Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நினைத்தாலே நெஞ்சு பக் பக்

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புங்கையூரானினதும் மல்லையூரானினதும் கருத்துக்களை நான் தவறென்று கூறவில்லை. பாவிப் பயல்கள் என்னிலேயே பழி போடுறியள். பரமும் சதீசும் ஒரே வீட்டில்த்தான் இருப்பவர்கள். எனக்குக்கூட சதீசில்த்தான் அதிக கோபம். எவ்வளவு கேட்டும் வாயே திறக்கவில்லையே எண்டு. இத்தாலியில் நாம் போன இடத்தில் மருந்திக்குக்க்கூட மனிதர் இல்லாத இடத்தில் போன் பண்ணின உடன எப்பிடிப் போலிஸ் வரும்.????அத்துடன் நீங்கள் ஆண்கள்.ஒரு பெண்ணின் மனநிலையில் இருந்து பார்க்க முடியாது. இந்தக்க் காலத்தில் அண்ணன்தம்பியே குடும்ப உறவுகளின் அருமை தெரியாது எனக்கென என்றிருக்கும்போது மகிந்தன் அண்ணாவை நான் குறை கூற மாடன். மல்லை இத்தாலி மற்றைய ஐரோப்பிய நாடுகள் போல் இல்லை. ரோம், நேப்பொலி போன்ற இடங்கள் எந்தப் பிரச்சனையும் இல்லாதவை. நாம் போன இடம் வன்னிக்காடு என்று எழுதியிருந்தேன். வன்னிக்காட்டில் நம்மவர்தான் இருக்கிறார்கள். இங்கே யாரையும் தெரியாது. என்ன நடந்தாலும் ஒருவருக்கும் தெரியப்போவதுமில்லை. நாங்கள் வேறொரு நாட்டிலிருந்து போயிருக்கிறோம்.கூடவே இரண்டும் சிறிய பிள்ளைகள் அவர்கள் மனநிலையை நினைத்துப் பாருங்கள். பொது இடங்களில் எம்மை அவமானப் படுத்தவும் பயமுறுத்தவும் பரத்துக்கு என்ன உரிமை. மனிதத்தன்மை என்பதே இல்லாத ஒருவனுக்காகக் கதைக்க நியாயப்படுத்த உங்களால் முடியலாம் புங்கயூரான். ஒத்துக்கொள்ள என்னால் முடியாது. கரும்பு நீங்கள் சொல்வதுபோல் நான் வித்தியாசமான ஆள்த்தான்.கருத்தெழுதி என்னை எழுதத் தூண்டிய உறவுகளுக்கும் முக்கியமாக யாழ் களத்துக்கும் நன்றி கூறவேண்டும். விரைவில் இன்னுமொரு நீண்ட வரலாற்றுத் தொடர் சுமேரியர் பற்றியது ஆரம்பிக்க உள்ளேன்.

  • Replies 103
  • Views 14.3k
  • Created
  • Last Reply

நன்றாக எழுதி இருக்கிறீர்கள் அக்கா. வாழ்த்துக்கள்

என்ன கதை ருசியில், தினேஷ் என்ற உங்கள் கணவரின் தம்பியின் பெயரை அடிக்கடி சதீஸ் என்று மாற்றி எழுதியதை நீங்கள் மட்டுமல்ல, உங்கள் கதையால் கட்டுண்ட ரசிகர்கள் கூட கவனிக்கவில்லை.

இது உங்கள் கதையில் திகில் தன்மைக்கு ஒரு எடுத்து கட்டு.

விறுவிறுப்பாக கதையை கொண்டு சென்ற உங்களுக்கு பாராட்டுகள் அக்கா. தொடர்ந்து எழுதுங்கள். :)

என்ன கதை ருசியில், தினேஷ் என்ற உங்கள் கணவரின் தம்பியின் பெயரை அடிக்கடி சதீஸ் என்று மாற்றி எழுதியதை நீங்கள் மட்டுமல்ல, உங்கள் கதையால் கட்டுண்ட ரசிகர்கள் கூட கவனிக்கவில்லை.

