Jump to content

இளையராஜா இசையை ரசிப்போம்.. இளையராஜா அரசியலை அல்ல..

Recommended Posts

மனசுக்குள் ஒரு கேள்வி எழுகின்றது. கார்த்திகை மாதம் என்று தமிழில் அழகாக குறிப்பிடும் போது அது தமிழ் கார்த்திகை மாதம் தானே. அவ்வாறாயின் கார்த்திகை மாதம் November மாத ஆரம்பத்தில் தொடங்காது. November 02 அன்றும் தமிழில் புரட்டாதி மாதமாகத்தான் இருக்கும்....

Link to comment
Share on other sites

  • Replies 272
  • Created
  • Last Reply

மனசுக்குள் ஒரு கேள்வி எழுகின்றது. கார்த்திகை மாதம் என்று தமிழில் அழகாக குறிப்பிடும் போது அது தமிழ் கார்த்திகை மாதம் தானே. அவ்வாறாயின் கார்த்திகை மாதம் November மாத ஆரம்பத்தில் தொடங்காது. November 02 அன்றும் தமிழில் புரட்டாதி மாதமாகத்தான் இருக்கும்....

அப்ப மாயா கலண்டரிலை ?? :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரி....,

இளைய ராசாவும் வந்தபடியால், ஒண்டும் செய்யேலாது,..ஆனால் ஒரு மாதம் முழுக்க கலை, கலாச்சார நிகழ்வுகள் இல்லாமல் இருக்கிறது என்றால் கரைச்சல். ஊர் மாரியே இங்கே 48 கோவில் திருவிழா, பிறகு முத்தமிழ் விழா, எழுச்சி பாடல்கள் என்று வருடம் முழுக்க கேட்டுக்கொண்டு இருக்கிறதுக்கு. சனி ஞாயிறு மட்டும்தான் நிகழ்வுகள் நடத்தலாம், அதுவும் ஆப் சீசன் என்றால்தான் மட்டபங்களும் மலிவாக கிடைக்கும்..;

இல்லாட்டி தம்பி நிழலி சொல்லுகிறமாதிரி, தமிழ் கார்த்திகையில தொடங்கி, ஆங்கில நவம்பரில் முடித்தால் சோட்அய் அலுவலை முடிக்கலாம்...

இதுஎல்லாத்தையும் விட்டுவிட்டு, இந்தமுறை ஒழுங்க மாவீரர் தினம் கொண்டாட ஒரு பேச்சாளரை பிடிக்க வேண்டும்...அதுக்குத்தான் யாரை பிடிக்கிறது எண்டு தலையை பித்து கொண்டு இருக்கிறேன்..

Link to comment
Share on other sites

மா வீரர்கள் செர்சையோ கொவிலையோ நம்பாமல் தான் தானாக போராட போனவர்கள் அவர்களிற்கு மேடையிலேயே பிரார்த்தனையை நடத்த சொல்லி ஒரு நிமிட மெளனம் கேட்கலாமே அனைவரிற்கும் முன்னால். அறிக்கை எதிர்ப்பு புறக்கணிப்பை விட இது சிறந்தது தானே

அது இன்னும் நல்ல ஐடியாதான் சாத்திரி. ஒரு பத்துப் பதினைந்து டொலர்கள் மிச்சம் பிடிக்கலாம்.

Link to comment
Share on other sites

சரி....,

இளைய ராசாவும் வந்தபடியால், ஒண்டும் செய்யேலாது,..ஆனால் ஒரு மாதம் முழுக்க கலை, கலாச்சார நிகழ்வுகள் இல்லாமல் இருக்கிறது என்றால் கரைச்சல். ஊர் மாரியே இங்கே 48 கோவில் திருவிழா, பிறகு முத்தமிழ் விழா, எழுச்சி பாடல்கள் என்று வருடம் முழுக்க கேட்டுக்கொண்டு இருக்கிறதுக்கு. சனி ஞாயிறு மட்டும்தான் நிகழ்வுகள் நடத்தலாம், அதுவும் ஆப் சீசன் என்றால்தான் மட்டபங்களும் மலிவாக கிடைக்கும்..;

இல்லாட்டி தம்பி நிழலி சொல்லுகிறமாதிரி, தமிழ் கார்த்திகையில தொடங்கி, ஆங்கில நவம்பரில் முடித்தால் சோட்அய் அலுவலை முடிக்கலாம்...

இதுஎல்லாத்தையும் விட்டுவிட்டு, இந்தமுறை ஒழுங்க மாவீரர் தினம் கொண்டாட ஒரு பேச்சாளரை பிடிக்க வேண்டும்...அதுக்குத்தான் யாரை பிடிக்கிறது எண்டு தலையை பித்து கொண்டு இருக்கிறேன்..

சீமான் வர ஏலாது இப்ப புதிசா ஒருத்தரும் விறு விறுப்பா இல்லை செல்வமணி அறிக்கை விட்ட படியா றோஜாவை கூப்பிடலாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரோஜாவையும் கனபோருக்கு தெரியாது எண்டபடியால்- இமிகிரேசன் காரருக்கு- சுகமா விசாவும் எடுக்கலாம்.. :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கார்த்திகை மாதம் ஈழத்தமிழர்களுக்குப் புனிதமான மாதமாக எமது அண்மைய வரலாற்றில் பதிந்து விட்டது. அந்த மாதத்தில் இப்படியான பெரு நிகழ்ச்சிகள் தவிர்க்கப்பட வேண்டும் என்பதுவே எனது தாழ்மையான கருத்து. 2009ம் ஆண்டிற்கு முன், கார்த்திகை மாதத்தில் இப்படியான ஒரு நிகழ்ச்சி நடந்திருக்குமா என்று சற்று சிந்தித்துப் பாருங்கள்?

