிதறும்போது அதை எவரும் தடுத்துவிடமுடியாது. அடக்கிவிட முடியாது.

அதை அடக்கிவர்கள் வாழ்நாள் பூராகவும் எதையோ விழுங்கியவர்கள்போல் சோகமாகவே வாழவேண்டிவரும்.

உண்மையில் அழுகை வந்தால் வெடித்து அழ வேண்டும். அவ்வாறு செய்தால் தான் மனதில் இருக்கும் அழுத்தம், துயரம், சுமை எல்லாம் நீங்கி விடும்.துயரத்தை பொத்தி வைக்கும் போதுதான் அது மன அழுத்தத்தை தரும் விடயமாக மாறுகின்றது. எம் ஊரில் ஒப்பாரி வைக்கும் பழக்கம் மனோவியல் சார்ந்து மிகவும் சரியான ஒரு பழக்கம்.

என் அப்பாவின் மரண வீட்டில் வீம்புக்காக (மற்றவர்கள் பார்வையில் உறுதியானவராக காட்டிக் கொள்ளவும்) அழாமல் இருந்தது தான் எனக்கு மரணம் பற்றிய அதிகளவு பிரக்ஞையை ஊட்டியது என்று நினைக்கின்றேன். முற்றுப் பெறாத ஒரு தொடர் கதையாக அப்பா அடிக்கடி கனவில் வருவதும் இதனால் தான் என்று நம்புகின்றேன்.

நிறையவே சிந்தனைகளில் ஒன்றித்து இருக்கிறீர்கள் அண்ணா...கூடப் பயணிக்கும் ஒரு சக சிந்தனையாளனை கண்ட திருப்தி...எப்பவாவது வாய்ப்புக்கிடைத்தால் ஒரு மாலைப்பொழுதில் கோப்பைகளை உங்களுக்கு ஊற்றிதந்தபடி நிறையப்பேசணும் அண்ணா...

இப்பவே ஓசியில் சிவாஸ் ரீகல் குடிக்க ஒரு சந்தர்பம் கிடைச்சாச்சு எனக்கு :)

பல தடவை எம் இருவருக்கும் இடையில் ஒரே அலைவரிசை இருப்பதை அவதானித்துள்ளேன். ஆனால் உங்கள் வயதில் நான் இருக்கும் போது உங்களுக்கு இருக்கும் பக்குவம் எனக்கு இருந்ததில்லை (இப்ப மட்டும் இருக்காக்கும் என கேட்பது விளங்குது..)

அழாமல் எவராலும் இருக்கமுடியாது .ஆனால் அம்மாவின் பிரிவை ஓரளவு ஏற்று முடிந்தவரை அமைதியாக இருந்து அனுப்பிவைத்தோம்.

ஆனால் எனது அக்காவின் கணவரின் மரணம் (கார் விபத்தில் லண்டனில் இறந்தார் ) இதற்கு நேர்மாறாகவே இருந்தது .

பிரிவின் பின்பு என்று விரிவாக ஒருமுறை எழுதவேண்டும் .

  • கருத்துக்கள உறவுகள்

மரணத்தை நாங்கள் துயரமாகக் கொள்கின்றோம்.

ஆனால் சில நேரங்களில் அது ஒரு வரமாகக் கூட இருக்கலாம்.

கவிதையில் மரணபயத்தை உருவாக்கிய நிழலிக்கு நன்றிகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.