அப்பாடா பகலவன் அண்ணா, சொல்லிட்டார். எனக்கும் அந்த குழப்பம் இருந்தது. ஒருவேளை இரு தம்பிகளோ என்று நினைத்தேன். ஆனால் ஒருவர் என்று சொல்கிறாரே என்று குழம்பி விட்டேன். :)

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]உங்களுக்குள்ள் வேலை சிரமத்தின் மத்தியிலும் கதையை முடித்தமைக்கு நன்றி . அனுபவ பாடங்களை வாழ்க்கையில் மறக்க முடியாது .கனவிலும் துரத்துவது போல் வரும். பதிவுக்கு நன்றி [/size]

நன்றாக எழுதி இருக்கிறீர்கள் அக்கா. வாழ்த்துக்கள்

என்ன கதை ருசியில், தினேஷ் என்ற உங்கள் கணவரின் தம்பியின் பெயரை அடிக்கடி சதீஸ் என்று மாற்றி எழுதியதை நீங்கள் மட்டுமல்ல, உங்கள் கதையால் கட்டுண்ட ரசிகர்கள் கூட கவனிக்கவில்லை.

இது உங்கள் கதையில் திகில் தன்மைக்கு ஒரு எடுத்து கட்டு.

அதை நான் கவனித்தேன். ஆனல் ஒன்று கதை பெயர். மற்றது பழக்க தோசத்தால் கதைக்குள் புகுந்து விடும் வீட்டு பெயர் என்றுதான் நான் நினைத்தேன். கதையின் சில பாகங்கள் தன்னும் உண்மையாக இருக்கும் சந்தர்ப்பத்தில் பெயர்கள் உண்மையாக இருக்க ஒரு சந்தர்ப்பத்தை மொசொ அக்கா விட்டு வைத்திருக்க மாட்டா. அதனால் பெயரை பற்றி நான் அதிகம் அலட்டிகொள்ளவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

நானும் ரசித்து வாசித்தவர்களில் ஒருத்தன். பெயர் மாற்றத்ததை நானும் அதானித்தேன்.ஆனால் கதையின் முடிவை அறியும் அவசரத்தில் இதைப்பற்றி பெரிதாக அலட்டிக்கொள்ள வில்லை.கதையின் இறுதிப்பகுதியில் எனக்கும் ஓரினச்சேர்க்கையாக இருக்குமோ என்ற சந்கேம் வரத்தான் செய்தது.பின்பு பரத்தின் உறவுப் பெண்ணை மணந்தது என்று பாக்கும் போது அந்தச் சந்தேகம் மேலும் வலுப்பெறுவது மாதிரி ஒரு உணர்வு.எது எப்படியோ உங்கள் பகிர்வும் முக்கியமாக உங்கள் எழத்து பாணியும் சூப்பர். நன்றி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மல்லையூரான் நீங்கள் குறிப்பிடுவதுபோல் கதையின் சிலபகுதி மட்டும் உண்மையல்ல. முழுவதும் உண்மைச்சம்பவம்தான். பெயர்கள் மட்டுமே மாற்றப்பட்டுள்ளன. பகலவன் நீங்கள் எழுதியபிறகுதான் பெயர் மாற்றியது என் கண்ணுக்கே தெரிந்தது. இதையே கற்பனை கலந்து நாவலாக்கவே முடியும். முடிந்த கதைக்காக நேரம் செலவிட நான் விரும்பாததும், மற்றைய கட்டுரைக்கான தயார் படுத்தலிலும் நேரம் செலவிடுவதும் தான் இத்தோடு கதையை முடிக்கக் காரணம். கடந்த மாதம் பரமும் தினேசும் யாழ்ப்பாணம் போய்ச் செய்த கூத்தே இன்னுமொரு கதை எழுதலாம்.பின்பு எனக்கு நேரம் வரும்போது எழுதுவேன். எத்தனையோ எனக்குத் தெரிந்த புலம்பெயர் நாடுகளில் வாழ்பவர்களின் கதைகளை எழுதவேண்டும் என்பதும் என் அவா. நேரம் தன இல்லை. நன்றி நிலாமதி,துளசி, பகலவன் மற்றும் அனைவர்க்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

தொடரட்டும் தங்கள் எழுத்துப்பணி.

அதற்கு துணையிருக்கட்டும் ஆண்டவர்.