தலைவரும் போராளிகளும் மௌனித்தவுடன் யாரும் எதையும் செய்யலாம் என்ற நிலைமை தோன்றி விட்டது. 2009 இற்கு முன்னர் இப்படியான நிகழ்ச்சி நடந்திருந்தால் உங்களில் எத்தனை பேர் அதற்கு சென்றிருப்பீர்கள்? ஆதரவளித்திருப்பீர்கள்? என்று மனச்சாட்சியுடன் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழமும் மண்ணாங்கட்டியும்..தூஊ....நாமும் எம் உணர்வுகளும்...தப்பினமாம்....வந்தமாம்....நாலு கதை சொல்லி காலத்தை கடத்தினமாம்...கண்ணே கண்மணியே என எம் வாழ்க்கையை கொண்டு செல்வோமாக....

எனக்கு இன்று பச்சை முடிந்து விட்டது கு.சா.

மூன்று ஆண்டுகளுக்குள்ளேயே இப்படியென்றால் இன்னும் நாலைந்து வருடங்களில் நாம் எம் நிலையை நினைத்தே பார்க்க முடியாது.

Link to comment
Share on other sites

இப்ப இளையராஜா துரோகியா இல்லையா அவரின் பாட்டைக் கேட்கலாமா இல்லையா என்றதை யாராவது சொல்லுங்கப்பா?

Link to comment
Share on other sites

இப்ப இளையராஜா துரோகியா இல்லையா அவரின் பாட்டைக் கேட்கலாமா இல்லையா என்றதை யாராவது சொல்லுங்கப்பா?

எனக்கும் இது தெரிஞ்சாகணும்.. :blink:

Link to comment
Share on other sites

யாழிலை வந்து போகேலை என்று போட்டு போகப்போறன்,

இதுதானே வழக்கமாக எம்மவர் செய்வது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப இளையராஜா துரோகியா இல்லையா அவரின் பாட்டைக் கேட்கலாமா இல்லையா என்றதை யாராவது சொல்லுங்கப்பா?

என்னைப்பொறுத்த வரைக்கும் இளையராஜா ஒரு இசைக்கடல்.அவரையாராலும் தாண்ட முடியாது.அவரை வைத்து விவாதிக்குமளவிற்க்கு இத்தலைப்பு வந்தையிட்டு மிகவும் மனவருத்தமடைகின்றேன்.ஏன் இந்த மாதத்தில் மாபெரும் இசைஅரசு இசைநிகழ்ச்சி நடத்த வேண்டும்?.எத்தனையோ மாபெரும் அழைப்புகளை புறந்தள்ளிய ராஜா ஏன் இந்த மாதத்தில்?????

Link to comment
Share on other sites

குமாரசாமி அண்ணா.. இந்தமாதிரி நிகழ்ச்சிகளை இவ்வாறு திட்டமிட்ட சதியாக இந்த மாதத்தில் நடத்த வேண்டுமானால் ஒரு வடுடத்திற்கு முன்னமே திட்டமிட்டிருக்க வேண்டும்.. அவ்வாறு நடந்திருக்க சாத்தியமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இளசுக்கு காகம் இருக்க பனம்பழம் விழுந்த கதையாக இந்த பிரச்சனை போனாலும்.......சதியென்பது உண்மை...உண்மையாகவும் இருக்கலாம்.

Link to comment
Share on other sites

நான் கனடாவுக்கு வந்து பன்னிரண்டு வருடங்களுக்கு மேலாகிவிட்டது. இன்னும் ஒரு தமிழ் சினிமா இசை நிகழ்ச்சிகளுக்கோ, கேளிக்கைகளுக்கோ போய் இல்லை. இதை சாதனையாககூறவில்லை. நான் சொல்ல வரும் விடயம் என்ன என்றால்.. இந்தப்பிரச்சனைகளை எவருக்கும் தாளம் போடாது வெளியில் நின்று பார்க்கும்போது எனக்கு விளங்குவது என்ன என்றால்...

1. மேலே சுண்டல் கூறியதுபோல இந்த நிகழ்ச்சியை யாரோ புதியவர்கள் செய்கின்றார்கள் என்றதும் காலங்காலமாக இப்படியான விடயங்களை செய்துவந்த பழையவர்களுக்கு தமது அதிகாரம், செல்வாக்கு, விளம்பரம் பறிபோய்விடும் என்று ஆதங்கம் ஏற்பட்டு அதன்வழியான பொறாமையும், எரிச்சலும் வேறு வகையில் புறக்கணிப்பு செய்யவேண்டும் என்று மற்றவர்களை தூண்டுமளவுக்கு அவர்களை குறிப்பிட்ட நிகழ்ச்சிகளுக்கு எதிராக செயற்படவைத்திருக்கலாம்.

2. மேலே சாத்திரி கூறியது போல, தாயத்திலேயே ஆரம்பத்தில் ஒரு நாள், ஒருகிழமை என்று நினைவுகூறப்பட்ட மாவிரர் வாரத்தை கண்டம்விட்டு கண்டம் பாய்ந்து வெளிநாடுகளில் வந்துவிட்டு மாவீரர் மாதமாக ஒரு மாதத்துக்கு நினைவுகூறவேண்டும் என்று கட்டுப்பாடுகள் போடுவது எல்லாம் அதிகப்பிரசங்கத்தனம் என்பதாகவேபடுகின்றது. நீங்கள் ஒருமாதம் அல்ல 365 நாட்களுமே உணர்வுகளுடன், உங்களைக்கட்டுப்படுத்தி வாழலாம். ஆனால், மற்றவர்கள் மீது விதிக்கும் உங்கள் கட்டுப்பாடுகளுக்கு எத்தனைபேர் உடன்படுவார்கள் என்பதுதான் பிரச்சனையே.

கனடா திரையரங்குகளில் தமிழ் திரைப்படங்கள் ஓடுவதையோ தொலைக்காட்சியில் வழமையான சீரியல்களும், சூப்பர் சிங்கரும், குத்தாட்டமும், ஜாக்பாட்டும் ஓடுவதையோ எவராலும் தடுக்கமுடியாது. சனங்களின் வீடுகளுக்கு சென்று ஒவ்வொரு வீட்டிலும் என்ன நடக்கின்றது என்று பார்த்தால் தெரியும். தவிர, தமிழ்க்கடை, தமிழ்க்கேளிக்கைகள் இல்லாவிட்டாலும் சனங்களிற்கு ஏனைய கேளிக்கைகள், கவர்ச்சிகரமான விழாக்கள் தாராளமாகவே உண்டு. கனடாவில் கேளிக்கைகளுக்கும், கொண்டாட்டங்களுக்குமா குறைவில்லை? கிழமைக்கு பல பிறந்தநாள் கூத்துக்கள், அதிலும் surprise birthday என்று நடுச்சாமம் 12.00 மணிக்கு ஆடப்படும் கூத்துக்கள், சாமத்தியவீடுகள், 31கள், விருந்துகள் என பட்டியல் முடிவில்லாமல் நீண்டு செல்கின்றது.

இளையராஜா, ஜெயம் ரவியின் நிகழ்வுகளை இரத்து செய்தால் கனடா தமிழ்ச்சனங்கள் எல்லாம் நோன்புப்பெருநாள் போல் உண்ணாமல், உறங்காமல் தாயக நினைவுடன் செயற்படுவார்கள் என்பது போன்ற மாயைத்தோற்றத்தை ஏற்படுத்துவதெல்லாம் அளவுக்குஅதிகம். ஒவ்வொரு சாட்டுக்களை கூறிக்கொண்டு அதிகாரப்போட்டிகளை அரங்கேறுவதற்கு எல்லோருக்கும் நல்லதொரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. ஏதாவது விடயம் தமது வழியில் வராவிட்டால் உடனடியாகவே சிறீ லங்கா புலனாய்வுத்துறையையும், சிறீ லங்கா அரசையும் அவிழ்த்து களத்தில் இறக்கிவிட்டு கூத்துப்பார்ப்பது நம்மவரின் வழமையான பாணி. இது இம்முறை புதியதல்ல.

ஒவ்வொரு தடவையும் மாவீரர் தினம் என்று வரும்போது ஆளாளின் மயிரைப்பிடித்து இழுபடுவது வழமையாகிவிட்டது. அதற்கு இந்தவருடமும் விதிவிலக்கு இல்லைபோலத்தெரிகின்றது.

[size=4]தமிழனாக பிறந்துவிட்டோம்........[/size][size=1]

[size=4]என்று பெருமூச்சு விட்டு விட்டு நடப்பத்தைஎல்லாம் வெறும் பார்வையாளனாக நின்று பார்த்துவிட்டு போகவேண்டியதுதான்.[/size][/size]

[size=1]

[size=4]நாலுபேர் கூடி போலிகளை ரோட்டில் போட்டு மிதிக்கலாம்.[/size][/size][size=1]

[size=4]பயங்கரவாதிகள் என்று அரசு சொல்லும்......[/size][/size][size=1]

[size=4]ஒட்டு குழு என்று போலிகள் கதை கட்டிவிடும்.....[/size][/size]

[size=1]

[size=4]மெல்லவும் முடியாது விழுங்கவும் முடியாது![/size][/size]

[size=1]

[size=4]அடியோடு அறுக்க வேண்டும்![/size][/size][size=1]

[size=4]புலிகள் அதனால்தான் தோற்றார்கள் என்று அரசியல் ஆய்வாளர்கள் அறிக்கை விடுவார்கள்.[/size][/size]

[size=1]

[size=4]அதிகார வர்க்கத்தின் நிழல் பணம் வைத்திருப்பவர்கள் மேல் படுகிறது.....[/size][/size][size=1]

[size=4]இது நிதர்சனமான உண்மையாக இருப்பதால். [/size][/size][size=1]

[size=4]நாம் எங்கே இருப்பது என்று முடிவை எட்டிவிட வேண்டும்.[/size][/size][size=1]

[size=4]எமக்கு அதில் கஷ்டம் இருக்கும் என்றும் நான் நம்பவில்லை. எமக்காக இளம் பிஞ்சுகள் ஆயுதங்கள் ஏந்தி காவலரண் நோக்கி நகர. மேலை நாடு நோக்கி நூதகமாக நகர்ந்தவர்கள் தானே?[/size][/size]