நன்றி

உங்கள் கதை உயிரோட்டமாக இருந்ததில் மாற்றுக்கருத்துக்கு இடம் இல்லை . கதை சொல்ல வந்த செய்தி , அதாவது உங்கள் மைத்துனர் பரம் தொடர்பான உறவு நிலைய தொங்கு பறியல் வைத்திருந்து அதை தீர்மானிக்கும் முடிவை வாசகர் கைகளில் விட்டாலும் , அதில் உங்கள் பார்வையே முக்கியமானது . அதில் கவனம் செலுத்தியிருந்தால் இந்தக்கதை பல்வேறு பரிணாமங்களை எட்டியிருக்கும். ஆக்கபூர்வமாக ஏதாவது செய்யவேண்டும் என்ற உங்கள் உளபாங்கை மனந்திறந்து பாராட்டுகின்றேன் :) :) .

Edited by நியானி

  • கருத்துக்கள உறவுகள்

inaippukku nanri sakothari!

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கதை சுமோ அக்கா. உவங்கள் ரெண்டு பேரும் கண்போர்மா கேய் தான். அதிலும் உங்கள் மச்சான் தான் "taker" அதாவது கேய்களின் உறவில் பெண்ணின் வேலையை செய்பவர் போல உள்ளது. உருப்படியான ஆம்பிளை எண்டால் பல்லைக் கழட்டியிருக்க வேண்டும். விசேடமாக ஒரு பொம்பிளை நீங்கள் இருக்கும் போது தூசணத்தில் பேசியது மன்னிக்க முடியாது. உங்கள் கணவரும் நாலு சாத்து சாத்தியிருக்க வேணும். எண்ட தம்பிய யாரும் ஏதும் கதைச்சா, நானும் அவனும் சேர்ந்தே மற்றவருக்கு சங்கூதி விடுவோம். உங்கட மச்சான் எதிலையோ நல்லா மாட்டுப் பட்டுப் போனார். பரமுவைப் போடுவது, சமூகத்துக்கு அவர் செய்யும் ஒரு உயர்ந்த பணி என்றே நான் சொல்லுவேன்.

கதை எழுதிய விதம் மிகவும் அருமை .கடைசி இணைப்பும் முடிவும் முழுமையானதாக இல்லை .

சொந்த தம்பி அந்த நிலையில் இருக்கும் போது ஏதும் செய்யமுடியவில்லை என்பது நம்ப முடியாமல் இருக்கு .ஒரு தொலைபேசி அழைப்புடன் முழுப்பிரச்சனையும் முதன் நாளே தீர்ந்திருக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

மெசோ அக்கா கதையை வாசிக்கும் போது சுவாரசியமான எழுத்தாளர் என்பதை நிரூபித்து விட்டீர்கள்.அதுவும் உண்மை சம்பவத்தை உணர்வு பூர்வமாக எழுதியுள்ளீர்கள்.அடுத்த முறை சுண்டல் சிரிக்கும் படியாக ஒரு கதையை எழுதி விடவும். ஏதோ "கறுமம்" என்றும் திட்டி விட்டு போயிருக்கிறார். :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்
:D

.......... .கடைசி இணைப்பும் முடிவும் முழுமையானதாக இல்லை .

சொந்த தம்பி அந்த நிலையில் இருக்கும் போது ஏதும் செய்யமுடியவில்லை என்பது நம்ப முடியாமல் இருக்கு .ஒரு தொலைபேசி அழைப்புடன் முழுப்பிரச்சனையும் முதன் நாளே தீர்ந்திருக்கும்

இனி இந்தபக்கம் இப்படி சைட் அடிக்கிற கதைளோடை வாறது கவனம். கோல்போட சார்ச்சிலை தொலை (ஞ்சுபோன) பேசியையை தேட தேவை இல்லை. கையில் கொண்டுதிரியும் கொட்டனே போதும். :D