Link to comment
Share on other sites

எவ்வளவு நாளாக இந்த விடயம் பற்றி பேசப்படுகிறது. அப்போதெல்லாம் இதைப்பற்றி யாரும் எதிர்க்கவுமில்லை பேசவுமில்லை. நேற்றையதினம் இசைஞானி ரொரன்டோ வந்ததன் பிற்பாடு இப்படி ஒரு விடயம் முகநூலில் பரவலாக பரிமாறப்படுகிறது. இது மக்கள் மத்தியில் இருக்கும் விடுதலை வீச்சைக் குறைக்கும் என்று நினைப்பதற்கு இடமில்லை. அந்தக்கலைஞனுடைய நிகழ்வு நவம்பர் 3ந்தேதிதான் இடம்பெறுகிறது. முக்கியமான மாவீரர் வாரத்தில் இடம்பெறவில்லை என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். எம்மக்கள் மீதான அன்பும் அரவணைப்பும் நிறைந்த ஆர். கே. செல்வமணி இந்த அறிக்கையை விட்டிருப்பது மனதிற்கு இதமாகத்தான் இருக்கிறது நாங்கள் தனித்தவர்கள் இல்லை என்பதை இந்த அறிக்கைகள் உணர்த்தத்தான் செய்கின்றன. இருப்பினும் இந்த நிகழ்வுக்கு அரசியல் பின்னணி இருக்குமென்றால் அதனை ஆதாரத்துடன் தருவதே நன்று. இன்று முகநூலில் நடமாடும் இந்த அறிக்கையானது ஒரு மாபெரும் கலைஞரை கொச்சைப்படுத்துவதற்கும் அதே நேரம் அவருடைய இரசிகர்களாக இருக்கும் பல ஈழத்தமிழர்களையும் காயப்படுத்துவதற்கும் பயன்படப்போகிறது என்பதை நிச்சயமாக ஆர்.கே . செல்வமணி நினைத்திருக்கமாட்டார். ஏற்கனவே ஈழவர்களுக்குள் 2009 இற்கு பிற்பாடு தோன்றியுள்ள குழும அரசியல் சேறடிப்புகளால் விடுதலை வேணாவாக் கொண்ட மாபெரும் மக்கள் சக்தி மழுங்கிப்போய்விட்டது. இப்போது இந்த இசைஞானியின் நிகழ்வை ஏளனப்படுத்துவதன் மூலம் இன்னும் வெறுப்படையும் சூழலை உருவாக்க எத்தனிப்போர் இதனால் எதனைச் சாதிக்கப் போகிறார்கள்?

ஈழவர் வாழ்வில் மாவீரர் பற்றிய நினைவை துதிப்பை எந்தக் கொம்பனும் வந்து சாய்த்துவிட முடியாது..... சாய்ந்து விடும் என்று நம்புவதற்கு அவ்வளவு பலவீனமாகவா எங்களை எங்கள் மாவீரச் செல்வங்கள் விட்டு சென்றிருக்கிறார்கள்? விடுதலையை விரும்புவது அவ்வளவு பலவீனமாகப் போய்விட்டதா?

என்ன சொல்ல வாறீங்க நீங்க கலியாணத்திற்கு போட்டு சாவீட்டுக்குப் போகலாம்னு சொல்ல வாரீங்களா?

நவம்பரில் நடக்கின்ற மாவீரர் தினம் என்பது துக்க நிகழ்வல்ல... எம் மனித தெய்வங்களை நினைந்து செய்கின்ற வேள்வி ,யாகம் ...அதற்கான தயாரிப்புகள் மன தயாரிப்புக்கள் செய்ய வேண்டிய நேரத்தில் இப்படியான அலாரிப்புக்கள் தேவையா?

ஏன் இவர் நிகழ்ச்சிகள் செய்ய வேறு நாளே கிடையாதா? நவம்பரில் ஒழுங்கு செய்ய வேண்டியதன் அவசியம் என்ன? பின்னணியில் சிங்களத்தின் நிகழ்ச்சி நிரல் இருக்கின்றதோ என்று தோன்றுகின்றது...

நிகழ்ச்சி ஒழுங்கு செய்தவர்கள் நம்மவர்கள் என்றால் என்னிடம் ஒரு செருப்பு மாலை அவர்களுக்காகக் காத்திருக்கின்றது... :icon_mrgreen: :icon_mrgreen: :icon_mrgreen: :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

iilayarajah-150-seithy.jpg

[size=4]எதிர்வரும் நவம்பர் மாதம் 03ம் திகதி ரொறன்ரோவில் நடைபெறவுள்ள ,இசையுலகின் ஆசான் இசைப்புயல் இழையராஜாவின் இசை நிகழ்வு பற்றி எமக்கு பல விமர்சன மின்னஞ்சல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. அவற்றில் அனேகமானவை நவம்பர்மாத்தில் இந்த நிகழ்வு வைப்பதை தடுக்கவேண்டும் என கருத்துடையவையாக உள்ளன.[/size]

[size=4]ஆம் கார்த்திகை மாதமென்பது ஈழத்தமிழர்கள் மட்டுமல்ல உலகத்தமிழர்கள் அனைவரும் மெய்சிலிர்த்து மாவீரர்களை நினைவுகூர்ந்து அகவணக்க நிகழ்வுகளை செய்யும் உன்னதமான மாதமாகும் என்பதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை![/size]

[size=4]ஆனாலும்![/size]

[size=4]கடந்த இரண்டுமாதமாக மேற்படி நிகழ்வின் ஏற்பாட்டாளா்கள் ரொறன்ரோவில் நடைபெறும் அனைத்து சிறிய பெரிய கழியாட்ட நிகழ்வுகளிலும் இந் நிகழ்வுபற்றி விளம்பரப்படுத்தி வந்தார்கள் - அப்போது யாரும் ஏன் இதை யோசிக்கவில்லை! சிந்திக்கவில்லை! கனடாவிலுள்ள அனைத்து பத்திரிகைகளும் வானொலி தொலைக்காட்சிகளும் பணத்தைப்பெற்றுக்கொண்டு கடந்த இரண்டு மாதங்களாக விளம்பரப்படுத்திவருகின்றன.[/size]

[size=4]தற்போது நவம்பர் மாதம் என கூறி மேற்படி நிகழ்வை நிறுத்தமுயல்வது ஏற்புடையதன்று - அதுவும் குறித்த நிகழ்வின் ஏற்பாட்டாளா்கள் பெருந்தொகைப்பணத்தை செலவிட்டுள்ளதாக அறியமுடிகிறது. பெருமளவான அனுமதிச்சீட்டுக்களை விற்றுத் தீர்த்துள்ளனர். இதை நடாத்துபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களும் தமிழர்கள் என்பதை சிந்திக்கவேண்டும். நவம்பர் மாதம் என்பதும் மாவீரர் வாரம் என்பதும் ஒவ்வொரு தமிழனது ஆன்மாவிலும் குடிகொண்டுள்ள நினைவுதின வாரம். இசைஞானி இழையராஜாவின் இசைநிகழ்வு பற்றிய விமர்சனங்கள் பொதுவாக கடந்த இரண்டுநாட்களாக பலரிடமிருந்து பல வடிவங்களில் எமக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.[/size]

[size=4]எமது ஆசிரியர் குழு கூடி ஆராய்ந்து எடுத்துள்ள முடிவின்படி நிகழ்வு நிறுத்தப்படவேண்டும் என்ற கருத்தும் அதற்கு சாட்டாக மாவீரர்களது ஆத்மாக்களை பயன்படுத்தி பகடைக்காய்களாக பாவித்து அரசியலாக்கி அதை வைத்து ஊடகங்களை திசை திருப்பும் முயற்சியை முற்றாக நிராகரிக்கிறோம்.[/size]

[size=4]ஒரு சாராரின் கருத்துப்படி இழையராஜா ஈழத்தமிழர்களுக்கு என்னத்தை பெரிதாக செய்தார் என்பதாகும்..[/size]

[size=4]அவர் என்னத்தை செய்தார் என்பதிலும் - அவரை வைத்து யாரும் ஏன் எதையும் செய்யநினைக்கவில்லை என்பதே எமது கேள்வி?[/size]

[size=4]உதாரணத்திற்கு அண்மையில் கனடா ஈழநாடு பத்திரிக்கை பாடகர் திருவாளர் உன்னி கிருஷ்ணனை வைத்து ஒரு நிகழ்வை நடாத்தியிருந்தது. சேர்க்கபட்ட நிதியனைத்தும் வன்னியிலுள்ள அன்பு இல்லச் சிறார்களுக்காக அனுப்பட்டதாக அறியமுடிகிறது. அவ்வாறு ஒரு நிகழ்வை நடாத்த வாருங்கள் என கேட்டு அதை இசைஞானி மறுத்திருத்தால் நாம் அனைவரும் அவரது நிகழ்வை புறக்கணிக்கலாம் விமர்சிக்கலாம் அப்படியேதும் முயற்சிகள் செய்யப்பட்டு மறுக்கப்பட்டிருந்தால் செய்தி இணையம் நிச்சயம் நிராகரிக்க உறுதுணைபுரியும்.[/size]

[size=4]குறிப்பு.[/size]

[size=4]இந்நிகழ்வின் ஏற்ப்பாட்டாளா்கள் யார் அவர்களது விபரங்கள் - நல்லவை கெட்டவை வியாக்கியானங்கள் எவையும் எமக்கு அறியப்படாதவை தெரியாதவை என்பதை - நிகழ்வை நிறுத்த உதவுமாறு கோரி எமக்கு மின்னஞ்சல்கள் அனுப்பிக்கொண்டிருக்கும் வாசகா்கள் பிரமுகர்கள் அனைவருக்கும் தெரிவிப்பதுடன் சம்மந்தபட்ட அனைவரும் பேசித்தீர்ப்பதில்தான் பலன்காணமுடியும் என்பதை வலியுறுத்தவிரும்புகிறோம்.[/size]

[size=4]நன்றி[/size]

[size=4]செய்தி இணையம்.[/size]

[size=4]

Ilayarajha-550398-ads-001.jpg[/size]

[size=4]இழையராஜா கனடா வருகைபற்றி முதுபெரும் ஊடகவியலாளரும் விமர்சகர் மற்றும் ஆய்வாளருமாகிய திரு-நக்கீரன் தங்கவேலு அனுப்பிவைத்துள்ள விமர்சனம்:[/size]

[size=4]இடைத்தங்கல் முகாம்களில் அல்லல்படும் 200,000 மக்களது வாழ்வாதாரத்துக்கு உதவ இளையராசா வந்திருந்தால வாழ்த்தி வரவேற்றிருக்கலாம்.[/size]