Edited by மல்லையூரான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்தெழுதிய கோமகன்,விசுகு, நுணாவிலான்,சுவை,தும்பளையான்,அர்ஜுன் ,மல்லையூறான் ஆகியோருக்கு நன்றி. ஒருவர் தானாக ஆசைப்பட்டால் ஒழிய ஒருவரை மீட்பது கடினம். குடியை மறக்கச்செய்வதுபோல் தான்.உங்கள் எழுத்துக்கள் என் எழுத்தாற்றலைத் தூண்டுகின்றன ஆனாலும் என் எழுத்தைப் பார்த்ததும் என்மேல் கொலை வெறி வந்ந்ததாக ஒருவர் கூறினார். அதுதான் ஏன் என்று கேட்டதற்ற்க்குப் பதில் இல்லை. கவிதைகூட இக்காலத்தில் இலக்கணம் துறந்து இலகு நடைக்கு வந்தாச்சு.நான் எழுதியது முதற் கதை தானே போகப் போகத் திருந்திக் கொள்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்லவிதமாக எழுதியுள்ளீர்கள், வாழ்த்துகள் & தொடருங்கள்

[size=4]பெயரெடுக்க சொந்த மச்சானையே கதையாக்கி யாராவது விற்பார்களா?[/size]

[size=4]உங்கள் பிள்ளையோ சகோதரமோ செய்திருந்தால் உங்கள் மனநிலை எப்படியிருக்கும்?[/size]

[size=4]உங்கள் கணவனிற்கு நீங்கள் இப்படியெழுதியது தெரியுமா?[/size]

[size=4]இதைவிட நல்ல கருவில் கதைகளே எழுத தெரியதா?[/size]

[size=4]தமிழ் சினிமாந பரவாயில்லை, இது மலையாளபட மாதிரியிருக்கு.[/size]

[size=4]நாய்களுக்கு எழும்புத்துண்டுகள் மாதிரி முதல் பணத்தால அடித்தீர்கள் இப்ப....இனி..[/size]

[size=4]திறமையை நல்லெண்ணத்துடன் வெளிகொணருங்கள்ந மற்றவனை விற்று பிழைப்பு நடத்த வேண்டாம்[/size]

[size=4]மற்றவர்களின் படுக்கையை அறையை எட்டிப்பார்ப்பதும் இதுவும் ஓன்றுதான்[/size]

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

[size="4"][size="3"]நன்றி குருவி உங்கள் கருத்துக்கு,

மற்றவர்களுக்கு நன்றாக இருப்பது உங்கள் கண்ணுக்குத் தவறாகப் பட்டால் நான் என்ன செய்ய முடியும். நான் என் பெயரையும் சொல்லவில்லை. மச்சானின் பெயரையும் கூறவில்லை. உங்களுக்கு ஏன் கோபம் வருகிறது. நீங்களும் என் மச்சான் போன்ற இயல்புடைய ஆளா?

காசால் அடிக்க நானொன்றும் கோடீஸ்வரி இல்லை. நான் ஒன்றும் காசை வீணாக்கவில்லை.பணத்தின் அருமை எனக்கு நன்றாகத் தெரியும் ஏனெனில் எவரிடமும் கை ஏந்தாமல் உழைத்துத் தான் சாப்பிடுகிறோம்.நான் திண்ணையில் இருப்பதுவரை என் கணவருக்குத் தெரியும். கள்ளத்தனம் என்னிடம் எப்போதும் இருந்ததில்லை. என் வருகையும் எழுத்தும் உங்களை எதோ ஒருவகையில் பாதித்திருக்கிறது. அதற்க்காக நான் வருந்துகிறேன். தொடர்ந்தும் வாருங்கள்.

[/size][/size]

நன்றி குருவி உங்கள் கருத்துக்கு,

மற்றவர்களுக்கு நன்றாக இருப்பது உங்கள் கண்ணுக்குத் தவறாகப் பட்டால் நான் என்ன செய்ய முடியும். நான் என் பெயரையும் சொல்லவில்லை. மச்சானின் பெயரையும் கூறவில்லை. உங்களுக்கு ஏன் கோபம் வருகிறது. நீங்களும் என் மச்சான் போன்ற இயல்புடைய ஆளா?