[size=4]இளையராசா குடிசையில் இருந்து தனது இசை ஞானத்தால் கோபுரத்துக்கு உயர்ந்தவர். தமிழிசையை, தமிழிசை பற்றிய அறிவு இல்லாத சாதாரண மனிதனும்[/size]

[size=4]சுவைத்துக் கேட்க வைத்தவர். நாட்டுப்புற மெட்டுக்களையும், மரபு வாத்தியங்களையும் தனது இசைப்படைப்பில் பயன்படுத்தி அவற்றுக்கு உயிர் கொடுத்தவர்.[/size]

[size=4]இந்திப் பாடல் கேட்டு இரசித்து வந்த மக்களை தமிழ்ப்பாடல் கேட்க வைத்தவர்.[/size]

[size=4]ஆனால் இதற்கு மேலாக அவருக்கு இனப்பற்றோ, மொழிப்பற்றோ, சமூகப்பற்றோ கிடையாது. தமிழ்ப் பற்றிருந்தால் தனது இராசையா என்ற பெயரை இளையராசா என்று மாற்றியவர் தனது பிள்ளைகளுக்கு கார்த்திகேயன், யுவன் ஷங்கர், பவதாரிணி என்ற வடமொழிப் பெயர்களை வைத்திருக்க மாட்டார்.[/size]

[size=4]அவரது தமையனார் பாவலர் பொதுவுடமையையும் பகுத்தறிவையும் பரப்பியவர். அவர் பாடிய பாடல்களே இன்று இவருக்குக் குப்பைகளாம். "அந்தக் குப்பைகளையெல்லாம் கடந்து வெகுதூரம் வந்து விட்டேன்" என்கிறார்.[/size]

[size=4]பெரியார் திரைப்படத்திற்கு இசையமைக்க மறுத்தவர். அதனால் ஒன்றும் பெரியாருக்கு இழப்பு இல்லை. இழப்பு இளையராசாவுக்குத்தான்.[/size]

[size=4]ஈழத்தில் நம் சொந்தங்கள் கொத்துக் கொத்தாக, சதைக் குவியலாக, குருதிச் சேற்றில் பிணங்களாகக் கிடந்தபோது அதைப் பற்றி வாய்திறக்காதவர். இது வரை உலகம் கண்டிராத மிக மிகக் கொடூரமான முறையில் ஒரே வாரத்தில் 40 ஆயிரம் தமிழ் மக்கள், பெண்கள், குழந்தைகள் என முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்டனர்.[/size]

[size=4]தமிழீழ விடுதலை பற்றிக் கிஞ்சித்தும் அக்கறைப்படாதவர்.[/size]

[size=4]மலேசிய வாசுதேவன் ( நடடா ராஜா மயிலைக் காளை நல்ல நேரம் வருகுது)[/size]

[size=4]மனோ (தென்னங் கீற்றில் தென்றல் வந்து மோதும்)[/size]

[size=4]வாணி ஜெயராம் (வீசும் காற்றே தூது செல்லு தமிழ் நாட்டில் எழுந்தொரு சேதி சொல்லு)[/size]

[size=4]ரி.எம். சவுந்தரராசன் (நடந்து வந்த பாதை தன்னைத் திரும்பிப் பாரடா)[/size]

[size=4]எஸ்.எம். இராஜேஸ்வரி ( காகங்களே காகங்களே காட்டுக்குப் போறீயளா?�[/size]

[size=4]எஸ்.பி. பாலசுப்ரமணியம் + சித்திரா (பூகம்பத்தின் வேகத்திலே பூமி பட்ட பாட்டைப் பாரு காளைகளே)[/size]

[size=4]ஹரிஹரன் (மண்ணில் விளைந்த முத்துக்களே! மரணம் ஏதடா)[/size]

[size=4]ஓ.எஸ்.அருண் (கார்த்திகை 27, காலையிலே அதி காலையிலே)[/size]

[size=4]நித்யஸ்ரீ மஹாதேவன் (எங்கள் தலைவன் பிரபாகரன்)[/size]

[size=4]துள்ளிசை பாடகர் திப்பு (வெள்ளடியன் சாவலோ விடியும் போது கூவுது, வீட்டுக்குள்ள நீயிருந்து என்ன உறக்கம்?"[/size]

[size=4]கல்பனா (மாவீரர் நீங்களே மறப்போமா நாங்களே) போன்ற பாடகர்கள் பாடல்களைப் பாடியிருக்கிறார்கள்![/size]

[size=4]அதுவும் கார்த்திகை 27 எனும் பாடல் மாவீரர் வாரத்தில் பள்ளியெழுச்சிப் பாடலாக ஒலித்துக் கொண்டிருக்கிறது.[/size]

[size=4]இன்னம் எத்தனையோ பாடகர்கள் விடுதலை எழுச்சிப் பாடல்களைப் பாடியிருக்கிறார்கள். ஈழத்து விடுதலைப் பாடல்களுக்கு பங்களிப்புச் செய்திருக்கிறார்கள்.[/size]

[size=4]அந்த வரிசையில் திரையுலகக் கலைஞர்கள் பி.சுசீலா, உன்னிமேனன், கிருஷ்ணராஜ், சுஜாதா, எஸ்.என்.சுரேந்தர், கவிப்பேரரசு வைரமுத்து, கவிஞர் அறிவுமதி எனப் பலர் வருகிறார்கள். இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள், நடிகர்கள், தொழிநுட்பக்கலைஞர்கள் என்று எமது போராட்டத்தைத் தம் தோளில் தாங்கிப் பிடித்த உறவுகளின் எண்ணிக்கை மிக அதிகமாகும்.[/size]

[size=4]ஆனால் விதி விலக்காக ஒருவர் இருக்கிறார். அவர்தான் இளையராசா! அவர் மறந்தும் ஒரு பாடல் பாடவில்லை![/size]

[size=4]எந்த மரத்தின் கீழ் இருந்தாரோ இப்போது மட்டும் கடல் கடந்து, கடல்கடந்து வாழும் தமிழர்களைப் பார்க்க வருகிறாராம்! இதை நாம் நம்ப வேண்டுமாம்? அவரைக் கூப்பிட்டவர்கள் ஒரு பொது நோக்குக்குக் கூப்பிட்டிருந்தால் அதை மெச்சி இருக்கலாம். இப்போதும் இடைத்தங்கல் முகாம்களில் எந்த அடிப்படை வசதியுமின்றி அல்லல்படும் 200,000 மக்களது வாழ்வாதாரத்துக்கு உதவ வந்திருந்தால வாழ்த்தி வரவேற்றிருக்கலாம்.[/size]

[size=4]ஆனால் இதில் தேறும் மிகு வருவாய் தாங்கள் பிறந்த சமூகம் பற்றிச் சிந்திக்காத, கவலைப்படாத தனிப்பட்ட நபர்களது பைக்குள் போகிறது.[/size]

[size=4]-நக்கீரன்-[/size]

[size=4]கனடா இளையராஜா இசை நிகழ்ச்சி பின்னணியில் இலங்கை அரசு-கவலையில் தமிழர்கள்!.. ஒன் இந்தியா இணையத்தில் செய்தி..[/size]

[size=4]http://www.seithy.co...&language=tamil[/size]

Link to comment
Share on other sites

நவம்பர் மாதம் முழுவதும் வேறு எந்த விழாவும் செய்யக்கூடாது என்ற கட்டுப்பாடு எந்தக் காலத்திலும் இருக்கவில்லை.

மாவீரர் வாரத்தில் மட்டுமே (நவ. 21 - 27) பாரிய எடுப்பிலான களியாட்டக் கொண்டாட்டங்களை ஈழத் தமிழர்கள் தவிர்த்து வந்தனர். ஆயினும் நவம்பர் 26 அன்று பிறந்த நாள் என்ற பெயரில் புலம்பெயர் நாடுகளில் களியாட்டக் கொண்டாட்டங்கள் நடந்தன. அந்த பெருமனிதன் செத்துக் கிடந்த பின்னாலும், ஒரு கண்ணீர் சிந்த மறுத்த அந்த ஆண்டு நவம்பரில் கூட பிறந்த நாள் கொண்டாட்டங்களை செய்து கூட்டம்தான் எம்மவர்கள்.

ஏற்கனவே பிபிசியின் சிறந்த பாடல் தொகுப்பில் முதலாவதாக நின்ற இளையராஜாவின் "ராக்கம்மா கையத் தட்டு" என்னும் பாடலை விட்டு, வெகு வெகு சாதரண ஒரு பாடலான "பூவும் நடக்கது, பிஞ்சும் நடக்குது" பாடலுக்கு ஈழத் தமிழர்கள் வாக்களித்து, ராக்கம்மா கையை தட்டு பாடலை இரண்டாம் இடத்திற்கு தள்ளிய ரசனை கெட்டத்தனத்தையும் செய்தார்கள்.

எங்கள் மன அழுத்தங்களி;ல் இருந்து மீட்டெடுத்து மன அமைதியை தந்த பெரும் கலைஞன் எம்மை தேடி வந்து நிற்கிறான். அவனை வரவேற்பதை விட்டு விட்டு எதிராக கோசம் போடுகிறார்கள்.

இதில் செல்வமணியின் அறிக்கை வேறு. புரட்சியாளர்களை கொச்சைப்படுத்தியே படம் எடுப்பவர். தற்பொழுது அகிலா என்று ஒரு படம் எடுக்கிறாராம். ஆயுதப் புரட்சி வெல்லாது, அகிம்சையே வெல்லும் என்று போதிக்கப் போகிறாராம். அனேகமாக புலிகளின் தோல்விதான் படத்தின் கருவாக இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இளையராஜாவின் இசை நிகழ்ச்சி வெற்றிகரமாக நடக்கும் என்றே நம்புகின்றேன். கனடாவில் இருந்திருந்தால் நானும் ரிக்கற் எடுத்திருப்பேன். ஏனெனில் ஒரு இசைமேதையில் நேரடி இசைக் கச்சேரியைக் காண்பது அவ்வளவு இலகுவல்ல. அதை ஏற்பாடு செய்வதும் இலகுவல்ல.