காசால் அடிக்க நானொன்றும் கோடீஸ்வரி இல்லை. நான் ஒன்றும் காசை வீணாக்கவில்லை.பணத்தின் அருமை எனக்கு நன்றாகத் தெரியும் ஏனெனில் எவரிடமும் கை ஏந்தாமல் உழைத்துத் தான் சாப்பிடுகிறோம்.நான் திண்ணையில் இருப்பதுவரை என் கணவருக்குத் தெரியும். கள்ளத்தனம் என்னிடம் எப்போதும் இருந்ததில்லை. என் வருகையும் எழுத்தும் உங்களை எதோ ஒருவகையில் பாதித்திருக்கிறது. அதற்க்காக நான் வருந்துகிறேன். தொடர்ந்தும் வாருங்கள்.

இந்தப் பதில் உங்கள் பண்பட்ட மனநிலையைக் காட்டுகின்றது . அதாவது ஒரு எழுத்தாளனை நோக்கி வரும் விமர்சனங்களை காய்த்தல் உவத்தல் இன்றி பக்குவமாக்க் கையாண்டு பதில் இடுவது ஒரு தனிக்கலை . அது உங்களிடம் இருப்பது மகிழ்ச்சியே . நீங்கள் இன்னும் பலபடைப்புகளை படைக்க வாழ்த்துகின்றேன் .

[size=4]மற்றவர்களின் படுக்கையை அறையை எட்டிப்பார்ப்பதும் இதுவும் ஓன்றுதான்[/size]

இங்கு ஓரினச்சேர்க்கை என்பதைவிட 'பரம்' எனும் கதாபாத்திரத்தின் விசித்திரமான போக்கே கதையின் பிரதான அம்சமாக உள்ளது. பரமாக வருகின்ற கதாபாத்திரம் சாதாரணமான நடத்தைகளைக்காண்பித்து இருப்பின் அவர்கள் (பரம் + தினேஸ்) தம்மிடையே எவ்வாறான உறவுநிலையைக்கொண்டிருந்தார்கள் எனும்விடயம் எமது பார்வையினுள் சிக்குப்படாமலேயே போயிருக்கும். ஆனால், பரத்தின் குணவியல்புகள் குழப்பகரமாக அமைந்த காரணத்தினாலேயே இவர்கள் ஓரினச்சேர்க்கையாளர்களோ எனக்கருதப்பட்டது. எனவே, கதை மற்றவர்களின் படுக்கையறைகளை எட்டிப்பார்க்கின்றது என்பதை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை.

எனக்கு மிகவும் பிரியமான ஓர் கலைஞர் Ellen DeGeneres. இவர் ஓர் லெஸ்பியன். இவர் திருமணம் செய்ததும் ஓர் பெண்ணையே. Ellen அவரது நல்ல உள்ளம் காரணமாகவும், தொண்டு செய்கின்ற தன்மை காரணமாகவும், The Ellen DeGeneres Show காரணமாகவும் உலகெங்கும் அறியப்பட்டவர். ஓரினச்சேர்க்கையாளர்களாக வெற்றிகரமாக வாழ்கின்ற எத்தனையோ பல தம்பதிகள் உலகில் உள்ளார்கள் என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது.

ellen-degeneres-portia-de-rossi.jpg

Edited by கரும்பு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி கோமகன்,கரும்பு இருவருக்கும் உங்களைப் போன்றோரின் எழுத்துக்களே என்னை மனம் சோர்ந்து விடாமல் எழுத வைக்கின்றன.புரிதலுக்கு நன்றி.

புது எழுத்தாளர் மாதிரி இல்லாமல் நல்ல சுவாரசியமாக எழுதுகிறீர்கள். தொடருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

யாழுக்கு வந்த புதுவரவான... சுமோவில்,

எழுத்தாளர், பாடகி, நகைச்சுவையாளர் போன்ற பன்முகத்திறமை உள்ளதை, இட்டு பெரு மகிழ்ச்சி அடைகின்றேன். :)

மெசோ - கோமகன் சொன்னது போல் தளர்ந்துவிடாமல் இருக்கவும். காய்க்கிற மரம் தான் கல்லடி படும்!

குருவி - " [size=4]நாய்களுக்கு எழும்புத்துண்டுகள் மாதிரி முதல் பணத்தால அடித்தீர்கள் இப்ப....இனி.." - இதன் அர்த்தம் என்னவோ?[/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.