இந்த நிகழ்ச்சியை எதிர்ப்பவர்கள் மாவீரர்களை தங்கள் குறுகிய நோக்கத்திற்கு துணைக்கழைக்கின்றார்கள். இதைப்போன்ற மிகவும் கேவலமான செயலுக்கா அவர்கள் மரணித்தார்கள்? தற்போது தாயகத்தில் அவலங்களுடன் வாழ்க்கையைக் கொண்டு நடாத்தும் மாவீரர்களுக்கும், அவர்களது குடும்பத்திற்கும் இத்தகைய தாயக உணர்வாளர்கள் கார்த்திகை மாதத்தில் கிடைக்கும் சம்பளத்தைக் கொடுக்க முன்வருவார்களா? செய்யமாட்டார்கள் என்றே நினைக்கின்றேன். ஏனெனில் இலங்கையரசின் ஆளுகைக்கு உட்பட்டு செயற்படும் தொண்டு நிறுவனங்களுக்குக் கூட உதவி செய்வதை துரோகம் என நம்புபவர்கள் இவர்கள் போன்றவர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் தமிழ்ப்பற்று கிடையாது என்னுடைய பெயர்கொண்டு பிள்ளைகளின் பெயர்வரை தூயதமிழில் இல்லை நான் நாளாந்தம் பேசும் வார்த்தைகள் தூயதமிழில் இல்லை. அத்தோடு அரசியல் என்றால் எனக்கு அறவே பிடிப்பதில்லை. அரசியலைவிட்டு ஒதுங்கியே வாழ்கின்றேன். 2009 இற்கு பின்னர் எந்தக்குழுமத்தையும் நம்பி அவர்கள் பின்னே சென்றதில்லை

ஆக எனக்கு ஈழவளாக இருக்கக்கூடிய அடிப்படைத்தகுதி இல்லை

நான் தமிழை நேசிக்கிறேன் என்று எனது பெயரையோ பிள்ளைகளின் பெயரையோ மாற்றப்போவதில்லை

தூயதமிழ் என்று தமிழரோடு உரையாடும்போது கதைக்கப்போவதில்லை காரணம் நாங்கள் பாடசாலையில் கற்கும்போதே அரைவாசிச் சொற்கள் தூயதமிழில் இல்லை அதனால் தூயதமிழ் எனக்கு சாத்தியமில்லை

ஈழத்து அரசியல் 2009க்கு முன்னராக இருந்த தூய்மையான சனங்களோடு எனக்கு முடிந்துவிட்டது

அரசியல் என்னும் சேற்றுக்குள் போலிகளை நம்பி நான் குதிக்கத் தயாரில்லை அதனால் எனக்குள் இருக்கும் பிரத்தியேமான சிந்தனைகள் திறமைகள் எல்லாம் மழுங்கடிக்கப்படும்...

இப்ப நான் யார்? :icon_mrgreen: :icon_mrgreen: :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சகோதரி

முதலில் நல்ல வைத்தியரைப்பார்க்கவும்... :lol::D :D

(மலையாக நாம் நம்பிய பலபேர் இன்று இப்படித்தான் புலம்பி திரிகின்றனர் :( :( )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சகோதரி

முதலில் நல்ல வைத்தியரைப்பார்க்கவும்... :lol::D :D

உண்மையாகவா?என்னையா சொல்றீங்க? :o

(மலையாக நாம் நம்பிய பலபேர் இன்று இப்படித்தான் புலம்பி திரிகின்றனர் :( :( )

புலம்பித் திரிய வைத்துவிட்டார்களே.... :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் தமிழ்ப்பற்று கிடையாது என்னுடைய பெயர்கொண்டு பிள்ளைகளின் பெயர்வரை தூயதமிழில் இல்லை நான் நாளாந்தம் பேசும் வார்த்தைகள் தூயதமிழில் இல்லை. அத்தோடு அரசியல் என்றால் எனக்கு அறவே பிடிப்பதில்லை. அரசியலைவிட்டு ஒதுங்கியே வாழ்கின்றேன். 2009 இற்கு பின்னர் எந்தக்குழுமத்தையும் நம்பி அவர்கள் பின்னே சென்றதில்லை

ஆக எனக்கு ஈழவளாக இருக்கக்கூடிய அடிப்படைத்தகுதி இல்லை

நான் தமிழை நேசிக்கிறேன் என்று எனது பெயரையோ பிள்ளைகளின் பெயரையோ மாற்றப்போவதில்லை

தூயதமிழ் என்று தமிழரோடு உரையாடும்போது கதைக்கப்போவதில்லை காரணம் நாங்கள் பாடசாலையில் கற்கும்போதே அரைவாசிச் சொற்கள் தூயதமிழில் இல்லை அதனால் தூயதமிழ் எனக்கு சாத்தியமில்லை

ஈழத்து அரசியல் 2009க்கு முன்னராக இருந்த தூய்மையான சனங்களோடு எனக்கு முடிந்துவிட்டது

அரசியல் என்னும் சேற்றுக்குள் போலிகளை நம்பி நான் குதிக்கத் தயாரில்லை அதனால் எனக்குள் இருக்கும் பிரத்தியேமான சிந்தனைகள் திறமைகள் எல்லாம் மழுங்கடிக்கப்படும்...

இப்ப நான் யார்? :icon_mrgreen: :icon_mrgreen: :icon_mrgreen:

சேலைகளையும், நகைகளையும், தமிழ் தொலைக்காட்சித் தொடர்களையும், வார இறுதிகளில் களியாட்டங்களையும் விரும்புகின்ற, பிள்ளைகள் எதிர்காலத்தில் நல்ல பேரும் புகழும் பெற்ற வேலைகளில் இருக்கவேண்டும் என்று ஆசைப்படுகின்ற சாதாரண தமிழச்சி :icon_mrgreen::lol::wub:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.